புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிதுர் தோஷம் போக்கும் சிவன் Poll_c10பிதுர் தோஷம் போக்கும் சிவன் Poll_m10பிதுர் தோஷம் போக்கும் சிவன் Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
பிதுர் தோஷம் போக்கும் சிவன் Poll_c10பிதுர் தோஷம் போக்கும் சிவன் Poll_m10பிதுர் தோஷம் போக்கும் சிவன் Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
பிதுர் தோஷம் போக்கும் சிவன் Poll_c10பிதுர் தோஷம் போக்கும் சிவன் Poll_m10பிதுர் தோஷம் போக்கும் சிவன் Poll_c10 
3 Posts - 4%
prajai
பிதுர் தோஷம் போக்கும் சிவன் Poll_c10பிதுர் தோஷம் போக்கும் சிவன் Poll_m10பிதுர் தோஷம் போக்கும் சிவன் Poll_c10 
2 Posts - 3%
Baarushree
பிதுர் தோஷம் போக்கும் சிவன் Poll_c10பிதுர் தோஷம் போக்கும் சிவன் Poll_m10பிதுர் தோஷம் போக்கும் சிவன் Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
பிதுர் தோஷம் போக்கும் சிவன் Poll_c10பிதுர் தோஷம் போக்கும் சிவன் Poll_m10பிதுர் தோஷம் போக்கும் சிவன் Poll_c10 
2 Posts - 3%
viyasan
பிதுர் தோஷம் போக்கும் சிவன் Poll_c10பிதுர் தோஷம் போக்கும் சிவன் Poll_m10பிதுர் தோஷம் போக்கும் சிவன் Poll_c10 
2 Posts - 3%
Rutu
பிதுர் தோஷம் போக்கும் சிவன் Poll_c10பிதுர் தோஷம் போக்கும் சிவன் Poll_m10பிதுர் தோஷம் போக்கும் சிவன் Poll_c10 
1 Post - 1%
சிவா
பிதுர் தோஷம் போக்கும் சிவன் Poll_c10பிதுர் தோஷம் போக்கும் சிவன் Poll_m10பிதுர் தோஷம் போக்கும் சிவன் Poll_c10 
1 Post - 1%
manikavi
பிதுர் தோஷம் போக்கும் சிவன் Poll_c10பிதுர் தோஷம் போக்கும் சிவன் Poll_m10பிதுர் தோஷம் போக்கும் சிவன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிதுர் தோஷம் போக்கும் சிவன் Poll_c10பிதுர் தோஷம் போக்கும் சிவன் Poll_m10பிதுர் தோஷம் போக்கும் சிவன் Poll_c10 
24 Posts - 77%
ரா.ரமேஷ்குமார்
பிதுர் தோஷம் போக்கும் சிவன் Poll_c10பிதுர் தோஷம் போக்கும் சிவன் Poll_m10பிதுர் தோஷம் போக்கும் சிவன் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
பிதுர் தோஷம் போக்கும் சிவன் Poll_c10பிதுர் தோஷம் போக்கும் சிவன் Poll_m10பிதுர் தோஷம் போக்கும் சிவன் Poll_c10 
2 Posts - 6%
manikavi
பிதுர் தோஷம் போக்கும் சிவன் Poll_c10பிதுர் தோஷம் போக்கும் சிவன் Poll_m10பிதுர் தோஷம் போக்கும் சிவன் Poll_c10 
1 Post - 3%
viyasan
பிதுர் தோஷம் போக்கும் சிவன் Poll_c10பிதுர் தோஷம் போக்கும் சிவன் Poll_m10பிதுர் தோஷம் போக்கும் சிவன் Poll_c10 
1 Post - 3%
Rutu
பிதுர் தோஷம் போக்கும் சிவன் Poll_c10பிதுர் தோஷம் போக்கும் சிவன் Poll_m10பிதுர் தோஷம் போக்கும் சிவன் Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிதுர் தோஷம் போக்கும் சிவன்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Fri Feb 07, 2014 9:03 pm

பிதுர் தோஷம் போக்கும் சிவன்

ஜனவரி 24,2014,12:10  IST


பிதுர் தோஷம் போக்கும் சிவன் Large_125202201
முன்னோர் கடனை சரிவர தீர்க்காதவர்கள் வணங்க வேண்டிய சிவன், காஞ்சிபுரத்தில் அருள்பாலிக்கிறார். இங்குள்ள யோகலிங்கேஸ்வரர், அனுமந்தீஸ்வரர் கோயிலில் இதற்கான பரிகாரம் செய்து கொள்ளலாம். 
தல வரலாறு: சிவபக்தனான ராவணனைக் கொன்றதால், ராமனுக்கு பிரம்மஹத்திதோஷம் உண்டானது. தந்தையான தசரதருக்கு செய்ய வேண்டிய பிதுர்கடனும் அவருக்கு இருந்தது. பிரம்மஹத்தி தோஷம் நீங்கவும், பிதுர்கடன் நிறைவேற்றாததால் ஏற்பட்ட சிரமங்கள் நீங்கவும், அவர் சிவபெருமானை வேண்டினார். அதன்பின், காஞ்சிபுரத்தில் இந்திரனால் உருவாக்கப்பட்ட சர்வதீர்த்தக் குளக்கரையில், பிதுர்க்கடனாக தசரதருக்கு தர்ப்பணம் செய்தார். சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். 
அவருக்கு "ராமநாத சுவாமி' என்ற பெயர் ஏற்பட்டது. ராமனோடு வந்த சீதாதேவி, லட்சுமணர், ஆஞ்சேநயர் ஆகியோரும் ஆளுக்கு ஒரு சிவலிங்கத்தை காஞ்சியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். சீதாதீஸ்வரர், லட்சுமணீஸ்வரர், அனுமந்தீஸ்வரர் என பெயர் சூட்டப்பட்டது. இதன் பின் சிவன் அவர்களுக்கு யோகவடிவில் காட்சியளித்தார். அவரே "யோகலிங்கேஸ்வரர்' என்ற பெயர் பெற்றார். 
தோஷ நிவர்த்தி தலம்: இக்கோயில் சிறந்த தோஷ நிவர்த்தி தலமாக விளங்குகிறது. முன்னோருக்கு முறையான திதி, தர்ப்பணம் செய்யாமல் இருந்தால் முன்னோர் சாபம், பிதுர்தோஷம் ஏற்பட வாய்ப்புண்டு. இதனால், திருமணத்தடை, குழந்தையின்மை, உடல்நலக்குறைவு போன்ற சிரமங்கள் வரலாம். இங்குள்ள யோகலிங்கேஸ்வரர், அனுமந்தீஸ்வரர், ஆஞ்சநேயரை வழிபட இந்தக் குறைபாடு நீங்குவதோடு, முன்னோர் ஆசியால் வாழ்வில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். இங்கு திருப்பணி நடந்து வருகிறது. பிப். 9ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. பக்தர்கள் திருப்பணியில் பங்கேற்கலாம். 
இருப்பிடம்: காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து, அரக்கோணம் ரோட்டில் 2 கி.மீ., 
போன்: 97895 27982.


jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Fri Feb 07, 2014 9:04 pm

போன வழியே திரும்பக்கூடாத மகாலிங்க சுவாமி கோயில்

ஜனவரி 24,2014,12:25  IST


பிதுர் தோஷம் போக்கும் சிவன் Large_125529208
மற்ற கோயில்களில் சென்ற வழியே திரும்புவதுதான் வழக்கம். தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயிலில் வேறு வாசல் வழியே திரும்ப வேண்டும். எதற்காக?

தல வரலாறு: அர்ஜுனம் என்றால் மருதமரம். மருத மரத்தை தல விருட்சமாக கொண்ட தலங்கள் அர்ஜுனத் தலங்கள் என்றழைக்கப்படும். வடக்கிலுள்ள ஸ்ரீசைலத்தை மல்லிகார்ஜுனம் என்றும், தெற்கில் திருநெல்வேலி அருகிலுள்ள திருப்புடை
மருதூரை ஜுடார்ஜுனம் என்றும், இவ்விரு தலங்களுக்கு நடுவில் இருப்பதால் இத்தலம் மத்தியார்ஜுனம் என பெயர் பெற்றது. 
அம்பிகை, அகத்தியர் வழிபட்ட இத்தலத்தில் சிவன் மகாலிங்க சுவாமி என்ற பெயரில் அருளுகிறார். ஏழு பிரகாரம் கொண்ட இத்தலத்தில் அம்பிகை பெருநலமாமுலையம்மன் என்னும் பெயரில் அருள்பாலிக்கிறாள். 
லிங்கவடிவ நட்சத்திரங்கள்: சந்திரன், குருவான பிரகஸ்பதியின் மனைவி மீது ஆசை கொண்டதால் தோஷத்திற்கு ஆளானான். தோஷம் நீங்க, சிவனை வேண்டி தவமிருந்தான். இரங்கிய சிவன் விமோசனம் அளித்தார். சந்திரன் வந்தபோது அவனது மனைவியர்களான 27 நட்சத்திரங்களும் வந்தன. சந்திரனுக்கு அருளிய சிவன், நட்சத்திரங்களுக்கும் அருள்புரிந்தார். இங்கு தோன்றிய 27லிங்கங்களில் அவை ஐக்கியமாகின. இந்த லிங்கங்கள் ஒரே சந்நிதியில் உள்ளன. அவரவர் பிறந்த நட்சத்திர லிங்கத்தில் விளக்கேற்றி வழிபடலாம். 
பாவம் நீங்க வழிபாடு: வரகுணபாண்டிய மன்னன் அறியாமல் செய்த கொலைக்காக, பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிக்கப்பட்டான். விமோசனத்திற்காக இத்தலம் வந்து மகாலிங்கசுவாமியை வழிபட்டான். சிவன் அவனைப் பற்றியிருந்த பிரம்ம ஹத்தியை அகற்றினார். இந்த பிரம்மஹத்திக்கு, சிவன் சந்நிதி இரண்டாம் கோபுரத்தில் சிலை உள்ளது. அறியாமல் செய்த பாவம் நீங்க இதற்கு உப்பு மற்றும் மிளகிட்டு வணங்குகின்றனர். 
அன்பிற்பிரியாள்: சம்பந்தர் இங்கு வந்தபோது, வழியெல்லாம் சிவலிங்கமாகத் தோன்றியது. எனவே தரையில் கால் பதிக்க அவர் அஞ்சினார். அப்போது, சிவன் அம்பிகையை அனுப்பினார். அவள், சம்பந்தரை இடுப்பில் தூக்கிக் கொண்டு வந்தாள். இவளே பிரகாரத்தில் மருதவாணருடன் (சிவன்), கைலாயத்தின் மீது காட்சி தருகிறாள். இவளை "அன்பிற்பிரியாள்' என அழைக்கின்றனர். தட்சிணாமூர்த்தி இங்கு அம்பிகையுடன் காட்சி தருகிறார். இவருக்கு "சாம்ப தட்சிணாமூர்த்தி' என்று பெயர். மகாலிங்கசுவாமி சந்நிதியின் முன் மண்டபத்தில் சுதை சிற்பமாக விளங்குகிறார். மூகாசுரனை வதம் செய்த மூகாம்பிகை, தோஷம் நீங்க இங்கு சிவனை வழிபட்டாள். சிவன் விமோசனம் அளித்ததோடு, மணம் செய்து கொண்டார். வைகாசி உத்திரத்தன்று இத்திருமணம் நடக்கும். கிழக்கு கோபுரத்தின் கீழ் பட்டினத்தாருக்கும், மேற்கு கோபுரத்தின் கீழ் அவரது சீடர்பத்திரகிரியாருக்கும் சந்நிதி உள்ளது.
போனவழியில் வரக் கூடாது: இங்கு எந்த வழியில் சென்றோமோ, அதே வழியில் திரும்பக் கூடாது என்பது நியதி. சிவன் சந்நிதி எதிரிலுள்ள கோபுரம் வழியாக நுழைந்து முதலில் படித்துறை விநாயகரை வணங்கி, சிவன், அம்பாள் சந்நிதிகளுக்குச் சென்று, பின்பு மூகாம்பிகையை தரிசித்து முடிக்க வேண்டும். வேறு வாசல் வழியாக வெளியே வர வேண்டும். இதற்கு ஒரு காரணம் உண்டு. ஏதேனும் பீடை மனிதனுக்கு இருந்தால், அது நுழைவு வாசலில் நின்று கொள்ளும். கோயிலை விட்டு வெளியேறும் போது தொற்றிக் கொள்ளும். வேறு வாசல் வழியாக வந்தால் பிடிக்காது. ஒருமுறை சிவன், அம்பிகையிடம் இத்தல மகிமையைச் சொல்ல, ஆனந்த கண்ணீர் வடித்தாள். அதுவே குளமாக உருவெடுத்தது. இது காருண்ய (கருணை) தீர்த்தம் எனப்படுகிறது. 
இருப்பிடம்: கும்பகோணம்- மயிலாடுதுறை வழியில் 10 கி.மீ.
திறக்கும் நேரம்: காலை 5.30- பகல்12.00, மாலை 4.30- இரவு 9.00.
போன்: 0435- 246 0660.


jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Fri Feb 07, 2014 9:05 pm

சேலை கட்டும் சிவன்!

ஜனவரி 28,2014,13:59  IST


பிதுர் தோஷம் போக்கும் சிவன் Large_154830722
தாமதமாக வந்த பக்தனிடம் கருணை காட்டிய சிவன் மயிலாடுதுறையில் மயூரநாதராக வீற்றிருக்கிறார். இங்குள்ள சிவனுக்கு சிவப்புசேலை சாத்துவது சிறப்பு.
தல வரலாறு: பார்வதி மயில் வடிவில் சிவனை வழிபட்ட தலம். மேலும், இங்கு அம்மன் மயில் வடிவில், கவுரி தாண்டவம் ஆடியதால் மயிலாடுதுறை என்ற பெயர் உண்டானது. இவளை மயிலம்மன் என்கின்றனர். ஐப்பசி திருவிழாவின் ஐந்தாம் நாளில், சிவபார்வதி இருவரும் ஆடிய மயூரதாண்டவத்தை தரிசிக்கலாம். கருவறையில் மூலவர் மயூரநாதர் கிழக்குநோக்கி சுயம்பு மூர்த்தியாக வீற்றிருக்கிறார். கருவறை கோஷ்டத்தில் (சுற்றுச்சுவர்) ஆலிங்கன மூர்த்தி தரிசனம் அளிக்கிறார். இவரை வழிபட்டால் கருத்துவேறுபாடு நீங்கி தம்பதி ஒற்றுமை சிறக்கும். இங்கு இரண்டு சண்டிகேஸ்வரர் இருப்பது சிறப்பு. அகத்தியர் வழிபட்டவர் என்பதால் இங்குள்ள விநாயகர் அகத்திய விநாயகர் என அழைக்கப்படுகிறார். 
கணக்கு பிள்ளையார்: இங்குள்ள தானியக்களஞ்சியத்தின் வெளித்திண்ணையில் இருப்பவர் களஞ்சியப் பிள்ளையார். இவருக்கு கணக்கு பிள்ளையார் என்றும் பெயருண்டு. இவர் முன் பரப்பட்டிருக்கும் நெல்லில் "ஓம்' என்னும் பிரணவ மந்திரத்தையும், சுபம், லாபம் எழுதினால் தொழில் சிறந்து லாபம் பெருகும். குழந்தைகள் பள்ளியில் சேரும் முன் இங்கு ""அ,ஆ'' எழுதப் பழகினால் கல்வி சிறந்து விளங்குவர்.
அபயாம்பிகை: இங்குள்ள அபயாம்பிகை அம்மன் நான்கு திருக்கரங்களுடன் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறாள். வலக்கையில் கிளியேந்தி, நாடிவருவோருக்கு அபயம் அளிக்கிறார். நல்லத்துக்குடி கிருஷ்ணய்யர் "அபயாம்பிகை சதகம்' பாடியுள்ளார். இதைப் படிப்போருக்கு கல்வி, செல்வம், தைரியம் கிடைக்கும் என்பது ஐதீகம். 
கர்வம் நீங்கிய நந்தி: சிவனுக்கு சேவை செய்து வந்த நந்திக்கு ஒருமுறை கர்வம் உண்டானது. அதையறிந்த சிவன், தன் திருவடியால் நந்தியை அழுத்த, பாதாள உலகை அடைந்தது. தவறுக்காக வருந்திய நந்தி சிவனிடம் மன்னிப்பு கேட்டது. சிவனும், மயிலாடுதுறையில் ஐப்பசி அமாவாசையன்று ஞானாசிரியராக உபதேசம் செய்து அருள்வதாக கூறினார். அதன்படி குருவாக வந்த சிவன் மேதாதட்சிணாமூர்த்தியாக வந்து உபதேசித்தார். அந்த இடம் "வள்ளலார் கோயில்' என அழைக்கப்படுகிறது. 
பாவம் தீர்ந்த கங்கை: கங்காதேவி நீராடுவோரின் பாவச்சுமையால் வருந்தினாள். அவளின் பாவத்தை தீர கண்ணுவ மகரிஷி, ஐப்பசி அமாவாசையன்று காவிரியில் நீராட அருள்புரிந்தார். கங்கையுடன் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி, பைரவர்,
துண்டிவிநாயகர் என காசியிலிருந்து இங்கு எழுந்தருளினர். இதை அறிந்த கயாதீர்த்தமும் மயிலாடுதுறை இடபதீர்த்தக்கரைக்கு வந்தது. 
சேலை கட்டும் வழக்கம்: நாத சர்மா, அனவித்யாம்பிகை என்னும் தம்பதியர், காவிரியில் நீராட மயிலாடுதுறை வரும்போது, ஐப்பசி மாதம் முடிந்து விட்டது. ஆனால், அவர்களின் கனவில் தோன்றிய சிவன், கார்த்திகை முதல்நாள், சூரிய உதயத்திற்கு முன் நீராடினாலும் பாவம் நீங்கும் என அருள்புரிந்தார். இத்தம்பதி சிவனருளால் முக்தி பெற்றனர். இதில் அனவித்யாம்பிகை 
ஐக்கியமான சிவலிங்கம், அம்மன் சந்நிதியின் வலப்புறத்தில் உள்ளது. இவருக்கு சிவப்பு நிறச்சேலை சாத்துகின்றனர். 
இருப்பிடம்: கும்பகோணத்தில் இருந்து 28 கி.மீ.,
திறக்கும்நேரம்: காலை7- மதியம்12.30, மாலை4- இரவு9.
போன்: 04364- 223 779.


jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Fri Feb 07, 2014 9:06 pm

செவ்வாயில் பொருள் வாங்கி செல்வத்தை பெருக்குங்க!

ஜனவரி 24,2014,12:08  IST


பிதுர் தோஷம் போக்கும் சிவன் Large_125146125
சென்னை வில்லிவாக்கம் அகஸ்தீஸ்வரர் கோயிலில் பக்தர்களுக்கு செல்வத்தை அருளும் ஐஸ்வர்ய வீரபத்திரரும், ஸ்வர்ணாம்பிகையும் தரிசனம் தருகின்றனர். இவர்களை செவ்வாயன்று வழிபட்டு பொருள் வாங்கினால், பல மடங்கு பொருள் பெருகும் என்பது ஐதீகம்.
தல வரலாறு: கைலாயத்தில் சிவன் திருமணம் நடந்தபோது, தென்திசை வந்தார் அகத்தியர். அப்போது இத்தலத்தில் தங்கி சிவபூஜை செய்தார். அவருக்கு, வில்வலன், வாதாபி என்ற சகோதர அசுரர்கள் தொல்லை கொடுத்தனர். அவர்களை அகத்தியர் வதம் செய்தார். இதனால் அவருக்கு பிரம்மஹத்தி தோஷம் (கொலை பாவம்) உண்டானது. தோஷம் நீங்க சிவபெருமானை வழிபட்டார். தொடர்ந்து தனது பூஜைகள் சரிவர நடக்க சிவனிடம் பாதுகாப்பு கேட்டார். அவரது பூஜைக்கு இடையூறு வராமல் காக்க, வீரபத்திரரை அனுப்பிய சிவபெருமான் அவரது தோஷத்தையும் போக்கினார். காவலுக்காக வந்த வீரபத்திரர் இத்தலத்தில் காட்சி தருகிறார். அகத்தியர் வழிபட்ட சிவன் அகஸ்தீஸ்வரர் என்ற பெயரில் மூலவராக இருக்கிறார்.
வீரபத்திரர் சிறப்பு: அகஸ்தீஸ்வரர் கோயிலின் தென்புற வாசல் எதிரேயுள்ள தனிக்கோயிலில் வீரபத்திரர் இருக்கிறார். கோரைப்பல்லுடன் இடதுகையில் தண்டம் ஏந்திய இவரது அருகில் வணங்கிய கோலத்தில் தட்சன் இருக்கிறான். முன்மண்டபத்தில் பத்திரகாளி சந்நிதி உள்ளது. பவுர்ணமி தோறும் வீரபத்திரருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. இவர் சிவ அம்சம் என்பதால், சிவராத்திரியன்று இரவில் ஒரு காலமும், பிரதோஷ வேளையிலும் சிறப்பு பூஜை நடக்கிறது. இத்தலத்து வீரபத்திரர், குபேரதிசையான வடக்கு நோக்கியிருப்பதால், இவரிடம் வேண்டிக்கொள்ள குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம். எனவே இவரை, "ஐஸ்வர்ய வீரபத்திரர்' என்று அழைக்கிறார்கள். 
அம்பாள் பார்வையில் குரு: அகத்தியருக்கு சிவன், அம்பிகையுடன் காட்சி தந்தபோது, அம்பாள் திருமணக்கோலத்தில் தங்கநகைகள் அணிந்திருந்தாள். எனவே இவள், "ஸ்வர்ணாம்பிகை' எனப்படுகிறாள். இவளது சந்நிதி முகப்பில் மகாலட்சுமி, சரஸ்வதி சந்நிதியும், எதிரே நவக்கிரக மண்டபமும் உள்ளது. இம்மண்டபத்திலுள்ள குருபகவான், அம்பிகையின் நேரடிப்பார்வையில் இருக்கிறார். எனவே இங்கு அம்பிகையை வேண்டிட குருபார்வை கிடைக்கும், குருவால் உண்டாகும் தோஷம் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை. இத்தகைய அமைப்பைக் காண்பது அரிது.
செவ்வாய் கோயில்: நவக்கிரகங்களில் அங்காரகன் (செவ்வாய்) தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க, தீர்த்தம் உண்டாக்கி சிவனை வழிபட்ட தலம் இது. எனவே இது செவ்வாய் தோஷ பரிகார தலமாக திகழ்கிறது. அங்காரகன் உண்டாக்கிய தீர்த்தம் கோயிலுக்கு வெளியே இருக்கிறது. தீர்த்தக்கரையிலுள்ள அரசமரத்தடியில் அங்காரகன் காட்சி தருகிறார். அருகில் வடக்கு நோக்கி வலம்புரி விநாயகர் இருக்கிறார். பக்தர்கள் இக்கோயிலை, "செவ்வாய்க்கிழமை கோயில்' என்றே அழைக்கிறார்கள். 
அகத்தியருக்கு சிவன், ஒரு ஆடி மாத செவ்வாயன்று காட்சி தந்ததாக ஐதீகம். செவ்வாயன்று ஐஸ்வர்ய வீரபத்திரையும், ஸ்வர்ணாம்பிகையையும் வணங்கி, தங்கநகை உள்ளிட்ட பொருள் வாங்கினால் அது பல மடங்காகப் பெருகும் என்பது ஐதீகம்.
சிறப்பம்சம்: வில்வலன் மற்றும் வாதாபியை அகத்தியர் அழித்த தலம் என்பதால் இவ்வூர், "வில்லிவாக்கம்' எனப்படுகிறது. பிரகாரத்தில் நடராஜர், பைரவர், சுப்பிரமணியர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, ஆதிசங்கரர், நால்வர் சந்நிதிகள் உள்ளன. நால்வர் சந்நிதியில் அகத்தியரும் இருக்கிறார்.
இருப்பிடம்: எழும்பூரில் இருந்து 8 கி.மீ., தூரத்திலுள்ள வில்லிவாக்கம், பஸ் ஸ்டாண்ட் அருகில் கோயில்.
திறக்கும் நேரம்: காலை 6 .00- பகல் 12.00, மாலை 4.00- இரவு 8.30.
போன்: 044 - 2617 2326.


jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Fri Feb 07, 2014 9:10 pm

ஒரே இடத்தில் 9 ஆஞ்சநேயர்

ஜனவரி 28,2014,14:06  IST


பிதுர் தோஷம் போக்கும் சிவன் Large_155111764
ஜன., 30 - தை அமாவாசை

இந்தியாவிலேயே முதன் முறையாக நவ மாருதிக்கென அமைந்த முதல் கோயில், திண்டுக்கல்-மதுரை இடையேயுள்ள குலசேகரன்கோட்டையில் இருக்கிறது. தை அமாவாசையன்று இந்த ஆஞ்சநேயரை தரிசிப்பது சிறப்பு.

தல வரலாறு: ஆஞ்சநேயர் சஞ்சீவிமலையை எடுத்து தெற்கே செல்லும் போது விழுந்த துகள்கள் எல்லாம் மலைகளாகி சிறப்பு பெற்றுள்ளதாக பலதல புராணங்கள் சொல்கின்றன. திண்டுக்கல் அருகிலுள்ள குலசேகரன்கோட்டையிலுள்ள சிறுமலையும் இதன் துகளாகக் கருதப்படுகிறது. இந்த மலை அடிவாரத்தில், ஜெயவரத ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. 
சிறப்பம்சம்: ஆஞ்சநேயர் கோயிலைச் சுற்றி, ஒரு நீரோடை மாலை போல் ஓடுகிறது. ஜெயவரத ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இவர் மீது சூரியக்கதிர் தினமும் காலை 7.00 முதல் 7.20 மணிக்குள் படர்கிறது.

நவ கல்யாண குணம்: ஆஞ்சநேயருக்கு ஒன்பது வகையான கல்யாண குணங்கள் உண்டு. அந்த குணங்களின் அடிப்படையில் இங்கு நவ ஆஞ்சநேயர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம், ஒன்பது வகையான பிரார்த்தனைகளைச் செய்யலாம். 
தல பெருமை: இங்குள்ள மூலவர் சிலை செய்ய நாகர்கோவில் அருகே உள்ள மயிலாடியில் கல் எடுக்கப்பட்டது. கோயில் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது. கோயில் வாசலில் தெற்கு நோக்கி 23 அடி உயர ஆஞ்சநேயர் சுதை வடிவில் அருள்பாலிக்கிறார். மூலவர் ஜெயவரத ஆஞ்சநேயரைச் சுற்றி தெற்கு நோக்கி மூன்று ஆஞ்சநேயர்களும், மேற்கு நோக்கி இருவரும், வடக்கு நோக்கி மூவரும் அருள்பாலிக்கிறார்கள். அமாவாசையன்று இந்த ஆஞ்சநேயர்களை வணங்குவது சிறப்பு. குறிப்பாக, தை, ஆடி அமாவாசைகள் மிகவும் உகந்த நாட்கள். 
இருப்பிடம் : மதுரை- திண்டுக்கல் ரோட்டில் 32 கி.மீ.,
திறக்கும் நேரம் : காலை 8.00- இரவு 7.00. 
போன் : 99440 95626.

ஜெய வரத ஆஞ்சநேயர் - எல்லா செயல்களிலும் வெற்றி, சகல சவுபாக்கியங்களையும் பெறுதல்.
பக்த ஆஞ்சநேயர் - சனி தோஷத்தில் இருந்து விடுதலை.
பால ஆஞ்சநேயர் - புத்திர பாக்கியம்.
பவ்ய ஆஞ்சநேயர் - தொழில், வியாபாரம், பணியில் லாபம். 
யோக ஆஞ்சநேயர் - அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறுதல்.
தியான ஆஞ்சநேயர் - மன அமைதி. 
வீர ஆஞ்சநேயர் - தைரியம் பெறுதல், பிரச்னைகளைச் சந்தித்தல்.
பஜன ஆஞ்சநேயர் - கல்வி, கலைகளில் சிறந்து விளங்குதல்.
தீர ஆஞ்சநேயர் - மனோபலம் பெறுதல்.


jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Fri Feb 07, 2014 9:13 pm

குழந்தை காளி

பிப்ரவரி 05,2014,10:17  IST


பிதுர் தோஷம் போக்கும் சிவன் Large_104505720
உக்ர தெய்வமான காளி, மதுரை நேருநகரில் அருள்பாலிக்கிறாள். இவளை மக்கள் "குழந்தை காளி' என செல்லமாக அழைக்கின்றனர். தைவெள்ளியன்று இவளைத் தரிசிப்பது சிறப்பு.
தல வரலாறு: தாரகாசுரனால் துன்பம் அடைந்த தேவர்கள், சிவனிடம் தஞ்சம் புகுந்தனர். தன்னை ஒரு பெண்ணால் மட்டுமே வெல்ல முடியும் என அவன் வரம் பெற்றிருந்ததால், சிவன், பார்வதியிடம் அசுரனை அழிக்கும்படி உத்தரவிட்டார். பார்வதி, தன் ஒரு சக்தியை, சிவனின் விஷக்கறை மீது படியச் செய்தாள். அந்த சக்தி ஒரு பெண்ணாக மாறியது. விஷக்கறை படிந்ததால், கருப்பான அவள், "காளி' என பெயர் பெற்றாள். கோபக்கனலுடன், சிங்கத்தின் மீது அமர்ந்த அவள், தாரகாசுரனை எரித்துச் சாம்பலாக்கினாள். தீமையை அழித்து தர்மத்தை நிலைநாட்டினாள். 

குழந்தை காளி: மதுரை நேருநகர் பகுதி மக்கள், காளி வழிபாட்டிற்காக பல இடங்களுக்கு செல்ல வேண்டியிருந்தது. இதை உணர்ந்த பெரியவர்கள், ஒரு கோயில் கட்ட முடிவு செய்தனர். பராசக்தியை பிரதிஷ்டை செய்ய நினைத்து திருவுளச்சீட்டு எழுதி போட்டு பார்த்தனர். சீட்டை ஒரு குழந்தை எடுத்த போது,அதில் காளியம்மன் பெயரால் அமைக்க உத்தரவானது. அதன்படியே காளிக்கு கோயில் எழுந்தது. திருவுளச்சீட்டை குழந்தை எடுத்ததால் காளியை "குழந்தை காளி' என்கின்றனர். 

ஈசான அம்பிகை: காளியம்மன் கிழக்கு நோக்கி இருந்தாலும், முகம் மட்டும் ஈசான திசையான வடகிழக்கு நோக்கி இருப்பது சிறப்பு. கருவறையின் இருபுறமும் விநாயகர், முருகன் உள்ளனர். தட்சிணாமூர்த்தி, மீனாட்சி சுந்தரேஸ்வரர், துர்க்கை, உற்சவ மூர்த்தி, பிரதோஷ மூர்த்தி, காலபைரவர் சந்நிதிகளும் உள்ளன. பைரவர் எதிரில் ஆஞ்சநேயர் கைகளைக் கூப்பிய நிலையில் காட்சி தருகிறார். அம்மன் எதிரில் சிம்ம வாகனம், பலிபீடம் உள்ளது. நவக்கிரக சந்நிதியும் இங்குண்டு.

சாலக்கோபுரம் : இக்கோயிலில் இடப்புறம் விநாயகரும், வலப்புறம் முருகனும் தனித்தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர். நுழைவு வாயிலின் மேற்பகுதியில் ஐந்து கலசத்துடன் கூடிய சாலக்கோபுரம் உள்ளது. அதில் காளியம்மன் சிம்ம வாகனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். அதன் கீழ் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் சுதை வடிவில் உள்ளது. 

குழந்தை பாக்கியம்: குழந்தை காளியாக இருப்பதால், திருமணமாகி நீண்டநாள் குழந்தை இல்லாதவர்கள் இங்கு வந்து வழிபடுகிறார்கள். குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும் முன் அம்மனுக்கு பூஜை செய்கின்றனர். தங்கள் பிரார்த்தனை நிறைவேறியவுடன் அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்தும், பொங்கல் படைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 
திருவிழா : பங்குனி 3வது வெள்ளி காப்பு கட்டி, 4வது வெள்ளி திருவிழா நடக்கிறது. வருஷாபிஷேகம், கார்த்திகை சோமவாரம், நவராத்திரி, ஆடி 3வது வெள்ளி, விநாயகர் சதுர்த்தி, கந்த சஷ்டி, பிரதோஷம், பவுர்ணமி, சிவராத்திரி, பைரவாஷ்டமி, அனுமன் ஜெயந்தி, தை கடைசி வெள்ளி.

இருப்பிடம் : மதுரை காளவாசல்-பழங்காநத்தம் பைபாஸ் ரோட்டில் நேருநகர் நேதாஜி ரோட்டில் காந்தி தெரு. மதுரை மத்தியபஸ் ஸ்டாண்டில் இருந்து, எல்லீஸ் நகர் பாலம் வழியாக 2 கி.மீ., 
திறக்கும் நேரம் : காலை 6.30 - 9.30, மாலை 5.30- இரவு 9.00.
போன் : 93441 50952, 83443 94036.


jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Fri Feb 07, 2014 9:15 pm

சித்தர்கள் தவம் புரிந்த "தோரண மலை'

பிப்ரவரி 05,2014,10:20  IST


பிதுர் தோஷம் போக்கும் சிவன் Large_104600535
அகத்திய மாமுனிவர் மற்றும் தேரையர் சித்தர் தவம் புரிந்த புண்ணிய பூமியான தோரணமலை திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகில் இருக்கிறது. இந்த மலையில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.

தல சிறப்பு: சித்தரான தேரையர் தவம் புரிந்ததால், இம்மலையை "தேரையர் மலை' என்று கூறுகின்றனர். இச்சாலையில் வாகனங்களில் செல்லும் போது தோரணமலை உடன் வருவது போலவும், மலை உச்சியில் இருந்து வெளியேறும் பாறையில் வழிந்தோடும் சுண்ணாம்பு கலவை "தாடி'யுடன் தேரையர் சித்தர் தவம் இருப்பது போல் தோரணையாக தோற்றமளிப்பது வேறெங்கும் காணாத அற்புதம்.

குமரன் பெருமை: "குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்' என்பதற்கு ஏற்ப, தோரணமலை உச்சியில் முருகன் குடி கொண்டுள்ளார். தோரணமலை அடிவாரத்தில் இருந்து மலைக்கு 998 படிக்கட்டுக்களை கடந்து செல்ல வேண்டும். மலை ஏறும்போது தென்றலுடன் கலந்து வரும் மூலிகை காற்று மனதுக்கு இதமாகவும், அரோகரா கோஷம் மலை ஏற்றத்துக்கு பதமாகவும் இருப்பதை அனுபவ ரீதியாக உணர முடியும். அடிவாரத்தில் இருந்து 45 நிமிடங்களில் முருகன் கோயிலை அடையலாம்.

வற்றாத சுனைகள்: தோரணமலையில் 65 விதமான வற்றாத சுனை ஊற்றுகள் இருக்கின்றன. இதில் முக்கியமான சுனை ஊற்று முருகன் கோயில் அருகில் உள்ளது. ஊற்றில் தீர்த்தமாடிய பின் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆழமான சுனை ஊற்றில் கோடையிலும் தண்ணீர் வற்றுவதில்லை. மூலிகை குணம் நிறைந்த, இச்சுனை ஊற்று நீரை பருகி வர நோய்கள் குணமாகும் என்கிறார்கள். தோரணமலையில் சித்தர்கள் தவம் புரிந்த இடங்களில் பக்தர்கள் அமர்ந்து தியானம் செய்கின்றனர். சுவாமி தரிசனத்துடன் தியானமும் நடப்பது தோரமணமலையில் மட்டுமே. இங்குள்ள முருகனுக்கு அனைத்து நாளும் விழாக்கோலம் தான்.குன்றாத செல்வம், குறைவில்லாத கல்வி, வளமிக்க வாழ்வு தரும் தோரணமலை முருகனை வழிபடுவோம்.

இருப்பிடம்: தென்காசியில் இருந்து அம்பாசமுத்திரம் ரோட்டில் 20 கி.மீ., தூரத்தில் மாதாபுரம். இங்கிருந்து பிரியும் பாதையில் 5 கி.மீ., சென்றால் தோரணமலை. 
திறக்கும் நேரம்: காலை 11.30- 1.30
அடிவாரக்கோயில்: காலை 7.00 - மாலை 6.00
போன்: 99657 62002.


jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Fri Feb 07, 2014 9:20 pm

தனிக்காட்டு ராஜா

ஜனவரி 28,2014,14:01  IST


பிதுர் தோஷம் போக்கும் சிவன் Large_154848411
காட்டு வழியே வேட்டையாடி விட்டு வந்த முருகன், தங்கிய தலம் மேலக்கொடுமளூர். தனிக்காட்டு ராஜாவாக, முருகன் மட்டுமே கோயிலில் இருக்கிறார். விநாயகர் சந்நிதி கூட இங்கில்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயம். 

தல வரலாறு: திருச்செந்தூரில், பத்மாசுரனின் மகன் பானுகோபனைச் சம்ஹாரம் செய்தார் முருகன். அவர் அங்கிருந்து திரும்பி வரும்வழியில், இங்குள்ள பரளை ஆற்றின் கரையில் தங்கினார். ஒரு உடைமரக்குச்சியால் பல் துலக்கி விட்டு, மேற்கு நோக்கி அமர்ந்தார். 

அப்போது, அங்கு தவமிருந்த ரிஷிகளிடம், காலை பூஜைக்குத் தேவையான பொருட்களைக் கேட்டார். அவர்கள் பழங்கள், சிகப்பு கப்பி அரிசி, பாசிப்பருப்பு, வெல்லம் ஆகியவற்றைக் கொடுத்தனர். அவற்றை ஏற்றுக் கொண்ட முருகனை, அங்கேயே தங்கி அருள்பாலிக்க வேண்டும் என ரிஷிகள் வேண்டினர். அதன்படி அங்கேயே தங்கினார். மேற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால், செல்வம் பெருகும் என்பது ஐதீகம். மேற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்ட இந்த முருகனை வணங்கினால் பக்தர்களுக்கு செல்வம் பெருகும்.

பச்சை பதார்த்தம்: அன்னம் போன்ற வேகவைத்த பொருட்களை இங்கு சுவாமிக்கு படைப்பதில்லை. தினைமாவு, தேன், கப்பி அரிசி, பாசிப்பருப்பு, வெல்லம் ஆகியவையே படைக்கப்படுகின்றன. சுவாமி பல் துலக்கப் பயன்படுத்திய குச்சியை உடைய உடைமரமே தலவிருட்சமாக உள்ளது. 

கோயில் எழுந்தவிதம்: ரங்கசாமி என்பவரின் கனவில் தோன்றிய முருகன், ""நான் இங்கே தவம் செய்யும் ரிஷிகளுக்கு காட்சியளித்தவன். அவர்கள் கண் திறக்கும் போது, எங்கிருந்து பார்த்தாலும் எனது தரிசனம் கிடைத்தது. அதேபோல், இங்கு வரும் பக்தர்களும் எங்கிருந்து பார்த்தாலும் எனது தரிசனம் கிடைக்கும் வகையில்கோயில் கட்டு,'' என உத்தரவிட்டார். அவரும் தன் சொத்துகளை விற்று, 1927ல் கோயிலைக் கட்டினார்.
18முழம் காவி: சுவாமி சிலையின் கீழ்பாகம், பூமிக்குள் அதிக ஆழத்தில் இருப்பதால், மூலவருக்கு கீழே யந்திரம் பதிக்கவில்லை. சுவாமிக்கு18 முழம் காவி வேஷ்டி அணிவிக்கப்படுகிறது. பங்குனி உத்திரத்தின் போது முப்பழ பூஜையும், வேட்டை பூஜையும் நடத்தப்படுகிறது. முருகன் மட்டுமே தனிசந்நிதியில் வீற்றிருக்கிறார். விநாயகர் சந்நிதி கூட இங்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இரவில் அபிஷேகம்: இக்கோயிலில் கார்த்திகை சோமவாரம், வெள்ளிக்கிழமை, கார்த்திகை நாட்களில் இரவில் அபிஷேகம் நடத்துவர். தைப்பூசத்தன்று, முருகனின் வேல் மருதுபாண்டியர்களால் கட்டப்பட்ட குமுளீஸ்வரர் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு அபிஷேகம் நடத்துவர். 

கால்வலி தீர்த்தவர்: முதுகுளத்தூர் நல்ல வீரப்பபிள்ளை ஞான உலாவும், பாம்பன் சுவாமிகள் பதிகமும் பாடியுள்ளனர். பாம்பன் சுவாமிக்கு கால்முறிவு ஏற்பட்டபோது, காட்சியளித்தவர் இத்தல முருகனே. அதனால், கால்வலியால் அவதிப்படுபவர்கள் "உடங்கால்' என்னும் பொருளை வாங்கி உடைமரத்தில் கட்ட கால்வலி குணமாவதாக ஐதீகம். 
இருப்பிடம்: மதுரையிலிருந்து பார்த்திபனூர் 60 கி.மீ., இங்கிருந்து அபிராமம் செல்லும் வழியில் 14 கி.மீ.,
திறக்கும்நேரம்: காலை 7.00- 12.00, மாலை 4.00 - 7.00. 
போன்: 94439 19582, 98434 30230.


jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Fri Feb 07, 2014 9:27 pm

 அலைபாயக் கூடிய மனதை அடக்க முடியாது என பலர் எண்ணுகிறார்கள். அதற்கு சரியான ஒரு கடிவாளம் போட்டுவிட்டால் அலைபாய்ந்து கொண்டிருக்காது. 
* முயற்சி, பக்தி, தியானம் உள்ளவர்கள் மனதை வசப்படுத்திவிடுகிறார்கள். செயல்களில் ஒருமுகத்தன்மையோடு ஈடுபட்டு அதில் வெற்றியும் காண்பார்கள்.
* மனதில் ஏற்படும் ஆசைகளே நாம் அனுபவிக்கும் அத்தனை துன்பங்களுக்கும் மூலகாரணமாக இருக்கிறது. நாம் கண்ணால் ஒரு பொருளைப் பார்க்கும்போது, அதனை அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. மனம் தான் அனுபவிக்கத் துடிக்கிறது. அதற்காக எத்தகைய செயலைச் செய்யவும் தூண்டுகிறது. அதனால் தீமைகள் தான் வருமே தவிர நன்மைகள் எதுவும் உண்டாகாது.
* மனம் உங்களது சொல்கேட்டு நடந்தால் தான் உங்களது புத்தி சரியாக இருப்பதாக அர்த்தம். மனதை கட்டுப்படுத்த முடியாதவர்கள் சரியாக புத்தி அமையப் பெறாதவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். எனவே, மனதை அடக்கி வாழ கற்றுக் கொள்ளுங்கள்.
- காஞ்சிப்பெரியவர்

jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Fri Feb 07, 2014 9:41 pm

வளம் தரும் வடபழநி முருகன்

ஜனவரி 14,2014,11:58  IST


பிதுர் தோஷம் போக்கும் சிவன் Large_123906724
தமிழகத் தலைநகர் சென்னையின் மையப்பகுதியில் வீற்றிருக்கும் வடபழநியாண்டவர், தன்னை தரிசிப்பவர்களின் வாழ்வு வளம் பெற அருள்பாலிக்கிறார். தைப்பூச நன்னாளில் அவரை வணங்கி நல்வாழ்வு பெறுவோம். தல வரலாறு: வடபழநியாண்டவர் கோயில் தோன்ற மூல காரணமாக இருந்தவர் அண்ணாசாமி தம்பிரான். தன் நாக்கை அறுத்து திருத்தணி முருகனுக்கு காணிக்கை செலுத்தியவர். நாக்கை அறுத்து இறைவனுக்கு காணிக்கை செலுத்தும் வழக்கத்திற்கு "பாவாடம்' என்று பெயர். ஒரு சிறிய கீற்றுக் கொட்டகையில், பழநி ஆண்டவர் படத்தை வைத்து பூஜை செய்தார். அவ்வாறு வழிபட்ட இடமே வடபழநி கோயிலாக பிற்காலத்தில் மாறியது. அவர் வழிபட்ட பழநி முருகன் படம் இன்றும் சந்நிதியின் உட்பிரகாரத்தில் வடக்கு மண்டபத்தில் இருக்கிறது.

ரத்தினசாமி தம்பிரான்: இவரும் முருகனுக்காக பாவாடம் செய்தவர். இவர் அண்ணாச்சாமி தம்பிரானின் தொண்டர். இவர் காலத்தில் தான் இங்கு முருகன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இப்போதுள்ள கருவறைப் பகுதி உள்ள இடத்தில் ஒரு கட்டிடம் கட்டப்பட்டது. அண்ணாசாமி தம்பிரான், வாழ்ந்த காலத்தில் பக்தர்களுக்கு குறிசொல்லி வந்தார். அவர் அமர்ந்திருந்த மேடையை வடபழநி ஆண்டவர் கோயில் என அழைக்கச் செய்தவரும் இவரே.

பாக்கியலிங்க தம்பிரான்: இப்போதுள்ள வடபழநி கோயிலின் கர்ப்ப கிருகத்தை அமைத்தும், முதல் உட்பிரகாரத் திருச்சுற்று கருங்கல் திருப்பணியையும் செய்தவர் பாக்கியலிங்க தம்பிரான். இவரும் வடபழநி கோயிலுக்கு பாவாடம் தரித்தவர். இவர் காலத்தில்தான் இக்கோயில் புகழ் பெறத் தொடங்கியது. மூவரின் சமாதியும் வடபழநி ஆண்டவர் கோயிலுக்கு சிறிது தூரத்தில் உள்ளன. (மூவருக்கும் கோயிலுக்குள் சந்நிதியும் உள்ளது. இவர்களுக்கு நெற்குன்றம் செல்லும் பாதையில் தனித்தனி கோயிலும் உள்ளது). வடபழநி கோயிலின் தென்கிழக்குப் பகுதியில் பழைய குறிமேடை இருந்த இடம் இருக்கிறது. 

செவ்வாய் சந்நிதி: இங்கு மூலவர் வடபழநி யாண்டவர் என்று அழைக்கப்படுகிறார். இவர் தாமரைப் பீடத்தின் மீது இருப்பதும், தனது வலது பாதத்தை முன் வைத்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது. முருகன் பாத ரட்சையுடன்(காலணி) காட்சி தருவது தனிச்சிறப்பு. தங்கத்தேர் அமைந்த கோயில்களில் இதுவும் ஒன்று. முருகனின் துணைவியரான வள்ளி, தெய்வானை தனி சந்நிதியில் வீற்றிருக்கின்றனர். தல விருட்சம் அத்தி. பூஜைகள் சிவாகம முறைப்படி நடத்தப்படுகிறது. நவக்கிரகங்களில் ஒருவரான செவ்வாய் தனி சந்நிதியில் இருக்கிறார். இவரை செவ்வாயன்று வழிபட,தோஷம் நீங்கி விரைவில் திருமணம் கைகூடும். 

சாதுக்கள் பிரதிஷ்டை செய்த தலம் என்பதால், சக்தி மிக்கதாக விளங்குகிறது. இங்குள்ள ராஜகோபுரம் 72 அடி உயரம் கொண்டது. பழநி செல்ல இயலாதவர்கள் இங்கு வழிபட்டு பலனடைகின்றனர். 
திறக்கும் நேரம்: காலை 6.00 - பகல் 12.00 மாலை 4.00- இரவு 9.00.
போன்: 044 2483 6903

பிதுர் தோஷம் போக்கும் சிவன் Blank


Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக