புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாமரர் தேவாரம் - Page 4 Poll_c10பாமரர் தேவாரம் - Page 4 Poll_m10பாமரர் தேவாரம் - Page 4 Poll_c10 
64 Posts - 42%
ayyasamy ram
பாமரர் தேவாரம் - Page 4 Poll_c10பாமரர் தேவாரம் - Page 4 Poll_m10பாமரர் தேவாரம் - Page 4 Poll_c10 
60 Posts - 40%
T.N.Balasubramanian
பாமரர் தேவாரம் - Page 4 Poll_c10பாமரர் தேவாரம் - Page 4 Poll_m10பாமரர் தேவாரம் - Page 4 Poll_c10 
7 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாமரர் தேவாரம் - Page 4 Poll_c10பாமரர் தேவாரம் - Page 4 Poll_m10பாமரர் தேவாரம் - Page 4 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பாமரர் தேவாரம் - Page 4 Poll_c10பாமரர் தேவாரம் - Page 4 Poll_m10பாமரர் தேவாரம் - Page 4 Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
பாமரர் தேவாரம் - Page 4 Poll_c10பாமரர் தேவாரம் - Page 4 Poll_m10பாமரர் தேவாரம் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பாமரர் தேவாரம் - Page 4 Poll_c10பாமரர் தேவாரம் - Page 4 Poll_m10பாமரர் தேவாரம் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
prajai
பாமரர் தேவாரம் - Page 4 Poll_c10பாமரர் தேவாரம் - Page 4 Poll_m10பாமரர் தேவாரம் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
பாமரர் தேவாரம் - Page 4 Poll_c10பாமரர் தேவாரம் - Page 4 Poll_m10பாமரர் தேவாரம் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பாமரர் தேவாரம் - Page 4 Poll_c10பாமரர் தேவாரம் - Page 4 Poll_m10பாமரர் தேவாரம் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாமரர் தேவாரம் - Page 4 Poll_c10பாமரர் தேவாரம் - Page 4 Poll_m10பாமரர் தேவாரம் - Page 4 Poll_c10 
426 Posts - 48%
heezulia
பாமரர் தேவாரம் - Page 4 Poll_c10பாமரர் தேவாரம் - Page 4 Poll_m10பாமரர் தேவாரம் - Page 4 Poll_c10 
300 Posts - 34%
Dr.S.Soundarapandian
பாமரர் தேவாரம் - Page 4 Poll_c10பாமரர் தேவாரம் - Page 4 Poll_m10பாமரர் தேவாரம் - Page 4 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
பாமரர் தேவாரம் - Page 4 Poll_c10பாமரர் தேவாரம் - Page 4 Poll_m10பாமரர் தேவாரம் - Page 4 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
பாமரர் தேவாரம் - Page 4 Poll_c10பாமரர் தேவாரம் - Page 4 Poll_m10பாமரர் தேவாரம் - Page 4 Poll_c10 
29 Posts - 3%
prajai
பாமரர் தேவாரம் - Page 4 Poll_c10பாமரர் தேவாரம் - Page 4 Poll_m10பாமரர் தேவாரம் - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பாமரர் தேவாரம் - Page 4 Poll_c10பாமரர் தேவாரம் - Page 4 Poll_m10பாமரர் தேவாரம் - Page 4 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பாமரர் தேவாரம் - Page 4 Poll_c10பாமரர் தேவாரம் - Page 4 Poll_m10பாமரர் தேவாரம் - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பாமரர் தேவாரம் - Page 4 Poll_c10பாமரர் தேவாரம் - Page 4 Poll_m10பாமரர் தேவாரம் - Page 4 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
பாமரர் தேவாரம் - Page 4 Poll_c10பாமரர் தேவாரம் - Page 4 Poll_m10பாமரர் தேவாரம் - Page 4 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாமரர் தேவாரம்


   
   

Page 4 of 20 Previous  1, 2, 3, 4, 5 ... 12 ... 20  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Jan 07, 2014 9:34 am

First topic message reminder :

பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை
(கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்)

(கோவில்: Chottruth Thurai
பதிகம்: thiru aDangkal)

அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம்
முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே
அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர்
இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1

[அன்னதானச் செய்தி: Aadalvallan

மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை
மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக்
காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான்
ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ... 2

[முழுதோன்=சிவன், ’முன்னோன் காண்க முழுதோன் காண்க’, திருவாசகம் 3.30]

கலையும் மழுவும் கழுவும் அழலும் கரம்தாங்கத்
தலையில் ஆறும் கலையும் தாங்கும் சடையானைத்
தொலையாச் செல்வ நாதர் சோற்றுத் துறைகாணில்
தொலையும் பசியும் பிணியும் பிறப்பும் தொடராதே. ... 3

[கழு=சூலம்; கலை=மான், பிறைச் சந்திரன்;
தொலையாச் செல்வநாதர்=கோவில் மூலவர் பெயர்]

ஏழூர் தலத்தில் மூன்றா வதென இதுவாக
வேழம் உரித்தான் சோற்றுத் துறையான் விடையோனும்
ஏழை யூரின் பஞ்சம் தீர்க்க எழுந்தேதான்
தாழாச் சோறார் கலமொன் றினையே அளித்தானே. ... 4

[ஏழூர் தலம் = சப்த ஸ்தான ஸ்தலங்கள் முறையே: திருவையாறு, திருப்பழனம்,
திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருமழபாடி]

புலிக்கால் முனிபெண் விடையார் மணமே புரிந்தாரே
நலிவோர் மணமும் நன்றே குதிர நடத்தாரோ?
கலையான் மறையான் சோற்றுத் துறையின் அருளாளன்
மலையாள் கூறன் மனமா ரவினை மறையாதோ? ... 5

[புலிக்கால் முனிபெண் = வியாக்ரபாதரின் மகள் சுயம்பிரகாசையை
நந்திதேவர் மணமுடித்த ஐதீகம் இந்தக் கோவிலில் ஓர் உற்சவமாகக்
கொண்டாடப் படுகிறது.]

அழலாய் எழுந்தே அயன்மால் காணா வடிவானான்
கழலின் விரலால் அரக்கன் அழுத்தி யருள்செய்தான்
உழலும் நெஞ்சம் அரனை சோற்றுத் துறைகாணில்
கழலும் வினையே காமன் அழித்தான் அருளாலே. ... 6

உடுக்கை யொலிக்கக் கூளிக ளாடச் சுடுகாட்டில்
நெடுவெண் ணுடலில் வெண்ணீ றணிந்தே அழலாடி
விடம்கொள் பாம்பும் கழுவோ டுமையும் இடமாடும்
நடனம் சோற்றுத் துறையில் கண்டால் நலிவேது? ... 7

கூற்றைக் காலால் உதைத்தே சிறுவன் உயிர்காத்தான்
காற்றின் கடுகும் கணையால் புரமூன் றழித்தானே
சோற்றுத் துறையூர்க் கோவில் மேவும் துடிகொண்டான்
ஊற்றாய் ஞானம் பெருகச் செய்வான் உயிர்காத்தே. ... 8

பார்த்தன் போற்றப் பாசு பதமும் அளித்தானைத்
தீர்த்தம் ஆடிக் கீர்த்தி பாடி மலராலே
ஆர்த்தே உள்ளம் உருகத் தொழுதே பதம்வீழ்ந்தால்
தூர்த்தே வினைகள் மாய்ப்பன் சோற்றுத் துறையானே. ... 9

ஓதும் வேதப் பொருளை உணரும் உளமின்றி
தீது மொழிகள் பேசித் திரிவார் சிறுசொல்லர்
ஆதி சோற்றுத் துறையான் மறையான் அருளாலே
ஏதும் பிறசொல் கேளார் நெறியிற் பிறழாரே. ... 10

ஆயுள் மேனி ஆன்ம நலமும் அறவாழ்வும்
தாயுள் ளம்போல் அன்பும் செயலும் சலியாதே
ஆயும் அறியும் மேன்மை உணரும் தகவெல்லாம்
பாயில் விழுமுன் பரமன் அருளப் பணிவோமே. ... 11

--ரமணி, 06-07/01/2014, கலி.23/09/5114

*****


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82735
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 30, 2014 10:53 am

கூத்தாடும் பிள்ளையார்..
-
வேடிக்கை கதையாக சொல்வது:
(நகைச்சுவைக்காக மட்டுமே)
-
மாவு விற்பவன் 'இன்று மழை பெய்யக் கூடாது'
அப்படி செய்து விட்டால், உனக்கு கொழுக்கட்டை
நிவேதனம் செய்வேன் என்று வேண்டிக் கொண்டான்
-
விவசாயியோ, இன்று மழை பெய்தால் கொழுக்கட்டை
படையல் உண்டு என்றானாம்...
-
பிள்ளையாருக்கு பரம திருப்தி...!
-
காய்ஞ்சாலும் கொழுக்கட்டை,  
(மழை)
பெய்தாலும் கொழுக்கட்டை உண்டு என்ற
சந்தோஷத்தில் ஆடினாராம்...!!
-

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri May 30, 2014 11:16 am

நல்ல கதை. ஆனால் பிள்ளையார் பெரிய ஆளாக்கும்!

பகலில் மாவு விறபவ்னுக்காக வெய்யில் காயவைத்து
இரவில் விவசாயிக்காக மழை பெய்யவைத்து
இருவரிடமும் கொழுக்கட்டை கொள்வாராம்!

ரமணி


ayyasamy ram wrote:கூத்தாடும் பிள்ளையார்..
-
வேடிக்கை கதையாக சொல்வது:
(நகைச்சுவைக்காக மட்டுமே)
-
மாவு விற்பவன் 'இன்று மழை பெய்யக் கூடாது'
அப்படி செய்து விட்டால், உனக்கு கொழுக்கட்டை
நிவேதனம் செய்வேன் என்று வேண்டிக் கொண்டான்
-
விவசாயியோ, இன்று மழை பெய்தால் கொழுக்கட்டை
படையல் உண்டு என்றானாம்...
-
பிள்ளையாருக்கு பரம திருப்தி...!
-
காய்ஞ்சாலும் கொழுக்கட்டை,  
(மழை)
பெய்தாலும் கொழுக்கட்டை உண்டு என்ற
சந்தோஷத்தில் ஆடினாராம்...!!
-
மேற்கோள் செய்த பதிவு: 1066630

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat May 31, 2014 8:34 am

மழவரின் பாடி யாயுறப் பேராம் மழபாடி
வழுத்திய மார்க்கண் டேயருக் காடல் மழுவாடி
அழலுறும் மேனிப் பற்றினை நீக்க மழபாடி
எழுலுற மேவி அருள்செயும் ஈசன் இடமாமே. ... 3

பொன்னுறு மேனிப் புலியதள் ஆடைப் பரஞ்சோதி
அன்னையைப் பக்கல் கொண்டருள் ஈசன் அழலாடி
மன்னுற நின்றே மன்பதை காக்கும் மழபாடி
இன்னல கற்றி இன்புறச் செய்யும் இறையாமே. ... 4



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Jun 03, 2014 6:58 am

இந்திரன் காளி இலக்குமி தேவர் திருமாலும்
சந்திரன் வீமன் அகத்தியர் செட்டி சவிதாவும் ... [செட்டி = முருகன்; சவிதா = சூரியன்]
வந்தனை செய்த திருத்தலம் இந்த மழபாடி
வந்துறும் பாவ வினையெலாம் போக வழுத்தோமோ? ... 5

இடமுறு அன்னை இருவுரு தாங்கும் எழிற்கோலம்
விடையவன் முன்னே இருவராய் நந்தித் திருமேனி
மடமகள் தம்மை மணங்கொளும் நந்தி மழபாடி
படைப்பவன் வேதம் நால்வகை நந்திப் படையாமே. ... 6 ... [படைப்பவன் = பிரம்மன்]



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Jun 09, 2014 7:05 am

அரிவரன் முன்னே அழலென நின்றான் அழலாடி ... [அரிவரன் = திருமால், பிரம்மன்]
எரியுணச் செய்தே முப்புரம் செற்றான் எருதேறி
வரைகொளும் தீய அரக்கனை வீழ்த்தும் மழபாடி
அரனுருக் காண அடியவர் வாழ்வில் அலம்போமே. ... 7

மலரவன் நேரே நந்தியர் நால்வர் மறைநான்காம் ... [மலரவன் = பிரம்மன்]
நலம்விளை நாதன் நேர்குழி மூன்றும் நவக்கோளாம்
வலமிடம் எங்கும் நந்தியைக் காண மழபாடித்
தலமதில் பாவம் குன்றிட ஈசன் அருட்சேர்வே. ... 8 ... [சேர்வு = திரட்சி, ஒன்றுசேர்கை]

(இறுதிப் பகுதி)

கறையணிக் கண்டன் காச்சிலாப் பொன்னன் மறைகொள்வான்
பிறையணிக் கேசம் இரைநதித் தாங்க மலர்கொள்வான்
அறைபொருள் காணாச் சதுரனாய் ஊராம் மழபாடி
உறைபொருள் சம்பந் தர்சொலில் போற்ற உயிரேறே. ... 9 ... [ஏறு = உயர்வு]

நீறுடை மேனிக் கூறுறும் மாதொ டெருதேறி
ஆறுறும் கேசன் அலைகடல் நஞ்சை அமுதுண்டான்
வாறுறும் அர்த்தச் சாறுடை அத்தன் மழபாடி ... [வாறு = அடையத்தக்க பேறு]
வேறறக் கொண்டே அப்பராய் வேண்ட வினைபோமே. ... 10

மாறுசொல் தர்மத் துழல்பவர் வேடம் இனங்காண்பார்
பேறெனக் கூத்தன் அருள்செயும் மேன்மை யறங்கொள்வார்
மாறிலி மெய்யன் மேவிடும் கோவில் மழபாடி
நீறனைப் போற்றி ஊறற வாழ்வர் நலமோடே. ... 11

--ரமணி, 17/05/2014, கலி. 03/02/5115

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Jun 25, 2014 9:35 am

கருவூர் அமர் கல்யாண பசுபதி
(கலிவிருத்தம்: மாங்கனி கூவிளம் கூவிளம் தேமா)
(முதல் மூன்று சீர்களின் ஈற்றில் குறில்/குறிலொற்று)

(’நீறார்தரு மேனியன்’--சம்பந்தர் தேவாரம் 2.35.5)

கோவில்
http://temple.dinamalar.com/New.php?id=503

பதிகம்
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=2&Song_idField=20280

கணபதி வாழ்த்து
வானர்பசு பால்பொழி வாலரன் போற்றத்
தானாபதி யென்றபே ராலுறை தேவன்
கோன்சீர்த்தியைப் பாவினில் கொள்ளவ ருள்வாய்
கானார்கரு வூரமர் கண்ணுதல் மைந்த!

[கான் = காடு, பூ; தானாபதி = தான்+ஆபதி = தான் பசுபதி;
’வெள்ளி மலையம ராபதி’--திருமூலர் திருமந்திரம் 353]

கண்ணான்நுதல் மான்கரன் தண்மதிக் கேசன்
பெண்ணாலிடம் சீர்த்தவன்* பித்தனின் தாளை
நண்ணாதவர் எங்ஙனம் நன்மைகள் கொள்வர்
அண்ணாகரு வூரமர் ஆலமர்ந் தானே. ... 1

[* தொழில் ஏதுமற்ற சிவன் சக்தியின் அருளால்தான்
ஐந்தொழில் புரிவதால் அவன் ’பெண்ணாலிடம் சீர்த்தவன்’.]

பேயோடவன் ஆடுவன் பிஞ்ஞகன் சன்ம
நோய்தீர்க்கவன் ஞானியின் நோன்பினில் வைப்பன்
பாய்வீழ்ந்திடும் மேனியின் பற்பமும் கொள்ளும்
காயன்கரு வூரமர் கண்ணுத லானே. ... 2

[பிஞ்ஞகன் = அழிப்பவனாகிய சிவன்;
பற்பம் = பஸ்பம் = சாம்பல்; காயன் = உடலினன்]


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Jun 26, 2014 6:21 pm

பனியார்வரைப் பார்வதி பங்கினன் ஞானக்
கனியாயொரு சேயவன் காதலன் மேகக் ... [காதலன் = மகன்]
கனியாய்மழை பெய்பவன் காரணன் மோனத்
தனியாய்க்கரு வூரமர் தத்துவன் தானே. ... 3

பஞ்சாட்சர மந்திரப் பால்வணன் வாழ்வில்
எஞ்சும்வினை தீர்த்திடும் எண்குணன் தன்னைத்
தஞ்சம்கொளும் மாந்தரைத் தாயெனப் பேணும்
மஞ்சன்கரு வூரமர் மானிடன் தானே. ... 4

[மஞ்சன் = மைந்தன் (வலியவன்/வீரன்;
மானிடன் = மானை இடக்கையில் கொண்டவன்)]



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Jun 27, 2014 6:20 pm


வண்டார்குழல் பத்தினி வாழ்முதல் ஞானச்
செண்டாய்மனம் ஈர்த்திடும் செம்பொருள் மோனத்
தண்டாயொரு ஆலமர்த் தத்துவன் நஞ்சை
உண்டான்கரு வூரமர் உத்தமன் தானே. ... 5

[வாழ்முதல் = வாழ்வுக்கு முதற்காரணனான கடவுள்]

அழலாயெழு சோதியின் கால்சிரம் தேடிக்
கழல்வீழ்ந்தயன் மாலுடன் கண்ணுறச் செய்தான்
குழல்சூடுவன் மத்தமும் கொன்றையும் சாந்தக்
குழகன்கரு வூரமர் கூத்தபி ரானே. ... 6 ... [குழகன் = இணங்குபவன்]




ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Jun 28, 2014 10:35 am


தாளாலவன் காலனைத் தள்ளினன் ஆழிக்
காளந்தனை யுண்டவன் காளையன் நெற்றி
வாள்கொண்டவன் மன்மதன் மாய்த்தனன் ஞான
வேளன்கரு வூரமர் வேதியன் தானே. ... 7 ...

[காளம் = நஞ்சு; வேளன் = குயவன், வேளாளன்]

தலையால்மலை பேர்த்தவன் தானவன் தாளாங்
குலியாலவன் சென்னிகள் குன்னிடச் செய்தான்
பலிகொண்டவன் பத்தரின் பாவினில் உள்ளக்
கலிகொள்கரு வூரமர் உத்தமன் தாளே. ... 8

[தானவன் = அரக்கன், இங்கு இராவணன்;
தாளங்குலி = தாள்+அங்குலி = கால்விரல்; குன்னுதல் = சிறுத்தல்]



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Jul 02, 2014 9:05 am

(இறுதிப் பகுதி)

புரமூன்றவர் தானவர் ஊறுகள் மேரு
சரபேச்வரர் கொண்டவன் சாய்த்தனன் மத்தச்
சிரமீதினில் கங்கையும் இந்துவும் சூடும் ... [இந்து = சந்திரன்]
அரனேகரு வூரமர் ஆரணன் தானே. ... 9

வேதந்தரு வாழ்வது வீணென மிச்சை ... [மிச்சை = அஞ்ஞானம்]
வாதந்தரு வோரது வாய்மொழி தள்ளிப்
பாதந்தனைப் பற்றிடும் பத்தரைப் பேணும்
சீதன்கரு வூரமர் சேட்சியன் தானே. ... 10

[சீதன் = குளிர்ந்தவன்; சேட்சியன் = மனம் எட்டாத் தொலைவில் உள்ளவன்]

தணலார்நுதல் ஈசனின் தண்ணொளித் தாளே
புணையென்றுசம் பந்தரும் போற்றினர் நல்ல
குணமார்ந்திட வேணியன் கோவருள் வானே
திணமாய்க்கரு வூரமர் தில்லையன் தானே. ... 11

--ரமணி, 30/05/2014, கலி.16/02/5115

*****


Sponsored content

PostSponsored content



Page 4 of 20 Previous  1, 2, 3, 4, 5 ... 12 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக