புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' Poll_c10 
84 Posts - 45%
ayyasamy ram
இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' Poll_c10 
74 Posts - 39%
T.N.Balasubramanian
இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' Poll_c10 
5 Posts - 3%
prajai
இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' Poll_c10 
2 Posts - 1%
Manimegala
இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' Poll_c10 
2 Posts - 1%
சிவா
இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' Poll_c10 
440 Posts - 47%
heezulia
இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' Poll_c10 
30 Posts - 3%
prajai
இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்'


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 01, 2014 7:12 am

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 01, 2014 7:13 am

1. எதை அடைந்தாலும் மனம் இன்னொன்றைத் தேடும்

நான் பள்ளியில் படிக்கிற காலத்தில் வாரம் ஒரு நாள் மட்டும் அரைக்கால் கிலோ (கால் கிலோவில் பாதி) கறி மட்டுமே வாங்கக் கூடிய அளவுக்குக் கஷ்ட ஜீவனத்தில் என் குடும்பம் இருந்தது. நான்தான் சைதாப்பேட்டை மார்க்கெட்டிற்குக் கறி வாங்கச் செல்வேன். முதல் அரைக்கால் கிலோ கறி வாங்கும் பொழுது, கறிக்கடைக்காரரிடம், ''பாய் இந்த வாரம், கறியில நல்லி எலும்பு போடலை, அடுத்த வாரம் கண்டிப்பா போடணும். ஞாபகம் வச்சுக்குங்க'' என்று சொல்லிவிட்டு வருவேன். இதுல என்ன பெரிய விஷயம் இருக்குன்னு நீங்க நினைக்கலாம். ஒரு பெரிய சமாச்சாரமே அடங்கியிருக்குங்க.

எங்க வீட்ல நான் உட்ப, எல்லாருக்குமே நல்லி எலும்புன்னா ரொம்பப் பிடிக்கும். ஆனா, கால் கிலோ வாங்கினாத்தான் ஒரு நல்லி எலும்பு கிடைக்கும். இரண்டு வாரம் கறி வாங்கினால்தான் கால் கிலோ கணக்காகும். ஆக, இரண்டு வாரத்துக்கு ஒரு தடவைதான், ஒரு நல்லி எலும்பு கிடைக்கும். அப்படி நல்லி எலும்புடன் கறி வாங்கிய அன்று நாங்கள் எல்லாருமே நமக்குத்தான் அந்த நல்லி எலும்பு விழும் என்ற கனவில் இருப்போம்.

மியூசிக்கல் சேர் போல், என்றைக்காவது ஒரு நாள் அந்த நல்லி எலும்பு என் தட்டில் வந்து விழும். நானும் ஆசையாக உறிஞ்சி உறிஞ்சிப் பார்ப்பேன். அந்த மூளைவராது. மிகப்பெரிய போராட்டத்துக்குப் பிறகு, அம்மியில் உடைத்து அந்த மூளையை வெளியில் வரவைப்பேன். ஆனால், அது முழுதாய் இருக்காது. சிதறிக்கிடக்கும். சிதறிக்கிடந்த அந்த தூள் மூளையைப் பொறுக்கிச் சாப்பிடுவேன்.

அதில் கிடைத்த சுவை, ஆனந்தம், மகிழ்ச்சி இன்று சிக்கன் - 65, சிக்கன் சாப்ஸ், சிக்கன் டிக்கா, பிங்கர் பிஷ் என்று விதவிதமான அயிட்டம் சாப்பிடும்போது கிடைக்கவில்லை. இன்று உணவு உண்பதே அன்றாட நிகழ்வாகப் போய்விட்டது.

அதேபோல், எண்பது ரூபாய்க்கு சைக்கிள் ஒன்றை எனது தந்தை எனக்கு வாங்கிக் கொடுத்தார். நான் அந்த சைக்கிளை ஒட்டிய பாதி நாட்களில், ரோட்டின் ஓரமாக சைக்கிளை நிறுத்தி, கழண்டு விழுந்த செயினை மாட்டிக் கொண்டிருப்பேன். செயின் கழலாத அளவுக்கு ஓட்டக் கூடிய லாவகம் எனக்கு மட்டும்தான் தெரியும். அப்படி இருந்தும் மேடு பள்ளத்தில் ஏறி இறங்கும் பொழுது கவனக் குறைவாக இருந்து விடுவேன். இப்படி இவ்வளவு இம்சையுடன் மொத்தப் பணமும் கொடுத்து வாங்கிய அந்த வண்டியில் சென்றாலும், அதில் இருந்த சந்தோஷம் மகிழ்ச்சி, இன்று தவணை முறையில் விதவிதமான கார்களில் செல்லும் போது கிடைக்கவில்லை.

இதுவெல்லாம் ஏன் என்று யோசித்தேன். எதை அடைந்தாலும் மனது இன்னொன்றைத் தேடிக் கொண்டு தானே இருக்கிறது! அந்தத் தேடலின் விளைவுதான் இந்தத் தொடர். ஆக, ஒன்றை நினைக்கும் பொழுது உணர்ந்த ருசி, அது கிடைக்கும்போது இருப்பதில்லை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 01, 2014 7:14 am

2. காத்தாடி பறக்குது

''நல்லதுக்கும் கெட்டதுக்கும் நாலு மனுஷன் தேவை'' ...எனது தந்தை அடிக்கடி சொல்லும் வாசகம் இது. அவர் சொல்லியது போல் எங்கள் தெருவில், யார் வீட்டில் கல்யாணம் நடந்தாலும், சாவு நடந்தாலும் அறிமுகம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் முதல் ஆளாக எனது தந்தை நிற்பார்.

எங்கள் உறவுக்காரர் வீட்டில் ஒரு பெண் வயதுக்கு வந்துவிட்டால், அந்தப் பெண்ணின் தகுதி தராதரம் அறிந்து, அந்தப் பெண்ணுக்கேற்ற மாப்பிள்ளை தன் மனதுக்குப் பட்டால், அந்தப் பையன் வீட்டிற்குத் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதி, இப்பேர்ப்பட்ட ஒரு பெண் இருக்கிறாள். உங்களுக்குப் பிடித்திருந்தால் பேசி மணம் முடித்துக் கொள்ளுங்கள் என்று தெரிவிப்பார்.

அதே போல், ஒருவர் இறந்துவிட்டால், அவரை மயானத்தில் அடக்கம் செய்யும் வரை உடன் இருப்பார். சாமாதி கட்ட வசதி இல்லாதவர்களுக்குப் பணம் வசூல் செய்து சமாதி கட்டுவார். அப்பேர்ப்பட்ட எனது தந்தை இறந்தபிறகு, ஒரு வழியாக ஈமச்சடங்கு செய்து முடித்தேன்.

பொதுவாக, படுக்க வைத்த நிலையில் ஆறடியில் சமாதி கட்ட வேண்டும் என்றால், 3 மாதத்திற்குள் கார்ப்பரேஷனுக்கு நூறு ரூபாய் கட்ட வேண்டும். உட்கார்ந்த நிலையில் புதைத்து விடுவது எங்கள் வழக்கம். அதனால் மூன்றடியில் சமாதி கட்டிக்கொள்ள ஐம்பது ரூபாய்தான் கட்ட வேண்டும்.

எப்படியும் ஐம்பது ரூபாயை 3 மாதத்திற்குள் கட்டிவிலாம் எனற் தைரியத்தில் தினமும், ஒவ்வொரு வினாடியும் 50 ரூபாய் பணத்திற்கு அலைந்தேன் - அழுதேன். குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அந்த 50 ரூபாயைச் செலுத்த முடியவில்லை. அதனால் எஎனது தந்தைக்கு சமாதியும் கட்ட முடியவில்லை.

எனது தந்தை பல்லவன் போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராகப் பணி புரிந்தார். காக்கி உடையே எனது பள்ளியின் யூனிபார்மாக இருந்ததால் எனது தந்தைக்குக் கொடுக்கும் காக்கி யூனிபார்மில் ஒன்றை நான் தைத்துப் போட்டுக் கொள்வேன்.

அவர் இறந்த பிறகு, அந்தக் காக்கி யூனிபார்முக்கும் திண்டாட்டம் வந்தது. போட்டிருந்த பேண்டின் பின்பகுதி தேய்ந்து விட்டது. நான்கு பேருக்கு மத்தியில் நிற்கும் போதெல்லாம் சட்டையைப் பின்புறம் இழுத்துப் பிடித்துக் கொண்டுதான் பேசுவேன். மானத்தை மறைக்க, மாற்று உடை இல்லாத அந்தக் காலத்தில்கூட நான் மிகவும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தேன். ஆனால் இன்றைக்கு சினிமாவில் விலையுயர்ந்த விதவிதமான உடைகளை அணிகிறபோது கூட அதற்கு முக்கியத்துவம் கொடுத்தோ, பெரிதாக நினைத்தோ, மனசு சந்தோஷப்பட்டதில்லை.

நான் சைதாப்போட்டையில் குடியிருந்தபோது, அடையாறுல இருந்து வந்த ஒரு பையன் எங்க அப்பாவிடம், ''இங்கே காத்தாடி விக்கிற பையன் வீடு எது'' என்று கேட்டிருக்கிறான்.

''அப்படியொரு பையன் இங்கே இல்லையே'' என்று சொல்லியிருக்கிறார் எனது அப்பா.

அவன் சொன்ன அடையாளத்தை வைத்து, அது நான்தான் என்று எங்கப்பாவுக்குத் தெரிந்துவிட்டது.

அவருக்கு கோபம் வந்துவிட்டது. காரணம், நான் சைடு பிஸினசாகக் காற்றாடி செய்து விற்பது என் அப்பாவுக்குத் தெரியாது. அதேபோல் பிள்ளையார் சதுர்த்தி சமயத்தில் குடை செய்து விற்பேன். ஆக நான் காற்றாடி விடும் வயதில் கூட விடுகிறவனாக இல்லாமல் அதை விற்பவனாக இருந்திருக்கிறேன். பிள்ளையாரைக் கும்பிடுபவனாக இல்லாமல், பிள்ளையார் குடை விற்பவனாக இருந்திருக்கிறேன்.

இப்படிச் சின்ன வயதிலேயே ஏதாவது வேலை செய்ய வேண்டும் சம்பாதிக்க வேண்டும் என்று இருபதுக்கும் மேற்பட்ட வேலைகளில் ஈடுபட்டு இருகிறேன். ஆனால், எதிலும் நான் உருப்படலை. காரணம் எல்லாத்தையும் விட ஒரு பெரிய தாக்கம் சினிமாவுல இருந்துச்சு.

அதுக்கப்புறம் தான் சினிமா கம்பெனி வாசல்களைத் தேட ஆரம்பித்தேன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 01, 2014 7:15 am

3. டீ வாங்கி வா...

நான் முதல் முதலாகக் காலடி வைத்த சினிமா கம்பெனி வாசல் தேவர் பிலிம்ஸ். தினம் கோயிலுக்குச் செல்வது போல் தேவர் பிலிம்ஸுக்கு போய், மாரியப்பன் அவர்களையும், தியாகராஜன் அவர்களையும் சந்தித்து வருவதை ஒரு வேலையாகவே வைத்துக் கொண்டேன். ஒருநாள் தேவர் பிலிம்ஸுக்கு வந்த தூயவன் சார் என்னைப் பார்த்து,

''நீ யாருய்யா© உன்னை இங்கே நான் அடிக்கடி பார்க்கறேன்'', என்று கேட்டார். அதற்கு நான் ''அசிஸ்டெண்ட் டைரக்டர் சான்ஸ் கேட்டு தினம் வந்து போயிட்டு இருக்கேன் சார்'' என்று சொன்னேன்.

''இங்க எவ்வளவு நாளா வந்து போயிட்டிருக்கே'' என்று கேட்டார்.

உடனே கையில் வைத்திருந்த டைரியைப் புரட்டிப் பார்த்து, ''118 தடவை வந்திருக்கிறேன்''ன்னு சொன்னேன். ''உன்னுடைய கையெழுத்து நல்லா இருக்குமா©'' என்று கேட்டார். எழுதிக் காட்டினேன். அவருக்குப் பிடித்துப் போய்விட்டது.

''உன்னை என்னுடைய காப்பி ரைட்டராக வச்சுக்கறேன். என் ஆபிஸ்ல வந்து பார்''ன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு. அவர் சொன்ன மறுநாளே அவருடைய ஆபிஸுக்குப் போனேன். ஆனா தூயவன் சார் வரவில்லை. நானும் விடாம தினம் போனேன். அவர் மூணு மாசம் கழிச்சுத்தான் ஆபீஸுக்கே வந்தார். உடனே சேர்த்துக்கிட்டார். சேர்ந்த உடனே,

''அந்த பிளாஸ்க்கை எடுத்துட்டுப் போய் சூடா இரண்டு காபி வாங்கிட்டு வா'' என்றார்.

''என்ன இது, நம்மளை காப்பி ரைட்டரா சேத்துக்கறதாத்தானே சொன்னாரு. ஆனா, காபி ப்ளாஸ்க்கை தூக்குன்னு சொல்றாரே, அப்படியே ஒரு நிமிஷம் 'ஸ்டன்' ஆகி நின்னுட்டேன்.'' உடனே ஒரு பிளாஷ் பேக்.

நான் எஸ்.எஸ்.எல்.சி படிச்சு முடிச்சவுடனே எங்க அப்பாவோட பெரிய சிபாரிசில் பாரிமுனையில் இருக்கற ஒரு பாப்புலரான எலக்ட்ரானிக் கடையில வேலைக்கு சேர்த்துவிட்டார். முதல் நாள் வேலைக்குக் கிளம்பறப்ப இருக்கிற பேண்ட் ஷர்ட்ல நல்லதாப் பார்த்து செலக்ட் பண்ணிப் போட்டுகிட்டுப் புறப்பட்டேன்.

போகும்போதே மேலே மின்விசிறி, கீழே சேர் டேபிள். மணி அடிச்சா ஆபீஸ் பையன் வருவான். பைல் எடுத்துக் கொடுப்பான். டீ காபி வாங்கிட்டு வந்து கொடுப்பான் என்று பல மாதிரியா கற்பனை பண்ணிகிட்டே ஆபீஸுக்குள்ள நுழைஞ்சேன். நேரா முதலாளியைப் பார்த்தேன்.

''உன் பேருதான் பாண்டியனா©''

''ஆமாம் சார்.''

''நீ வர்ற வழியில தெருமுனையில ஒரு டீ கடை இருக்கு பார்த்தியா©''

''பார்த்தேன் சார்''.

''அந்த கடையிலதான் டீ காபி வாங்கிட்டு வரணும். பெல் அடிச்சா உடனே வந்து அட்டன் பண்ணணும், ஓ.கே.யா©''

''ஓ..ஓ..கே..சார்.''

அன்னிக்கு முழுவதும் எல்லாருக்கும் வேண்டா வெறுப்பாக டீ காபி வாங்கிக் கொடுத்தேன்.

சாயங்காலம் நாலு மணி இருக்கும். முதலாளி ரூம்ல போன் பெல் அடிக்கிற சத்தம் கேட்டுச்சு. அப்ப முதலாளி பக்கத்து ரூம்ல ஒரு கிளார்க்கிட்ட ஏதோ விசாரிச்சுக்கிட்டு இருந்தாரு. உடனே நான் உள்ளே போய் போனை எடுத்தேன். எதிர்முனையில பேசினவங்க,

''அங்கே மகேஸ்வரி இருக்காங்களா©'' - அந்த ஆபிஸ்ல பெண்களே கிடையாது. அதனால,

''அந்த மாதிரி இங்கே யாரும் இல்லைங்க'' என்று போனை வச்சுட்டு ரூமை விட்டு வெளியே வந்தேன். முதலாளி உள்ளே வந்தாரு.

''பாண்டியா யாருக்கு போன் வந்தது©''

''மகேஸ்வரிங்கற பேருக்கு போன் வந்துச்சு. அப்படி யாரும் இங்கே இல்லை, ராங் நம்பர்னு போனை வச்சுட்டேன்.''

''அடே முட்டாள். உனக்கு அறிவு இருக்கா... அந்த போனுக்குத்தானய்யா இவ்வளவு நேரம் வெயிட் பண்ணிகிட்டு இருந்தேன். பிஸினசையே கெடுத்திட்டியே'' என்று கன்னாபின்னான்னு திட்டிவிட்டார். பிறகுதான் தெரிந்தது அவர் பெயர்தான் மகேஸ்வரி என்று.

சேட்டுகள் குடும்பத்தில் ஆணுக்கும் மகேஸ்வரி என்று பெயர் வைப்பார்களாம்.

அன்றோடு அங்கே வேலை செய்யப் பிடிக்காமல் அங்கிருந்து வந்து விட்டேன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 01, 2014 7:15 am

4. தொடங்கி வைத்தார் தூயவன்

சினிமாவில் ஆர்வம் இருந்ததால் அந்தத் துறையில் எந்த வேலை கிடைத்தாலும் பரவாயில்லை என்றுதான், தூயவன் சார் காப்பி ரைட்டர் வேலை என்று சொல்லி விட்டுக் காபி வாங்க அனுப்பும்போது, இதையெல்லாம் வாங்கிக் கொடுக்கற வேலை பார்த்தா காபி ரைட்டர் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும், சந்தோஷத்திலும் அந்த வேலையை விழுந்து விழுந்து செய்தேன்.

நான் நினைச்ச மாதிரியே ஆபீஸ் பையனா வேலை பார்த்த நேரம் போக அப்பப்ப காபி ரைட் செய்யும் வேலையும் செய்ய ஆரம்பிச்சேன்.

தூயவன் சார் எழுத்து அந்தக் காலத்துக் கணக்குப் பிள்ளை எழுத்து மாதிரி கிறுக்கலா இருக்கும். ஆனா அதை நான் சுலபமா புரிஞ்சிக்குவேன். சில வார்த்தை புரியலைன்னா, அதுக்கு நானே சொந்தமா வார்த்தையைப் போட்டு எழுதிடுவேன். ஆனா, அதை அவர் கண்டுபிடிச்சு ஏண்டா நான் டயலாக் ரைட்டரா© இல்லை நீ டயலாக் ரைட்டரான்னு செல்லமா கண்டிப்பாரு.

அதே மாதிரி சில எழுத்து, படம் வரைஞ்ச மாதிரி இருக்கும். அதை என்ன எழுத்துன்னு கண்டுபிடிக்க முடியலைன்னு நானும் அப்படியே படம் வரைஞ்சு வச்சுடுவேன்.

அதைப் பார்த்துட்டு, ''ஏண்டா என் எழுத்து புரியலைன்னுதானே உன்னைக் காபி எடுக்கச் சொல்றேன். நீயே இப்படி படம் வரைஞ்சு வச்சா என்னடான்னு'' சிரிச்சுக்கிட்டே என்னுடைய குறைகளைத் திருத்துவார்.

ஒரு நாள் தூயவன் சார் என்னைக் கூப்பிட்டு, ''பாண்டியா நாளைக்கு ஆபீஸுக்கு, நாம தயாரிக்கப் போற 'விடியும் வரை காத்திரு' படத்துக்காக டிஸ்கஷன் செய்ய பாக்யராஜ் வர்றாரு. அவரை நல்லா கவனிச்சுக்கணும். அவரு எது கேட்டாலும் வாங்கிக் கொடு'' என்று அவர் சொன்ன அந்த நிமிடத்தில் இருந்தே கனவில் மிதக்க ஆரம்பித்து விட்டேன்.

'சுவர் இல்லாத சித்திரங்கள்' படத்தை இயக்கிய அந்தப் பிரம்மா இந்த ஆபீசுக்கு வரப்போகிறாரா© எனக்கு ஒன்றும் புரியவில்லை.

நேரில் எப்படி இருப்பார்© எப்படி நம்மிடம் பேசுவார். நாம் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும், என்னென்ன அயிட்டம் கேட்பார். சிக்கன் சிக்ஸ்டி ஃபைவா, தந்தூரி சிக்கனா, எந்த ஃபைவ் ஸ்டார் ஓட்டல்ல வாங்கிட்டு வரச் சொல்லுவார், என்றெல்லாம் கற்பனை செய்து கொண்டிருந்தேன்.

ஆனால், மறுநாள் அவரை நேரில் பார்த்தபோது என்னுடைய கற்பனையில் இருந்த எந்த பிரம்மாண்டமும் அவரிடம் இல்லை. எல்லாமே நான் நினைத்ததற்கு நேர் மாறாக இருந்தது. படத்துல பார்க்கும்போது ரொம்ப யதார்த்தமான முகம். நேர்ல அதைவிட யதார்த்தம்.

அன்னிக்கு முழுக்க, என்னை வாங்க போங்கன்னு ரெஸ்பெக்ட் பண்ணிக் கூப்பிட்டதே எனக்கு ரொம்ப சங்கோஜமா இருந்துச்சு.

சாயங்காலம் டிஸ்கஷன் ரூமூக்குள்ள போய் டிபன் என்ன வேணும்னு கேட்டேன். எது கேட்டாலும், எவ்வளவு தூரமாக இருந்தாலும் வாங்கிட்டு வந்து அசத்திடலாம்னு நின்னுக்கிட்டு இருந்தேன். ஆனா அவரு,

''வாணிமகால் பக்கத்துல வண்டிக்கடைகள் இருக்கும். அதுல சூடா கண்டலும், மிளகாய் பஜ்ஜியும் வாங்கிட்டு வாங்க'' என்றார்.

என்னது, தோற்றத்துல, பழகறதுலதான் எதார்த்தமா எளிமையா இருக்கார்னு பார்த்தா சாப்பிடுகிற அயிட்டத்திலுங் கூட, தன்னை ஒரு வி.ஐ.பி.ங்கறத மறந்து இப்படி சிம்பிளா கேக்குறார்னு யோசிச்சுக்கிட்டே அவர் கேட்ட அயிட்டங்களை வாங்கிட்டு வந்து கொடுத்தேன்.

பொதுவா நான் நிறைய வி.ஐ.பி.க்களை சந்திச்சு இருக்கேன். அவங்க எல்லாரும் தன்னுடைய இயல்பான வாழ்க்கையில் மனைவி, மக்கள், நண்பர்கள் கிட்ட நடந்துக்கறதுக்கும், தன்னுடைய தொழில் சார்ந்த, துறை சம்பந்தப்பட்டவர்களிடமும் மற்றவர்களிடமும் பழகும், பேசும் முறை எல்லாவற்றிலும் வித்தியாசம் இருக்கும். ஆனால், என்னுடைய குருநாதரிடம் எந்தவித வித்தியாசமும் இருக்காது.

இப்படித் தினமும், சுணடலும் பஜ்ஜியும் வாங்கிக் கொடுத்துட்டு இருந்தேன். அவரை எப்படி இம்ப்ரஸ் பண்றதுன்னு திங்க் பண்ணிக்கிட்டேயிருப்பேன். திடீர்னு அவர் டேஸ்டுக்கு தகுந்த மாதிரி மிளகாய் பஜ்ஜிக்குப் பதிலாக அவர் விரும்பும் ரேஞ்சிலேயே, முட்டை பஜ்ஜி, முட்டை போண்டான்னு அப்பப்ப அயிட்டங்களை மாத்தி வாங்கிக் கொடுத்து அசத்துவேன். தினம் டிபன் வாங்கிக் கொடுக்கறதுதான் என் வேலை. டிபன் கொடுத்து முடிச்சவுடனே கதவை சாத்திக்குவாங்க.

அதுக்கப்புறம் கதை டிஸ்கஷன் பண்ணுவாங்க. டிஸ்கஷன்ல கதை எப்படிப் பேசறாங்க© என்ன பண்றாங்க© அப்டீங்கறதை எப்படி யாவது பார்த்துடணும்னு ஆசைப்பட்டேன். அதுக்கொரு ஐடியா பண்ணினேன். டிபன் எல்லாம் கொடுத்து முடிச்சுட்டு, கதவை சாத்திட்டு வரும்போது சரியா சாத்தாம, லைட்டா சின்ன கேப் இருக்கற மாதிரி சாத்திட்டு வந்துடுவேன். அதுக்கப்புறம் அந்தக் கதவு இடுக்கில, ஒட்டுக்கேக்குற மாதிரி பாத்துட்டு இருப்பேன். இப்படியே கிட்டத்தட்ட கதவு இடுக்கிலேயே, 'விடியும் வரை காத்திரு' படத்தின் மொத்தக் கதையையும் பார்த்துத் தெரிஞ்சுக்கிட்டேன்.

இப்படிக் கதவு இடுக்குலேயே பார்த்துப் பார்த்து, எப்படியாவது அதே டிஸ்கஷன் ரூம்ல நாமளும் உட்காரணும்கற வைராக்கியமும் நாளுக்கு நாள் அதிகமாகிக்கிட்டே இருந்தது.

அதே தூயவன் சார் ஆபிஸ்ல இசைஞானி இளைய ராஜாகிட்டே இருந்தது இன்னொரு விஷயத்தைத் தெரிஞ்சுக்கிட்டேன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 01, 2014 7:16 am

5. கதவு திறக்கும் வரை

ராஜா சாரிடம் நான் கற்ற முதல் விஷயம்... சினிமாத் துறை என்பது ஏதோ ஆபீசுக்கு வர்ற மாதிரி எட்டு மணி நேர வேலையல்ல.

இது இருபத்து நாலு மணி நேர வேலை என்று.

ஒரு நாள் இசைஞானி பாடல் கம்போசிங்குக்காக வந்தார். அப்ப டைரக்டர் அங்கே இல்லை.

எங்கேய்யா டைரக்டர்© என்று என்னிடம் கேட்டார்.

''எங்கேயாவது டிராபிக்ல் மாட்டியிருப்பாரு. இதோ இப்ப வந்திடுவார்''ன்னு சொல்லி, காபி டீயெல்லாம் கொடுத்து உட்கார வச்சேன். ஆனா டைரக்டர் ரொம்ப நேரம் ஆகியும் வரலை. வேற ஏதோ ஒரு வேலையில் மாட்டிக்கிட்டாரு.

கொஞ்ச நேரம் வெயிட் பண்ணிப் பார்த்த இசை ஞானி, ஆர்மோனியப் பெட்டியைத் திறந்து வச்சுக்கிட்டு அவர் பாட்டுக்கு ட்யூன் போட ஆரம்பிச்சுட்டாரு.

மத்த துறையிலன்னா, அவர் இல்லையா© சரி நான் வந்தேன்னு சொல்லுன்னுட்டு, 'அப்பாடா இன்னிக்கு ஃப்ரீ' என்று ஜாலியா வெளியில கிளம்பிடுவாங்க. ஆனா, இந்தத் தொழில் அப்படியில்லை. ஏற்கனவே எரிஞ்சுக்கிட்டு இருக்கற விளக்குக்குல எண்ணைய ஊத்துற மாதிரி இசை ஞானி எனக்கு இன்ஸ்பிரேஷனா இருந்தாரு.

எந்தக் கதவு இடுக்குல டிஸ்கஷன் ரூமைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விட்டேனோ, அதே டிஸ்கஷன் ரூமுக்குள்ளேயே எனக்கும் ஓர் இடம் கிடைத்தது. எப்படிக் கிடைத்தது©

'விடியும் வரை காத்திரு' பட டிஸ்கஷனெல்லாம் முடிஞ்சு படப்பிடிப்பு ஆரம்பமாயிடுச்சு. நான் தூயவன் சார்கிட்ட வேலை பார்த்ததினால கம்பெனி அசிஸ்டெண்டா படப்பிடிப்பு நடக்கற லொக்கேஷனுக்குப் போவேன். டைரக்டர் என்னைப் பார்க்கும் போது கம்பெனி வேலை செய்யற மாதிரி நடிச்சுக்குவேன். இப்படித் திருட்டுத்தனமா வேலையைக் கத்துக்கிறது நல்லா இல்லேன்னு என் மனசுக்குத் தோணிச்சு. ஒருநாள் அவர் ஷூட்டிங் முடிஞ்சு மதியம் சாப்பிட்டதுக்கப்புறம் ரெஸ்ட்ல இருந்தாரு. நான் நேரா அவர்கிட்டபோய், ''சார், என்னை உங்ககிட்டே வேலைக்கு வச்சுக்குங்க சார்'' என்று கேட்டேன். அதற்கு டைரக்டர்,

''என்கிட்ட நிறைய பேர் வேலைக்கு இருக்காங்க. அவுங்களுக்கே வேலை கொடுக்க முடியலை. டிஸ்கஷன் நேரத்துல கூட எல்லோருக்கும் ஏதாவது ஒரு வேலையைப் பிரிச்சுக் கொடுத்துட்டு இருக்கேன். அதனாலஇ இப்ப உன்னைச் சேர்த்துக்க முடியாது'' ன்னு சொல்லிட்டார்.

இப்படிச் சொன்னவுடனே, 'ஏண்டா கேட்டோம்'னு ஆயிடுச்சு. பேசாம கம்பெனி அசிஸ்டெண்ட்டுங்கற பேர்ல நிம்மதியா வேலை பார்த்திருக்கலாமே என்று ரொம்ப ஃபீலீங் ஆயிடுச்சு. இதோட நம்ம வாழ்க்கை முடிஞ்சு போச்சா© என்று மனம் உடைந்துவிட்டேன்.

அதுக்கப்புறம் டைரக்டர், டிஸ்கஷனுக்காக தூயவன் சார் ஆபிசுக்கு வந்து போய்க்கிட்டு இருந்தார். ஒருநாள் அசிஸ்டெண்டுகள் யாரும் வரலை. ஆனா டைரக்டர் மட்டும் வந்துவிட்டார். வந்த உடனே என்னைக் கூப்பிட்டு ''டயலாக் எழுதி இருக்கேன். அதைக் காப்பி எடுக்கத் தெரியுமா©'' என்று கேட்டார். நான் தெரியும் என்று சொல்லிக் கொண்டிருக்கும்பொழுதே அசோஸியேட் டைரக்டர் சுப்ரமணியன் வந்தாரு. டைரக்டரிடம், ''இந்தப் பையன்கிட்ட கொடுங்க சார் நல்லா எழுதுவான்'' என்று சர்டிபிகேட் செய்தார்.

உடனே டைரக்டர் எழுதிய வசன பேப்பரை என்னிடம் கொடுத்தார். வாங்கி நான் கடகடவென உடனே எழுதிக் கொடுத்தேன். வாங்கிப் பார்த்து விட்டுப் பக்கத்திலிருந்த அசோஸியேட் சுப்ரமணி,

''இவன் ரொம்ப நல்ல பையன் சார்.. உங்ககிட்டே வேலை செய்யணும்னு ரொம்ப ஆர்வமா இருக்கான்...'' என்று வசன காப்பி எழுத சிபாரிசு செய்ததோடு, இப்பொழுது வேலைக்கும் சிபாரிசு செய்தார். ஆனால்,

''ஏங்க சுப்ரமணி, நம்மகிட்டதான் நிறைய பேர் இருக்காங்களே, அப்புறம் எப்படி©'' என்றார். இரண்டாவது முறையாகவும் என் தலை மீது இடி விழுந்ததாக நொறுங்கிப் போனேன்.

அன்னிக்கு இருந்த சூழ்நிலையில் தூயவன் சார்கிட்டச் சொன்னா என்னை எந்த டைரக்டர்கிட்ட வேணும்னாலும் சேர்த்து விட்டிருப்பார். ஆனால், சேர்ந்தால் இவரிடம் தான் சேர வேண்டும் என்கிற வைராக்கியம் மனதிலே ஊறிப்போனதால் வேறு யாரிடமும் சேர வேண்டும் என்று தோன்றவில்லை.

ஒரு மனிதன் ஒன்றில் உறுதியாக, உண்மையாக இருந்தால் கண்டிப்பாக அது நிறைவேறும் என்பது என் வாழ்நாளில் அறிந்த உண்மை.

கதவு இடுக்கிலேயே டிஸ்கஷன் ரூமைப் பார்த்துப் பிரமித்துக் கொண்டிருந்த எனக்கு உள்ளே போய் உட்கார வழிவிட்டவர் இன்றைய டைரக்டர் அன்றைய அசோஸியேட் டைரக்டர் கோகுல கிருஷ்ணா சார் அவர்கள்தான். அவர் பிரமோஷனாகி டைரக்டராக வெளியில் சென்றார்.

எனவே, மத்த டைரக்டர்களுக்கும் பிரமோஷன் கிடைத்து விட்டது. இப்பொழுது கிளாப் அடிக்க ஓர் ஆள் தேவைப்பட்டது. இந்தக் காலி இடத்தில் என்னை அமர்த்த, மற்ற அனைத்து அசிஸ்டெண்டுகளும், எனக்கு அமோக ஆதரவளித்தார்கள். இதற்குக் காரணம் நான் டைரக்டரை இம்ப்ரஸ் செய்ய என்னவெல்லாம் செய்தேனோ அதே மாதிரி அசிஸ்டெண்ட் டைரக்டர்களுக்கும் கொஞ்சம் கூட கூச்சப்படாமல், கௌரவம் பார்க்காமல் டீ, காபி, பீடி, சிகரெட் என்று அலுக்காமல் அவர்களுக்கு வேண்டியதைச் செய்வேன். அதனால், அவர்களுக்கும் என்னை ரொம்பப் பிடித்திருந்தது.

'விடியும் வரை காத்திரு' படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே 'மௌன கீதங்கள்' படத்தின் படப்பிடிப்பும் துவங்கியது. அடையாறுல ஒரு வீட்ல படப்பிடிப்பு 'நீ அங்கே வந்திடு பார்த்துக்கலாம்' என்று அசிஸ்டெண்ட் டைரக்டர்கள் என்னை லொக்கேஷனுக்கு வரச்சொல்லி விட்டார்கள்.

சரிதாவும், டைரக்டரும் சம்பளப் பணத்தை என்னவெல்லாம் பண்ணலாம்னு பேசுற மாதிரி சீன். டைரக்டரின் முதுகுப்புறம்தான் கேமிரா இருந்தது. அண்ணன் கோவிந்தராஜன் அவர்களும், அண்ணன் ஈதோடு முருகேஷ் அவர்களும் கிளாப் பலகையை என் கையில் கொடுத்து, தைரியமாக அடி என்று சொல்லி விட்டார்கள்.

நானும், என்ன ஆனாலும் சரி என்று டைரக்டர் கிளாப் என்று சொன்னவுடன் கேமிரா முன் சென்று டக்கென்று அடித்து விட்டு ஓடி ஒளிந்து கொண்டேன். டைரக்டர் உடனே 'கட்' என்றார். லைட் பிரச்சினையா, இல்லை டயலாக் பிரச்சினையா© எதுக்காக கட் சொன்னார் என்று குழம்பிப் போனேன்.

உடனே டைரக்டர், கோவிந்தராஜ் அண்ணனைக் கூப்பிட்டு ''நீதானப்பா கிளாப் அடிக்கணும். இப்ப கிளாப் அடிச்சுட்டு ஒளிஞ்ச பையன் யார்© அவனைக் கூப்பிடு'' என்றார். ஒளிந்து கொண்டிருந்த நான் ஓடி வந்து அப்படியே சாஷ்டாங்கமாக காலைப் பிடித்துக் கொண்டு ''சார் நான் அப்பா இல்லாத பையன். கத்துக்கொடுங்க. என்னை நம்பி இரண்டு தங்கச்சிங்க. அம்மா இருக்காங்க. எனக்கு சினிமான்னா உயிரு'' என்று அழுதேன். சரிதா உட்பட படப்பிடிப்பு அரங்கில் இருந்த எல்லோரும் என்னைப் பரிதாபமாகப் பார்த்தார்கள்.

டைரக்டரும் சுற்றி உள்ள சூழ்நிலையையும் என்னையும் பார்த்தார். சரி எழுந்திரு என்று முதுகில் தட்டி ''கண்டினியூ பண்ணு'' என்றார். அன்றைக்கு மட்டும் அந்தக் கை என்னை அரவணைக்கவில்லை என்றால்© எந்தப் பஸ்ஸில் கண்டக்டராக விசில் அடித்துக் கொண்டிருப்பேனோ©

என் குருநாதர்கிட்ட அசிஸ்டெண்டா வேலை செய்யணுங்கற இலட்சியம் ஒரு வழியா நிறைவேறிடுச்சு. ஆனா குடும்பத்துல இருந்த கஷ்டம் தீர்ந்தபாடில்லை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 01, 2014 7:16 am

6. வாழ்க்கை வெள்ளத்திலே...

ஊரெல்லாம் ஒரே மழை வெள்ளமா இருக்கு. குறிப்பா சென்னையிலதான் சின்ன மழை பெய்தாலே ரோடெல்லாம் ஒரே வெள்ளமாயிடுமே. இந்த மழை வெள்ளத்தைப் பார்த்தவுடனே ஒரு கடந்த கால ப்ளாஷ்பேக் நிகழ்ச்சி என் நினைவுக்கு வருது.

மழை பெய்து வெள்ளம் வந்தா ரோட்ல தண்ணி நிக்குமோ இல்லையோ, முதல்ல எங்க வீட்டுக்குள்ள தண்ணி வந்துடும். ஏன்னா, முதல்ல எங்க வீடு உயரமாத்தான் இருந்துச்சு. கவர்ன்மெண்ட் ஒவ்வொரு வருஷமும் ரோட்டை உயர்த்திக்கிட்டே போனதினாலே எங்க வீட்டு தரை தாழ்ந்திடுச்சே ஒழிய, எங்க வீட்டுத் தரையை உயர்த்தணுமேங்கற எண்ணம் இல்லை. எங்க வீட்டுக்குப் போகணும்னா ரோட்லயிருந்து இரண்டு படி இறங்கித்தான் போகணும்.

அதனால வெள்ளம் வந்ததுன்னா முதல்ல எங்க வீட்டுக்குள்ளதான் வரும். அதுக்கப்புறம் எலி பொந்துக்குள்ள இருந்து தண்ணி வரும். முதல்ல எலி வளையைத்தான் அடைப்போம். அதையும் மீறி தண்ணி வந்ததுன்னா ஜன்னல் வழியாத்தான் வரும். வீட்ல இருக்கறது ஒரே கட்டில்தான். அதுல பொட்டி சட்டி எல்லாத்தையும் தூக்கி வச்சுட்டுக் கட்டில்லயே உட்கார்ந்துப்போம். கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்தா அந்தக் கட்டிலே மூழ்கிற நிலைமை வந்துடும். இதுதான் டேஞ்சர் சிக்னல்.

துறைமுகத்துல சிவப்புக்கொடி ஏத்துன மாதிரி ஒரு தடவை எல்லாரும் கட்டில் மேல் உட்கார்ந்தபடியே தூங்கிட்டோம். அப்ப ரேடியோவில வெள்ள அபாயச் செய்தியைச் சொல்லிக்கிட்டு இருந்தப்ப கட்டிலோரமா ஒரே சவுண்டா இருந்துச்சு. என்னடா இவ்வளவு சவுண்டா இருக்கேன்னு முழிச்சுப் பார்த்தா, எங்க வீட்டு ரேடியோ தண்ணியில மிதந்துகிட்டே வந்து வெள்ள அபாயத்தைப் பத்தி சொல்லிக்கிட்டு இருந்தது. அதுக்கப்புறம்தான் எல்லோரும் தடாபுடான்னு எழுந்திருச்சு மூட்டை முடிச்செல்லாம் தூக்கிக்கிட்டு, பக்கத்துல இருக்கிற சைதாப்பேட்டை மாவட்ட உயர்நிலைப் பள்ளிக் கூடத்துக்கு ஓடினோம்.

இந்தச் சம்பவத்தை நினைக்கும் போதெல்லாம் கவியரசு வைரமுத்து, 'இது வரை நான்' என்ற தொடரில் வைகை அணைகட்டும் போது தன்னுடைய கிராமத்துக்குள் வெள்ளம் வர, வைரமுத்து தன் தாத்தா கையைப் பிடித்துக் கொண்டு வெள்ளத்தில் வடுகப்பட்டிக்கு நடந்து சென்றதுதான் என் நினைவுக்கு வரும்.

பள்ளிக்கூடத்துல ராத்திரி முழுவதும் தங்கிடுவோம். காலையில எழுந்து கார்ப்பரேஷன் கொடுக்கும் சாப்பாட்டுப் பொட்டலத்துக்காகக் காத்திருப்போம். அதுக்குள்ள சின்ன பசங்களெல்லாம் ஸ்கூலுக்கு வருவாங்க. அப்ப நான்தான் ''பள்ளிக்கூடத்துக்குக் குடித்தனம் வந்துட்டோம். அதனால இன்னிக்கு உங்க எல்லாருக்கும் ஸ்கூல் லீவு'' ன்னு சொல்லி அனுப்பிடுவேன்.

அந்த மாதிரி சூழ்நிலையில் இருக்கும்போது கூட, ''என்னடா வீடு வாசலை விட்டு, கார்ப்பரேஷன் கொடுக்கிற சாப்பாட்டைச் சாப்பிடுறோமே'' என்ற கஷ்டத்தின் வலி பெரிதாகத் தெரியவில்லை. ஆனா பங்களா மாதிரி வீடுகட்டி, கட்டில் மெத்தையோட வசதி இருந்தும் தூக்கம் வரவில்லை. காரணம் வீட்டின் பேர்ல கடன் இருக்கறதுனால, ஏதோ இன்னொருவர் வீட்டுத் திண்ணையில் ஒண்டியிருப்பதாக ஓர் உணர்வு உறுத்திக் கொண்டே இருக்கிறது.

சில பேரைச் சந்திக்கக் காலை நேரத்துல வீட்டுக்குப் போய் ''சார் இருக்காங்களா''ன்னு கேட்டா,

''இல்லை வாக்கிங் போயிருக்காங்க''ன்னு சொல்வாங்க. நான் கூட ஆச்சரியப்படுவேன். என்னது, ஏதோ ஒரு வேலை செய்யறதுக்கு நேரம் ஒதுக்குகிற மாதிரி 'வாக்கிங்' அதாவது, நடந்து செல்வதற்கு மட்டுமே நேரம் ஒதுக்குகிறார்களே என்று. காரணம் அப்பொழுது வாக்கிங் என்பதே எனக்கு வாழ்க்கையாக இருந்தது.

தூயவன் சார்கிட்ட நான் வேலை செஞ்சுகிட்டு இருந்தப்ப, தினம் பஸ்ஸுக்குக் காசு இருக்குங்கறது உத்திரவாதமில்லை. அதனால சைதாப்பேட்டையில இருந்து தேனாம்பேட்டைக்கு நான் நடந்தே போயிடுவேன். சில நாள் தூயவன் சார் கொடுத்த ஐம்பது நூறுன்னு பாக்கெட்ல இருந்தாக்கூட, அந்த ஞாபகமே இல்லாம அனிச்சைச் செயல் மாதிரி நடந்துதான் போவேன்.

நடிகர் முத்துராமன் சாருடைய சொந்தப்படம் 'வாடகைக்கு வீடு'. இந்தப் படத்துக்குத் தூயவன் சார்தான் கதை வசனம். நான் முதன் முதலா டயலாக் காபி ரைட்டரா வேலை செஞ்ச படமும் இதுதான்.

இப்ப இருக்கற நவரச நாயகன் கார்த்திக்தான், அப்ப முரளிங்கற பேர்ல மேனேஜரா இருந்தார். அவர்கிட்ட 50 ரூபாய் சம்பளம் வாங்கிட்டு வவுச்சர்ல கையெழுத்துப் போடுறப்ப இருந்த சந்தோஷமும், நிம்மதியும் இப்ப இலட்சங்களாகச் சம்பளம் வாங்குகிறபோது இல்லை.

அதே மாதிரி ஸ்கூல்ல படிக்கிறப்ப எங்க வீட்டுக்குப் பக்கத்துல இருக்கிற சலூன்ல ஒரு ரூபாய் கொடுத்தா தலைக்கு சுடு தண்ணியெல்லாம் போட்டு முடி வெட்டி விட்டு, தலையில கிளிப் மாட்டி சுருள் முடி ஆக்கி விடுவாங்க. அந்த சுருள் முடி இரண்டு மாசம் வைரைக்கும் அப்படியே இருக்கும். அப்புறம் முடி வளர வளர சுருள் முடி கோரை முடியாகிவிடும். திரும்ப அஞ்சு காசும், பத்து காசுமா சேர்த்து ஒரு ரூபா தேற்றி, திரும்ப முடி வெட்டிச் சுருள் முடி ஆக்கிக் கொள்ளும் போது இருந்த சந்தோஷமும் திருப்தியும், இப்ப சினிமாவுல ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள விதவிதமான சிகை அலங்காரம் செய்து கொள்ளும் பொழுதோ அல்லது ஸ்டார் அந்தஸ்துள்ள ஏர்கண்டிஷன் அறையில் முடி வெட்டிக் கொள்ளும் பொழுதோ இல்லை.

அதேபோல தீபாவளிக்கு எனது தகப்பனார் பத்து ரூபாய்க்குப் பட்டாசு வாங்கிக் கொடுத்தால் அதுவே அதிகம். இந்தப் பத்து ரூபாய்க்குப் பட்டாசு வாங்கறதுக்கே, உனக்கு என்னென்ன வெடி வேணும்னு கேட்டு எல்லாத்தையும் எழுதிக்குவாரு. அதுல பத்து ரூபாய்க்குள்ள எதெது வாங்க முடியுமோ அதை மட்டும் டிக் பண்ணிட்டு சீட்டைக் கையில எடுத்துட்டுப் போவாரு.

ஆனா நான் நம்ம வீட்லயும் அதிகப் பட்டாசு வாங்கி வெடிச்சோம் அப்படீங்கறதை மத்தவங்களுக்குக் காட்டிக்கிறதுக்காக, தீபாவளிக்கு மூன்று நாட்களுக்கு முன்பிருந்தே தெருவுல கிடக்கற வெடிச்ச பட்டாசு வெடிக்காத பட்டாசு எல்லாத்தையும் பொறுக்கி, ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு வச்சுக்குவேன்.

அதுக்கப்புறம் வெடிக்காம இருக்கிற பட்டாசுகளில் இருந்து மருந்தை எல்லாத்தையும் பிரிச்சு ஒரு பேப்பர்ல கொட்டிக்கிட்டு சொந்தமா ஒரு வெடி தயார் செய்வேன். அப்படி தயார் செஞ்ச பட்டாசு எல்லாத்தையும் எங்க வீட்டு வாசல்ல வச்சு வெடிப்பேன். ஆனா அது எதுவுமே வெடிக்காது. எல்லாமே புஸ்ஸுன்னு போயிடும். ஆனா விடிஞ்சு பார்த்தா எங்க வீட்டு வாசல் முழுக்க நிறைய பட்டாசு வெடிச்சது மாதிரி நிறைஞ்சு கிடக்கும். அதோட எங்க தெருவுல அணுகுண்டோ ராக்கெட் வெடியோ யாராவது வெடிச்சா, ''இதோ பாரு, இந்த மாதிரி வெடியெல்லாம் இங்கே விடாதே'' என்று எச்சரிக்கை பண்ணுவேன். அதுக்கு இரண்டு காரணம். ஒண்ணு, எங்க தெருவுல குடிசைங்க நிறைய இருக்குதுங்கறது. மற்றொரு மிக முக்கிய காரணம், நாம அந்த மாதிரி காஸ்ட்லியான வெடி எல்லாம் வெடிகக முடியலையேங்கற ஃபீலிங்!

ஆனாலும் இன்னிக்கு பல ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு வெடி வாங்கி என் பசங்களோட வெடிச்சாலும் அன்னைக்கு வெடிக்காத வெடிகளைப் பொறுக்கி அதுல தயார் செய்து வெடிக்கும் போது இருந்த சந்தோஷமும், திருப்தியும் இதுல இல்லை. ஆக மனிதனுக்குத் தேடும் போது இருக்கற சுகம், அது கிடைச்ச பிறகு இருப்பதில்லை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 01, 2014 7:17 am

7. அந்த முதல் அட்வான்ஸ்

நூறு முறை யோசி. ஆனால், முடிவு ஒருமுறை தான் எடுக்க வேண்டும்' என்று சொல்வார்கள். எனவே முடிவு எடுப்பதென்பது வாழ்க்கையில் முக்கியமான விஷயம். வெற்றி தோல்வி அனைத்துமே, எடுக்கிற முடிவைப் பொறுத்துத்தான் அமையும்.

என்னுடைய குருநாதர்கிட்ட அசிஸ்டெண்ட் டைரக்டரா சேர்ந்து, மூணு மாசம் கழிச்சுத்தான் நான் வேலைக்குச் சேர்ந்ததே எங்க அம்மாவுக்குத் தெரியும். தெரிஞ்சவுடனே லபோதிபோன்னு கத்துனாங்க. ''ஏண்டா கண்டக்டரா போய்க் கவர்ன்மெண்ட் வேலை பார்ப்பேன்னு பார்த்தா, நீ போய் சினிமாவுல சேர்ந்து இருக்கறியே... (எனது குடும்பத்தில் அப்பா, சித்தப்பா, மாமா, மச்சான் இப்படி எல்லோருமே ட்ரான்ஸ்போர்ட்ல வேலை பார்த்து வந்தார்கள்) சினிமாங்கறது நம்மமாதிரி இருக்கிறவங்க, பார்க்கத்தான் நல்லா இருக்கும். அதைப் போய் ஒரு தொழிலா நினைச்சு வேலைக்குச் சேர்ந்து இருக்கியே...'' என்று கத்தினாங்க. இந்த சூழ்நிலையில கோபிச்செட்டிபாளையத்துல 'தூறல் நின்னு போச்சு' படப்பிடிப்பில் அசிஸ்டெண்டா வேலை பார்த்துக்கிட்டு இருந்தப்பவே, மெட்ராஸ்ல இருந்து எங்க அம்மா ஒரு தபால் அனுப்பி இருந்தாங்க. பிரிச்சுப் பார்த்தா உள்ளே கண்டக்டர் வேலைக்கான ஆர்டர் லெட்டர் இருந்தது.

ஏற்கனவே, எங்க அப்பா டிரைவர்ங்கறதுனாலே எப்படியும் என்னைக் கண்டக்டரா சேர்த்துடலாங்கற நம்பிக்கையில எனக்குக் கண்டக்டர் லைசென்சு எடுத்துக் கொடுத்திருந்தார். நானும் ஃபர்ஸ்ட் எய்டு வரை படிச்சு வச்சிருந்தேன். உடனே டைரக்டர்கிட்ட அப்பாய்ன்ட்மெண்ட் ஆர்டரைக் காண்பிச்சேன். பார்த்துட்டு...''நீ என்ன பாண்டியா முடிவு எடுத்து இருக்கிறே©'' என்று கேட்டார். நான் ஒன்றுமே பதில் சொல்லாமல் நின்னுட்டு இருந்தேன். அன்னிக்கு வந்து பாடல் காட்சியோடு படப்பிடிப்பு நடந்துக்கிட்டு இருக்கு. அதனால என் கழுத்துல விசில் தொங்கிக்கிட்டு இருந்துச்சு. டைரக்டர் என்னையும் விசிலையும் ஒரு முறை பார்த்துட்டு 'பாண்டியா இங்கேயும் விசில் அடிச்சிட்டுத்தான் இருக்கே, அங்கேயும் போய் விசில் அடிக்கத்தான் போறே. பேசாம இங்கேயே இருந்துடு''ன்னார். அன்னிக்கு டைரக்டர் எடுத்த முடிவை நான் ஏத்துக்காம இருந்தால் இன்னிக்கு ரசிகர்கள் என் படத்தைப் பார்த்து விசில் அடிக்கிற உயர்ந்த நிலை வந்திருக்காது.

நான் டைரக்டர்கிட்ட இருந்து வேலையை விட்ட விஷயம் கூட எங்க அம்மாவுக்கு மூணு மாசம் கழிச்சுத்தான் தெரியும். அந்த மூணு மாசமா 'கன்னி ராசி' படத்துக்காகக் கதை டிஸ்கஷன் பண்ணிக்கிட்டு இருந்தேன்.

அந்த டைம்ல 'முந்தானை முடிச்சு' பட ஸ்டில்ஸெல்லாம் பத்திரிகையில வந்துக்கிட்டு இருக்கு. இதைப் பார்த்துட்டு எங்க அம்மா...

''ஏண்டா அந்த புண்ணியவான் கடவுள் மாதிரி மாசாமாசம் கை நிறைய சம்பளம் கொடுத்துப் பிள்ளை மாதிரி வச்சிருந்தாரே, எதுக்கடா வேலையை விட்டுட்டு வந்தே''ன்னு அசிஸ்டெண்ட்டா சேர்ந்தப்ப திட்டின மாதிரியே அந்த வேலையை விட்ட போதும் திட்டினாங்க. அதுக்கு நான்...

''டைரக்டர் ஆகப் போறேன்'' என்று பதில் சொன்னேன்.

''என்னது டைரக்டர் ஆகப் போறியா - இது உனக்குத் தேவையா©'' என்று அட்வைஸ் பண்ணினாங்க. காரணம் என்னுடைய வெளித்தோற்றம் ஒரு டைரக்டருக்குரிய லுக் இல்லாததுதான். யார் எது சொன்னாலும் பரவாயில்லை, டைரக்டர் ஆக வேண்டும் என்று தைரியமாக முடிவெடுத்தேன். அந்த முடிவு வெற்றியாகத்தான் அமைந்தது.

அதேபோல 'ஆண்பாவம்' படத்துக்காக சில நடிகர்கள் கிட்ட கால்ஷீட் கேட்டேன். கிடைக்கலை. அதுக்கப்புறம் என் அசிஸ்டெண்டுகளைக் கூப்பிட்டு இந்தப் படத்துக்கு 'நான்தான் ஹீரோ' என்று சொன்னேன். 'இது உனக்குத் தேவையா©' என்ற அர்த்தத்தில் மௌனமாக இருந்தார்கள். என் முடிவை நான் மாற்றிக் கொள்ளவில்லை.

ஆனால், எனது குருநாதர் ஒரு தீர்க்கதரிசி. 'இன்று போய் நாளை வா' படப்பிடிப்பில் பஸ் ஸ்டாப்பில் ஒரு பெண்ணுடன் ஒருவர் பேசிக் கொண்டிருப்பதாக சீன். அந்த சீன்ல நடிக்கறவருக்கு வசனம் நான்தான் சொல்லிக் கொடுத்தேன். ஆனா டேக்ல தப்பு தப்பா வசனம் பேசி நடிச்சாரு. டைரக்டர் ''என்னய்யா இப்படி பேசுறே©'' என்று அவரைத் திட்டினார். அதுக்கு அவர்...

''இப்படிப் பேசச் சொல்லித்தாங்க உங்க அசிஸ்டெண்ட் டைரக்டர் சொல்லிக் கொடுத்தார்'' என்று பழியை என் மேல போட்டுட்டார். உடனே டைரக்டர்...

''பாண்டியா எப்படிப் பேசி நடிக்க சொல்லிக் கொடுத்தே©'' என்று என்னைக் கேட்டார்.

உடனே நான் டைரக்டர் எதிர்பார்த்தபடியே வசனம் பேசி நடிச்சுக் காட்டினேன். டக்குன்னு என் கையில இருந்த கிளாப் போர்டை வெடுக்குன்னு பிடுங்கிட்டு, ''போய் நில்லய்யா. இப்ப பேசி நடிச்சியே அதே மாதிரி செஞ்சிடு'' என்றார். நான் பயத்துல வெலவெலத்துப் போய் ''வேணாம் சார்''ன்னு இழுத்தேன்.

''நீ போய் நில்றா''ன்னார். சரின்னுட்டு வசனம் பேசினேன். ஒரே டேக்ல சீன் ஓ.கே. ஆயிடுச்சு.

டைரக்டர் கார்ல கிளம்பி ஆபீசுக்கு வந்துட்டார். நான் ஆபீசுக்கு வந்தேன். அப்ப என்கிட்ட...

''நீ நடிக்றதுக்காகத்தான் சினிமாவுக்கு வந்தியா''©ன்னு கேட்டார்.

உடனே நான் நாடகத்துல நடிச்சிக்கிட்டு இருந்த அனுபவத்தைச் சொன்னேன்.

''பின்னே ஏன் இதை என்கிட்ட முன்னாடியே சொல்லலை'' என்று கேட்டார்.

''தெய்வாதீனமா உங்ககிட்ட அசிஸ்டெண்ட் டைரக்டர் சான்ஸ் கிடைச்சிடுச்சு. அதுக்கிடையில நடிப்புலயும் ஆர்வம்னு சொன்னா துரத்திவிட்டுடுவீங்கற பயத்துல தான் சொல்லலை'' என்று சொன்னேன்.

உடனே பக்கத்துல நின்ன அந்தப் படத்தோட மானேஜர் கேப்டன்ங்கறவருடைய பாக்கெட்ல டைரக்டர் கையை விட்டார். பதினோரு ரூபாய் இருந்துச்சு. அதை என் கையில கொடுத்து ''சீக்கிரமே நீ பெரிய நடிகராகப் போறே... என்னுடைய முதல் அட்வான்ஸ்'' என்று வாழ்த்தினார். அது இப்போது பலித்துவிட்டது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 01, 2014 7:17 am

8. இவனெல்லாம் நடிக்க வந்துட்டான்...

படிக்கற காலத்தில் ஆசிரியர் பழமொழிகள் சொல்லிக் கொடுத்த போது, அது பரீட்சைக்காகப் பயன்பட்டது. ஆனால், வாழ்க்கையில் பல பிரச்னைகள், பல விஷயங்களை சந்திக்கும் பொழுதுதான், அன்றைக்கு மனப்பாடமாகப் படித்த பழமொழிகளின் பயனை உணர முடிந்தது. அதன் பொருளையும் தெரிந்து கொள்ள முடிந்தது.

''ஒரு பிரச்னையைக் கண்டு ஒதுங்குபவனைவிட, அந்தப் பிரச்னையில் மாட்டிக் கொண்டு விழிப்பவனே மேலானவன். ஏனென்றால் அவன் வெற்றியையோ, அல்லது தோல்வியையோ சந்திக்கப் போகிறான். ஆனால், பிரச்னைகளைக் கண்டு ஒதுங்கி இருப்பவன், எதையுமே சாதிக்கப் போவதில்லை. வாழ்க்கையில் அனுபவமும் கிடைக்கப் போவதில்லை.''

சுவாமி விவேகானந்தரின் இந்தப் பொன்மொழியை நான் என்றோ படித்தது. ஆனால், இன்றுதான் அதன் பொருளைப் பூரணமாக உணர்கிறேன்.

அண்ணன் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எழுதிய கவிதைத் தொகுப்பு ஒன்றில்,

'சுடும் வரை நெருப்பு, சுற்றும் வரை பூமி, போராடும் வரை மனிதன்' என்று எழுதியிருக்கிறார். இந்த வரிகள் என் வாழ்க்கைக்கு எந்த அளவுக்கு நம்பிக்கையூட்டி இருக்கின்றன என்று அனுபவப் பூர்வமாக உணர்ந்து இருக்கிறேன்.

அதே போல், நண்பர் வெல்வெட் ராஜ்குமார். சில நேரங்களில் நம்பிக்கை இழந்து நான் பேசுகிற பொழுது...

''கவலைப்படாதே பாண்டியா, கண்டிப்பாக நீ மீண்டு வருவே. ஒரு பிரச்னை வருகின்ற பொழுது மனிதனைக் கார்னருக்குக் கொண்டு போய்ச் சேர்த்துவிடும். பிறகு நல்ல ஒரு விடியல் வரும்.'' என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார். இந்த வார்த்தைகளின் வலிமைகளையெல்லாம் இப்பொழுது நன்றாகவே உணர்கிறேன்.

ஆண்பாவம் படப்பிடிப்பு முடிஞ்சவுடனேயே, ஏ.வி.எம் படக் கம்பெனியின் பூமி உருண்டை எம்பளம் மாதிரி, அலமு மூவிஸ் படக் கம்பெனிக்காகப் புதுசாக ஏதாவது எம்பளம் ஒன்றை உருவாக்க யோசிச்சிக்கிட்டு இருந்தேன். அப்போ, அந்தப் படத்தோட தயாரிப்பாளர் திரு. சுப்பிரமணியம் சார் என்கிட்ட ''திருப்பதிக்குப் போய் ஒரு ஷாட் எடுத்துட்டு வந்து, அதை எம்பளமா வச்சுக்குங்க'' என்றார்.

கடைசி நேரத்துல அங்க போயிட்டு வர லேட்டாகிடும்னு அவர்கிட்ட சொல்லிகிட்டு, அதே படத்தோட பைனான்சியர் திரு. வேலாயுதம் எனக்கு வாங்கிக் கொடுத்த பைக்கை எடுத்துக்கிட்டு, நானே பாண்டி பஜார் போனேன். அப்ப கொலு சீஸன்; வீதி முழுக்க சாமி சிலைகளா குவிஞ்சு கிடக்கு.

ஒரு கடையில வெங்கடாஜலபதி சிலை ஒண்ணு ரொம்பப் பிரகாசமாக தெரிஞ்சுச்சு. அதைப் பார்த்து வச்சுக்கிட்டு நேரே ஆபீசுக்குப் போனேன். மேனேஜரைக் கூப்பிட்டு, அந்தக் கடையோட விலாசத்தைச் சொல்லி, நான் பார்த்துட்டு வந்த வெங்கடாஜலபதி சிலையைப் பேரம் பேசாம சொன்ன விலை கொடுத்து வாங்கிக்கிட்டு வந்துடுங்க என்று அனுப்பி வைத்தேன். அவரும் அதே சிலையை வாங்கிட்டு வந்துட்டாரு. வாங்கிட்டு வந்ததுல இருந்து அதை ஆபீசுல வச்சு மூணு நாளா அவல் பொரிக் கடலையெல்லாம் படைச்சு எல்லாரும் கும்பிட்டுக்கிட்டு இருந்தாங்க. நாலு நாள் கழிச்சு, அரசு ஸ்டுடியோவுக்கு (இடையில் எம்.ஜி.ஆர். பிலிம்சிட்டி இருந்தது) அந்தச் சிலையை ஷூட் பண்ண எடுத்துக்கிட்டுப் போறோம்.

அந்தச் சிலையைப் பிரமாதமா ஜோடிச்சு, அதை வைக்கப்போற ரேக் மேலே ஒளிப்பதிவாளர் அசோக்குமார் லைட்டிங்கெல்லாம் பண்ணி ரெடியாயிட்டார். உடனே நான் பக்கத்துல நின்ன ஓர் ஆர்ட்டிஸ்டைக் கூப்பிட்டு, ''அந்த வெங்கடாஜலபதி, சிலைய எடுத்து அந்த ரேக் மேல வைப்பா''ன்னு சொன்னேன். எடுத்துக்கிட்டு வந்த பையன் ரேக் மேலே வைக்கும் போது கை தறவி கீழே விட்டுட்டான்.

வெங்கடாஜலபதி இரண்டா, உடைஞ்சுப் போயிட்டார். நான் திராவிடக் கருத்துக்களைப் பேசறவன்தான். ஆனாலும் மனம் உடைஞ்சு போயிட்டேன். அதுக்கேத்தாப்புல பக்கத்துல நின்ன லைட்மேன் ஒருத்தர்...

'இவனெல்லாம் ஹீரோவா நடிக்க வந்துட்டான். அதுனாலதான் இப்படிக் கெட்ட சிம்டம்ஸ் நடந்திட்டிருக்கு' என்று என் காதுபடவே பேசினார். நான் உடனே ஷூட்டிங்கைப் பேக்கப் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டேன்.

மறுநாள் அதே வெங்கடாஜலபதி பெருமாளை பெவிக்கால் போட்டு ஒட்டி, கலரெல்லாம் பூசி கரெக்ட் பண்ணிட்டு, ''என்னைக் காப்பாத்திக்கப் படம் எடுத்துட்டேன் பெருமாளே. உன்னை நீ காப்பாத்திக்க'' என்று வேண்டிக் கொண்டு, அதே அரசு ஸ்டுடியோவுக்கு எடுத்துச் சென்று ஷூட் பண்ணினேன். படம் ரிலீசாகிப் பெரிய வெற்றி அடைஞ்சிருச்சி. அதுக்கப்புறம் ஒவ்வொரு பட ஷூட்டிங் முடிஞ்சவுடனேயும், ஒரு வெங்கடாஜலபதி சிலை வாங்கி உடைச்சிட்டு அதையே ஷூட் பண்ணி எம்பளமா வைக்கலாமே©'' என்று என் அசிஸ்டெண்டுகளெல்லாம் சென்ட்டிமெண்ட் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

அதனால எது நடந்தாலும் அதை ப்ளஸ் ஆக்கிக்கப் பழகிக்கணும்.

''உனக்காகப் படைக்கப்பட்ட ஒவ்வொரு அரிசியிலும் உனது பெயர் எழுதப்பட்டிருக்கிறது'' என்று பைபிளில் வரும் வாசகம் எனக்குப் பிடிக்கும்.

நமக்கு வரவேண்டியது வந்தே தீரும், அப்படிங்கறதில் எனக்கு நிறைய நம்பிக்கை உண்டு.

'மழுவில் காவடி'ங்கற மலையாளப்படம். இதைத் தமிழில் தயாரிக்க, தயாரிப்பாளர் ருக்மாங்கதன் என்னை புக் பன்ன வந்தார். கதை எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்ததால், குறைந்த சம்பளத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். அவரும் பைனான்சியரை ரெடி பண்ணிட்டுப் பத்து நாள்ல வர்றேன்னுட்டுப் போனார். பத்தாவது நாள் வந்தார். அதுக்குள் கதையெல்லாம் ஓரளவு ரெடி பண்ணி வச்சிருந்தார்.

''சார் உங்களை ஹீரோவா போட்டா எந்த ஃபைனான்சியரும் பணம் கொடுக்க முன் வரமாட்டேங்கிறாங்க. அதனால, இப்ப என்னால உங்களை வச்சு படம் பண்ண முடியாது''ன்னு சொல்லிட்டு ருக்மாங்கதன் போயிட்டார். இப்படி அவர் வெளிப்படையாய்ச் சொன்னது எனக்கு ரொம்பப் பிடிச்சு இருந்தது.

அதுக்கப்புறம் யாராவது போய் அவர்கிட்ட அந்தப் படத்தோடு ரைட்ஸ் கேட்டாங்கன்னா...

''இந்தப் படத்தை பாண்டியராஜனை வச்சுப் பண்ணுங்க; வேற யாரை வச்சுப் பண்ணினாலும் நல்லா இருக்காது''ன்னு சொல்லுவார்.

அதே மாதிரி என்கிட்ட யாராவது புதுசா நடிக்க கால்ஷீட் கேட்டு வந்தாங்கன்னா, ருக்மாங்கதன் சார்கிட்ட 'மழுவில் காவடி'ங்கற படத்தோட ரைட்ஸ் வாங்கிட்டு வாங்க பண்ணலாம்னு சொல்லுவேன்.

கொஞ்ச நாள் கழிச்சு என்னை வச்சு படம் பண்ண ஒரு தயாரிப்பாளர் வந்தாரு. உடனே, ருக்மாங்கதன் சார்கிட்ட போய் ''அந்தப் பட பிரிண்டைக் கொடுங்க, உங்களுக்கு டி.கே.ஏரியா மாதிரி ஒரு ஏரியாவைக் கொடுத்துடறேன்.'' என்று கேட்டேன்.

அதற்கு அவர் ''எனக்கு ஒரு ஏரியாவும் வேண்டாம். இதை எடுத்துட்டு போய் பண்ணிக்க. கண்டிப்பா மார்க்கெட் வரும். அப்புறம் எனக்கொரு படம் பண்ணிக்கொடு'' என்று சொன்னார்.

அதுக்கப்புறம் அந்த பிரிண்டை வாங்கிட்டு வந்தேன். ஒரு வாரம் பெட்டி என் வீட்லயே இருந்துச்சு. ஆனா அதைப் பார்க்க வேண்டிய தயாரிப்பாளர் வந்து பார்க்கலை.

அதனால பிரிண்டை திரும்ப ருக்மாங்கதன் சார்கிட்டயே கொடுத்துட்டேன்.

அவரும் வேற ஹீரோவை வச்சு இரண்டு மூன்று தடவை பூஜை போட்டார்.

ஒவ்வொரு முறை பூஜை போடும் போதும் 'அய்யோ நமக்கு அந்த வாய்ப்புக் கிடைக்காமப் போச்சே'ன்னு வருத்தப்படுவேன். காரணம், அந்தக் கதையில் ஜெயராமன் சார் ரொம்ப இயல்பா காமெடியா நடிச்சு இருப்பார். ஆனா, அந்தப்படம் வெறும் பூஜையோடவே நின்னு போயிடுச்சு.

அந்த சமயத்துலதான் என்.கே. விஸ்வநாத் இயக்கத்துல நான் நடிச்ச 'பொறந்தாலும் ஆம்பளையா பொறக்கக் கூடாது'ங்கற படம் ரிலீஸ் ஆச்சு. படம் நல்லா போயிட்டு இருந்துச்சு. உடனே திரும்பவும் ருக்மாங்கதன் சார் என்கிட்ட வந்து 'இப்ப உங்களை வச்சுக் கேட்டா ஃபைனான்சியரெல்லாம் பணம் தர்றேன்னு சொல்றாங்க. படம் பண்ணிடலாமா'னு கேட்டார்.

நானும் 'ஓ.கே.சார்'னு சொன்னேன்.

அந்தப் படம்தான் 'சுப்பிரமணியசுவாமி'; சக்ஸஸ் புல்லா போச்சு. அதனால, நம்முடைய கடமையை ஒழுங்கா செஞ்சுக்கிட்டு இருந்தோம்னா நடக்க வேண்டியது நன்றாகவே நடக்கும் என்பதை உணர்ந்து கொண்டேன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 01, 2014 7:18 am

9. யோசிச்சுப் பார்த்தா ராசியெல்லாம்...

சென்டிமெண்ட்' இது மற்ற தொழில்களை விட சினிமாவுல ரொம்ப பாப்புலர். ஆனா என்னைப் பொறுத்த வரையில் நிறைய சென்டிமெண்ட்டை உடைச்சுட்டுத் தான் வெளியே வந்திருக்கேன்.

என்னுடைய முதல் படம் 'கன்னிராசி' செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணைப் பற்றிய கதை. இன்னும் சொல்லப்போனா மூட நம்பிக்கையைக் கண்டிக்கும் ஒரு சிறிய பிரச்சாரப் படம் என்று கூடச் சொல்லலாம்.

ஆனால், இந்தக் கதை உருவாகும் பொழுதே, நிறைய பேர் என்கிட்ட செவ்வாய் தோஷம்கிறதே ஒரு ராங்சென்டிமெண்ட். அதனால் இந்தக் கதையைப் படம் எடுக்காதீங்க என்று சொன்னார்கள்.

அது மட்டுமில்லாமல், பூஜை அழைப்பிதழிலேயே ஜாதகக் கட்டம் போட்டு, அந்த ஒவ்வொரு கட்டத்துலயும், இசைஞானி இளையராஜா சார் பேர், பிரபு சார் பேர், கேமிராமேன் அசோக்குமார் சார் பேர், தயாரிப்பாளர் பேர், 'கன்னிராசி' டைட்டில், என் பெயர் உட்பட எல்லா பெயர்களுமே அந்த ஜாதகக் கட்டத்துக்குள்ள இருக்குற மாதிரி டிசைன் பண்ணி இருந்தேன். இந்த இன்விடேஷனைப் பார்த்த நிறைய பேர், 'விபரம் தெரியாம ஜாதகக் கட்டத்துக்குள்ளேயே இவன் கை வச்சுட்டான். இனி இந்தப் படம் எங்கே ரிலீஸ் ஆகப் போகுது'ன்னு பேச ஆரம்பித்து விட்டார்கள். முதல் படம் என்பதால் எனக்கும் மனதில் கொஞ்சம் பயம் வந்தது.

ஆனா அந்தப் படம் மாபெரும் வெற்றி பெறாவிட்டாலும் ஒரு பெரும் வெற்றியைத் தந்து இந்தப் பாண்டியராஜனை மக்கள் மத்தியில் அடையாளம் காட்டியது.

அதே மாதிரி 'ஆண்பாவம்' படத்தில் ஹீரோவாக அறிமுகமானேன். அந்தப் படத்துல கம்பெனி சின்னமான திருப்பதி வெங்கடாஜலபதி சிலை உடைஞ்சு போனதுனால, அவ்வளவுதான் புது ஹீரோ அம்பேல்னு என் காதுபடவே பேசினாங்க.

இந்தச் சூழ்நிலையில், படமெல்லாம் ரெடியாகி, பெட்டி ஒவ்வொரு ஏரியாவுக்கும் அனுப்பி வைக்க வரிசையா அடுக்கி வச்சிருந்தார் தயாரிப்பாளர் சுப்ரமணியம்.

''பாண்டியராஜன், முதல் பெட்டியை உங்க கையால விநியோகஸ்தர்கள் கையில் கொடுங்கள்'' என்றார். நான் ஒரு நிமிஷம் ஷாக்காகிப் போய்,

''சார் ஏற்கனவே என் ராசியைப் பற்றிச் சிலபேர் பேசிக்கிறது உங்க காதுல விழலன்னு நினைக்கிறேன். அதனாலதான் தைரியமா என்னைப் பெட்டி எடுத்துத் தரச் சொல்றீங்க'' என்று மறுத்தேன். அதற்கு சுப்ரமணியம் சார்...

''பாண்டியா எப்பவுமே பாசிடிவா திங்க் பண்ணுங்க. நெகடிவா திங்க் பண்ணாதீங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும்© என்றார். சரியென்று நானும் படப்பெட்டியை எடுத்துக் கொடுத்தேன்.

படமும் ரிலீஸ் ஆச்சு. சுப்பரமணியம் சார் என்னைக் கார்ல ஏத்திக்கிட்டு, பல்லாவரம் சாந்தி தியேட்டரில் நம்ம படம் ரிலீஸ் ஆகியிருக்கு, வாங்க பார்த்துட்டு வரலாம் என்று அழைத்துச் சென்றார்.

பகல் காட்சி, இரண்டரை மணிக்கு ஆரம்பிச்சாங்க. படம் ஆரம்பித்துப் பத்து நிமிடம் கழித்து உள்ளே போனோம். பார்த்தா மொத்த தியேட்டர்லயும் பீச்ல சுண்டல் வாங்கித் தின்னுக்கிட்டு தூரம் தூரமா இடை வெளி விட்டு உட்கார்ந்திருக்கிற ஜோடிகள்தான் உள்ளே உட்கார்ந்து இருந்தாங்க. பார்த்தவுடனே மனசு பகீர்னு ஆயிடுச்சு. அப்படியே அழுதுகிட்டே சுப்ரமணியம் சாரோட கார்ல வந்து உட்கார்ந்துட்டேன்.

ஒழுங்கா ஒரு படம் டைரக்ட் பண்ணி டைரக்டர்னு பேர் வாங்கியிருந்தோமே, இப்ப தேவையில்லாம ஹீரோவா நடிக்கப் போய் டைரக்சன் தொழிலும் பாதிக்கப் போகுதே என்று கலங்கிப் போனேன். ஆனால், சுப்ரமணியம் சார் மட்டும் வேதனையை வெளிக்காட்டாமல் சிரிச்சுக்கிட்டே வந்தார். அவரிடம் ''இந்த லட்சணத்துல என் கையால பெட்டியை எடுத்துத் தர சொல்லிட்டீங்க'' என்று வருத்தப்பட்டுச் சொன்னேன்.

ஆனால், அவரோ, ''கவலைப்படாதே பாண்டியா! எல்லாம் நல்லதாவே நடக்கும்'' என்று வழி நெடுக தைரியம் சொல்லிக் கொண்டே வந்தார்.

வீட்டில் என்னை இறக்கி விட்டுட்டு, சுப்ரமணியம் சார் கிளம்பிவிட்டார். நான் இரவு எட்டு மணிவரை வீட்டை விட்டு வெளியே வரவில்லை. எட்டே கால் மணிக்கு என் வீட்டிற்கு, அபிராமி தியேட்டர்ல படம் ஹவுஸ்புல் ஆயிடுச்சு என்று தகவல் வந்துருச்சு. உடனே பைக் எடுத்துட்டு அபிராமி தியேட்டருக்குப் போனேன்.

தியேட்டருக்குள்ளே நுழைஞ்சு பார்த்தேன். ஆடியன்ஸ் நிறைஞ்சு இருந்தாங்க. அப்பப்ப ஒவ்வொருத்தரும் கலகலப்பா சிரிச்சுக்கிட்டு இருந்தாங்க. எனக்கு அப்பத்தான் உயிர் வந்தது மாதிரி இருந்துச்சு.

படம் முடிஞ்சு எல்லாரும் வெளியே வந்துக்கிட்டு இருந்தாங்க. அவுங்கள்ல எல்லோருமே பாண்டிய ராஜன்ங்கற புதுப் பையன் நல்லா காமெடியா நடிச்சு இருக்கான். பையன் நல்லா வருவான் என்று சொல்லிக் கொண்டே போனார்கள். சில பேர் என்னிடம்...

''சார், நீங்கதானே இந்த படத்துல நடிச்சிருக்கிற ஹீரோ©'' என்று அடையாளம் கண்டு கொண்டு ஆட்டோ கிராஃப் கேட்டார்கள்.

அந்த நிமிடத்தில்தான் நாம் தப்பித்து விட்டோம் என்று நம்பிக்கை வந்தது. எனவே செண்டிமெண்ட் என்பதை ஒரு மூட நம்பிக்கை என்று சொல்லும் அளவுக்கு நாம் அதையே கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கக் கூடாது.

இதே போல் 'காதலன்' என்ற டைட்டில் வைத்தாலே படம் ஓடாது என்கிற ராங்க் செண்டிமெண்ட்டை உடைத்து, காதலன் என்ற டைட்டிலில் படம் எடுத்து வெற்றி கண்டவர் டைரக்டர் ஷங்கர்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக