புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ராணி மங்கம்மாள் Poll_c10ராணி மங்கம்மாள் Poll_m10ராணி மங்கம்மாள் Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
ராணி மங்கம்மாள் Poll_c10ராணி மங்கம்மாள் Poll_m10ராணி மங்கம்மாள் Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
ராணி மங்கம்மாள் Poll_c10ராணி மங்கம்மாள் Poll_m10ராணி மங்கம்மாள் Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
ராணி மங்கம்மாள் Poll_c10ராணி மங்கம்மாள் Poll_m10ராணி மங்கம்மாள் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ராணி மங்கம்மாள் Poll_c10ராணி மங்கம்மாள் Poll_m10ராணி மங்கம்மாள் Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
ராணி மங்கம்மாள் Poll_c10ராணி மங்கம்மாள் Poll_m10ராணி மங்கம்மாள் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ராணி மங்கம்மாள் Poll_c10ராணி மங்கம்மாள் Poll_m10ராணி மங்கம்மாள் Poll_c10 
2 Posts - 1%
prajai
ராணி மங்கம்மாள் Poll_c10ராணி மங்கம்மாள் Poll_m10ராணி மங்கம்மாள் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
ராணி மங்கம்மாள் Poll_c10ராணி மங்கம்மாள் Poll_m10ராணி மங்கம்மாள் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
ராணி மங்கம்மாள் Poll_c10ராணி மங்கம்மாள் Poll_m10ராணி மங்கம்மாள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராணி மங்கம்மாள் Poll_c10ராணி மங்கம்மாள் Poll_m10ராணி மங்கம்மாள் Poll_c10 
435 Posts - 47%
heezulia
ராணி மங்கம்மாள் Poll_c10ராணி மங்கம்மாள் Poll_m10ராணி மங்கம்மாள் Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
ராணி மங்கம்மாள் Poll_c10ராணி மங்கம்மாள் Poll_m10ராணி மங்கம்மாள் Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
ராணி மங்கம்மாள் Poll_c10ராணி மங்கம்மாள் Poll_m10ராணி மங்கம்மாள் Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
ராணி மங்கம்மாள் Poll_c10ராணி மங்கம்மாள் Poll_m10ராணி மங்கம்மாள் Poll_c10 
30 Posts - 3%
prajai
ராணி மங்கம்மாள் Poll_c10ராணி மங்கம்மாள் Poll_m10ராணி மங்கம்மாள் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ராணி மங்கம்மாள் Poll_c10ராணி மங்கம்மாள் Poll_m10ராணி மங்கம்மாள் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ராணி மங்கம்மாள் Poll_c10ராணி மங்கம்மாள் Poll_m10ராணி மங்கம்மாள் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ராணி மங்கம்மாள் Poll_c10ராணி மங்கம்மாள் Poll_m10ராணி மங்கம்மாள் Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
ராணி மங்கம்மாள் Poll_c10ராணி மங்கம்மாள் Poll_m10ராணி மங்கம்மாள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராணி மங்கம்மாள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 08, 2014 1:45 am

பெண்கள் முடி சூட்டி ஆட்சி செய்யாத நாயக்கர் மரபில் காப்பாட்சியாளராக இருந்து மதுரையை ஆண்ட பெண்மணி ராணி மங்கம்மாள்.

மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரின் மனைவி ஆவார். கணவர் இறந்ததும் தன் மகன் அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் இளம் வயதினனாக இருந்த காரணத்தால் தான் உடன்கட்டை ஏறாமல் மகனுக்குத் துணையாக காப்பாட்சியாளராக இருந்து மதுரையைத் ஆண்டவர்.

திறமையான ஆட்சியாளர். சமயப் பொறை மிக்கவர். எதிர்ப்புகளைத் தன் ஆற்றலாலும் அறிவு நுட்பத்தாலும் முறியடித்தவர். 18 ஆண்டு காலம் தென்னாட்டை தனியே ஆண்ட பெண்ணரசி. இவருடைய ஆட்சி காலத்தில் மதுரைநாயக்கர்களின் தலைநகரமாக திருச்சிராப்பள்ளி விளங்கியது.

தமிழக மக்கள் மனதில் அழியா புகழ் கொண்டவர் இவர். தனது அரசியல் தந்திரத்தில் வல்லவராக திகழ்ந்தார். எதிரிகளை தன் வீரத்தால் தவிடு பிடி ஆக்கியவர்.

மங்கம்மாளின் வரலாறு:

இராணி மங்கம்மாள், மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரிடம் தளபதியாக (1659 -1682) இருந்த தப்பகுள லிங்கம நாயக்கர் அவர்களின் மகளாவார்.

சொக்கநாத நாயக்கர் மங்கம்மாவைத் திருமணம் செய்து கொண்டார். ஆயினும் அவரை இராணியாகப் பட்டம் சூட்டவில்லை.

தஞ்சாவூரை ஆண்ட விஜயராகவ நாயக்கரின் மகளைத் திருமணம் செய்ய சொக்கநாத நாயக்கர் நினைத்தார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. 1682ம் ஆண்டு சொக்கநாத நாயக்கர் இறந்தபோது அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் மூன்று மாத குழந்தை.

எனவே தன் மகனைக் காக்க வேண்டி உடன் கட்டை ஏறாத மங்கம்மாள் ஆட்சிப் பொறுப்பினை காப்பாளராக ஏற்றார்.

அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர்:

மங்கம்மாள் தனது மகன் அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கருக்கு சின்னமுத்தம்மாள் என்பவரைத் திருமணம் செய்வித்தார். அதன் பிறகு அவருக்கு முடி சூட்டினார்.

அண்ணையின் உதவியோடும் அறிவுரைகளோடும் அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் திறமையாக ஆட்சி செய்தார்.

தந்தை சொக்கநாத நாயக்கர் இழந்த பகுதிகள் சிலவற்றை போரிட்டு மீட்டார். ஏழாண்டு காலம் நல்வழியில் ஆட்சி செய்து வந்த அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் அம்மை நோயால் பாதிக்கப்பட்டு 1688 ஆம் ஆண்டு காலமானார்.

கணவர் இறந்த சிறிது நாளிலேயே ஆண்மகனைப் பெற்றுத்தந்த சின்ன முத்தம்மாள் உடன்கட்டை ஏறினார்.

அக்காலத்தில் கட்டத்தில் கம்பளத்து சமுதாய மக்களின் வழக்க படி கணவர் இறந்தால் மனைவியும் உடன் கட்டை (சதி) ஏறி தன் உயிரை மாய்துகொள்வர்).

அரசியல் வாரிசான சிறு குழந்தையால் நாட்டை ஆள முடியாது என்பதால் அம்மன்னரின் மகனான விசயரங்க சொக்கநாதருக்குப் பெயரளவில் பட்டம் சூட்டப்பட்டது. அவர் சார்பில் அவருடைய பாட்டியும், சொக்கநாத நாயக்கரின் மனைவியுமான மங்கம்மாள் காப்பாட்சியராக பதவி ஏற்றுக்கொண்டு, இராணி மங்கம்மாள் என்ற பெயரில் 1706 வரை செம்மையான ஆட்சி நடத்தி தமிழ் மதுரை நாயக்கர் ஆட்சி மன்னர்களில் தனகென்று ஒரு தனி இடத்தை ஏற்படுத்தி அழியா புகழை கொண்டு விளங்கினார்.

இராணி மங்கம்மாளின் ஆட்சி:

மங்கம்மாள் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற காலத்தில் போர்கள் அதிகம் நடைபெறவில்லை. இவர் அண்டையில் உள்ள அரசுகளிடம் நட்புறவையே விரும்பினார்.

ஆயினும் தஞ்சை மராத்தியர்கள், முகலாயர்கள், திருவாங்கூர் அரசு, போன்றவர்களால் சவாலைச் சந்திக்க வேண்டி இருந்தது.

மிகத்திறமையான இராச தந்திரியாகவும் தேர்ந்த அரசியல் அறிவும் பெற்ற மங்கம்மாள் தனக்கே உரிய சாவாலில் அரசியல் உக்தியால் வீரத்தால் எதிர்கொண்டு பகைகளை மிகத்திறமையுடன் முறியடித்து அனைவரையும் திகைக்க செய்தவர் தான் மங்கம்மாள்.

அவருடைய ஆட்சி காலத்தில் நல்ல பல திட்டங்களைத் தீட்டி மதுரையைச் சிறப்பாக ஆண்டார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 08, 2014 1:46 am

முகலாயர்களுடனான உறவு:

முகலாயப் பேரரசர் ஔரங்கசீப், தக்காணம் வரை தனது பேரரசை விரிவு செய்யும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்திக்கொண்டிருந்தார்.

செஞ்சிக் கோட்டையில் பதுங்கி இருந்த மராத்திய மன்னன் இராசாராமைக் கைது செய்ய, தம் தளபதி 'சல்பீகார் அலிகான்' என்பவரை அனுப்பினார்.

சல்பீகார் அலிகான் சுமார் ஏழாண்டு காலம் செஞ்சிக்கொட்டையை முற்றுகையிட்டான். முற்றுகை நடந்து கொண்டிருக்கும் போதே மற்ற தமிழக அரசுகளைப் பணிய வைத்துத் திறைப்பொருளைச் செலுத்த படைகளை அணுப்பினான். மைசூர் மான்னரும் தஞ்சை மராத்தியரும் பணிந்து திறை செலுத்தினர்.

இராணி மங்கம்மாளும் முகலாயர் படை வலிமையையும் தன் படை வலிமையியும் நன்குணர்ந்து முகலாயருக்குப் பணிந்துபோக முடிவு செய்தார்.

விலையுயர்ந்த பொருள்களை தளபதி சல்பீகார் அலிகானுக்கு அன்பளிப்பாக அனுப்பி போரைத் தவிர்த்தார்.

பின் முகலாயர்களின் உதவியால், மராத்தியர்களிடம் இழந்த சில பகுதிகளை மீட்டார். உடையார்பாளையச் சிற்றரசர் கைப்பற்றியிருந்த மதுரையின் பகுதிகளையும் மீட்டார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 08, 2014 1:47 am

திருவிதாங்கூர்ப் போர்:

செம்மையாக ஆட்சி செய்து கொண்டு இருக்கும் பொழுது, திருவிதாங்கூர் மன்னன் ரவி வர்மன் சற்று மதுரை மன்னர்களை மதிக்காமல் இருந்து வந்தார்.

மேலும்  மதுரை நாயக்க அரசுக்கு செலுத்த வேண்டிய திறைப்பொருள்களைச் செலுத்தவில்லை. மேலும் கல்குளம் பகுதியில் இருந்த நாயக்கர் படையையும் தாக்கி அழித்தான்.

இதனை அறிந்த ராணி 1697ம் ஆண்டு தளவாய் நரசப்பையா என்பவர் தலைமையில் அனுப்பிய படை திருவிதாங்கூர் படையைத் தோற்கடித்தது. திறைப்பொருளாக பொன், பீரங்கி முதலிய பொருள்களையும் பெற்றுத் திரும்பியது.

மதுரை நாயக்க அரசுக்கு உட்பட்ட சிற்றரசாக அப்போது திருவிதாங்கூர் அரசு இருந்தது.

தஞ்சைப் போர்:

தஞ்சையை ஆண்ட மராத்தியருக்கும் மதுரை நாயக்கர்களுக்குமிடையில் நல்லுறவு நிலவவில்லை.

தஞ்சை மராத்திய மன்னர் ஷாஜி, மதுரை நாயக்க மன்னர்களின் ஆட்சிப் பகுதிகள் சிலவற்றைக் கைப்பற்றிக் கொண்டார்.

இராணி மங்கம்மாள் தளவாய் நரசப்பையரை படைகளுடன் அனுப்பி அப்பகுதிகளை மீட்டார். அப்படை தஞ்சையை அச்சுறுத்தியது.

எனவே தஞ்சை அமைச்சர் பாலாஜி பண்டிதர் இராணி மங்கம்மாளின் படைகளுக்குப் பெரும் பொருள் கொடுத்து அனுப்பினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 08, 2014 1:49 am


மைசூர்ப் போர்:


 முகலாய அரசு தக்கானத்தை தன் ஆட்சியின் கீழ் கொண்டு வர நினைத்த அதே வேளையில் மைசூர் மன்னன் சிக்க தேவராயன் தனது ஆட்சியை விரிவாக்க எண்ணி மதுரையின் ஆளுகைக்குக் கீழ் இருந்த சேலம் மற்றும் கோயமுத்தூரைக் கைப்பற்றினான்.

1695 -ல் திருச்சிராப்பள்ளி கோட்டையையும் முற்றுகையிட்டான். இராணி மங்கம்மாளின் படைகளால் அம்முற்றுகை முறியடிக்கப்பட்டது.

சிக்கதேவராயன் தஞ்சை மற்றும் திருச்சிக்கு நீர் ஆதாரமாக விளங்கும் காவிரி நதியின் குறுக்கே தற்போது கண்ணம்பாடி அணை உள்ள பகுதியில் அணை கட்டி அதனைத் தடுக்க எண்ணினான்.

தஞ்சை நாயக்கர்களும், மதுரை நாயக்கர்களும் எதிர் எதிர் என்றாலும் எதிரியை வீழ்த்த ஓரணியில் நிற்க வேண்டும் என்பதால் அப்போது மங்கம்மாள் 1700 -ல் தஞ்சையுடனான பகையை மறந்து அதனுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, தஞ்சை- மதுரைக் கூட்டுப்படை ஒன்றை உருவாக்கி சிக்க தேவ ராயர் என்ற மைசூர் மன்னனை கூட்டணியில் வீழ்த்தினார்.

பேருக்கு படை கிளம்பும் வேளையில் மைசூர்ப் பகுதிகளில் கடும் மழை பெய்ததால் சிக்க தேவராயன் கட்டிய அணை உடைந்தது. சிக்கல் எதுவும் இல்லாமல் இப்பிரச்சினை தற்காலிகமாக முடிவடைந்தது.

ராமநாதபுரம் போர்:

இராணி மங்கம்மாளின் முதலும் கடைசியுமான் மிகப்பெரிய தோல்வியாக ராமநாதபுரம் போர் இருந்தது.

மதுரைக்கு எதிராகவும் தஞ்சைக்கு ஆதரவாகவும் ராமநாதபுரம் மன்னர் ரகுநாத சேதுபதி இருந்ததால் 1702 ல் ரகுநாத சேதுபதிக்கு எதிராக இராணி மங்கம்மாள் தனது படைகளை அனுப்பினார்.

இந்த போரில் மதுரையின் தொடர் வெற்றிகளுக்குக் காரணமான தளவாய் நரசப்பைய்யா வீர மரணம் அடைந்தார். இது போரின் தோல்விக்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 08, 2014 1:49 am

மங்கம்மாளின் சமயப் பணி:

மதுரை நாயக்கர்களைப் போலவே மங்கம்மாளும் சமயப் பொறையைக் கடைப் பிடித்தார். ஒவ்வொருவரும் தாம் சிறந்ததாகக் கருதும் சமயத்தைப் கைக்கொண்டு வாழ்வதே தருமம் என்ற கொள்கையைக் மங்கம்மாள் பின்பற்றினார்.

மதுரை மீனாட்சி அம்மனுக்கு பல்லக்கு மற்றும் பொன்னணிகள் பலவற்றை வழங்கினார்.

ஆணித்திங்களில் ஊஞ்சல் திருவிழா நடத்த ஏற்பாடு செய்தார். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் விழாக்கள் நடைபெறும்போது, இராணி மங்கம்மாள் தமது செங்கோலை அம்மனின் முன்வைத்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

சித்திரை முழுமதி நாளில் இராணி மங்கம்மாளும் இளவரசரும் தமுக்கம் அரண்மனையில் தங்கி, மீனாட்சி திருமணத்தைக் கண்டு களித்தனர். ஆற்றில் இறங்கும் கள்ளழகரை அவர்கள் இருவரும் வழிபட்டனர்.

தான் ஒரு இந்துவாக இருந்த போதும் கிறிஸ்துவர் மற்றும் இஸ்லாமியர்களையும் மதித்தார். கிறித்துவ மத குருமார்களை சமயப் பேருரை செய்ய அனுமதி அளித்தார். சமயத் தொடர்பாக சிறை வைக்கப்பட்டிருந்த 'மெல்லோ' பாதிரியாரை விடுதலை செய்ததோடு, 'போசேத்' என்ற குருவைத் தம் அரசவையில் வரவேற்று விருந்தோம்பினார்.

இஸ்லாமியர்களுக்கும் மங்கம்மாள் மானியம் அளித்தார். 1701-ல் இஸ்லாமியர்களின் நல்வாழ்விற்காகவும் பள்ளிவாசல் பாதுகாப்பிற்காகவும் திருச்சியிலுள்ள நிலங்களை மானியமாக வழங்கியது குறித்துக் கல்வெட்டு கூறுகிறது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 08, 2014 1:49 am


சமுதாயப்பணிகள்:


வெறும் கோவில்களை மட்டும் கட்டிக்கொண்டு, பிராமணர்களை வளர்த்து விட்டு, ஆரியத்தை வளர்த்த சேர, சோழ, பாண்டியர்கள் போல் அல்லாது புதிய சாலைகள் பலவற்றை அமைத்தார். கன்னியாகுமரிக்கும் மதுரைக்கும் இடையே அமைந்த நெடுஞ்சாலை ' மங்கம்மாள் சாலை' என அழைக்கப்படுகிறது.

குதிரைகள், பசுக்கள், காளைகள் முதலியவை நீர் அருந்துவதற்காக சாலையோரங்களில் தண்ணீர்த் தொட்டிகள் அமைக்க ஆணையிட்டார். பொது மக்களுக்காக குடிநீர் ஊருணிகள், கிணறுகள் ஆகியவற்றைத் தோண்டச்செய்தார்.

தொழில் வளர்ச்சி, வாணிகம், மக்கள் தொடர்பு ஆகியவற்றிற்கு வழிவகுத்தார். கொள்ளிடத்தில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் துன்புற்ற போது அவர்களுக்கு உணவு, உடை, வீடு மற்றும் பாதுகாப்பு வசதிகளை வழங்குவதற்கு ஆணையிட்டார்.

வெள்ளத்தால் அழிந்த கரையோரத்துச் சிற்றூர்களையும் சீரமைத்தார்.

தற்போது மகாத்மா காந்தி அருங்காட்சியகமாக விளங்கும் தமுக்கம் அரண்மனையே இராணி மங்கம்மாளின் கோடைக்கால அரண்மனையாகும். இதிலுள்ள தமுக்கம் மைதானத்தில்தான் அக்காலத்தில் யானைச் சண்டை முதலான பொழுதுபோக்கு விளையாட்டுகளும் அரச விழாக்களும் நடைபெற்றன.

இராணி மங்கம்மாள் மக்கள் நலம் பேணும் பல அறச் செயல்களைச் செய்தார். ராணி மங்கம்மாளும் கோவில் கட்டுவதை மட்டும் எண்ணாமல் சாலை அமைத்தல், நகரங்களை அமைத்தல், குடிநீர் தொட்டி அமைத்தல், கம்மாய், ஏரி, குளம் அமைத்தல் போன்ற சமுதாய பணிகளை செய்து வந்தார்.

இதற்கு முன் நாட்டை ஆண்ட யாரும் சமுதாய பணிகளை ராணியை போல செய்தது கிடையாது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 08, 2014 1:51 am


நிலைத்து நிற்கும் பெருமை:


 மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி போன்ற வறண்ட மாவட்டங்களுக்கு ஏரி, குளம், கம்மாய் அமைத்து விவசாயத்தை ஏற்படுத்தியது.

பாதசாரிகளுக்கு உணவு, தங்கும் வசதி ஏற்படுத்தும் விதமாக மதுரையில் பெரியதொரு அன்னச்சத்திரம் அமைத்தார். அது 'மங்கம்மாள் சத்திரம்' என இன்றும் அழைக்கப்படுகிறது. இன்றும் அதனை தெற்கு சீமையில் பார்க்கலாம்.

வறண்ட நிலங்களில் விவசாயத்தை பரப்பியது, திருட்டு தொழில் செய்வோரை திருத்தி மறு வாழ்வு ஏற்படுத்தியது, கல்வி நிலையம் அமைத்தது போன்ற அறிய பல சாதனைகளை செய்தவர் தான் வீரமங்கை ராணி மங்கம்மாள்.

இறுதிக்காலம்:

மிகத்திறமையாக ஆட்சி செய்த இராணி மங்கம்மாளால் தனது பேரனான விஜயரங்க சொக்கநாத நாயக்கருடன் நேரம் செலவழிக்க இயலாமல் போனது. எனவே, தவறான வழிகாட்டுதலின் பேரில் விஜய ரங்க சொக்கநாத நாயக்கர் இராணி மங்கம்மாளைத் தனது எதிரியாகக் கருதினார். எனவே தனது பெயரனாலேயே அவர் சிறையிலிடப்பட்டார். இதுவே அவரது வாழ்நாளின் இறுதியாயிற்று இராணி மங்கம்மாள் 1706- ல் இவ்வுலகை விட்டு மறைந்தார்.

ராணி மங்கம்மாளை பற்றிய கும்மி பாட்டு: 

வீராதி வீரம்மம்மா வீரகுலத்து ராணியம்மா
ராஜகம்பளத்து நாயக்கர் குலம் பிறந்த
ராணியார பாரு, ராணி மங்கம்மானு பேரு
கோவில் குளம் கட்டி வெச்சு,
சரித்திரத்தில் இடம் பிடிச்ச சாதனையாளர் யாரு ராணி மங்கம்மானு பேரு..
மதுரைய ஆண்டவங்க மானமுள்ள ஜாதியிங்க,
மறக்குல ராணியம்மா மங்கயர்குல திலகமம்மா.
ராணியார பாரு ராஜ கம்பளத்து ஆளுகள பாரு ..
மண்ணு உள்ளவரை மங்கம்மாளை பாடி நிற்கும்
நாடு உள்ளவரை நாயக்கர் புகழ் பாடி நிற்கும்
தந்தனனனே நானே தானே தந்தேநானே நானே...


இராணி மங்கம்மாள் இந்து மதமாக இருந்த போதிலும் இதர மதத்தினரையும் மதித்து வாழ்ந்து வந்தார். இஸ்லாமியர்களுக்கு தர்கா, கிருஸ்தவர்களுக்கு வழிபாட்டுத் தளம், அவர்கள் நினைப்புக்கு வழிபாடு செய்யும் உரிமை ஆகியவற்றை அமைத்து தந்தார் ராணி. இப்படிப்பட்ட நல்லிணக்க உணர்வு அக்காலகட்டத்தில் அதுவும் ஒரு இந்து இராணிக்கு, ஆதிக்க சாதியில் பிறந்த இராணிக்கு வருவது அரிதே.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக