ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)
by ayyasamy ram Today at 10:59 am

» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 10:58 am

» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Today at 9:36 am

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 7:07 am

» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:02 am

» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Today at 6:27 am

» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Today at 6:19 am

» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:08 am

» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:05 am

» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:02 am

» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 5:57 am

» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Today at 5:55 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022
by mohamed nizamudeen Yesterday at 5:45 pm

» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:50 pm

» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Yesterday at 3:48 pm

» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Yesterday at 3:47 pm

» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:44 pm

» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 11:07 am

» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Yesterday at 11:02 am

» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Yesterday at 9:25 am

» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 am

» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:19 am

» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Yesterday at 8:29 am

» ரத்தம்
by ayyasamy ram Yesterday at 8:27 am

» மாயத்திரை
by ayyasamy ram Yesterday at 8:26 am

» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Yesterday at 5:15 am

» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Yesterday at 4:21 am

» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Yesterday at 4:16 am

» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:09 am

» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Yesterday at 4:03 am

» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Yesterday at 4:01 am

» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm

» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm

» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm

» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm

» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm

» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm

» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm

» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm

» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am

» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am

» நூற்றுக்கணக்கான வழிகளில் அருள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am

» ஆத்மார்த்தமாக அழைத்தால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:06 am

» எல்லாமே கடவுள்தான்!
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:05 am

» பெரிய மனுஷி...!
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:52 am

» ஆன்மீகம் - அமுத மொழிகள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:48 am

Top posting users this week
ayyasamy ram
மொழியையும் சூது கவ்வும்! Vote_lcapமொழியையும் சூது கவ்வும்! Voting_barமொழியையும் சூது கவ்வும்! Vote_rcap 

நிகழ்நிலை நிர்வாகிகள்


மொழியையும் சூது கவ்வும்!

4 posters

best மொழியையும் சூது கவ்வும்!

Post by சாமி Fri Mar 28, 2014 6:38 pm

தர்மத்தின் வாழ்வை மட்டுமில்லை, மொழியையும் சூது கவ்வும். சூதுக்கு பலியான மொழிகளும் உண்டு. சூதினை வென்ற மொழிகளும் உண்டு. பேசுவதற்கு யாரும் இல்லை என்பதால் மொழி வழக்கிழந்து போகக் கூடும்; ஆனால் இல்லாமல் போய்விடாது. பேசப்படுவதற்கு நூல்கள் இருக்கிறவரை அந்த மொழி ஆய்வுகளிலும் அகராதிகளிலும் வாழும். கிரேக்க மொழி, அர்த்தமாகதி, பாலி, சமஸ்கிருதம் போன்ற மொழிகள் அறிவியல், சட்டம்,சுற்றுச் சூழல், நிலவியல், ஆன்மிகம் என்று பல காரணங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

காலத்திற்கேற்ப வளர்ந்து, பழைய ஆங்கிலம், இடைக்கால ஆங்கிலம், தற்கால ஆங்கிலம் என்றும் சில மொழிகள் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்ளும். ஹீப்ரு போல வாழ்வைச் செயற்கையாகப் புதுப்பித்துக் கொள்ளவும் முயற்சி செய்யும். தமிழைப் போன்ற சில மொழிகள் தொடர்ச்சியாக இலக்கியங்களைப் பெற்றுக் கொண்டு பேச்சு வழக்கிலும் சங்கிலித் தொடர் அறுபடாமல் வாழும்.

ஆனாலும் மொழியின் வாழ்க்கையையும் சூது கவ்வும். உரிமைக்குக் குரல் கொடுக்க மொழி வேண்டும் ஆட்சியில் இருப்போர் அதிகாரம் செலுத்தவும்,ஆணையிடவும் மொழி வேண்டும்: அந்த மொழி, பயன்பாட்டில் இருக்கவேண்டும். பயன்பாட்டில் பேச்சு வழக்கில் இருக்கும் அந்த மொழியில்தான் உரிமைக்குக் குரல் கொடுக்கவும் முடியும்; அடக்கி அதிகாரம் செலுத்தவும் முடியும்.

வேற்று மொழியாளர்களின் ஆட்சியில் உரிமைக்குரல் ஒரு மொழியாகவும் அதிகாரம் இன்னொரு மொழியாகவும் இருக்கும். இதனால் உரிமைக் குரலை அறிந்துகொள்ளவும் அதிகாரம் செலுத்தவும் மொழிபெயர்ப்பாளர்கள் தேவைப்படுவார்கள். ஆனால் எப்போதும் மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்டு முழுமையாக அதிகாரம் செலுத்தவும் ஆளும் மக்களை முழுமையாகக் கட்டுக்குள் வைக்கவும் முடியாது என்பதால், வேற்று மொழியாளர்கள் ஆளப்படுகிற மக்களின் பயன்பாட்டு மொழியைக் கற்றுக்கொண்டு அதிகாரம் செலுத்த முயற்சி செய்வார்கள். அப்படியும் நீண்ட காலம் தாக்குப் பிடிக்கமுடியாது.

எனவே மக்களிடமிருந்து அவர்களின் தாய்மொழியைப் பிரித்து, ஆளுகிறவர்கள் தங்கள் மொழியையே மக்களின் பயன்பாட்டு மொழியாக மாற்ற முயற்சி செய்வார்கள். அதன்வழி, ஆட்சிக் காலத்தின் ஆயுள்காலத்தை நீட்டிக்க ஆசைப்படுவார்கள்.

ஆனால், இப்போது இவ்வளவு முயற்சிகளை மேற்கொண்டு யாரும் யாரையும் ஆள முற்படுவதில்லை. அவர்களே அவர்களை ஆட்சி செய்ய விட்டுவிடுகிறார்கள். ஆனால் அவர்களின் மொழியில் ஆட்சி செய்ய விடுவதில்லை. அவர்களின் மொழியில் ஆட்சி செய்யவிட்டால் அவர்களின் மரபு வழிப்பட்ட, பண்பாட்டு நம்பிக்கைகளிலிருந்து அவர்களை மாற்ற முடியாது. அப்படி மாற்ற முடியாவிட்டால் அவர்கள் அடங்கி இருக்க மாட்டார்கள். அடங்கவில்லை என்றால் அவர்கள் தங்களின் கருத்துகளுக்கும் உற்பத்திப் பொருள்களுக்கும் நுகர்வோராக இருக்க மாட்டார்கள்.

எனவே இன்றைய அரசியல் என்பது பல்வேறு இன மக்களையும் தங்கள் நாட்டின் நுகர்வோராக மாற்றிக் கொள்வதற்கான சூதாட்டமாக இருக்கிறது. இதற்குச் சந்தையாக மாற்றப்படும் மக்களின் மரபும் பண்பாடும் நம்பிக்கைகளும் தடையாக இருக்கின்றன. மரபையும் பண்பாட்டையும் நம்பிக்கைகளையும் தலைமுறைகளுக்குக் கைமாற்றுவது அவர்களின் தாய்மொழியாக இருக்கிறது. எனவே அவர்களின் தாய்மொழியை அவர்களிடமிருந்து பிரிப்பதுதான் இன்றைய நுட்பமான அரசியல் சூதின் ஆட்டமாக உள்ளது.

அதனால் வளரும் தலைமுறையிடம் அவர்களின் மரபுவழிப்பட்ட பண்பாட்டு விழுமியங்களின் மீதும் அவற்றைத் தலைமுறைகளுக்குக் கைமாற்றும் மொழியின் மீதும் தாழ்வுணர்ச்சியையும் அருவருப்பையும் உருவாக்குவார்கள். கல்விச் சூழலுக்குப் பயன்பாடற்ற மொழியாகவும் அதிகாரம் செலுத்தப் பயன்படாத மொழியாகவும் வழிபாட்டுச் சடங்குகளில் தீண்டத் தகாததாகவும் அவர்களின் தாய்மொழியை விலக்கி வைப்பார்கள்.

இதனால், வாழ்க்கைக்கு எந்த வகையிலும் பயன்படாத மொழியாக அந்த மக்களின் மொழி ஓரம் கட்டப்படும். முதியோர் அனாதை இல்லங்களில் தன் கடைசிப் பேச்சைக் கழித்துவிட்டு, அந்த மொழியும் வழக்கிழந்து போய்விடும். சான்றாக ஆங்கிலம்,பிரஞ்சு, போர்த்துகீசு, ஸ்பானிஷ், டச்சு மொழிகளால் அமெரிக்காவின் பூர்வீக மொழி வழக்கிழந்து போனது.

இவ்வாறு காலனியாதிக்கம், உலக மயமாதல், வளர்ச்சி எனும் காரணங்களால் கருத்தையும் பொருளையும் விற்பதற்கான மொழி ஆதிக்கம் தொடர்கிறது. ஆதிக்க மொழிகள் வணிக மொழிகளாக மாறும். இன்றைய நிலையில் வணிக மொழிகளாக ஆங்கிலம், சீனம், ஸ்பானிஷ் மொழிகள் இருக்கின்றன.

ஐ.நா. மன்றத்தின் ஆட்சிமொழிகளாக சீன, ஸ்பானிஷ், அராபிக்,பிரெஞ்சு, ருஷ்யன், ஆங்கிலம் என்று ஆறு மொழிகள் இருக்கின்றன. ஆனாலும் ஆங்கிலத்திற்குக் கிடைக்கும் உரிமைகள் மற்ற ஐந்து மொழிகளுக்கும் வேண்டும் என்று ஐ.நா. மன்றத்திலேயே கோரிக்கைகள் இருக்கின்றன. பேசும் மக்கள் தொகையைக் கொண்டு மட்டும் ஐ.நா.வின் ஆட்சி மொழிகள் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதும் கவனிக்கத் தக்கது.

அரசியல், பொருளாதாரக் காரணங்களுக்காகவும், பல மொழிகள் படுகொலை செய்யப்படுகின்றன. இவை இயற்கை மரணங்களாகவும் காட்டப்படுகின்றன. இவ்வாறும் தாய்மொழிகள் அந்த மக்களிடமிருந்து பிரிக்கப்படுகின்றன. ஆனால் ஒரு மொழி வழக்கிழப்பது என்பது ஒரு பண்பாட்டின் மரணமாகும்.

ஒரு இனத்தின் வாழ்வியல் விழுமியங்கள், அழகியல், சிந்தனை, வெளிப்பாட்டு முறை ஆகியவற்றின் மரணமாகும். இது, மனித குல வரலாற்றில், ஒரு இனம் பெற்றிருந்த அறிவியலும் வாழ்க்கை முறைகளும் அடுத்தத் தலைமுறைக்குக் கிடைக்க முடியாதபடி நடக்கும் அரசியல் சூது ஆகும்.

ஆதிக்க மொழி, பண்பாட்டு நெருக்கடி கொடுத்து, தாய்மொழியைக் கைவிட்டு ஆதிக்க மொழிக்குத் தாவச் செய்யும். இது, தாய்மொழியை திடீர் என்று வழக்கிழக்கச் செய்யும். திடீர் வழக்கிழப்புக்கு வாய்ப்பில்லை என்றால், வரும் தலைமுறைகளைக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக இழப்பினை ஏற்படுத்தும்.

அதற்காக, ஆதிக்க மொழியின் சொற்களைத் தாய் மொழியில் கலக்கும். தாய்மொழி இலக்கண விதிகளில் கொஞ்சம் கொஞ்சமாக ஆதிக்க மொழி மாற்றத்தை உருவாக்கும்.

இதற்குக் கல்விமுறை, இணையதளம்,தொலைக்காட்சி, திரைப்படம், அச்சு என்று எல்லா ஊடகங்களையும் பயன்படுத்தும். மறுக்கிற மக்களை இனப்படுகொலை செய்யும். புலம்பெயரச் செய்யும். புலம் பெயர்ந்தவர்களின் அடுத்தத் தலைமுறையினர் அந்தந்த நாட்டு மொழிகளைப் படிக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். அதன்வழி அவர்களின் தாய்மொழிகளுக்கு அங்கங்கே கல்லறைகள் உருவாகும்.

படிப்படியாக ஒரு மொழிக்கு இழப்பினை ஏற்படுத்த, கீழிருந்து மேலே அதாவது வீட்டுப் பயன்பாட்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்பயன்பாடு வரை நீக்குவார்கள். அல்லது மேலிருந்து கீழே, அதாவது ஆட்சி மொழிப் பயன்பாட்டிலிருந்து நீக்கி வீடுவரை விரிவுபடுத்துவார்கள். அல்லது இனப் படுகொலைவழி மொழிப் படுகொலை நடத்துவார்கள். எனவே செயற்கையாக நடத்தப்பெறும் மொழிப் படுகொலைகள் தடுத்து நிறுத்தப்படவேண்டும்.

ஒரு மொழி, படுகொலைக்கு ஆளாகி வருவதைத் தெரிவிக்கும் அறிகுறிகள் பின் வருமாறு:

வீட்டில் மட்டும் சிறுவர்கள் தாய்மொழியில் பேசுவது. இது பாதிப்பின் தொடக்கத்திற்கான அறிகுறி.

சிறுவர்கள் வீட்டிலும் தாய்மொழியைப் பேசாமல் இருப்பது பாதிப்பின் அடுத்த நிலையின் அறிகுறி.

பெற்றோர்கள் தாய்மொழியைப் புரிந்து கொள்வார்கள், ஆனால் தாய்மொழியில் பேச மாட்டார்கள்.

தாத்தா, பாட்டி போன்ற மூத்த தலைமுறையினரின் மொழியாக மட்டும் தாய்மொழி மாறும். இது கடுமையான பாதிப்பின் அறிகுறி.

முதியவர்களும் ஆதிக்க மொழி கலந்து பேசத் தொடங்குவார்கள். இது மிகக் கடுமையான பாதிப்பின் அறிகுறி.

மேற்கூறிய அறிகுறிகளின் தொடர்ச்சியாக பின் வருபவை நடக்கும்:

= மாணவர்களுக்குப் பாடமொழியாகவோ, பயிற்று மொழியாகவோ அவர்களின் தாய்மொழி, பாடத் திட்டத்தில் இடம் பெறாது.

= பொழுதுபோக்கு ஊடகங்கள் இருமொழிக் கலப்பில் வெளிப்படும்.

= இளைஞர்களின் கலை, இலக்கியப் பொழுது போக்குகளில் தாய்மொழியின் இடம் குறையும்.

= இளைஞர்களின் உரையாடலில் தாய்மொழி தவிர்க்கப்படும்.

= வெளியிடத்தில் பயன்பாடு குறைந்து வீட்டில் பேசும் மொழியாக மாறும்.

= வீட்டிலும் பிறமொழியில் மட்டும் உரையாடல் தொடங்கும்.

= வேலை வாய்ப்பு, சமுதாயத் தகுநிலைகள் காரணங்களாகக் கூறப்படும்.

= கல்வி, நிர்வாகம், நீதிமன்றங்களில் தாய்மொழி பயன்படாத நிலைக்குத் தள்ளப்படும்.

இவையெல்லாம் ஒரே நாளில் ஒரு மொழிக்கு நிகழ்ந்து விடுவதில்லை, கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நடக்கும். முற்றிய பின்பு பார்த்துக் கொள்ளலாம் என்று காத்திருக்கலாம். அதுவரை தாய்மொழியைச் சூது கவ்வாமல் இருக்க வேண்டும்.

தமிழ் எப்படி இருக்கிறது!

ம. இராசேந்திரன் கட்டுரையாளர்:துணைவேந்தர் (பணி நிறைவு),தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். (dinamani)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2404
இணைந்தது : 08/08/2011
மதிப்பீடுகள் : 1250

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

best Re: மொழியையும் சூது கவ்வும்!

Post by ஈகரைச்செல்வி Tue Jun 16, 2015 8:59 am

மொழியையும் சூது கவ்வும்! 103459460 மொழியையும் சூது கவ்வும்! 103459460 மொழியையும் சூது கவ்வும்! 103459460
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
மதிப்பீடுகள் : 126

Back to top Go down

best Re: மொழியையும் சூது கவ்வும்!

Post by தே_கோவிந்தராஜன் Sat Oct 31, 2015 7:26 pm

மொழியையும் சூது கவ்வும்! 3838410834
தே_கோவிந்தராஜன்
தே_கோவிந்தராஜன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 12/10/2015
மதிப்பீடுகள் : 13

Back to top Go down

best Re: மொழியையும் சூது கவ்வும்!

Post by Dr.S.Soundarapandian Sat Oct 31, 2015 8:43 pm

நன்றி சாமி அவர்களே !
ஒரு செய்தி இங்கே என்னவென்றால் கட்டுரையாளர் ம. இராசேந்திரன் அவர்களும் நானும் ஒரே அலுவலகத்தில் (அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்) ஒன்றாகப் பணி புரிந்தவர்கள் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7500
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4344

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

best Re: மொழியையும் சூது கவ்வும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை