புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! Poll_c10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! Poll_m10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! Poll_c10 
48 Posts - 43%
heezulia
கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! Poll_c10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! Poll_m10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! Poll_c10 
46 Posts - 41%
mohamed nizamudeen
கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! Poll_c10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! Poll_m10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! Poll_c10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! Poll_m10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! Poll_c10 
3 Posts - 3%
Dr.S.Soundarapandian
கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! Poll_c10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! Poll_m10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! Poll_c10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! Poll_m10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! Poll_c10 
2 Posts - 2%
prajai
கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! Poll_c10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! Poll_m10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! Poll_c10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! Poll_m10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! Poll_c10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! Poll_m10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! Poll_c10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! Poll_m10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! Poll_c10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! Poll_m10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! Poll_c10 
414 Posts - 49%
heezulia
கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! Poll_c10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! Poll_m10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! Poll_c10 
282 Posts - 33%

72 Posts - 8%
T.N.Balasubramanian
கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! Poll_c10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! Poll_m10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! Poll_c10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! Poll_m10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! Poll_c10 
28 Posts - 3%
prajai
கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! Poll_c10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! Poll_m10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! Poll_c10 
8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran
கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! Poll_c10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! Poll_m10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! Poll_c10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! Poll_m10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! Poll_c10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! Poll_m10கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்!

Page 1 of 2 1, 2  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Nov 14, 2015 11:38 pm

கி.மு., கி.பி (கிறித்துவுக்கு முன்; கிறித்துவுக்கு பின்) வேண்டாம்...................... தி.மு., தி.பி (திருவள்ளுவருக்கு முன்; திருவள்ளுவருக்குப் பின்) எனச் சொல்வோம்

கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! Ou0csFfRhCDdUEYkdAYD+ki.mu

ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டா? - வ.வேம்பையன் எழுதிய கட்டுரை
நம் வாழ்வில் திரும்பப் பெற முடியாதவை மூன்று. ஒன்று காலம். மற்றவை மானம். உயிர். குடும்பம். குமுகாயம். ஊர், நகர், நாடு, உலகம் பற்றிய நிகழ்ச்சிகளைக் கணக்கிடுவதற்குக் கால அளவை இன்றியமையாத ஒன்றாகிறது.

'நாளென ஒன்று போல் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்
என்ற குறள் மூலமும் காலம் அறிதல் என்ற அதிகாரத்தின் வழியும் காலத்தின் அருமையைத் திருவள்ளுவர் உணர்த்துகிறார்.

காலத்தைக் கணக்கிடுவதில் இத்துணைக் கவனம் செலுத்திய தமிழர்கள் வாழ்க்கை, வரலாற்று நிகழ்ச்சிகளைத் தமிழ்மொழி, தமிழ் இனம், தமிழ் நாடு ஆகியவற்றுக்குப் பொதுவான தொடர் ஆண்டுக்கணக்கால் குறிப்பிடும் வழக்கத்தைப் பின்பற்றவில்லை என்பது வியப்பாக இருக்கிறது; வருத்தம் தருகிறது.

இந்தச் சூழ்நிலையையும் தமிழர்களிடம் மண்டிக் கிடந்த கடவுள், மதம், சாதி,மூட நம்பிக்கைச் செல்வாக்கையும் அரசர்களிடம் பெற்றுள்ள நெருக்கத்தையும் பயன்படுத்திப் 'பிரபவ முதல் 'அட்சய வரை உள்ள 60 ஆண்டு முறையைப் புகுத்திவிட்டது ஆரியம்.

அறுபது ஆண்டுகளின் பெயர்களில் ஒன்று கூடத் தமிழ் இல்லை. 60 ஆண்டுகள் பற்சக்கர முறையில்இருப்பதால் 60 ஆண்டுகளுக்கு மேல் உள்ள காலத்தைக் கணக்கிடுவதற்கு உதவியாகவும் இல்லை. அதற்கு வழங்கும் கதையோ ஆபாசமாகவே இருக்கிறது. அந்தக் கதை வருமாறு˜

கண்ணனும் நாரதரும் கலவி செய்து பெற்றெடுத்த குமாரர்கள்தாம் 60 தமிழ் வருடங்கள் என்பது கதை. எல்லாரும் குமரர்கள்; குமரியே இல்லை. ஆண்டுக்கதையிலும் ஆண் ஆதிக்கமே! ஆணும் ஆணும் கலவி செய்தால் பிள்ளை பிறக்குமா? 'எய்ட்சு (ஹனைள) நோய் பிறக்குமா?

இந்தக் கதையே அருவருக்கத்தக்கது; ஆபாசமானது; அறிவுக்கும் அறிவியலுக்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தம் இல்லாதது; கருத்துக்கும் காலத்துக்கும் ஒத்துவராதது; மானமும் அறிவும் உள்ள மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாதது.
இந்த 60 ஆண்டு முறையால் தமிழர் மொழி, மரபு, மானம், பண்பு, வாழ்வு முதலியவற்றுக்கு ஏற்பட்டுள்ள அழிவும் இழிவும் எண்ணிப்பார்த்து, உணர்ந்து தெளிந்த தமிழ்அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921 ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில்தமிழ்க் கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடிய மாநாட்டில் ஆராய்ந்தார்கள். பேராசிரியர் கா. நமச்சிவாயர் அந்த மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.

திருவள்ளுவர் இயேசு கிறித்துப் பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்பு பிறந்தவர் என்றும் அவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது என்றும் அதையே தமிழ்ஆண்டு எனக் கொள்வது என்றும் முடிவு செய்தார்கள்.

இந்த முடிவு செய்தவர்களில் தலையான தமிழ் அறிஞர்கள் தமிழ்க் கடல் மறைமலை அடிகள், தமிழ்த்தென்றல் திரு.வி. கலியாண சுந்தரனார், தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியப் பிள்ளை, சைவப்பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் ஆவார்கள்.

திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை; இறுதி மாதம் மார்கழி; புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள். கிழமைகள் வழக்கில் உள்ளவை. திருவள்ளுவர் காலம் கி.மு. 31 எனவே, ஆங்கில ஆண்டுடன் 31 ஐக் கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு. 2007 + 31 = 2038
தமிழ் நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று 1971 முதல் தமிழ் நாடு அரசு நாட்குறிப்பிலும் 1972 முதல் தமிழ் நாடு அரசிதழிலும் 1981 முதல் தமிழ் நாடு அரசின் அனைத்து அலுவல்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது.

தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் தை மாதம் முதல் நாள்
பழந்தமிழகத்தில் ஆண்டுத் தொடக்கம் தை மாதமாக இருந்தது. பின்னர் ஆவணி, ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளப்பட்டது. பின்பு சித்திரை ஆண்டின் முதல் மாதமாக மாற்றப்பட்டது.

இழந்த தொன்மைச் சிறப்புக்குரிய தை மாதம் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்பதை நடைமுறைப் படுத்தி வருகின்றோம்.

வானநூல் பொருத்தமும் வயல் விளைவுப் பொருத்தமும் ஒருங்கே அமையப் பெற்ற தை மாதம் முதல் நாளைத் தமிழர் தம்ஆண்டுத் தொடக்கமாகப் பெற்றிருந்தனர் எனின் அவர்தம் அறிவினை என்னெனக் கூறி வியப்போம் என்பது நாவலர் சோமசுந்தர பாரதியாரின் நற்சான்றாகும்.

முன்னாளில் தமிழ் ஆண்டு தை முதல் மாதத்தில் தான் இருந்தது என்பது சா. கணேசன் கருத்தாகும்.

சிந்து வெளி மக்கள் தம் ஆண்டுத் தொடக்கம் தை மாதம் முதல் நாள் என்று வழங்கினர். பிற்காலத்தில் இதுவே திருவள்ளுவர் ஆண்டுப் பிறப்பும் ஆயிற்று என்கிறார் விஞ்ஞானி நெல்லை சு. முத்து

தையே முதற்றிங்கள்; தைம் முதலே ஆண்டு முதல்
பத்தன்று; நூறன்று; பன்னூறன்று;
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தைம்முதல்நாள், பொங்கல் நன்னாள்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Nov 14, 2015 11:51 pm

கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! RS7YPblaSTyi64V21xWg+barathidasan

தையே முதற்றிங்கள்; தைம் முதலே ஆண்டு முதல்
பத்தன்று; நூறன்று; பன்னூ றன்று
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு தைம்முதல்நாள், பொங்கள் நன்னாள்
நித்திரையில் இருக்கும் தமிழா !
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப்புத்தாண்டு
அண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் காட்டியதே
அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழர்க்கு
தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு!

- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்!

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Nov 15, 2015 6:55 am

கி மு ; கி பி யை தி மு ; தி பி என்று மாற்றினால் பெருங்குழப்பம் வந்து சேரும் . தமிழ்நாட்டுக்கு மட்டும் தனி நாட்காட்டியா ? உலகத்தோடு ஓட்ட ஒழுகுவதே அறிவுடைமை என்று அய்யன் வள்ளுவன் சொல்லவில்லையா ? நம் தமிழ்பற்றைக் காட்ட இதுவல்ல வழி .

தமிழ்வழியே கற்றிடுவோம் தமிழில் பேசிடுவோம்
...தமிழோதி திருமணங்கள் தரணியிலே நடத்திடுவோம்
அமிழ்தினிய தமிழ்மொழியில் ஆக்கங்கள் செய்திடுவோம்
...அறமன்றில் தமிழ்பேசி வழக்குகளை முடித்திடுவோம் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Nov 15, 2015 8:29 am

M.Jagadeesan wrote:கி மு ; கி பி யை தி மு ; தி பி என்று மாற்றினால் பெருங்குழப்பம் வந்து சேரும் . தமிழ்நாட்டுக்கு மட்டும் தனி நாட்காட்டியா ? உலகத்தோடு ஓட்ட ஒழுகுவதே அறிவுடைமை என்று அய்யன் வள்ளுவன் சொல்லவில்லையா ? நம் தமிழ்பற்றைக் காட்ட இதுவல்ல வழி .

தமிழ்வழியே கற்றிடுவோம் தமிழில் பேசிடுவோம்
...தமிழோதி திருமணங்கள் தரணியிலே நடத்திடுவோம்
அமிழ்தினிய தமிழ்மொழியில் ஆக்கங்கள் செய்திடுவோம்
...அறமன்றில் தமிழ்பேசி வழக்குகளை முடித்திடுவோம் !
மேற்கோள் செய்த பதிவு: 1174847

அன்பரே,
அமிழ்தினிய தமிழ்மொழியில் ஆக்கங்கள் செய்திடுவோம். இவைதான் அந்த ஆக்கங்கள். எல்லாவற்றையும் நமது மொழியில் பேசி வழங்காமல் இருந்து கொண்டே இருந்தால் ஒரு நாள் நாம் நமக்குத் தெரியாமலேயே "இரண்டுங்கெட்டானாக" மாறியிருப்போம்.

அந்தக் காலத்தில் அயல்நாடுகளுடன் வாணிகங்கள் நடைபெறவில்லையா என்ன? தற்போது உள்ளதைவிட மிகச் சிறப்பாக நமது மன்னர்கள் காலத்தில்தான் வானிகங்கள் நடைபெற்றது. நம் நாட்டவர்கள் என்ன முழுவதும் பிற மொழிகளிலா பேசிக்கொண்டார்கள். வாணிபத்திற்கு மட்டுமே அந்தந்த மொழியை பயன்படுத்தினார்கள்.

என் வீட்டில் என்னுடைய அப்பா தாத்தா பாட்டன் பூட்டன் பழக்கவழக்கங்களை மட்டுமே கடைபிடிக்க வேண்டும். அடுத்தவனின் பழக்கத்தை நம் நடுவீட்டில் கொண்டுவந்து விடக்கூடாது. அப்படிக் கொண்டு வந்ததன் விளைவுதான் இன்று தமிழ்நாட்டில் தமிழ்க்கல்வி அருகிக்கொண்டே வருகிறது. இவையெல்லாம் வெளிநாட்டானின் திட்டமிட்டு நடத்தப்படும் சதிச்செயல்கள். இங்கிருக்கும் அடிவருடிகள் மூலம் அதைச் செயல்படுத்துகிறார்கள்.

இப்படி அழிக்கப்பட்டது பல....
சித்த வைத்தியம் அலோபதியாக மாற்றப்பட்டது.
இயற்கை வேளாண்மை செயற்கை உரங்களால் சீரழிக்கப்பட்டது.
நம் மண்ணிற்கு ஏற்ற உணவு முறைகள் அந்நிய வணிகத்திற்காக மாற்றப்பட்டது.
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 15, 2015 8:54 am

உலகளவில் கி.மு-கி.பி என்ற குறியிடு மட்டுமே சரியென்று தோன்றுகிறது. தி.மு-தி.பி என்று குறிப்பிட்டால் அதற்கே ஒரு அகராதி போட்டு விளக்க வேண்டியது வரும்.

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Nov 15, 2015 11:11 am

மாற்றங்களால் மட்டுமே ஒரு சமுதாயத்தை மாற்றமுடியும் ,ஏசு கிறிஸ்து பிறப்பினை ஏன் உதாரணமாக எடுத்துக்கொள்ளவேண்டும் , நம் தமிழ் சமுதாயத்தின் தவ புதல்வர் அய்யன் திருவள்ளுவர் வைத்து தி . மு - தி .பி என ஏன் வழங்ககூடாது ? இக்கருத்தில் மட்டற்ற ஆனந்தமே ..

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 15, 2015 12:14 pm

கார்த்திக் செயராம் wrote:மாற்றங்களால் மட்டுமே ஒரு சமுதாயத்தை மாற்றமுடியும் ,ஏசு கிறிஸ்து பிறப்பினை ஏன் உதாரணமாக எடுத்துக்கொள்ளவேண்டும் , நம் தமிழ் சமுதாயத்தின் தவ புதல்வர் அய்யன் திருவள்ளுவர் வைத்து தி . மு - தி .பி என ஏன் வழங்ககூடாது ? இக்கருத்தில் மட்டற்ற ஆனந்தமே ..

மேற்கோள் செய்த பதிவு: 1174872
நம் காலண்டரில் திருவள்ளுவர் ஆண்டு,தமிழ் ஆண்டு,ஆங்கில ஆண்டு, முஸ்லிம் ஆண்டு ஆகிய பல வகை கூறிப்பிட்டு உள்ளனர். அதை போல் தி.மு,தி.பி வையும் கூறிப்பிட வேண்டும்.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Nov 15, 2015 12:34 pm

கார்த்திக் செயராம் wrote:மாற்றங்களால் மட்டுமே ஒரு சமுதாயத்தை மாற்றமுடியும் ,ஏசு கிறிஸ்து பிறப்பினை ஏன் உதாரணமாக எடுத்துக்கொள்ளவேண்டும் , நம் தமிழ் சமுதாயத்தின் தவ புதல்வர் அய்யன் திருவள்ளுவர் வைத்து தி . மு - தி .பி என ஏன் வழங்ககூடாது ? இக்கருத்தில் மட்டற்ற ஆனந்தமே ..
மேற்கோள் செய்த பதிவு: 1174872

மிக்க மகிழ்ச்சி... நன்றி... கார்த்திக் செயராம்...!!!

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sun Nov 15, 2015 1:05 pm

M.Jagadeesan wrote:கி மு ; கி பி யை தி மு ; தி பி என்று மாற்றினால் பெருங்குழப்பம் வந்து சேரும் . தமிழ்நாட்டுக்கு மட்டும் தனி நாட்காட்டியா ? உலகத்தோடு ஓட்ட ஒழுகுவதே அறிவுடைமை என்று அய்யன் வள்ளுவன் சொல்லவில்லையா ? நம் தமிழ்பற்றைக் காட்ட இதுவல்ல வழி .

மேற்கோள் செய்த பதிவு: 1174847

ஒத்துக் கொள்கிறேன் ..இதுவே என் கருத்தும்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Nov 15, 2015 1:40 pm

திருவள்ளுவரை தமிழர்கள் முதன்மையாக கருதவேண்டும் அவரை புலவராகமட்டுமல்ல தமிழ்மொழிப் பொறியிலாளராகவும் நாம் உணரவேண்டும். திருக்கறளை பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்து அக்கருத்துப்படி வாழ்ந்தால் நாம்மட்டுமல்ல உலகமே உயர்ந்து சிறந்து மகிழ்ந்து வாழும் என்பதனையும் நாம் சுட்டிக்காட்டவேண்டும்.
திருவள்ளுவரைப் பற்றி வாழ்க்கைக்... குறிப்பு எழுத சான்றுகள் எதுவுமே இல்லை. அவர் மதுரையில் பிறந்தார் என்று சிலரும், சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தார் என்று சிலரும் சொல்கின்றனர். அவர் ஆதி - பகவன் என்ற பெற்றோருக்குப் பிறந்ததாகவும் சிலர் பொய் சொல்கின்றனர். இவை எதுவுமே உண்மை இல்லை. அவர் பிறந்த காலம் எது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். வள்ளுவர் ஒரு கிறித்துவர், அவர் ஒரு சமண மதத்தவர், அவர் பவுத்தர் என்றெல்லாம் கூட சிலர் நேரத்தை வீணாக்கி ஆய்வு செய்கிறார்கள். அவர் காலத்தில் கிறித்துவ மதமே வடிவம் பெற்ற ஒன்றாக இல்லை என்பதே வரலாற்று உண்மை. அவரின் குறட்பாக்களில் இருக்கின்ற கருத்துக்களை வைத்துக் கொண்டு எல்லோருமே சொந்தம் கொண்டாடுகிறார்கள்.
இவர் சிந்தனைகள் உலக மக்கள் அனைவருக்குமே உதவும் வகையில் இருக்கின்றன. எனவே தான் திருக்குறள் உலகப் பொது மறை எனப்படுகிறது.

இங்கு நான் சொல்வது சற்று வெடியாக இருக்கும் ... எதை சொன்னாலும் அதை தர்க்கம் செயபோர் உலகத்தில் இருக்கத்தான் செய்கிர்ரார்கள் ...யாரோ கண்டறிந்த அல்லது பின்பற்றிய வழிமுறைகளை இன்று வரை நாம் கடைபிடிதுகொன்டுதான் இருக்கிறோம் ..ஏன் எதற்கு என்ற கேள்வி இங்கு இல்லை ...
வள்ளுவரது காலம் பல்வேறு அறிஞர்களால் கி.மு. முதல் நூற்றாண்டில் இருந்து கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரை அறுதியிடப்படுகிறது. இலக்கிய வரலாற்று நோக்கில் பார்ப்பதானால், சங்க இலக்கியங்கள் பெரும்பாலானவற்றுக்குத் திருக்குறள் காலத்தால் பிற்பட்டது; சிலப்பதிகாரத்துக்கு முற்பட்டது.

ஓரினம் பல்லாயிரம் ஆண்டுகள் ஒரே மொழியில் தம் வாழ்வினை மேற்கொண்டிருந்தால் மட்டுமே மொழிப் பற்று என்பது உரு பெறும். பல்லாயிரம் ஆண்டுகள் மொழியோடு இரண்டறக் கலந்த பின்னர், அம்மொழியின் பற்று மரபணுவில் வேரூன்றும். அவ்வாறு வேரூன்றிய மொழிப் பற்று பல்லிடங்களில் வெளிப்படும். தமிழ் மொழியைப் பொறுத்த வரை, தமிழ் மொழி தமிழர்களால் பல்லாயிரம் ஆண்டுகள் பேசப்பட்ட மொழி. ஐயாயிரத்து ஐநூறு ஆண்டுகள் மதிக்கத் தக்கத் தொல்காப்பியத்திலேயே, தொல்காப்பியர் தமிழைத் தொன்மொழி எனப் பகர்கின்றார். அவ்வாறெனில் தமிழ் எத்துணை தொன்மையானதாக இருக்க வேண்டும். மறைமலையடிகள் குமரி மண்பதை வளர்ச்சியின் காலம் பன்னீராயிரம் ஆண்டுகளென இயம்புகிறார். தேவநேயப் பாவாணர் தமிழின் தோற்றம் ஐம்பதாயிரம் ஆண்டுகள் என மொழிகின்றார். அலெக்ஸ் கொல்லியர் போன்ற மேல்நாட்டறிஞர்கள் தமிழே உலக முதற்றாய்மொழியெனச் சாற்றுகின்றனர். ஆதலால்தான், உலகிலேயே மொழிப் பற்று தமிழர்களிடம் அதிகமாகக் காணப்படுகிறது. தற்பொழுது தமிழர்களின் தொடக்கக் காலமாகக் கணிக்கப்படும் சங்க காலத்தில் தமிழின் இனிமையை எடுத்தியம்பியப் புலவர்கள்; பக்தி இலக்கியக் காலமான நாயன்மார்கள் காலத்தில் இறைவன் தமிழாக விளங்குகிறான் எனவும் தமிழ் இறைத் தன்மை உடையது எனவும் பகர்ந்தனர். அதனைத் தொடர்ந்து, பன்னிரண்டாம் நூற்றாண்டு தொடங்கி, உலகில் எங்கும் கண்டிராத வண்ணம் தமிழ் மொழியைத் தாயாக உருவகப் படுத்திப் பற்பல வாழ்த்துப் பாக்கள் புலவர்களால் இயற்றப் பட்டன. தமிழ்த் தாய்க்குக் கோயிலெழுப்பப் பட்டது. தமிழர்களின் இனப் பண்பாட்டின் அச்சாணியாக தமிழ்ப் பற்று உருவாக்கப் பட்டது. தமிழர்களை ஒரு குடையின் கீழ் பிணைக்கும் மாயக் கயிறாகத் தமிழ்ப் பற்று நிலை பெற்றது. அத்தமிழ் பற்று என்றென்றும் தமிழர்களை கோலாட்சி செய்கிறது.

உலகின் பழமையான இனமாகிய தமிழினம் தலைநிமிர்ந்து வாழ வேண்டுமானால், தமிழரின் வாழ்வியல் தமிழியலைச் சார்ந்திருக்க வேண்டும்; தமிழியத்தின் விழுமியங்களைத் தாங்கியிருக்க வேண்டும்; தமிழிய மரபுவேர்களில் எழுந்துநிற்க வேண்டும். இந்த முடிவொன்றே தமிழருக்கு விடிவாக அமையும்.

உலக மக்களின் முன் தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த மாமனிதர் திருவள்ளுவர். அறிவியல் கண்டுபிடிப்புகளாலோ, அரசாண்டதாலோ அவர் அப்பெருமையை உருவாக்கித் தரவில்லை. தன் அறிவாலும், சிந்தனையாலும் உருவாக்கித் தந்திருக்கிறார். அவர் எழுதிய திருக்குறள் அப்பெருமையை தமிழர்களுக்கு வழங்கியிருக்கிறது.
நான் சொல்கிறேன், எதையுமே கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாகப் பேசாமல் ஊமையராய் – செவிடர்களாய் இருந்ததால்தான் இன்றையத் தமிழன் கெட்டுச் சீரழிந்து இருக்கின்றான். இதுதான் உண்மை.
ஆனால், தமிழன் மட்டும்தான் தன் உரிமைப் பொருள்கள் எல்லாவற்றையும் காலடியில் போட்டு மிதிக்கிறான். தன் மொழியைவிட; தன் இனத்தைவிட; தன் பண்பாட்டைவிட மற்றவருடையது சிறந்தது என்று புலம்பித் திரிகிறான். சொந்த இனத்தின் வேரையே வெட்டிவிட்டு இனவழி – மொழிவழி உறவைத் துண்டிக்கிறான். சொந்த அடையாளத்தை மறைத்து – மறந்து மாற்றான் போல வேடம்போட்டு வாழ்கிறான்.

மாற்றத்திற்கு பல காரணம் கூறப்பட்ட போதும்… மதம் அற்ற தமிழர்களின் நாட்காட்டி உலக நாட்காட்டியாக மாற்றவேண்டும் ..
அதற்க்கு நாம் என்ன செய்ய வேண்டும் கி.மு –கி .பி என்று அழைப்பதை விடுத்து தி .மு – தி .பி என்ற மாற்றத்தை உருவாக்க வேண்டும் ..

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக