புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Today at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Today at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Today at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Today at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Today at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Today at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Today at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Today at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நரேந்திர மோடி - ரஜினி சந்திப்பு
Page 1 of 1 •
நேற்று தனது தேர்தல் சூறாவளி சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக சென்னை வந்த பாஜகவின் பிரதமர் வேட்பாளர் சென்னையில் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சென்று சந்தித்துள்ளார்.
மோடியுடனான சந்திப்பிற்குப் பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “இது வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்புதான். நான் நோய்வாய்ப்பட்டிருந்தபோது என்னைச் சந்தித்த நரேந்திர மோடி நான் நலமடைவதற்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த முறை அவர் என்னைச் சந்தித்தபோது அவர் தேர்தலில் வெல்வதற்கு நான் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டேன்” என தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த நரேந்திர மோடி நானும் உங்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று கூறியுள்ளார்.
அதன் பிறகு இருவரும் கட்டியணைத்து தங்களின் அன்பைப் புலப்படுத்திக் கொண்டுள்ளனர். அதன்பிறகு நரேந்திர மோடி ரஜினியுடனான தனது குறுகிய சந்திப்பை முடித்துக் கொண்டு கிளம்பி விட்டார்.
மோடி அலை தமிழ் நாட்டுக் கரையிலும் பாயுமா?
இந்தியாவின் வட மாநிலங்களில் பரவுகின்ற மோடி அலையும், பாஜகவிற்கு சாதகமான ஆதரவு அலையும் ஏனோ தமிழகத்தில் இதுவரை பரவவில்லை என்றுதான் கூற வேண்டும்.
இந்நிலையில், திமுகவையும் அதிமுகவையும் ஒதுக்கி வைத்து விட்டு (அல்லது அவர்கள் பாஜகவை ஒதுக்கி வைத்து விட்டார்கள் என்றும் கொள்ளலாம்) தேர்தலைச் சந்திக்க பாஜக தயாராகி விட்டது.
பாஜகவிற்கு தமிழ் நாட்டில் பக்கபலமாக நிற்பவர்கள் விஜயகாந்தும், வைகோவும், பாமக கட்சியின் டாக்டர் ராமதாசும்தான். ஆனால், நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என்ற எண்ண ஓட்டமும் பல தமிழக வாக்காளர்களிடையே பரவிக் கிடக்கின்றது என்பதையும் நாம் மறந்துவிட முடியாது.
இந்த நரேந்திர மோடிக்கு ஆதரவான அலையோடு சேர்ந்து விஜயகாந்த், வைகோ, பாமக சார்பு வாக்குகளான வன்னியர் வாக்குகளும் ஒன்று சேர்ந்தால், கணிசமான சில தொகுதிகளை பாஜக கூட்டணி தமிழ் நாட்டில் கைப்பற்ற முடியும் என்பது ஒரு சில விமர்சகர்களின் அரசியல் கணிப்பாகும்.
ரஜினியைக் குறிவைத்து பாஜகவின் தேர்தல் வியூகம்
இந்நிலையில் தனிமனிதராக தமிழ் நாட்டு மக்களை தனது நடிப்பாலும், எளிமையாலும் கவர்ந்திழுத்து தனது கைப்பிடிக்குள் வைத்திருக்கும் ரஜினிகாந்தை குறிவைத்து பாஜக தனது தேர்தல் வியூகத்தை நகர்த்தியிருக்கின்றது.
நேற்று பிரச்சாரத்திற்காக சென்னை வந்த நரேந்திர மோடி ரஜினிகாந்தை சந்தித்திருப்பதன் மூலம், புதிய பரபரப்பையும் தனது பிரச்சார உத்திகளின் மூலம் தமிழ் நாட்டில் பாஜக கூட்டணிக்கு புதிய எழுச்சி அலையையும் உருவாக்கித் தந்திருக்கின்றார்.
இதனைத் தொடர்ந்து தமிழ் நாட்டுக்கு பாஜக தலைவர்கள் அத்வானியும், ராஜ் நாத் சிங்கும் பிரச்சாரத்திற்காக வருகை தரப் போகின்றார்கள் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.
ரஜினி மீது மீண்டும் அரசியல் வெளிச்சம்
கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் இருந்து ஒதுங்கியும், ஒளிந்தும் இருந்த ரஜினி இப்போது இந்த பொதுத் தேர்தலின் மூலம் மீண்டும் அரசியல் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றார்.
பாஜகவிற்கு நேரடியாக ஆதரவு தெரிவிக்காவிட்டாலும், நரேந்திர மோடியைச் சந்தித்ததன் மூலம் பாஜகவிற்கான தனது ஆதரவை – அடுத்த பிரதமராக மோடிதான் வரவேண்டும் என்ற தனது ஆவலை மறைமுகமாக ரஜினி வெளிப்படுத்தியிருக்கின்றார்.
சுலபமாக, ரஜினி இந்த சந்திப்பைத் தவிர்த்திருக்கலாம். அதன்மூலம் தன்னைச் சுற்றி இனி எழப்போகும் அரசியல் சுழல்களையும், சர்ச்சைகளையும் அவர் ஒதுக்கியிருக்கலாம்.
ஆனால் அப்படிச் செய்யாமல் நேரடியாக மோடிக்கு முக்கியத்துவம் கொடுத்து சந்தித்திருப்பதன் மூலம் தனது தனிப்பட்ட விருப்பத்தையும் மக்களுக்கு மறைமுகமாக எடுத்துக் கூறியிருக்கின்றார் ரஜினி.
ரஜினியின் சிக்கல்
மோடி சந்திப்பைத் தவிர்ப்பதில் ரஜினிக்கு ஒரு சிக்கலும் இருந்திருக்கின்றது.
ரஜினி நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது பிரபல நடிகரும் அரசியல் விமர்சகருமான சோவுடன் ரஜினியை மருத்துவமனையில் வந்து நரேந்திரமோடி சந்தித்துள்ளார்.
அதற்கு நன்றிக் கடனாக, பிரதி உபகாரமாக, பொதுத் தேர்தல் காலத்தில் தன்னை வந்து சந்திக்க நரேந்திர மோடி விரும்பியபோது மறுப்பு சொல்ல ரஜினிகாந்தின் மனம் இடம் கொடுக்கவில்லை.
அதன் விளைவுதான் நேற்று நடந்த நரேந்திர மோடி – ரஜினிகாந்த் சந்திப்பு!
இதன் அரசியல் தாக்கங்கள் எதுவரை தமிழ் நாட்டிலும், தமிழ் நாட்டுக்கு வெளியேயும் பாயும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
#மோடி #ரஜினிகாந்த் #சந்திப்பு #பாஜக #அரசியல் #தேர்தல் #நரேந்திரமோடி
[thanks]செல்லியல்[/thanks]
மோடி பவர்ஃபுல் லீடர்: சந்திப்புக்கு பின்னர் ரஜினி புகழாரம்!
சென்னை: #பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, நடிகர் ரஜினிகாந்தை இன்று அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார். சந்திப்புக்குப் பின்னர் ஒரு சக்திவாய்ந்த தலைவர் (' பவர்ஃபுல் லீடர்' ) என்று ரஜினி புகழாரம் சூட்டினார்.
பா.ஜ.க. #பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று சென்னை வந்தார். அவர் நடிகர் ரஜினிகாந்த்தை அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.
அப்பொழுது வீட்டிற்கு வந்த மோடிக்கு ரஜினிகாந்த் குடும்பத்தினர் அனைவரும் வரவேற்பு அளித்தனர்.
தமிழ்ப் புத்தாண்டையொட்டி, ரஜினிக்கு மோடி வாழ்த்து தெரிவிக்க நேரில் சந்தித்ததாக பாஜகவினர் கூறினர்.
சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, " 'மோடி பவர்ஃபுல் லீடர்'. நான் அவர் நலம் விரும்பி, அவர் எனது நலம் விரும்பி. இது நட்பு ரீதியான சந்திப்பு... #அரசியல் இல்லை...’ என்று கூறினார்
தனக்கு உடல்நிலை சரியில்லாதபோது மோடி தன்னை சந்தித்ததை நினைவு கூர்ந்த ரஜினி, அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக மோடியை தனது இல்லத்திற்கு வந்து #தேநீர் அருந்துமாறு கேட்டுக்கொண்டதாகவும், அதனையேற்று மோடி இன்று தனது இல்லத்திற்கு வந்ததாகவும் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும் மேலும் தெரிவித்தார்.
மோடி - ரஜினி சந்திப்பு பின்னணி என்ன?
இன்னும் 10 நாட்களில், தமிழகத்தில், லோக்சபா தேர்தல் முடிந்திருக்கும். இந்த காலகட்டத்தில், மோடி, ரஜினிகாந்த் சந்திப்பு, அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எம்.ஜி.ஆருக்கு பிறகு, ரசிகர்கள் மத்தியில் அதிகம் செல்வாக்கை பெற்றவராக ரஜினி தான் இருந்தார். அதனால், எம்.ஜி.ஆரை போல், அரசியலில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, பலமுறை அரசியலை நெருங்கி உள்ளார்; ஆனால், கால் பதித்தது இல்லை. அந்த வகையில் தான் 1996ல் தி.மு.க.,விற்கு ஆதரவாக குரல் கொடுத்து, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். அதன் பிறகு, ஓரிரு போராட்டங்களில் கலந்து கொண்ட ரஜினி, அரசியல் பக்கம் வரவில்லை.தற்போது, மோடி சந்திப்பின் மூலம், அவர் மீண்டும் அரசியல் பக்கம் சாய்ந்து உள்ளதால், பல விதமான எதிர்பார்ப்புகளும், கேள்விகளும் எழுந்து உள்ளன. குறிப்பாக, பா.ஜ.,வை ரஜினி ஆதரிக்கிறாரா? பா.ஜ.,விற்கு 'வாய்ஸ்' கொடுப்பாரா? இதனால், பா.ஜ.,விற்கு ஏதேனும் லாபம் உண்டா? என்ற, கேள்விகள் எழுந்து உள்ளன.
இவை குறித்து, பா.ஜ., மற்றும் திரையுலக வட்டாரங்கள் கூறியதாவது: இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகள், கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கும் மேலாக நடந்தன. பல கட்டங்களில், மோடியும், ரஜினியும் போனில் பேசினார்கள். இருவரும் கட்டாயம் தேர்தலுக்குள் சந்தித்தாக வேண்டும் என, முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், இருவரும் எங்கே சந்திப்பது என்பதில் தான், காலதாமதம் ஏற்பட்டது. குஜராத்தில், ரஜினிக்காக ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து விட்டு, அதற்கென ரஜினி வருவது போல் வந்து, மோடியை சந்தித்தால், அது மரியாதை நிமித்தமான சந்திப்பு போல் இருக்கும் என, முதலில் திட்டமிடப்பட்டது. இதற்காக, குஜராத்தில், ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டது. ஆனால், திடுமென, ரஜினி தரப்பில் இருந்து, 'அந்த நிகழ்ச்சி வேண்டாம். தேர்தல் பிரசாரத்தில் இருக்கும் மோடியை, டில்லியிலோ வேறு எங்காவதோ சந்திக்கலாம்' என, ஆலோசனை சொன்னார்கள். இப்படி இழுத்துக் கொண்டே போனதால், 'தேர்தல் நெருங்கி வருகிறது. சட்டென காரியத்தை முடித்தாக வேண்டும்' என, இந்த சந்திப்புக்கு பின்னணியில் இருந்தவர்கள், மோடி மற்றும் ரஜினிக்கு ஆலோசனை கூறினர். அதையடுத்து, ரஜினி, 'தமிழகத்துக்கு பிரசாரத்திற்கு வரும் மோடியை, நான், என் வீட்டிலேயே சந்திக்க தயாராக இருக்கிறேன். அதுதான், எங்கள் இருவருக்கும் நல்லது. இதில்லாமல், தமிழகத்தில் வேறு எங்கும் நான் சென்று மோடியை சந்தித்தால், அது அரசியல் ரீதியாக தேவையில்லாத நெருக்கடியை எனக்கு ஏற்படுத்தும். அதிகாரம் மிக்க சிலர் எனக்கு எதிராக திரும்பக் கூடும். நான், தமிழகத்தில் தான் தொடர்ந்து இருந்தாக வேண்டும்' என்று, கருத்து தெரிவித்தார்.
அதனால் தான், இந்த மாதம் 16,17ம் தேதிகளில் தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்ள இருந்த மோடி, திடுமென, சென்னையில் பிரசாரம் என, ஒரு திட்டத்தை போட்டு, நேற்று சென்னை வந்தார். இவர் ஏற்கனவே பிரசாரம் செய்த இடங்களில், மீண்டும் பிரசாரம் செய்ய வில்லை என்பது, குறிப்பிடத்தக்கது. அப்படி இருக்கையில், வண்டலுாரில் ஏற்கனவே பிரசாரம் செய்துள்ள மோடி, மீண்டும் சென்னை வருவதற்கான காரணம் ரஜினி தான். பிரசாரம் வெறும் போர்வை தான்.இந்த சந்திப்பின் பின்னணியில், இரண்டு தரப்பினருக்கும் பலமான லாப கணக்கு உள்ளது.ரஜினியை சாதாரணமான தமிழ் நடிகராக மட்டும் பா.ஜ., தரப்பு பார்க்கவில்லை. அவரை இந்தியா முழுவதும் புகழ் பெற்றவராகவும், நிறைய ஆதரவாளர்கள், ரசிகர்கள் இருக்கும் ஒரு நடிகராகவும் தான் பார்க்கிறது. அவருடைய தமிழகம் தாண்டிய புகழ், பா.ஜ.,வுக்கு லாபகரமானதாக இருக்கும் என்பதை கணக்கிட்டுத்தான், மோடி அவரை சந்தித்து உள்ளார்.
ரஜினியின் தமிழகம் தாண்டிய புகழுக்கு சான்றாக, '#எந்திரன்' திரைப்படத்திற்கு கிடைத்த வெளிமாநில வெற்றி, 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தில் ரஜினிக்கு காணிக்கை ஆக்கப்பட்ட 'தலைவா ட்ரிப்யூட்' பாடல், ஷாருக் கான் உள்ளிட்ட இந்தி நடிகர்களின் பாராட்டு ஆகியவை மட்டும் அல்லாமல், தற்போது, 'மை நேம் ஈஸ் ரஜினி' என்ற பெயரில், இந்தி நடிகர் ஆதித்ய மேனன் என்பவர், இந்தியில் ரஜினியை போற்றி புகழ்ந்து படம் எடுக்கிறார். அந்த படத்துக்கு, அங்கே பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.இத்தகைய காரணங்களாலும், மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்தவர் ரஜினி என்பதாலும், இந்தி திரைப்படங்களின் புகலிடமாக உள்ள அந்த மாநிலத்தில், மக்களுக்கு ரஜினி மேல் அபிமானம் உள்ளது. அடுத்து, அவர் கர்நாடகாவில் வளர்ந்தவர் என்பதால், அங்கும் அவருக்கு பெரிய ஆதரவு வட்டம் உண்டு. அதுவும் பா.ஜ., தரப்புக்கு தேர்தல் நேரத்தில் கை கொடுக்கும். தமிழகத்தில் அவர் மேல், சினிமா ரசிகர்களில் பெரும்பாலானோருக்கு ரஜினி மேல் உள்ள அபிமானத்தை பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பது இல்லை.
இதெல்லாவற்றையும் விட, அவர் கெய்க்வாட் இனத்தைச் சேர்ந்தவர். அந்த இனத்து மக்கள் மோடியின் மாநிலமான குஜராத்தில் கணிசமான அளவில் இருக்கின்றனர். மோடி, ரஜினி சந்திப்புக்குப் பின்னால், அவர்களின் ஓட்டுகளை சுளையாக அள்ள முடியும் என, பா.ஜ., தரப்பு நம்புகிறது.தன்னுடைய படங்கள், மகாராஷ்டிராவில் தங்கு தடையின்றி ஓடவேண்டும் என்பதற்காக, ரஜினி, சிவசேனா தலைவர் பால் தாக்கரேவை அடிக்கடி சந்தித்து வந்தார். ஒரு கட்டத்தில் அவரை கடவுளுக்கு இணையாக ரஜினி ஒப்பிட்டு பேசினார்.அதே போல், கொள்கை ரீதியாகவும், பல விஷயங்களில், பா.ஜ.,வோடு, ரஜினிக்கு முரண்பாடு கிடையாது. இதனால், ரஜினி ஆதரவு மூலம், தமிழகத்தில் பா.ஜ., கூட்டணிக்கு கிடைக்க வேண்டிய ஓட்டுகள் சிதறாமல் கிடைக்கும் என்ற நம்பிக்கை, பா.ஜ.,வினரிடம் உள்ளது. இது தவிர, மோடி - ரஜினி சந்திப்புக்குப் பின், பிரபலமான தமிழக சினிமாக்காரர்கள் பலரும், தைரியமாக மோடியை ஆதரிக்க முன்வருவர் என, பா.ஜ., நம்புகிறது.அதே போல், ரஜினி, எதையும் கணக்கிட்டு தான் செய்வார். தனக்கு தனிப்பட்ட முறையில் லாபம் இல்லை என்றால், அந்த பக்கமே அவர் போக மாட்டார். தற்போது, அவருடைய இளைய மகள் சவுந்தர்யா அஸ்வின், அவரை வைத்து 'கோச்சடையான்' படம் எடுக்கிறார். இதை நாடு முழுவதும் வெளியிட வேண்டும் என, ரஜினி திட்டமிட்டு இருக்கிறார். இந்த நிலையில், மோடி சந்திப்பு ஏற்பட்டால், அந்த படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என, எதிர்பார்க்கிறார்.அதே நேரம், வருங்கால பிரதமர் தன்னை வீட்டுக்கு வந்து சந்தித்துவிட்டுச் சென்ற பெருமிதமும், ரஜினிக்கு தொழில் ரீதியாக பெரும் உதவியாக இருக்கும். மோடி, ரஜினியிடம் ஏற்கனவே போனில் பேசிய போது, 'முடிந்தால், பா.ஜ.,வுக்காக வாய்ஸ் கொடுங்களேன்' என, கேட்டார்.அதற்கு, ரஜினி, 'அதற்காகத்தானே உங்களை சந்திக்க ஆவலாக இருக்கிறேன். நம் இருவரின் சந்திப்பும், அதைத்தானே, உணர்த்த வேண்டியவர்களுக்கு மறைமுகமாக உணர்த்தப் போகிறது' என, பதிலளித்து உள்ளார். மொத்தத்தில், இந்த சந்திப்பு, இரு தரப்பினருக்கும் லாபம் தான்.இவ்வாறு, பா.ஜ., மற்றும் திரையுலக வட்டாரங்கள் தெரிவித்தன.
#லோக்சபா #தேர்தல் #மோடி #ரஜினிகாந்த் #சந்திப்பு #அரசியல்
[thanks]தினமலர்[/thanks]

மோடியை ஆதரிக்க கோரி ரஜினியை நேரில் சந்தித்த வைகோ! ஜெத்மலானியின் தூதராக சென்றார்!!
பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை ஆதரிக்க வேண்டும் என்று பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியின் தூதராக நடிகர் ரஜினிகாந்தை கடந்த 6-ந் தேதி மதிமுக பொதுச்செயலர் வைகோ நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.
லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்கு நேற்று சென்னை வந்த பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பேசினார். இது தனிப்பட்ட சந்திப்பு என்றும் இதில் அரசியல் பேசவில்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். ஆனால் மதிமுக பொதுச்செயலர் வைகோ இன்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில், கடந்த வாரமே மோடியை ஆதரிக்க வலியுறுத்தி ஒரு மணிநேரம் ரஜினியை சந்தித்து பேசியதாக தெரிவித்து 2 புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
வைகோவின் ஃபேஸ்புக் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
2014 ஏப்ரல் 6-ந் தேதியன்று வைகோ, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இல்லம் சென்றார். அப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், வைகோவுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைகோ ஏப்ரல் 6 ந்தேதியன்று பகல் 12.30 மணி அளவில் அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடினார். இந்தச் சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது.
அப்போது, நரேந்திர மோடியை ஆதரிக்குமாறு ராம்ஜெத்மலானி வேண்டிக்கொண்டு தனது கைப்பட எழுதிய வேண்டுகோள் இடம்பெற்ற சுயசரியதை நூலை தலைவர் வைகோ சுப்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் கொடுத்தார். இவ்வாறு வைகோவின் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#மோடியை #ரஜினியை #வைகோ! #ராம்ஜெத்மலானி

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1