புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 2 Poll_c1030 வகை குட்டீஸ் ரெசிபி - Page 2 Poll_m1030 வகை குட்டீஸ் ரெசிபி - Page 2 Poll_c10 
40 Posts - 63%
heezulia
30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 2 Poll_c1030 வகை குட்டீஸ் ரெசிபி - Page 2 Poll_m1030 வகை குட்டீஸ் ரெசிபி - Page 2 Poll_c10 
19 Posts - 30%
வேல்முருகன் காசி
30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 2 Poll_c1030 வகை குட்டீஸ் ரெசிபி - Page 2 Poll_m1030 வகை குட்டீஸ் ரெசிபி - Page 2 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 2 Poll_c1030 வகை குட்டீஸ் ரெசிபி - Page 2 Poll_m1030 வகை குட்டீஸ் ரெசிபி - Page 2 Poll_c10 
2 Posts - 3%
viyasan
30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 2 Poll_c1030 வகை குட்டீஸ் ரெசிபி - Page 2 Poll_m1030 வகை குட்டீஸ் ரெசிபி - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 2 Poll_c1030 வகை குட்டீஸ் ரெசிபி - Page 2 Poll_m1030 வகை குட்டீஸ் ரெசிபி - Page 2 Poll_c10 
232 Posts - 42%
heezulia
30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 2 Poll_c1030 வகை குட்டீஸ் ரெசிபி - Page 2 Poll_m1030 வகை குட்டீஸ் ரெசிபி - Page 2 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 2 Poll_c1030 வகை குட்டீஸ் ரெசிபி - Page 2 Poll_m1030 வகை குட்டீஸ் ரெசிபி - Page 2 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 2 Poll_c1030 வகை குட்டீஸ் ரெசிபி - Page 2 Poll_m1030 வகை குட்டீஸ் ரெசிபி - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 2 Poll_c1030 வகை குட்டீஸ் ரெசிபி - Page 2 Poll_m1030 வகை குட்டீஸ் ரெசிபி - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 2 Poll_c1030 வகை குட்டீஸ் ரெசிபி - Page 2 Poll_m1030 வகை குட்டீஸ் ரெசிபி - Page 2 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 2 Poll_c1030 வகை குட்டீஸ் ரெசிபி - Page 2 Poll_m1030 வகை குட்டீஸ் ரெசிபி - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 2 Poll_c1030 வகை குட்டீஸ் ரெசிபி - Page 2 Poll_m1030 வகை குட்டீஸ் ரெசிபி - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 2 Poll_c1030 வகை குட்டீஸ் ரெசிபி - Page 2 Poll_m1030 வகை குட்டீஸ் ரெசிபி - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 2 Poll_c1030 வகை குட்டீஸ் ரெசிபி - Page 2 Poll_m1030 வகை குட்டீஸ் ரெசிபி - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

30 வகை குட்டீஸ் ரெசிபி


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 21, 2014 1:07 am

First topic message reminder :

பிரெட் க்ரிஸ்பிஸ்


தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 10, வெங்காயம் - 2, தக்காளி - 3, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், கடுகு, பெருஞ்சீரகம் - தலா கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப), பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 2 1
செய்முறை: பிரெட் ஸ்லைஸ்களை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை மிகவும் பொடியாக நறுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு,  பிரெட் துண்டுகளை வறுத்து எடுத்து, தனியே வைக்கவும். பின்னர் வாணலியில் 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, பெருஞ்சீரகம் தாளித்து, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி, உப்பு, இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு கிளறி. அதில் அரை கப் தண்ணீர் ஊற்றிச் சூடாக்கவும். ஒரு கொதி வந்ததும் வறுத்து வைத்துள்ள பிரெட் துண்டுகள், கொத்தமல்லித் தழை சேர்த்துக் கிளறி, இறக்கவும்.

இது, லஞ்ச் பாக்ஸில் வைத்து அனுப்ப ஏற்றது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 21, 2014 1:36 am

குயிக் வெஜ் புலாவ்


தேவையானவை:  பாசுமதி அரிசி - 2 கப், பால் - 2 கப், பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் (இரண்டும் சேர்த்து) - ஒரு கப், பச்சைப் பட்டாணி - ஒரு கைப்பிடி அளவு, வெங்காயம், பச்சை மிளகாய் - தலா 2, இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை - தலா ஒன்று, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 2 11
செய்முறை: வெங்காயம், பச்சை மிளகாயை நீள நீளமாக நறுக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பிரிஞ்சி இலை, பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து... வெங்காயம், பச்சை மிளகாய், கொஞ்சம் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து மேலும் நன்கு வதக்க வும். இதனுடன் பால், தண்ணீர் ஒரு கப், பாசுமதி அரிசி, தேவையான உப்பு சேர்த்து நன்றாக கிளறி, குக்கரை மூடவும். பின்னர் நன்கு ஆவி வந்ததும் 'வெயிட்’ போட்டு, அடுப்பை 'சிம்’மில் வைத்து 10 நிமிடம் கழித்து இறக்கி.. பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை தூவி, பரிமாறவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 21, 2014 1:38 am

கார்ன் ஸ்டஃப்டு சப்பாத்தி


தேவையானவை:  கோதுமை மாவு - 2 கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், வேகவைத்து உதிர்த்த சோளம் - ஒரு கப்,  பச்சை மிளகாய், பூண்டு - தலா 2 (விழுதாக அரைத்துக் கொள்ளவும்), நெய், எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.
30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 2 12
செய்முறை:  வேகவைத்து உதிர்த்த சோளத்தை மிக்ஸியில் சற்று கொர கொரப்பாக அரைத்துக்கொள்ளவும். கோதுமை மாவுடன் சிறிதளவு நெய், உப்பு, தேவையான நீர் சேர்த்துப் பிசைந்துகொள்ளவும். வாணலியில் எண் ணெய் விட்டு, காய்ந்ததும் பச்சை மிளகாய் - பூண்டு விழுதைப் போட்டு வதக்கி... அரைத்த சோளம், உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். ஆறிய தும் இந்த கலவையை சின்னச் சின்ன உருண்டைகளாக தயார் செய்யவும்.

பிசைந்து வைத்துள்ள கோதுமை மாவில் இருந்து சிறிதளவு எடுத்து கிண்ணம் போல் செய்து, இதனுள் கார்ன் விழுது உருண்டையை வைத்து மூடி, மெல் லிய சப்பாத்தியாக தேய்க்கவும். தோசைக்கல்லில் சப்பாத்தியைப் போட்டு, சுற்றிலும் எண்ணெய் - நெய் கலவையை ஊற்றி, வேகவிட்டு எடுக்கவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 21, 2014 1:40 am

கலர்ஃபுல் சில்லி பரோட்டா


தேவையானவை:  பரோட்டா - 10, மைதா - அரை கப், சோள மாவு - முக்கால் கப், ஃபுட் கலர் (சிவப்பு) - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறு துண்டு, குடமிளகாய் - ஒன்று, பூண்டு - 6 பல், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.  
30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 2 13
செய்முறை:  வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை மிகவும் பொடியாக நறுக்கவும். குடமிளகாயை நீளநீளமாக, மெல்லியதாக நறுக்கி, வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு லேசாக வதக்கிக் கொள்ளவும்.
மைதாவுடன், அரை கப் சோள மாவு, உப்பு, ஃபுட் கலர் ஆகியவற்றை சேர்த்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். பரோட்டாக்களை சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கி, கரைத்த மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்து எடுத்து தனியே வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வதக்கி... மிளகாய்த்தூள், பொரித்தெடுத்த பரோட்டா துண்டுகள் சேர்த்துக் கிளறவும். மீதமுள்ள கால் கப் சோளமாவை கொஞ்சம் நீர் விட்டு கரைத்து பரோட்டா கலவையில் ஊற்றிக் கிளறி இறக்கவும். வதக்கி வைத்த குடமிளகாயை மேலே தூவவும்.
தயிர் பச்சடி, இதற்கு தொட்டுக்கொள்ள ஏற்றது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 21, 2014 1:42 am

இட்லி மஞ்சூரியன்


தேவையானவை:  இட்லி - 5 அல்லது 6 (விரல் நீள துண்டுகளாக நறுக்கவும்), மைதா மாவு, கடலை மாவு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், சோள மாவு - ஒரு டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், சோயா சாஸ், க்ரீன் சில்லி சாஸ், டொமேட்டோ சாஸ் - தலா ஒரு டீஸ்பூன், கேசரி கலர் - ஒரு சிட்டிகை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு,
30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 2 14
செய்முறை: கடலை மாவு, மைதா மாவு, சோள மாவு, இஞ்சி - பூண்டு விழுது, உப்பு, மிளகாய்த்தூள், கேசரி கலர், சோயா சாஸ், க்ரீன் சில்லி சாஸ், டொமேட்டோ சாஸ் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, தேவையான தண்ணீர் சேர்த்து, கெட்டியாக கரைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் இட்லித் துண்டுகளை மாவுக் கரைசலில் முக்கியெடுத்து, எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். மேலே பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையைத் தூவவும்.

இதற்கு தக்காளி சாஸ் தொட்டு சாப்பிட்டால்... சுவை அபாரமாக இருக்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 21, 2014 1:44 am

சாஃப்ட் பரோட்டா


தேவையானவை:  மைதா மாவு - 2 கப், தயிர், பால் - தலா கால் கப், சமையல் சோடா - கால் டீஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 2 15
செய்முறை:  மைதா மாவுடன் நெய், சர்க்கரை, உப்பு, சமையல் சோடா சேர்த்துப் பிசிறி, தயிர், பால் மற்றும் தேவையான நீர் சேர்த்து நன்கு பிசையவும். அதன் மீது ஒரு டீஸ்பூன் எண்ணெய் தடவி 3 மணி நேரம் ஊறவிடவும். ஊறிய மாவில் ஒரு உருண்டை எடுத்து மெல்லியதாக, வட்டமாக திரட்டி அதன் மீது பரவலாக எண்ணெய் தடவி மடித்து சுருட்டவும் (புடவை கொசுவம் போல). பிறகு, சப்பாத்தி குழவியால் சற்று கனமாகத் தேய்த்து தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் எண்ணெய் ஊற்றி சுட்டு எடுக்கவும். இதேபோல 4, 5 பரோட்டாக்களை சுட்டு ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து இரண்டு கைகளாலும் இரண்டு ஓரங்களிலும் சேர்த்துத் தட்டி எடுத்து வைக்கவும்.

வெஜ் குருமா இதற்கு சரியான ஜோடி.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 21, 2014 1:45 am

பீஸ் ஸ்டஃப்டு சப்பாத்தி


தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், பச்சைப் பட்டாணி - ஒரு கப் (வேகவைத்து நீரை வடிக்கவும்), கொத்த மல்லித் தழை - அரை கட்டு, பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறு துண்டு, நெய் - எண்ணெய் கலவை, உப்பு - தேவையான அளவு.
30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 2 16
செய்முறை: கோதுமை மாவுடன் சிறி தளவு உப்பு, தேவையான நீர் சேர்த்துப் பிசையவும், வேகவைத்த பச்சை பட்டாணியுடன் கொத்தமல்லித் தழை, இஞ்சி, பச்சை மிளகாய், சிறிதளவு உப்பு சேர்த்து அரைத்து. சின்னச் சின்ன உருண்டைகள் தயார் செய்யவும்.

பிசைந்து வைத்துள்ள கோதுமை மாவை சிறிதளவு எடுத்து கிண்ணம் போல் செய்யவும். அதனுள் பட்டாணி விழுது உருண்டையை வைத்து மூடி (வெளியே விழுது வராதபடி) சப்பாத்தி களாக தேய்க்கவும்.  தோசைக்கல்லில் சப்பாத்தியைப் போட்டு சுற்றிலும் நெய் - எண்ணெய் கலவையை ஊற்றி, இரு புறமும் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும். பீஸ் ஸ்டஃப்டு சப்பாத்தியை அப்படியே சுருட்டி லஞ்ச் பாக்ஸில் வைத்து கொடுத்து அனுப்பலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 21, 2014 1:46 am

ஓட்ஸ்  கேழ்வரகு ரொட்டி


தேவையானவை:  ஓட்ஸ், கேழ்வரகு மாவு - தலா ஒரு கப், மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் - தலா ஒன்று (மிகவும் பொடியாக நறுக்கவும்), கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பொட்டுக்கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை - சிறிதளவு, தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன், நெய், உப்பு - தேவையான அளவு
30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 2 17
செய்முறை:  கேழ்வரகு மாவு, ஓட்ஸுடன் நெய்யைத் தவிர எல்லா பொருட்களையும் சேர்த்து சிறிதளவு நீர் விட்டுக் கலந்து நன்கு பிசையவும். கொஞ்சம் மாவை எடுத்து சிறு உருண்டயாக்கி, வாழையிலை (அ) பிளாஸ்டிக் கவரில் நெய் தடவி, அதன்மீது உருண்டையை வைத்து ரொட்டியாக தட்டவும். தோசைக்கல்லின் மீது நெய் தடவி, ரொட்டியைப் போட்டு, சுற்றிலும் நெய் விட்டு, திருப்பிப் போட்டு எடுக்கவும்.

இதற்கு, ஃப்ரூட் ஜாம் பெஸ்ட் காம்பினேஷன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 21, 2014 1:47 am

பச்சைப்பயறு கட்லெட்


தேவையானவை: உருளைக்கிழங்கு - ஒன்று, முளைகட்டிய பச்சைப்பயறு - கால் கப், சாட் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கி, வேகவைத்த கேரட், பீன்ஸ், கோஸ் (மூன்றும் சேர்த்து) - ஒரு கப், வேகவைத்த பச்சைப் பட்டாணி - ஒரு கைப்பிடி அளவு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை - சிறிதளவு, பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), வறுத்துப் பொடித்த சீரகத்தூள் - அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 2 18
செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும் முளைகட்டிய பச்சைப்பயறை சேர்த்து வதக்கவும். பிறகு, பயறுடன் வேகவைத்த காய்கறிகள், பச்சைப் பட்டாணி, சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், பச்சை மிளகாய், கொத்த மல்லித் தழை, மசித்த உருளைக்கிழங்கு, சோள மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்துப் பிசைந்து, சின்னச் சின்ன கட்லெட்டுகளாக தட்டி... தவாவில் சிறிதளவு எண்ணெய் விட்டு, கட்லெட்டுகளைப் போட்டு இரண்டு பக்கமும் பொன்னிறமானதும் எடுத்து, சாட் மசாலாவை லேசாகத் தூவி, சாப்பிடக் கொடுக்கவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 21, 2014 1:49 am

ஹாட் அண்ட் ஸ்வீட் டோக்ளா


தேவையானவை: கடலை மாவு - 2 கப், சர்க்கரை - 2 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், சமையல் சோடா - கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4 (மிகவும் பொடியாக நறுக்கவும்), பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை - சிறிதளவு, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு
30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 2 19
செய்முறை:  கடலை மாவுடன் 2 கப் தண்ணீர், உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கட்டியில்லாமல் கரைக்கவும். சமையல் சோடா மாவில் வெதுவெதுப்பான நீர் விட்டுக் கரைத்து அதை கடலை மாவுக் கரைசலில் ஊற்றி நன்கு கலக்கவும்.

இட்லித்தட்டில் எண்ணெய் தடவி, அதில் இந்த மாவை ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுக்கவும். சூடாக இருக்கும்போதே விரும்பிய வடிவத்தில் துண்டுகள் போட்டு ஆறவிடவும். இதுதான் டோக்ளா. சர்க்கரையை சிறிதளவு தண்ணீரில் கரைத்து, டோக்ளா மீது பரவலாக ஊற்றவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, பச்சை மிளகாய் தாளித்து... தேங்காய் துருவல், கொத்தமல்லித் தழை கலந்து இறக்கி, இந்தக் கலவையை டோக்ளா மீது பரவலாகத் தூவவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 21, 2014 1:50 am

பனீர்  சீஸ் பன்


தேவையானவை:  நல்ல தரமான பன் - 6, சீஸ் துருவல், பனீர் துருவல் - தலா அரை கப், கேரட் துருவல், கோஸ் துருவல் - தலா ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2 (மிகவும் பொடியாக நறுக்கவும்), பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள், உப்பு - சிறிதளவு.
30 வகை குட்டீஸ் ரெசிபி - Page 2 20
செய்முறை:  பன்னை படுக்கை வாக்கில் 2 துண்டாக வெட்டவும். அதன் கீழ்ப்பகுதியில் உள்ள பாகத்தை கத்தியால் கீறி ஒரு சின்ன பள்ளத்தை ஏற்படுத்தவும். பனீர், சீஸ் துருவலுடன் பச்சை மிளகாய், கேரட் துருவல், கோஸ் துருவல், கொத்தமல்லித் தழை, மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும். பன்னின் (கீழ்ப்பகுதி) பள்ளத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் துருவல் கலவையை அழுத்தி வைத்து மேல்பாக பன்னால் மூடவும். தவாவை சூடேற்றி ஸ்டஃப் செய்த பன்னை அதன்மேல் வைத்து, சுற்றிலும் வெண்ணெய் தடவி, வெந்ததும் மறுபுறம் திருப்பிப் போட்டு, நன்கு சூடானதும் எடுத்து சாப்பிடக் கொடுக்கவும்.

லேசாக வறுத்த எள்ளை மேலே தூவியும் பரிமாறலாம்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக