புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'மனோகரா' தொடர் 10 பாகம் 2 (சிவாஜி என்ற மாநடிகர்)  Poll_c10'மனோகரா' தொடர் 10 பாகம் 2 (சிவாஜி என்ற மாநடிகர்)  Poll_m10'மனோகரா' தொடர் 10 பாகம் 2 (சிவாஜி என்ற மாநடிகர்)  Poll_c10 
69 Posts - 58%
heezulia
'மனோகரா' தொடர் 10 பாகம் 2 (சிவாஜி என்ற மாநடிகர்)  Poll_c10'மனோகரா' தொடர் 10 பாகம் 2 (சிவாஜி என்ற மாநடிகர்)  Poll_m10'மனோகரா' தொடர் 10 பாகம் 2 (சிவாஜி என்ற மாநடிகர்)  Poll_c10 
41 Posts - 34%
T.N.Balasubramanian
'மனோகரா' தொடர் 10 பாகம் 2 (சிவாஜி என்ற மாநடிகர்)  Poll_c10'மனோகரா' தொடர் 10 பாகம் 2 (சிவாஜி என்ற மாநடிகர்)  Poll_m10'மனோகரா' தொடர் 10 பாகம் 2 (சிவாஜி என்ற மாநடிகர்)  Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
'மனோகரா' தொடர் 10 பாகம் 2 (சிவாஜி என்ற மாநடிகர்)  Poll_c10'மனோகரா' தொடர் 10 பாகம் 2 (சிவாஜி என்ற மாநடிகர்)  Poll_m10'மனோகரா' தொடர் 10 பாகம் 2 (சிவாஜி என்ற மாநடிகர்)  Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'மனோகரா' தொடர் 10 பாகம் 2 (சிவாஜி என்ற மாநடிகர்)  Poll_c10'மனோகரா' தொடர் 10 பாகம் 2 (சிவாஜி என்ற மாநடிகர்)  Poll_m10'மனோகரா' தொடர் 10 பாகம் 2 (சிவாஜி என்ற மாநடிகர்)  Poll_c10 
111 Posts - 59%
heezulia
'மனோகரா' தொடர் 10 பாகம் 2 (சிவாஜி என்ற மாநடிகர்)  Poll_c10'மனோகரா' தொடர் 10 பாகம் 2 (சிவாஜி என்ற மாநடிகர்)  Poll_m10'மனோகரா' தொடர் 10 பாகம் 2 (சிவாஜி என்ற மாநடிகர்)  Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
'மனோகரா' தொடர் 10 பாகம் 2 (சிவாஜி என்ற மாநடிகர்)  Poll_c10'மனோகரா' தொடர் 10 பாகம் 2 (சிவாஜி என்ற மாநடிகர்)  Poll_m10'மனோகரா' தொடர் 10 பாகம் 2 (சிவாஜி என்ற மாநடிகர்)  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
'மனோகரா' தொடர் 10 பாகம் 2 (சிவாஜி என்ற மாநடிகர்)  Poll_c10'மனோகரா' தொடர் 10 பாகம் 2 (சிவாஜி என்ற மாநடிகர்)  Poll_m10'மனோகரா' தொடர் 10 பாகம் 2 (சிவாஜி என்ற மாநடிகர்)  Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'மனோகரா' தொடர் 10 பாகம் 2 (சிவாஜி என்ற மாநடிகர்)


   
   
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Thu Feb 06, 2014 10:21 am

'மனோகரா' தொடர் 10 (சிவாஜி என்ற மாநடிகர்)

'மனோகரா' தொடர் 10 பாகம் 2 (சிவாஜி என்ற மாநடிகர்)  12098193

தொடர் 10

'மனோகரா' படத்தின் கதை பாகம் இரண்டை நீங்கள் அனைவரும் படிப்பதற்கு முன் நான் முன்னம் பதிந்த இப்படத்தின் கதையின் முதல் பாகத்தை மீண்டும் ஒரு முறை அனைவரும் தொடர்ச்சியாகப் படிப்பதற்கு வசதியாக இங்கு பதிவிடுகிறேன். இப்போது நீங்கள் 'மனோகரா' படத்தின் கதையின் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் மொத்தம் இரண்டு பாகங்களையும் படித்து மகிழலாம். 'மனோகரா' படத்தின் கதை இந்த இரண்டு பாகங்களுடன்  முடிவுற்றது.

பாகம் 1

சோழ பரம்பரையின் வீர மன்னன் புருஷோத்தமன். அவன் தர்மபத்தினி பட்டத்தரசி மகாராணி பத்மாவதி. குணவதி. இவர்களுக்கு மனோகரன் என்ற அழகான இளவரசன். குழந்தைப் பருவத்தினன். பத்மாவதியின் தந்தை அதிவீரசேனரை பாண்டிய மன்னன் முத்துவிசயன் போரில் கொன்று விடுகிறான். சோழ குலத்தாரின் இரத்தின சிம்மாசனத்தையும் கைப்பற்றி எடுத்துச் செல்கிறான். இறப்பதற்கு முன் பத்மாவதியின் தந்தை தன்னிடமிருந்த போர் வாளை தன் சேவகன் ஷைத்ரிகன் கேசரிவர்மனிடம் கொடுத்து அதைத் தன் மகள் பத்மாவதியிடம் பத்திரமாக சேர்க்கச் சொல்கிறான். தன்னைக் கொன்ற பாண்டியன் முத்துவிசயனை தன் பேரன் அதாவது பத்மாவதியின் மகன் மனோகரன்தான் கொன்று பழிதீர்த்து அவனே இழந்த இரத்தின சிம்மாசனத்தையும் மீட்டு வரவேண்டும் என்பது அவன் மரணமெய்துமுன் மனதில் கொண்ட ஆசை. கேசரிவர்மன் தன் மனைவி வசந்தசேனையுடன் பத்மாவதியிடம் சென்று நடந்ததை இயம்புகிறான். மன்னன் புருஷோத்தமன் கேசரிவர்மனை தலைமை ஷைத்திரியனாக தன்னுடனேயே வைத்துக் கொள்கிறான். வசந்தசேனையை பத்மாவதி தேவியார் தன்னுடைய பணிப்பெண்ணாக நியமித்துக் கொள்கிறாள்.

வசந்தசேனை பெண்குலத்தின் இழிபிறவி. காமபோதை கண்ணில் புரள காண்போரைக் கள் குடித்தவர் போல மதிமயங்கச் செய்யும் ஜாலக்காரி. பேராசையின் சொரூபி. நல்லது இன்னதென்றே அறியாதவள். தன் நாட்டியத்தாலும், ஒய்யார நடையினாலும், வேல்வீச்சு விழி வெட்டினாலும், மயக்கும் மோகனப் பேச்சினாலும் மன்னன் புருஷோத்தமனை மயக்குகிறாள். மன்னன் அவளுக்கு அடிமையாகிறான். பட்டத்து மகிஷியை பரிதவிக்கவிட்டு பகட்டு மேனியாளின் மேனியழகில் கிறங்கிக் கிடக்கிறான். அவள் மடியிலேயே உறங்கிக் கிடக்கிறான்.

பத்மாவதி தன் வாழ்க்கை பட்டுப் போனதை எண்ணி மன்னனிடம் வாதிடுகிறாள். மன்னன் அவள் பேச்சைக் கேட்டானில்லை. மனமுடைந்த மகாராணி இனி மன்னனை சந்திப்பதில்லை என்று அவனிடமே சூளுரைக்கிறாள். மன்னனே மதி தெளிந்து வந்தாலொழிய இனி அவனுடன் சகவாசமில்லை என்று சத்தியம் செய்கிறாள். குழந்தை மனோகரனுடன் வனவாசம் போல அரண்மனையின் ஒரு பகுதியில் அழுகின்ற கண்ணீருடனே வாழ்கிறாள்.

வசந்தசேனைக்கு இப்போது இடையூறு அவள் கணவன் கேசரிவர்மன். 'கொலையும் செய்வாள் பத்தினி' என்பது தூக்குத் தூக்கியில் வரும் முதுமொழி அல்லவா! உண்மையாக்கினாள் அவளும். மன்னனின் அருகில் பட்டத்து ராணியாய் அமர முடிவெடுத்த நயவஞ்சகி தன் கணவனை விஷம் வைத்துக் கொல்லத் துணிந்தாள். ஆனால் நடந்தது வேறு. கணவன் கேசரிவர்மன் உயிர்பிழைத்தான் வசந்த சேனை அறியாமலேயே. ஒரு துறவி அவனைக் காப்பாற்றி அவனுடனேயே வைத்துக் காத்தார். அவன் கதையைக் கேட்டு பரிதாபமடைந்தார். கேசரிவர்மன் தன் தர்மபத்தினியே தன்னைக் கொலை செய்ய முயன்றாளே என்று ஆற்றொணாத் துயருற்று வெறிகொண்ட வேங்கை ஆனான்.

ஒண்ட வந்த பிடாரி வசந்தசேனை இப்போது பட்டத்து மகிஷியாகவே தன்னை நினைத்துக் கொண்டாள். மன்னனுக்கு அவள் சொல்லே வேதம். சொர்க்கமே அவள் பாதம். வசந்த சேனைக்கு ஒரு புத்தி சுவாதீனமில்லாத மகன். அவன் பெயர் வசந்தன். ஆனால் நல்லவன். தன் அண்ணன் மனோகரன் மீது அவனுக்கு கொள்ளைப் பிரியம். தன்னை பட்ட மகிஷியாகவும், தன் மகன் வசந்தனை இளவரசனாகவும் ஆக்கவே கனவு காணுகிறாள் சேனா. ஆதற்கு இடையூறாக இருக்கும் மகாராணி பத்மாவதியையும், இளவரசன் மனோகரனையும் ஒழித்துக் கட்ட சமயம் பார்த்துக் காத்திருக்கிறாள் அவள்.

பதிமூன்று வருடங்கள்  துறவியின் குகைக்குள்ளேயே பரிதவித்துக் கிடந்தான் கேசரிவர்மன். அவனுக்கு ஆதரவு தந்த துறவி ஓர் அரிய ஆராய்ச்சியை பல வருடங்கள் செய்து முடித்தார். மூலிகைகளைக் கொண்டு கேசரிவர்மனை அரூபமாக்கினார். ஆம்... கேசரிவர்மன் துறவியின் மாய பாதரட்சைகளை அணிந்தவுடன்  சில நிமிடங்கள் மற்றவர் கண்களுக்கு தெரிய மாட்டான். இது போதாதா அந்த மாயக்காரியைப் பழி வாங்க?... துறவியின் ஆசியுடன் வசந்தசேனையைப் பழிதீர்க்க சூளுரைத்துக் கிளம்பினான் கேசரிவர்மன்.

புருஷோத்தமன் பெற்ற புண்ணிய புதல்வன், பத்மாவதி ஈன்றெடுத்த பச்சிளம் பாலகன் மனோகரன் இப்போது மனோகரமாய், சுந்தர வாலிபனாய், வீர புருஷனாய் வளர்ந்து நிற்கிறான். புருஷோத்தமன் வசந்தசேனையுடன் தன் வசமிழந்து வாழ்ந்து வருகிறான்.

எண்ணிலடங்கா துயரங்களுடன் தன் கண்மணி மனோகரனுடன் தனியே வாழ்ந்து வருகிறாள் பத்மாவதி. மந்திரி சத்யசீலரும், மனோகரனின் உயிர் நண்பன் ராஜப்ரியனுமே மனோகரனுக்கும், பத்மாவதிக்கும் துணை. தன் தாயின் வாழ்வை சீர்குலைத்த குடிகேடி வசந்தசேனையின் பெயர் கேட்டாலே பொங்கும் எரிமலையாகி வெடிப்பான் மனோகரன். அப்போதெல்லாம் தன் கனிவான அன்பான பொறுமையான பேச்சால் அவனை சாந்தப்ப்படுத்துவாள் பத்மாவதி. அம்மாவின் பேச்சுக்குக் கட்டுப்பட வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகி விடுவான் ஆணழகன் மனோகரன். அவன் நெருப்பாய்ப் பொங்கும் போதெல்லாம் நீராய் அவனைக் குளிர்விக்க முயற்சி செய்வாள் பத்மாவதி. அது மட்டுமல்ல. தன் பேச்சை மீறி கோபத்தில் மனோகரன் வசந்தசேனையை ஒன்றும் செய்து விடக் கூடாது, மகாராஜாவின் பங்கத்திற்கும் கேடு செய்து விடக் கூடாது என்று அவனிடம்  கட்டளையும் பிறப்பித்திருந்தாள் மகாராணி.

பழிதீர்க்க வரும் கேசரிவர்மன் ஒரு நாடகத்தை ஏற்பாடு செய்கிறான். 'போர்வாள்' என்ற நாடகத்தை அரண்மனையில் உள்ள அனைவரையும் காண வைக்கிறான். அது நாடகமல்ல. உண்மை சம்பவம்தான். வசந்தசேனையின் சுயரூபங்களை அந்த நாடகத்தின் மூலம் அம்பலப்படுத்துகிறான் கேசரிவர்மன். நாடகத்தில் புருஷோத்தமன், பத்மாவதி, கேசரிவர்மன், வசந்தசேனை அனைத்துப் பாத்திரங்களும் உண்டு. ஆனால் கதாபாத்திரங்களின் பெயர் மாற்றத்தோடு. வசந்த சேனை தன் கணவனுக்கு விஷம் வைத்துக் கொள்ள முயல்வதையும் நாடகக் காட்சி விட்டு வைக்கவில்லை. நாடகத்தைக் காணும் வசந்தசேனை பதறுகிறாள். தன்னுடைய நடத்தையை அம்பலமாக்கும் நாடகத்தை பாதியிலேயே நிறுத்தச் சொல்லி ஆணையிடுகிறாள். தன் வாழ்க்கையை அப்படியே நாடகம் பிரதிபலிப்பதை கண்டு மகாராணி பத்மாவதி கண்ணீர் வடிக்கிறாள். மன்னன் புருஷோத்தமனும் சில கணம் குற்ற உணர்வுக்கு ஆளாகிறான்.

நாடகக்கார்களை பிடிக்கச் சொல்லி உத்தரவிடுகிறாள் வசந்தசேனை. ஆனால் கேசரிவர்மன் நாடகக் குழுவினரோடு தப்பித்து விடுகிறான். சத்யசீலரும், ராஜப்பிரியனும் கூட நாடகத்தைக் கண்டு திகைக்கின்றனர். கோபமுற்றுக் கொந்தளிக்கும் மனோகரனிடம் அவன் கோபத்தை திசை திருப்ப அவன் பாட்டனார் செய்த சபதத்தைக் கூறி பாண்டியன் முத்துவிசயன் மீது போர் தொடுத்து இரத்தின சிம்மாசனத்தைக் கைப்பற்றி வரும்படி பத்மாவதி பணிக்கிறாள். தாயின் ஆணையை சந்தோஷத்துடன் ஏற்று போருக்கு புறப்பட சித்தமாகிறான் மனோகரன். தாயின் ஆணைப்படி தந்தையிடம் சென்று ஆசி வாங்குகிறான். ஆசி கொடுப்பது போல நடிக்கும் வசந்தசேனை நயவஞ்சகியை அலட்சியப்படுத்தி திரும்புகிறான் மனோகரன்.போருக்கு செல்லும் மனோகரனை கொல்ல பௌதாயணன் ஒரு கயவனை எற்பாடு செய்து அனுப்புகிறாள் வசந்தசேனை. மனோகரனைக் கொன்று அவனிடமிருக்கும் போர்வாளை தன்னிடம் கொண்டு வந்து காட்டும்படியும் ஆணையிடுகிறாள்.  

போருக்கு சென்று முத்துவிசயனைக் கொன்று இரத்தின சிம்மாசனத்தையும் கைப்பற்றுகிறான் மனோகரன். முத்துவிசயனின் முத்தான மகள் விஜயாள். இள நங்கை. மலர் மங்கை. தந்தையைக் கொன்ற மனோகரனைப் பழி வாங்க ஆண்வேடம் தரித்து மனோகரனின் கூடாரம் செல்கிறாள். கத்தியை எடுத்து உறங்கிக் கொண்டிருக்கும் மனோகரனை கொல்ல முயலும்போது மனோகரனின் தேஜஸில், அவன் சுந்தர வதனம் கண்டு அவன் பேரழகில் ஒரு கணம் சொக்கி நிற்கிறாள். அப்போது வசந்தசேனையால் மனோகரனை கொல்ல அனுப்பி வைக்கப்பட்ட பௌதாயணன் அங்கு மனோகரனை கொல்ல எத்தனிக்க அதைக் கண்டு பதறி ஓலமிடுகிறாள் விஜயாள். வந்த ஆள் தப்பி ஓட கொலை செய்ய வந்தவளாக மனோகரனிடம் பிடிபடுகிறாள் விஜயாள். பெண் என்று தெரிந்து கொண்ட மனோகரன் அவள் அழகில் மயங்குகிறான். குற்றவாளி என்று நீதி மன்றத்தில் நிறுத்தப்படும் விஜயாளுக்கு இன்ப தண்டனை. அது?.... மனோகரனின் மனைவி என்ற சுக தண்டனை.

'மனோகரா' தொடர் 10 பாகம் 2 (சிவாஜி என்ற மாநடிகர்)  526x297-SAp

தம்பதியர் இன்பமாக படகு சவாரி செய்யும் வேளையில் மனோகரனை மறைந்திருந்து கட்டாரி வீசிக் கொலை செய்ய துணிகிறான் பௌதாயணன். ஆனால் சமயத்தில் விஜயாள் அதனைக் கவனித்து மனோகரனைக் காப்பாற்றி விடுகிறாள். மனோகரன் இறந்து விட்டதாக நினைத்துவிடும் பௌதாயணன் மனோகரனின் வாளைத் திருடிக் கொண்டு வந்து அதை வசந்தசேனையிடம் காட்டுகிறான். அதுவல்லாமல் மனோகரனைத் தான் கொன்று விட்டதாகவும் அவளிடம் கூறுகிறான். அதை நம்பிய வசந்தசேனை இந்த விஷயத்தை பத்மாவதியிடம் சொன்னால் மகன் இறந்த சோகத்தில் நெஞ்சு வெடித்து இறந்து விடுவாள் என்று ஒரு திட்டம் தீட்டி பௌதாயணனை ஒரு துறவி வேடத்தில் பத்மாவதியிடம் அனுப்புகிறாள். ஆனால் பௌதாயணன் தன் கையாலாகாத்தனத்தால் அங்கு மனோகரனிடம் பிடிபடுகிறான். அனைத்துக்கும் காரணம் வசந்தசேனை என்றும் கூறிவிடுகிறான். மனோகரன் அவனை அடுத்தநாள் நீதி விசாரணை நடைபெறும் என்று சிறையில் அடைக்கிறான். ஆனால் வசந்தசேனை அதற்குள் முந்திக் கொள்(ல்)கிறாள். தான் எங்கே பௌதாயணனால் காட்டிக் கொடுக்கப்பட்டு விடுவோமோ என்று பயந்து முன்தினம் இரவே சிறையில் அவனை பாம்பை விட்டு கொன்று விடுகிறாள்.

போரில் இரத்தின சிம்மாசனத்தை வென்று வரும் மனோகரனுக்கு அவையில் பாராட்டு விழா நடைபெறுகிறது. ஆனால் மன்னனை மயக்கி அந்த இரத்தின சிம்மாசனத்தில் மன்னனுக்கு இணையாக பட்ட மகிஷி போல் சரியாசனமிட்டு அமர்ந்து அவையோர் அனைவரையும் திகைக்க வைத்து, முகஞ்சுளிக்க வைக்கிறாள் வசந்தசேனை. அது மாத்திரமல்லாமல் மனோகரனுக்கு வெற்றி மாலை சூட்டவும் துணிகிறாள். அதைக் கண்ட மனோகரன் துடிதுடித்துப் போகிறான். தன் பாட்டானாரின் சிம்மாசனத்தில், அதுவும் தன் தாய் அமர வேண்டிய சிம்மாசனத்தில் வேசி ஒருத்தி அமர்ந்திருப்பதைக் கண்டு கடும் கோபம் கொள்கிறான். தன் தாயின் கட்டளை மந்திரி சத்யசீலரால் அவனுக்கு நினைவுபடுத்தப்பட, கோபத்தை அடக்கி தாயிடம் திரும்பி வந்து கொந்தளிக்கிறான் மனோகரன். 'ஒரு வேசி அமர்வதற்கா இவ்வளவு தூரம் படையெடுத்து சிம்மாசனத்தைக் கைப்பற்றி வந்தேன்?' என்று ஆத்திரமுறுகிறான். படையெடுப்பால்தானே பைங்கிளி விஜயாள் கிடைத்தாள் என்று அவனை சாந்தப்படுத்துகிறாள் அன்னை.

பாகம் 2

'மனோகரா' தொடர் 10 பாகம் 2 (சிவாஜி என்ற மாநடிகர்)  Manohara1

கோபமும் வருத்தமும் அடைந்திருக்கும் மனோகரனை சாந்தப்படுத்த வசந்த விழாவிற்கு அவனை விஜயாளுடன் அனுப்பி வைக்கிறாள் பத்மாவதி. அங்கும் மனோகரன் கோபம் தணியாமல் வசந்த சேனையைக் கொன்று இரத்தின சிம்மாசனத்தில் தன் தாயை அமர வைக்கப் போவதாக சூளுரைக்கிறான். அங்கு வரும் வசந்தசேனை மகன் வசந்தனின் செய்கைகளைக் கண்டு சிரிக்கிறார்கள் மனோகரனும் விஜயாளும். தற்செயலாக அங்கு மன்னனுடன் வரும் வசந்தசேனை தன் மகன் வசந்தனைக் கண்டு மனோகரன் சிரிப்பதைப் பார்த்து அவனைக் கேலி செய்வதாக எண்ணி கடும் கோபமடைகிறாள். பகைவன் மகளை மனோகரன் மணந்து வந்ததையும், தந்தையைக் கொன்றவனை விஜயாள் மணந்ததையும் கண்டு ஊர் சிரிப்பதாகவும் கூறி கேலி பேசுகிறாள் வசந்தசேனை. அதைவிட எல்லை மீறியவளாய் பத்மாவதியை வேசி என்று மனோகரன் முன்னமேயே கடும் சொல் கூறுகிறாள். தாயைப் பழித்த பேயைக் கண்டு எரிமலையாய் வெடிக்கிறான் மனோகரன். அவளைக் குத்துவாளால் குத்திக் கொல்லப் பாய்கிறான். அந்த நேரத்தில் அங்கு வந்த மந்திரி சத்யசீலர் மனோகரன் தன் தாய்க்கு செய்து கொடுத்த சத்தியத்தை சுட்டிக் காட்டி மனோகரனைத் தடுத்து விடுகிறார். சேனாவை ஒன்றும் செய்யக் கூடாது என்று தாய் தன்னிடம் பெற்ற சத்தியத்தை எண்ணித் துடிக்கிறான் மனோகரன். ஒன்றும் செய்ய இயலாதவனாய் தன் தாயிடம் சென்று குமுறிக் கொந்தளிக்கிறான். என்ன நடந்தது என்று தெரியாமல் பத்மாவதி குழம்ப, அங்கு வரும் விஜயாள் அவளிடம் நடந்ததைக் கூறுகிறாள். அதைக் கேட்டு பத்மாவதி துடிதுடித்துப் போகிறாள். 'மன்னரும் சேனாவின் அவதூறுப் பேச்சைக் கேட்டு சும்மாவா இருந்தார்?' என்று கேட்கிறாள். சத்யசீலரும் 'ஏன் வாளாவிருந்தார்'? என்று குழம்பி சத்யசீலரை அழைத்து வரும்படி ஆளை அனுப்புகிறாள் பத்மாவதி.

'மனோகரா' தொடர் 10 பாகம் 2 (சிவாஜி என்ற மாநடிகர்)  Hqdefault

மன்னன் பத்மாவதியை சேனா வேசி என்று கூறியதால் கோபமடைகிறான். இதை எதிர்பாராத சேனா தற்கொலை நாடகமாடுகிறாள். மன்னன் பதறி அவளைக் காப்பாற்ற ஓடி வருகிறான். அதுமட்டுமல்லாமல் பத்மாவதியை சத்யசீலர் இரவில் சந்திக்க வேண்டிய விஷயம் என்ன என்று மன்னனின் மனதில் விஷத்தை விதைக்கிறாள். பத்மாவதி மனோகரன் பட்ட அவமானத்தை சத்யசீலரிடம் விசாரிக்க போவதை முன்னமேயே அறிந்து அதை தனக்கு சாதகமாக்கிக் கொண்டாள் சேனா. மதி கெட்ட மன்னனும் அவள் பேச்சை நம்பி பத்மாவதி அறைக்கு சேனாவுடன் செல்கிறான். அங்கு சத்யசீலருக்கும், பத்மாவதிக்கும் நடக்கும் பொதுவான சம்பாஷணைகள் மன்னனின் சந்தேகத்தை வலுப்படுத்துவதாக வேறு அமைந்து விடுகின்றன. பத்மாவதிக்கும், சத்யசீலருக்கும் கள்ளத் தொடர்பு இருப்பதாகவே நம்பி விடுகிறான் மன்னவன். பத்மாவதியைக் கொல்ல வாளெடுக்கும் மன்னனைத் தடுத்து சேனா அழைத்து வந்து விடுகிறாள். அது வேறில்லாமல் "மனோகரனின் தாய் வேசி என்பது உண்மைதானே! அது நிரூபணமும் ஆயிற்றே! வசந்த விழா அன்று அவன் தாயை பழித்ததற்காக மனோகரன் தன்னைக் கொல்ல வந்தானே! அதனால் இப்போது மனோகரன் அரசவையில் தன்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்" என்று மன்னனிடம் மனசாட்சியில்லாமல் கூறுகிறாள் சேனா. அந்த மன்னன் மடையனும் அரசவையில் கொலு மண்டபத்தில் மனோகரனை விசாரிக்க ஆணையிடுகிறான்.

'மனோகரா' தொடர் 10 பாகம் 2 (சிவாஜி என்ற மாநடிகர்)  Hqdefault

அனைவரும் இதைக் கேட்டு அதிர்ச்சியடைகின்றனர். மனோகரனை சங்கிலியால் பிணைத்து கொலு மண்டபத்திற்கு அழைத்து வரும்படி ஆணையிடுகிறான் மன்னன். மனோகரன் அவ்வாறே அழைத்து வரப்படுகிறான். அடலேறு போல நெஞ்சு நிமிர்த்தி வீரமாகக் கர்ஜிக்கிறான் மனோகரன். வசந்தசேனையின் அம்பலங்களை அவையோர் முன்னே அம்பலப் படுத்துகிறான். தந்தைக்கும் தனயனுக்கும் இடையே தகராறு. செய்தி கேட்டு பதைபதைத்து ஓடி வருகிறாள் தாய். யாரை பார்க்க மாட்டேன் என்று சபதம் செய்தாளோ அந்த மன்னனையே தன் மணாளனையே பார்க்க வேண்டிய சூழ்நிலை. மகனால் மன்னனுக்கும், மன்னனால் மகனுக்கும் எதுவும் நேர்ந்து விடக் கூடாதென்று தன் சத்தியத்தை உதறி ஓடி வருகிறாள் அந்த அன்புத் தாய். சங்கிலிகளை அறுத்து வஞ்சகியை கொல்லப் பாய்கிறான் மனோகரன். வந்த தாய் தடுக்கிறாள். தாயின் சொல் கேட்க ஆணையிடுகிறாள். இப்போதும் தாயின் கட்டளைக்கு மனோகரன் அடி பணிய நேரும் சூழ்நிலை. அடி பணிகிறான். 'மன்னிப்பும் கேட்கட்டுமா'? என்கிறான் பரிதாபமாக. மகனின் மானம் பறி போகாதிருக்க 'தேவையில்லை' என்கிறாள் பத்மாவதி. காமுகியின் வஞ்ச வலையில் வீழ்ந்த மன்னன் மகனென்றும் பாராமல் மரண தண்டனை விதிக்கிறான்.  'இப்போதும் கெட்டு விடவில்லை... ஆணையிடுங்கள்' என்று மீண்டும் தாயிடம் கர்ஜிக்கிறான் மனோகரன். ஆனால் தந்தையின் மரண தண்டனையை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று மனதை இரும்பாக்கி மகனிடம் உரைக்கிறாள் பத்மாவதி. அதிர்ச்சியில் மனோகரன் மயக்கமாகிறான். அவையில் உள்ளோர் அனைவரும் அநியாயமான தீர்ப்பு என்று ஒட்டு மொத்தமாகக் குரல் கொடுக்கின்றனர். ஆனால் பத்மாவதி அவர்களைத் தடுத்து மனோகரன் அரசரின் ஆணைக்குக் கட்டுப்பட வேண்டும் என்று கூறுகிறாள். மயங்கிக் கிடக்கும் மைந்தனை இறுதியாக கண்ணீர் மல்க ஒரு கணம் நோக்குகிறாள்.

செய்தியைக் கேள்விப்பட்ட விஜயாள் தன் மணாளனைக் காக்க மன்னனிடம் ஓடுகிறாள். தனக்கு மாங்கல்ய பிச்சை வழங்குமாறு கோருகிறாள். கிராதகி சேனா அங்கேயும் வந்து அவதூறு பேசுகிறாள். கோபமடைந்த விஜயாள் கட்டாரியை எடுத்து சேனா மீது வீசுகிறாள். இது போதாதா மன்னனுக்கு? மனைவி, மகன் மீதே கருணை காட்டாத மகாபாவி மருமகள் மீதா கருணை காட்டப் போகிறான்? கர்ப்பிணியான மருமகளுக்கு பாதாளச் சிறைத் தண்டனை விதிக்கிறான் அந்த வீணன். அது மட்டுமல்ல. தன் மனைவி மாதர் குல மாணிக்கம் பத்மாவதியையும் விஜயாளுடன் சேர்த்து சிறையில் அடைக்கிறான் அந்தக் கயவன்.

கொலைக்களத்திற்கு சத்யசீலருடன் அழைத்துச் செல்லப்படுகிறான் மனோகரன். கேசரிவர்மன் அரூபமாய் அங்கு குதிரையில் வந்து மனோகரனைக் காப்பாற்றி சத்யசீலரையும் கூட அழைத்துச் செல்கிறான். கண் விழித்த மனோகரன் தாயின் ஆணைப்படி தான் இன்னும் மரணம் எய்தாதது கண்டு துன்புற்று மந்திரியிடமும், ராஜப்ரியனிடமும் தன்னைக் கொல்லும்படி கூறுகிறான். 'தாயின் ஆணையை நிறைவேற்றுவது பிறகு.... முதலில் சிறையில் அடைபட்டுக் கிடக்கும் பத்மாவதி, விஜயாள் இருவரையும் காப்பாற்ற வேண்டும்' என்று ராஜப்ரியன் கூறியதைக் கேட்டு திடுக்கிடுகிறான் மனோகரன்.

இதற்குள் சதிகாரி சேனா மன்னனிடம் சாதுர்யமாகப் பேசி தன் மகன் வசந்தனை இளவரசன் ஆக்க வேண்டுமென்று கூறுகிறாள். அதற்கு மன்னன் மறுத்து விடுகிறான். இதனால் மன்னன் மேல் ஆத்திரமுறும் சேனா மன்னனனையும், மனோகரனையும் ஒழித்துக் கட்ட முடிவெடுக்கிறாள். அதற்கு தன் முன்னாள் காதலன் இதயபுரி வேந்தன் உக்கிரசேனனின் உதவியை நாடி அவனை வரவழைக்க லிகிதம் எழுதி அனுப்புகிறாள். இதை அரூப வேடத்தில் வந்து தெரிந்து கொள்கிறான் கேசரிவர்மன். உக்கிரசேனன் அட்சயன் என்னும் ஒற்றன் மூலம் சோழ நாட்டுக்கு தன் படையுடன் வருவதாக ஓலை ஒன்றை வசந்தசேனைக்கு கொடுத்தனுபபுகிறான். அட்சயனை வழியிலேயே மடக்குகிறார்கள் மனோகரனும், கேசரிவர்மனும். சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்ல முடிவெடுக்கிறார்கள். அட்சயன் வேடத்தில் அவன் கொண்டு வந்த ஓலையை எடுத்துக் கொண்டு வசந்தனுக்கு வைத்தியம் செய்யும் வைத்தியன் போல மன்னனை ஏமாற்றி அரண்மனைக்குள் நுழைந்து சேனாவை சந்திக்கிறான் மனோகரன். உக்கிரசேனனின் ஓலையையும் அவளிடம் கொடுக்கிறான். உக்கிரசேனன் அனுப்பி வைத்த அட்சயன் என்று மனோகரனை நம்பி விடுகிறாள் சேனா.

சாதுக்கள் வேடத்தில் அரண்மனைக்குள் தனது படைகளுடன் நுழைகிறான் உக்கிரசேனன். புருஷோத்தம மன்னனும் உக்கிரசேனனின் துறவி வேடத்தை நம்பி ஏமாறுகிறான். அசாம்பாவிதம் எதுவும் சம்பவிக்காமல் இருக்க ஒருநாள் புருஷோத்தமன் சேனாவைப் பிரிய வேண்டும் என்று உக்கிரசேனன் மன்னனிடம் தெரிவிக்கிறான் சூழ்ச்சியாக. மன்னனும் ஆமோதிக்கிறான்.

அந்த இரவில் உக்கிரசேனனும், சேனாவும் பழைய காதலர்களாய் சந்திக்கிறார்கள். சரச சல்லாபம் புரிகிறார்கள். இதை தற்செயலாக பார்த்து விடும் வசந்தன் மன்னன் புருஷோத்தமனை எழுப்பி சேனாவும், சாது வடிவில் வந்திருக்கும் உக்கிரசேனனும் ஒன்றாக அறையில் இருப்பதைத் தெரிவித்து விடுகிறான். திடுக்கிடும் மன்னன் கோபமுடன் சேனா அறை செல்கிறான். அதற்குள் உக்கிரசேனன் ஒளிந்து கொள்கிறான். சாதுவுடன் கொஞ்சிக் குலாவியதை மன்னன் சேனாவிடம் சுட்டிக் காட்டி சேனாவிற்கு பரிந்து பேச வரும் சேனாவின் தோழியை மிரட்டி உண்மையைத் தெரிந்து கொள்ள முயல்கிறான்.

'மனோகரா' தொடர் 10 பாகம் 2 (சிவாஜி என்ற மாநடிகர்)  Hqdefault

ஆனால் சேனா தானே அனைத்து உண்மைகளையும் மன்னனிடம் ஒத்துக்கொள்கிறாள் திமிருடன். தன் கணவன் கேசரிவர்மனை விஷம் வைத்துக் கொன்றது, பத்மாவதியை மனனனிடமிருந்து பிரித்தது, மனோகரனை பழி தீர்த்தது, தன் மகன் வசந்தனுக்கு இளவரசன் பட்டம் கட்ட முயற்சி செய்தது, கள்ளக் காதலன் உக்கிரசேனனை சாது வேடத்தில் படையுடன் வரவழைத்தது என்று அத்தனை சதிகளையும் மன்னனிடம் தான்தான் செய்ததாக தைரியமாகக் கூறுகிறாள். அது மட்டுமல்லாமல் அங்கு அட்சயன் வேடத்தில் நிற்கும் மனோகரனைக் கொண்டே மன்னனைக் கைதும் செய்கிறாள். சதிகாரியின் சதியால் தந்தையைக் கைது செய்கிறான் மகன் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு. சிறையில் சிந்தை தெளிகிறான் மன்னவன். புருஷோத்தம மன்னன் தன் பத்தினி பத்மாவதிக்கும், தனயன் மனோகரனுக்கும் செய்த கொடுமைகளை நினைத்து வேதனை அடைகிறான். தன் சோழநாட்டிற்கு தன்னால் களங்கம் வந்து விட்டதே என்று இப்போதுதான் புத்தி தெளிகிறான். தன் புதல்வனை நினைத்து புலம்புகிறான். தன் தந்தை திருந்தியதைக் கண்டு மனோகரன் மகிழ்ச்சி கொள்கிறான். ஆனால் செய்வதறியாது திகைக்கிறான்.

இதற்குள் சிறையில் விஜாயாளுக்கு குழந்தை பிறக்கிறது. இதைக் கேள்விப்பட்ட சேனா அந்தக் குழந்தையை அட்சயன் வேடத்தில் இருக்கும் மனோகரனை விட்டே கொலை செய்யச் சொல்கிறாள். அதிர்ந்த மனோகரன் பொறுமை காக்கிறான். சிறையில் இருக்கும் பத்மாவதியையும், விஜயாளையும் சந்தித்து அவர்களை தப்பிப் போக சொல்லுகிறான். அவன் அட்சயன் வேடத்தில் இருப்பதால் பத்மாவதியாலும், விஜயாவாலும் அவனை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்கு பத்மாவதி அரசனின் ஆணையை பட்டத்து மகிஷியான தானே மீறக் கூடாது என்று கூறி மறுத்து விடுகிறாள். செய்வதறியாது திகைக்கும் மனோகரன் 'குழந்தையை என்னிடம் கொடுங்கள் ... நான் அவனுக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் காப்பாற்றித் தருகிறேன்' என்று குழந்தையைக் கேட்கிறான். ஆனால் இது குழந்தையைக் கொல்ல சேனா செய்த சதி வேலை என்று எண்ணி குழந்தையை தர மறுக்கிறாள் விஜயாள்.

இதற்குள் கேசரிவர்மனின் குகையில் அடைபட்டுக் கிடக்கும் நிஜ அட்சயன் அங்கிருந்து தப்பி சேனாவுடன் இருக்கும் உக்கிரசேனனை சந்திக்க, அவனைக் கண்டு திடுக்கிடும் சேனா இதுவரை அட்ச்யனாக நடித்தது வேறு ஆள் என்று தெரிந்து கொள்கிறாள். உடனே அரசியும், விஜயாளும் இருக்கும் சிறைக்கு வருகிறாள். அங்கு மனோகரன் தாயும் மனைவியும் தன்னை நம்பாததால் அட்சயன் வேடத்தைக் கலைத்து மனோகரனாகிறான். பத்மாவதியும், விஜயாளும் அவனைக் கண்டு மிக்க சந்தோஷம் கொள்கின்றனர். ஆனால் அந்த சந்தோஷம் நிலைத்ததா?

அங்கு வரும் சேனா மனோகரனைக் கண்டு கொள்கிறாள். அவனைக் கைது செய்ய ஆணை இடுகிறாள். மனோகரன் தன் வீரத்தைக் காட்டி அவள் ஆட்களுடன் போர் புரிந்து வெற்றி காணுகிறான். ஒரு ஈட்டியை எடுத்து சேனாவை குத்திக் கொல்லப் போகும் தருணத்தில் வழக்கம் போல பத்மாவதி அவனைத் தடுத்து விடுகிறாள். இந்த நேரத்தில் உக்கிரசேனன் மனோகரன் மீது கத்தியை வீசுகிறான். மனோகரனின் கையில் கத்தி குத்தி விடுகிறது. மனோகரன் கைது செய்யப்படுகிறான். போகுமுன் மனோகரன் தன் தாயிடம் மகாராஜா சிறையில் இருக்கிறார் என்றும், புத்தி தெளிந்து திருந்தி விட்டார் என்றும் கூறிச் செல்கிறான்.

இதற்குள் ராஜப்ரியன் பாண்டிய நாட்டு சேனைகளை துணைக்கு அழைத்துக் கொண்டு சேனாவின் மீது படையெடுக்க சத்யசீலருடன் புறப்பட்டு வருகிறான்.

மனோகரன் ஒரு பெரிய தூணில் சங்கிலியால் பிணைக்கப்பட்டு கட்டி வைக்கப்படுகிறான். சேனாவும், உக்கிரசேனனும் சோழ நாட்டின் வீர  மகனையும், அவன் பெற்ற குலக்கொழுந்தையும் கொல்ல முடிவெடுக்கின்றனர். நிஜ அட்சயன் சிறையில் இருக்கும் ராணி பதமாவதியிடமிருந்தும், விஜயாளிடமிருந்தும் குழந்தையைப் பறித்து வருகிறான். குழந்தையை பணயமாக வைத்து மனோகரனை எள்ளி நகையாடுகின்றனர் நயவஞ்சகர்கள். 'இறுதியாக உன் குழந்தைக்கு முத்தம் கொடுத்துக் கொள்' என்று குழந்தையை மனோகரனிடம் காட்டியும் காட்டாமலும் அவனை சித்ரவதை செய்கிறான் சித்ரசேனன். மனோகரன் பாசத்தால் துடிக்கிறான்.

சிறையிலிருந்து புயலெனக் கிளம்புகிறாள் ராணி பத்மாவதி. குழந்தையைக் கொல்ல உக்கிரசேனன் வாள் எடுக்கையில் அங்கு வந்து விடுகிறாள் பத்மாவதி. சேனாவிடம் குழந்தையைக் கொல்லாமல் இருக்கும்படி வேண்டுகிறாள். அதுவரை அவளால் தானும், தன் குடும்பத்தாரும் பட்ட வேதனைகளை அவளிடம் எடுத்துக் கூறி 'ராஜ்ஜியத்தை நீயே எடுத்துக் கொள்... எங்களை விட்டு விடு' என்று அப்போதும் கோபம் வராமல் மன்றாடுகிறாள். ஆனால் சோழ சாம்ராஜ்யத்தையே அழிக்கப் போவதாக அந்த வஞ்சகி சேனா பதில் அளிக்கிறாள்.

அதுவரை பொறுமையின் சிகரமாய், பூமி மாதாவைப் போல் இருந்த பத்மாவதி எரிமலையாக வெடிக்கிறாள். தன் கணவனுக்காக எதையும் பொறுத்தவள் அவன் சிறையில் இருக்கும் கோலத்தையும், தன் மாசற்ற மாணிக்கம் மனோகரன் கட்டி வைக்கப்பட்டு சித்ரவதை அனுபவிப்பதையும், அவன் பெற்ற செல்வக் குழந்தை உயிருக்கு போராடுவதையும் கண் முன்னே காணும் பத்மாவதி அக்னியாய் தகிக்க ஆரம்பித்து விடுகிறாள். இதுவரை மனோகரனின் கைகளையும், கோபத்தையும் கட்டிப் போட்டவள் அதற்காக வருந்துகிறாள். மகன் எதுவும் செய்ய முடியமால் கைகள் கட்டப் பட்டிருக்கிறானே என்று கண்ணீர் வடிக்கிறாள்.  

'இப்போதும் ஒன்றும் கெட்டு விட வில்லை. ஆணையிடுங்கள் தாயே" என்று கர்ஜிக்கிறான் இளஞ்சிங்கம். 'பொறுத்தது போதும் மனோகரா! பொங்கி எழு' என்று தன் பொறுமையையெல்லாம்  மூட்டை கட்டிவைத்து விட்டு மனோகரனை தன் வீரப் பேச்சால் வீறு கொள்ளச் செய்கிறாள் அந்தத் தாய். தாயின் வீர மொழி கெட்டு தூணில் கட்டப் பட்டிருக்கும் சங்கிலியை தன் வலிமையான தோள்களின் பலத்தால் அறுத்தெறிந்து சண்டமாருதமாய் பொங்கி எழுகிறான் மனோகரன். செவ்வாழைத் தோட்டத்தில் குதித்தாடும் குரங்குகளான எதிரிகளை துவம்சம் செய்கிறான். உக்கிரசேனன் குழந்தையைப் பறித்து கொலை பாதகம் செய்ய முற்படுகிறான். தக்க சமயத்தில் அரூபன் கேசரிவர்மன் வந்து குழந்தையைக் காப்பாற்றுகிறான். ராஜப்ரியன் மந்திரி சத்யசீலருடன் சேர்ந்து, பாண்டிய படைகளுடன் வந்து மன்னன் புருஷோத்தமனை சிறையில் இருந்து மீட்கிறான்.  உக்கிரசேனனை கொன்று அவனை பழி தீர்க்கிறான் மனோகரன்.

மறைத்திருக்கும் வசந்தசேனை மனோகரனைக் கொல்ல கட்டாரியை வீசுகிறாள். அது தற்செயலாக அங்கிருக்கும் அவள் மகன் வசந்தன் மேலே பாய்ந்து விட அவன் பரிதாபமாக உயிரிழக்கிறான். பெற்ற தாயே தனயனைக் கொன்ற பரிதாபம். பாவத்திற்கு சம்பளம். மிகுந்த கோபமுற்ற மனோகரன் சேனாவைக் கொல்லப் போகிறான். ஆனால் கேசரிவர்மன் அவனைத் தடுத்து 'அவளைக் கொல்லவே தான் இத்தனை வருடம் கஷ்டங்கள் அனுபவித்தேன்' என்று கூறி அவளை தான்தான் கொல்ல வேண்டும் என்று அவளைத் தன் குகைக்கு அழைத்துச் சென்று, தன் சுயரூபத்தைக் காட்டி சேனாவை சித்ரவதை செய்து கொன்று தன் பழியைத் தீர்க்கிறான்.

ஒழிந்தாள் பஞ்சமாபாதகி வசந்தசேனா.

சிறையில் இருந்து வெளியே வரும் மன்னன் புருஷோத்தமன் அனைவரிடமும் மன்னிப்பு கோருகிறான். பிரிந்த குடும்பம் ஒன்று சேர்க்கிறது. மீண்டும் பத்மாவதி மன்னனின் இதயராணி ஆகிறாள். மனோகரன் தன் மழலைச் செல்வத்தோடு தன் மனையாள் விஜயாளை ஆனந்தத்தோடு நோக்குகிறான். இனி சோழநாட்டின் மகிழ்ச்சிக்குக் கேட்கவும் வேண்டுமோ!


அடுத்து மூன்றாம் பாகமாக இப்படத்தில் நடிகர் திலகம் ஆற்றியுள்ள மறக்க முடியாத நடிப்பைப் பற்றியும், மற்ற கலைஞர்களின் பங்களிப்பைப் பற்றியும், 'மனோகரா' படத்தைப் பற்றிய விசேஷமான தகவல்களைப் பற்றியும், அதன் வீறு கொண்ட வெற்றிகளைப் பற்றியும் விரைவில் பதிவிடுகிறேன். தமிழ்த்திரை உலகில் வெற்றிக் கொடி நாட்டி மக்கள் மனதில் தனி இடம் பிடித்த 'மனோகரா' தங்கள் அன்பினாலும், ஆதரவினாலும் ஈகரையிலும் வெற்றி பவனி வருவான் என்பது திண்ணம்.

இக்கட்டுரை முழுதும் என் சொந்தப் படைப்பே

நன்றி!

வாசுதேவன்.

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Thu Feb 06, 2014 12:56 pm

நடிகர் திலகம் சிவாஜி புகழ் பரப்ப இலக்கிய அணி ஒன்றைத் தொடங்கினால் வாசு சாரும் ரவி சாரும் அட்டகாசமாக வழி நடத்திச் செல்வார்கள்...

தொடருங்கள்... தங்கள் பணியை

காத்திருக்கிறோம் ஆவலுடன் தங்கள் இலக்கிய நயம் மிக்க பகிர்வுகளுக்காக

jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Thu Feb 06, 2014 9:44 pm

வாசு வாசு வாசு வாசு வாசு வாசு வாசு வாசு வாசு வாசு வாசு வாசு வாசு வாசு வாசு வாசு வாசு வாசு வாசு வாசு வாசு வாசு வாசு வாசு வாசு வாசு வாசு வாசு வாசு வாசு வாசு வாசு வாசு வாசு வாசு வாசு வாசு வாசு வாசு வாசு வாசு வாசு வாசு வாசு வாசு வாசு வாசு வாசு வாசு வாசு வாசு வாசு வாசு வாசு வாசு -!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

எப்படி எழுதுவது , எப்படி புகழ்வது என்றே தெரியவில்லை -

உங்கள் எழுத்தின் சக்தி 1000 மனோகரன்களை எங்கள் நடுவே கொண்டு வந்து நிறுத்தி உள்ளது  

வசந்தசேனா, விஜயா, புருஷோதமர் , பத்மாவதி - யாருமே தெரியவில்லை - மாறாக ஒரு 

பக்தியையும் , பரந்த  அன்பையும் கொண்ட வாசுவைத்தன் பார்க்கிறோம் - வாழ்க உங்கள் 

தொண்டு - உங்கள் பதிவுகளை  படிக்க புண்ணியம் செய்து உள்ளோம் - அன்புடன் ரவி

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Fri Feb 07, 2014 8:59 am

அன்பு வீயார் சார்,

தங்கள் பாராட்டுதல்களுக்கு நன்றி! தங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. தங்கள் வழியில் தொடர்ந்து பணியாற்றுகிறோம். 'மனோகரா' பற்றிய தங்களுடைய பங்களிப்புகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி!

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Fri Feb 07, 2014 9:00 am

டியர் ரவி சார்,

போதுமா?... இன்னும் ஏதாவது பாக்கி இருக்கிறதா? தங்கள் நிஜமான பாராட்டுதல்களுக்கு மிக்க நன்றி! தங்கள் ரசனைக்கு என் ராயல் சல்யூட்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Feb 07, 2014 12:13 pm

சிறப்பான தொடர் ... எப்படி பின்னுட்டம் அளிப்பது என்று தெரியவில்லை .

கட்டுரை நடை மிக சிறப்பு ..உங்கள் கட்டுரையை படித்துவிட்டு மீண்டும் மனோகரா படத்தை பார்த்தால் நிச்சயம் புது அனுபவம் ஏற்படும் என்பதில் ஜயம் இல்லை .




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Sat Feb 08, 2014 9:58 am

மிக்க நன்றி பாலாஜி (இப்போது சந்தோஷம்தானே! எனக்கு இன்னும் வயதாகவில்லை. ஐம்பத்திரண்டு வயது சிறுவன்தான். சரியா?)புன்னகை மனோகரன் கதையை வாசித்து ரசித்ததற்கு. தங்கள் பாராட்டிற்கும் என் அன்பு நன்றி!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Feb 08, 2014 11:08 am

vasudevan31355 wrote:மிக்க நன்றி பாலாஜி (இப்போது சந்தோஷம்தானே! எனக்கு இன்னும் வயதாகவில்லை. ஐம்பத்திரண்டு வயது சிறுவன்தான். சரியா?)புன்னகை மனோகரன் கதையை வாசித்து ரசித்ததற்கு. தங்கள் பாராட்டிற்கும் என் அன்பு நன்றி!

நிச்சயம் இளமை துள்ளும் வாலிபர்தான் நீங்க அது உங்க எழுத்திலேயே தெரிகிறது . அது மட்டும் இல்லாமல் நீங்க ஐம்பத்திரண்டு வயது சிறுவன்தான் அதனால் பெயர் சொல்லியே பழகலாம் ...

உங்க நட்பு கிடைக்க உதவிய ஈகரைக்கு மிக்க நன்றி .




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Tue Feb 11, 2014 2:54 pm

நன்றி பாலாஜி!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக