புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கணக்காயிருக்கணும்" : மஹா பெரியவா சொல்வது Poll_c10கணக்காயிருக்கணும்" : மஹா பெரியவா சொல்வது Poll_m10கணக்காயிருக்கணும்" : மஹா பெரியவா சொல்வது Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
கணக்காயிருக்கணும்" : மஹா பெரியவா சொல்வது Poll_c10கணக்காயிருக்கணும்" : மஹா பெரியவா சொல்வது Poll_m10கணக்காயிருக்கணும்" : மஹா பெரியவா சொல்வது Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
கணக்காயிருக்கணும்" : மஹா பெரியவா சொல்வது Poll_c10கணக்காயிருக்கணும்" : மஹா பெரியவா சொல்வது Poll_m10கணக்காயிருக்கணும்" : மஹா பெரியவா சொல்வது Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
கணக்காயிருக்கணும்" : மஹா பெரியவா சொல்வது Poll_c10கணக்காயிருக்கணும்" : மஹா பெரியவா சொல்வது Poll_m10கணக்காயிருக்கணும்" : மஹா பெரியவா சொல்வது Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
கணக்காயிருக்கணும்" : மஹா பெரியவா சொல்வது Poll_c10கணக்காயிருக்கணும்" : மஹா பெரியவா சொல்வது Poll_m10கணக்காயிருக்கணும்" : மஹா பெரியவா சொல்வது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கணக்காயிருக்கணும்" : மஹா பெரியவா சொல்வது Poll_c10கணக்காயிருக்கணும்" : மஹா பெரியவா சொல்வது Poll_m10கணக்காயிருக்கணும்" : மஹா பெரியவா சொல்வது Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
கணக்காயிருக்கணும்" : மஹா பெரியவா சொல்வது Poll_c10கணக்காயிருக்கணும்" : மஹா பெரியவா சொல்வது Poll_m10கணக்காயிருக்கணும்" : மஹா பெரியவா சொல்வது Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
கணக்காயிருக்கணும்" : மஹா பெரியவா சொல்வது Poll_c10கணக்காயிருக்கணும்" : மஹா பெரியவா சொல்வது Poll_m10கணக்காயிருக்கணும்" : மஹா பெரியவா சொல்வது Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
கணக்காயிருக்கணும்" : மஹா பெரியவா சொல்வது Poll_c10கணக்காயிருக்கணும்" : மஹா பெரியவா சொல்வது Poll_m10கணக்காயிருக்கணும்" : மஹா பெரியவா சொல்வது Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
கணக்காயிருக்கணும்" : மஹா பெரியவா சொல்வது Poll_c10கணக்காயிருக்கணும்" : மஹா பெரியவா சொல்வது Poll_m10கணக்காயிருக்கணும்" : மஹா பெரியவா சொல்வது Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணக்காயிருக்கணும்" : மஹா பெரியவா சொல்வது


   
   
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Sat Apr 05, 2014 3:54 pm

கணக்காயிருக்கணும் என்ற வார்த்தைகளைத் தமிழ் நாட்டில், பண்டிதர், பாமரர் எல்லோரும் உபயோகிக்கின்றார்கள். எனக்கு முன்னால் இங்கே அக்கவுன்டண்ட்  ஜெனரல் ஆபீசிலிருந்து பலர் வந்து உட்கார்ந்து இருப்பதைப் பார்த்தவுடன் அவர்கள் பணக் கணக்குகளை சரி பார்க்கிறவர்கள் அல்லவா. எனக்கு இந்த வாசகம் நினைவுக்கு வருகிறது.
பண விஷயத்தில் பெரும்பாலும் நாம் கணக்காகவே இருக்கிறோம். இதை நமக்கு யாரும் சொல்லித் தர வேண்டியதில்லை. ஒரு வஸ்துவுக்கு அதன் விலையைவிட ஒரு பைசா அதிகம் கொடுப்போமா ? மட்டோம். பணத்தில் கணக்காக இருப்பது உண்மை. ஆனாலும் பணத்தைக் கொடுத்து பல வஸ்துக்களை வாங்குகின்றோம். அவற்றில்தான் இத்தனை வஸ்துக்கள் போதும் என்று கணக்காயிருக்க மாட்டேன் என்கிறோம். நாம் நிம்மதியாக உயிர் வாழ்வதற்குச் சொற்ப வஸ்துக்கள் போதும். இந்த வஸ்துக்களுக்கும் தேவைப்படும் பணத்தை மட்டுமே நாம் சம்பாதனம் செய்வதென்றால், இப்போதுபோல் ஆலாப் பறக்கவே வேண்டாம். தேசம் விட்டு, கண்டம் விட்டு எங்கேயோ போய் ஆசாரங்களை விட வேண்டாம். சம்பாதிக்க வேண்டியிருக்கிறது. அதற்காக ஆத்ம விசாரத்திற்கும் ஈஸ்வர தியானத்திற்கும் பரோபகாரத்திற்கும் செலவிட வேண்டிய காலத்தை எல்லாம் கணக்கில்லாமல் விரயம் செய்யவேண்டியிருக்கிறது




இரண்டு தினுசில் கால விரயம். முதலில் சம்பாதிப்பதால் கால விரயம். அப்புறம் வேண்டாத வஸ்துக்களைத் தேடித் தேடித் போவதில் கால விரயம். நிகர விளைவாகவோ ஆத்ம சாந்தியைக் குலைத்துக் கொள்கிறோம். திருப்தியே இல்லாமல் ஆசை வேகத்திலும், பல சந்தர்பங்களில் ஆசை நிறைவேறாத ஏமாற்றத்திலும் மொத்துப்பட்டு அவஸ்தைப்படுகிறோம்.
நாம் உயிர் வாழ இந்த வஸ்து அவசியம்தானா என்று பார்த்துக் கணக்காகச் செலவு செய்வதே உண்மையில் கணக்காயிருப்பதாகும். வேண்டாத வஸ்துக்களுக்குப் பேரம் பண்ணி, சாமர்த்தியமாக விலைபேசி, அதற்கு ஒரு பைசாகூட அதிகம் கொடுக்கவில்லை என்பதால் கணக்காயிருந்ததாகாது.


Contd....

jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Sat Apr 05, 2014 3:57 pm

பண விஷயமே நமக்கு முக்கியமாக இருப்பதால், அதில் ஆரம்பித்து ஒவ்வொன்றாக எல்லா விஷயங்களிலும் பேச்சு, காரியம், நினைப்பு எல்லாவற்றிலும் கணக்காயிருக்கணும்.
இந்த நடைமுறை உலகில் மனுஷ்யர்கள் எல்லோரும் பணமே வேண்டாம் என்று இருப்பது சாத்தியமே இல்லை. பொருள் இல்லார்கு இவ்வுலகம் இல்லை என்று திருவள்ளுவரே சொல்லிவிட்டார். ஆனாலும் அவசிய மில்லாமல்
ஏராளமாகச் சம்பாதிப்பதிலும், அவசியமில்லாமல் விரயமாகச் செலவழிப்பதும், அல்லது பூதம் காத்த மாதிரி பாங்கில் மூட்டை மூட்டையாகப் போட்டு வைப்பதும் ரொம்பப் பிசுகு. போதும் என்கிற மனஸோடு சம்பாதனம் செய்து, அதைக் கவனத்துடன் செலவழிக்க வேண்டும். செலவுகளுக்குள்  நமக்கு என்று இல்லாமல், தானமாகச் செலவழிப்பதுதான் உண்மையில் நமக்கு வரவு, இதனால் புண்ணிய வரவு கிடைக்கிறது. தனக்கென்று செலவழிப்பதால் பெறமுடியாத ஆத்ம சிரேயஸை இதனாலேயே பெறுகிறோம். சொந்த விஷயங்களில் கணக்காயிருந்தால் ஏழை எளியவர்களாலும்கூட ஒரு பைசாவாவது தர்மம் பண்ண முடியும். அப்படி அவர்கள் கொடுக்கிற பைசாவை ஈஸ்வரன் கோடியாக மதித்து அநுக்கிரகம் செய்வான். பரம ஏழைகளாக இருந்து கொண்டு தங்களால் முடிந்த ஸத்காரியங்களுக்கு உதவுகிற எத்தனையோபேர் இருந்திருக்கிறார்கள். இப்போதும் இருப்பார்கள்.


Contd---

jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Sat Apr 05, 2014 3:59 pm

ஓரொரு பணக்காரனுக்கும் தன்னைவிடப் பணம் படைத்த ஒருத்தனைப்போல் தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆடம்பரத்துக்கும் டாம்பீகத்துக்கும் ஊதாரித்தனமாகச் செலவழித்துக் கடன்படுகிறான். உலகத்தில் பணக்காரனுக்குத்தான் ஜாஸ்திக் கடன் இருக்கிறது. இது விசித்திரமாக, வேடிக்கையாகத் தோன்றினாலும், வாஸ்தவ நிலை இதுதான்.


ஏழைகள் எத்தனையோ பேர் கடனில்லாமல் இருக்கிரார்கள். பணக்காரர்களில் கடனில்லாமல் இருப்பவர்கள் துர்லபமாகத்தான் இருப்பார்கள். போலி அவஸ்தை விட்டால், அவனுக்கு இத்தனை  செலவு, கடன் இருக்கவே இருக்காது. லோகத்தில் எத்தனையோ பேர் கஷ்டப்படுமாபோது நாம் இத்தனை டாம்பீகங்கள் செய்வது நியாயமா என்று அவரவரும் கேட்டுக்கொண்டு, செலவை தர்ம நியாயமாகக் கட்டுப்படுத்திக் கொண்டால் எத்தனையோ தான, தர்மம், பரோபகாரம் செய்யலாம். லோகத்தில் ஒருத்தருக்கும் சாப்பாடு இல்லை. துணி இல்லை என்ற குறையில்லாமல் செய்து விடலாம். இப்போது செய்கிற டாம்பீகத்தால் ஒரு நாளும் பெறமுடியாத ஈஸ்வரானுக்கிரகத்தையும் இந்த பரோபகாரத்தினால் பெற முடியும். ஏழைதான் என்றில்லை, பணக்காரனும்கூட, இந்த வஸ்து நமக்குத் தேவைதானா? இது இல்லாமல் பிராணன் போய்விடுமா? இது இல்லாமல் ஜீவிக்க முடியாதா? நம் அப்பாவும்  தாத்தாவும் இது இல்லாமல் சௌக்கியமாக இல்லையா? என்று அவ்வப்போதும் கேட்டுக் கொண்டு செலவழிப்பதில் கணக்காயிருக்கனும். இப்படிச் செய்தால் கொடுப்பதில் கணக்காயிருக்க முடியும். எடுக்க எடுக்க ஜலம் வருகிற மாதிரி கொடுக்கக் கொடுக்க மகாலக்ஷ்மியின் அநுக்கிரகம் மேலும் வளரும்.
நம் தேசத்தில் ஜலத்தைதக்கூட அதிகமாகக் கொட்டிச் செலவழிக்ககூடாது என்பார்கள். ஏதாவது ஒரு விஷயத்தில் சிக்கனம் இல்லாவிட்டால், இதே மனோபாவம் மற்ற எல்லாவற்றிலும் வந்துவிடும் என்பதால் இப்படிச் சொன்னார்கள். சிக்கனமாயிருப்பது கருமித்தனம் அல்ல. சொந்த விஷயத்தில் படாடோபம் இல்லாமல் கணக்காயிருப்பது தான் சிக்கனம். இதுவே கருமித்தனம் இல்லாமல் தானமும் தர்மமும் செய்வதற்கு உதவும்.
இதோடு பேச்சில் கணக்காயிருப்பதைக் குறிப்பாக இக்காலத்தில் முக்கியமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு சமயத்தில் எந்தத் தொத்து வியாதி ரொம்பவும் உக்கிரமாக பரவியிருக்கிறதோ அதற்குத்தானே முக்கியமாக சிகித்ஸை செய்ய வேண்டும். இன்று பேச்சுதான் ரொம்ப உக்கிரமாகப் பரவியிருக்கிறது. நம்  நூல்களில் மௌனம் கலகம் நாஸ்தி என்றார்கள். பேச்சுக் குறைந்தால் சண்டையும் குறையும் - மேல்நாட்டில்கூட, பேச்சு வெள்ளி என்றால், மௌனம் தான் தங்கம் (Speech is silver Silence is golden) என்கிறார்கள்.
 
ஆத்ம சிரோயஸுக்கு ரொம்பவும் வற்புறுத்தப்பட்ட விஷயம் இது. மோனம் என்பது ஞான வரம்பு என்கிறார்கள். அந்த வரம்புக்குப் போய், ஒரே மௌனமாயிருக்க நம்மால் முடியாவிட்டாலும், நாம் பேச்சை ரொம்பவும் குறைத்துக்கொள்ள பாடுபடவேண்டும். பத்திரிகைகளில் பத்தி பத்தியாக வருகிற இத்தனை பேச்சால், வாதங்களும் பிரதி வாதங்களும் உண்டாகி மண்டை உருளுவதைத்தவிர, ஏதாவது உருப்படி இருக்கிறதா. அதில் வருவது போதாது என்று இதைப்பற்றி நாம் வேறு தொண்டைத் தண்ணீர் வற்ற விமர்சிப்பதால் தான் ஏதாவது பிரயோஜனம் இருக்கிறதா.? இப்படி சக்தி எல்லாம் விருதாவாகலாமா? என்று யோசித்துப் பார்க்க வேண்டும். வாக்குக் கட்டுப்பாட்டை அநுஷ்டானத்தில் கொண்டுவர வேண்டும். கணக்காகப் பேச வேண்டும். பிறருடைய மனஸைப் துன்புறுத்தாத பேச்சையே பேச வேண்டும். தன் ஆத்மாவை உயர்த்திக் கொள்ள உதவுகிற விஷயங்களையே பேச வேண்டும். எண்ணத்தைக் கட்டுப்படுத்துவது கஷ்டம். அது இப்போது நம்மால் முடியாமல் போனாலும் பாதகமில்லை. ஆனால், எண்ணியதை எல்லாம் பேசிப்பேசி இப்போது செய்து வருகிற உற்பாதத்தை நாம் நிச்சயம் குறைக்க வேண்டும். பேச்சில் கணக்காயிருக்கனும் என்று நான் இப்போது பேசுகிறேனே, இதில்கூட நானே கணக்காயிருக்கனும். இல்லாவிட்டால் பேச்சு சுவாரஸ்யம் இழுத்துக்கொண்டு போய், இதிலிருந்தே வியர்த்தமான சர்ச்சைகள் கிளம்பக்கூடும். அதோடுகூட வளவளவென்று சொல்வதால், இது மனஸிலும் சுருக்கென்று தைக்காமல் பிசுபிசுத்துப் போய்விடும்.
படிப்படியாக நம் சொற்கள், செயல்கள், சிந்தனைகள் - word, deed and thought - எல்லாவற்றிலும் ஒரு வரையறை, கணக்கு வேண்டும். முடிவில், மனோ, வாக்கு, காயங்களில் கட்டுப்பாடு வேண்டும். மனசு சிந்திப்பது, வாக்கு பேசுவது, காயம்தான் காரியம் செய்வது. இவை எல்லாம் கட்டுப்பாட்டின் கீழ் வந்தாலே ஆத்ம க்ஷேமகரமாகும். இவற்றோடு பணத்தைச் செலவு செய்வதை முதலில் சொன்னேன்.
கட்டுப்பாடுதான் யோகம், யோகம் என்பது. சிதறிப் போகாமல் ஒன்றிக் கட்டுப்பட்டிருப்பதுதான் யோகம்.
கிருஷ்ண பரமாத்மாகூட இப்படித்தான் கீதையில் சொல்லியிருக்கிறார் என்று அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம். அதிலே சாங்கியமும் யோகமும் ஒன்றுதான் என்கிறார். அவர் சாங்கியம் என்ற சித்தாந்தத்தைப் பற்றி பண்டிதர்கள் பல தினுசாக தருகிற விளக்கங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். நேராக அந்தச் செயலின் பொருளைப் பார்த்தால் சாங்கியம் என்பது சங்கியை என்பதிலிருந்தே வந்திருக்கிறது. சங்கியை என்றால் கணக்கெடுப்பது என்று அர்த்தம். ஜனசங்கியை என்று சொல்கிறோமல்லவா அது மாதிரி. எதிலும் சரியாக கணக்கெடுக்கிற புத்தி வந்துவிட்டால், புத்தி இப்படி ஒரு கணக்கிலே கட்டுப்பட்டு நின்று விட்டால், அதுவே சலனமில்லாத சமநிலையில் நிற்பதற்குப் பழகி விட்டுவிடும். இப்படி சம நிலையில் நிற்பதன் முற்றிய ஸ்தானம்தான் யோகம்.
பரம லௌகிகமான, பணவிஷயத்தில் ஆரம்பித்து கணக்காயிருக்கனும் என்றேன். அதுவே பரம வேதாந்தத்தில் கொண்டு சேர்த்து விட்டது. திருமூலரும் திருமந்திரத்தில் இப்படித்தான் சொல்கிறார். உண்மையான கல்வி ஈஸ்வர தத்வத்தை அறிவதுதான் என்று சொல்ல வந்த திருமூலர்.
'கணக்கறிந்தார் கல்வி கற்றறிந்தாரே'

என்கிறார். இது அவசியம். இது அநாவசியம். இது நல்லது இது கெட்டது. இது மெய். இது பொய் என்று கணக்குப் பண்ணி, தள்ளுவதைத் தள்ளி, எடுத்துக் கொள்ள வேண்டியதை கொண்டலன்றி, ஈஸ்வர தத்வத்தைக் காண முடியாது. அதாவது அநுபவ பூர்வமாக உணர முடியாது என்கிறார்.


Contd.. 

jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Sat Apr 05, 2014 4:00 pm

[GS : இதோ அந்த திருமந்திரப் பாடல் முழுதுமாக ]
கணக்கறிந் தார்க்கு அன்றிக் காணஒண் ணாதது
கணக்கறிந் தார்க்கு அன்றிக் கைகூடாக் காட்சி
கணக்கறிந்து உண்மையைக் கண்டுஅண்ட நிற்கும்
கணக்கறிந் தார்கல்வி கற்றறிந் தாரே
 

JAYA JAYA SANKARA       
                          HARA HARA SANKARA


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 05, 2014 8:35 pm

Quote :
எதிலும் சரியாக கணக்கெடுக்கிற புத்தி வந்துவிட்டால், புத்தி இப்படி ஒரு கணக்கிலே கட்டுப்பட்டு நின்று விட்டால், அதுவே சலனமில்லாத சமநிலையில் நிற்பதற்குப் பழகி விட்டுவிடும். இப்படி சம நிலையில் நிற்பதன் முற்றிய ஸ்தானம்தான் யோகம். "

கணக்கெடுப்பதில் இன்னும் அரிச்சுவடியையே தாண்டவில்லையே. எப்போது படித்து கடைத்தேறுவது? வெட்கமாகதான் இருக்கிறது.

ரமணியன்



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 05, 2014 10:30 pm

கணக்காயிருக்கணும்" : மஹா பெரியவா சொல்வது 103459460 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 07, 2014 11:20 am

//நாம் உயிர் வாழ இந்த வஸ்து அவசியம்தானா என்று பார்த்துக் கணக்காகச் செலவு செய்வதே உண்மையில் கணக்காயிருப்பதாகும். வேண்டாத வஸ்துக்களுக்குப் பேரம் பண்ணி, சாமர்த்தியமாக விலைபேசி, அதற்கு ஒரு பைசாகூட அதிகம் கொடுக்கவில்லை என்பதால் கணக்காயிருந்ததாகாது.//

அக்ஷர லக்ஷம் பெறும் வார்த்தைகள் இவை  :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 07, 2014 11:25 am

jayaravi wrote:[link="/t109153-topic#1056404"][GS : இதோ அந்த திருமந்திரப் பாடல் முழுதுமாக ]
கணக்கறிந் தார்க்கு அன்றிக் காணஒண் ணாதது
கணக்கறிந் தார்க்கு அன்றிக் கைகூடாக் காட்சி
கணக்கறிந்து உண்மையைக் கண்டுஅண்ட நிற்கும்
கணக்கறிந் தார்கல்வி கற்றறிந் தாரே
 

JAYA JAYA SANKARA       
                          HARA HARA SANKARA
தொடருங்கள் படிக்க காத்திருக்கிறோம் புன்னகை ரொம்ப புனிதமான பகிர்வு இது ,ரொம்ப ரொம்ப நன்றி புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக