புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழில் படித்தால் வேலை கிடைக்காதா? I_vote_lcapதமிழில் படித்தால் வேலை கிடைக்காதா? I_voting_barதமிழில் படித்தால் வேலை கிடைக்காதா? I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
தமிழில் படித்தால் வேலை கிடைக்காதா? I_vote_lcapதமிழில் படித்தால் வேலை கிடைக்காதா? I_voting_barதமிழில் படித்தால் வேலை கிடைக்காதா? I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
தமிழில் படித்தால் வேலை கிடைக்காதா? I_vote_lcapதமிழில் படித்தால் வேலை கிடைக்காதா? I_voting_barதமிழில் படித்தால் வேலை கிடைக்காதா? I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
தமிழில் படித்தால் வேலை கிடைக்காதா? I_vote_lcapதமிழில் படித்தால் வேலை கிடைக்காதா? I_voting_barதமிழில் படித்தால் வேலை கிடைக்காதா? I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
தமிழில் படித்தால் வேலை கிடைக்காதா? I_vote_lcapதமிழில் படித்தால் வேலை கிடைக்காதா? I_voting_barதமிழில் படித்தால் வேலை கிடைக்காதா? I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தமிழில் படித்தால் வேலை கிடைக்காதா? I_vote_lcapதமிழில் படித்தால் வேலை கிடைக்காதா? I_voting_barதமிழில் படித்தால் வேலை கிடைக்காதா? I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழில் படித்தால் வேலை கிடைக்காதா? I_vote_lcapதமிழில் படித்தால் வேலை கிடைக்காதா? I_voting_barதமிழில் படித்தால் வேலை கிடைக்காதா? I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
தமிழில் படித்தால் வேலை கிடைக்காதா? I_vote_lcapதமிழில் படித்தால் வேலை கிடைக்காதா? I_voting_barதமிழில் படித்தால் வேலை கிடைக்காதா? I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
தமிழில் படித்தால் வேலை கிடைக்காதா? I_vote_lcapதமிழில் படித்தால் வேலை கிடைக்காதா? I_voting_barதமிழில் படித்தால் வேலை கிடைக்காதா? I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
தமிழில் படித்தால் வேலை கிடைக்காதா? I_vote_lcapதமிழில் படித்தால் வேலை கிடைக்காதா? I_voting_barதமிழில் படித்தால் வேலை கிடைக்காதா? I_vote_rcap 
8 Posts - 2%
prajai
தமிழில் படித்தால் வேலை கிடைக்காதா? I_vote_lcapதமிழில் படித்தால் வேலை கிடைக்காதா? I_voting_barதமிழில் படித்தால் வேலை கிடைக்காதா? I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
தமிழில் படித்தால் வேலை கிடைக்காதா? I_vote_lcapதமிழில் படித்தால் வேலை கிடைக்காதா? I_voting_barதமிழில் படித்தால் வேலை கிடைக்காதா? I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
தமிழில் படித்தால் வேலை கிடைக்காதா? I_vote_lcapதமிழில் படித்தால் வேலை கிடைக்காதா? I_voting_barதமிழில் படித்தால் வேலை கிடைக்காதா? I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழில் படித்தால் வேலை கிடைக்காதா? I_vote_lcapதமிழில் படித்தால் வேலை கிடைக்காதா? I_voting_barதமிழில் படித்தால் வேலை கிடைக்காதா? I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
தமிழில் படித்தால் வேலை கிடைக்காதா? I_vote_lcapதமிழில் படித்தால் வேலை கிடைக்காதா? I_voting_barதமிழில் படித்தால் வேலை கிடைக்காதா? I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழில் படித்தால் வேலை கிடைக்காதா? I_vote_lcapதமிழில் படித்தால் வேலை கிடைக்காதா? I_voting_barதமிழில் படித்தால் வேலை கிடைக்காதா? I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழில் படித்தால் வேலை கிடைக்காதா?

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Jan 29, 2014 12:46 pm

தமிழில் படித்தால் வேலை கிடைக்காதா? QReMiyHwQHuRCeeRvniv+tamil_1736257h

3 மொழி தெரிந்தவர்களை ஆங்கிலத்தில் என்ன சொல்வோம்?”
Tri-lingual.
“2 மொழி தெரிந்தவர்களை ஆங்கிலத்தில் என்ன சொல்வோம்?”
Bi-lingual.
“ ஒரு மொழி மட்டுமே தெரிந்தவர்களை என்ன சொல்வோம்?”
American.

முகம் தெரியாத மனிதர்களின் பாராட்டுகள் வந்து குவிந்தாலும், என் கல்வி சார்ந்த சுற்றத்தில் என் எழுத்துகள் அதிகம் படிக்கப்படவில்லை என்ற குறை எனக்கு உண்டு.

“தமிழ் படிச்சு என்ன ஆகப் போகிறது? வேலை கூட கிடைக்காது” என்று பலர் என்னிடமே சொல்லியிருக்கிறார்கள். ஆங்கில வழிக் கல்விதான் வேலைக்கு உத்தரவாதம், ஆங்கில அறிவுதான் மெத்த அறிவு, உள்ளூர் மொழி வாழ்க்கைக்கு உதவாது என்கிற எண்ணங்கள் வலுப்பெற்று வருகின்றன. கடன் வாங்கி பெரிய பள்ளியில் சேர்க்கும் எளியவர்கள் குழந்தை ஆங்கிலம் பேச ஆரம்பித்தவுடன் கொடுத்த காசுக்கு பலன் கிட்டியதாக மகிழ்கிறார்கள். ஆங்கிலம் தெரியாவிட்டால் எந்த வேலையும் செய்ய முடியாது என்று தீர்மானமாக நம்புகிறார்கள்.

இது உண்மையா?

ஆங்கிலம் இன்று உலகின் பிரதான வியாபார மொழி. அதன் அறிவும் தேர்ச்சியும் உங்களை தொழில் உலகில் பிழைக்க பயன்படும் என்பதற்கு மாற்றுக்கருத்து இல்லை.

ஆனால், ஆங்கிலம் தெரிந்தால்தான் எந்த வேலையும் செய்யமுடியும் என்பது பொய். மொழி அறிவு எல்லா வேலைகளுக்கும் சமமாக தேவைப்படுவதில்லை. மென்பொருள் எழுதுவதற்கும், வாகனம் தயாரிப்பிற்கும், ஓட்டுனருக்கும் தேவைப்படும் மொழி அறிவை விட ஆசிரியருக்கு, விற்பனை சிப்பந்திக்கு, மக்கள் தொடர்பு அதிகாரிக்கு, மொழி பெயர்ப்பாளருக்கு அதிகம் தேவைப்படும். இது எல்லா மொழிகளுக்கும் பொதுவானது.

சுருக்கமாகச் சொன்னால் மனிதர்களுடன் கலந்துரையாடும் வேலைகளுக்கு மொழி அறிவு அதிகம் தேவை. இயந்திரங்களுடன் பணிபுரிவருக்கு அதன் தேவை குறைவு. இந்த விகிதாச்சார அடிப்படையின்படி 80% வேலைகளுக்கு ஒரு குறிப்பிட்ட மொழியில் வேலை செய்யும் அறிவு இருந்தாலே போதும். 20%க்கும் குறைவான வேலைகளுக்குத்தான் மொழித்திறன் அதிகம் தேவைப்படுகிறது.

இதனால்தான் சீனர்கள், ஜப்பானியர்கள். கொரியர்கள், ஜெர்மானியர்கள், ரஷ்யர்கள் எல்லாரும் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்களில் எந்த சிக்கலும் இல்லாமல் முன்னேறியிருக்கிறார்கள். இந்த ஆதார பலத்திற்கு காரணம் தாய் மொழிக் கல்வி! அத்தனை மொழியியல் மற்றும் உளவியல் ஆராய்ச்சிகளும் இதைத் திரும்ப திரும்பச் சொல்லி வருகின்றன. சிந்தனை மொழி, பேசும் மொழி, கற்கும் மொழி, வேலை செய்யும் மொழி அனைத்தும் ஒன்றாக இருக்கும் பொழுது அது இயல்பான இசைவுத்தன்மையை ஏற்படுத்துகிறது. இதனால்தான் இவர்களின் செயல்பாடுகளில் ஒரு தன்னம்பிக்கையும் தெளிவும் உள்ளதைப் பார்க்கலாம்.

அமெரிக்கா உருவாக்க நினைக்கும் ஒரு பன்னாட்டு தட்டை கலாச்சாரத்திற்கு ஆங்கிலம் ஒரு முக்கிய கருவி. நாடுகளை பொருளாதார ரீதியாக அடிமைப்படுத்தவும் அதன் மொழி கலாச்சாரக் கூறுகளை மட்டுப்படுத்தி ஆதிக்கம் செலுத்தவும் ஆங்கிலம் அவசியமாகிறது. இதனால்தான் கன்னியாகுமரியில் தமிழனாய் பிறந்து பெரும்புதூரில் ஜெர்மானியக் கம்பெனியில் பணிபுரியும் போதும் ஆங்கிலம் அவசியம் என ஆந்திராவை சேர்ந்த மேலாளர் வலியுறுத்துகிறார்.

மெக்காலேவின் திட்டம் பரிபூரண வெற்றி என்று சொல்லலாம். அரசே தாய் மொழி தேவையில்லை, ஆங்கிலம் படியுங்கள் என்று சொல்லும் நிலைக்கு கொண்டு வந்துள்ளோம்.

சுத்தமாக இந்தியில் மட்டுமே பேசி, ஆங்கிலத்தைக்கூட இந்தியில் படிக்கும் வட இந்திய இன்ஜினீயரிங் மாணவர்களுக்கு வேலை கிடைக்கிறது. ஆங்கில வழியில் படிப்பதாகக் கூறும் தமிழ் நாட்டு பொறியியல் மாணவர்களுக்கு தான் வேலைத்திறன் குறைவு. 75% மாணவர்கள் வேலை கிடைக்காமல் தவிக்கிறார்கள். ஏன்?

புரியாமல் படிக்கும் பாடத்தில் தேர்ச்சி பெறுவது கடினம். செயல்முறைப் படுத்த முடியாத கல்வி தொழிற்சாலைக்கு தேவையில்லை. ஆங்கிலம் தெரியவில்லை என்கிற தாழ்வு மனப்பான்மை மென்திறன்கள் கற்பதிலும் சிக்கலை ஏற்படுத்துகிறது. ஆசிரியர்களும் இந்த உளவியல் சிக்கலை அவிழ்க்க முடியாமல் திணறுகிறார்கள். இது தான் நிதர்சனம்.

பெரிய ஐ.டி. கம்பெனிகள் அள்ளிக்கொண்டு போகும் சில ஆயிரக்கணக்கான மாணவர்களை மட்டும் பார்த்து ஏமாறுகிறார்கள் பெற்றோர்கள்.

அடுத்த 5 ஆண்டுகளில் வரும் தொழில் நுட்பம் பற்றிக் கூறுகையில் ஐ.டி துறைத் தலைவர் ஒருவர் கூறினார்: “ அடுத்த 5 ஆண்டுகளில் என்ன புதிதாக வரும் என்று சொல்ல முடியாது. அந்த புதிய வேலைகள் 60% வரை இருக்கும். அதனால் தற்போதைய திறன்கள் கற்பதை விட முக்கியம் தன்னம்பிக்கையும் மாற்றத்தை எதிர்நோக்கும் மனோபாவமும்.”

கல்வி நிலையங்கள் மாணவர்களிடம் இருப்பதை வளர்ப்பதைக் காட்டிலும் இல்லாததைக் காட்டி பயமுறுத்துகின்றன. தமிழ் வழிக் கல்வி படித்து, தன்னம்பிக்கையுடன் பின் பிற மொழிகளையும் திறன்களையும் படித்தல் எதிர்காலத்தின் எல்லா சவால்களை நோக்குவதற்கும் மாணவர்களை பக்குவப்படுத்தும்.

இந்தியாவின் பன்மொழிக் கலாச்சாரம் குறையல்ல. நம் பலம். பிற மொழியாளருடன் தொழில் ரீதியாக பழக இத்தனை ஆண்டுகள் இல்லாத சிரமம் இப்போது எப்படி வந்தது?

கேரள அன்பர்கள் பிற மொழிகள் கற்றும் தாய் மொழி உணர்வுடன் தன் மக்களைக் கண்டால் சம்சாரிக்கிறார்கள். மராத்திய நாடகம் அப்படியே இருக்கிறது. வங்காளி தன் மொழியை கர்வத்துடன் தூக்கிப் பிடிக்கிறான். கன்னடர்கள் ராஜ்யோத்ஸவா தினம் என்று மாநிலம் பிறந்ததைக் கொண்டாடுகிறார்கள்.

தமிழன் எல்லா வேலைகளையும் பிறருக்கு கொடுத்து விட்டு, “தமிழும் அரை குறை ஆங்கிலமும் அரை குறை” என்று செல்லாக் காசாகி வருகிறான். சென்ற தலைமுறையில் தமிழ் வழி படித்தும் ஆங்கில புலமை, அயல் நாட்டுப் பணி என சிறப்பாக செயல்பட்டவர்கள் நிறைய பேரைச் சொல்லலாம். ஆங்கிலம் படியுங்கள். மாண்டரின் படியுங்கள். அதற்கு முன் உங்கள் தாய் மொழி படியுங்கள்.

எல்லா நேர்காணலிலும் நான் தேர்வுக்கு எனப் பார்ப்பது தன்னம்பிக்கை, எதையும் கற்றுக் கொள்ளும் ஆர்வம், சிந்தனை தெளிவு இவைகளையே. இயல்பாக இவை தாய் மொழியில் வளர்பவை. நாம் நசுக்காவிட்டால் இவை தழைக்கும். ஆங்கில பயத்தில் நம் தமிழ் வேர்கள் மீது கல்வி அமைப்புகள் வெந்நீர் ஊற்றுவதை நிறுத்தட்டும்.

மதிப்பெண்கள் நிறைய கிடைக்கும் என ஆசைப்பட்டு தமிழை பத்தாம் வகுப்பிற்கு மேல் தவற விட்டவன் நான். கல்லூரியில் என் தோழன் மூர்த்தி கல்லூரித் தேர்தலில் நிற்க அரியர்ஸ் தடைகளாய் இருந்தன. அவனுக்கு ஆங்கிலம் சிரமம். அதனால் அவனுக்காக அனைத்தையும் தமிழில் மொழி பெயர்த்து குறிப்புகள் எடுத்து, எளிய ஆங்கிலத்தில் பதில்கள் தயாரித்து அவனை அத்தனை பேப்பர்களிலும் தேற வைத்தேன். என் சிந்தனை தெளிவடைந்ததும், இரு மொழி புலமை வந்ததும், எளிய ஆசிரியப் பயிற்சி முறைகள் கற்றதும் இதனால் தான். நான் முதல் ரேங்க் வாங்க என்றும் மூர்த்தியை காரணமாகச் சொல்வேன். பின் வாசிப்பு மட்டுமே என்னை தமிழுடன் பிணைத்தது.

தேர்தலில் நின்ற மூர்த்தி, பெண்கள் வாக்குகள் இழந்ததால் (நாங்க செஞ்ச அலப்பறை அப்படி) தோற்றது தனிக்கதை!குறைந்தது 2 மொழிகளாவது தேர்ச்சி பெறுதல் இங்கு சாத்தியம். ஒன்றை வைத்து இன்னொன்று கற்கும் சுகம் அலாதியானது! ஒரு ஜோக் உண்டு.

“3 மொழி தெரிந்தவர்களை ஆங்கிலத்தில் என்ன சொல்வோம்?”
Tri-lingual.

“2 மொழி தெரிந்தவர்களை ஆங்கிலத்தில் என்ன சொல்வோம்?”
Bi-lingual.

“ ஒரு மொழி மட்டுமே தெரிந்தவர்களை என்ன சொல்வோம்?”
American.

தமிழனுக்கும் நாளைய சரித்திரத்தில் இப்படி ஒரு அவப்பெயர் வர வாய்ப்புள்ளது.

டாக்டர்.ஆர்.கார்த்திகேயன் - thehindutamil

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 29, 2014 6:16 pm

தொழிற்சாலைகளில் பணி புரிய ஆங்கில அறிவு
அதிகம் தேவையில்லை என்பது உண்மையே..!
-
வேலை வாய்ப்புக்கான தொழில் கல்வி என்பதாக
எல்லா ஊராட்சி ஒன்றியங்களிலும் ITI நிறுவி
தேவைக்கதிமாக ஃபிட்டர், வெல்டர், எலக்ட்ரீஷியன்
தச்சு வேலை என மாணவர்களை தயார்படுத்தி
ஆகி விட்டது...!
-
வேலை கிடைக்காததால், அவர்கள்,
தொழில்சாலைகளில், அப்ரெண்டீஸூக்குரிய
ஊதியத்தை வாங்கி கொண்டு ஒரே அறையில் பத்து
பேர் தங்கி கொண்டு வாழ்க்கையில் போராடுகிறார்கள்...
-
எனவேதான் பெற்றோர் தங்கள் வாரிசுகள் நன்கு படித்து
அயல் நாட்டிற்கு சென்று வேலை பார்க்க வேண்டும் என்று
விரும்புகிறார்கள்...!
-
இன்று கொசு அடிக்கும் பேட் சீனாவிலிருந்து இறக்குமதி
ஆகிறது...
அதை இந்த சென்னை மாநிலத்தில் தயாரிக்க கூடாதா..?
பல பேருக்கு வேலை கிடைக்குமே?
-
பெரிய ஷாப்பிங் மால்களில் காணப்படும் விளையாட்டு
சாமான்கள் அனைத்தும் சீனா தயாரிப்புதான்...
இப்படிப்பட்டவைகளை
குடிசைத்தொழிலில் தயாரிக்க அரசு ஆர்வம் காட்டலாமே..?
-
உள் நாட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்கினால்தான்
ஆங்கில மோகம் குறையும்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Jan 30, 2014 3:50 pm

ayyasamy ram wrote:
வேலை கிடைக்காததால், அவர்கள்,
தொழில்சாலைகளில், அப்ரெண்டீஸூக்குரிய
ஊதியத்தை வாங்கி கொண்டு ஒரே அறையில் பத்து
பேர் தங்கி கொண்டு வாழ்க்கையில் போராடுகிறார்கள்...

இன்று கொசு அடிக்கும் பேட் சீனாவிலிருந்து இறக்குமதி
ஆகிறது...அதை இந்த சென்னை மாநிலத்தில் தயாரிக்க கூடாதா..?
பல பேருக்கு வேலை கிடைக்குமே?
-
பெரிய ஷாப்பிங் மால்களில் காணப்படும் விளையாட்டு
சாமான்கள் அனைத்தும் சீனா தயாரிப்புதான்...இப்படிப்பட்டவைகளை
குடிசைத்தொழிலில் தயாரிக்க அரசு ஆர்வம் காட்டலாமே..?
-
உள் நாட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்கினால்தான்
ஆங்கில மோகம் குறையும்

தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் வேலை வாய்ப்பு தேவையான அளவு உள்ளது. தொழில் முனைவோரும் அதிக அளவில் உள்ளனர். முக்கிய பிரச்சினை: மின்வெட்டு மற்றும் தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தாத அரசின் அக்கறையின்மை.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jan 30, 2014 3:57 pm

என்னது தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு உருவாக்கவேண்டுமா , ஏற்கனவே இருக்கிற வேலைகளுக்கு ஆட்கள் கிடைக்காமல் தானே தமிழக முதலாளிகள். வடமாநிலங்களில் இருந்து அடிமைகளை இறக்குமதி பண்ணி வேலைக்கு அமர்த்தியுள்ளார்கள்.

நாம் தான் என்றோ தன்னிறைவு அடைந்துவிட்டோமே இனி எதற்கு புதிய வேலைவாய்ப்புகள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக