புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_m10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10 
59 Posts - 55%
heezulia
கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_m10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_m10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_m10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_m10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_m10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_m10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_m10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_m10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_m10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_m10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10 
54 Posts - 55%
heezulia
கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_m10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_m10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_m10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_m10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_m10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_m10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_m10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_m10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_m10கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2


   
   
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Mon Feb 10, 2014 9:14 pm

1. வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே!
 
 
(எம்பெருமான்மூங்கில் போன்ற தோளினை உடைய உமையவளுக்கு 
தன் உடம்பினில் பாகம் கொடுத்தவன்ஆலகால விடத்தை 
உயிர்களைக் காக்கும் பொருட்டு அருந்தி திருக்கழுத்தினில் 
தாங்கியவன்இனிமையான இசையை எழுப்பும் வீணையை 
வாசித்துக்கொண்டு (இருக்கும் அவன்களங்கமில்லாத பிறையையும்
கங்கையையும் தன் திருமுடி மேல் அணிந்து கொண்டுஎன் உளம்
முழுவதும் நிறைந்து காணப்படுவதால் (அதாவது நான் சிவசிந்தையில்
இருப்பதால்சூரியன்சந்திரன்செவ்வாய்புதன்குருசுக்கிரன்சனிமற்றும் 
பாம்பாகிய ராகுகேது என்னும் ஒன்பது கோள்களும்
ஒரு குற்றமும் இல்லாதவையாக (என் போன்றசிவனடியாருக்கு
என்றும் மிக மிக நல்லதையே செய்யும்!
 
 
2. என்பொடு கொம்பொ(டுஆமை இவை மார்பிலங்க எருதேறி ஏழையுடனே
பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும் உடனாய நாள்களவை தாம்
அன்பொடு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே!
 
 
திருமாலின் வாமனபன்றிகூர்ம அவதாரங்களின் ஆணவத்தை 
அடக்கி அணிந்துநிற்கும்எலும்புகொம்புஆமை ஓடு முதலானவை
 தன் திருமார்பில் விளங்கஉமையவளுடன் எருதின் மேல் ஏறி 
,பொன்போலொளிரும் ஊமத்தைமலர்களாலான மாலைதரித்து
தலையில் கங்கையணிந்து என் உள்ளத்தே நிறைந்ததால்,
ஒன்பதாவது விண்மீனாய் வரும் ஆயில்யம்;
ஒன்பதோடு ஒன்று – பத்தாவது விண்மீனான மகம்;
ஒன்பதொடு ஏழு – பதினாறாவது விண்மீனான விசாகம்பதினெட்டாவது விண்மீனான 
கேட்டை;ஆறாவது விண்மீனான திருவாதிரை;
முதலான பயணத்திற்கு விலக்கப்பட்ட நாட்கள் எல்லாமும்சிவனடியார் 
மீது அன்பொடு அவர்க்கு என்றும் நல்லதையே செய்யும்!
 
 
3.உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து உமையொடும் வெள்ளை விடை மேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
 
 
பவளம் போன்ற சிவந்த திருமேனியில் ஒளி பொருந்திய வெண்ணீற்றை 
அணிந்துசிவபெருமான் உமையம்மையாரோடு வெள்ளை எருதின்மீது 
ஏறி வந்துஅழகு பொருந்திய கொன்றையையும் சந்திரனையும் தன் 
முடிமேல் அணிந்து சிவபெருமான்உமையம்மையாரோடு வெள்ளை
 எருதின்மீது ஏறி வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான்அதனால்,
 இலக்குமிகலைகளை வாகனமாகக் கொண்ட கலைமகள்
வெற்றித்தெய்வமான துர்க்கைபூமாதுதிசைத் தெய்வங்கள் ஆன பலரும் 
அரிய செல்வம் போல நன்மை அளிப்பர்அடியவர்களுக்கு மிக 
நல்லதையே செய்வர்.
 
 
4.மதிநுதல் மங்கையோடு வடபாலிருந்து மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர் கொடுநோய்கள் ஆன பலவும்
அதிகுண நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.
 
 
பிறைபோன்ற நெற்றியை உடைய உமையம்மையாரோடு ஆலமரத்தின்
கீழ் இருந்து (வடம் – ஆலமரம்வேதங்களை அருளிய எங்கள் பரமன்கங்கைநதியையும் 
கொன்றைமாலையையும் முடிமேல் அணிந்து என் உள்ளத்துள் புகுந்து
தங்கியுள்ளான்அதனால்ஆத்திரமுடையதான காலம்அக்கினியமன்
யமதூதர்கொடிய நோய்கள் எல்லாம் மிக நல்ல குணமுடையன 
ஆகி நல்லனவே செய்யும்அடியவர்களுக்கு மிகவும் நல்லனவே செய்யும்.
 
தொடரும் 

jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Mon Feb 10, 2014 9:18 pm

 கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 B of 2

5.நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடையேறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும் மிகையான பூதமவையும்
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.
 
 
விடத்தைக் கழுத்தில் அணிந்த நீலகண்டனும்என் தந்தையும்
உமையம்மையாரோடு இடபத்தின்மேல் ஏறி வரும் நம் பரம்பொருள் 
ஆகிய சிவபெருமான்அடர்ந்து கறுத்த வன்னிமலரையும்கொன்றை 
மலரையும் தன் முடிமேல் அணிந்து என் உள்ளத்துள் புகுந்து
 தங்கியுள்ளான்அதனால்கொடிய சினத்தை உடைய அசுரர்கள்
முழங்குகிற இடிமின்னல்துன்பந்தரும் பஞ்சபூதங்கள்
முதலானவையெல்லாம் (நம்மைக் கண்டுஅஞ்சி நல்லனவே செய்யும்
 அடியவர்களுக்கு மிக நல்லனவே செய்யும்.
 
 
6.வாள்வரி அதளதாடை வரிகோவணத்தர் மடவாள் தனோடும் உடனாய்
நாண்மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானை கேழல் கொடுநாகமோடு கரடி
ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே
 
 
ஒளியும் வரியும் பொருந்திய புலித்தோல் ஆடையும்(வாள் -வரி – 
அதள் – அது -ஆடைஅதள் - புலித்தோல்), வரிந்து கட்டிய கோவணமும் அணியும் சிவபெருமான் 
அன்றலர்ந்த மலர்கள்வன்னி இலைகொன்றைப்பூகங்கை நதி 
ஆகியவற்றைத் தன் முடிமேல் சூடிஉமையம்மையாரோடும் 
வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான்அதனால்கொல்லும்
வலிய புலி(கோளரி உழுவை), கொலையானைபன்றி(கேழல்), 
கொடிய பாம்புகரடிசிங்கம்ஆகியன நல்லனவே செய்யும்
அடியவர்களுக்கு மிக நல்லனவே செய்யும்.
 
 
7.செப்பிள முலை நன்மங்கை ஒரு பாகமாக விடையேறு செல்வனடைவார்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.
 
 
செம்பு போன்ற இளந்தனங்களை உடைய உமையவளைத் தன் திருமேனியில் 
ஒரு பாகமாகக் கொண்டுஇடபத்தின்மேல் ஏறிவரும் செல்வனாகிய 
சிவபெருமான் தன்னை அடைந்த அழகிய பிறைச்சந்திரனையும்
கங்கையையும் தன் முடிமேல் அணிந்தவனாய்என் உள்ளத்துள் 
புகுந்து தங்கியுள்ளான்அதனால்காய்ச்சல்(சுரம்), குளிர்காய்ச்சல்
வாதம்மிகுந்த பித்தம் , அவற்றால் வருவன முதலான துன்பங்கள் 
நம்மை வந்து அடையாஅப்படி அவை நல்லனவே செய்யும்அடியவர்களுக்கு அவை நல்லனவே செய்யும்.
 
 
8.வேள்பட விழி செய்து அன்று விடைமேல் இருந்து மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும் இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.
 
 
அன்று மன்மதன் அழியும்படி நெற்றிக்கண்ணைத் திறந்து எரித்த 
சிவபெருமான்இடபத்தின்மேல் உமையம்மையாரோடு உடனாய் 
இருந்துதன் முடிமேல் ஒளி பொருந்திய பிறைச்சந்திரன்
வன்னி இலைகொன்றை மலர் ஆகியனவற்றைச் சூடி வந்து என் 
உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான்
அதனால்ஏழ் கடல்களால் சூழப்பட்ட இலங்கையின் மன்னன் ஆன 
இராவணன் (பிறன்மனை நாடியதாலேற்பட்டதுபோன்ற இடர்களும் 
வந்து நம்மைத் துன்புறுத்தாஆழமான கடலும் நமக்கு நல்லனவே 
செய்யும்அடியவர்களுக்கு அவை நல்லனவே செய்யும்.
தொடரும் 


 

aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்

அனுராகவன்
அனுராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 224
இணைந்தது : 08/02/2014

Postஅனுராகவன் Mon Feb 10, 2014 9:19 pm

எனக்கு பிடித்த பாடல்கள் ...தொடருக..



jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Mon Feb 10, 2014 9:28 pm

 கோளறு பதிகம் அர்த்தமுடன் - part  2 of 2


9.பல பல வேடமாகும் பரன் நாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடி மேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
மலர்மிசையோனும் மாலும் மறையோடு தேவர் வருகாலமான பலவும்
அலைகடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே


 
பல்வேறு கோலங்கள் கொள்கிற பரம்பொருள் ஆகிறவனும்மாதொரு
பாகனும்எருதின்மேல் ஏறிவரும் எங்கள் பரமனுமாகிய சிவபெருமான்
தன் முடிமேல் கங்கைஎருக்கமலர் ஆகியவற்றை அணிந்து வந்து 
என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான்அதனால்தாமரைமலர்மேல்
 உறையும் பிரமன்திருமால்வேதங்கள்தேவர்கள் ஆகியோரும்
எதிர்காலம்அலையுடைய கடல்மேருமுதலான மலைகள் ஆகியவையும் 
நமக்கு நல்லனவே செய்வர்அடியவர்களுக்கு அவை மிகவும் 
நல்லனவே செய்யும். 
 
10.கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியு(ம்)நாகம் முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
புத்தரொடமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே! 
 
கூந்தலில் மலர்க்கொத்துகள் அணிந்த உமையம்மையாரோடு வேட 
வடிவில் சென்று அருச்சுனனுக்கு அருள்புரிந்த தன்மை கொண்ட 
சிவபெருமான்தன் முடிமேல் ஊமத்தை மலர்பிறைச்சந்திரன்பாம்பு 
ஆகியவற்றை அணிந்து வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான்
அதனால்புத்தர்களையும் சமணர்களையும் ஈசனின் திருநீறு வாதில் 
தோற்றோடச் செய்யும்அதன் பெருமை நிச்சயமேஎல்லாம் அப்படிச்
சிறந்த நல்லனவற்றையே செய்யும்அவை மிகவும் நல்லனவே 
செய்யும்.
  
11.தேனமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி வளர்செம்பொன் 
எங்கும் திகழ நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை செய்
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே. 
 
தேன் நிறைந்த பூங்காக்களைக் கொண்டதும்கரும்பும்(ஆலை), விளைகிற
செந்நெல்லும் நிறைந்துள்ளதும்பொன் போல் ஒளிர்வதும்நான்முகன் 
(வழிபட்டகாரணத்தால் பிரமாபுரம் என்ற ஊரில் தோன்றி அபரஞானம் 
பரஞானம் ஆகிய இரு வகை ஞானங்களையும் உணர்ந்த ஞானசம்பந்தனாகிய 
யான்தாமே வந்து சம்பவிக்கும் நவக்கிரகங்கள்நாள் நட்சத்திரம்போன்றன
 எல்லாம் அடியவரை வந்து வருத்தாதவாறு பாடிய இப்பதிகத்தை ஓதும்
 அடியவர்கள் வானுலகில் அரசு புரிவர்இது நமது ஆணை.


திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

 

aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 21, 2015 11:32 pm

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனிபாம் பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே

என்பொடு கொம்பொடாமை இவை மார்பிலங்க
எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றொடேழு ப‌தினெட்டொ டாறும்
உடனாய நாள்க ள‌வைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார‌வர்க்கு மிகவே.

உருவளர் பவளமேனி ஒளிநீ ற‌ணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருக‌லர் கொன்றைதிங்கள் முடிமேல‌ணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலைய‌தூர்தி செயமாது பூமி
திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே.

மதிநுதன் மங்கையோடு வடவா லிருந்து
மறையோது மெங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர்
கொடுநோய்களான பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே.

நஞ்ச‌ணி கண்டனெந்தை மடவாள் தனோடும்
விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும்
மிகையான பூதம‌வையும்
அஞ்சிடும் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே.

வாள்வரி அதளதாடை வரி கோவணத்தர்
மடவாள் தனோடும் உடனாய்
நாள்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோள‌ரி உழுவையோடு கொலையானை கேழல்
கொடு நாகமோடு கரடி
ஆள‌ரி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே. செப்பிள முலைநன்மங்கை ஒருபாகமாக
விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாத மிகையான‌ பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே.

வேள்பட விழிசெய்தென்று விடைமேலிருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாள்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த வத‌னால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன் ற‌னோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே.

பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமக ளோடெருக்கு முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர்
வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே.

கொத்தல‌ர் குழலியோடு விசையற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியும்நாக முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரொ ட‌மணைவாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே.

தேனமர் பொழில்கொள் ஆலை விளைசெந்நெல் துன்னி
வளர் செம்பொன் எங்கும் திகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆன சொல்மாலை யோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே.

திருச்சிற்றம்பலம்



கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 21, 2015 11:33 pm



http://eegarai.opendrive.com/files/MzlfMzIwMTU3X29Sd00wXzQxNzY/Kolaru_Pathigam.mp3



கோளறு பதிகம் அர்த்தமுடன் - part 1 of 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Feb 22, 2015 3:54 pm

மிக நல்ல பதிவு, மிக்க நன்றி மாமா அங்கள்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக