புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 3 Poll_c10பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 3 Poll_m10பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 3 Poll_c10 
90 Posts - 76%
heezulia
பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 3 Poll_c10பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 3 Poll_m10பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 3 Poll_c10 
13 Posts - 11%
Dr.S.Soundarapandian
பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 3 Poll_c10பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 3 Poll_m10பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 3 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 3 Poll_c10பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 3 Poll_m10பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 3 Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 3 Poll_c10பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 3 Poll_m10பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 3 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 3 Poll_c10பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 3 Poll_m10பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 3 Poll_c10பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 3 Poll_m10பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 3 Poll_c10 
255 Posts - 76%
heezulia
பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 3 Poll_c10பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 3 Poll_m10பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 3 Poll_c10 
40 Posts - 12%
mohamed nizamudeen
பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 3 Poll_c10பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 3 Poll_m10பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 3 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 3 Poll_c10பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 3 Poll_m10பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 3 Poll_c10பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 3 Poll_m10பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 3 Poll_c10பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 3 Poll_m10பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 3 Poll_c10பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 3 Poll_m10பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 3 Poll_c10பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 3 Poll_m10பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Barushree
பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 3 Poll_c10பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 3 Poll_m10பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 3 Poll_c10பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 3 Poll_m10பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிதுர் தோஷம் போக்கும் சிவன்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Fri Feb 07, 2014 9:03 pm

First topic message reminder :

பிதுர் தோஷம் போக்கும் சிவன்

ஜனவரி 24,2014,12:10  IST


பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 3 Large_125202201
முன்னோர் கடனை சரிவர தீர்க்காதவர்கள் வணங்க வேண்டிய சிவன், காஞ்சிபுரத்தில் அருள்பாலிக்கிறார். இங்குள்ள யோகலிங்கேஸ்வரர், அனுமந்தீஸ்வரர் கோயிலில் இதற்கான பரிகாரம் செய்து கொள்ளலாம். 
தல வரலாறு: சிவபக்தனான ராவணனைக் கொன்றதால், ராமனுக்கு பிரம்மஹத்திதோஷம் உண்டானது. தந்தையான தசரதருக்கு செய்ய வேண்டிய பிதுர்கடனும் அவருக்கு இருந்தது. பிரம்மஹத்தி தோஷம் நீங்கவும், பிதுர்கடன் நிறைவேற்றாததால் ஏற்பட்ட சிரமங்கள் நீங்கவும், அவர் சிவபெருமானை வேண்டினார். அதன்பின், காஞ்சிபுரத்தில் இந்திரனால் உருவாக்கப்பட்ட சர்வதீர்த்தக் குளக்கரையில், பிதுர்க்கடனாக தசரதருக்கு தர்ப்பணம் செய்தார். சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். 
அவருக்கு "ராமநாத சுவாமி' என்ற பெயர் ஏற்பட்டது. ராமனோடு வந்த சீதாதேவி, லட்சுமணர், ஆஞ்சேநயர் ஆகியோரும் ஆளுக்கு ஒரு சிவலிங்கத்தை காஞ்சியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். சீதாதீஸ்வரர், லட்சுமணீஸ்வரர், அனுமந்தீஸ்வரர் என பெயர் சூட்டப்பட்டது. இதன் பின் சிவன் அவர்களுக்கு யோகவடிவில் காட்சியளித்தார். அவரே "யோகலிங்கேஸ்வரர்' என்ற பெயர் பெற்றார். 
தோஷ நிவர்த்தி தலம்: இக்கோயில் சிறந்த தோஷ நிவர்த்தி தலமாக விளங்குகிறது. முன்னோருக்கு முறையான திதி, தர்ப்பணம் செய்யாமல் இருந்தால் முன்னோர் சாபம், பிதுர்தோஷம் ஏற்பட வாய்ப்புண்டு. இதனால், திருமணத்தடை, குழந்தையின்மை, உடல்நலக்குறைவு போன்ற சிரமங்கள் வரலாம். இங்குள்ள யோகலிங்கேஸ்வரர், அனுமந்தீஸ்வரர், ஆஞ்சநேயரை வழிபட இந்தக் குறைபாடு நீங்குவதோடு, முன்னோர் ஆசியால் வாழ்வில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். இங்கு திருப்பணி நடந்து வருகிறது. பிப். 9ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. பக்தர்கள் திருப்பணியில் பங்கேற்கலாம். 
இருப்பிடம்: காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து, அரக்கோணம் ரோட்டில் 2 கி.மீ., 
போன்: 97895 27982.



jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Fri Feb 07, 2014 10:13 pm

திருமணமாம்! திருமணமாம்!

நவம்பர் 06,2013,12:34  IST


பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 3 Large_124354312
மனிதர்களுக்குள் உறவுப்பிணைப்பை ஏற்படுத்தும் புனிதமான பந்தம் திருமணம். முன்வினைப்பயன், தோஷங்களால் திருமணத்தடை ஏற்பட்டோருக்கு, தடைகளை நீக்கி நல்ல வாழ்க்கைத் துணையை தந்தருளும் உத்வாகநாதர், தஞ்சாவூர் மாவட்டம் திருமணஞ்சேரியில் அருளுகிறார். கருத்து வேறுபாட்டால் பிரிந்த குடும்பத்தினரும் இங்கு வந்து வழிபடலாம்.

தல வரலாறு: பரத்வாஜ மகரிஷி குழந்தை பாக்கியத்திற்காக, சிவனை வேண்டி புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தினார். யாக குண்டத்தில், பார்வதி தேவி குழந்தையாக தோன்றினாள். அவளைத் தன் மகளாக ஏற்ற பரத்வாஜர், அவளை மணந்து கொள்ளும்படி சிவனை வேண்டினார். சிவனும் இங்கு வந்து அம்பிகையை மணந்து கொண்டார். 

சுவாமிக்கு உத்வாகநாதர் என்ற கல்யாண சுந்தரர் என்றும், அம்பாளுக்கு கோகிலாம்பாள் என்றும், தலத்திற்கு திருமணஞ்சேரி என்றும் பெயர் ஏற்பட்டது. "உத்வாகம்' என்றால் திருமணம். 

சுயம்வர தலம்: திருமண தோஷம் உள்ளவர்கள் கல்யாண சுந்தரருக்கும், கோகிலாம்பாளுக்கும் இரண்டு மாலைகளை அணிவிக்கின்றனர். அதில் ஒன்றை பிரசாதமாகப் பெற்று, வீட்டில் வைத்து பூஜிக்கிறார்கள். 

திருமணமானதும் அந்த மாலையுடன், மேலும் இரண்டு மாலையை கல்யாண சுந்தரருக்கு அணிவித்து நன்றி செலுத்துகின்றனர். திருமண வயதிலுள்ள ஆண்களும், பெண்களும் தங்களுக்கு வரன் வேண்டி இங்கு வந்து, கோயிலிலேயே சம்பந்தம் பேசி, 
திருமணம் நிச்சயம் செய்து கொள்கின்றனர். இவ்வகையில் இது ஒரு சுயம்வர தலமாகவும் திகழ்கிறது.

கோகிலாம்பாள்: அன்னை கோகிலாம்பாள் வலக்காலை மடித்து, இடது கையை தரையில் ஊன்றி, மணமேடையில் மணமகள் அமரும் பாவனையில் அமர்ந்திருக்கிறாள். பெண்கள் தங்களுக்கு ஏற்படும் ருது பிரச்னைகள் நீங்கவும், சுமங்கலிகளாக இருக்கவும் 
இவளை வழிபடுகிறார்கள். திருமணத்தடை உள்ளவர்கள் இவளுக்கு சுயம்வரபார்வதி யாகம் நடத்துகின்றனர். பிரிந்த தம்பதிகளும், குடும்பத்தினரும் ஒற்றுமையுடன் திகழ இவளை வேண்டி வரலாம்.

"கோகிலம்' என்றால் குயில். குயில் போன்ற ஓசையுடையவள் என்பதால் இவளுக்கு இப்பெயர். பாடகர்கள், சங்கீதம் பயில்பவர்கள், மேடைப்பேச்சாளர்கள் குரல் வளம் சிறப்பாக இருக்க இவளுக்கு அபிஷேகம் செய்வித்து வழிபடுகிறார்கள். 

ராகு பரிகார தலம்: சிவன் சந்நிதி கோஷ்டத்தில் (கருவறை சுற்றுச்சுவர்) ராகு இருக்கிறார். அவர், தனக்கு ஏற்பட்ட ஒரு சாபத்திற்கு இங்கு சிவனை வணங்கி விமோசனம் பெற்றார். மனித உடலுடன், தலையில் நாக கிரீடம் அணிந்து காட்சி தரும் இவருக்கு குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், அமாவாசையன்று பால்பாயசம் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள். மேலும், யோக தெட்சிணாமூர்த்தியும், கங்காவிசர்ஜனரும் கோஷ்டத்தில் உள்ளனர்.

வெண்ணிற ஆடை: இந்தக் கோயிலில் சூரியன், மும்மூர்த்தி விநாயகர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள், பச்சையப்பர், முருகன், பைரவர், சனீஸ்வரர் ஆகிய தெய்வங்களுக்கு வெண்ணிற ஆடை அணிவிக்கும் வழக்கம் இருக்கிறது.
கல்வி பூஜை: கல்வி, ஜோதிடம் ஆகிய துறைகளில் சிறப்பிடம் பெறுவதற்கு புதன் கிரகத்தின் பார்வை வேண்டும். புதன் கிழமைகளில் இங்குள்ள பச்சையப்பநாதர், பச்சையப்ப நாயகிக்கு பச்சைப்பயறு படைத்து வழிபட்டால் கல்வியில் முன்னேற்றம் கிடைக்கும். 
இருப்பிடம்: கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் 27 கி.மீ.
திறக்கும் நேரம்: காலை 7 - மதியம் 1.30, மாலை 3.30 - இரவு 8.30.
போன்: 04364 235 002.


jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Fri Feb 07, 2014 10:15 pm

சூரன் படுகளம்!

நவம்பர் 06,2013,12:28  IST


பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 3 Large_124216866
கந்தசஷ்டியை ஒட்டி, திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் சிவந்தியப்பர் கோயிலில் சூரன் படுகள விழா நவ.8ல் விமரிசையாக நடத்தப்படும். 

தல வரலாறு: சிவந்தியப்பர் என்ற சிற்றரசர் இப்பகுதியை ஆட்சி செய்தார். சிவபக்தரான அரசர், தன் நிர்வாகம் திறம்பட இருக்கவும், மக்களின் வாழ்க்கை சிறக்கவும் தன் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் சிவனுக்கு கோயில் கட்ட விரும்பினார். இவ்விடத்தில் சிவலிங்கம் ஸ்தாபித்து, கோயில் எழுப்பினார். தனது பெயரால் "சிவந்தியப்பர்' என்ற பெயர் சூட்டினார். சமஸ்கிருதத்தில் "சிவபாலேஸ்வரர்' என்பர். 
இங்கு அருளும் சிவந்தியப்பர், அரசர் போல இருந்து மக்களைக் காத்தருளுகிறார். எனவே, அரசருக்குச் செய்யும் மரியாதைபோல, சிவலிங்கத்திற்கு தலைப்பாகை சூட்டி அலங்கரிக்கின்றனர்.

வழிகாட்டும் அம்பிகை: தெற்கு நோக்கிய சந்நிதியில் காட்சி தரும் அம்பிகைக்கு, "வழியடிமை கொண்ட நாயகி' என்று பெயர். சமஸ்கிருதத்தில் "மார்க்க சம்ரக்ஷணி' என்று அழைப்பர். இவளை பற்றிக்கொண்டால், வாழும் காலம் சிறப்பாக இருக்கவும், வாழ்க்கைக்குப்பின் பிறப்பற்ற நிலை அடையவும் வழிகாட்டியாக இருப்பாள். 

சூரசம்ஹாரம்: கந்தசஷ்டி விழாவை இப்பகுதி மக்கள் "சூரன் படுகளம்' என்ற பெயரிட்டு அழைக்கின்றனர். "சூரன் போர்க்களத்தில் தோற்றது' என்ற பொருளில் இப்படி அழைப்பர். அன்று காலை 11 மணிக்கு, பாபநாசத்தில் இருந்து சூரன் புறப்பட்டு போருக்கு வருவார். சிவந்தியப்பர் கோயில் முன்பிருந்து முருகன் எழுந்தருளுவார். இருதரப்பும் எதிர் எதிரே அணிவகுத்துச் செல்லும். முதல் ரதவீதி முடிவில் சூரனின் யானைத்தலை (கஜமுகாசுரன்) கொய்யப்பட்டு சிங்கத்தலை (சிங்கமுகாசுரன்) பொருத்தப்படும். அடுத்த ரதவீதி முடிவில் சிங்கத்தலை கொய்யப்பட்டு, அசுரத் தலை பொருத்தப்படும். கடைசி ரதவீதியில் அதுவும் கொய்யப்பட்டு, மாவிலை கட்டப்படும். சூரன் மாமரமாக மாறியதை விளக்கும் வகையில் இவ்வாறு செய்யப்படும். சம்ஹார முடிவில், சூரனை முருகன் சேவலாக மாற்றி ஆட்கொண்டதை நினைவுறுத்தும் வகையில், சேவல் பறக்க விடப்படும். 

இவ்வூரில் இருந்து 5 கி.மீ., தொலைவில் அகத்தியர் அருவி, 19 கி.மீ., தூரத்தில் வாணதீர்த்தம் அருவி (பாணதீர்த்தம்) உள்ளன. தற்போது சிவந்தியப்பர் கோயிலில் திருப்பணி நடந்து வருகிறது.

இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து பாபநாசம் ரோட்டில் 45 கி.மீ., தூரத்தில், விக்கிரமசிங்கபுரம். மூன்று விளக்கு பஸ்ஸ்டாப் அருகில் கோயில்.
திறக்கும் நேரம்: காலை 6- 9 , மாலை 5- இரவு 8.30.
போன்: 04634 223 457.


jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Fri Feb 07, 2014 10:17 pm

லிங்கவடிவில் அம்மன்

அக்டோபர் 22,2013,14:49  IST


பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 3 Large_151437949
சிவனையே லிங்க வடிவில் தரிசிக்க முடியும். ஆனால், அம்பாளை லிங்க வடிவில் தரிசிக்க வேண்டுமானால், கோவை மாவட்டம் கொழுமம் மாரியம்மன் கோயிலுக்குச் செல்ல வேண்டும்

தல வரலாறு: இக்கோயில் அருகிலுள்ள அமராவதி ஆற்றில் மீனவர் ஒருவர் மீன் பிடிக்க வலைவீசியபோது, லிங்க வடிவ கல் சிக்கியது. அதனை கரையில் போட்டுவிட்டு மறுபடியும் மீனவர் வலையை வீசினார். திரும்பவும் அதே கல் வலையில் சிக்கியது. மீனவர் மீண்டும், மீண்டும் வலைவீச, அந்தக்கல் வந்துகொண்டே இருந்தது. பயந்துபோன அவர் வீட்டிற்கு திரும்பி விட்டார்.

அன்றிரவில், அவரது கனவில் தோன்றிய அம்பாள், "ஆற்றில் லிங்க வடிவில் உனக்கு தரிசனம் தந்தது நான்தான்' என்றாள். மீனவர் இத்தகவலை ஊர் மக்களிடம் கூறினார். ஓரிடத்தில் கல் மண்ணில் புதைந்து சிறிய புடைப்பு போல வெளிப்பட்டிருந்ததைக் கண்டு அவ்விடத்தில் தோண்டினர். எவ்வளவோ தோண்டியும் அடிப்பாகத்தை காண முடியவில்லை. பின் அங்கேயே அம்பாளுக்கு கோயில் கட்டினர்.

தல சிறப்பு: இங்கு அருளும் சுயம்பு மாரியம்மன், இரண்டரை அடி உயரத்தில் சிவலிங்க வடிவில் காட்சி தருகிறாள். லிங்கக்கல்லின் அடியில் ஆவுடையாரும் உள்ளது. அம்பாளுக்கு உரித்தான அடையாளங்கள் எதுவும் இல்லாவிட்டாலும் கூட அம்பாளாகவே பாவிக்கப்பட்டு புடவை கட்டி அபிஷேகம் மற்றும் பூஜை செய்யப்படுகிறது.

தலபெருமை: கருவறையில் அணையாவிளக்கு ஒன்று எப்போதும் எரிந்து கொண்டிருக்கிறது. அமராவதி ஆற்றின் கரையில் கிழக்கு நோக்கியபடி அம்மன் வீற்றுள்ளாள். புதியதொழில் தொடங்கும்போதும், வீட்டில் சுபநிகழ்ச்சி நடத்தும் போதும், அம்பாளின் தலையில் பூ வைத்து உத்தரவு கேட்டு, அனுமதி கிடைத்தால் மட்டுமே அதனை செயல்படுத்தும் பழக்கம் நடைமுறையில் உள்ளது.

பொது தகவல்: ஊரின் வடஎல்லையில் குதிரையாறும், அமராவதி ஆறும் சேரும் இடத்திற்கு அருகில் மேடான பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது. அம்பாள் உயரமான இடத்தில் கோட்டை போல இருந்து ஊரைக்காப்பதால் "கோட்டைமாரி' எனப்படுகிறாள். குமண மன்னர் ஆட்சி செய்த பகுதி என்பதால் இவ்வூர் "குமணன் நகர்' எனவும், வணிகர்கள் குழுமியிருந்து வியாபாரம் செய்ததால் "குழுமூர்' எனவும் அழைக்கப்பட்டு, காலப்போக்கில் அதுவே மருவி "கொழுமம்' என்றானது.

பிரார்த்தனை: அம்மை நோய், கண்நோய் தீர, குடும்பம் செழிக்க வேண்டலாம். கண்நோய் கண்டவர்கள், இங்கு தரப்படும் தீர்த்தத்தை கண்ணில் விட்டுக் கொள்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியவர்கள் பால்குடம், அக்னிச்சட்டி, அங்கபிரதட்சணம், முடிகாணிக்கை, கண்மலர் நேர்த்திக்கடன் செய்கின்றனர்.
இருப்பிடம் : பழநியிலிருந்து 20 கி.மீ., உடுமலைபேட்டையிலிருந்து 18 கி.மீ., தூரத்தில் கொழுமம். 
திறக்கும் நேரம்: காலை 7.30- மதியம் 1, மாலை 3 - இரவு 8. 
போன்: 04252 278 001, 278 510, 278 814.


jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Fri Feb 07, 2014 10:19 pm

நல்லபேரு வாங்கணுமா!


பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 3 Large_151621826
திறமை படைத்தவர்களையும், புகழ் பெற்றவர்களையும் கண்டால் இவருக்கு "பேரு பெத்த பேரு' என்று பாராட்டுவார்கள். "பெத்த' என்றால் "பெரிய'. இப்படி, தன்னை வணங்குவோருக்கும் நற்பெயரைப் பெற்றுத்தரும் வகையில் அருள் தருகிறார்கள் தேனி பெத்தாட்சி விநாயகரும், இங்குள்ள ஆஞ்சநேயரும்.

தல வரலாறு : இந்த கோயில் 200 வருடம் பழமையானது. ஆரம்ப காலத்தில் சுயம்புவாக தோன்றிய ஒரு கணபதியைத்தான், பூஜை செய்து வந்தனர். 90 வருடங்களுக்கு முன்பு, பெத்தாட்சி அம்மா என்பவர் இந்த விநாயகருக்கு பூஜை செய்து வந்தார். அதன்பின், இந்த விநாயகரை யாரோ எடுத்து செல்வதும், திரும்பக் கொண்டு வந்து வைத்து விடுவதுமாக இருந்தது. இதன்பின் பெரிய விநாயகர் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்து பூஜை செய்ய ஆரம்பித்தனர். பெத்தாட்சி அம்மா நினைவாக, "பெத்தாட்சி விநாயகர்' என்று பெயர் சூட்டினர். "பெத்தாக்ஷி' என்றால் பெரிய அளவில் ஆட்சி புரிபவர்.

சிறப்பம்சம்: தேனியில் எந்த நல்ல செயல்கள் ஆரம்பித்தாலும் மக்கள் பெத்தாட்சி விநாயகரை வழிபட்டுத்தான் ஆரம்பிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். சபரிமலைக்கு மாலை அணியும் பக்தர்கள் இங்கு மாலை அணிவர். தலவிருட்சமான வன்னி மரத்தின் கீழ் நாகர் அருள்பாலிக்கிறார். கோயில் கன்னி மூலையில் அருள்பாலிக்கும் கன்னிமூல கணபதி தான் இக்கோயிலில் முதலில் சுயம்புவாக தோன்றியவர். எனவே, இவருக்குத்தான் வைதீகமுறைப்படி முதல் பூஜை. அடுத்து தான் மூலஸ்தான விநாயகருக்கு பூஜை செய்யப்படுகிறது. இங்கு சிவன், பார்வதிக்கு நடுவில் முருகன் அமர்ந்த சோமாஸ்கந்தர் சந்நிதி <உள்ளது. சோமசுந்தரேஸ்வரரும் அருள்பாலிக்கிறார். இவருக்கு பிரதோஷ பூஜையும், கார்த்திகை சோமவாரத்தில் 108 சங்காபிஷேகமும் நடக்கும். வடக்கு பிரகாரத்தில் ஆஞ்சநேயரும் அவரது அன்னை அஞ்சனாதேவியும் உள்ளனர். இவர்களுக்கு அமாவாசைகளில் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன், அஞ்சனாதேவியை தரிசிப்பது வழக்கமாக உள்ளது. ஆஞ்சநேயர் சூரிய பகவானிடம், வியாகரண சூத்திரம் (இலக்கணம்) படித்து, அம்மாவுக்கு நற்பெயர் வாங்கித்தந்தவர் என்ற அடிப்படையில் இவ்வாறு செய்கின்றனர். பைரவர், நவக்கிரக சந்நிதியும் உண்டு. 

இருப்பிடம் : தேனி பஸ் ஸ்டாண்டிலிருந்து பெரியகுளம் வழியில் ஒரு கி.மீ. தூரத்தில் பெத்தாட்சி விநாயகர் கோயில்.

திறக்கும் நேரம் : காலை 4.30 - 10.30, மாலை 4 - இரவு 8.30. வெள்ளி, சனி இரவு 9. 
போன் : 99948 77505, 98945 04141 


jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Fri Feb 07, 2014 10:23 pm

தன்னையே வணங்கிய சிவன்

அக்டோபர் 17,2013,16:47  IST


பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 3 Large_170540711
அக்.18 அன்னாபிஷேகம்

சிவபெருமான், தன்னைத் தானே பூஜித்த தலம் மதுரை நகரின் நடுவில் உள்ளது. மூலவர் சிவன் மேற்கு நோக்கி இருக்கும் இக்கோயிலில் ஐப்பசி பவுர்ணமியன்று அன்னாபிஷேகம் நடக்கிறது. 
தல வரலாறு: மதுரையை ஆண்ட மலையத்துவஜனின் மகளாகப் பிறந்த மீனாட்சியை, சிவன், சுந்தரேஸ்வரராக வந்து மணந்து கொண்டார். பின், பாண்டிய மன்னராக பொறுப்பேற்கத் தயாரானார். அரசபீடத்தில் அமர்வதற்கு முன், சிவபூஜை செய்ய வேண்டும் என்பது ஐதீகம். அதன் அடிப்படையில் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து, பூஜை செய்தார். இதன் அடிப்படையில் இங்கு சிவனே, சிவலிங்கத்தை பூஜிக்கும் அமைப்பில் காட்சி தருகிறார். தலைமைப் பதவி கிடைக்கவும், பணி உயர்வுபெறவும் சிவனுக்கு, "ராஜ உபச்சார அர்ச்சனை' செய்து வேண்டிக் கொள்கிறார்கள். ஒருவர் செய்த பாவத்தை இந்தப் பிறவியிலேயே மன்னித்து நன்மை தருபவர் என்பதால், இவர் "இம்மையிலும் நன்மை தருவார்' என அழைக்கப்படுகிறார்.

அதிசய சிவலிங்கம்: மேற்கு நோக்கி அமர்ந்து சிவபூஜை செய்ய வேண்டுமென்பது நியதி. இங்கு சிவன் அம்பிகையுடன் மேற்கு நோக்கி அமர்ந்து பூஜை செய்ய, கருவறையில் லிங்கத்தின் முன்பகுதி அவரை நோக்கி இருக்கிறது. பக்தர்களுக்கு பின்புற தரிசனம் கிடைக்கிறது. மீனாட்சியம்மன் கோயிலில் சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் நடக்கும்போது, அவர் இங்கு எழுந்தருளி, சிவலிங்க பூஜை செய்யும் வழக்கம் இப்போதும் உள்ளது.

கல் ஸ்ரீசக்ரம்: அம்பாள் மத்தியபுரி நாயகி தனி சந்நிதியில் வீற்றிருக்கிறாள். மதுரையின் மத்தியில் இருப்பதால் இவளுக்கு இப்பெயர் வந்தது. திருமணமாகாதவர்கள் இவளிடம் வேண்டிக்கொள்ள நல்ல வரன் அமையும் என்பதால் இவளுக்கு, "மாங்கல்ய வர பிரசாதினி' என்றும் பெயருண்டு. தாமரை பீடத்தின் மீது நிற்கும் இந்த அம்பிகையின் பீடத்தில், கல்லால் ஆன ஸ்ரீசக்ரம் உள்ளது.

கார புளியோதரை: இங்கு பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி, கார்த்திகை சம்பகசஷ்டி, மார்கழி அஷ்டமி ஆகிய நாட்களில் விசேஷ பூஜை நடக்கும். பைரவருக்கு ஒரு பங்கு அரிசியுடன், 3 பங்கு மிளகாய் வத்தல் சேர்த்து (ஒரு கிலோ அரிசிக்கு, 3 கிலோ மிளகாய் என்ற விகிதத்தில்) மிகவும் காரமான புளியோதரை செய்து படைக்கின்றனர். எதிரிபயம்,மனக்குழப்பம் தீர இந்த வழிபாடு செய்யப்படுகிறது. 

சித்தருக்கு பூப்பந்தல்: மதுரையில் திருவிளையாடல் நிகழ்த்திய சிவன், வல்லப சித்தராக வந்து, கல் யானையை கரும்பு தின்னச் செய்தார். அவர் இங்கு பத்மாசனத்தில் வலதுகையால் ஆகாயத்தைக் காட்டுகிறார். இடக்கையில் சாம்பிராணி குங்கிலியத்துடன் காட்சி தருகிறார். நினைத்தது நிறைவேற பவுர்ணமி, திங்களன்று சித்தருக்கு பூப்பந்தல் இடுவதாக வேண்டிக் கொள்கின்றனர். சித்ரா பவுர்ணமி, ஆடி அமாவாசையன்று இவருக்கு விசேஷ பூஜை நடக்கிறது.

கோதண்டராமர்: கோயில் முன் மண்டபத்தில் காசி விஸ்வநாதர் காட்சி தருகிறார். அருகில் விசாலாட்சி இருக்கிறாள். சிவபக்தனான ராவணனை அழித்து சீதையை மீட்ட ராமர், தோஷம் நீங்க ராமேஸ்வரத்தில் மணல் லிங்கத்தை பூஜித்தார். அதன் அடிப்படையில் இங்கும் அதே போன்ற மணல் லிங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. லிங்கத்தின் பின்புறம் கையில் வில்லுடன் கோதண்ட ராமர் காட்சி அளிக்கிறார்.

சிவனிடம் சிபாரிசு: இங்குள்ள சண்டிகேஸ்வரர் தீராத பிரச்னைகளுக்கும் தீர்வு தருபவராக இருக்கிறார். சிவனுக்கு மாலை அணிவித்து பூஜை செய்து, அதே மாலையை சண்டிகேஸ்வரருக்கு அணிவித்து வழிபட்டால், சண்டிகேஸ்வரர் சிவனிடம் 
நமக்காக சிபாரிசு செய்வதாக ஐதீகம். எனவே இவரை பக்தர்கள், "பரிந்துரைக்கும் சண்டிகேஸ்வரர்' என அழைக்கின்றனர். 

முருகனுக்கு பூக்குழி: அம்மன் கோயில்களில் பூக்குழி இறங்குவதைப் பார்க்கலாம். இங்கு, வைகாசி விசாகத்திற்கு மறுநாள், முருகனுக்கு பூக்குழி இறங்கும் வைபவம் நடக்கிறது. அறுபது, எண்பதாம் திருமணம் (சஷ்டியப்த, சதாப்த பூர்த்தி) செய்து கொள்கிறார்கள். பத்து இலைகளுடன் கூடிய தசதள வில்வ மரம், தல விருட்சமாக இருக்கிறது.

இருப்பிடம் : மதுரை மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகில்( மேலமாசி வீதி) உள்ளது.
திறக்கும் நேரம்: காலை 6.15 - 11.30, மாலை 4.30 - இரவு 9.30 
போன்: 94434 55311


jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Fri Feb 07, 2014 10:26 pm

லட்சுமி கடாட்சம் பெருகட்டும்!

பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 3 Large_135712631
லட்சுமி கடாட்சம் பெருக, புரட்டாசி சனியன்று ஏத்தாப்பூர் லட்சுமி கோபாலரைத் தரிசித்து வாருங்கள். 

தல வரலாறு: பார்வதியின் தந்தை தட்சன், தன் மகள் பார்வதியையும், மருமகன் சிவனையும், அழைக்காமல் யாகம் நடத்தினான். அங்கு சென்று நியாயம் கேட்கப் போவதாக பார்வதி கூறினாள். அதைத் தடுத்தார் சிவன். ஆனால், அம்பாள், அங்கு சென்றுவிட்டாள். வருத்தமடைந்த சிவன், அம்பாளை பிரிந்து பூலோகம் வந்தார். ஒரு வில்வமரத்தின் அடியில் அமர்ந்து தியானத்தில் மூழ்கினார். கணவன் தனித்து இருந்ததை அறிந்த அம்பாள் தன் அண்ணன் மகாவிஷ்ணுவுடன் பூலோகம் வந்தாள். சிவனை வணங்கி மன்னிக்கும்படி வேண்டினாள். மகாவிஷ்ணு தன் தங்கைக்காக சிவனிடம் பரிந்து பேசிசமரசம் செய்தார். கோபம் தணிந்த சிவன், அம்பாளை ஏற்றுக் கொண்டதோடு, அங்கே லிங்க வடிவிலும் எழுந்தருளினார். விஷ்ணுவும் அவருக்கு அருகிலேயே தங்கிவிட்டார். சிவபெருமான் சாம்ப மூர்த்தீஸ்வரர் என்ற பெயரில், பெருமாள் கோயில் அருகில் உள்ள மற்றொரு கோயிலில் இருக்கிறார். 

சிறப்பம்சம்: சேலம் வட்டாரத்திலுள்ள சிவனின் பஞ்சபூத தலங்களில் இது நீர் தலம். மன்னன் ஒருவன் சிவனுக்கு கோயில் கட்டியபோது இவ்விடத்தில் தானும் குடியிருப்பதாக பெருமாள் கனவில் தெரிவித்தார். எனவே, மன்னர் இவ்விடத்தில் பெருமாளுக்கும் தனியே கோயில் கட்டினார். மூலஸ்தானத்தில் லட்சுமி கோபாலர், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர். மகாவிஷ்ணு விரும்பி தங்கிய இடமென்பதால் இத்தலத்தில் மகாலட்சுமி அரூபலட்சுமியாக (உருவம் இல்லாமல்) அருளுகிறாள். இதனால் சுவாமி "லட்சுமி கோபாலர்' எனப்படுகிறார். இங்கு வேண்டினால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும். 

சமாதான தலம்: பிரிந்திருந்த சிவனையும், அம்பிகையையும் சேர்த்து வைப்பதற்காக மகாவிஷ்ணு இத்தலத்தில் அவர்களிடம் சமரசம் பேசினார். இதன் அடிப்படையில் இன்றுவரையிலும் இக்கோயில் பிரச்னைகளால் பிரிந்திருக்கும் கணவன், மனைவியரை சேர்த்து வைக்க உறவினர்கள் சமாதானம் பேசுகிறார்கள். மேலும், இங்கு திருமண நிச்சயம் செய்து பின் திருமணம் செய்து கொண்டால், தம்பதியர் ஒற்றுமையாக வாழ்வர் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

கோயில் அமைப்பு: பிரகாரத்தில் வேதவல்லி தாயார் தனிச்சந்நிதியில் இருக்கிறாள். இங்குள்ள ஆஞ்சநேயரை "அருள்தரும் ஆஞ்சநேயர்' என்கின்றனர். இவர் தனது வாலை தலை மீது வைத்த கோலத்தில் காட்சி தருகிறார். பிரகாரத்தில் ஆழ்வார்கள் சந்நிதி இருக்கிறது. இத்தல பெருமாளை "சமாதானம் செய்த பெருமாள்' என்கின்றனர். இவருக்கு மேல் உள்ள மூலஸ்தான விமானம் "திராவிட விமானம்' எனப்படுகிறது. திருமணத்தடை நீங்க தாயாருக்கு திருமஞ்சனம் செய்து வணங்குகின்றனர். 
இருப்பிடம்: சேலத்திலிருந்து ஆத்தூர் ரோட்டில் புத்திரகவுண்டன் பாளையம் 30 கி.மீ., இங்கிருந்து பிரியும் ரோட்டில் 4 கி.மீ., தூரத்தில் ஏத்தாப்பூர். 
திறக்கும் நேரம்: காலை 9.30- 12, மாலை 5- இரவு 8. 
போன்: 04282 270 210.


jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Fri Feb 07, 2014 10:28 pm

பிள்ளை வரம் தரும் வெள்ளிக்காப்பு!

ஆகஸ்ட் 27,2013,12:35  IST


பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 3 Large_125232140
நாராயணதீர்த்தருக்கு கிருஷ்ணராக காட்சிஅளித்த பெருமாள், தஞ்சாவூர் அருகிலுள்ள வரகூரில் அருள்பாலிக்கிறார். இவரிடம் வேண்டி வெள்ளிக்காப்பு அணிந்து கொண்டால் பிள்ளைவரம் விரைவில் கிடைக்கும். 

தல வரலாறு: நாராயணதீர்த்தர் என்ற மகான் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். பல தலங்களையும் வழிபட்ட அவர், நடுக்காவேரி என்னும் இடத்திலுள்ள விநாயகர் கோயிலில் இரவில் தங்கினார். கனவில் தோன்றிய திருமால், ""நாளை காலையில் எழுந்ததும் யாரைக் காண்கிறாயோ அவரைத் தொடர்ந்து செல். வயிற்று வலி குணமாகும்,'' என்று அருள்புரிந்தார். காலையில் கண்விழித்ததும் ஒரு வெள்ளைப் பன்றி (வராகம்) கண்ணில் பட்டது. தீர்த்தரும் பின்தொடர்ந்தார். அது பூபதிராஜபுரம் லட்சுமிநாராயணர் கோயிலுக்குள் சென்று மறைந்தது. அவரும் அங்கிருந்த பெருமாளை வழிபட்டு நோய் நீங்கப் பெற்றார். வராகவடிவில் பெருமாள் வந்த தலம் என்பதால் "வரகூர்' என பெயர் பெற்றது. பழமையான இந்தக்கோயில் முதலாம் பராந்தகச் சோழனால் கட்டப்பட்டது. 

பாமாவின் விருப்பம்: நாராயணதீர்த்தர், வரகூரில் தங்கியிருந்த காலத்தில் திருமால் கிருஷ்ணராக காட்சியளித்தார். அவருடன் ருக்மணி, சத்தியபாமாவும் வந்திருந்தனர். அப்போது சத்தியபாமா தீர்த்தரிடம், "" கிருஷ்ணாவதாரத்தில் கோபியருடன் நடத்திய லீலைகளைப் பாடுங்கள்,'' என வேண்டுகோள் விடுத்தார். தீர்த்தரும் மகிழ்ந்து,"ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி' என்ற பாடலைப் பாடினார். நாராயண கவிராயர் என்பவர் இத்தலத்தில் "ஸ்ரீகிருஷ்ண சிக்யோத்ஸவம்' என்ற பிரபந்தம் பாடியுள்ளார். சிக்யோத்ஸவம் என்றால் "உறியடி உற்ஸவம்'.


வெங்கடேசர் கோயில்: வரகூரில் மூலவர் லட்சுமிநாராயணர். உற்ஸவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கடேசப்பெருமாள். உற்ஸவர் பெயரையே கோயிலுக்கு சூட்டியுள்ளனர். அர்த்தமண்டபத்தின் மேல்தளத்தில், வராகர், நாகர் சிலைகள் உள்ளன. மூலவரே பிரதானம் என்பதால் பரிவார மூர்த்திகள் இல்லை. மாட்டுப்பொங்கல், கிருஷ்ண ஜெயந்தி, வராக, கூர்ம, நரசிம்ம, பலராமர் ஜெயந்தி விழாக்கள் நடக்கின்றன. 

மூலிகை பிரசாதம்: துளசி, ஏலக்காய், பச்சைக்கற்பூரம், கிராம்பு, ஜாதிக்காய் கலந்த பொடி பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதற்கு "துளசி மூலிகைப்பொடி' என்று பெயர். சர்க்கரை, ரத்தக்கொதிப்பு, இதயநோய், தோல் சம்பந்தப்பட்ட நோயால் அவதிப்படுபவர்கள் நோய் நீங்க வழிபட்டு மூலிகைப் பிரசாதம் பெற்றுச் செல்கின்றனர்.

முதல்மாத சம்பளம்: நன்கு படித்திருந்தும் தகுதியான வேலை கிடைக்காமல் அவதிப்படுபவர்கள் வரகூர் கோயிலுக்கு வருகின்றனர். அதற்கு நன்றிக்கடனாக முதல் மாத சம்பளத்தை காணிக்கையாக செலுத்துகின்றனர். வரகூரை சுற்றியுள்ள பகுதியில் 
இந்த வேண்டுதல் வழக்கில் உள்ளது. இதன் மூலம் பணி, சம்பள உயர்வு போன்றவை விரைவில் உண்டாகும் என்பது நம்பிக்கை.

வெள்ளிக்காப்பு: குழந்தை இல்லாத தம்பதியர், பெருமாளின் பாதத்தில் வெள்ளி காப்பு வைத்து அதையே அணிந்து கொள்கின்றனர். குழந்தை பிறந்தபின், குழந்தையோடு வந்து காப்பை பெருமாளிடம் சமர்ப்பிக்கின்றனர். 

கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு: தீர்த்தருக்கு லட்சுமி நாராயணர் கிருஷ்ணராக காட்சியளித்ததால் இங்கு கிருஷ்ணஜெயந்தி சிறப்பாக நடக்கிறது. அப்போது "கிருஷ்ணலீலா தரங்கிணி' பாடல்களைப் பாடுவர். அங்கப்பிரதட்சணம் செய்வர். பெருமாளின் கையில் இருக்கும் வெள்ளிக்குடத்தில் செல்வவளம் பெருக வேண்டி பக்தர்கள் வெண்ணெய் நிரப்புவர். பத்து நாட்கள் கிருஷ்ண ஜெயந்தி 
விழா நடக்கும். 

உறியடியோ கோவிந்தா: கிருஷ்ணஜெயந்தி பல்லக்குபவனியில் குறிப்பிட்ட வீட்டில் சிறுவர்களை அடைத்து விடுவர். அவர்கள் ""உறியடியோ கோவிந்தா'' என கூச்சலிட்டு கதவைத் திறக்கும்படி வேண்டுவர். ஆயர் பாடியில் கிருஷ்ணரைக் காணாமல் தவித்த பசு, கன்றுகள் கதறியதை நினைவூட்டும் விதத்தில் இது செய்யப்படுகிறது. இரவில் உறியடி கிருஷ்ணராக, பெருமாள் கையில் கம்புடன் வாய்க்கால் மண்டபத்திற்கு எழுந்தருள்கிறார். 32 தீவட்டிகள் ஏற்றியதும் வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சி நடக்கிறது. போட்டியில் வெல்பவருக்கு முறுக்கு, சீடை, பணமுடிப்பு தரப்படும். மறுநாள் ருக்மணி கல்யாணம் நடக்கிறது.
இருப்பிடம்: தஞ்சாவூரிலிருந்து 25 கி.மீ., திருவையாறிலிருந்து 15 கி.மீ., 
போன்: 94428 52145.


jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Fri Feb 07, 2014 10:34 pm

செல்வம் தரும் ஐஸ்வர்ய முருகன்

ஆகஸ்ட் 21,2013,12:19  IST


பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 3 Large_134851410
காஞ்சிப்பெரியவர் அருள் வாக்கின்படி வளமான வாழ்வு அளிக்கும் ஐஸ்வர்ய முருகன் எழுந்தருளிய தலம், சென்னையிலுள்ள குமரன்குன்றம்.

தல வரலாறு: பல ஆண்டுகளுக்கு முன்பு இத்தலத்தில் குன்று மட்டும் இருந்தது. ஒருசமயம் இங்கு வந்த காஞ்சிப் பெரியவர், பிற்காலத்தில் முருகன் கோயில் உண்டாகும் என அருள்வாக்கு வழங்கினார். சில காலம் கழித்து பக்தர்கள் சிலர், மலைப்பகுதியை சீர்படுத்திய போது வேல் ஒன்றைக் கண்டனர். அதை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். பிற்காலத்தில் முருகன் கோயில் கட்டப்பட்டது. முருகனுக்கு "சுவாமிநாதர்' என பெயர் சூட்டப்பட்டது.

புத்தாண்டு படிபூஜை: குமரனாகிய முருகன் குடியிருக்கும் குன்றம் என்பதால் இத்தலம் "குமரன் குன்றம்' எனப்படுகிறது. தமிழ்ப் புத்தாண்டின் போது, இங்குள்ள 120 படிகளுக்கு பூஜை நடத்தப்படும். அப்போது, முருகன் ஊஞ்சல் சேவை நடக்கும். திருநீர்மலை, திரிசூலம் ஆகிய தலங்களுக்கு நடுவில் இக்கோயில் உள்ளது. மலை அடிவாரத்தில் சித்திவிநாயகர், இடும்பன் சந்நிதி உள்ளன. 

ஜெயம் தரும் காளி: இங்குள்ள அம்பாள், "ஜெயமங்கள மாகாளி' என அழைக்கப்படுகிறாள். வேண்டுபவர்களுக்கு வெற்றியும் (ஜெயம்), மங்களமும் தருபவள் என்பதால் இப்பெயர் வழங்கப்படுகிறது. பவுர்ணமியில் காளிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. 

வெள்ளியம்பலம்: மலைப்பாதையில், சுந்தரேஸ்வரர் கோயில் இருக்கிறது. இங்கு சிவன் வடக்கு நோக்கி, கஜபிருஷ்ட விமானத்தின் கீழ் இருக்கிறார். லிங்கத்தின் பாணத்தில் சிவனின் முழு உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது. அம்பாள் மீனாட்சிக்கும் சந்நிதி உள்ளது. இங்கு நடராஜர், இடக்காலை ஊன்றி, வலக்காலை தூக்கியபடி காட்சி தருகிறார். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்நிதி என்பதால், நடராஜர் மதுரையில் காட்சி தருவது போல வெள்ளியம்பலமாக தோற்றமளிக்கிறார். சிவசக்தி அம்சமான சிவனின் வலது பாதம், சிவனுக்குரியதாக கருதப்படுகிறது. எனவே இங்கு நடராஜரை "தன்பாதம் தூக்கிய நடராஜர்' என்கின்றனர். 

ஐஸ்வர்ய முருகன்: மூலஸ்தானத்தில் சுவாமிநாதர், கையில் தண்டம் வைத்து பாலனாக காட்சி தருகிறார். இவரது பீடத்திலும், சந்நிதி எதிரிலும் யானை வாகனம் இருக்கிறது. உற்சவர் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் வீற்றிருக்கிறார். மலையில் வற்றாத குமார தீர்த்தம் உள்ளது. ஆடி, தை கிருத்திகை, திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் சுவாமி, கிரிவலம் வருகிறார். இங்கு முருகன் குபேர திசையான வடக்கு நோக்கி இருப்பதால், "ஐஸ்வர்ய முருகன்' என போற்றப்படுகிறார். இவரை வணங்கினால் செல்வவளம் பெருகும். 
இருப்பிடம்: சென்னை தாம்பரத்தில் இருந்து 3 கி.மீ., தூரத்தில் குரோம்பேட்டை சென்று, அங்கிருந்து 1 கி.மீ., சென்றால் கோயில். 
திறக்கும் நேரம்: காலை 6.30- 11, மாலை 4.30- இரவு 8.30. 
போன்: 044 - 2223 5319.


jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Fri Feb 07, 2014 10:36 pm

நியாயத்தைப் பேசுங்க!

ஆகஸ்ட் 21,2013,12:16  IST


பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 3 Large_134755647
நியாயம் தவறி பேசுபவர்களும், நியாயத்துக்குப் புறம்பாக தீர்ப்பளிப்பவர்களும் பாம்பாகப் பிறந்து சிரமப்படுவார்கள் என்பதை உலகுக்கு உணர்த்த, காஞ்சிபுரத்திலுள்ள ஒரு தலத்தில் திருமால் எழுந்தருளினார். இவரை அனந்தபத்மநாபர் என்பர். தோல்நோய் உள்ளவர்கள் இங்கு சென்று வருவது சிறப்பு.

தல வரலாறு: பொய் சொன்னால் மனிதனுக்கு என்னாகும் என்பதை உணர்த்தும் வகையில் திருமால் ஒரு லீலையை நிகழ்த்த விரும்பினார். ஒருசமயம், கைலாயத்தில் ஒருமுறை சிவனும், பார்வதியும் பகடை விளையாடிக் கொண்டிருந்த போது, அங்கு வந்தார். விளையாட்டுக்கு நடுவராக இருந்து வெற்றி பெற்றது யார் என்று சொல்லும் பொறுப்பை ஏற்றார். விளøயாட்டில் பார்வதி வென்றாள். ஆனால், போட்டியில் சிவன் வென்றதாகக் கூறிவிட்டார். தன் சகோதரரே இப்படி சொல்லிவிட்டாரே என வருத்தமடைந்தாள் பார்வதி. 

கடவுளாகவே இருந்தாலும் பொய் பேசினால், அவர் அதற்குரிய தண்டனையை அடைந்து தீர வேண்டும் என்பதன் அடிப்படையில், தவறான தீர்ப்பு வழங்கிய திருமால், பிளவுபட்ட நாக்குடன் பாம்பாக மாறும்படி சபித்தாள். சாபவிமோசனமாக,பூலோகத்தில் முக்தி தலமாக விளங்கும் காஞ்சிபுரம் சென்று சிவனைப் பூஜித்தால் சாபம் நீங்கும். பிளவுபட்ட நாக்கு ஒன்றாகி பாம்பு வடிவம் மறையும்,'' என்றாள். அதன்படி, திருமாலும் காஞ்சிபுரத்தில் சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றார். அவரே, அனந்தபத்மநாபர் என்னும் திருநாமத்துடன் சயனகோலத்தில் லட்சுமி தாயாருடன் அருள்பாலிக்கிறார். சிவன் லிங்கவடிவில் மகாகாளேஸ்வரர் என்ற திருநாமத்துடன் விளங்குகிறார். மூவரும் ஒரே சந்நிதியில் காட்சி தருவது சிறப்பு.

விநாயகரும், முருகனும் சந்நிதியின் இருபுறமும் வீற்றிருக்கின்றனர். காஞ்சிபுரத்திலுள்ள நவக்கிரக தலங்களில் இது கேதுவுக்குரியதாக திகழ்கிறது. பூமியில் புதையுண்டு கிடந்த இக்கோயிலைப் பல ஆண்டுகளுக்கு முன், காஞ்சிப்பெரியவர் புதுப்பித்து திருப்பணி செய்தார். பலமுறை அவர் வழிபட்டதோடு, பக்தர்களுக்கு ஆசியும் அளித்துள்ளார். காஞ்சி காமகோடி பீடத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கோயில் செயல்படுகிறது. இது பாம்பு தொடர்புடைய கோயில் என்பதால், தோல், வாய்,நாக்கு, தொடர்பான நோயுள்ளவர்கள், அடிக்கடி தொண்டையில் வலி வந்து பேச சிரமப்படுகிறவர்கள் நோய் நீங்க அனந்த பத்மநாபரை வேண்டலாம். இங்கு வருபவர்கள் காஞ்சிபெரியவர் அதிஷ்டானம் சென்றும் வழிபடுவர்.

திருவிழா: வைகுண்ட ஏகாதசி, சிவராத்திரி, அனந்தபத்மநாப விரதம்

இருப்பிடம்: காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ., பெரியகாஞ்சிபுரம் அன்னதானக்கூடம் சாலைத்தெரு (சந்தர்ப்பணை) பின்புறம் 
திறக்கும்நேரம்: காலை 7- 10, மாலை 5- 6
போன்: 044 2722 4236.


jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Fri Feb 07, 2014 10:37 pm

வாசல் பார்த்த நந்தி

ஆகஸ்ட் 14,2013,12:08  IST


பிதுர் தோஷம் போக்கும் சிவன் - Page 3 Large_101459151
பொதுவாக சிவாலயங்களில் நந்தி சிவனை நோக்கியிருக்கும். ஆனால், வேலூர் அருகிலுள்ள திருவல்லம் வில்வநாதீஸ்வரர் கோயிலில் சிவனின் எதிரில் உள்ள நந்தி சிவனை நோக்காமல், வாசலை நோக்கி திரும்பி இருப்பது அதிசயம். 

தல வரலாறு: திருவல்லத்தில் வாழ்ந்த அர்ச்சகர் ஒருவர், அருகிலுள்ள கஞ்சன் மலையிலிருந்து சுவாமி அபிஷேகத்திற்கு தீர்த்தம் கொண்டு வருவது வழக்கம். அந்த மலையில் இருந்த கஞ்சன் என்ற முரடன், அவருக்கு தொல்லை கொடுத்து வந்தான். அர்ச்சகர் இறைவனிடம் முறையிடுவார். ஈசன் தன் வாகனமான நந்தியிடம் அந்த முரடனை அடக்குமாறு கட்டளையிட்டார். நந்தி அரக்கனை எட்டு பாகங்களாக கிழித்து போட்டது. இருந்தாலும், சாகாவரம் பெற்றிருந்த அந்த முரடன், நந்தியின் தாக்குதலில் இருந்து தப்பி விட்டான். அவன் மீண்டும் வருகிறானா என்பதை கண்காணிக்கும் வகையில், நந்தி சிவனை நோக்கி இராமல், கோயில் வாசலை நோக்கி திரும்பினார். பின், அவன் சிவனிடம் சரணடைந்து மோட்சம் பெற்றான்.

தலப்பெருமை: முழு முதற்கடவுளான விநாயகர் "அம்மையப்பன் தான் உலகம்', "உலகம் தான் அம்மையப்பன்' என உலகிற்கு அறிவித்த தலம் திருவல்லம். அம்மையப்பரை விநாயகர் "வலம்' வந்ததை உணர்த்துவதால், திருவலம்' என்றாகி, நாளடைவில் திருவல்லம்' ஆயிற்று.இங்குள்ள தல விநாயகர் "கனிவாங்கிய பிள்ளையார்' எனப்படுகிறார். அதற்கேற்றாற் போல் துதிக்கையில் மாங்கனியை வைத்து வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

தன் வாகனமான மூஞ்சுறுவின் மீது அமர்ந்திருப்பது காண்பதற்கரிய சிறப்பம்சமாகும். முருகனுக்கும், விநாயகருக்கும் சிவன் வைத்த போட்டியில் வென்ற விநாயகர் ஞானப்பழத்துடன் இத்தலத்தில் வந்து அமர்ந்ததாக வரலாறு. எனவே, இவரை வணங்குவோர் பிறப்பற்ற நிலையை அடைவர். இத்தல முருகனை அருணகிரிநாதர் தன் திருப்புகழில் பாடியுள்ளார். சுவாமி சன்னதியின் வலது பக்கம் தொட்டி போன்ற அமைப்பில் ஜலகண்டேஸ்வரர் என்னும் பாதாளேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். மழை வேண்டி இவருக்கு வழிபாடு செய்யப்படுகிறது. சிவபெருமானின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களுள் இதுவும் ஒன்று. 

சனகர் சமாதி: வில்வநாதீஸ்வரருக்கு நேர் எதிரில் நந்திக்கு நடுவில் தட்சிணாமூர்த்தியின் சீடரான சனகரின் சமாதி உள்ளது. இந்த இடத்தில் அமர்ந்து தியானம் செய்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் நிவர்த்தியாகும் என்பர். சிவானந்த மவுன குரு சுவாமி இங்குள்ள பலா மரத்தின் அடியில் அமர்ந்து தவம் செய்து இறைவனின் அருள் பெற்றுள்ளார். இவருக்கு கோயில் அருகேதனி மடம் உள்ளது. கஞ்சன்மலையிலுள்ள சுயம்புலிங்கங்களுக்கு பவுர்ணமியன்று சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.

கஞ்சனின் வேண்டுகோளுக்கிணங்க, வில்வநாதீஸ்வரர், தைப்பொங்கல் கழித்த 3ம் நாள், கஞ்சனின் உடலுறுப்புகள் விழுந்த எட்டு இடங்களிலும் கட்டப்பட்டுள்ள கோயில்களுக்கு எழுந்தருளி, கஞ்சனுக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.
கோயில் அமைப்பு: 5 ஏக்கர் நிலப்பரப்பில் 7 நிலை ராஜகோபுரம், மூன்று பிரகாரம் என பிரமாண்டமான கோயிலாக விளங்குகிறது. அம்மன் வல்லாம்பிகை நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். சுமார் 1500 வருடங்கள் பழமையான இத்தலத்தில் தலவிருட்சமாக 
வில்வமும், தீர்த்தங்களாக நீலாநதியும், கவுரியும் உள்ளன. இத்தல இறைவனை அப்பரும், சம்பந்தரும் தங்களது தேவாரப்பாடலில் பாடி உள்ளனர். உள் பிரகாரத்தில் வலம்புரி விநாயகர், பெருமாள், சுப்பிரமணியர், சகஸ்ரலிங்கம், மீனாட்சிசுந்தரர், பைரவர், சூரியன், பாதாளேஸ்வரர் சந்நிதிகளும், கிழக்கு நோக்கி மிகப்பெரிய நந்தியும் காட்சியளிக்கின்றன.

பிரசாத மகிமை: சிவனின் பெயர் வில்வநாதீஸ்வரர் என்பதால் இங்கு பிரசாதமாக வில்வம் தரப்படுகிறது. இதை சாப்பிட்டால் மந்த புத்தி நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், தோல் நோய் நீங்கும், ஞானம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இருப்பிடம் : வேலூரிலிருந்து ராணிப்பேட்டை செல்லும் வழியில் 16 கி.மீ., 
திறக்கும் நேரம்: காலை 6.30 -12, மாலை 4 - இரவு 8. 
போன்: 0416 223 6088.


Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக