உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» நமக்கு வாழ்க்கை - கவிதைby ayyasamy ram Yesterday at 5:28 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:56 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» டெலிவிஷன் விருந்து
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:51 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:22 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:19 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm
» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm
» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:13 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:12 pm
» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:06 pm
» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm
» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm
» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm
» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:01 pm
» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm
» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm
» மூவர்ணக் கொடியைக் காட்டுவதற்கான விதிகள் என்ன?
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:38 pm
» தமிழக அரசின் சட்ட திருத்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:31 pm
» பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:26 pm
» சீன உளவுக் கப்பல் ஆகஸ்ட் 16 அன்று இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளது - இந்தியா ஏன் உன்னிப்பாக கவனித்து வருகிறது
by sncivil57 Sun Aug 14, 2022 2:07 pm
» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:52 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 14/08/2022
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:50 pm
» காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்துத் தாருங்கள்!
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:48 pm
» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:56 pm
» தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் 'நெய்தல் உப்பு!'
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:52 pm
» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:47 pm
» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 6:07 pm
» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 3:18 pm
» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Sat Aug 13, 2022 3:17 pm
» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:16 pm
» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:14 pm
» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 9:00 am
» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:40 am
» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:37 am
» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:33 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:46 pm
» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:44 pm
» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Fri Aug 12, 2022 1:52 pm
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
heezulia |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
கண்ணன் |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !!
+4
பார்த்திபன்
பாலாஜி
Muthumohamed
krishnaamma
8 posters
Page 1 of 2 • 1, 2 

பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !!
இது என் 20500வது பதிவு ! பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !!

எல்லோரும் பிளாஸ்டிக்கை 'எமன்' என்று சொல்லும்போது எனக்கு கொஞ்சம் கஷ்டமாய் இருக்கும். இன்று ஒரு பதிவு இங்கேயே பார்த்தேன் இந்த பிளாஸ்டிக்கை கண்டுபிடிக்க எவ்வளவு வருஷம் தலையால நின்னு பகிரதப் பிரயத்தனம் பட்டு கண்டு பிடித்தார்கள் என்று. அப்படி கண்டுபிடித்ததை இப்படி திட்டுவாளோ? என்று நான் நினைத்ததுண்டு. கொஞ்சம் நாம் யோசித்துப்பர்போம் ஒருநாள் கலை முதல் இரவு வரை நாம் எவ்வளவு ரூபங்களில் இந்த பிளாஸ்டிக்கை உபயோகிக்கிறோம் என்று. பிறகு யோசிக்கலாம் அதிலிருந்து நாம் விடு பட முடியுமா என்று
சரியா நண்பர்களே ! HERE WE GO !!
கார்த்தால எழுந்ததும் முதலில் பல் தேய்ப்பதிலிருந்து பார்ப்போம், தேய்பிங்க தானே? முன்பெல்லாம் கோபால் பல்பொடி அல்லது நஞ்சன் கூடு ( ரொம்ப காரமாய் இருக்கும் பல் தேய்த்து முடிப்பதக்கும் கண்ணில் தண்ணீர் வந்துடும்
) பேப்பர் கவர் இல் வரும் அல்லது சின்ன மெடல் டப்பாக்களில் வரும். அதில் ஏதாவது ஒன்றை போட்டு, கையால் தேய்ப்போம். இல்லாவிட்டால் உப்பு துளி எலுமிச்சை சாறு விட்டு தேய்ப்போம். பிறகு பினாகா போன்ற பற்பொடிகள் மெடல் டப்பாக்களில் வரும், அதை போட்டு கையால் தேய்ப்போம். ஆனால்......இப்போ வித விதமான பிளாஸ்டிக் brushகள், பேஸ்ட் வருவதும் பிளாஸ்டிக் tubeகளில். Brush கூட கையால் தேய்க்க வேண்டாம், அதிலேயே ஒரு சின்ன மோட்டார் இருக்கு நாம் 'வெறுமன' brush ஐ பிடிச்சிண்டால் போறும். அதுவே தேய்த்துவிடும்.
தொடரும்....................

எல்லோரும் பிளாஸ்டிக்கை 'எமன்' என்று சொல்லும்போது எனக்கு கொஞ்சம் கஷ்டமாய் இருக்கும். இன்று ஒரு பதிவு இங்கேயே பார்த்தேன் இந்த பிளாஸ்டிக்கை கண்டுபிடிக்க எவ்வளவு வருஷம் தலையால நின்னு பகிரதப் பிரயத்தனம் பட்டு கண்டு பிடித்தார்கள் என்று. அப்படி கண்டுபிடித்ததை இப்படி திட்டுவாளோ? என்று நான் நினைத்ததுண்டு. கொஞ்சம் நாம் யோசித்துப்பர்போம் ஒருநாள் கலை முதல் இரவு வரை நாம் எவ்வளவு ரூபங்களில் இந்த பிளாஸ்டிக்கை உபயோகிக்கிறோம் என்று. பிறகு யோசிக்கலாம் அதிலிருந்து நாம் விடு பட முடியுமா என்று

கார்த்தால எழுந்ததும் முதலில் பல் தேய்ப்பதிலிருந்து பார்ப்போம், தேய்பிங்க தானே? முன்பெல்லாம் கோபால் பல்பொடி அல்லது நஞ்சன் கூடு ( ரொம்ப காரமாய் இருக்கும் பல் தேய்த்து முடிப்பதக்கும் கண்ணில் தண்ணீர் வந்துடும்

தொடரும்....................
Last edited by krishnaamma on Sun May 17, 2015 10:19 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !!

ஆச்சு பல் தேய்த்த பிறகு உபயோகிக்கும் tongue cleaner , சோப்பு பாக்ஸ், இதெல்லாம் வைக்க பிளாஸ்டிக் stand .
bathroom லிருந்து வெளியே வந்து கால் துடைக்கும் மேட் இன் கிழே இருப்பதும் பிளாஸ்டிக் முனைகள்தான். 'Mat’ வழுக்காமல் அவை தான் தடுக்கின்றன.
.jpg)
வாசலில் பால் எடுக்க வந்தால்............ இப்போ வாசலில் கோலம் போடுவது குறைந்து பிளாஸ்டிக் ஸ்டிக்கர் ஓட்டும் காலம் எனவே அதுவும் ...



குளிக்க பிளாஸ்டிக் பக்கெட். முன்பெல்லாம் பித்தளை .பிறகு எவர்சில்வரில் பக்கெட் இருக்கும். இப்போ பிளாஸ்டிக். அத்துடன் இருக்கும் mug பிளாஸ்டிக், முதுகு தேய்க்க brush plastic, பாத்ரூமை அலம்பும் துடைப்பம் பிளாஸ்டிக் - bathroom மட்டும் இல்லை இப்போ வீடு பெருக்கவும், வாசல் பெருக்கவும் பிளாஸ்டிக் துடைப்பம் வந்தாச்சு - தண்ணீர் தள்ளிவிடும் brush பிளாஸ்டிக். டவல் போடும் stand பிளாஸ்டிக்

தொடரும்....................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !!

முகம் பார்க்கும் கண்ணாடி இன் frame, பவுடர் டப்பா, சீப்பு என அங்கு பிளாஸ்டிக் இன் ஆதிக்கம் அதிகம்.
அடுத்து டிபன் செய்ய non - stick வேண்டும்......அதை அலம்ப???????? அவர்களே தரும் 'பிளாஸ்டிக்' ஆல் செய்த தேய்ப்பான். டிபன் சாப்பிட பிளாஸ்டிக் plate கள். தண்ணீர் குடிக்க பிளாஸ்டிக் டம்பளர்கள், பாட்டில்கள், ஜக்குகள். முன்பு நாம் வெள்ளி பாத்திரங்கள் உபயோகித்த காலம் மலையேறி அந்த இடத்தை எவர்சில்வர் பிடித்தது..... இப்போது அந்த இடத்தை பிளாஸ்டிக் பிடித்திருக்கு.
மதிய லுஞ்சுக்கு hot pack ............அதுவும் பிளாஸ்டிக். மைக்ரோ வேவில் வைக்கும்படியான பிளாஸ்டிக். இப்போ வெல்லாம் 'டப்பர் வேர்' களுக்கு மவுசு ஜாஸ்தி. எதப்பர் டப்பர்வேர் தான். முன்பெல்லாம் பாட்டில்களில் தான் எல்லா சாமான்களும் கொட்டிவைப்போம். பருப்பு மற்றும் சர்க்கரை காபிபொடி கொட்டிவைக்க பெரிய பெரிய எவசில்வர் டப்பாக்கள், அரிசி கொட்ட வத்தல்கள் போட்டு வைக்க 'பிரிட்டானியா பிஸ்கட் டின்கள்' - 10 படி டின் என்று பாட்டி சொல்வா - அதை வாங்குவோம். இப்போ அதுவும் டப்பர்வேர். குடிக்கும் தண்ணி பாட்டில் முதல்..............குழந்தைகளுக்கு சிப்பர்....எல்லாவிதமான டப்பாக்கள், டிபன்பாக்ஸ்.................என சகலமும் அதேதான்.
.jpg)
தொடரும்....................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !!

ஆபீஸ் அல்லது வெளியே எங்கு காபி குடித்தாலும் குட்டி பிளாஸ்டிக் கப் கள் தான். முன்பாவது பேப்பர் கப் கள் இருந்தது. இப்போ இதுதான்

Lunch வெளியே சாப்பிடணுமா கையேந்தி பவனில் இப்போவெல்லாம் வாழை இலை துண்டுகள் வைத்து பரிமாறுவது இல்லை, அதற்கு பதிலாக பிளாஸ்டிக் ஷீட் வைத்து தருகிறார்கள். pack செய்து விட்டுக்கு கொண்டு போகணுமா, ஹோட்டல்களில் பார்சல் வாங்கும்போது எவ்வளவு அழகாக பிளாஸ்டிக் கவர்களில் கட்டி தராங்க.
இதெல்லாம் விடுங்கோ, எந்த பெரிய கடை இல் போய் பார்த்தாலும் எல்லா மளிகை பொருட்களும் பிளாஸ்டிக் கவர்களில் தான் pack செய்து அழகாக அடுக்கி வெச்சிருக்காங்க. எத்தனை எத்தனை snack items , பிளாஸ்டிக் கவர்களில். எவ்வளவு பாக்குகள், ஷாம்புகள், மஞ்சள், குங்குமம், ஊறுகாய் போன்றவை பிளாஸ்டிக் கவர் களில் வருகிறது. பான் வாங்கி போட்டுக்கொண்டால் கூட வீட்டுக்கு வேண்டும் என்றால் ஒரு பிளாஸ்டிக் பேபரில் தான் கட்டி தராங்க. ஹைதராபாதில் ஆவக்காய் வாங்கி இருக்கிங்களா? அவர்களும் நல்லா சூப்பர் ஆக எண்ணெய் வழியாமல் பிளாஸ்டிக் கவர்களில் தான் போட்டு தருவாங்க

தொடரும்....................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !!
.jpg)
நான் பார்த்திருக்கேன் முன்பெல்லாம் முட்டைகள் எடுத்து செல்வதை பார்த்தாலே பயமாய் இருக்கும் எங்கே நம்மை கடந்து போகும்போது நம் மேல போட்டுடுவாங்களோ என்று, ஆனால் இப்போ எத்தனை அழகாக பிளாஸ்டிக் tray களில் அடுக்கி கொண்டு போகிறார்கள்


.jpg)
//மானியமாக கிடைக்கும் பொருள்கள்: 2 கிலோ தேங்காய் நார் கழிவுடன் கூடிய 20 பாலிதீன் பைகள், 9 வகையான காய்கறிகளின் விதைகள், 6 வகையான உரங்கள், மண் கரண்டி, மண் அள்ளும் கருவி, நீர்த் தெளிப்பான், பிளாஸ்டிக் பூவாளி, குழித்தட்டுகள் மற்றும் பாலிதீன் விரிப்புகள் உள்ளட்டவை மாடித் தோட்டம் அமைக்க தேவையான பொருள்களாகும்.//
"நீங்களே செய்து பாருங்கள்' வீட்டின் மாடியில் காய்கறித் தோட்டம்" என்று நம் அரசு சொல்லி மானியமாக வழங்கும் பொருட்கள் இவை , இதிலும் பிளாஸ்டிக்கின் ஆதிக்கம் தானே அதிகம்?
.jpg)

தொடரும்....................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !!
.jpg)
fridge இல் freezer இல் store செய்ய பயன்படும் 'zip llocker ' மற்றும் 'food storage covers எல்லாம் பிளாஸ்டிக் கவர்கள். உணவுபொருட்களை 'பிரஷ்' ஆகா வைப்பதற்கும் இந்த பிளாஸ்டிக் ஷீட்ஸ் பயன் படுகிறது. 'cling packing '
.jpg)
online இல் ஆர்டர் செய்தால் விட்டுக்கு கொண்டு கொடுக்கும்போது அவர்கள் உபயோகிப்பது பெரிய பெரிய பிளாஸ்டிக் tab கள் தான். இப்போ ஆவின் காரர்கள் கூட அதுபோல பிளாஸ்டிக் டப் தான் உபயோகிக்கிறார்கள்.
.jpg)
விட்டு உபயோகப்போருட்களை எடுங்கோ, ஸ்டூல் முதல் உட்காரும் நாற்காலி , tea table , dining table , கட்டில் என பலதும் பிளாஸ்டிக். பல் குத்துக் குச்சிகள், உட்காரும் மற்றும் படுக்கும் பாய்கள், கார் ஸ்கூட்டர் முதலியவைகளை மூடி வைக்கும் ஷீட்கள், துணி உலர்த்த பயன்படுத்தும் கயிறு, துணிகளை பிடித்துக்கொள்ள போடும் கிளிப்புகள், முக்கு கண்ணாடி பெட்டிகள், பூந்தொட்டிகள் எல்லாமே பிளாஸ்டிக் ஆல் ஆனவை.
தொடரும்....................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !!
.jpg)
குழந்தைகள் உபயோகிப்பது என்று பார்த்தால் எவ்வளவு விளையாட்டுப் பொருட்கள் பிளாஸ்டிக்கில். எழுத பிளாஸ்டிக் பேனா மட்டும் அல்ல, மரத்தை வெட்டக் கூடாது என்று பென்சில்களை கூட பிளாஸ்டிக் இல் செய்கிறார்கள். எவ்வளவு ஸ்கெட்ச் பென்கள், எத்தனை விளையாட்டு பொருட்கள்? குழந்தைகள் பீடிங் பாட்டில் முதல் டைபர் வரை எல்லாமே பிளாஸ்டிக் மயம்.
.jpg)
பெண் குழந்தைகளுக்கு எத்தனை எத்தனை வளையல்கள், காதணிகள், மருதாணியை கூட பிளாஸ்டிக் கோன் களில் அடைத்து விற்கிரர்களே? மாலைகள் கோர்க்க பிளாஸ்டிக் இழைகள் , அலங்காரமாய் வீட்டில் வைக்க பிளாஸ்டிக் பூக்கள், சரங்கள், மற்றும் செடிகள்.

எல்லாவற்றுக்கும் மேலாக ஆஸ்திரேலியாவில் அவர்கள் டாலரையே பிளாஸ்டிக்கில் அடித்திருக்காங்க

தொடரும்....................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !!
நீங்க சொல்லலாம் மேலே சொன்னவை எல்லாமே தேவை இல்லாத பிளாஸ்டிக் இல்லை, சிலது recycle செய்யலாம் என்று. ஆனால் அப்படி செய்து செய்து தான் கடைசி இல் வருவதை என்ன செய்வது என்று தெரியாததால் கஷ்டப்படுகிறோம்.
இதற்கு என்ன செய்யாலாம்?
கண்டுபிடிக்க எவ்வளவு கஷ்டப்பட்டார்களோ அது போல இந்த கடைசி கழிவை என்ன செய்யலாம் என்றும் கஷ்டப்பட்டுத்தான் கண்டுபிடிக்கணும். ஒரு விஞ்ஞானி இந்த கழிவில் ரோடுகள் போடலாம் என்று கண்டுபிடித்து போட்டும் காட்டினார். அவை 20 வருடங்கள் நிலைத்து நிற்கும் என்றார். அங்கு வந்தது வினை, நம் அரசியல் வாதிகள் பயந்து விட்டார்கள் 20 வருடங்கள் ஒரு ரோடு இருந்தால்...............அவர்கள் பிழைப்பது எப்படி ? என்று அந்த திட்டத்தை குப்பை இல் போட்டுவிட்டார்கள்.
நம் தமிழ் நாடு என்று மட்டுமே எடுத்துக்கொண்டால், முழு தமிழ்நாடும் பிளாஸ்டிக் ரோடு போட எவ்வளவு எவ்வளவு பிளாஸ்டிக் கழிவுகள் வேண்டி இருக்கும், எங்கிருந்தாவது ஆரம்பிக்க வேண்டியதுதான். அந்த விஞ்ஞானி சொன்னது போல 20 வருடங்கள் ஒரு ரோடு இருக்குமானால், முழு தமிழ் நாடும் போட்டு முடிக்க 20 வருடங்கள் ஆனாலும் பரவா இல்லையே, ஒரு ரவுண்டு எல்லாம் போட்டு முடித்ததும் முதல் போட்ட ரோடை மீண்டும் போட ஆரம்பிக்கலாமே? என்ன பண்ணுவது என்று புலம்புவதைவிட்டு விட்டு இப்படி யோசிப்பார்களா?
அல்லது, குளிர் தங்குவதற்காக பெரிய பெரிய கான்கரிட் கற்களின் உள்ளே 'தெர்மோகோல்' வைப்பது போல இந்த கழிவு பிளாஸ்டிக்கை வைக்கலாமா என்று ஆராயணும். நீச்சல் குளங்களின் உள்ளே தரக்கூடிய கற்களுக்கு லைனிங் போல இந்த வகை பிளாஸ்டிக் உபயோகப்படுமா என்று பார்க்கலாம். எவ்வளவோ கண்டுபிடிக்கிறார்கள் நம் விஞ்ஞானிகள், இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு கண்டுபிடிக்கலாமே? அவர்களின் கண்டுபிடிப்பு உலகுக்கே அவர்களை தூக்கிக்காட்டுமே? நோபல் கூட கிடைக்கலாமே? செய்வார்களா?

இதற்கு என்ன செய்யாலாம்?
கண்டுபிடிக்க எவ்வளவு கஷ்டப்பட்டார்களோ அது போல இந்த கடைசி கழிவை என்ன செய்யலாம் என்றும் கஷ்டப்பட்டுத்தான் கண்டுபிடிக்கணும். ஒரு விஞ்ஞானி இந்த கழிவில் ரோடுகள் போடலாம் என்று கண்டுபிடித்து போட்டும் காட்டினார். அவை 20 வருடங்கள் நிலைத்து நிற்கும் என்றார். அங்கு வந்தது வினை, நம் அரசியல் வாதிகள் பயந்து விட்டார்கள் 20 வருடங்கள் ஒரு ரோடு இருந்தால்...............அவர்கள் பிழைப்பது எப்படி ? என்று அந்த திட்டத்தை குப்பை இல் போட்டுவிட்டார்கள்.
நம் தமிழ் நாடு என்று மட்டுமே எடுத்துக்கொண்டால், முழு தமிழ்நாடும் பிளாஸ்டிக் ரோடு போட எவ்வளவு எவ்வளவு பிளாஸ்டிக் கழிவுகள் வேண்டி இருக்கும், எங்கிருந்தாவது ஆரம்பிக்க வேண்டியதுதான். அந்த விஞ்ஞானி சொன்னது போல 20 வருடங்கள் ஒரு ரோடு இருக்குமானால், முழு தமிழ் நாடும் போட்டு முடிக்க 20 வருடங்கள் ஆனாலும் பரவா இல்லையே, ஒரு ரவுண்டு எல்லாம் போட்டு முடித்ததும் முதல் போட்ட ரோடை மீண்டும் போட ஆரம்பிக்கலாமே? என்ன பண்ணுவது என்று புலம்புவதைவிட்டு விட்டு இப்படி யோசிப்பார்களா?
அல்லது, குளிர் தங்குவதற்காக பெரிய பெரிய கான்கரிட் கற்களின் உள்ளே 'தெர்மோகோல்' வைப்பது போல இந்த கழிவு பிளாஸ்டிக்கை வைக்கலாமா என்று ஆராயணும். நீச்சல் குளங்களின் உள்ளே தரக்கூடிய கற்களுக்கு லைனிங் போல இந்த வகை பிளாஸ்டிக் உபயோகப்படுமா என்று பார்க்கலாம். எவ்வளவோ கண்டுபிடிக்கிறார்கள் நம் விஞ்ஞானிகள், இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு கண்டுபிடிக்கலாமே? அவர்களின் கண்டுபிடிப்பு உலகுக்கே அவர்களை தூக்கிக்காட்டுமே? நோபல் கூட கிடைக்கலாமே? செய்வார்களா?




krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !!
மிக்க பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி அம்மா
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4354
Re: பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !!
Muthumohamed wrote:மிக்க பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி அம்மா
நன்றி முத்து

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !!
அவை 20 வருடங்கள் நிலைத்து நிற்கும் என்றார். அங்கு வந்தது வினை, நம் அரசியல் வாதிகள் பயந்து விட்டார்கள் 20 வருடங்கள் ஒரு ரோடு இருந்தால்...............அவர்கள் பிழைப்பது எப்படி ? என்று அந்த திட்டத்தை குப்பை இல் போட்டுவிட்டார்கள். wrote:
ஆமாம் , இல்லாத ரோட்டுக்கு ரோடு போட்டதாக கணக்கு காட்டி எப்படி சம்பாதிப்பது
Re: பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !!
நல்லதொரு அலசல். ஆனால் மறுசுழற்சிக்கு உதவாத நெகிழிகளைப் புறந்தள்ளுவதே சிறந்தது. ஏனெனில் அத்தகைய நெகிழிக் கழிவுகள் மண்ணை மலடாக்குவதொடு பல வகைகளிலும் சுற்றுச் சூழலை மாசுபடுத்துகிறது.
Re: பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !!
பயனுள்ள விழிப்பணர்வு ஏற்படுத்தும் பகிர்வு...
-
மதுக்கடை பார்களில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்
டம்ளர்கள் எக்கச்சக்கமாய் விற்கப்படுகின்றன.
சராசரியாக ஒரு மதுக்கடை பாரில் இருந்து தினமும் 1,200 பிளாஸ்டிக்
டம்ளர்; 2,000 தண்ணீர் காலி பாக்கெட் குப்பைக்கு வருகின்றன.
-
சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டால் நாட்டுக்கு
நல்லது...

-
மதுக்கடை பார்களில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்
டம்ளர்கள் எக்கச்சக்கமாய் விற்கப்படுகின்றன.
சராசரியாக ஒரு மதுக்கடை பாரில் இருந்து தினமும் 1,200 பிளாஸ்டிக்
டம்ளர்; 2,000 தண்ணீர் காலி பாக்கெட் குப்பைக்கு வருகின்றன.
-
சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டால் நாட்டுக்கு
நல்லது...
Re: பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !!
பாலாஜி wrote:அவை 20 வருடங்கள் நிலைத்து நிற்கும் என்றார். அங்கு வந்தது வினை, நம் அரசியல் வாதிகள் பயந்து விட்டார்கள் 20 வருடங்கள் ஒரு ரோடு இருந்தால்...............அவர்கள் பிழைப்பது எப்படி ? என்று அந்த திட்டத்தை குப்பை இல் போட்டுவிட்டார்கள். wrote:
ஆமாம் , இல்லாத ரோட்டுக்கு ரோடு போட்டதாக கணக்கு காட்டி எப்படி சம்பாதிப்பது
ம...அதுதான் பாலாஜி

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !!
பார்த்திபன் wrote:நல்லதொரு அலசல். ஆனால் மறுசுழற்சிக்கு உதவாத நெகிழிகளைப் புறந்தள்ளுவதே சிறந்தது. ஏனெனில் அத்தகைய நெகிழிக் கழிவுகள் மண்ணை மலடாக்குவதொடு பல வகைகளிலும் சுற்றுச் சூழலை மாசுபடுத்துகிறது.
அந்த 'புறம் தள்ளு' வது தான் எப்படி என்று கேள்வி பார்த்திபன்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Page 1 of 2 • 1, 2 

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|