புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  Poll_c10'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  Poll_m10'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  Poll_c10'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  Poll_m10'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  Poll_c10 
3 Posts - 8%
heezulia
'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  Poll_c10'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  Poll_m10'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  Poll_c10'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  Poll_m10'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  Poll_c10'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  Poll_m10'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Wed Jan 22, 2014 1:47 pm

நாம் தமிழர்களாய் இருந்தாலும், தமிழ்த் திரைப்படப் பாடல்களை கேட்டு ரசித்தாலும் இசைக்கு மொழி ஒரு தடை இல்லை அல்லவா! தமிழ்த் திரைப் படங்களைப் போல இந்தித் திரைப்படங்களிலும் அருமையான இசை அமைப்பாளர்கள் இருந்திருக்கிறார்கள். உதாரணமாக நௌஷாத், ராமச்சந்திரா, எஸ்.டி.பர்மன், ஆர்.டி.பர்மன், லஷ்மிகாந்த் பியாரிலால்,கல்யாண்ஜி ஆனந்த்ஜி, சலீல் சௌத்ரி என்ற அற்புதமான இசையமைப்பாளர்கள் தங்கள் அபாரத் திறமையால் நம் காதுகளுக்கு தேன் பாய்ச்சி இருக்கிறார்கள். பாடகர்களை எடுத்துக் கொண்டால் முகமத் ரபி, கிஷோர் குமார், மன்னாடே, முகேஷ், லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே, சுரய்யா, ஷம்ஷத் பேகம், நூர்ஜஹான், கீதா தத்  என்ற அற்புதமான குரல்வளம் கொண்ட பாடகர்கள் இன்றும் தங்கள் குரலால் நம்மைக் கட்டி ஆளுகிறார்கள். இத்தகைய பழைய இந்திப் பாடல்களை நாம் பார்த்து அல்லது கேட்டு மகிழும் போது அதன் சுகமே அலாதியாய் இருப்பதை உணரமுடியும். கால இயந்திரத்தில் அந்த பாடல்கள் வெளியான கால கட்டத்திற்கே நாம் பயணிப்பது போன்ற சுகமான அனுபவம் இந்தத் திரியின் மூலம் நமக்குக் கிட்டும் என்பது நிச்சயம்.

அத்தகைய புகழ் பெற்ற இந்தித் திரைப்படப் பாடல்களை இந்தத் திரியில் வீடியோ வடிவில் நாம் காணலாம்.

முதலில் 1973-இல் வெளியாகி இந்தியாவையே ஒரு உலுக்கு உலுக்கிய ராஜ்கபூரின் 'பாபி' திரைப்படத்தில் இருந்து மிகவும் புகழ் பெற்ற இப்பாடலைப் பார்த்து மகிழ்வோம்.
ரிஷிகபூர், டிம்பிள் கபாடியா இருவரின் இளமைத் துள்ளலில்  அப்போதைய இளைஞர்களை பைத்தியம் பிடித்து அலையை வைத்த காதல் காவியம் 'பாபி'. இசை ஓவியம். ராஜ்கபூர் அவர்களின் சொந்தக் காவியம். லஷ்மிகாந்த் பியாரிலால் இசையமைப்பில் ஷைலேந்திர சிங் என்ற பாடகர் பாடிய 'Main Shayar To Nahin ... Magar Ae Haseen'  என்ற இந்தப் பாடலைக் கேட்டு ரசிக்காதவர்களே அப்போது இல்லை எனலாம்.

இது பற்றிய அன்பர்களின் கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன.  



சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Wed Jan 22, 2014 2:37 pm

எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று..ம்ம் தொடர்க உம் தொண்டு..நன்றி வாசு சார்..

subasu
subasu
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 25/10/2013

Postsubasu Wed Jan 22, 2014 5:36 pm

நன்றி அண்ணா

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Thu Jan 23, 2014 9:49 am

subasu wrote:நன்றி அண்ணா

நன்றி சகோதரரே!

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Thu Jan 23, 2014 10:19 am

அந்தக் கால இந்திப் பாடல்கள் என்று பார்த்தால் வரிசையில் நிறைய வருகின்றன..கிஷோர் குமார் - ஜிந்தகி ..யஹ கல் க்யாஹோ.. பாடல்..அப்புறம் நா கோயி உமங்க் ஹை நாகோயி தரங்க் ஹை..பின்... அச்சா து ஹம் சல் தே ஹோ..

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Thu Jan 23, 2014 10:25 am

அடுத்து 'ஆராதனா' என்ற இமாலயப் புகழ் பெற்ற இந்திப்படப் பாடல் ஒன்றைப் பார்த்து மகிழலாம். 24 அக்டோபர் 1969-இல் வெளிவந்த இந்தப் படம் இசையாலும், அற்புதமான நடிப்பாலும், அருமையான திரைக்கதையாலும், இந்தியாவையே புரட்டிப் போட்டது என்றால் அது மிகையல்ல. 'ஆராதனா' படத்தின் பாடல்கள் கற்பனைக்கும் எட்டா புகழ் பெற்றவை. ராஜேஷ்கன்னா, ஷர்மிளா தாகூர் ஜோடியைப் பற்றி எப்படி சொல்வது? அத்துணைப் பொருத்தம். இந்த ஷர்மிளா தாகூர் யார் தெரியுமா? முன்னாள் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர் பட்டோடி நவாப்  அவர்களின் மனைவி. இப்போது இந்தித் திரைப்பட உலகில் டாப் ஸ்டாராக இருக்கும் சைப் அலிகான் இவர்களின் புதல்வர் ஆவார்.

'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  Aradhana%2Bsongs%2Bdownload

சரி! 'ஆராதனா' பாடலுக்கு வருவோம்.

அழகான பச்சைப் பசேலென்ற மலைப் பிரதேசத்தில் நண்பனுடன் ஜீப்பில் பயணித்தபடி ராஜேஷ்கண்ணா பவனி வர, அருகில் அழகு தேவதையாய் ஷர்மிளா தாகூர் ரயிலில் பயணித்து வர, ரயிலுக்கு அருகிலேயே ஜீப்பில் அமர்ந்தபடி ராஜேஷ்கண்ணா ஷர்மிளா தாகூரை  வர்ணித்தபடி தன் காதலைப் பாடல் வடிவில் பாடி வர, ஜீப்  ஒட்டும் நண்பன் நண்பனின் காதல் பாடலுக்குக்கு ஏற்றவாறு மவுத் ஆர்கன் மூலம் நயமாக இசை தொடுக்க, ராஜேஷ்கண்ணா பாடும் பாடலையும், அவரின் குறும்புகளையும் ஷர்மிளா தாகூர் வெகு அழகான குறும்பும், காதலும் கொப்பளிக்கும் முக பாவங்களுடன் எதிர் கொள்ளும் அழகு ஒன்றிற்காகவே இந்தப் பாடலை ஆயிரம் முறை பார்க்கலாம்.

புகழ் பெற்ற இசை அமைப்பாளர் எஸ்.டி.பர்மன் இசை அமைப்பில், கிஷோர் குமார் அவர்களின் கிறங்க வைக்கும் குரலில் நம் நாடி நரம்புகளையெல்லாம் குளிர்விக்கும் பாடல். இந்தப் பாடலைக் காணும் போது ஏதோ நாமே ஒரு மலைப் பிரதேசத்திற்கு சென்று வந்தது போல ஒரு உணர்வு. உடல், உள்ளம் அனைத்தும் குளிர்ந்து நம் மனம் லேசாகி சந்தோஷக் கடலில் மிதப்பது போன்ற உணர்வை இந்தப் பாடல் தருவதனால்தான் இவ்வளவு பெரிய வெற்றி அடைந்ததோ! இன்று வரை அல்ல. உலகம் உள்ள மட்டும் இந்தப் பாடலின் புகழ் அழியாது.

நீங்களும் பார்த்து இன்புறுங்களேன்.



vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Thu Jan 23, 2014 4:55 pm

நன்றி சின்னக் கண்ணன் சார்! அனைத்து சிறப்பான பாடல்களையும் நாம் கண்டிப்பாக கண்டு மகிழலாம்.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jan 23, 2014 5:38 pm

'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  3838410834 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jan 23, 2014 5:38 pm

'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  3838410834 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Fri Jan 24, 2014 9:31 am

ஒரு பாடல் எப்படி இருக்க வேண்டும், ஒரு பாடகி எப்படிப் பாட வேண்டும், ஒரு இசையமைப்பாளர் எப்படி தன் திறமையால் உலகையே கட்டிப் போட வேண்டும் என்பதற்கு உலகிலேயே தலை சிறந்த பாடலாக இந்தப் பாடலைத்தான் நான் தேர்ந்தெடுப்பேன். உலகில் நான் கேட்ட பலமொழிப் பாடல்களில் இந்தப் பாடல் ஒன்றைத்தான் நான் எனக்குப் பிடித்த முதல் பாடலாகக் கருதுகிறேன். என் நாடி நரம்பு, ஊன், உயிரெல்லாம் கலந்து என் இரத்த அணுக்களோடு கலந்து போன பாடல். இரவும், பகலும் இந்த பாடல் என்னை பாடுபடுத்தி வருவதைப் போல வேறு ஒரு பாடல் என்னை தொந்தரவு செய்ததில்லை.

இசைக்குயில் லதாவின் குரல் வளத்தை  சொல்வதா...

பாடலில் அவர் கொடுக்கும் ஏற்ற இறக்கங்களை சொல்வதா...

நம் உணர்வுகளை நம் எண்ணங்கள் யாவையும் மறக்கடித்து நம் கவனம் முழுதும் இப்பாடலில் செல்ல காரணமாய் இருந்த இசை அமைப்பாளர் சலீல் சௌத்ரியின் இசை அமைப்பை சொல்வதா...

அமைதியான சூழ்நிலையில் அழகு தேவதையாக சாதனா அமைதியாக புன்னகைத்தபடியே இப்பாடலுக்கு நடிப்பதை சொல்வதா...

இந்தப் பாடலைத் தவிர உலகில் வேறு இன்பம் எதுவும் இல்லை (நடிகர் திலகத்தை தவிர) என்பது போல அவ்வளவு அழகாக இயக்கிய புகழ் பெற்ற இயக்குனர் பிமல் ராய் அவர்களின் திறமையைப் புகழ்வதா... (சிறந்த இயக்குனருக்கான பிலிம் பேர் அவார்ட்)

இந்தப் பாடல் நம்மை படுத்தும் பாட்டை நாம் வார்த்தைகளால் வர்ணித்து விட முடியுமா?!

1960-இல் வெளி வந்த 'பராக்' (parakh) என்ற இந்திப் படத்தில் வரும் பாடல்தான் இது. இப்பாடலைப் பற்றி லதா ஒரு முறை பேட்டியில் சொன்னது.

"பிமல் ராய் இப்படத்தை முதலில் பாடல்கள் இல்லாமல்தான் படமாக்க விரும்பினார். சலீல் சௌத்ரியின் திரைக்கதைக்கு ஷைலேந்திரா வசனங்கள் எழுதினார். ஷைலேந்திரா வசனம் எழுதிய ஒரே படம்) திரைக்கதையும், வசனங்களும் மிக நன்றாக அமைந்தது. அதே சமயம் இந்த திரைக்கதைக்கு பாடல்கள் அவசியம் என்பதும் புரிந்தது. சலீலும், ஷைலேந்திராவும் பிமல் ராயிடம் பேசி இப்படத்திற்கு பாடல்கள் அவசியம் என்று அவர் மனத்தைக் கரைத்தார்கள். பிமல் ராயும் அவர்கள் விருப்பத்திற்கு ஒத்துக் கொண்டார். ஆனால் நேரம் மிகக் குறைவு. ஒரே நாளில் ஷைலேந்திரா முன்னமேயே எழுதி வைத்திருந்த பாடல்கள் இப்படத்திற்காக உபயோகப் படுத்தப் பட்டன. முதலில் வங்காளத்தில் இப்பாடலும், பின் இந்தியிலும் பாடி பதிவு செய்யப் பட்டது. ஒரிஜினல் வங்காளத்தை விடவும் இந்தி வார்த்தைகளை மிக அழகாகக் கோர்த்து காலத்தால் அழிக்க முடியாத பாடலை எழுதித் தந்தார் ஷைலேந்திரா"

சிறந்த இசையமைப்பிற்காக பிலிம் பேர் அவார்ட் (சலீல் சௌத்ரி) போட்டி, சிறந்த படத்திற்கான பிலிம் பேர் அவார்ட் போட்டி என்று பல சிறப்புகளைக் கொண்ட படம்  'பராக்'.

இப்போது உலகையே மறந்து நம்மையும் மெய் மறக்கச் செய்யும் இப்பாடலைப் பார்த்து கேட்டு மகிழுங்கள். நிச்சயமாகச் சொல்கிறேன். இப்பாடலை ஒரு முறை பார்த்து கேட்டு விட்டீர்களானால் நிச்சயம் மறுமுறை உங்களால் கேட்காமல் இருக்க இயலாது. இசைக்கு இருக்கும் சக்தியை நீங்கள் முழுதுமாக இப்பாடலில் உணர முடியும்.

என் வாழ்நாளிலேயே என் மனங்கவர்ந்த முத்தான முதல் பாடல். முதலில் என் விருப்பமாக. பிறகு உங்கள் விருப்பமாக.



Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக