புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதமாற்ற வியாபாரம்! - Page 2 Poll_c10மதமாற்ற வியாபாரம்! - Page 2 Poll_m10மதமாற்ற வியாபாரம்! - Page 2 Poll_c10 
107 Posts - 49%
heezulia
மதமாற்ற வியாபாரம்! - Page 2 Poll_c10மதமாற்ற வியாபாரம்! - Page 2 Poll_m10மதமாற்ற வியாபாரம்! - Page 2 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
மதமாற்ற வியாபாரம்! - Page 2 Poll_c10மதமாற்ற வியாபாரம்! - Page 2 Poll_m10மதமாற்ற வியாபாரம்! - Page 2 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
மதமாற்ற வியாபாரம்! - Page 2 Poll_c10மதமாற்ற வியாபாரம்! - Page 2 Poll_m10மதமாற்ற வியாபாரம்! - Page 2 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
மதமாற்ற வியாபாரம்! - Page 2 Poll_c10மதமாற்ற வியாபாரம்! - Page 2 Poll_m10மதமாற்ற வியாபாரம்! - Page 2 Poll_c10 
7 Posts - 3%
prajai
மதமாற்ற வியாபாரம்! - Page 2 Poll_c10மதமாற்ற வியாபாரம்! - Page 2 Poll_m10மதமாற்ற வியாபாரம்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
மதமாற்ற வியாபாரம்! - Page 2 Poll_c10மதமாற்ற வியாபாரம்! - Page 2 Poll_m10மதமாற்ற வியாபாரம்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
மதமாற்ற வியாபாரம்! - Page 2 Poll_c10மதமாற்ற வியாபாரம்! - Page 2 Poll_m10மதமாற்ற வியாபாரம்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மதமாற்ற வியாபாரம்! - Page 2 Poll_c10மதமாற்ற வியாபாரம்! - Page 2 Poll_m10மதமாற்ற வியாபாரம்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
மதமாற்ற வியாபாரம்! - Page 2 Poll_c10மதமாற்ற வியாபாரம்! - Page 2 Poll_m10மதமாற்ற வியாபாரம்! - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதமாற்ற வியாபாரம்! - Page 2 Poll_c10மதமாற்ற வியாபாரம்! - Page 2 Poll_m10மதமாற்ற வியாபாரம்! - Page 2 Poll_c10 
234 Posts - 52%
heezulia
மதமாற்ற வியாபாரம்! - Page 2 Poll_c10மதமாற்ற வியாபாரம்! - Page 2 Poll_m10மதமாற்ற வியாபாரம்! - Page 2 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
மதமாற்ற வியாபாரம்! - Page 2 Poll_c10மதமாற்ற வியாபாரம்! - Page 2 Poll_m10மதமாற்ற வியாபாரம்! - Page 2 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
மதமாற்ற வியாபாரம்! - Page 2 Poll_c10மதமாற்ற வியாபாரம்! - Page 2 Poll_m10மதமாற்ற வியாபாரம்! - Page 2 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
மதமாற்ற வியாபாரம்! - Page 2 Poll_c10மதமாற்ற வியாபாரம்! - Page 2 Poll_m10மதமாற்ற வியாபாரம்! - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai
மதமாற்ற வியாபாரம்! - Page 2 Poll_c10மதமாற்ற வியாபாரம்! - Page 2 Poll_m10மதமாற்ற வியாபாரம்! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
மதமாற்ற வியாபாரம்! - Page 2 Poll_c10மதமாற்ற வியாபாரம்! - Page 2 Poll_m10மதமாற்ற வியாபாரம்! - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மதமாற்ற வியாபாரம்! - Page 2 Poll_c10மதமாற்ற வியாபாரம்! - Page 2 Poll_m10மதமாற்ற வியாபாரம்! - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Barushree
மதமாற்ற வியாபாரம்! - Page 2 Poll_c10மதமாற்ற வியாபாரம்! - Page 2 Poll_m10மதமாற்ற வியாபாரம்! - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மதமாற்ற வியாபாரம்! - Page 2 Poll_c10மதமாற்ற வியாபாரம்! - Page 2 Poll_m10மதமாற்ற வியாபாரம்! - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதமாற்ற வியாபாரம்!


   
   

Page 2 of 2 Previous  1, 2

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Mar 28, 2014 4:44 pm

First topic message reminder :

நான் அப்போது ப்ளஸ் ஒன் சேர்ந்திருந்த சமயம்.. எந்த ஜென்மத்தில் செய்த பாவமோ பத்தாம் வகுப்பில் நான் எடுத்திருந்த மார்க்குக்கு முதல் குரூப் தான் கொடுப்போம் என்று சொல்லி என்னை அந்த கிணற்றுக்குள் தள்ளி விட்டார்கள்.. அது வரை ஒரே புக்காக இருந்து உயிரை வாங்கிய சயின்ஸ், ப்ளஸ் ஒன்னில் இருந்து டபுள் ஆக்ட் கொடுத்து பீதியை கிளப்பியது... நானாவது பரவாயில்லை, பயாலஜி எடுத்த பயலுகளுக்கு அது ட்ரிபிள் ஆக்ட் ட்ரீட் கொடுத்தது.. அடுத்த எமகண்டம் மேத்ஸ்.. அதுவரை ஜியாமெட்ரியும், கிராப்பும் மட்டுமே படித்து மேத்ஸ்சில் பாஸ் ஆகிய எனக்கு ப்ளஸ் ஒன்னில் ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டார்கள், இனி ஜியாமெட்ரியும் கிராப்பும் கிடையாது என்று.. பாடங்கள் எல்லாம் ரொம்ப கஷ்டமாக இருந்தன.. பள்ளிக்கு போகவே வெறுப்பாக இருக்கும்..

அப்போது தான் ஒரு மாலை வேளையில் என் பக்கத்து வீட்டுக்காரர் என்னிடம் பேச்சு கொடுத்தார். அவர் ஒரு ப்ரொட்டஸ்டண்ட் கிறிஸ்தவர். ”ப்ளஸ் ஒன்னா படிக்கிற?”

“ஆமா அண்ணாச்சி”

“ஃபர்ஸ்ட் க்ரூப்பா?”

“ஹ்ம் ஆமா”.. இந்த ஃபர்ஸ்ட் குரூப் என்று வெளியில் பீற்றிக்கொள்ள பெருமையாகத்தான் இருக்கும்.. ஆனால் படிப்பதற்குள் தான் டவுசர் கழண்டு விடும்..

“ரொம்ப கஷ்டமா இருக்கும்ல ஃபர்ஸ்ட் குருப்புன்னா?” எனக்காக வருந்துவது போல் முகத்தை வைத்துக்கொண்டு கேட்டார்..

ஆஹா நம்ம கஷ்டத்தை புரிந்த ஒரே ஜீவன் என்று நினைத்து “ஆமாண்ணாச்சி” என்றேன்..

“நீ ஈசியா படிச்சி பாசாயி நல்ல மார்க எடுக்க என்ட்ட ஒரு ஐடியா இருக்கு”

“என்னண்ணாச்சி அது?”

“நீ டெய்லி ஏசப்பா கிட்ட pray பண்ணு.. நீ தான் க்ளாஸ் ஃபர்ஸ்ட்”

“நெஜமாவா?”

“ஆமா..”

“ஏசு சாமிய கும்பிட்டா நான்...” குறுக்கிட்டு, “கும்பிடுறதுன்னுலாம் சொல்லக்கூடாது.. Prayer இல்லனா ஜெபம் பண்ணுறதுன்னு சொல்லணும்.. எங்க சொல்லு பாப்போம்”

“சரி. ஏசு சாமிய pray பண்ணுனா நான் ஃபர்ஸ்ட் மார்க் எடுத்துருவேனா?”

“ஃபர்ஸ்ட் மார்க் என்ன? அதுக்கு பெறவு எல்லாத்துலயும் நீ தான் ஃபர்ஸ்ட்..” என்று சொல்லி என்னை அவர் வீட்டுக்குள் அழைத்துச்சென்று எப்படி முட்டி போட்டு ப்ரேயர் பண்ண வேண்டும் என சொல்லிக்கொடுத்தார்.. பைபிளை திறந்து எனக்காக என்னமோ வாசித்தார்.. நான் நல்லா மார்க் எடுக்கணும்னு வேண்டினார்.. எனக்கு அவரையும், ஏசு சாமியையும் மிகவும் பிடித்துவிட்டது.. ‘ச்சே நமக்காக எவ்வளவு தூரம் சாமிட்ட வேண்டுறாரு? இல்ல இல்ல ஜெபம் பண்ணுறாரு?’ என்று அவர் மீது ஒரு மரியாதையே வந்துவிட்டது.. அவர் வீட்டில் இருந்து கிளம்பும் போது ஒன்றை சொன்னார், “ஒங்க வீட்ல இருக்கிற ஃபோட்டோவ எல்லாம் இனிமே கும்பிடாத.. அதெல்லாம் சாத்தான்.. அதனால தான் நீ இப்ப கஷ்டப்படுற, புரியுதா?”..

நான் தயக்கத்துடன், “அப்புடியா?”

“ஆமா.. சாமினா ஒன்ன இப்டி கஷ்டப்பட விடுமா? அது எல்லாமே சாத்தான்.. ஏசப்பா தான் ஒரே சாமி.. உண்மையான சாமி.. இனிமேல் அவர மட்டும் ப்ரே பண்ணு, சரியா?”

“சரிண்ணாச்சி”. மறுநாளில் இருந்து நான் ஏசப்பாவை தான் ஜெபம் செய்தேன்.. சாத்தான்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. தார் ரோட்டுக்கு நடுவில் வெள்ளைக்கோடு போட்டது போல் என் நெற்றியில் இருந்த திருநீறு அதற்கு அடுத்த நாளில் இருந்து இருக்கவில்லை. முதல் மாதத்தேர்வு முடிந்து பரிட்சை பேப்பரை கொடுத்தார்கள். தமிழ், இங்கிலீஷை தவிர அனைத்திலும் ஃபெயில். அதிலும் மேத்ஸ்சில் முட்டை.. என் வாழ்க்கையில் அது தான் நான் முதன்முதலில் ஃபெயில் ஆகிய தருணம். முட்டை மார்க் எல்லாம் என் கனவிலும் வாங்குவேன் என்று நினைக்கவில்லை. நான் மட்டும் முட்டை அல்ல, வகுப்பில் முக்கால்வாசி பேர் முட்டை தான்.. ஒரு க்றிஸ்டியன் பிள்ளை கூட ஃபெயில் ஆகி அழுதுகொண்டிருந்தது பாவம்.. எனக்கு கடுப்பாகிவிட்டது, ‘என்னடா இது ஏசப்பாவ கும்பிட்டும் இப்படி ஆயிருச்சே? அவருக்கு இவ்வளவு தான் பவரோ?’னு..

மாலை அந்த பக்கத்து வீட்டு அண்ணாச்சியிடம் விசயத்தை சொன்னேன்.. அவர் சொன்னார், “நீ அந்த சாத்தான இப்ப கும்பிடாம ஏசப்பாவ ஜெபம் பண்ணுறீல, அதான் சாத்தான் ஒன்ன இப்படி தண்டிக்குது”..

“ஆனா க்ளாஸ்ல எல்லாருமே ஃபெயில் தான்ண்ணாச்சி.. ஒரு க்றிஸ்டின் பிள்ள கூட ஃபெயில் தான் தெரியுமா?”

“அதான்டா சொல்றேன்.. நீ ஏசப்பாவ கும்பிடுறது தெரிஞ்சதும் அந்த சாத்தான் எல்லாரையும் இப்படி பழிவாங்குது. அதான் எல்லாரையும் ஃபெயில் ஆக்குது”

எனக்கு கோபம் வந்துவிட்டது.. தன்னை நம்பி கும்பிட்ட, ஸாரி, ஜெபம் பண்ணிய ஒருத்தனை காப்பாற்றாவிட்டாலும் பரவாயில்லை, அவனால் பிறர் பாதிக்கப்படுவதையும் பார்த்துக்கொண்டு இருக்கும் ஆளா எல்லாம் வல்ல கடவுள்? அவரை நம்பியா இனியும் நாம் போவது? சாத்தான் என்றாலும் இத்தனை நாட்களில் என்னை ஃபெயில் கூட ஆக்கியதில்லை பிள்ளையாரும், சரஸ்வதியும். படிக்காமல் போனதால் வாத்தியாரிடம் அடி வாங்கிக்கொடுத்தாலும், பரிட்சை அன்று கும்பிட்டு போனால் கண்டிப்பாக பாஸ் தான்.. ஆனால் இந்த புதுக்கடவுள் என்னை ஃபெயில் ஆக்கும் வரை, அதுவும் முட்டை வாங்கும் வரை பார்த்துக்கொண்டிருக்கிறார்.. அந்த ஆள் வேஸ்ட் என முடிவு செய்து கொண்டு, அந்த அண்ணாச்சியிடம் இருந்து மெல்ல நகர்ந்தேன்.. “டேய் எங்க போற? வா சாத்தான்ட்ட இருந்து ஒன்ன காப்பாத்த ஒரு ப்ரேயர் பண்ணிருவோம்”

’ஒன்னும் வேண்டாம்.. ஒங்க ஏசுவ விட எங்க சாத்தானுக்கு தான் பவர் ஜாஸ்தின்னு தெரியுது, நான அவரையே கும்பிட்டுக்கிறேன்’னு சொல்ல நெனச்சேன்.. ஆனா தைரியம் இல்லாதனால, “எங்கம்மா தேடுவாங்க அண்ணாச்சி, நான் பெறவு வாரேன்”னு சொல்லிட்டு ஓடி வந்துட்டேன்.. அதற்கு பின் நான் அவர் முகத்தில் கூட முழிக்கவில்லை.. ஜெபமும் செய்வதில்லை, சாமி தான் கும்பிடுகிறேன் தினமும் தார் போன்ற என் நெற்றியில் வெள்ளைக்கோடு போன்ற திருநீறு இட்டு.. கதை இதோடு முற்றும்.. இப்ப மேட்டருக்கு வருவோம்.

நம் தமிழ் நாட்டில், அதுவும் குறிப்பாக தென்பகுதிகளில் பக்கத்து வீடு, தூரத்து சொந்தம், ஸ்கூல் டீச்சர், வகுப்புத்தோழன் போன்ற யாராவது ஒருவரிடம் இருந்து இது போன்ற மறைமுக, நேரடி மதமாற்ற முயற்சியை பெரும்பாலும் எல்லோரும் அனுபவித்திருப்போம்.. நாம் சோர்ந்திருக்கும் நேரத்திற்காக காத்திருக்கும் அவர்கள், சரியான நேரம் வரும் போது, வார்த்தைகளில் கனிவைக்கூட்டி நம்மை மதம் மாற்ற முயற்சிப்பார்கள். ஒரு சின்ன statistics பாருங்கள்..

ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 25லட்சம் பேர்கள் உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களாக மதம் மாற்றப்படுகிறார்கள்/மாறுகிறார்கள். இத்தனைக்கும் கிறிஸ்தவம் தான் உலகின் மிகப்பெரிய மதம். அதன் இரண்டாம் மூன்றாம் இடங்களில் இருக்கும் இஸ்லாம், இந்து மதங்களின் ஒட்டு மொத்த கூட்டுத்தொகையை விட மொத்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை தான் உலகில் அதிகம். ஏழை, எளியவன் தனக்கு இருப்பதே போதும் என நிம்மதியாக இருப்பான்.. ஆனால் அதிக காசு இருப்பவன் ’இன்னும் இன்னும் இன்னும்’ என்று அலைந்து கொண்டு இருப்பானே, அது போல் தான் இவர்களும்.. உலகம் முழுவதும் தாங்கள் பரந்து வளர்ந்திருந்தாலும், இன்னும் இன்னும் இன்னும் என்று அலைகிறார்கள் பிறரை தங்கள் மதத்திற்கு மாற்றுவதற்கு. அவர்கள் மதம் மாற்றுவதற்கு ஒன்றும் பிறர் மீதான அக்கறையோ, உண்மையான கடவுள் பக்தியோ காரணம் இல்லை. பின் என்ன காரணம்? அந்த காரணமும் அதற்கு பின் இருக்கும் மார்க்கெட்டிங் வித்தைகளும் பலருக்கும் தெரிந்த ரகசியம் தானே? நான் வேறு என்னத்தை புதுசாக சொல்வது?

கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். நம் அண்டை வீட்டில் இருக்கிறார்கள். நம்முடன் நன்றாக பழகுகிறார்கள்.. தீபாவளிக்கு நம் வீட்டில் செய்யும் பலகாரங்களை கொடுத்தால் வாங்க மாட்டார்கள். அட பொங்கல் அன்று கரும்பு கொடுத்தால் கூட திங்க மாட்டார்கள்.. கேட்டால், சாத்தான் இருக்குமாம் அதில் எல்லாம்.. அண்டை வீட்டுக்காரன் என்ன உங்களுக்கு விஷமா கொடுத்துவிடப்போகிறான்? கிராமங்களில் அறுவடையின் போது, சாமியை கும்பிட்டுவிட்டுத்தான் ஒவ்வொரு முறையும் நெல் அறுவடை நடக்கிறது. எப்படி அதை மட்டும் உண்ணுகிறார்கள் என்று தெரியவில்லை. நெல்லில் மட்டும் சாத்தான் புகுந்துவிடாதா? விருந்தோம்பல் என்கிற ஒரு அடிப்படை பண்பை கூட மதிக்காத, சக மனிதனுக்கான மரியாதையை கூட கொடுக்காத இவர்கள் தான் நாம் கஷ்டப்படும் போது ஓடோடி வந்து நம் மீது அக்கறை காட்டுவார்கள் மதம் மாற்ற.. அவன் கொடுக்கும் சாதாரண பலகாரத்தை நம்பி திங்க மாட்டீர்கள், ஆனால் அவன் உங்களை நம்பி உங்கள் மதத்திற்கு மாற வேண்டும் என எதிர்பார்ப்பீர்கள். நல்ல லாஜிக். ரோமன் கத்தோலிக்கர்களை தவிர மற்ற அனைத்து பிரிவு கிறிஸ்தவர்களும் இப்படித்தான் இருக்கிறார்கள்..

இந்தியாவிலேயே, ஏன் உலகிலேயே அனைத்து மதங்களையும் அனுசரித்து வாழும் மக்கள் இந்துக்கள் மட்டும் தான்.. சிறு வயதில் இருந்தே அவர்கள் பக்கத்து வீட்டினருடன் சர்ச்சுக்கு செல்லலாம், மசூதிக்கு சென்று தண்ணீர் தெளித்துவிட்டு வரலாம், வீட்டில் ஏசுநாதர் படத்தை மாட்டி அதற்கும் வெள்ளிக்கிழமைகளில் மாலை மாட்டி பூஜை செய்யலாம், கழுத்திலோ கையிலோ மேரி மாதாவின் படத்தை டாலராகவோ மோதிரமாகவோ மாட்டிக்கொள்ளலாம்.. வீட்டில் யாரும் தடுக்க மாட்டார்கள். சொல்லப்போனால் தங்கள் முப்பத்து முக்கோடி தேவர்களுடன் இன்னும் எக்ஸ்ட்ராவாக ஏசு, அன்னை மேரி, அல்லா மூவரையும் சேர்த்துக்கொள்வார்கள், அவ்வளவு தான்.. அவர்களைப்பொறுத்தவரை கடவுள் பல ரூபங்களில் இருக்கிறார் என்பார்கள், அது ஏசுவாகவும் இருக்கலாம் என்பார்கள். இந்து மதத்தின் பலமும் அது தான், பலவீனமும் அது தான். ஆனால் இதையே ஒரு கிறிஸ்தவரோ, இஸ்லாமியரோ கண்டிப்பாக சொல்ல மாட்டார்.. சாத்தான், ஹரம் என்றெல்லாம் பிற மத நம்பிக்கைகளை இழிவு படுத்துவார்கள்.

இவர்களின் மதம் மாற்றும் டெக்னிக் மிக மிக கொடுமையானது. ஒரு மகிழ்ச்சியான குடும்பம் இருக்கிறது. திடீரென்று ஒரு பிரச்சனை வருகிறது அவர்கள் குடும்பத்தில். உடல் ஆரோக்கியம் கெட்டு, மிகுந்த மன உளைச்சலும் பண விரயமும் ஆகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போது தான் இவர்கள் உள்ளே நுழைவார்கள். அவருக்காக, அந்த குடும்பத்திற்காக கண்களை மூடி கண்ணீர் விட்டு ஜெபம் செய்வார்கள். நம் மக்களும், ’சொந்தக்காரன் கூட கண்டுக்காத சூழ்நிலையில கூட, யாருன்னே தெரியாத ஒரு ஆள் நமக்காக சாமி கும்பிடுறாரே?’னு ஃபீல் ஆகிருவாங்க.. நம் மக்கள் எல்லாம் sentimental idiots என்பதை தெரிந்து வைத்திருப்பதால் தான் இப்படி sentiment attack நடத்துவார்கள். பின் அந்த வீட்டு பெண்களை சர்ச்சுக்கும், தங்கள் வீட்டில் நடக்கும் ஜெப நிகழ்ச்சிகளுக்கும் அழைப்பார்கள். அந்த பெண்ணும் சாதாரணமாகத்தான் ஆரம்பத்தில் செல்வாள். போகப்போக அவளின் பொட்டை அழிப்பார்கள், குழந்தைகளையும் மாற்றுவார்கள், வீட்டில் இருக்கும் இந்து அடையாளங்களை மறைப்பார்கள். எல்லாம் மாறிய பின் அந்த வீட்டின் ஆண் மட்டும் என்ன செய்ய முடியும்? அவனும் மாறிவிடுவான். ஆனால் அந்த கஷ்டம் மட்டும் அப்படியேத்தான் இருக்கும்.

தாழ்த்தப்பட்டவர்களை மதம் மாற்றும் போது, ‘நாங்கள் ஜாதியே பார்ப்பதில்லை. எங்கள் மதத்திற்கு வந்தால் நீ உயர்ந்துவிடலாம்’ என்பார்கள்.. ஆனால் மதம் மாறிய பின் தான் அவனுக்கு தெரியும், ஒரு கிறிஸ்தவ பள்ளரால் ஒரு கிறிஸ்தவ நாடாரையோ கிறிஸ்தவ வேளாளரையோ மணக்க முடியாது என்று. அங்கு போயும் அவன் தாழ்த்தப்பட்டவனாகத்தான் இருக்க வேண்டும். கிறிஸ்தவத்திற்கு மாறினால் ஜாதிய ஏற்றத்தாழ்வு மறைந்துவிடும் என்பது பெரும் அபத்தம்.. இன்றும் தென் தமிழக்த்தில் கிறிஸ்தவர்களின் கல்யாண பத்திரிக்கைகளில், “நெல்சன் நாடார்”, “சேவியர் பிள்ளை” என்று தான் இருக்கும்.. இதை விட ஒரு பெரிய கொடுமை, ஊர் ஊராக “பிராமண சகோதரியின் சாட்சியை காண வாருங்கள்” என்று போஸ்டர் ஒட்டி அழைக்கிறார்கள் மதம் மாறிய ஒரு பிராமண பெண்ணின் பேச்சை கேட்க.. ஜாதியே இல்லை என்று பீற்றும் ஒரு மதம் தான் பிராமண ஜாதியை உயர்வான ஜாதி போல் குறிப்பிட்டு “பிராமண சகோதரியின் சாட்சி” என்கிறது. ஒரு நடிகர் கூட “கிறிஸ்டியன் ப்ராமின் அசோசியேசன்” என்று ஆரம்பித்திருப்பதாக கேள்வி..

அடுத்த விசயம், ”எங்கள் மதத்திற்கு மாறிவிட்டால், ஊமைகள் பேசுவார்கள், குருடர்கள் பார்ப்பார்கள், முடவர்கள் நடப்பார்கள்” என்று அள்ளி விடுவார்கள். ஆனால் இன்னமும் கிறிஸ்தவர்களில் குருடர்களும், செவிடர்களும், முடவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்? மத ஊழியம் செய்யும் ஒரு கிறிஸ்தவ நண்பரிடம், “உங்கள் மதத்திலேயே பலர் இது போல் இருக்கும் போது அவர்களை குணப்படுத்தாமல் ஏன் பிறரை டார்கெட் செய்கிறீர்கள்?” என்றேன்.. அதற்கு அவர் சொன்ன பதில் என்னை தூக்கிவாரிப்போட்டது.. “அவர்கள் எல்லாம் ஏசுவை உண்மையாக நம்பவில்லை. அதனால் தான் செவிடாக, முடமாக, குருடாக இருக்கிறார்கள். உண்மையாக நம்பினால் மட்டுமே குணமாகும்” என்றார். தன்னை நம்பாத மக்களை குருடனாக, முடவனாக வைத்திருக்கும் ஆள் எப்படி கடவுளாக முடியும்? இது போல் குருடர்களை பார்க்க வைக்கிறேன், முடவர்களை பேச வைக்கிறேன், அதிசயங்களை காணப்பண்ணுகிறேன் என்று ஊர் ஊராக மேடை போட்டு மேஜிக் ஷோ போல் நடத்தும் ஆட்கள் எல்லாம், தங்கள் உடம்புக்கு ஒன்று என்றால் அப்பல்லோவிலோ, ராமச்சந்திராவிலோ அல்லது அமெரிக்காவிலோ மருத்துவத்திற்கு சென்று விடுகிறார்கள். ஏன், அவர்களும் ஜெபம் செய்தே தங்களை குணப்படுத்திக்கொள்ளலாமே? ஒரு வேளை அவர்களும் ஏசுநாதரை உண்மையாக நம்புவதில்லையோ?

”எங்க கம்பெனி காம்ப்ளான குடிச்சா பனை மரத்துல பாதியா ஒசரமா வளந்துரலாம்..”


”எங்க கம்பெனி ஹார்லிக்ஸ குடிச்சா கால்குலேட்டர் இல்லாமலே கணக்கு போடுற அறிவாளியா ஆயிரலாம்...”



”எங்க கம்பெனி ஃபேர் & லவ்லி போட்டா செக்கச்செவேர்னு ஆயிரலாம்..”


இந்த விளம்பரங்களின் வரிசையில், உலகம் முழுவதும் பெரிதும் வரவேற்பை பெற்ற successful ஆன இன்னொரு விளம்பரம்..


“எங்க மதத்துக்கு மாறினா கஷ்டம் எல்லாம் மறஞ்சி, கோடி கோடியா பணம் கொட்டி, வாழ்க்கையே சுபிட்சமாயிரும்.. அற்புதங்கள் நிகழும்”...

இப்படி சொல்லி மதம் மாற்றுபவன் வீட்டிலும் ஆயிரத்தெட்டு பிரச்சனைகள் இருக்கும். அவன் மனைவிக்கும், அம்மாவுக்கும் வீட்டில் சண்டை இருக்கத்தான் செய்யும்., மாசக்கடைசியில் கணக்கு போட்டுத்தான் அவனும் வாழ்வான், பிள்ளைகளில் வருங்காலத்தை நினைத்து அவனுக்கும் கவலைகள் எல்லாம் இருக்கத்தான் செய்யும். கஷ்டம், கவலையே இல்லாமல் மனிதன் இருக்க வேண்டும் என நினைத்தால் அது அவன் மரணத்திற்கு பின்பு தான். ஒரு மத்தத்தில் இருந்து இன்னொரு மதத்திற்கு மாறுவதால் கஷ்டமும் கவலைகளும் எப்படி போகும்? உடம்பில் உயிர் இருக்கும் வரை கஷ்டமும், போராட்டமும் இருக்கத்தான் செய்யும்.


ஏற்கனவே கேள்விப்பட்ட கதை ஒன்று. ஒரு பெண் புத்த மகானிடம் “சாமி நாம் எப்பவுமே சந்தோசமா இருக்கணும். அதுக்கு வழி சொல்லுங்கள்” என்கிறாள்.. ”சாவே நிகழாத வீட்டில் ஒரு வேளை சோறு வாங்கி சாப்பிடு உன் வாழ்வில் என்றும் சந்தோசம்” என்கிறார். அவள் எங்கு தேடியும் அப்படி ஒரு வீடு இல்லவே இல்லை. அனைத்து வீடுகளிலும் இன்றோ, நேற்றோ, சில வருடங்களுக்கு முன்போ சாவு நிகழ்ந்திருக்கிறது. அவள் சோகத்துடன் புத்த மகானிடம் வருகிறாள். புன்முறுவலுடன் புத்தர் சொல்கிறார், “எப்படி சாவிடம் இருந்து யாரும் தப்ப முடியாதோ, அது போல் இந்த வாழ்க்கையின் பிரச்சனைகளில் இருந்தும், கஷ்டங்களில் இருந்தும் தப்ப முடியாது. அதனால் பிரச்சனைகளை எதிர்கொள்ள போராட கற்றுக்கொள்” என்கிறார். அது போல் தான், மதம் மாறினால் பிரச்சனைகள் தீராது.. நான் ஒருவனிடம் கடன் வாங்கியிருக்கிறேன், திருப்பி கட்ட முடியவில்லை. அவன் என்னை மிரட்டுகிறான்.. நான் மதம் மாறிவிட்டால், என்னிடம் கடனை திரும்ப கேட்க மாட்டானா அவன்? என் சுகரும், ஹார்ட் ப்ராப்ளமும் மதம் மாறினால் சரியாகிவிடுமா? கொஞ்சம் அறிவை பயன்படுத்தி யோசித்தால் மதம் மாறுவது வேஸ்ட் என்று தெரிந்துவிடும். அதனால் தான் நாம் அறிவை பயன்படுத்த முடியாத, குழப்பமான சூழலில் இருக்கும் போது மதம் மாற்றுகிறார்கள்.

மதம் மாற்றுவதில் இப்போது புது யுக்தி நடிகர், நடிகைகளை மதம் மாற்றி அவர்கள் மூலம் பிரச்சாரம் செய்வது. பழம்பெரும் நடிகர் ஏவிஎம் ராஜனில் இருந்து, நக்மா, ஜூனியர் பாலய்யா, குமரிமுத்து, சாருஹாசன் என்று பலரையும் மதம் மாற்றி ஊர் ஊராக மதப்பிரச்சாரம் செய்ய வைக்கிறார்கள்.. நடிகர்கள், குளிர் பானங்கள், காப்பித்தூள், துணிக்கடைகளுக்கு எல்லாம் விளம்பரம் செய்த காலம் போய், இப்போது மதத்திற்கு விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்கள். நகைச்சுவை நடிகர் செந்தில், டி.ஆர்., ராமராஜன் போன்றவர்களும் மதம் மாறிவிட்டதாக சொல்கிறார்கள். உண்மையா என்பது சில நாட்களில் அவர்கள் மேடை ஏறும் போது தெரிந்துவிடும். கொஞ்ச நாட்களுக்கு முன் ரஜினி வீட்டிற்கு ஒரு கிறிஸ்தவ போதகர் வந்து ரஜினிக்காக் ஜெபித்திருக்கிறார். அந்த வெவரம் இல்லாத மனுசனும் அதற்கு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார். உடனே கிளப்பிவிட்டுவிட்டார்கள் ரஜினி மதம் மாறிவிட்டார், உண்மையான இறைவனை கண்டு பிடித்துவிட்டார் என.. கடவுளை விட அதை பின்பற்றும் நடிகனுக்கு தான் இங்கே முக்கியத்துவம் இருக்கிறது. கடவுள் தான் அனைத்திலும் பெரியவர், உயர்ந்தவர்.. ஆனால் இவர்கள் கடவுளையும், மதத்தையும் ஒரு சந்தைப்பொருள் போல் நடிகர்களை வைத்து விளம்பரப்படுத்துகிறார்கள். சூர்யாவே சன்ரைஸ் காப்பி தான் குடிக்கிறாராம், நீயும் குடி என்பது போல், சாருஹாசனே ஏசுவை தான் கும்பிடுகிறாராம் என்கிறார்கள். சாமியை விட அதை கும்பிடும் நடிகனுக்கு தான் இங்கு முன்னுரிமை. கடவுளை பரப்ப வேண்டும் என்பதை விட மதத்தை விற்க வேண்டும் என்கிற எண்ணம் தான் அவர்களிடம் அதிகம் இருப்பது போல் தெரிகிறது..

ஆனால் நான் சொன்ன எதையுமே ப்ரொட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்கள் ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். “நாங்களா மதம் மாற்றுகிறோம்? இல்லை.. அவர்களாக கர்த்தரை நம்பி வருகிறார்கள்” என்பார்கள். கர்த்தரை அவர்களாக நம்பி வருகிறார்கள் என்றால் ஏன் ஒவ்வொரு ஊரிலும் மூன்று நாள், நான்கு நாள் விடுதலைப்பெருவிழா, சுகமளிக்கும் கூட்டங்கள் எல்லாம் நடத்த வேண்டும்? அந்த மேடையில் ஏன் டிராமா போட வேண்டும்? நிஜமாகவே முடவனை நடக்க வைக்கிறார்கள் என்றால் நாட்டில் இருக்கும் முட வைத்தியசாலைகளை எல்லாம் மூடிவிட்டு அதற்கு பதிலாக சுகமளிக்கும் கூட்டங்களை தெருத்தெருவாக நடத்தலாமே? இப்படி ஊர் ஊராக மேடை நிகழ்ச்சி நடத்தி கோடி கோடியாக சம்பாதித்த மனிதர் கூட தன் கடைசி காலத்தில் இறைவனை நம்பாமல் ஆஸ்பத்திரியில் டாக்டரைத்தான் நம்பினார். ஏன் அவர் தன்னையும் குணப்படுத்த ஒரு கூட்டம் போட்டு மேடையில் ஆண்டவரிடம் ஜெபித்திருக்கலாமே?

மதம் மாறுவதால் ஒருவனின் பிரச்சனை தீர்ந்து விடும் என்றால், இந்தியா பாகிஸ்தான் பிரச்சனையை கூட எளிதாக தீர்த்துவிடலாமே? இந்திய, பாகிஸ்தான் ராணுவத்தளபதிகளை மதம் மாற்றிவிட்டால் அடித்துக்கொள்ள மாட்டார்களே? ஏன் சார், நீங்க பிரச்சனையே வராதுனு சொல்ற கிறிஸ்தவ மதத்த பின்பற்றுற ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள்ல தான தனி மனித வன்முறைகள், விவாகரத்துக்கள் எல்லாம் அதிகமா இருக்கு? அதுக்கு என்ன காரணம்? மதம் மாறினால் செல்வம் கொழிக்கும் என்றால் இன்று உலகில் எந்த சர்ச்சுக்கும் வெளியில் பிச்சைக்காரர்கள் நின்று கொண்டிருக்க மாட்டார்கள். எல்லா கிறிஸ்தவர்களும் கோடீஸ்வரராக, நோயற்றவராக மாறியிருப்பார்கள். ஆனால் இல்லையே? கிறிஸ்தவர்களும் கவலையில் தோய்ந்து கொண்டு தானே இருக்கிறார்கள்? பின் அந்த மதத்திற்கு மாறி மட்டும் என்ன பயன்? இன்னொரு சின்ன டவுட். இந்துக்கள் இருக்கும் ஏரியாவிற்குள் மட்டும் வந்து மதம் மாற்ற நினைக்கும் ஆட்கள், ஏன் இஸ்லாமிய மக்கள் இருக்கும் ஏரியாவுக்குள் இதை முயற்சிப்பதில்லை? மத விற்பனை வேலையில் இருக்கும் யாராவது இதற்கு பதில் சொன்னால் தேவலை.

மதம், கடவுள் இதெல்லாம் கஷ்ட காலத்தில் நமக்கு ஒரு வழித்துணையாக இருக்கவும், தைரியத்திற்காகவும் நாமே படைத்துக்கொண்டே விசயங்கள், ஒரு நம்பிக்கை, அவ்வளவு தான்.. அந்த நம்பிக்கையால் வெற்றி பெறும் போதும் அகம்பாவம் தலைக்கு ஏறிவிடக்கூடாது என்பதற்காகத்தான், வெற்றி பெற்றதற்கும் இறைவன் தான் காரணம் என்று கூறி நன்றி செலுத்துகிறோம்.. மற்றபடி உங்கள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் வந்து “உன்னை நான் அதிசயங்களை காணப்பண்ணுவேன்”னு உங்கள் பெர்சனலுக்குள் நுழைவது தான் கடவுளின் வேலையா? இல்லை, இல்லவே இல்லை. கடவுள் - ஒரு வேளை இருந்தால் - இந்த அண்ட சராசரத்திற்கென்று என்று, அதன் செயல்பாடுகளுக்கென்று ஒரு நெட்வொர்க்கை பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே அமைத்திருப்பார். இப்போது அவர் ஒரு பெரிய நெட்வொர்க் கம்பெனியின் முதலாளி. நீங்களும் நானும் அந்த நெட்வொர்க்கின் சிறு புள்ளியில் இருக்கும் இந்த சூரிய குடும்பத்தில் ஒரு அங்கம். அவ்வளவு தான். அந்த நெட்வொர்க்கை நாம் சிதைக்காத வரை கடவுளுக்கு உங்களையோ என்னையோ பெர்சனலாக தெரிய வாய்ப்பேயில்லை.. ஆனால் இந்த நெட்வொர்க் மனிதனாகிய நம் எல்லையைத்தாண்டி, நம் சக்தியை மீறி இருப்பது. அதனால் நீங்கள் எந்த மதத்தை பின்பற்றுகிறீர்கள், உங்கள் வீட்டில் யாருக்கு என்ன பிரச்சனை என்றெல்லாம் அவருக்கு தெரியாது.. நீங்கள் அதையெல்லாம் சமாளித்து, சரிக்கட்ட வேண்டும். உங்கள் பிரச்சனைகளைக்கும் தீர்வு சொல்ல, உங்களுக்காக உழைக்க கடவுள் உங்கள் வீட்டு வேலைக்காரர் இல்லை.

So, நீங்கள் எந்த மதமாக இருந்தாலும், எந்த சாமியை கும்பிட்டாலும் உங்களது அடுத்த வேளை சோறுக்கு நீங்கள் தான் உழைக்க வேண்டும். எந்த சாமியும் நீங்கள் மதம் மாறி prayer பண்ணும் அழகைப்பார்த்து, அப்படியே உருகி, உங்கள் வீட்டு காலிங் பெல்லை அழுத்தி உங்களுக்கு பொன்னுச்சாமி ஓட்டல் ஃபுல் மீல்ஸையோ, அஞ்சப்பரின் அயிரை மீன் குழம்பையோ கொடுக்காது.. உங்களை மதம் மாற்ற நினைப்பவருக்கும் அது தான்.. “ஆஹா நம்ம மதத்துக்கு எத்தனை பேரை புதுசா கூட்டி வந்திருக்கிறான்? இவனால தான இன்னைக்கு நம்மள ஒரு 539 பேர் புதுசா கும்பிடுறாங்க?” என்றெல்லாம் புலங்காகிதம் அடைந்து கடவுள் அவன் வீட்டிலும் காலிங் பெல் எல்லாம் அடித்து சோறு கொடுக்க மாட்டார். அவன் பார்க்கும் மத விற்பனை வேலையை பார்த்தால் தான் அவனுக்கும் சோறு.. அந்த வேலைக்கு முறையான ஊதியம் இல்லையென்றால் அவனும் வேறு வேலைக்கு போய் விடுவான்..

மதம் மாறுவது என்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. ‘கடவுள்’ என்னும் சொல்லின் நிஜமான அர்த்தம் புரிந்தவன் மதம் மாறவும் மாட்டான், மதம் மாற்றவும் மாட்டான். அந்த சொல்லின் அர்த்தம் புரியாத, அல்லது, புரிந்திருந்தாலும் அதை பெரிதாக சட்டை செய்யாத ஆட்கள், தங்களின் சுயலாபத்துக்காகத்தான் மதம் மாற்றுகிறார்கள். கடவுள் என்பவர் மதத்திற்கு அப்பாற்பட்டவர்... அவர் முருகனோ, சிவனோ, ராமனோ, ஏசுவோ, அல்லாவோ, புத்தரோ... யாராக இருந்தாலும் அவர் மதங்களை கடந்தவர். இதை புரிந்து கொண்டாலே பாதி பேர் தெளிவாகிவிடுவார்கள். மீண்டும் சொல்கிறேன், ஃபேர்&லவ்லி போட்டாலும் எப்படி உங்கள் ஒரிஜினல் கலர் மாறாதோ அது போல் நீங்கள் மதம் மாறினாலும், ஜாதி மாறினாலும், உங்கள் ஒரிஜினல் கஷ்டம் மாறாது. கஷ்டம் போக வேண்டும் என்றால் உழைக்க வேண்டும், சிந்திக்க வேண்டும். கணபதி படத்தை கடாசிவிட்டு கர்த்தர் படத்தை வைத்தால் உங்களுக்கு ஃபோட்டோ ஃப்ரேம் செலவு தான் 500ரூபாய் எக்ஸ்ட்ரா ஆகியிருக்குமே தவிர உருப்படியாய் மாற்றம் ஒன்றும் வந்திருக்காது. உங்கள் சோற்றுக்கும், நல் வாழ்வுக்கும் நீங்கள் தான் உழைக்க வேண்டும். கடவுள் உங்களுக்கான substitute அல்ல.. இந்த ஆத்திக பகுத்தறிவு இருந்தால் உங்கள் நம்பிக்கை கடவுள் மீது மட்டும் தான் இருக்கும், மதத்தின் மீது அல்ல...  (நன்றி - சிவகாசிக்காரன் இணையம்)


சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Apr 01, 2014 9:34 pm

சதாசிவம் wrote:[link="/t108968-topic#1055585"] விவரங்கள் தெரியாத வரை தான் அவர்கள் தலைமைக்கு கட்டுப்பட்டு இருப்பர். அவர்களுக்கு சொல்லி கொடுப்பதில் முக்கிய விஷயமாக இருப்பது அடிபணிவது மட்டுமே.

துரதிஷ்டமாக சில மதங்களும் இந்த நடைமுறையை பயன்படுத்துகிறது. இதன் விளைவு நான் சொல்லுவது சரி, அடுத்தவன் சொல்லும் அனைத்தும் தவறு என்று கொஞ்சமும் சுய சிந்தனை இல்லாமல் அனைத்தையும் போலி என்று எண்ணும் அவல நிலையில் அவர்கள் உள்ளனர். காட்டில் தெரியும் பல விலங்குகளில் மந்தையாகத் திரியும் விலங்குகள் அனைத்துமே தலைமைக்கு கட்டுப்பட்டவை. சுயமாக செயல்படத் தெரியாதவை. அது போல் மனிதரில் சிலர் மந்தைகளை உருவாக்கி அதில் சுகம் காண நினைக்கின்றனர். இது கூட்டத்தை நம்பி வாழ்பவை, தன் பலத்தை நம்பி வாழ்பவை அல்ல.

'தி ஹிந்து'வில் 31 மார்ச் அன்று வந்த செய்தி. தங்களின் கருத்துக்கு சான்று பகர்வது போல் இருந்தது.

அண்ணே ஒவ்வொருத்தரும் லட்சாதிபதி!

சென்னை கீழ்ப்பாக்கத்தில் தி.மு.க கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிக்காக பிஷப்புகள் கூட்டு ஜெபம் நடத்தினர். இதில் மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது “அண்ணன் ஒரு நிமிடம்” என்று குறுக்கிட்டு பேசிய சமூகநீதி இயக்க நிறுவனத்தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம், “இங்கே கூட்டம் குறைவாக இருப்பதாக நினைக்காதீங்க. ஒவ்வொரு பிஷப்பிடமும் லட்சம் ஓட்டுகள் இருக்கு. ஒவ்வொருத்தரும் லட்சாதிபதி” என்றார். உடனே தயாநிதி மாறன், “அண்ணன் நீங்க கோடீஸ்வரர். பல லட்சாதிபதிகளை கையில் வைத்திருக்கிறீர்கள்” என்று சொல்ல... அனைவரும் கைதட்டி ரசித்தனர். (தி இந்து, திங்கள், மார்ச் 31, 2014)



pkselva
pkselva
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 19/02/2013

Postpkselva Mon Apr 14, 2014 9:07 am

arimaiyana pathivu.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Apr 14, 2014 9:14 am

pkselva wrote:[link="/t108968-topic#1058244"]arimaiyana pathivu.

இந்தப்பதிவையும் படியுங்கள் நண்பரே!
http://www.eegarai.net/t97836-topic#947500

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 14, 2014 9:59 am

உலகிலேயே அனைத்து மதங்களையும் அனுசரித்து
வாழும் மக்கள் இந்துக்கள் மட்டும் தான்..
-
 மதமாற்ற வியாபாரம்! - Page 2 103459460 

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக