புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:53 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 3 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 3 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 3 Poll_c10 
72 Posts - 77%
heezulia
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 3 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 3 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 3 Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 3 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 3 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 3 Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 3 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 3 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 3 Poll_c10 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 3 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 3 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 3 Poll_c10 
237 Posts - 76%
heezulia
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 3 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 3 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 3 Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 3 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 3 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 3 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 3 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 3 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 3 Poll_c10 
8 Posts - 3%
prajai
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 3 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 3 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 3 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 3 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 3 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 3 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 3 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 3 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 3 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 3 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 3 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
sram_1977
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 3 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 3 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்


   
   

Page 3 of 15 Previous  1, 2, 3, 4 ... 9 ... 15  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 19, 2014 11:21 pm

First topic message reminder :

பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 3 Gr0jENBiR6aUXea2MTWR+parlimentelection2014

 பாராளுமன்றத்திற்கு 6 கட்டமாக தேர்தல் அட்டவணை 3-ந்தேதி வெளியாகலாம்?

தற்போதைய பாராளுமன்றதின் பதவிக் காலம் வரும் மே மாதம் 31-ந்தேதியுடன் முடி கிறது.

இதையடுத்து பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்து வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்து வருகிறது.

தேர்தல் அட்ட வணையை வெளியிட தலைமை தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது.  பாராளுமன்ற தேர்தல் 6 கட்டங்களாக நடத்தப்படும் என தெரிகிறது. அடுத்த மாதம் (மார்ச்) 6-ந்தேதி முதல் 10-ந்தேதிக்குள் தேர்தல் தேதி அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளதாக தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

இதற்கிடையே வரும் 3-ந்தேதி தேர்தல் அட்டவணை வெளியாகலாம் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விடும்.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 24, 2014 5:52 pm

அமைச்சர்கள் தன் காலில் விழுந்து கும்பிட்டுவதை ஜெயலலிதா ரசிக்கிறார்: விஜயகாந்த்

திருச்சி: அமைச்சர்கள் காலில் விழுந்து கும்பிடுவதை ஜெயலலிதா ரசிக்கிறார் என்று திருச்சியில் பிரசாரம் மேற்கொண்ட விஜயகாந்த் கூறினார்.

திருச்சி காஜாப்பேட்டை பகுதியில் தே.மு.தி.க. வேட்பாளர் விஜய் குமாரை ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, ''கடந்த முறை வெற்றிப் பெற்றவர்தான் திருச்சியில் அ.தி.மு.க. சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். எல்லாம் செய்து தருவதாக கூறிய எம்.பி. மீண்டும் ஓட்டுக்கேட்டு வருவார். இப்பவும் அதையே சொல்லுவார். எதுவும் செய்யமாட்டார்.

மின்சாரம், வேலைவாய்ப்பு, குடிநீர் உள்ளிட்ட மக்களுக்கு தேவையானதை செய்யாத, அ.தி.மு.க.விற்கும் தி.மு.க.வுக்கும் ஓட்டு போடாதீங்க. காவிரி டெல்டாவில் மீத்தேன் வாயு திட்டத்தில் முதலில் கையெழுத்திட்டது தி.மு.க. இப்போது, அந்த  திட்டத்திற்கு  எதிர்ப்பு தெரிவிக்கிறது. கருணாநிதி ஐந்து முறையும், மூன்று முறை ஜெயலலிதாவும் முதல்வராக இருந்து நாட்டை கெடுத்துவிட்டனர். இந்த இரண்டு பேரையும், இரண்டு கட்சியையும் நாட்டைவிட்டே விரட்டணும்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது. குறிப்பாக திருச்சியில் மிக மோசமாக உள்ளது. நேருவின் தம்பி ராமஜெயம் கொலை செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகியும் இன்னும் கொலையாளிகளை கண்டுபிடிக்கவில்லை. ஸ்காட்லாந்துக்கு அடுத்தபடியாக ஒப்பிடப்படும் தமிழக போலீஸ் ராமஜெயம் கொலையை கண்டுபிடிக்காமல் தடுமாறுகிறது. அம்மா குடிநீர், அம்மா உணவகம்னு பேரு வச்சீங்களே அதைப்போல டாஸ்மாக் கடைகளுக்கும் 'அம்மா டாஸ்மாக்' என்று பெயர் வைக்க வேண்டியதுதானே.

சட்டசபையில் அனைவரும் ஜால்ரா அடிக்கிறார்கள். ஜெயலலிதா போகும்போது, ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் வரிசையாக நின்று தரையை பார்ப்பார்கள். ஏன் இங்கு நிற்கிறீர்கள், அனைவரும் போய் உங்களது துறை சம்மந்தமான வேலையை பாருங்கள் என்று சொல்லலாம் இல்லையா? ஆனால், சொல்ல மாட்டாங்க. ஏன் என்றால் அமைச்சர்கள் குனிந்து கும்பிடு போடுவதை அவங்க ரசிக்கிறாங்க. அவர்களை இப்படி பார்ப்பதில் அவருக்கு ஆசை அதிகம்" என்று பேசினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 24, 2014 5:53 pm

குடிப்பழக்கம் உள்ளவர்கள் எனக்காக வாக்கு சேகரிக்க வேண்டாம்: வைகோ கண்டிப்பு!

விருதுநகர்: வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதற்காக போலீஸ் ஜீப்பிலும், 108 ஆம்புலன்சிலும் ஆளும் கட்சியினரும், ஆண்ட கட்சியினரும் பணம் கொண்டு செல்வதாக குற்றம் சாட்டியுள்ள வைகோ, குடிப்பழக்கம் உள்ளவர்கள் தனக்காக வாக்கு சேகரிக்க வேண்டாம் என்று கண்டிப்புடன் கூறியுள்ளார்.

தேசிய ஜனநாயக் கூட்டணி சார்பில் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விருதுநகரில் இன்று (24ஆம் தேதி) தேர்தல் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசும்போது, ''பெரும் வணிகர்களாக விளங்கும் விருதுநகர் வியாபாரிகளைக் காக்க சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை தடுக்க நான் தொடர்ந்து குரல்கொடுத்து வருகிறேன். இதை நிறைவேற்ற மோடி பிதமராக வேண்டும். தமிழகத்திலுள்ள 40 தொகுதிகளையும் சேர்க்காமலேயே மோடி பிரதமராவது உறுதி. பா.ஜ.க. 272 தொகுதிகளில் தனித்தும் கூட்டணிக் கட்சிகளோடு சேர்ந்து மொத்தம் 350க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெறும். இருப்பினும், தமிழகத்தின் ஆதரவை வலுப்படுத்தினால் தமிழக மக்களின் வாழ்வாதாரங்களை நம்மால் காப்பாற்ற முடியும்.

ஜாதி, மதம், இனம் என எந்த வேறுபாடும் பார்க்காமல் அனைவரையும் சமமாகக் கருதுபவன் நான். எல்லோருக்கும் நான் நண்பன். விருதுநகரில் தொழில்களைக் காப்பாற்ற எம்.பி.யாக இருந்தபோதும், இல்லாதபோதும் தொடர்ந்து போராடி வருகிறேன். காமராஜர் மணிமண்டபம் கட்டுவதற்கு அனுமதி பெற்றுக்கொடுத்தவன் நான். எங்கே தமிழனுக்குத் துன்பம் வந்தாலும் அதைத் தடுக்க போராடுவேன்.

வாக்காளர்களாகிய நீங்கள்தான் நீதிபதிகள். பணம் வெள்ளமாக வரப்போகிறது. அது உங்கள் பணம்தான். ரூ.1000 கோடிக்கு திட்டம் தீட்டினால் அதில் ரூ.200 கோடி கமிஷனாகப் போய்விடுகிறது. எனவே, அவர்களிடம் பணம் நிறைய உள்ளது. வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதற்காக போலீஸ் ஜீப்பிலும், 108 ஆம்புலன்சிலும் ஆளும் கட்சியினரும், ஆண்ட கட்சியினரும் பணம் கொண்டு செல்கிறனர். ஆனால் நான் நேர்மையானவன், நாணயமானவன். நீதிபதிகளாகிய நீங்கள் நல்ல தீர்ப்பு வழங்குங்கள். பம்பரம் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றிபெறச் செய்யுங்கள்'' என்றார்.

மேலும், ஏப்ரல் 1ஆம் தேதி தாம் வேட்புமனுத் தாக்கல் செய்யப் போவதாகவும், அன்று மாலை விருதுநகர் தேசபந்து மைதானத்தில் தன்னை ஆதரித்து தமிழருவி மணியன் பேச இருப்பதாகவும் கூறிய அவர், குடிப்பழக்கம் உள்ளவர்கள் தனக்காக எங்கும் வாக்குக் கேட்கவோ, கட்சி அலுவலகத்திற்கோ செல்லக் கூடாது என்றும் கட்சியினருக்கு கண்டிப்புடன் கூறினார்.

தோப்பூர் பிரசாரம்

இதைத்தொடர்ந்து, விருதுநகர் தொகுதிக்குட்பட்ட தோப்பூரில் வைகோ பிரசாரம் செய்தார்.

அப்போது பேசிய அவர், ''200ரூபாய் வருமானத்திற்காக வெயிலில் கிடந்து இளநீர் விற்கும் ஒரு ஏழை பெண் என்னிடம் வந்து 'என் ஓட்டு உங்களுக்குத்தான்' என்று கூறுகிறாள். அந்த அளவுக்கு ஏழை பெண்கள் மனதிலே, தாய்மார்கள் மனதிலே இடம் பெற்றிருக்கிறேன். இதற்கு என்ன காரணம்? வைகோவுக்கு ஜாதி தெரியாது. மதம் தெரியாது. அவன் மக்களுக்காக உழைப்பான் என நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது'' என்றார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 24, 2014 5:55 pm

இரட்டை இலை சின்னம்: தலைமை தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க. புகார்!

புதுடெல்லி: சென்னையிலுள்ள சிற்றுந்துகளில் உள்ள இரட்டை இலை சின்னத்தை அழிக்கக்கோரி தி.மு.க. சார்பில் டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இயக்கப்படும் சிற்றுந்துகளில் உள்ள இரட்டை இலை சின்னத்தை அழிக்க வேண்டும்; எம்.ஜி.ஆர். சமாதி நுழைவு வாயிலில் உள்ள இரட்டை இலை சின்னத்தையும் மறைக்க உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியிலுள்ள தலைமை தேர்தல் ஆணையத்திடம், டி.ஆர்.பாலு  உள்ளிட்ட திமுகவினர் மனு கொடுத்துள்ளனர். மேலும், டி.ஜி.பி. ராமானுஜம் தேர்தல் பணிகளை கவனிக்கக் கூடாது எனவும் அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 24, 2014 5:59 pm

100 தலைப்புகளில் தி.மு.க., தேர்தல் அறிக்கை ;இந்தியா முழுவதும் மக்கள் நலப்பணியாளர்கள்

சென்னை: நதிகள் இணைப்பு, மத்திய அரசு தேர்வுகளை மாநில மொழிகளில் எழுத அனுமதித்தல், தமிழ் ஆட்சிமொழி, இலங்கை தமிழர் காத்தல், கச்சத்தீவு மீட்பு, சேதுசமுத்திர திட்டம் நிறைவேற்ற உறுதி, நாடு முழுவதும் 10 லட்சம் மக்கள் நலப்பணியாளர்கள், மகளிருக்கு 33 சத இட ஒதுக்கீடு, தூக்கு தண்டனை ரத்து செய்யப்படும், பெண்கள் பாதுகாப்பு சட்டம், சமூநீதி காத்தல், மதச்சார்பின்மை , கல்விக்கடன் விவசாயக்கடன் தள்ளுபடி என 100 தலைப்புகளில் பல்வேறு வாக்குறுதிகள் தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க., கட்சி தலைவர் கருணாநிதி அறிவாலயத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். வெளியிடும் முன்னதாக கருணாநிதி நிருபர்களிடம் பேசியதாவது;

1916 ல் திராவிடர் உரிமைக்காக குரல் கொடுத்த தியாகராயரும், டாக்டர் நடேசனும் இணைந்து துவங்கிய இயக்கம், தொடர்ந்து 1925ல் பெரியார் துவக்கிய சுயமரியாதை இயக்கம், தொடர்ந்து இந்தி திணிப்பு எதிர்ப்பு, போராட்டத்தினால் வலுப்பெற்றது. 1949 ல் இருந்து துவங்கிய தி.மு.க., ஏறக்குறைய 65 ஆண்டுகளாக தி.மு.க., மக்களுக்கு அரும்பாடு பட்டு வருகிறது.

இனம், மொழி, சமத்துவம், கலை, பண்பாடு, ஆகியவற்றை பாதுகாத்திட அயராது, ஒயாது தி.மு.க, பணியாற்றி வருகிறது. அன்றுமுதல் கொள்கை, லட்சியம் தடம் புரளாமல், பார்த்து வரும் வற்றாத ஜீவநதியாக தி.மு.க., பணியாற்றி வருகிறது. மாநில அரசியலில் மட்டுமின்றி, இந்தியாவில் வலுவான பொருளாதாரம் ஏற்பட, உலகளவில் நாட்டின் மதிப்பை உயர்த்திட தி.மு.க., பணியாற்றி வருகிறது. ஆல்போல் தழைத்து ஆசானாக விளங்கி வருகிறது. அராஜதாக்குதல், நள்ளிரவில் வீடு புகுந்து தாக்குதல் என பல போராட்டங்களை கண்டு மக்கள் தொண்டே மகத்தான தொண்டு என முழங்கி பணியாற்றி வரும் கழகத்தை பாதுகாத்து வரும் தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இன்று வெளியாகும் தேர்தல் அறிக்கை 100 தலைப்புகளில் வாக்குறுதிகள் அளித்துள்ளோம். தமிழகத்திற்கு தி.மு.க.,எதுவும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் எங்களின் சாதனைகளையும் இந்த அறிக்கையில் விளக்கியுள்ளோம். இவ்வாறு கருணாநிதி கூறினார்.

தூக்குத்தண்டனை ரத்து செய்ய வலியுறுத்தல்: தேர்தல் அறிக்கை முழு விவரம் வருமாறு: மத்திய அரசு அலுவகங்களில் மாநில மொழிக்கு இடம் ; மத நல்லிணக்க வரலாறு படைப்போம், மதச்சார்பற்ற ஆட்சி அமைப்போம். தமிழ் உயர்நீதி மன்றத்தில் வழக்காடுமொழியாக்க பாடுபடுவோம் * மத்திய அரசு அலுவலகங்களில் மாநில மொழி ஆட்சி மொழியாக்குதல் * சமூகநீதி காத்தல், மதச்சார்பின்மை * சமத்துவபுரம் அமைத்தல்* மகளிர், முதியோர், குழந்தைகள், அரவாணி, மீனவர்கள், நெசவாளர், தொழிலாளர், சிறுபான்மை என அனைத்து சமூகத்தினருக்கும் பாதுகாப்பு * தனியார் துறையில் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு*பழங்குடியினர் பட்டியலில் மீனவர்களுக்கு இடம் * ஈழத்தமிழர் காப்பதில் உறுதி * கச்சத்தீவு மீட்க நடவடிக்கை * தூக்குத்தண்டனை ரத்து செய்ய வலியுறுத்தல்* சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு * நெல் , கரும்பு, ஆகியவற்றுக்கு உரிய ஆதாரவிலை * விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல்

வருமான வரி உச்சவரம்பு ரூ. 6 லட்சம்

* 10 லட்சம் மகளிருக்கு மக்கள் நலப்பணியாளர் வேலை* 10 லட்சம் இளைஞர்களுக்கு மக்கள் பணியாளர் வேலை * அரசு சாரா அமைபு வாரியம் அமைத்தல் * பொதுத்துறையில் பாதுகாப்பு * ரயில், விமான போக்குவரத்து முன்னேற்றம்* பெண்கள் எதிரான குற்றத்திற்கு கடும் தண்டனை* நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சத இட ஒதுக்கீடு* தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அதிக அதிகாரம்* சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு வலியுறுத்தல்* ஒட்டுமொத்த வருவாயில் 60 சதம் மாநில அரசுக்கு பங்கிட்டு கொடுத்தல்* 10 ம்வகுப்பு படித்த 10 லட்சம் பேருக்கு சாலைப்பணியாளர் வேலை

பாம்பன் பகுதியில் புதிய ரயில்பாலம்

* காவிரி மேலாண் வாரியம், காவிரி ஒழுங்குமுறை குழு * பெண்கள் வருமானவரி உச்சவரம்பு 7. 20 லட்சமாக நிர்ணயம்* தனிநபர் வருமான வரி 6 லட்சமாக உயர்வு* நதிகள் தேசியமயமாக்கல், நதிநீர் இணைப்பு * சுயமரியாதை திருமணத்திற்கு சட்டப்படி அங்கீகாரம்* சேதுசமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும் * குலசேகர பட்டனத்தில் 2வது விண் ஏவுதளம் அமைக்கப்படும்* தாழ்த்தப்பட்டோருக்கென சர்ச்சார் குழு பரிந்துரையை நடைமுறைப்படுத்தல் *ரங்கநாத்மிஸ்ரா குழு பரிந்துரைகள் இஸ்லாமியர்களுக்கு கிடைக்க வழிவகை * பாம்பன் பகுதியில் புதிய ரயில்பாலம்* புதுச்சேரிக்கு தனிமாநில அந்தஸ்து

* இந்தியாவை வளர்ந்த நாடுகளுடன் முதன்மையாக்க முயற்சி * சட்டவிரோத தடுப்பு சட்டத்தில் திருத்தம்* சாதிவாரி கணக்கெடுப்புக்கு வலியுறுத்தல் * கல்வி வேலைவாய்ப்பில் திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு* திருநங்கைகள் 3வது பாலினமாக அங்கீகரித்தல்* மீனவர்களை பாதுகாத்திட தனி அமைச்சகம்* மத்திய அரசு தேர்வுகள் மாநில மொழியில் எழுத அனுமதித்தல்* குளச்சல் துறைமுகம் நவீனப்படுத்தப்படும்* சென்னை- மதுராவயல் பறக்கும் சாலை திட்டம் நிறைவேற்றப்படும்*

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 24, 2014 6:00 pm

ம.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அபத்தம்! நாட்டின் பெயரை மாற்ற ஒப்புக் கொள்ளுமா பா.ஜ.,?

நாட்டின் பெயரை, 'இந்திய ஐக்கிய நாடுகள்' என்று மாற்ற வேண்டும்' என, அபத்தமான கோரிக்கை, வைகோ நேற்று வெளியிட்ட, ம.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. 'தேசிய கட்சியும், தமிழகத்தில் ம.தி.மு.க., இடம் பெற்றுள்ள கூட்டணிக்கு தலைமை வகிப்பதுமான, பா.ஜ., இந்த கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளுமா?' என, அரசியல் வல்லுனர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ம.தி.மு.க.,வின் தலைமை அலுவலகமான, சென்னை தாயகத்தில், ம.தி.மு.க., தேர்தல் அறிக்கையை, அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ வெளியிட, அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி பெற்றுக் கொண்டார்.தேர்தல் அறிக்கையில், எட்டாவது பக்கத்தில், 'இந்திய ஐக்கிய நாடுகள் என, நாட்டின் பெயரில் மாற்றம் வேண்டும்; இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் - மறு ஆய்வு தேவை' என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள விவரம்:இந்திய அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்து, 64 ஆண்டுகளாகி விட்டது. தேவைக்கு ஏற்ப, இதுவரை, 98 முறை திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட போது, அதன் நோக்கம், இந்தியாவில் கூட்டு ஆட்சி முறையை செயல்படுத்துவதாக இருந்தது. ஆனால், வேற்றுமையில் ஒற்றுமை, தேசிய ஒருமைப்பாடு என்றெல்லாம் முழங்கியவர்கள், கொஞ்சம் கொஞ்சமாக, மத்திய அரசில் அளவற்ற அதிகாரங்களை குவித்து வைத்துக் கொண்டனர். மாநிலங்களின் கூட்டு அமைப்பு தான், இந்திய நாடாக ஒருங்கிணைத்து காட்சி தருகிறது என்பதை மறந்து விட்டனர். மாநிலங்கள், அதிகாரம் அற்ற வெறும் கூடுகளாகவே இருக்க வேண்டும் என, கருதுகின்றனர். இன்று, இந்தியா ஒற்றை ஆட்சி முறை நாடாக மாற்றப்பட்டு விட்டது. இந்தியாவின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்தவும், மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கி, உண்மையான கூட்டு ஆட்சியை நிலை பெறச் செய்யவும், கடந்த கால அனுபவங்களை கருத்தில் கொண்டு, அம்பேத்கர் சுட்டிக்காட்டியது போல், இந்திய அரசியல் சாசனம் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும்.

இந்த நாடு, 'இந்திய ஒன்றியம்' என, அழைக்கப்படுவதற்கு பதிலாக, 'இந்திய ஐக்கிய நாடுகள்' என, அழைக்கப்பட வேண்டும் என, ம.தி.மு.க., வலியுறுத்துகிறது. அந்த நோக்கத்தை, நிறைவேற்றுவதற்கான முன் முயற்சிகளை, ம.தி.மு.க., மேற்கொள்ளும்.மத்திய, மாநில உறவுகள் சீரமைப்புக்கும், வலிமையான கூட்டு ஆட்சி முறைக்கும், மாநில சுயாட்சி நிலைபெறத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தமிழ் மொழி உட்பட, 23 மொழிகளையும், மத்திய அரசு, ஆட்சி மொழியாக்க வேண்டும். இலங்கையில், ஐ.நா., சபை பொது ஓட்டெடுப்பு நடத்த மத்திய அரசு ஆதரவு அளிக்க வேண்டும். மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதி நீரை நாட்டுடமையாக்கி, தேசிய நதிகளாக அறிவிக்க, மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கூடங்குளம்:கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட வேண்டும், விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்க வேண்டும், இலங்கையில் தமிழர் பகுதியில் பொது ஓட்டெடுப்பு நடத்த வேண்டும், இந்தியாவில் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, பல சர்ச்சைக்குரிய கோரிக்கைகள், தேர்தல் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன. 'வைகோவின் சில கோரிக்கைகள், இந்திய நாட்டுக்கு ஆபத்தை விளைவிப்பவை. அவர் கட்சியை அங்கமாகக் கொண்டுள்ள கூட்டணி தலைமையான பா.ஜ., இது குறித்து என்ன செய்யப் போகிறது? இந்த விஷயத்தை, உன்னிப்பாக கவனிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது' என, அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதிக இடங்களில் வெற்றி பெறுவோம்: வைகோ உறுதி : சென்னை: தமிழகத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி, அதிக இடங்களில் வெற்றி பெற்றால், தமிழக மக்களுக்கு நன்மை கிடைக்கும்,'' என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ கூறினார்.அவரது பேட்டி: லோக்சபா தேர்தலில், தேசியஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது. தமிழகத்தில் தே.ஜ., கூட்டணி உருவாக காரணமாக இருந்த தமிழருவி மணியன், பொன் ராதாகிருஷ்ணன், ராமதாஸ், விஜயகாந்திற்கு என் நன்றி. தே.ஜ., கூட்டணிக்கான அறிவிப்பை, ராஜ்நாத்சிங் வெளியிட்ட போது எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தேன். விருதுநகரில் முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், 'தேர்தல் களத்தில், பல கட்சிகள் போட்டியிடுகின்றன. அந்த கட்சிகளுக்கு ஓட்டு போடுவதால் பலன் இல்லை; வெற்றி பெற போவதில்லை. உங்கள் ஓட்டுக்களை வீணாக்க வேண்டாம்' என, குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில், தே.ஜ., கூட்டணி, அதிக இடங்களில் வெற்றி பெற்றால், தமிழக மக்களுக்கு நன்மை கிடைக்கும். காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்க முடியாது. அந்த கட்சியின் ஆதரவில், வேறு எந்த கட்சிகளும் ஆட்சி அமைக்க முடியாத நிலை உருவாகும். இவ்வாறு வைகோ கூறினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 24, 2014 6:06 pm

அம்மா பிரதமர் ஆவாரு! நீங்க டி.வி-யில அதைப் பார்ப்பீங்க! - ராமராஜன் ரகளை ஜோசியம்!

கண்ணைப் பறிக்கும் கலர் சட்டை போட்டு திரையில் கதாநாயகனாகக் கலக்கிய ராமராஜன், இப்போது பிரசாரத்திலும் கலக்கிவருகிறார். தனது நையாண்டி பேச்சுகளால் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு புறப்பட்டுவிட்டார். ராமநாதபுரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் அன்வர் ராஜாவுக்கு வாக்கு கேட்டுப் பிரசாரம் செய்ய வந்தார்.

அப்போது, ''இந்தத் தேர்தல்தான் தமிழகத்தைச் சேர்ந்த அம்மாவைப் பிரதமராக்க நடைபெறும் தேர்தல். அம்மா பிரதமரானால்தான், தமிழுக்கும் தமிழ் மொழிக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னாடியே துணிச்சலாக வேட்பாளர்களை அறிவித்துப் பிரசாரத்தையும் தொடங்கியவர் புரட்சித் தலைவி அம்மாதான். ஆனா பாருங்க, இன்ன தேதி வரை சில கட்சிகள் ஒண்ணு இங்கிட்டு போகுது... ஒண்ணு அங்கிட்டு போகுது. தி.மு.க-வில் ஸ்டாலின் எங்கள் கூட்டணி கதவு மூடியாச்சுனு சொன்னார். ஆனா, கொல்லைப் பக்கமா கதவைத் திறந்து வெச்சு வாங்க வாங்கனு கம்யூனிஸ்ட்ட கூப்பிடுறார்.

40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் அம்மாவை எதிர்த்துத் தனியாகச் சந்திக்க எந்தக் கட்சிக்கும் தைரியம் இல்லை. தமிழகத்தில் எத்தனையோ கட்சிகள் இருக்கு. பெரிய கட்சி, சிறிய கட்சி, பக்கோடா கட்சி, துக்கடா கட்சிலாம் இருக்கு. ஆனா, எந்தக் கட்சிக்கும் ஒரு பெண் தலைவரா இருக்காங்களா? அ.தி.மு.க-வில் மட்டும் அம்மா தலைவராக இருக்காங்க.

வட நாட்டு தலைவர்களே அம்மா பிரதமர் ஆவாங்கனு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. பி.ஜே.பி-யைச் சேர்நத அத்வானி, 'வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வராது. பி.ஜே.பி-யும் ஆட்சிக்கு வராமல் போனால் ஒரு மாநில தலைவர்தான் ஆட்சிக்கு வருவார்’ என்று சொல்லி இருக்கார். அந்த மாநிலம் தமிழகம்தான் எனச் சொல்லாமல் சொல்லிவிட்டார். பத்திரிகையாளர் சோ சொல்றார்... 'மோடிக்குப் பிரதமர் பதவி கிடைக்கலைனா அந்தப் பதவி அம்மாவுக்குத்தான் கிடைக்கும்’னு.

இந்தியாவில் உயரிய பதவி இரண்டுதான். ஒண்ணு ஜனாதிபதி, அடுத்தது பிரதமர். நம்ம நாட்டைச் சேர்ந்த(?) வெங்கட்ராமன் ஜனாதிபதியா இருந்தார். அதுக்கு அப்புறம் நம்ம ராமேஸ்வரத்தைச் சேர்ந்த அப்துல் கலாம் ஜனாதிபதியா இருந்தார். ஆனா, பிரதமர் பதவிக்கு நம்ம நாட்டைச் சேர்ந்த(?) யாரும் இருந்தது இல்ல. இப்ப அந்த வாய்ப்பு வந்திருக்கு.

கர்நாடகத்தைச் சேர்ந்த தேவகவுடா 23 எம்.பி-யை வெச்சு பிரதமர் ஆகும்போது 40 எம்.பி-யை வெச்சு அம்மா பிரதமராவதை எல்லாரும் டி.வி-யில பாக்கத்தான் போறீங்க. 99-ல் நான் நாடாளுமன்ற உறுப்பினரா இருந்தேன். அப்ப நாடாளுமன்ற கூட்டத்தில் பிரதமர் வாஜ்பாய் பேசிக்கிட்டு இருந்தார். இந்தி தெரியாத நானும் அவர் பேச்சைக் கேட்டுகிட்டு மண்டையை ஆட்டிக்கிட்டு இருந்தேன். அப்ப என் பின்னால் குறட்டைச் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். தேவகவுடா தூங்கிட்டு இருந்தார். இப்படி தூங்குறவரா நம்ம நாட்டு பிரதமரா இருந்தார்னு வேதனைப்பட்டேன். அப்படியானால் தூங்காமல் பணியாற்றிவரும் அம்மா ஏன் பிரதமர் ஆகக் கூடாது?

தமிழ்நாட்டில் காங்கிரஸ் நிலை பரிதாபமா இருக்கு. யாரும் போட்டிப் போடவே யோசிக்கிறாங்க. வாசன் சொல்றார்... 40 தொகுதியிலும் பிரசாரம் பண்ணுவேன். ஆனால் நான் நிக்க மாட்டேன்னு சொல்றார். காங்கிரஸ் தலைவர்கள் எல்லாருமே தேர்தல்ல நிக்க பயப்படறாங்க.

அம்மா அரிசி இலவசமா கொடுகறாங்க. கஷ்டப்பட்ட மக்களுக்கு ஆட்டையும் மாட்டையும் கொடுத்தாங்க. ஆடு குட்டி போடும்போது... அது காசு. பசு லிட்டர் கணக்கா பால் கறக்கும். அதுவும் காசு. பால் கறக்கலையா... 'செண்பகமே செண்பகமே’னு பாட்டு பாடுங்க. தன்னால பால் வரும்'' என்று பாடியும் காண்பித்தார்.

''அம்மா கையால லேப்டாப் வாங்குனவுங்க இந்தத் தேர்தல்ல முதல் முறையா கன்னி ஓட்டு போடப்போறாங்க. அவங்க மொத்த ஓட்டும் அம்மாவுக்குத்தான். அம்மா படிக்கும் பிள்ளைகளுக்கு மார்க் போடுறாங்க. ஆனா குஷ்புவும் நமீதாவும் 'மானாட மயிலாட' நிகழ்ச்சியில உக்காந்து மார்க் போடுறாங்க.

ஒரு இட்லி ஒரு ரூபாய்க்குக் கொடுத்து ஏழைகள் வயிறு நிரம்பவைத்தவர் அம்மா. வேணும்னா நீங்களும் ஒரு ரூபாய்க்கு இட்லி போட வேண்டியதுதானே? தமிழகத்தில மின்சார பிரச்னைக்குக் காரணம் கருணாநிதி. அம்மா வந்துதான் அதைக் கொஞ்சம் கொஞ்சமா சரிசெஞ்சு இருக்காங்க. அம்மா செய்வாங்க. ராஜீவ் கொலையில் குற்றம்சாட்டபட்டவர்களை விடுவித்தது அம்மாவின் துணிச்சல். அப்படித் துணிச்சலானவங்க கையிலதான் பிரதமர் பதவி இருக்கணும்'' என்று பேசி முடித்தார்.

கலக்க ஆரம்பித்துவிட்டார் கலர் சட்டைக்காரர்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 24, 2014 6:19 pm

விளக்கம் சொல்லியே அலுத்துப்போகும் ஆ.ராசா! - குளிர் தொகுதியில் உஷ்ண பிரசாரம்

தமிழகத்தின் மேற்கு மூலையில் அமைந்திருக்கும் நீலகிரி, இப்போது இந்திய அளவில் கவனிக்கப்படும் தொகுதியாக மாறியுள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசா இந்தத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதுதான் அதற்குக் காரணம்!

 தி.மு.க. தனது வேட்பாளர் பட்டியலை அறிவித்தபோது, 'ஆ.ராசாவுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு’ என்பது தேசிய மீடியாக்களில் தலைப்புச் செய்தியானது. அந்த அளவுக்கு நாடே உற்றுநோக்கும் தொகுதியாக மாறியுள்ளது நீலகிரி. கடந்த 2009-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரியில் போட்டியிட்ட ஆ.ராசா, தேர்தலில் வெற்றிபெற்று, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். அடுத்த ஓராண்டில் '2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் விதிகளை மீறியதால் 1.76 லட்சம் கோடி ரூபாய் வருமான இழப்பை அரசுக்கு ஏற்படுத்தி, மிகப்பெரிய முறைகேட்டுக்கு ஆ.ராசா காரணமாக இருந்திருக்கிறார்’ என்று மத்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறை அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய... அமைச்சர் பதவியை இழந்தார்; சிறையிலும் அடைக்கப்பட்டார் ஆ.ராசா.

2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. படுதோல்வியைச் சந்தித்து, ஆட்சியை இழந்தது. அப்போது, 'தமிழகத்தில் தி.மு.க. தோல்விக்கு ஸ்பெக்ட்ரம் மிக முக்கியக் காரணம்'' என்று கட்சிக்காரர்களே சொன்னார்கள். 'தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்புக் கேட்டு கட்சித் தலைமைக்கு நெருக்கடித்தர மாட்டேன்’ என கூட்டங்கள்தோறும் முழங்கிய அவர்தான், விருப்ப மனுவைத் தாக்கல்செய்து, இப்போது வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

''மத்திய காங்கிரஸ் அரசு செய்த மிகப்பெரும் ஊழல் 2ஜி ஸ்பெக்ட்ரம். இந்த ஊழலில் ஆ.ராசா மீது சி.பி.ஐ. குற்றப் பத்திரிகை தாக்கல்செய்து, நீதிமன்ற விசாரணை நடந்துவருகிறது. ஆனால், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கியுள்ள ஆ.ராசாவை, நீலகிரி வேட்பாளராக கருணாநிதி அறிவித்துள்ளார். ஊழல் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட அனுமதி கொடுத்ததை எப்படி ஏற்க முடியும்?'' என ஆ.ராசாவை மையப்படுத்தி ஜெயலலிதா கேள்விகளை எழுப்புகிறார்.

''ஊழலின் உச்சத்தில் ஊட்டி உள்ளது. ஏனென்றால் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஒன்றரை ஆண்டு காலம் திகார் சிறையில் இருந்தவர்தான் உங்கள் தொகுதி எம்.பி. ஆ.ராசா. அவருக்கு தி.மு.க-வில் இதே நீலகிரி தொகுதியில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ராசாவுக்கு வாக்களித்தீர்கள் என்றால், நீலகிரி தொகுதி மக்களும் ஊழலுக்குத் துணைபோகின்றனர் என்று கூறுவார்கள்'' என்கிறார் விஜயகாந்த்.

தலைவர்களின் பிரசாரத்தின்போது ஆ.ராசா மட்டுமல்லாமல், தி.மு.க. தலைவர் கருணாநிதியும் சேர்ந்தே கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறார். ராசாவுக்கு மீண்டும் போட்டியிட ஏன் வாய்ப்பு அளிக்கப்பட்டது என்பதற்கு பதில் சொல்ல வேண்டிய நெருக்கடி தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு ஏற்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போது இதுவரை செய்ததையும், இனி செய்யப்போவதையும் சொல்லி வாக்கு கேட்க வேண்டிய ஆ.ராசாவுக்கு, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பற்றியே நீண்ட நேரம் விளக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. 

''என்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மையற்றவை. இதனை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன். எனக்கு நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளது. அதைவிட மக்கள் மன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளது. நீலகிரி தொகுதி வாக்காளர்கள் அதனை நிர்ணயிப்பார்கள். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 1.76 லட்சம் கோடி ரூபாய் சம்பாதித்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் வருமானவரித் துறையினர் எனது சகோதரர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் சோதனை நடத்தினர். இதில், ஒரு பைசாகூட கிடைக்கவில்லை. இதனை சி.பி.ஐ-யே நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதேபோல, 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏதும் இல்லை என நிதித் துறை செயலர், நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இப்போது இந்த வழக்கில், தீர்ப்புக் கூறும் தருணம் வந்துள்ளது. ஜெயலலிதாவைப்போல நான் வாய்தா வாங்க மாட்டேன்'' என, ஒவ்வொரு பிரசாரக் கூட்டத்திலும் விளக்கம் கொடுத்துவருகிறார் ஆ.ராசா. மக்கள் இன்னும் ஸ்பெக்ட்ரம் ஊழலை மறந்து விடவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.

''நீலகிரியைப் பொறுத்தவரை ஊழலுக்கும் உண்மைக்கும் நடைபெறும் யுத்தம் இது. கம்சனை வதம்செய்த கண்ணனைப்போல, ஸ்பெக்ட்ரம் ஊழல் கம்சனை அம்மா அழிப்பார்'' என அ.தி.மு.க-வினர் பிரசாரத்தைத் தீவிரப்படுத்த, ''ஸ்பெக்ட்ரம் ஊழல் எல்லாம் இப்போது எடுபடாது. அதுகுறித்து மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். ஆ.ராசாவை வரவேற்க திரளும் கூட்டமே அதற்கு சாட்சி'' என்கின்றனர் தி.மு.க-வினர்.

''ஆ.ராசாவுக்குக் கூடும் கூட்டங்கள் உண்மைதான். ஆனால் அத்தனை பேரும் 'ஸ்பெக்ட்ரம் ராசா வருகிறார்...’ என்று அடைமொழி சொல்லிக்கொண்டல்லவா கூடுகிறார்கள்?'' என்று எதிர்க்கட்சிகள் கிண்டலடிக்கின்றன.

விரைவில் ஸ்பெக்ட்ரம் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளிக்கப்போகிறது. அதற்கு முன் ராசாவின் தலைவிதியை நிர்ணயிக்கப்போகிறது நீலகிரி மக்களின் தீர்ப்பு!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 24, 2014 6:20 pm

ஒவ்வொரு ஓட்டும் முக்கியம் அமைச்சரே!
பாண்டி ஆட்டத்தில் விறுவிறு

புதுவையில் கத்திரி வெயில் இப்போதே கண்கட்ட ஆரம்பித்துவிட்டது. காரணம்... அங்கே அறிவிக்கப்பட்ட மூன்று வேட்பாளர்கள். மத்திய அமைச்சர் நாராயணசாமி, என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன், பா.ம.க. வேட்பாளர் ஆனந்தராமன்... மூவருக்குமான இடியாப்பச் சிக்கல்தான் அங்கே அனல் பறப்பதற்குக் காரணம். ஆனாலும், முதல்வர் ரங்கசாமிக்கும் - மத்திய அமைச்சர் நாராயணசாமிக்கும் இடையேதான் 'பாண்டி’ ஆட்டம்.

 பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 3 P36

கட்சித் தொடங்கி என்.ஆர். காங்கிரஸ் சந்திக்கும் முதல் நாடாளுமன்றத் தேர்தல் என்பதால், புதுச்சேரியை அவ்வளவு எளிதில் நாராயணசாமிக்கு விட்டுக்கொடுக்க மாட்டார் ரங்கசாமி. இதில், மத்திய அமைச்சரின் நிலைதான் கொஞ்சம் கவலைக்கிடமாக உள்ளது. அமைச்சரின் ஆதரவாளர்களிடம் பேசினோம். ''தமிழகத்துல மூத்த காங்கிரஸ் தலைவர்களே தேர்தல்ல போட்டியிடாம ஒதுங்கும்போது, புதுச்சேரியில நாராயணசாமி தெம்பா களமிறங்குறாருன்னா சும்மா கிடையாது. தமிழகத்துல எப்படியும் காங்கிரஸ் ஒரு தொகுதிகூட தேறாதுன்னு ராகுலுக்குத் தெரியும். ஆனா, புதுச்சேரியில நிச்சயமா நாராயணசாமி ஜெயிச்சிடுவார்னு உறுதியா இருக்கார். நாராயணசாமி மீண்டும் எம்.பி. ஆயிட்டா தன்னுடைய செல்வாக்கை நிரூபிச்ச மாதிரியும் இருக்கும்; அதே சமயம் தென் இந்தியாவிலே ராகுல், சோனியா குடும்பத்தினரிடையே அதிக நெருக்கம் காட்டும் தலைவராகத் தன்னை உயர்த்திக்கவும் முடியும்னு நம்புறார்'' என்றனர்.

தினமும் விடியற்காலையில் எழுந்து தேர்தல் பிரசாரத்துக்கானப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறாராம் நாராயணசாமி. கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலின்போது ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் அவர். இந்த முறை சில ஆயிரம் வாக்கு வித்தியாசங்களே வேட்பாளரை வெற்றியடைய வைக்கும் என்பதைப் புரிந்துகொண்டு நூறு, இருநூறு வாக்குகளைக் கொண்டுள்ள அமைப்பு மற்றும் நிறுவனங்களிடம் மடி ஏந்திவருகிறார். தன்னைச் சந்திக்க வருபவர்களுக்கு உடனடியாகப் பொன்னாடை போர்த்தி அவர்களை அகமகிழவைக்கிறார்.

என்.ஆர். காங்கிரஸ் கூடாரத்தில் ராதாகிருஷ்ணனை வேட்பாளராக அறிவித்தபோது, ஆரம்பத்தில் கட்சி தொண்டர்களிடம் ஏகப்பட்ட அதிருப்தி இருந்தது. அதனைச் சரிசெய்து பிரசாரத்தைத் தொடங்கிவைத்த ரங்கசாமி இன்னும் களத்தில் இறங்காமல் மௌனமாக உள்ளார். ''ராதாகிருஷ்ணனுக்கு தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் என அனைத்துக் கட்சிகளிலும் நண்பர்கள் உள்ளனர். அதுமட்டுமில்லாமல் ஆளும் என்.ஆர். காங்கிரஸுக்கு நாராயணசாமி எவ்வளவு நெருக்கடி கொடுத்தார் என்பது மக்களுக்குத் தெரியும். காங்கிரஸ் தொகுதியான ஏனாம் பகுதியில் எங்களுக்குப் பெரும்பான்மையான வாக்குகள் கிடைக்கும். இன்னும் சில தினங்களில் ரங்கசாமியும் பிரசாரத்தில் களமிறங்குவார். அதில், நாராயணசாமி புதுச்சேரி மாநிலத்துக்கு என்னென்ன கொடுமைகளை இழைத்தார் எனப் பட்டியல் போட்டுப் பேசுவார்'' என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.   

பி.ஜே.பி. கூட்டணியில் புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் போட்டியிடும் என அறிவித்தும் பா.ம.க. வேட்பாளர் அனந்தராமன் விலகாமல் விடாப்பிடியாகப் பிரசாரம் மேற்கொண்டுவருகிறார். செல்லும் இடமெல்லாம் 'புதுவையில் நிச்சயமாக பா.ம.க போட்டியிடும்’ என்று ரங்கசாமிக்குத் தலைவலி கொடுத்துவருகிறார். இதுகுறித்து சிலர், 'அனந்தராமனால நிச்சயமா ஜெயிக்க முடியாது. அது அவருக்கே தெரியும். இருந்தாலும், ஏனோ ரங்கசாமிக்கு நெருக்கடி கொடுக்க நினைக்கிறார்'' என்கின்றனர்.

காமெடி நாடகங்களைப் பார்க்க புதுவை மக்கள் தயாராகி வருகின்றனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 25, 2014 12:32 am

சுபிட்சத்தில் சல்லாபிக்கும் 10 தொகுதிகள்!

தேர்தலால் பலதரப்பட்ட மக்களுக்கு குறுகிய கால சுபிட்சம் ஏற்படுவது, அனைவரும் அறிந்தது தான். ஆனால், இந்த விஷயத்தில், சில தொகுதிவாசிகள் மற்றவர்களை விட பாக்கியவான்கள். அந்த தொகுதிகளில், செல்வந்தர்கள் போட்டியிட்டு செலவழிப்பதால்; அடுத்த ஒரு மாதத்திற்கு எந்த வேலையும் பார்க்காமல், வருமானம் மட்டும் பார்க்கலாம் என்ற சவுகரியமான பருவநிலை, அந்த தொகுதிவாசிகளில் பலருக்கு கிடைத்துள்ளது.

அந்த வகையில், மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், கரூர், தஞ்சாவூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், தேனி மற்றும் திருநெல்வேலி தொகுதிகளில் சுபிட்ச பருவம் தொடங்கிவிட்டதாக, உளவுத் துறை போலீசார், அரசுக்கு தகவல் அளித்து வருகின்றனர்.

மத்திய சென்னை: தி.மு.க., வேட்பாளராக தயாநிதி மாறன் அறிவிக்கப் பட்டதுமே, வரப் போகும் பணத்தை நினைத்து கட்சிக்காரர்கள் மட்டுமின்றி, மற்ற கட்சி வேட்பாளர்கள் சிலரும் உற்சாகமாக இருக்க; ஆளும் கட்சி தரப்பும் 'பட்ஜெட்'ஐ அதிகரிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

ஸ்ரீபெரும்புதூர்: பெரும் தொழிலதிபர்களான ஜெகத்ரட்சகனும், கே.என்.ராமச்சந்திரனும் போட்டியிடுகின்றனர். இரு பெரு கார் மேகங்கள் மோதுகையில் கொட்டும் கனமழை போல, இங்கு சுபிட்சம் கொட்டுவதாக கூறப்படுகிறது. கணக்கில்லாத கட்டுகளால், பீடா கடைகளிலும் 1,000 ரூபாய் நோட்டுகள் சர்வசாதரணமாக புழங்குவதாக தெரிகிறது. இங்கு கொத்துக் கொத்தாக வாக்காளர்களை அள்ளுவதில் தான் கட்சிக்காரர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

அரக்கோணம்: இளைஞர் காங்கிரஸ் பொது செயலர் நாசே ராஜேஷ் மற்றும் தி.மு.க., வேட்பாளர் என். ஆர்.இளங்கோவும் பணபலத்திற்கு சொந்தக்காரர்கள். எனவே, தொகுதியில் பணம் பஞ்சாய் பறக்கிறதாம்.

கரூர்: அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் தம்பிதுரை, அ.தி.மு.க.,வின் செல்வம் படைத்த வேட்பாளர்களில் முன்னிலையில் உள்ளவர். கட்சி சார்பிலேயே, அனைத்து வேட்பாளர்களின், பெரும்பாலான செலவுகள் ஏற்றுக்கொள்ளப் பட்டாலும், கரூர் வேட்பாளர் கட்சிக்காரர்களை சிறப்பாக கவனிப்பதாக கூறப்படுகிறது.

தஞ்சாவூர்: மத்திய அமைச்சராக இருந்த பழனிமாணிக்கத்தை ஓரம்கட்டி, தொகுதியை வாங்கியவர், தி.மு.க., வேட்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர்.பாலு. அவர் அமைச்சராக இருந்தபோது, அவருக்கு நெருக்கமாக இருந்து, பலன் அடைந்தவர்கள் பலரும், அவருக்காக தொகுதிக்குள் களமிறங்கி கலக்கி வருவதாக கூறப்படுகிறது. தஞ்சாவூர் தொகுதியில், கடந்த சில நாட்களாகவே, பணப் புழக்கம் அதிகமாக இருப்பதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரம்பலூர்: இங்கு தான் மற்ற தொகுதிகளைவிட அதிகளவில் செல்வந்தர்கள் மோதுகின்றனர். அ.தி.மு.க., வேட்பாளர் மருதராஜா, ரியல் எஸ்டேட் அதிபர். தி.மு.க., வேட்பாளர் சீமானூர் பிரபு, மணல் குவாரி அதிபர். ஐ.ஜே.கே., வேட்பாளர் பச்சமுத்து, கல்வி நிறுவன அதிபர். மூன்று தரப்பினருக்கும் இடையே கடும் போட்டி உள்ளதால், ஓட்டு விலை ஏறிவிட்டதாக கூறப்படுகிறது. 3,000 ரூபாய் கொடுக்காவிட்டால், யாரும் முகம் கொடுத்து கூட பேசுவதில்லையாம்.

சிவகங்கை: மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவதால், அங்கு திறக்கப்பட்ட எண்ணற்ற ஏ.டி.எம்.,களில் ஆயிரம் ரூபாய் கேட்டால் இரண்டாயிரம் ரூபாய் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் தொகுதி மக்கள் உள்ளனர். மற்ற தொகுதிகளில் இருக்கும் காங்கிரசார், சிவகங்கை தொகுதிக்கு வந்து தேர்தல் வேலை பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். 'காங்கிரஸ் வேட்பாளர் ஜெயிக்க, எவ்வளவு தேவையானாலும் செய்வோம்' என, காங்கிசார் ஜபர்தஸ்தாக நடந்து கொள்ள, எதிர் தரப்பான தி.மு.க.,வும் துளியும் கவலை இல்லாமல் திரிகிறது. தி.மு.க., வேட்பாளர் சுப.துரைராஜ், மணல் கான்ட்ராக்டர் ஒருவரின் ஆசி பெற்றவர் என்பது, குறிப்பிடத்தக்கது.

விருதுநகர்: இந்த தொகுதியில், ஒரு வேட்பாளர் வெற்றி குறித்து படு சீரியசாக இருப்பதால், தனக்கு சென்னையில் இருந்த ஒரு சொத்தை, பிரபல ஜவுளி நிறுவனம் ஒன்றிடம் விற்று, அந்த காசை தேர்தலுக்காக செலவழித்து வருகிறார். விருதுநகர் தி.மு.க., வேட்பாளர் ரத்தினவேலுவுக்கு, முன்னாள் தி.மு.க., அமைச்சரும், விருதுநகர் மாவட்ட செயலருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனின் முழு ஆதரவு இருப்பதால், தொகுதியில் காற்று நுழையமுடியாத இடங்களை தவிர, மற்ற இடங்களை எல்லாம் ரத்தினவேலு, 'கவர்' செய்துவிட்டாராம்.

தேனி: காங்கிரஸ் வேட்பாளராக ஜே.எம்.ஆரூண் போட்டியிடுகிறார். இவருக்கு பணம் ஒரு பொருட்டல்ல. வாக்காளர்களையும், மாற்றுக் கட்சியினரையும் தன் 'கவனிப்பால்' உள்ளம் கவர்ந்து தான், ஏற்கனவே இரண்டு முறை லோக்சபாவுக்கு துண்டு போட்டார். அதே பாணியிலேயே இப்போதும் தேர்தலை சந்திக்கிறார்.

திருநெல்வேலி: தி.மு.க.,வில் பெரும்பாலும் பணக்காரர்களே வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். தேர்வுக்கான நேர்காணலில், திருநெல்வேலி தி.மு.க., வேட்பாளர் தேவதாச சுந்தரம், 'எத்தனை ஆனாலும் செலவு செய்வேன்' என, சொல்லவே தான், அவருக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. அவர் சீட் வாங்கியதற்கு, மாவட்ட நிர்வாகிகள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. காரணம், அவரின் 'அன்பளிப்புக்கு' கட்டுப்பட்டு, அமைதியாக வந்ததை வாங்கி வைத்துக்கொண்டு இருக்கின்றனர்.

இந்த 10 தொகுதிகளிலும், வாக்காளர்களுக்கு 'ஜாக்பாட்' அடித்து இருந்தாலும், அனைவரும் நீலகிரி தொகுதியை சற்று பொறாமையோடு தான் பார்க்கின்றனர். காரணம், இங்கு, ஸ்பெக்ட்ரம் புகழ் ராஜா, தி.மு.க., சார்பாக போட்டியிடுகிறார். எண்ணற்ற பூஜ்ஜியங்கள் கொண்ட அந்த எண்ணுக்கு சொந்தக்காரர் என, கூறப்படுகிறது அல்லவா.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Mar 25, 2014 12:50 am

பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 3 103459460  பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 3 1571444738  பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 3 1571444738  பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 3 1571444738




பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 3 Mபாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 3 Uபாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 3 Tபாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 3 Hபாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 3 Uபாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 3 Mபாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 3 Oபாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 3 Hபாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 3 Aபாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 3 Mபாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 3 Eபாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 3 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



Page 3 of 15 Previous  1, 2, 3, 4 ... 9 ... 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக