புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிப்ரவரி மாத எ‌ண் ஜோ‌திட‌‌ப் பல‌ன்க‌ள்!


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 31, 2014 8:25 pm

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் புது வழியில் சில முயற்சிகள் செய்வீர்கள்.
பழைய நண்பர்கள், உறவினர்களின் சந்திப்பால் உற்சாகம் அடைவீர்கள்.
எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணம் கைக்கு வரும். வீட்டில் அமைதி நிலவும்.

பிள்ளைகளால் மகிழ்ச்சியுண்டு. மகனின் கல்யாணப் பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும்.
ஆன்மீக பயணங்கள் நல்ல விதத்தில் அமையும். பூர்வீக சொத்தில் சில மாற்றம் செய்வீர்கள்.
என்றாலும் தொண்டை வலி, காய்ச்சல், சளித் தொந்தரவு, சகோதர வகையில் மனத்தாங்கல் வரக்கூடும்.

மனைவியின் உடல் நலத்திலும் அக்கறை காட்டுங்கள். சின்ன சின்ன வாக்குவாதங்கள் வரக்கூடும்.
ஆனால் மாதத்தின் மையப் பகுதியிலிருந்து அரசாங்க காரியங்களில் இருந்த தடுமாற்றம் ஓயும்.
திட்டமிடாத செலவுகளையும் சமாளிக்க வேண்டி வரும்.

கன்னிப் பெண்களே! உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.
அரசியல்வாதிகளே! எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள்.
வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவு லாபம் உண்டு. ஆனால் தடாலடியாக பெரிய முதலீடுகளை போடாதீர்கள்.

உத்தியோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிடாதீர்கள்.
உயரதிகாரி பாராட்டும்படியாக சில விஷயங்களை இழுத்துப் போட்டுச் செய்வீர்கள்.
கலைத்துறையினரே! உங்களின் படைப்புத் திறன் வளரும். எதார்த்தமான பேச்சால் சாதிக்கும் மாதமிது.

அதிர்ஷ்ட தேதிகள் : 1, 9, 12, 10, 21
அதிர்ஷ்ட எண்கள் : 2, 8
அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, பச்சை
அதிர்ஷ்ட கிழமைகள் : வியாழன், வெள்ளி
பிப்ரவரி மாத எண் ஜோதிடம் 1, 10, 19, 28



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 31, 2014 8:26 pm

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் எதிர்பார்த்த காரியங்களை தடையின்றி முடியும்.
வீடு கட்ட லோன் கிடைக்கும். தாயாருக்கு இருந்த மூட்டு வலி, முழங்கால் வலியெல்லாம் நீங்கும்.
பணவரவு உண்டு. பழைய சொத்துப் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

சிலருக்கு புதிய வேலை கிடைக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன கருத்து மோதல்கள் வெடிக்கும்.
இளைய சகோதரரால் ஆதாயம் உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் சேரும்.
மகனின் அலட்சியப் போக்கு மாறும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வழக்கு சாதகமாகும். அரசால் அனுகூலம் உண்டு.

தள்ளிப் போன கல்யாணப் பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடியும். பால்ய சினேகிதர்களின் சந்திப்பு நிகழும்.
ஆனால் முன்கோபம், வீண் அலைச்சல் வரும். சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும்.
அரசியல்வாதிகளே! தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள்.

கன்னிப் பெண்களே! பெற்றோருக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள்.
வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். வேலையாட்கள் கொஞ்சம் முரண்டு பிடிக்கத்தான் செய்வார்கள்.
உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சக ஊழியர்கள் உதவுவார்கள்.
கலைத்துறையினரே! உங்களின் திறமைகள் வெளிப்படும். தொலை நோக்குச் சிந்தனையால் சாதிக்கும் மாதமிது.

அதிர்ஷ்ட தேதிகள் : 2, 6, 11, 16, 25
அதிர்ஷ்ட எண்கள் : 3, 5
அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், வெளிர்நீலம்
அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள், புதன்
பிப்ரவரி மாத எண் ஜோதிடம் 2, 11, 20, 29



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 31, 2014 8:26 pm

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம் சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறும். நட்பு வட்டம் விரிவடையும். குடும்பத்தாரின் கோரிக்கைகளை பூர்த்தி செய்வீர்கள்.

கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கசப்புணர்வு விலகும். சொந்தம்-பந்தங்களின் சுயரூபம் தெரிந்து செயல்படத் தொடங்குவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து அத்தியாவசிய செலவுகளை செய்வீர்கள். என்றாலும் சிம சமயங்களில் தனிமைப்படுத்தப்பட்டதை போல் உணர்வீர்கள்.

மன அழுத்தம், டென்ஷன் அதிகரிக்கும். மாதத்தின் மையப் பகுதியிலிருந்து எதிர்காலத் திட்டங்களைப் பற்றி யோசிப்பீர்கள். வர வேண்டிய இடத்திலிருந்து பணம் வரும். பழைய வாகனத்தை மாற்றிவிட்டு புதுசு வாங்குவீர்கள். பிரபலங்களால் மதிக்கப்படுவீர்கள்.

புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அரசியல்வாதிகளே! கோஷ்டி பூசலாலும், உங்களைப் பற்றிய வதந்திகளாலும் உங்கள் புகழ் குறையும். கன்னிப் பெண்களே! கல்யாணம் கூடி வரும். காதல் விவகாரத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.

வியாபாரத்தில் வி. ஐ. பிகளின் சந்திப்பு கிட்டும். பங்குதாரர்களின் பிடிவாதத்திற்கு செவி சாய்க்காதீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். கலைத்துறையினரே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். பழைய பிரச்சனைக்கு தீர்வு காணும் மாதமிது.

அதிர்ஷ்ட தேதிகள் : 3, 12, 10, 21, 27
அதிர்ஷ்ட எண்கள் : 2, 6
அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், இளம்சிவப்பு
அதிர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, வெள்ளி
பிப்ரவரி மாத எண் ஜோதிடம் 3, 12, 21, 30



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 31, 2014 8:27 pm

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாததத்தில் சவால்களை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். உடன்பிறந்தவர்கள் உங்களின் நல்ல மனசை புரிந்து கொள்வார்கள்.

கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். முடியாமல் போன சில காரியங்களை முடித்துக் காட்டும் மனப்பக்குவம் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

ஆன்மீகத்தில் மனம் லயிக்கும். அண்டை வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்வீர்கள். ஆனால் மாதத்தின் பிற்பகுதியில் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும்.

யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். அரசியல்வாதிகளே! தலைமையின் ஆணையை மீறி தனி ஆவர்த்தனம் வேண்டாம். கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். புது வேலை அமையும்.

வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலமாக லாபமடைவீர்கள். வட்டிக்கு வாங்கிய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். உத்தியோகத்தில் ஒளிவுமறைவின்றி நேரடியாகப் பேசுவதால் மேலதிகாரி உங்களின் துணிச்சலைப் பாராட்டுவார். கலைத்துறையினரே! பழைய நிறுவனத்திலிருந்து புது வாய்ப்புகள் வரும். தன்னம்பிக்கையுடன் செயல்படும் மாதமிது.

அதிர்ஷ்ட தேதிகள் : 4, 8, 17, 24, 26
அதிர்ஷ்ட எண்கள் : 1, 9
அதிர்ஷ்ட நிறங்கள் : ஊதா, பிஸ்தாபச்சை
அதிர்ஷ்ட கிழமைகள் : வியாழன், சனி
பிப்ரவரி மாத எண் ஜோதிடம் 4, 13, 22, 31



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 31, 2014 8:27 pm

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் இதமான பேச்சு, மாறுபட்ட அணுகுமுறையால் சாதிப்பீர்கள். எடுத்த காரியங்களை எப்படியாவது முடித்து விட வேண்டும் என்ற வைராக்கியம் பிறக்கும். அரசாங்க அதிகாரிகள் பக்க பலமாக இருப்பார்கள்.

குடும்பத்தில் அமைதியுண்டு. மனைவிவழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். பூர்வீகச் சொத்தை சீரமைப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். என்றாலும் மன உளைச்சல், காரியத் தடைகள் வரக்கூடும்.

பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண் காணிப்பது நல்லது. மகளின் கல்யாணத்திற்காக கொஞ்சம் அலைய வேண்டி வரும். மாதத்தின் மையப் பகுதியிலிருந்து புகழ், கௌரவம் கூடும்.

விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வேற்றுமதத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். அரசியல்வாதிகளே! சகாக்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும்.

வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்கள் உதவுவார்கள். ஒருபடி முன்னேறும் மாதமிது.

அதிர்ஷ்ட தேதிகள் : 5, 1, 14, 15, 26
அதிர்ஷ்ட எண்கள் : 5, 7
அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர்கிரே, ஆரஞ்சு
அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள், வெள்ளி
பிப்ரவரி மாத எண் ஜோதிடம் 5, 14, 23



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 31, 2014 8:28 pm

6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் எதையும் தாங்கும் மனவலிமைக் கிட்டும். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.

பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். மாதத்தின் மையப் பகுதியில் வீண் விமர்சனங்களுக்கு ஆளாவீர்கள்.

குடும்பத்தில் சலசலப்பு வந்து நீங்கும். என்றாலும் மாதத்தின் பிற்பகுதியில் வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள். உறவினர், நண்பர்களின் பாசமான விசாரிப்புகள் புதுத் தெம்பை தரும். வெளியூர் பயணங்களால் திடீர் திருப்பம் உண்டாகும்.

அரசியல்வாதிகளே! கட்சி மேல்மட்டத்தை பகைத்துக் கொள்ளாதீர்கள். கன்னிப் பெண்களே! காதல் கசந்து இனிக்கும். பெற்றோரின் அறிவரையை ஏற்பது நல்லது. வியாபாரத்தில் நம்பிக்கைக்குறியவரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. வேலையாட்களின் ஆதரவு உண்டு.

உத்தியோகத்தில் வீண் டென்ஷன் அதிகரிக்கும். மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். கலைத்துறையினரே! விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். போராடி இலக்கை எட்டும் மாதமிது.

அதிர்ஷ்ட தேதிகள் : 6, 8, 15, 17
அதிர்ஷ்ட எண்கள் : 2, 9
அதிர்ஷ்ட நிறங்கள் : பிங்க், க்ரீம் வெள்ளை
அதிர்ஷ்ட கிழமைகள் : செவ்வாய், வியாழன்
பிப்ரவரி மாத எண் ஜோதிடம் 6, 15, 24



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 31, 2014 8:28 pm

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் சாதிப்பீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். புதிதாக வாகனம் வாங்குவீர்கள். சிலர் வீடு மாற வேண்டி வரும். பிள்ளைகள் உங்கள் மனங்கோணாமல் நடந்துக் கொள்வார்கள்.

பால்ய நண்பர்கள் தேடி வந்து உதவுவார்கள். பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும்.

வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள். என்றாலும் மருத்துவச் செலவு, மனைவிக்கு கர்பப்பை வலி வந்துப் போகும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள்.

அரசியல்வாதிகளே! கட்சி தலைமை அதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். கன்னிப் பெண்களே! உங்களின் புது திட்டங்களை பெற்றோர் ஆதரிப்பார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள்.

உத்தியோகத்தில் உங்கள் திறமையை மூத்த அதிகாரி பரிசோதிப்பார். கலைத்துறையினரே! புது வாய்ப்புகள் கிட்டும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் மாதமிது.

அதிர்ஷ்ட தேதிகள் : 7, 11, 15, 24, 25
அதிர்ஷ்ட எண்கள் : 3, 6
அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், வெளிர்நீலம்
அதிர்ஷ்ட கிழமைகள் : புதன், சனி
பிப்ரவரி மாத எண் ஜோதிடம் 7, 16, 25



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 31, 2014 8:29 pm

8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் நினைத்தது நிறைவேறும். அறிஞர்கள், கல்வியாளர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் என அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும்.

மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைப் போல் மணப்பெண் அமைவாள். கோவிலை புதுப்பிக்க உதவுவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புதிதாக ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள்.

மாதத்தின் மையப்பகுதியிலிருந்து தந்தையுடன் கருத்து மோதல்கள், அவருக்கு உடல் நிலை பாதிப்பு வந்துப் போகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புது நண்பர்கள் அறிமுகமாவார்கள். வேற்றுமொழி, நாட்டினாரால் திடீர் திருப்பம் உண்டாகும்.

அரசியல்வாதிகளே! தலைமையிடம் சிலர் உங்களைப் பற்றி புகார் பட்டியல் வாசிப்பார்கள். கன்னிப் பெண்களே! பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள்.

உத்தியோகத்தில் உயரதிகாரிகள் மனம் விட்டு பேசுவார்கள். சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். கலைத்துறையினரே! கௌரவிக்கப்படுவீர்கள். புதிய முயற்சிகள் பலிதமாகும் மாதமிது.

அதிர்ஷ்ட தேதிகள் : 8, 17, 23, 24, 26
அதிர்ஷ்ட எண்கள் : 1, 8
அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், பிஸ்தாபச்சை
அதிர்ஷ்ட கிழமைகள் : செவ்வாய், வெள்ளி
பிப்ரவரி மாத எண் ஜோதிடம் 8, 17, 26



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 31, 2014 8:29 pm

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இந்த மாதம் மூளை பலத்தால் முன்னேறுவீர்கள். வி. ஐ. பிகளின் ஆதரவால் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். ஓரளவு பணவரவு உண்டு. பூர்வீக சொத்து பங்கை கேட்டு வாங்குவீர்கள். தோற்றப் பொலிவுக் கூடும்.

பிள்ளைகள் நல்ல வழிக்கு திரும்புவார்கள். கடன் பிரச்சனைகள் ஒரு பக்கம் விரட்டினாலும் இங்கிதமாகப் பேசி வட்டியை தருவீர்கள். அ உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். மனைவிவழியில் இருந்த பிணக்குகள் நீங்கும். அவர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். என்றாலும் பேச்சில் கடுமை காட்டாதீர்கள். சகோதரங்கள் கோபப்படுவார்கள். வழக்கால் நிம்மதி இழப்பீர்கள்.

ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கன்னிப் பெண்களே! தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் வேலையாட்கள், பங்குதாரர்கள் உதவுவார்கள்.

உத்தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டி வரும். எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். கலைத்துறையினரே! உதாசினப் படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும். விட்டதைப் பிடிக்கும் மாதமிது.

அதிர்ஷ்ட தேதிகள் : 9, 3, 12, 24
அதிர்ஷ்ட எண்கள் : 3, 6
அதிர்ஷ்ட நிறங்கள் : பிங்க், மயில்நீலம்
அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள், புதன்
பிப்ரவரி மாத எண் ஜோதிடம் 9, 18, 27



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Fri Jan 31, 2014 10:39 pm

பிப்ரவரி மாத எ‌ண் ஜோ‌திட‌‌ப் பல‌ன்க‌ள்! 1571444738 
SenthilMookan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SenthilMookan



எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக