புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வீட்டுக்கு ஒரு மாமியார் ! Poll_c10வீட்டுக்கு ஒரு மாமியார் ! Poll_m10வீட்டுக்கு ஒரு மாமியார் ! Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
வீட்டுக்கு ஒரு மாமியார் ! Poll_c10வீட்டுக்கு ஒரு மாமியார் ! Poll_m10வீட்டுக்கு ஒரு மாமியார் ! Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
வீட்டுக்கு ஒரு மாமியார் ! Poll_c10வீட்டுக்கு ஒரு மாமியார் ! Poll_m10வீட்டுக்கு ஒரு மாமியார் ! Poll_c10 
6 Posts - 18%
i6appar
வீட்டுக்கு ஒரு மாமியார் ! Poll_c10வீட்டுக்கு ஒரு மாமியார் ! Poll_m10வீட்டுக்கு ஒரு மாமியார் ! Poll_c10 
3 Posts - 9%
Jenila
வீட்டுக்கு ஒரு மாமியார் ! Poll_c10வீட்டுக்கு ஒரு மாமியார் ! Poll_m10வீட்டுக்கு ஒரு மாமியார் ! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
வீட்டுக்கு ஒரு மாமியார் ! Poll_c10வீட்டுக்கு ஒரு மாமியார் ! Poll_m10வீட்டுக்கு ஒரு மாமியார் ! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வீட்டுக்கு ஒரு மாமியார் ! Poll_c10வீட்டுக்கு ஒரு மாமியார் ! Poll_m10வீட்டுக்கு ஒரு மாமியார் ! Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
வீட்டுக்கு ஒரு மாமியார் ! Poll_c10வீட்டுக்கு ஒரு மாமியார் ! Poll_m10வீட்டுக்கு ஒரு மாமியார் ! Poll_c10 
88 Posts - 35%
i6appar
வீட்டுக்கு ஒரு மாமியார் ! Poll_c10வீட்டுக்கு ஒரு மாமியார் ! Poll_m10வீட்டுக்கு ஒரு மாமியார் ! Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
வீட்டுக்கு ஒரு மாமியார் ! Poll_c10வீட்டுக்கு ஒரு மாமியார் ! Poll_m10வீட்டுக்கு ஒரு மாமியார் ! Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
வீட்டுக்கு ஒரு மாமியார் ! Poll_c10வீட்டுக்கு ஒரு மாமியார் ! Poll_m10வீட்டுக்கு ஒரு மாமியார் ! Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
வீட்டுக்கு ஒரு மாமியார் ! Poll_c10வீட்டுக்கு ஒரு மாமியார் ! Poll_m10வீட்டுக்கு ஒரு மாமியார் ! Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
வீட்டுக்கு ஒரு மாமியார் ! Poll_c10வீட்டுக்கு ஒரு மாமியார் ! Poll_m10வீட்டுக்கு ஒரு மாமியார் ! Poll_c10 
7 Posts - 3%
Guna.D
வீட்டுக்கு ஒரு மாமியார் ! Poll_c10வீட்டுக்கு ஒரு மாமியார் ! Poll_m10வீட்டுக்கு ஒரு மாமியார் ! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
வீட்டுக்கு ஒரு மாமியார் ! Poll_c10வீட்டுக்கு ஒரு மாமியார் ! Poll_m10வீட்டுக்கு ஒரு மாமியார் ! Poll_c10 
2 Posts - 1%
prajai
வீட்டுக்கு ஒரு மாமியார் ! Poll_c10வீட்டுக்கு ஒரு மாமியார் ! Poll_m10வீட்டுக்கு ஒரு மாமியார் ! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டுக்கு ஒரு மாமியார் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 26, 2014 8:11 pm

சிவராமன், விரக்தியுடன் காணப்பட்டான். குடும்பத்தில், அப்பப்போ சின்ன சின்ன பிரச்னைகள், வானவில் போல் வந்தாலும், உடனே, மறைந்து விடும். ஆனால், இப்போது, ஒரு வாரமாகியும் மனைவிக்கும், அவனுக்கும் ஏற்பட்ட பிரச்னை, ஒரு முடிவுக்கும் வரவில்லை. மனைவியின் சுயரூபம், விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.ஜெயதேவிக்கு, மாமியார் என்றாலே, விஷம்; பார்க்கும் போதெல்லாம், முகச்சுளிப்பு. இருவருக்கும் சண்டை வந்துவிட்டால், ஜெய தேவிக்கு, வாயிலிருந்து தகாத வார்த்தைகளாகத் தான் வரும். மருமகளின் குணம், பேச்சு, நடவடிக்கைகள் குறித்து, புலம்பி தீர்ப்பாள் சிவராமனின் அம்மா சாந்தம்மாள்.

'ஏண்டா சிவராமா... உன் பொண்டாட்டி வாய்க்கு, பெரிய பூட்டா போடுடா. அவ பாட்டுக்கு, எக்குதப்பா மரியாத இல்லாம பேசுறாடா...' மகனிடம், ஆவேசப்பட்டாள்.'ஏன்ம்மா, இன்னிக்கு என்ன நடந்திச்சு?' என்று, கேட்டான் சிவராமன்.

'நீ புதுசா வாங்கிட்டு வந்திருக்கிற, வாஷிங்மெஷின்ல்ல, என் துணிமணிகள போடக் கூடாதாம், உன் பொண்டாட்டி சொல்றா...
'எனக்கென்ன, நிறைய துணிமணிகளா கொட்டிகிடக்கு; இருக்கிறதே நாலு சேல. அதுல ரெண்டு சேல தான் அழுக்கு. 'சோப்பு வாங்கி, கையால, துவைச்சு போடுங்க'ன்னு, என் சேலைய, தூக்கி எறிஞ்சிட்டாடா...' என்று சொன்ன சாந்தம்மாளின் கண்கள், கண்ணீரை சிந்தின.

'சரி, நான் பாத்துக்கிறேன்...' என்று சொல்லி, சமையல் அறைக்கு போனான். இது குறித்து, மனைவியிடம் கேட்டதற்கு, 'வாஷிங்மெஷின்ல அளவுக்கதிகமா துணிகள போடக்கூடாது; ரெண்டு சேலைதானே, கையால துவைத்து போட்டுக்கிட்டா என்னவாம்... இதச் சொன்னதுல, என்ன குத்தத்த கண்டுட்டீங்க?' என்றாள் ஜெயதேவி.
'ஏய்... அம்மாவுக்கு ரொம்ப வயசாயிடுச்சு. அவங்களால துவைக்க முடியாதுன்னுதானே, இந்த வாஷிங்மெஷினையே வாங்கிட்டு வந்தேன்...'

'ஓ அப்படின்னா... உங்க அம்மா மேல இருக்குற கரிசனத்தாலதான், வாங்கிட்டு வந்துருக்கீங்க... எனக்காக இல்லே; அப்படித்தானே?'
'அப்படியில்ல தேவி; நீயும், இந்த வீட்ல எல்லா வேலையயும் இழுத்து போட்டு பாக்குறே. அந்த சுமைய குறைக்கிறதுக்கும், வயசான அம்மாவிற்கும் சேத்துதான்... நம்ம துணிகளோடு சேத்து, அவங்க துணியை போடுறதுனால உனக்கு என்ன கஷ்டம்? மெஷினு தானே துவைச்சு, அலசப்போகுது... சரி சரி... எனக்கு, சூடா ஒரு கப் காபி கொண்டு வா...' என்று சொல்லி, அன்றைக்கு வந்த நியூஸ் பேப்பரை எடுத்து, படிக்க ஆயத்தமானான்.'உங்க அம்மாவுக்காகத்தானே பரிஞ்சிகிட்டு பேசுறீங்க... அவங்ககிட்டயே காபி போட்டுத்தரச் சொல்லுங்க...' என்று, முகத்தை சுளித்து, 'டிவி'யை, ஆன் செய்தாள் ஜெயதேவி.

பாலைக் குடித்துக் கொண்டிருந்த, அவர்களின் ஐந்து வயது மகன், கைத்தவறி பாலை கொட்டி விட்டான். இதை பார்த்ததும், 'சனியன்... போதாக்குறைக்கு இது வேறே...' என்று கடிந்து, தலையில், 'ணங்'கென்று குட்டினாள் ஜெயதேவி. வலியில் அவன், சத்தம் போட்டு அழுதான். அதையும் பொருட்படுத்தாமல், மூச்சிரைத்தப்படி வெறுமனே, 'டிவி'யை பார்த்தாள்.
சிவராமன், அழுத பிள்ளையை தூக்கி, தோளில் போட்டு, மொட்டை மாடிக்கு போனான்.சிந்தி கிடந்த பாலை, சுத்தம் செய்தாள் சாந்தம்மாள்.மறுநாள், சிவராமன் ஆபீசுக்கு போன பின்பு, குழந்தையை ஸ்கூல்ல விட்டுட்டு, யாருகிட்டேயும் சொல்லாம, அவ அம்மா வீட்டிற்கு போய் விட்டாள் ஜெயதேவி.

கணவன் மற்றும் மாமியாரை பற்றி, தன் அம்மாவிடம் குற்றப் பத்திரிகை வாசித்தாள்...
'அம்மா... அவரு, அவங்க அம்மா பேச்சை தான் கேட்கிறாரு; என்னை மதிக்கறதேயில்ல...'
'குடும்பம்ன்னா அப்படித்தாண்டி இருக்கும். நாமதான் கொஞ்சம் அனுசரித்துப் போகணும்...'
'இதுக்கு மேலேயும் அனுசரிச்சுப் போகணுமா... நான், எம்.எஸ்சி., - பி.எட்., அவரு, வெறும், பிளஸ் 2. எனக்கும், அவருக்கும் கொஞ்சம் கூட படிப்பு மேட்சாகல; நான் அனுசரிச்சு போகலயா...'

'தேவி அனுசரிச்சு போறதுக்கு, படிப்பு ஒரு விஷயமில்ல; மாப்பிள்ளைக்கு தங்கக்குணம். அவரோட குணத்திற்காகத்தான் படிப்பு, அந்தஸ்து பாக்காம, அவருக்கு உன்ன, கட்டி வச்சோம். இந்த படிப்பு விஷயத்த பெரிசாக்கி, உன் வாழ்க்கைக்கே உலை வச்சுக்காதடி...' என்று, 'அட்வைஸ்' செய்து, சமாதானப்படுத்த முயன்றாள் அம்மா.'போம்மா நீ... அப்படியொரு, 'ஈகோ' எனக்கிருந்தால், நீங்க ஒரு பேரனை பாத்திருக்க முடியுமா... நான் வாழா வெட்டியாவுல, இந்த வீட்டுக்கு வந்திருப்பேன்...'

தொடரும்..............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 26, 2014 8:13 pm

அப்படியில்லடி... நீ, உன் புருஷன புரிஞ்சுக்கணும். காலையில வேலைக்கு போறவரு என்னைக்காவது லேட்டா வந்துருக்காரா, குடிச்சுட்டு வந்து உன்னை அடிச்சு கொடுமப்படுத்துறாரா... சில ஆம்பளைங்க, மனைவி மீது பாசம் இருக்குற மாதிரி நடிச்சுட்டு, மத்த பொம்பளைங்க கூட ஊர் சுத்துவாங்க, அப்படிச் செய்யுறாரா... உன் முந்தானைக்குள்ள சுருண்டு கிடக்குற மனுஷன ஏண்டி அடிக்கடி குத்தம் சொல்றே...'
'நீ சொல்றது சரிதான்ம்மா; ஆனா, வீட்ல ஒரு கிழவி இருக்கே... அதத்தான், என்னால பொறுத்துக்க முடியல. எங்கேயும் போயி தொலையவும் மாட்டேங்குது...'

'சரி சரி... ஸ்கூல் விடுற நேரமாச்சு. புள்ளய கூட்டிட்டு வீட்டுக்கு போ...' என்று, அம்மா சொன்னதும், மனக்குழப்பத்தோடு, பள்ளிக்கூடத்தை நோக்கி நடந்தாள்.

'ச்சே... என் பாரத்த குறைக்கலாம்ன்னு, அம்மா வீட்டிற்கு வந்தா, எனக்குத்தான் அட்வைஸ்! என் கதைய யாருகிட்டே போய் சொல்றது... மாமியார் மேல இருக்கற கோபத்த, புருஷன் மேல தான் காட்ட வேண்டிருக்கு; இதனால, அவரும் என்னை, வில்லன் மாதிரி முறைக்கிறாரு. ஆமை புகுந்த வீடு விளங்காதுன்னு சொல்வாங்க. என் மாமியார் இருக்கிற வரைக்கும் நிச்சயம், இந்த வீடு விளங்கப்போறதில்ல...' மனதிற்குள், புலம்பிக் கொண்டு போனாள்.''சிவராமா... ஏன் டல்லா இருக்க?'' அலுவலக நண்பன் கார்த்திக் கேட்டான்.''ஒண்ணுமில்லடா,'' சமாளித்தான் சிவராமன்.
''டேய் நானும் ஒரு வாரமா பாக்றேன்... பிரேக் டைம்ல எங்ககூட வர்றதில்லை; தனியா வர்ற, தனியா போற... என்னடா பிரச்னை உனக்கு?'' என்று, கேட்டான் கார்த்திக்.

''எல்லாம் பேமிலி மேட்டர் தான்டா. ஆபீசுக்கு வந்தா டென்ஷன், பரபரப்பு; வீட்டுக்கு போனா, பொண்டாட்டியோட தொல்ல. இந்த ரெண்டுக்கும் மத்தியில, நான் படுற அவஸ்தை இருக்கே... ரொம்ப கொடுமைடா. எங்காவது, கண்காணாத இடத்துக்கு, ஓடி போயிடலாமான்னு தோணுதுடா,'' சொல்லும் போதே, கண்கள் சிவந்து, கண்ணீர் கசிந்தது, சிவராமனுக்கு.''நீ எதையுமே சுலபமா எடுத்துக்குவியே... என்னடா பிரச்னை சொல்லு,'' என்றான்.சிவராமன், தன் குடும்ப விஷயத்தை சொன்னான்.
''இதுக்குப் போயாடா கவலப்பட்டுக்கிட்டு இருக்கே... நான் சொல்றபடி செய்யி; அப்பறம் பாரு, உன் மனைவி நடந்துக்கிறத,'' என்று கூறி, யோசனையை சொல்ல ஆரம்பித்தான்.

சிவராமன் வீட்டுக்குள் வந்ததும், வராததுமா, ''தேவி, நீ சீக்கிரமா ஏதாவது ஒரு ஸ்கூலுக்கு வேலைக்கு போகப் பாரு. என் ஒருத்தன் சம்பாத்தியத்தல, குடும்பம் நடத்தறது ரொம்ப கஷ்டமா இருக்கு,'' என்றான்.
''ஏன் திடீரென்னு என்னை வேலைக்கு போகச் சொல்றீங்க?''''அதான் சொன்னேனே... வருமானம் பத்தலன்னு.''

ஜெயதேவி அவனை முறைத்துப் பார்த்தாலும், யோசித்துப் பார்த்ததில், அவன் சொல்வது, சரின்னு பட்டது. தன் பையன் படிக்கும் பள்ளியில், பயோடேட்டாவை கொடுத்தாள்; நிர்வாகம் ஏற்றுக் கொண்டது. பத்து நாட்களுக்கு பின், பள்ளியில் சேர்ந்தாள்.

ஜெயதேவி, வேலைக்கு போனபின், வீடு, பள்ளி என, கூடுதல் சுமையாகி விட்டது. இருபத்தி நான்கு மணி நேரமே பத்தாது என்ற நிலையில், மாமியாரிடம் சண்டை போட நேரமில்லை.
ஒரு மாதத்திற்கு பின், பள்ளியில், மதிய உணவு வேளை; ஆசிரியர் அறையில்... ''இன்னிக்கு ஏன் ரமா டீச்சர் வரல?'' என்று, சாப்பிட்டபடியே கேட்டாள் அறிவியல் டீச்சர் .

''அவ ஹஸ்பண்ட் கூட சண்டை; நேத்திக்கு அவ புருஷன் குடிச்சிட்டு வந்து, தகராறு செய்திருக்கார். இவ தட்டிக் கேட்டதுக்கு, அடிச்சிட்டாராம். அதனாலதான், இன்னிக்கு லீவு,'' என்று சொன்னாள் தமிழ் டீச்சர்.
''உங்களுக்கு எப்படி தெரியும் டீச்சர்?'' கணக்கு டீச்சர் கேட்டாள்.''ஒரு புக்கு அவங்ககிட்ட கேட்டிருந்தேன். அத மறக்காம எடுத்திட்டு வாங்கன்னு சொல்றதுக்காக, போன் செய்தேன். அப்ப சொன்னாங்க.

''இந்த புருஷன்மார்களே ரொம்ப மோசம் டீச்சர். கைநீட்டி அடிக்கிற அளவுக்கு கேவல மாயிட்டோமா நாம... தண்ணியடிச்சிட்டா, மிருகமாயிடுவாங்களா... ச்சே... எனக்கு ரமா டீச்சர நினைச்சா ரொம்ப வருத்தமா இருக்கு,'' என்று, பரிதாபப்பட்டாள் தமிழ் டீச்சர்.

''என் வீட்டுக்காரர் எவ்வளவோ பரவாயில்ல. தண்ணியடிச்சிட்டா, சைலண்டா வந்து படுத்துக்குவாரு. காலையில, நான் ஏதாவது சொல்லிடப்போறேனோன்னு பயந்துக்கிட்டு, எனக்கு முன்னாடியே எழுந்து, பாத்திரங்கள கழுவி வச்சிடுவாரு,'' என்று கணக்கு டீச்சர் சொல்ல, எல்லாரும் சிரித்தனர்.
''என் வீட்டுக்காரரு இருக்காரே, அவங்க அம்மா வீட்ல இருக்குற வரைக்கும் ஒழுக்கமா இருப்பாரு. அவங்க அம்மா, எங்கேயாவது ஊருக்கு போயிட்டாங்கன்னா, அன்னிக்கு அவருக்கு தீபாவளிதான்! பார்ல பிரண்ட்ஸ்ங்க கூட கூத்தடிச்சுட்டு, நைட்ல எத்தனை மணிக்கு வருவார்ன்னே சொல்ல முடியாது. என் கணவரோட கொட்டத்தை அடக்க, என் மாமியார் எப்போ வருவாங்கன்னு காத்துக்கிட்டு இருப்பேன்,'' என்று, இன்னொரு டீச்சர் சொன்னாள்.

உடனே, தமிழ் டீச்சர் வேகமாக இடைமறித்து,''இதே மாதிரிதான், எங்க பக்கத்து வீட்டுக்காரரு ஒருத்தர்; சரியான அம்மா புள்ள. அவங்க அம்மானாலே, ஒரு பாசம், மரியாதை, பயம். அவங்க அம்மா சொல்லை தட்டமாட்டாராம். ஆபீசுக்கு போயிட்டு, ஒரு நிமிஷம் லேட்டா வந்தாக்கூட, அவங்க அம்மாதான் கேள்வி கேட்பாங்களாம். கொஞ்ச நாளைக்கு முன்னால, அந்த அம்மா உடம்புக்கு முடியாம இறந்திட்டாங்க. இப்ப அவரு, ரொம்பவே மாறிட்டாராம். தட்டி கேட்க ஆளில்ல; பொண்டாட்டி மேல பயமில்ல. குடிக்கு அடிமையாகி, பொம்பள பழக்கமும் வந்துருச்சாம்; நைட் ஒரு மணிக்கு மேலதான் வருவாராம். 'எவக்கூட கூத்தடிச்சிட்டு இந்த நேரத்தில வர்றீங்க'ன்னு அவர் மனைவி கத்துற சத்தம், எங்க வீட்டுக்கு கேட்கும். இந்த காலத்துல, கணவன கைக்குள்ள போட்டுக்கணும்ன்னா, வீட்டுல மாமியார் கட்டாயம் இருக்கணும்,'' என்று, சொன்னதும், அமைதியா சாப்பிட்டபடியே கேட்டு கொண்டிருந்த ஜெயதேவிக்கு, 'சுருக்'என்று, மனதை தைத்தது.
'மனசு சரியில்ல, பையனக் கூட்டிட்டு வீட்டுக்கு போறேன். அரை நாள் விடுப்பு வேணும்...' என்று, அனுமதி வாங்கி, கிளம்பினாள்.

'ஒவ்வொரு குடும்பத்துக்குள்ளேயும், எத்தனை பிரச்னை இருக்கு... நாமதான், இவ்வளவு நாளும், வெளியுலகம் தெரியாம இருந்திருக்கோம். பெரியவங்க வீட்டுல இருந்தா, அவங்களுக்கு கட்டுபட்டு, புருஷன்மாருக கெட்ட வழியில போக மாட்டாங்கன்றது எனக்கு தெரியாம போச்சே' என்று நினைத்துக் கொண்டே, பையனோடு பழக்கடைக்குள் நுழைந்தாள்.

பழங்களை வாங்கியவள், அருகிலிருந்த ஒரு மெடிக்கல் ஸ்டோரில், ஹார்லிக்ஸ் பாட்டில் வாங்கினாள்.
''அம்மா... இதெல்லாம் யாருக்குமா வாங்கறோம்,'' என்று, கேட்டான் பையன்.

''உன் அப்பத்தாவுக்குதான்; அவங்க எந்த நோயுமில்லாம, நூறு வருஷம் வாழணும்,'' என்றாள் ஜெயதேவி.
மனைவியின் மாற்றத்தை அறிந்த சிவராமன், நண்பனை போனில் தொடர்பு கொண்டு, ''பொண்ணுங்க நாலு சுவத்துக்குள்ளே முடங்கி கிடக்காம, வெளில போய், நாலு விஷயத்த தெரிஞ்சிக்கிட்டாத்தான் குடும்பத்துக்குள்ள வரும் பிரச்னைக தீரும்ங்கற, உன் யோசனைக்கு, ரொம்ப நன்றி,'' என்றான்.

பால் கண்ணன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Mar 27, 2014 1:48 pm

நல்ல கதை .... பகிர்வுக்கு நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 27, 2014 2:06 pm

ரெண்டு பெண்களுக்குள்ள பிரச்சினை வந்து புரிஞ்சு பிரச்சினை தீர - ஒரு ஆண் அவன் வாழ்க்கைய இழக்க வேண்டி இருக்கே புன்னகை




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 27, 2014 3:21 pm

அருமையான கதைமா பகிர்வுக்கு நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 28, 2014 6:31 am

அனுபவங்கள் பலவிதம்..!
-
 வீட்டுக்கு ஒரு மாமியார் ! 3838410834 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக