புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குழந்தைகளின் ஐன்ஸ்டைன் Poll_c10குழந்தைகளின் ஐன்ஸ்டைன் Poll_m10குழந்தைகளின் ஐன்ஸ்டைன் Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
குழந்தைகளின் ஐன்ஸ்டைன் Poll_c10குழந்தைகளின் ஐன்ஸ்டைன் Poll_m10குழந்தைகளின் ஐன்ஸ்டைன் Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
குழந்தைகளின் ஐன்ஸ்டைன் Poll_c10குழந்தைகளின் ஐன்ஸ்டைன் Poll_m10குழந்தைகளின் ஐன்ஸ்டைன் Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
குழந்தைகளின் ஐன்ஸ்டைன் Poll_c10குழந்தைகளின் ஐன்ஸ்டைன் Poll_m10குழந்தைகளின் ஐன்ஸ்டைன் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
குழந்தைகளின் ஐன்ஸ்டைன் Poll_c10குழந்தைகளின் ஐன்ஸ்டைன் Poll_m10குழந்தைகளின் ஐன்ஸ்டைன் Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
குழந்தைகளின் ஐன்ஸ்டைன் Poll_c10குழந்தைகளின் ஐன்ஸ்டைன் Poll_m10குழந்தைகளின் ஐன்ஸ்டைன் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
குழந்தைகளின் ஐன்ஸ்டைன் Poll_c10குழந்தைகளின் ஐன்ஸ்டைன் Poll_m10குழந்தைகளின் ஐன்ஸ்டைன் Poll_c10 
2 Posts - 1%
prajai
குழந்தைகளின் ஐன்ஸ்டைன் Poll_c10குழந்தைகளின் ஐன்ஸ்டைன் Poll_m10குழந்தைகளின் ஐன்ஸ்டைன் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
குழந்தைகளின் ஐன்ஸ்டைன் Poll_c10குழந்தைகளின் ஐன்ஸ்டைன் Poll_m10குழந்தைகளின் ஐன்ஸ்டைன் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
குழந்தைகளின் ஐன்ஸ்டைன் Poll_c10குழந்தைகளின் ஐன்ஸ்டைன் Poll_m10குழந்தைகளின் ஐன்ஸ்டைன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளின் ஐன்ஸ்டைன் Poll_c10குழந்தைகளின் ஐன்ஸ்டைன் Poll_m10குழந்தைகளின் ஐன்ஸ்டைன் Poll_c10 
435 Posts - 47%
heezulia
குழந்தைகளின் ஐன்ஸ்டைன் Poll_c10குழந்தைகளின் ஐன்ஸ்டைன் Poll_m10குழந்தைகளின் ஐன்ஸ்டைன் Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
குழந்தைகளின் ஐன்ஸ்டைன் Poll_c10குழந்தைகளின் ஐன்ஸ்டைன் Poll_m10குழந்தைகளின் ஐன்ஸ்டைன் Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
குழந்தைகளின் ஐன்ஸ்டைன் Poll_c10குழந்தைகளின் ஐன்ஸ்டைன் Poll_m10குழந்தைகளின் ஐன்ஸ்டைன் Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
குழந்தைகளின் ஐன்ஸ்டைன் Poll_c10குழந்தைகளின் ஐன்ஸ்டைன் Poll_m10குழந்தைகளின் ஐன்ஸ்டைன் Poll_c10 
30 Posts - 3%
prajai
குழந்தைகளின் ஐன்ஸ்டைன் Poll_c10குழந்தைகளின் ஐன்ஸ்டைன் Poll_m10குழந்தைகளின் ஐன்ஸ்டைன் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
குழந்தைகளின் ஐன்ஸ்டைன் Poll_c10குழந்தைகளின் ஐன்ஸ்டைன் Poll_m10குழந்தைகளின் ஐன்ஸ்டைன் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
குழந்தைகளின் ஐன்ஸ்டைன் Poll_c10குழந்தைகளின் ஐன்ஸ்டைன் Poll_m10குழந்தைகளின் ஐன்ஸ்டைன் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
குழந்தைகளின் ஐன்ஸ்டைன் Poll_c10குழந்தைகளின் ஐன்ஸ்டைன் Poll_m10குழந்தைகளின் ஐன்ஸ்டைன் Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
குழந்தைகளின் ஐன்ஸ்டைன் Poll_c10குழந்தைகளின் ஐன்ஸ்டைன் Poll_m10குழந்தைகளின் ஐன்ஸ்டைன் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளின் ஐன்ஸ்டைன்


   
   
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Sat Mar 15, 2014 10:06 am

ஐன்ஸ்டைனுக்கு உலகெங்கிலுமிருந்து கடிதங்கள் வந்தன. கூடியவரை எல்லாக் கடிதங்களுக்கும் அவர் பதில் எழுதினார். ஆனால், அவர் மிகுந்த மகிழ்ச்சியோடு படித்துப் பதிலெழுதியது குழந்தைகளிடமிருந்து வந்த கடிதங்களுக்கு என்று சொல்லலாம்.


அறிவியல் அறிஞர்களுக்கு அறிவியல் மொழியில் எழுதிய ஐன்ஸ்டைன், குழந்தைகளுக்கு அவர்களுக்குப் புரியக்கூடிய மொழியில் எழுதினார். குழந்தைகள் தலைகள்மீது தகவல்பொதிகளை ஏற்றுவதைவிட, அவர்களது கற்பனைத் திறனை அதிகரிக்கச் செய்வது முக்கியம் என்பதில் அவருக்கு என்றுமே ஐயம் இருந்ததில்லை. குழந்தைகளின் தனித்துவத்தை அவர் மிகவும் மதித்தார்.

புதுப் புதுக் கருத்துகள் தோன்ற வேண்டும் என்றால், தனித்துவம் காப்பாற்றப்பட வேண்டும் என்று அவர் நினைத்தார்.


பலதரப்பட்ட கடிதங்கள்
குழந்தைகள் அவரிடம் கேள்விகளுக்கு விடைகள் கேட்டார்கள். புத்திமதி சொன்னார்கள். தங்களைப் பற்றியும் அவருக்கு அறிவித்தார்கள்.


ஒரு குழந்தை எழுதுகிறது: எனக்கு வானத்துக்கு அப்பால் என்ன இருக்கிறது என்பது தெரிய வேண்டும். அம்மாவிடம் கேட்டேன், அவர் உங்களிடம் கேட்கச் சொன்னார். ஐன்ஸ்டைன் எழுதிய பதில் கிடைக்கவில்லை. வானத்துக்கு அப்பாலும் வானம் இருக்கிறது என்று எழுதியிருக்கக்கூடும்.


இன்னொரு குழந்தை அவரிடம் கேட்கிறது: யாரும் இல்லாத நேரத்தில் மரம் ஒன்று உடைந்து விழுகிறது. அது விழும் சப்தம் கேட்குமா, கேட்காதா?


பார்பரா என்ற சிறுமி 1943-ம் ஆண்டு அவருக்கு எழுதுகிறாள்: பன்னிரண்டு வயதான சராசரி மாணவி நான். எனக்கு நீங்கள் ஒரு ஹீரோ. நான் கணக்கில் சராசரிக்கும் குறைவுதான். மற்ற மாணவர்களைவிட அதிகம் படிக்க வேண்டி யிருக்கிறது


பதில்: இப்போது வரை நான் ஹீரோ என்று கனவுகூடக் காணவில்லை. ஆனால், நீ என்னைத் தேர்ந்தெடுத்த பிறகு அவ்வாறு உணர்கிறேன். அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் எவ்வாறு ஒருவர் உணர்வாரோ அவ்வாறு இருக்கிறது. கணிதப் பிரச்சினைகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம். என்னுடைய பிரச்சினைகள் உன்னுடையதைவிட மோசம்.
நீங்கள் உயிரோடு இருக்கிறீர்களா?


ஐன்ஸ்டைன் குழந்தைகளிடம் கடிந்துகொண்டு எழுதியதே இல்லை. அவருக்குத் தென்னாப் பிரிக்கச் சிறுவன் ஒருவன் இவ்வாறு எழுதினான்:


நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள் என்ற தகவலே எனக்குத் தெரியாது. நீங்கள் 18-ம் நூற்றாண்டில் இருந்தவர் என நினைத்துக்கொண்டிருந்தேன். நீங்கள் அமெரிக்காவில் இருக்கிறீர்கள் என்று எனது ஆசிரியர் சொன்னதும் ‘அவர் அமெரிக்காவிலா புதைக்கப்பட்டிருக்கிறார்? இங்கிலாந்தில் இல்லையா?’ என்று கேட்டேன். நீங்கள் உயிரோடு இருப்பதுகுறித்து மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. நானும் எனது நண்பர்களும் வானியலில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். எங்கள் தலைமை மாணவருக்குத் தெரியாமல் இரவில் சோதனைகள் செய்கிறோம். தெரிந்தால் தண்டனை கிடைக்கும்.


பதில்: நான் உயிரோடு இருப்பதற்காக முதலில் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். கூடிய சீக்கிரமே இதற்குப் பரிகாரம் ஏற்படும் என்று நம்புகிறேன். உங்கள் சோதனைகள் பள்ளி-அரசாங்கத்தின் பார்வைக்கு நிச்சயம் வராது. தொடர்ந்து அவர்கள் கண்ணில் படாமல் செய்யுங்கள். வெளியில் இருக்கும் அரசாங்கத்தைப் பற்றியும் நல்ல குடிமக்கள் இவ்வாறுதான் நினைக்கிறார்கள். அப்படி நினைப்பதுதான் சரி.


அறிவியல் அறிஞர்கள் பிரார்த்தனை செய்கிறார்களா?


ஆறாவது வகுப்பில் இருந்த ஃபிலிஸ் என்ற சிறுமி, அறிவியல் அறிஞர்கள் பிரார்த்தனை செய் கிறார்களா, செய்கிறார்கள் என்றால், எதற்காகச் செய்கிறார்கள் என்று அவரிடம் கேட்டாள்.


பதில்: அறிவியல் அறிஞர்கள், நடப்பவை யெல்லாம், மனித வாழ்க்கையில் நடப்பதுகூட இயற்கையின் விதிகளின்படி நடக்கின்றன என்று நம்புகிறார்கள். எனவே, ஒரு விஞ்ஞானி, இயற்கையாக நடக்கப்போவதைப் பிரார்த்தனையால் மாற்ற முடியும் என்று நம்ப மாட்டார். ஆனால், இயற்கையின் சக்திகளைப் பற்றிய எங்களது அறிவு முழுமை பெறாதது என்பதை நிச்சயம் நாங்கள் ஒத்துக்கொள்வோம்.


எல்லாவற்றுக்கும் மேலான சக்தி ஒன்று இயங்குகிறது என்பது நம்பிக்கையைச் சார்ந்தது. இவ்வளவு அறிவியல் வெற்றிகளுக்குப் பிறகும் இந்த நம்பிக்கை (அறிவியல் அறிஞர்கள் மத்தியில்) பரவலாக இருக்கிறது. அறிவியல் தேடலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் பிரபஞ்ச விதிகளுக்குப் பின்னால் சக்தி ஒன்று இயங்குகிறது, அந்த சக்தி மனித சக்தியைவிடப் பல மடங்குகள் பெரியது என்பதை நிச்சயம் நம்புகிறார்கள்.


இந்த வகையில் அறிவியல் தேடல் ஒரு தனித்தன்மை வாய்ந்த ஆன்மிக உணர்வைத் தருகிறது. ஆனால், அது எளிமையான ஒருவரின் மத நம்பிக்கையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.


சூரியன் எரிந்துபோனால்?


குழந்தைகள் சொல்வது சரியில்லை என்பதை எவ்வளவு அழகாக அவர் புரியவைக்கிறார் என்பதற்கு இந்தக் கடிதப் பரிவர்த்தனை ஒரு சான்று:


நாங்கள் ஆறாம் வகுப்பில் படிக்கிறோம் நாங்கள் ஆறு பேர் ஒரு கட்சி. 21 பேர் எதிர்க்கட்சி, எங்கள் ஆசிரியரையும் சேர்த்தால் 22 பேர். எங்கள் கட்சி கூறுகிறது சூரியன் எரிந்துபோனாலும் உலகில் உயிரினங்கள் இருக்கும் என்று. எதிர்க்கட்சி, இருக்கவே முடியாது என்கிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் எங்கள் கட்சியில் சேர வேண்டும் என்று விரும்புகிறோம். சேர்ந்தால் ஆறு சிறிய விஞ்ஞானிகள், ஒரு பெரிய விஞ்ஞானி.


பதில்: சிறுபான்மையினர் சொல்வது சில சமயம் சரியாக இருக்கும் – ஆனால், உங்கள் கட்சி சொல்வது சரியில்லை. சூரிய ஒளி இல்லை என்றால், கோதுமை இல்லை, ரொட்டி இல்லை. புல் இல்லை, பசுக்கள் இல்லை, மாமிசம் இல்லை, பால் இல்லை. எல்லாமே உறைந்துவிடும். உயிர் இல்லை.


பதில் சொல்ல முடியாத கேள்வி!


அவராலேயே பதில் சொல்ல முடியாத கேள்விகளையும் அவரிடம் குழந்தைகள் கேட்டிருக்கிறார்கள்.


கேள்வி: நானும் எனது ஆசிரியரும் சாத்தானைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அவன் சொர்க்கத்திலிருந்து கீழே ஒன்பது நாட்கள் ஒன்பது இரவுகள் விழுந்தான் என்பது உங்களுக்கு நிச்சயம் தெரியும். ஒரு நொடிக்கு 32 அடி வேகத்தில் விழுந்தான். நொடிக்கு நொடி வேகம் அதிகரித்துக்கொண்டே போனது. இதற்கு ஒரு விதி இருக்கிறது என்று சொல்கிறார்கள். உங்களுக்கு இதுபோன்ற சிறிய விஷயங்களுக்கு நேரம் இருக்காது என்று தெரியும். இருந்தாலும், முடிந்தால் விதியை அனுப்பவும்.
ஏற்கெனவே, கணிதத்தோடு போராடிக் கொண்டிருந்த ஐன்ஸ்டைன் இந்தக் கடிதத்துக்குப் பதில் அனுப்பியதாகத் தெரியவில்லை.

jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Sat Mar 15, 2014 10:22 am

ஒளிக்கு இணையாகப் பயணித்தோம் என்றால், அப்போது ஒளி எப்படித் தோற்றமளிக்கும்?’ என்ற சந்தேகம் 16 வயது ஐன்ஸ்டைனுக்கு ஏற்பட்டது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்தச் சந்தேகம் அவர் மனதைப் போட்டு அரித்துக்கொண்டிருந்தது.
1905-ம் ஆண்டில்தான், அதாவது தனது 26-ம் வயதில், இந்தச் சந்தேகத்துக்கு விடையை அவரே கண்டுபிடித்தார்: ஒளியின் வேகத்தை யாரும் எட்டிப்பிடிக்க முடியாது; ஒளிதான் இந்தப் பிரபஞ்சத்திலேயே உச்சபட்ச வேகத்தைக் கொண்டது; ஒளியின் வேகத்தில் ஒருவர் பயணிக்கிறார் என்று கற்பனையில் வைத்துக்கொண்டால், அவருடைய உருவம் மிகமிக நுண்ணியதாகிவிடும்; ஆனால், அவருடைய நிறையோ எல்லையற்று அதிகரித்துவிடும். அதுமட்டுமல்லாமல் அவருடைய காலமும் உறைந்துவிடும்.

1905-ம் ஆண்டு என்பது ஐன்ஸ்டைனுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த அறிவியல் வரலாற்றிலும் அற்புத ஆண்டுகளுள் ஒன்று. மிகமிக முக்கியமான நான்கு ஆய்வுக் கட்டுரைகளை அந்த ஒரே ஆண்டில் ஐன்ஸ்டைன் வெளியிட்டார். இதையெல்லாம் ஏதோ ஒரு பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்துகொண்டு, பிரம்மாண்டமான ஆய்வுகளுக்குப் பிறகு வெளியிடவில்லை அவர்.
உண்மையில், தனது காலத்திய அறிவியல் அறிஞர்களின் தொடர்பற்று, சுவிட்சர்லாந்து நாட்டில் ஒரு காப்புரிமை அலுவலகத்தில் கீழ்நிலை ஊழியராகப் பணிபுரிந்துகொண்டே நிகழ்த்தியவைதான் அந்தக் கண்டுபிடிப்புகள். இன்று உலகமே கொண்டாடும் மாபெரும் அந்த அறிவியல் மேதை அந்தக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதற்குச் சிறிது காலத்துக்கு முன்பு, பணிஉயர்வு வேண்டி எழுதிய கடிதம் நிராகரிக்கப்பட்டிருந்தது.


ஆய்வுக் கட்டுரைகள் வெளியான பிறகும் உலகம், முக்கியமாக அறிவியல் உலகம் உடனடியாக அவரைக் கண்டுகொள்ளவில்லை. மாக்ஸ் பிளாங்க் என்ற மாபெரும் அறிவியல் அறிஞர்தான் (குவாண்டம் கோட்பாட்டின் தந்தை) இந்தக் கண்டுபிடிப்பாளரைக் கண்டுபிடித்து உலகுக்கு அறிவித்தார்.


அப்படி என்ன அற்புதங்களை அந்த ஆய்வுக் கட்டுரைகள் நிகழ்த்தின? அந்தக் கட்டுரைகளில் இரண்டு சார்பியல் தொடர்பானவை. முதல் கட்டுரை, நியூட்டனின் சிம்மாசனத்தை அசைத்துப்பார்க்கிறது. காலம், இடம் (வெளி) இரண்டும் அறுதியானவையோ, எல்லோருக்கும் ஒரே மாதிரியானவையோ அல்ல என்கிறார் ஐன்ஸ்டைன். அவரவர் அல்லது அந்தந்தப் பொருட்களின் இயக்கத்தைச் சார்ந்து இரண்டுமே வேறுபடும் என்கிறார். காலமும் வெளியும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதது என்ற சொல்லி, வெளியையும் காலத்தையும் ஒன்றுசேர்த்து, காலம்-வெளி என்ற ஒரு கருத்தை அதில் முன்வைக்கிறார்.


அடுத்த கட்டுரை, முதல் கட்டுரையின் தொடர்ச்சி. இதில்தான் உலகப் புகழ்பெற்ற E=mc2 என்ற சமன்பாட்டை ஐன்ஸ்டைன் முன்வைக்கிறார். நிறையும் ஆற்றலும் வெவ்வேறானவை அல்ல என்றும் நிறையை ஆற்றலாக மாற்ற முடியும் என்றும் சொல் கிறது இந்தச் சமன்பாடு. அது மட்டுமல்ல, ஒவ்வொரு நிறையும் அளப்பரிய ஆற்றலைத் தனக்குள் வைத்திருக்கிறது என்றும் அந்தச் சமன்பாடு சொல்கிறது. இந்த உண்மையை ஹிரோஷிமாவிலும் நாகசாகியிலும் சந்தேகமறத் தெரிந்துகொண்டது உலகம்.


மூன்றாவது கட்டுரையும் மிக முக்கியமானது. அதுநாள்வரை அணு என்பதை ஒரு கருதுகோளாகவும் கற்பனையாகவுமே அறிவியல் உலகம் கருதிவந்தது. ஆனால், ஐன்ஸ்டைனின் இந்தக் கட்டுரை தெளிவாக அணுக்களின் இருப்பை நிரூபித்தது.
இந்த மூன்று ஆய்வுக் கட்டுரைகளும் உலகையே புரட்டிப் போடுவதற்குப் போதுமானவை என்றாலும், ஐன்ஸ்டைன் அத்துடன் நிற்கவில்லை. ஒளி என்பது அடிப்படையில் அலை வடிவத்தில் பயணிக்கிறது என்பதுதான் அதுவரையிலான நம்பிக்கை. ஆனால், உண்மையில் நுண்மையான தோட்டாக்கள் போன்ற கொத்துக்களாகத்தான் ஒளி பயணிக் கிறது என்று நான்காவது கட்டுரையில் நிறுவினார் ஐன்ஸ்டைன். இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் குவாண்டம் கோட்பாட்டின் முன்னோடிகளில் ஒருவராக ஆனார் ஐன்ஸ்டைன்.


ஒருசில ஆண்டுகளில் ஐன்ஸ்டைனின் மேதமையை உலகம் அங்கீகரிக்க ஆரம்பித்தது. பல்வேறு பல்கலைக்கழகங்களில் பணிபுரிவதற்கான அழைப்புகள் அவருக்கு வந்தன. 1908-ம் ஆண்டு பெர்ன் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் வேலை கிடைத்தது. அதற்குப் பிறகு ஒளியின் வேகத்தில் பயணிக்க ஆரம்பித்தது அவருடைய புகழ்.


தனது 1905-ம் வருடத்திய சிறப்பு சார்பியல் கோட்பாட்டில் ஈர்ப்புவிசை விளக்கப்பட வில்லை என்பது அவருக்கு உறுத்திக்கொண்டிருந்தது. சரியாக 10 ஆண்டுகள் கழித்து 1915-ல் சார்பியலின் பொதுக் கோட்பாடுஎன்ற இன்னொரு அற்புதம் அவரிடமிருந்து வெளிவந்தது. வெளி, காலம் இரண்டின் வளைவால் ஏற்படும் விளைவே ஈர்ப்புவிசை என்றார் அவர். பெரும் நிறை கொண்ட ஒரு பொருளைக் கடந்துசெல்லும்போது ஒளி வளையும் என்றார். இவையெல்லாம் அறிவியல் அறிஞர்கள் பலராலும்கூட உள்வாங்க முடியாத அளவுக்கு இருந்தன.


இந்தக் கோட்பாடுகளும் முந்தைய கோட்பாடுகளும் காலப்போக்கில் தெளிவாக நிரூபிக்கப்பட்டன. இந்தக் கோட்பாடுகளின் விளைவாக இயற்பியல், வானியல் போன்ற துறைகளில் பெரும் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டன/நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஐன்ஸ்டைன் ஆரம்பித்த இடத்திலிருந்து இன்றைய அறிவியல் பயணித்திருக்கும் தூரம் மிகமிக அதிகம். ஆனால், இதற்கான மாபெரும் வித்துக்கள் விதைக்கப்பட்ட ஆண்டுகள்தான் 1905-ம் ஆண்டும் 1915-ம் ஆண்டும்.
தன் வாழ்நாளின் இறுதி 25 ஆண்டுகளில் ஐன்ஸ்டைன் தனது சக்தி முழுவதையும் குவாண்டம் கோட்பாட்டை மறுப்பதில் செலவிட்டார் (இந்தக் கோட்பாட்டின் முன்னோடிகளில் ஐன்ஸ்டைனும் ஒருவர் என்பது விந்தை). குவாண்டம் கோட்பாடு எல்லாவித சாத்தியங்களையும் அங்கீகரிப்பதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஓர் இலக்கை நோக்கி எலக்ட்ரான் ஒன்று செலுத்தப்பட்டால், அது குறிப்பிட்ட ஒரு பாதையில்தான் பயணிக்க வேண்டுமென்பதில்லை.


அது பயணிக்கும் பாதையின் சாத்தியங்கள் எண்ணற்றவை. அதேபோல், அணுவில் ஒரு எலக்ட்ரான் ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் இருக்க முடியும். இப்படியெல்லாம் குவாண்டம் கோட்பாடு சொன்னதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கடவுள் இந்தப் பிரபஞ்சத்தைப் பகடைக்காயாக உருட்டி விளையாடவில்லைஎன்று அவர் குறிப்பிட்டார். வெவ்வேறு சாத்தியங்களின் கூட்டுத்தொகையாக அவர் பிரபஞ்சத்தைப் பார்க்கவில்லை. இந்தப் பிரபஞ்சத்துக்கு அடிப்படையாக அழகான, சீரான ஒரு தத்துவம் இருக்கிறது என்று அவர் நம்பினார். தொடர்ந்து பல்வேறு ஆய்வுகள் மூலம் குவாண்டம் கோட்பாடு நிரூபிக்கப்பட்டதால், ஐன்ஸ்டைன் தனது தோல்வியை வேறுவழியின்றி ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று.


அதன் பின்னர், தனது இறப்புவரை இன்னொரு பெருமுயற்சியில் ஈடுபட்டார். பிரபஞ்சத்தின் சாராம்சத்தை விளக்கக்கூடியதும், சார்பியல் கோட்பாடு, குவாண்டம் கோட்பாடு ஆகியவற்றை உள்ளடக்கியதுமான ஒருங்கிணைந்த கோட்பாடுஒன்றை உருவாக்க அவர் முயன்றார். இறுதிவரை அது நடக்கவில்லை. இந்தப் பாதையில் இன்று பல்வேறு அறிவியலாளர்களும் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள். எனினும் இன்னும் யாருக்கும் வெற்றி கிட்டவில்லை.
அறிவியலை ஆன்மிகச் செயலாகவே அவர் கருதினார். அறத்தை விடுத்த அறிவியலை அவர் வெறுத்தார். அவருக்கு ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால், ஐன்ஸ்டைனுடைய கடவுள் மதரீதியான கடவுள் அல்ல. இந்தப் பிரபஞ்சத்தின் அடிப்படையான சக்திதான் அவருடைய கடவுள். ஒருங்கிணைந்த கோட்பாடுஎன்பது அந்தக் கடவுளின் முகத்தைப் பார்ப்பதற்கான முயற்சியாகக்கூட இருக்கலாம்.


ஐன்ஸ்டைனின் பெயருடன் அணுகுண்டின் கண்டுபிடிப்பு பிணைக்கப்பட்டுவிட்டது. இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனியின் ஆதிக்கத்தைத் தடுப்பதற்காக, வேறு வழியின்றிதான், அணுகுண்டு தயாரிக்கும்படி அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட்டுக்கு ஐன்ஸ்டைன் கடிதம் எழுதினார். அதன் விளைவை நாமெல்லோரும் அறிவோம்.

ஆனாலும், ஹிரோஷிமாமீது குண்டுவீசப்பட்ட தகவல் கிடைத்ததுமே அணு ஆயுதங்களுக்கு எதிரான தனது போரை அவர் தொடங்கிவிட்டார். தன் வாழ்நாளின் இறுதிவரை உலக அமைதிக்காகக் குரல்கொடுத்தார். 20-ம் நூற்றாண்டின் மனிதராக ஐன்ஸ்டைனை 1999-ம் ஆண்டு டைம்ஸ்பத்திரிகை தேர்ந்தெடுத்துச் சிறப்பித்தது (காந்திக்கு இரண்டாம் இடம்). இந்தப் பிரபஞ்சத்தின் புதிர்களுள் சிலவற்றை அவிழ்ப்பதில் வெற்றி பெற்றவரும் நவீன காலத்தின் மகத்தான மேதைகளில் ஒருவருமான ஐன்ஸ்டைனுக்கு அவருடைய பிறந்த நாளாகிய இன்று நம்முடைய நன்றியும் வணக்கமும் உரித்தாகட்டும். 

jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Sat Mar 15, 2014 10:30 am

E=mc2 என்ற சூத்திரத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், 1904-ம் ஆண்டுக்கு நாம் போக வேண்டும். ஆல்பெர்ட் ஐன்ஸ்டைனுக்கு அப்போது 25 வயது. அவர் இன்னும் பிரபலமாக ஆகியிருக்கவில்லை. பல்கலைக்கழகத்தில் தனது பேராசிரியர்களுக்கு மதிப்புக் கொடுக்காமல் அவர்களைக் கோபமுறச் செய்தவர் அவர்.


அதனால், அவருக்கு நல்ல வேலை கிடைப்பதற்கான சிபாரிசுக் கடிதங்களை அவர்கள் தர மறுத்துவிட்டார்கள். அப்புறம், சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் காப்புரிமை அலுவலகம் ஒன்றின் கிளர்க் வேலைதான் அவருக்குக் கிடைத்தது. அந்த நகரத்தில் இருந்த அறிவியல் நூலகம் ஒன்றும், அவரது வார விடுமுறையன்று மூடப்பட்டுவிடும். எனவே, சமகால அறிவியல் ஆய்வுகள்பற்றி அவரால் அறிந்துகொள்ள முடியாத நிலை.


அவர் தனது அலுவலகத்தில் அறிவியல் சிந்தனைகளில் மூழ்கிக்கொண்டிருக்கும்போது அவருடைய மேற்பார்வையாளர் அந்தப் பக்கம் வந்தால், தான் எழுதிவைத்திருக்கும் குறிப்பு களை மேசையின் இழுப்பறைக்குள்- அதாவது தனது கருத்தியல் இயற்பியல் துறைஎன்று அவர் கிண்டலாகக் குறிப்பிடும் இழுப்பறைக்குள் ஐன்ஸ்டைன் போட்டுவிடுவார். அவர் பின்னாளில் செய்யப்போகும் சாதனைக்கு அதுதான் பரிசோதனைக் களம் என்று சொல்ல வேண்டும்.


இரண்டு சாம்ராஜ்யங்கள்


1904-ம் ஆண்டு வாக்கில் அறிவியல் உலகத்தில் உள்ள அனைவரும் இந்தப் பிரபஞ்சம் இரண்டு சாம்ராஜ்யங்களால் ஆனது என்றே நம்பினார்கள். காற்று வீசுதல், நிலக்கரி எரிதல், மின்னல் மின்னுதல் போன்ற நிகழ்வுகளை உள்ளடக்கிய ஆற்றலின் சாம்ராஜ்யம் ஒன்று; மரங்கள், மலைகள், காப்புரிமை அலுவலகத்தின் சிடுமூஞ்சி மேற்பார்வையாளர்கள் ஆகியோர் அடங்கிய நிறையின் (பருப்பொருளின்) சாம்ராஜ்யம் இன்னொன்று.


இந்த இரண்டும் தனித்தனியானவை என்றே அப்போது கருதினார்கள். அந்தக் கருத்துக்குத் தான் ஐன்ஸ்டைன் சவால் விடுத்தார். அவருடைய கல்லூரிக் காலத்தின்போது அப்போதைய அறிவியல் முன்னேற்றங்களைப் பற்றி உடனுக் குடன் அறிந்துகொள்ளும் வகையில் அவர் இருந்தார்.


ஆனால், காப்புரிமை அலுவலகத்தில் பணிபுரிந்தபோது அப்படி இல்லை. தொழில்முறை இயற்பியலாளர்கள் கண்ணை மூடிக்கொண்டு நம்பும் ஒரு விஷயத்துக்குள் தானும் மாட்டிக்கொள்ளாதபடி அவர்களிடமிருந்து வெகு தொலைவில் ஐன்ஸ்டைன் தள்ளியிருந்தார்.


ஆற்றலும் நிறையும் முற்றிலும் வேறானவை என்ற வழக்கமான பார்வையில் ஏதோ கோளாறு இருப்பதை உணர்த்தும் வகையில் சில அறிகுறிகள் அப்போது தெரிந்தன. ரேடியம் என்ற உலோகம் நாள் கணக்கில், மாதக் கணக்கில் இடைவிடாமல் ஆனால், தீர்ந்துவிடாமல் ஆற்றலை உமிழ்ந்துகொண்டிருந்ததை பாரிஸில் மேரி க்யூரி அப்போதுதான் கண்டறிந்திருந்தார்.


விசித்திரமான அந்தக் கண்டுபிடிப்பைப் பெரும்பாலானோர் பொருட்படுத்தவேயில்லை. 1904-ம் ஆண்டு முடிந்து 1905-ம் ஆண்டு தொடங்கிய தருணம், ஐன்ஸ்டைன் தனது 26-வது பிறந்த நாளை நெருங்கிக்கொண்டிருந்த தருணத்தில் திடீரென்று ஏதோ ஒரு மாற்றம் அவரது ஆளுமையில் நிகழ்ந்து படைப்புத் திறனின் உச்சத்துக்கே அவரைக் கொண்டுசென்றது. ஆற்றலுக்கும் நிறைக்கும் இடையே தொடர்பு இருக்கிறது என்பதை அவர் படிப்படியாக உணர்ந்தார். திடப்பொருள்கள் வெடிக்கும்போது, மறைந்திருக்கும் ஆற்றல் வெளிப்படக்கூடும் என்பதை உணர்ந்தார்.


ஒரு சில அவுன்ஸ்கள்
அதற்கு முன்பு யாரும் இதைக் கண்டறியவில்லை; ஒரு விறகுகூட எரிந்திராத கிரகத்தில் அதற்கு முன்பு மக்கள் எல்லோரும் வாழ்ந்திருப்பார்கள்போல. சிறிய நிறையில் எவ்வளவு ஆற்றல் அடைபட்டுக்கிடக்கும் என்பதையும் ஐன்ஸ்டைன் கண்டறிந்தார். அவருடைய சமன்பாட்டில் உள்ள ‘C2என்பது நம்பவே முடியாத அளவுக்குப் பெரிய எண் ஆகும். சிறிய காகிதத்தை எரித்தால் சிறிய அளவு ஆற்றல் வெளிப்படும் என்பதை மட்டுமல்ல ஐன்ஸ்டைன் கண்டுபிடித்தது. அவர் கண்டுபிடித்தது இதற்கு மாறான ஒன்றை.


ஒரு குழாய்க்குள் பயங்கர அழுத்தம் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். உள்ளிருக்கும் நிறையானது அடர்த்தியில் அதிகரித்து நெருக்கப்பட்டிருக்கும் நிலையில் குழாய் திறந்துவிடப்பட்டால் எவ்வளவு ஆற்றல் வெளிப்படும்? 1945-ம் ஆண்டு ஹிரோஷிமாவில் போடப்பட்ட அணுகுண்டில் ஒரு சில அவுன்ஸ் யுரேனியம்தான் பயன்படுத்தப்பட்டது. அந்த ஒரு சில அவுன்ஸ்களே அளப்பரிய ஆற்றலாக மாற்றப்பட்டன. ஒரு நகரத்தையே அழிக்க அது போதுமானதாக இருந்தது.
ஐன்ஸ்டைனின் E=mc2 சமன்பாடு பிரபஞ்சம் முழுவதற்கும் பொருந்துவது. (E=mc2 என்ற சமன்பாட்டில் E என்பது எனர்ஜியை அதாவது ஆற்றலைக் குறிக்கும், m என்பது மாஸ் அதாவது நிறை, C என்பது ஒளியின் திசை வேகத்தைக் குறிக்கும்.) விண்வெளியில் மிதக்கும் பிரம்மாண்டமான நீரிறைப்பு நிலையம் போலத்தான் சூரியன்.


அதன் உள்ளிருந்து ஒவ்வொரு நொடியும் கோடிக் கணக்கான டன்கள் ஹைட்ரஜன் காணாமல் போகிறது. அதற்குப் பதிலாக, நம் புவிக்கு வெப்பம் தரக்கூடியதும் சூரியக் குடும்பத்தினூடாகச் சுடர்விடக்கூடியதுமான அளப்பரிய ஆற்றல் அங்கே உருவாகிறது. அதுமட்டுமல்ல, நமது ஒட்டுமொத்த உருவாக்கமும் அந்தச் சமன்பாட்டிலிருந்துதான் வருகிறது. ஆம், இந்தச் சமன்பாடு பின்னாலிருந்தும் செயல்படும் (அதாவது mc2=E). நிறை வெடித்து ஆற்றல் உருவாகிறது என்று மட்டும் அது சொல்லவில்லை.


ஆற்றலைக் கனக் கச்சிதமாகச் சுருக்கினால், அது சாதாரண நிறையாகவும் (அதாவது பொருளாக) மாறும் என்றும் அந்தச் சமன்பாடு சொல்கிறது.


ஒளியிலே பிறந்தது


இரண்டு ஒளிக்கற்றைகளை எதிரெதிரே மோத விட்டால் மோதும் இடத்தில் அணுத்துகள்கள் உருவாகும் என்பதுதான் இதன் அர்த்தம். சாதாரண ஒளிக்கற்றைகளுக்கு இப்படிச் செய்யும் திறன் கிடையாது. ஆனால், பிரபஞ்சம் மிகவும் இள வயதில் இருந்தபோது அது முழுக்கவும் ஒளியால் மட்டுமே நிரம்பியிருந்தது. எல்லையற்ற ஆற்றலை ஒளி கொண்டிருந்தது.

அப்படிப்பட்ட ஒளிக்கதிர்கள் மோதிக்கொண்ட போது, ஐன்ஸ்டைனின் சமன்பாடு சொன்ன அந்த மாற்றம் ஏற்பட்டது. ஒளிக் கதிர்களின் சிறுசிறு பகுதிகள் காணாமல் போயின; அதற்குப் பதிலாக நிறை (அதாவது பருப்பொருள்) உருவானது. அணுக்கள், விண்மீன்கள், கோள்கள் போன்றவையெல்லாம் உருவானது மட்டுமல்லாமல், நிறையும் ஆற்றலும் எப்படிச் செயல்படுகின்றன என்று வியந்துகொண்டிருந்த, காப்புரிமை நிறுவனத்தின் விந்தையான கிளர்க் உருவானதும்கூட அப்படித்தான். 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக