புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம் Poll_c10நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம் Poll_m10நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம் Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம் Poll_c10நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம் Poll_m10நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம் Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம் Poll_c10நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம் Poll_m10நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம் Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம் Poll_c10நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம் Poll_m10நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம் Poll_c10நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம் Poll_m10நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம் Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம் Poll_c10நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம் Poll_m10நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம் Poll_c10நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம் Poll_m10நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
prajai
நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம் Poll_c10நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம் Poll_m10நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம் Poll_c10நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம் Poll_m10நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம் Poll_c10நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம் Poll_m10நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம் Poll_c10நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம் Poll_m10நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம் Poll_c10 
435 Posts - 47%
heezulia
நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம் Poll_c10நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம் Poll_m10நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம் Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம் Poll_c10நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம் Poll_m10நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம் Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம் Poll_c10நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம் Poll_m10நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம் Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம் Poll_c10நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம் Poll_m10நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம் Poll_c10 
30 Posts - 3%
prajai
நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம் Poll_c10நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம் Poll_m10நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம் Poll_c10நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம் Poll_m10நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம் Poll_c10 
5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%
Ammu Swarnalatha
நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம் Poll_c10நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம் Poll_m10நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 11, 2014 8:28 pm

நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம் KUJLMYWPR1ugM0wew0Lv+naan-sigappu-manithan-tracklist1

‘நார்கொலாப்ஸி’ இது ஒரு மோசமான தூக்க வியாதி. அடிக்கடி கண்ணைக் கட்டிக் கொண்டு தூக்கம் வந்து விடும்.

என்ன டா இது இராத்திரி எல்லாம் தூக்கம் வராம அவனவன் பேஸ்புக்ல உட்கார்ந்து கிட்டு இருக்காய்ங்க. தூக்கம் வருவதெல்லாம் ஒரு வியாதியா? என்று குழப்பமாக இருக்கலாம்.

ஆனால் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் விஷாலுக்கு உள்ள வியாதி எந்த அளவிற்கு மோசம் என்றால்? கண்ணுக்கு முன்னாடி அழகுச் சிலையாக நிற்கும் லட்சுமி மேனனை உணர்ச்சிவசப்பட்டு அணைக்க நினைக்கும் போது கூட பாழாய் போன இந்த தூக்கம் வந்து அப்படியே கண்கள் சொருகிவிடும்.

எந்த ஒரு அதிர்ச்சியான சத்தத்தை கேட்டாலோ அல்லது உணர்ச்சிவசப் பட்டாலோ நடுரோட்டில் உச்சி வெயில் மண்டையைப் பிளந்தாலும் அந்த நேரத்தில் விஷாலுக்கு ஏசி ரூமில் பஞ்சு மெத்தையில் படுத்திருப்பது போல் தூக்கம் வந்து விடும். ஆனால் தூக்கத்திலும் மற்றவர்கள் பேசுவதை கேட்க முடியும்.

இப்படியாக மற்ற மனிதர்கள் சாதாரணமாக செய்யக் கூடிய சில விஷயங்களைக் கூட தம்மால் செய்ய முடியவில்லையே என்று விஷால் வருந்துகிறார். தனது ஆசைகளைப் பட்டியலிடுகிறார். ஷகிலா படத்திற்கு முதல் நாள் முதல் ஷோ சென்று பார்ப்பதும் அவரது 10 ஆசைகளில் ஒன்று.

இந்த வியாதியால் பெரும் அவதிப்படும் விஷாலை தெரிந்தே லட்சுமி மேனன் காதலிக்கிறார். ஷகிலா படத்திற்கு அழைத்துச் சென்று அவரது ஆசையை நிறைவேற்றுகிறார். (என்ன பொண்ணு டா இது…). விஷாலால் தனக்கு ஒரு பேரப்பிள்ளையை பெற்றுத் தர இயலாது என்பதை அறியும் லட்சுமி மேனனின் அப்பா ஜெயப்பிரகாஷ் அவர்களின் கல்யாணத்திற்குத் தடை விதிக்கிறார்.

தண்ணீரில் நனைந்தால் விஷாலுக்கு தூக்கம் வராது என்பதை கண்டுபிடிக்கும் லட்சுமி மேனன் விஷாலை விடாப்பிடியாக துரத்தி அவரது வாரிசை எப்படியோ வயிற்றில் சுமந்து விடுகிறார்.

இனி யாராலும் தங்களைப் பிரிக்க முடியாது என்று எண்ணி சந்தோஷப்படும் வேளையில், லட்சுமி மேனனுக்கு ஒரு அசம்பாவிதம் நடக்கிறது.

முதல் பாதியில் ஒவ்வொரு காட்சியும் அழகாக ரசிக்கும் படியாக நகரும் திரைக்கதை இரண்டாவது பாதியில் இடைவேளையோடு சற்றே சருக்கத் தொடங்குகிறது.

அந்த அசம்பாவிதம் நடப்பதற்குக் காரணமாக ஒரு பிளாஷ்பேக் பழிவாங்கும் கதையும் சொல்லப்படுகிறது. அங்கு தான் கதையின் தள்ளாட்டம் ஆரம்பமாகிறது.

இருந்தாலும், இரண்டாம் பாதியில் வரும் இனியா கதாப்பாத்திரம், ரசிகர்களின் மொத்த கவனத்தையும் ஈர்த்து சில நிமிடங்கள் கதையை நகர்த்துகிறது.

இதற்கு முன் விஷால் நடித்த சமர் படத்தை இயக்கிய அதே திரு தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

நடிப்பு:

இயல்பாக நடிப்பதில் விஷாலின் திறமை அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். சமீபகாலமாக ‘திமிரு’ தனமான நடிப்பை எல்லாம் விட்டுவிட்டு பாண்டிய நாட்டில் பயந்தாங்கொள்ளி, நான் சிகப்பு மனிதனில் தூக்க வியாதி என பல வித்தியாசமான கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கத் தொடங்கிவிட்டார். நடிப்பில் நல்ல முதிர்ச்சி வெளிப்படத் தொடங்கியிருக்கிறது.

லட்சுமி மேனனுக்கு நேரும் கொடுமையை தன்னால் தடுக்க முடியவில்லையே என்று அவர் வருந்தும் காட்சிகளில் கைதட்ட வைக்கிறார்.

விஷாலின் அம்மாவாக வரும் சரண்யா வழக்கம் போல் அப்பாவி அம்மாவாக கலகலப்பை ஏற்படுத்தியிருக்கிறார். விஷாலின் நண்பராக வரும் ஜெகனுடன் அவர் அடிக்கும் காமெடி பஞ்ச் வசனங்கள் ரசிக்க வைக்கின்றன.

விஷாலின் இன்னொரு நண்பராக வரும் சுந்தர் (மயக்கம் என்ன, 3 புகழ்) தான் இரண்டாம் பாதியில் நடக்கும் கதையின் முக்கித் திருப்பத்திற்கு காரணமாக இருக்கிறார். ஆனாலும் நடிப்பில் சொதப்பியிருக்கிறார். வசனங்களை பேசும் பொழுது குளறுகிறார். அழுகையில் செயற்கைத் தனங்கள் தெரிகின்றது. இது போன்ற வலுவான கதாப்பாத்திரங்களை செய்வதற்கு இன்னும் மிகுந்த அனுபவம் தேவை என்பதை இயக்குநர் கவனிக்கவில்லையோ?

படத்தில் லட்சுமி மேனன், இனியா இரண்டு நாயகிகளும் அழகாக வந்து போகின்றனர். லட்சுமி மேனன் முதல் பாதியில் விஷாலுடன் இதழோடு இதழ் முத்தம் வைக்கும் காட்சியிலும் விஷாலை வம்படியாக நீச்சல் குளத்தில் தள்ளும் ‘அந்த’ காட்சியிலும் அவரது முகபாவனைகள் ஆபாசமாகத் தெரியவில்லை.

ஆனால் அதற்கு நேர்மாறாக இனியா வரும் ஒவ்வொரு காட்சியிலும் கவர்ச்சி தான். நல்ல நடிப்பு ஆற்றல் கொண்ட இனியா, தடாலென இப்படி ஒரு கதாப்பாத்திரத்தை சவாலாக ஏற்று செய்திருந்தாலும், இப்படியே தொடராமல் இருந்தால் கதாநாயகியாக தொடர்ந்து நிலைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு:

ரிச்சர்ட் எம். நாதனின் ஒளிப்பதிவு ஓகே ரகம் தான். பிரம்மிக்க வைக்கும் காட்சிகள் இல்லையென்றாலும் பாடல் காட்சிகள், படத்தில் தொடக்கத்தில் வரும் இரயில் காட்சிகள் போன்றவற்றை சிறப்பாக செய்திருக்கிறார்.

ஜீவி பிரகாஷ் பின்னணி இசையில் காதல் காட்சிகள் அற்புதம். அது அவருக்கே உரிய பாணி. பாடல்களை இன்னும் ரசிக்கும் படியாக அமைத்திருக்கலாம்.

படத்தின் எடிட்டிங்கை ஆண்டனி ரூபன் சிறப்பாக செய்திருக்கிறார்.

‘நார்கொலாப்ஸி’ என்ற நோய் பற்றியும், அதன் தாக்கம் ஒருவரது வாழ்க்கையில் எந்த அளவிற்கு சக மனிதர்களிடமிருந்து வேறு படுத்தும் என்பதையும் கதையின் கருவாக வைத்து சொல்ல நினைத்த இயக்குநருக்கு பாராட்டுகள்.

அதே நேரத்தில், அந்த நோயில் இருந்து விஷால் தன்னை எப்படி மாற்றிக் கொண்டு வாழ்க்கையில் வெற்றியடைகிறார் என்பதை முழு நீளத் திரைக்கதையாக காட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் தேவையில்லாத பிளாஷ்பேக் பழி வாங்கும் படலம், கிளைமாக்ஸ் காட்சியில் திடீரென விஷாலின் அதிரடி சண்டை என பழைய மசாலாக்களை புகுத்தியதால் சலிப்பை ஏற்படுகின்றது.

‘நான் சிகப்பு மனிதன்’ – தூங்காமல் ஒருமுறை பார்க்கலாம்…

- செல்லியல் விமர்சனக் குழு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 13, 2014 6:18 pm

நான் சிகப்பு மனிதன்: திரை விமர்சனம் - இந்து டாக்கீஸ் குழு

கண்ணீருக்கும் தண்ணீருக்கும் இடையே துளிர்க்கும் காதலைச் சிதைக்கும் துரோகத்தை எதிர்கொள்ளும் ரௌத்திரம்தான் நான் சிகப்பு மனிதன்.

இந்திரனும் (விஷால்) அவன் நண்பர்களும் துப்பாக்கி ஒன்றை வாங்கிக்கொண்டு யாரையோ பழி தீர்க்கப் புறப்படும் புள்ளியில் படம் தொடங்குகிறது. துப்பாக்கிக்கு உடனடியாக வேலை கொடுக்காமல் இந்திரன் தன்னைப் பற்றிச் சொல்ல ஆரம்பிக்கிறான்.

இந்திரனுக்கு நார்கோலெப்ஸி (Narcolepsy) என்னும் தூக்கக் கோளாறு இருக்கிறது. அதீதமான மகிழ்ச்சி, வருத்தம், பதற்றம், அதிர்ச்சி, பெரிய சத்தத்தைக் கேட்பது இப்படி எது நடந்தாலும் அவனுக்குச் சட்டென்று தூக்கம் வந்துவிடும். இதனால் அவனுக்கு வேலை கிடைப்பதில் பிரச்சினை. பாலுறவிலும் அவனால் ஈடுபட முடியாது என்பதால் கல்யாணமாவதிலும் பிரச்சினை. அரிதான இந்த நோய்க்கு சிகிச்சையே இல்லை.

பணக்காரப் பெண்ணான மீராவின் (லக்ஷ்மி மேனன்) உதவி யால் இந்த நோயை வெல்லும் வழியைக் கற்றுக்கொள்கிறான். அவர்களுக்குள் மலரும் காதல் திருமணமாகப் பரிணமிக்கும் தருணத்தில் பேரதிர்ச்சி ஒன்று தாக்குகிறது. அதற்குப் பழிவாங்க நாயகன் போராடுகிறான்

வழக்கமான காதல், வழக்க மான அதிர்ச்சி, வழக்க மான பழிவாங்கல். ஆனால் நார்கோ லெப்ஸியால் பாதிக்கப்பட்ட இளைஞன் அதை மீறி எப்படிக் காதலிக்கிறான், எப்படிப் போராடி வெல்கிறான் என்பதுதான் வித்தியாசம். அதைப் பெருமளவில் நம்பகத்தன்மையுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர் திரு. தூங்குபவனைப் பிணமாகக் காட்டிக் காசு வசூலிப்பது, தண்ணீருக்குள் அமிழ்ந்து உறவு கொள்வது போன்ற அபத்தங்களை விட்டுவிட்டால் நார்கோ லெப்ஸியைக் கையாண்ட விதத்துக்கு சபாஷ் போடலாம். திரைக்கதையைப் பெருமளவில் கச்சிதமாகக் கட்டமைத்ததற்காகவும் பாராட்டலாம்.

இந்திரனால் இயல்பான வாழ்க்கை வாழ இயலாது என்று தெரிந்தும் மீராவுக்கு அவன் மேல் வரும் காதல், அதைக் கண்டு அவன் அம்மாவுக்கு வரும் சந் தோஷம் ஆகியவை நன்றாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தூக்கக் கோளாறைச் சமாளிக்கும் வழி கண்டுபிடித்த உடனேயே காதலர்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் இறங்குவதும் உடனே நாயகி இரண்டு மாத கர்ப்பமாக ஆவதும் சினிமாத்தனம்.

தூக்கக் கோளாறிலிருந்து விடுபடுவதற்கான நாயகனின் போராட்டம் நம்பும் விதத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஜகனின் துணுக்குகள், இயல்பான காதல் காட்சிகள், அம்மாவின் அப்பாவித்தனம் ஆகியவற்றுடன் ஒரு கிரைம் கதையைப் பெருமளவுக்கு விறுவிறுப்புடன் தந்திருக்கிறார் திரு.

அண்மையில் வந்த பல படங்களில் நண்பனின் துரோகம் இடம்பெற்றாலும் அந்த துரோகத்துக்குச் சொல்லப்படும் காரணம் புதிதாக இருக்கிறது. கருணா - அரவிந்த் கவிதா துணைக்கதையில் வரும் திருப்பங்கள் விறுவிறுப்பைக் கூட்டுகின்றன. ஆனால் நண்பன் அவ்வளவு பெரிய தவறைச் செய்வதற்காகச் சொல்லப்படும் காரணம் வலுவானதாக இல்லை.

முதல் பாதி கலகலப்பும் காதலுமாக நகர்கிறது. இரண்டாம் பாதி தீவிரமாகிறது. கிளை மாக்ஸை நோக்கிய காட்சிகள் நீண்டுகொண்டேபோகும்போது படம் சற்றுத் தொய்வடைகிறது. பரவலாக அரங்கேறும் தவறுகளைச் சுட்டிக்காட்டும் வகையில் கள்ள உறவு படமாக்கப்பட்டாலும் அதை இவ்வளவு அப்பட்டமாகக் காட்டியிருக்க வேண்டுமா என்னும் கேள்வி எழுகிறது.

இயலாமையின் ஆற்றாமை, தயக்கத்துடன் கூடிய காதல், வஞ்சிக்கப்பட்டதன் குமுறல், பழிவாங்கும் ஆவேசம் ஆகியவற்றை விஷால் நன்றாகச் சித்தரித்திருக்கிறார். நடனத்தில் மெருகு கூடியிருக்கிறது.

லக்ஷ்மி மேனன் முதல் பாதி முழுவதிலும் தன் துள்ளலான நடிப்பினால் கவர்கிறார். வன்முறைக்கு உள்ளாகும்போது உணர்ச்சியைக் காட்டுவதில் மனதைத் தொடுகிறார்.

சரண்யா, ஜெயப்பிரகாஷ், வ.ஐ.ச. ஜெயபாலன் ஆகியோரின் பங்கும் நடிப்பும் நன்றாக அமைந் திருக்கின்றன. சுந்தர் ராமுவின் நடிப்பு மனதில் நிற்கிறது. சிறிய, வலுவான வேடத்தில் அழுத்தமாகத் தடம் பதிக்கிறார் இனியா.

ஜி.வி. பிரகாஷ் இசையில் ஒரு மெலடி யும் குத்துப் பாடலும் பரவாயில்லை. பின்னணி இசை பல இடங்களில் பொருத்தமாக உள்ளது. சில இடங்களில் ஒட்டாமல் ஒலிக்கிறது.

பாடல்களைப் பார்வையாளர்களின் மனதில் நிற்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் ரிச்சர்டு எம். நாதன். நேர்த்தியாக எடிட்டிங் செய்திருக்கும் ஆன்டனி எல். ரூபனையும் பாராட்ட வேண்டும்.

சில உறுத்தல்கள், இரண்டாம் பாதியின் தொய்வு ஆகியவற்றைத் தவிர்த்திருந்தால் ‘நான் சிகப்பு மனிதன்’ இன்னும் ஜொலித்திருப்பான்.

#விஷால் #திரைவிமர்சனம் #நார்கோலெப்ஸி #Narcolepsy

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 14, 2014 3:44 pm

நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம் 3838410834 
-
நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம் MXm9U9OGSiSaw1wLCG8K+IMG_8335

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக