புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2013 டாப் 25 பரபரா Poll_c102013 டாப் 25 பரபரா Poll_m102013 டாப் 25 பரபரா Poll_c10 
37 Posts - 79%
dhilipdsp
2013 டாப் 25 பரபரா Poll_c102013 டாப் 25 பரபரா Poll_m102013 டாப் 25 பரபரா Poll_c10 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
2013 டாப் 25 பரபரா Poll_c102013 டாப் 25 பரபரா Poll_m102013 டாப் 25 பரபரா Poll_c10 
3 Posts - 6%
heezulia
2013 டாப் 25 பரபரா Poll_c102013 டாப் 25 பரபரா Poll_m102013 டாப் 25 பரபரா Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
2013 டாப் 25 பரபரா Poll_c102013 டாப் 25 பரபரா Poll_m102013 டாப் 25 பரபரா Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2013 டாப் 25 பரபரா Poll_c102013 டாப் 25 பரபரா Poll_m102013 டாப் 25 பரபரா Poll_c10 
32 Posts - 82%
dhilipdsp
2013 டாப் 25 பரபரா Poll_c102013 டாப் 25 பரபரா Poll_m102013 டாப் 25 பரபரா Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
2013 டாப் 25 பரபரா Poll_c102013 டாப் 25 பரபரா Poll_m102013 டாப் 25 பரபரா Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
2013 டாப் 25 பரபரா Poll_c102013 டாப் 25 பரபரா Poll_m102013 டாப் 25 பரபரா Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2013 டாப் 25 பரபரா


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 31, 2013 6:21 pm

2013 டாப் 25 பரபரா P56
கலக நாயகனே!

வருடத்தின் விஸ்வரூபக் காமெடி! உலக நாயகனை ஊறப் போட்டு ஊறப் போட்டு அடித்தது 'விஸ்வரூபம்’. ஆழ்வார்பேட்டையில் சீரியஸ் திங்கிங்கில் இருந்த கமலுக்கு சடாரென ஒரு சிந்தனை உதிக்க, 'டி.டி.ஹெச்-சில் விஸ்வரூபத்தை ரிலீஸ் பண்ணப்போறேன்...’ என அறிவித்தார். 'இது வேலைக்காகாது...’ என தியேட்டர்காரர்கள் கொதித்தெழ, பத்திக்கிச்சு பரபரப்பு. பிரச்னை பெரிதாக, 'முதல் நாள் தியேட்டர்ல... அடுத்தநாள் டி.டி.ஹெச்-ல’ என்று துவையல் அரைத்தார். 'காரம் பத்தலையே...’ என யோசிக்கும்போதே, 'முஸ்லிம்களை இழிவாகச் சித்திரிக்கிறது படம்’ என்று அடுத்தக் கச்சேரிக்கு மைக் கட்டின முஸ்லிம் அமைப்புகள். 'படம் காமிக்கிறேன்... ஆனா, எந்தப் பிரச்னையும் இல்லைனா பிரியாணி செஞ்சு போடுவீங்களா?’ என்று லந்து கொடுத்தபடியே, 23 அமைப்புகளைக் கூட்டிப் படத்தைப் போட்டுக்காட்டினார் கமல். 'ரைட்டு, நாங்க சந்தேகப்பட்டது கன்ஃபார்ம்தான்’ என்று முஸ்லிம் அமைப்புகள் வெகுண்டெழ, கன்ஃப்யூஸானார் கமல்.

'சட்டம்-ஒழுங்குப் பிரச்னை வரும்’ என்று படத்துக்கு கேட் போட்டது தமிழக அரசு. முன்னர் 'வேட்டி கட்டியவர்தான் பிரதமர் ஆக வேண்டும்’ என்று கமல் வைத்த ஐஸில்தான் அம்மா சூடானார் என செய்திகள் வர, 'படம் ரிலீஸ் ஆகலைனா நான் நாட்டை விட்டு வெளியில போயிடுவேன்’ என்று சென்டிமென்ட் ராக்கெட்டை கமல் ஏவ, ஃபீலிங்கானான் தமிழன்.

அதற்குள் படம் ஆந்திராவில் ரிலீஸாக, வண்டி கட்டிப்போய் கூட்டம் கூட்டமாகப் பார்த்தார்கள் தமிழர்கள். முத்தரப்புப் பேச்சுவார்த்தைகள் முடிவில் சிலபல கட்களுக்குப் பிறகு விஸ்வரூபம் வெளியாக, இந்தப் பஞ்சாயத்துகளாலேயே படம் ஹிட். ஆனா, இதெல்லாம் காமெடி இல்ல பாஸ்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 31, 2013 6:22 pm

கடுப்பு எம்.ஜி.ஆர்.!

2013 டாப் 25 பரபரா P56a

ஆண்டு முழுவதும் இருட்டு அறையில் முரட்டுக் குத்து வாங்கிக்கொண்டே இருந்தார் கேப்டன்.

'நீ போலிங் போடு... நீ ஸ்லிப்புக்குப் போ...’ என கேப்டன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, 'பக்கத்தூர்ல கபடி... நாங்க போறோமே...’ என சரமாரியாக சைக்கிள் மிதித்தார்கள் ஏழு எம்.எல்.ஏ-க்கள். அம்மா வேறு தாறுமாறாக அவதூறு வழக்குகளைப் போட்டுப் புரட்ட, 'ஆங்... அக்கக்காங்...’ என கோர்ட்டுக்கும் கோயம்பேட்டுக்குமாகக் குடை ராட்டினத்திலேயே இருந்தார். ஆனாலும் அசராமல் கூட்டத்துக்குக் கூட்டம் ஜெ-வைக் கொத்து பரோட்டா போட்டார்.

ராஜ்யசபா தேர்தலில் தனது கட்சி வேட்பாளரையே நிறுத்தியது ரொம்பத் தெகிரியம். உச்சகட்டமாக ஏற்காடு இடைத்தேர்தலைப் புறக்கணித்தவர், டெல்லி சட்டசபைத் தேர்தலில் 'பதிணொண்ணுல நிக்கிறோம்’ என பாண்டிபஜாரில் ஸ்வெட்டர் வாங்கியபோது எகிறியது டாஸ்மாக் விற்பனை. டெல்லியில் நின்ற அத்தனை வேட்பாளர்களும் டெபாசிட் அந்து, 'மாமா டவுசர் கழண்டுச்சு’ என அலற, 'இந்தி நை மாலும்... ஆங்ங்...’ என ஜாலியானார் கேப்ஸ். கடைசியாக ஷ§கர் அண்ணாச்சி பண்ருட்டியாரும் வாக் அவுட் பண்ண, 'பட் பிரேமா ஹேப்பி அண்ணாச்சி...’ என தொகிறியவர், மகன் சண்முகபாண்டியனை வைத்து 'சகாப்தம்’ ஆரம்பித்து, தமிழகத்துக்கு அடுத்த டைம் பாஸ் ஆரம்பித்தார்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 31, 2013 6:23 pm

கருத்து புத்திரன்!

2013 டாப் 25 பரபரா P56b

மனுஷ்ய புத்திரன்தான் 2013-ன் கருத்து கந்தசாமி! அண்ணன் பல்லு வெளக்கும்போதே கார் ஹார்ன் அடிக்கும். 'பேக்ட்ராப் வெள்ளை... நீங்க ஊதா கலர் டி-ஷர்ட்டோட வந்துருங்க...’ என யார் போன் அடித்தாலும், போக ஆரம்பித்தார் கவிஞர். ''தலைவா’ பிரச்னைல என்ன சொல்றீங்க...’, 'பூனைக்கண் புவனேஸ்வரி இப்ப என்ன பண்றாங்க?’ என யார் என்ன கேட்டாலும் முக்கால் மணி நேரத்துக்கு மெட்டீரியல் ரெடி பண்ணிப் பொளந்த மனுஷைப் பார்த்து மற்ற எழுத்தாளர்கள் எல்லாம் மிரண்டார்கள். சித்த வைத்தியசாலை சிவராஜ், ஆண்மை டாக்டர் அகமது, ஆசீர்வாதக் கூட்டம் எல்லாவற்றையும் லெஃப்ட்டில் அடித்து, ஃபுல் ஃபார்மிலேயே இருந்தார் புத்திரன்.

ஹிப்-ஹாப் தலையோடு மீடியம் மேக்கப்பில் மனுஷ் தோன்றினாலே, சுட்டி டி.வி-க்கு ஓடினார்கள் மக்கள். ஃபேஸ்புக்கில் பரதேசியாகவும் கங்காணியாகவும் பல ரூபங்கள் எடுத்து மனுஷ் போட்ட ஸ்டேட்டஸ்களுக்கு பின்னிப் பிரித்தது ரெஸ்பான்ஸ். மனுஷின் அசுர வளர்ச்சியைக் கண்டு, சாரு நிவேதிதா மதியமே தியானத்தில் மூழ்க ஆரம்பிக்க, எஸ்.ரா-வும் ஜெயமோகனும் தீவிரமாக நோபல் பரிசுக்கு டிரை பண்ண ஆரம்பித்தார்கள். 'கலைஞர் 90’ நிகழ்ச்சியில் கருணாநிதியைப் பாராட்டிப் பேசியது, ஜாலி பேட்டி கொடுத்தது, ஒருகாலத்தில் தூர்தர்ஷனை ஆன் பண்ணினாலே ராஜீவ் காந்தி முகம் தெரிந்த மாதிரி இப்போது எல்லா சேனல்களிலும் தெரிவது... என இலக்கிய உலகின் பவர் ஸ்டார், இந்தக் கண்ணாடி அங்கிள்தான்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 31, 2013 6:24 pm

'நடப்பதெல்லாம்’ நன்மைக்கே!

2013 டாப் 25 பரபரா P56c

'நாட்ல எது நடக்குதோ இல்லையோ... இவர் நடக்கறது மட்டும் நடக்குது...’ என கிரேஸி மோகன் வகையறா வசனம் எழுதுகிற அளவுக்கு இந்த வருஷமும் வாக்கிங்கிலேயே இருந்தார் வைகோ. 'கட்சியைக் கலைச்சிரலாமா... கட்சியைக் கலைச்சிரலாமா...’ எனத் தினமும் 'மல்லை’ சத்யா போன் அடிக்க, 'பொறு தம்பி... பொறு தம்பி’ எனத் துண்டு முறுக்கலிலேயே இருந்தார் தாயகத் தலைவர். ஆளாளுக்கு அனல் அரசியலில் இருக்க, 'கம்பன் கழகத்துக்கு கால் டாக்ஸி சொல்லியாச்சா?’, 'நெடுமாறனை கண்ணதாசன் மெஸ்ஸுக்கு வரச் சொல்லுங்க’ எனத் தனி ரூட்டில் போய்க்கொண்டிருந்தார் வைக்ஸ்.

'இப்பிடியே இருந்தா எப்பிடி?’ எனக் கௌளி கத்த, 'பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்’ என்று நடைப்பயணத்தைக் கிளப்பினார். அங்கே கிடைத்தது குபீர் பப்ளிக்குட்டி. வைகோ நடைப்பயணம் போகிற வழியில் காரில் வந்த ஜெயலலிதா, திடுதிப்பென்று இறங்கி வைகோவை விசாரிக்க, பரபரப்பானது பாலிடிக்ஸ். 11 நாளாக பூரண மதுவிலக்குக் காக நடைப்பயணம் மேற்கொண்ட வைகோவிடம், 'எதுக்காக இந்த நடைப்பயணம்?’ என்று ஜெயலலிதா கேட்க, பொறுப்பாகப் பதில் சொன்னார் வைகோ. முள்ளிவாய்க்கால் முற்றச் சுவர் இடிப்பு, கொளத்தூர் மணி கைது என்று ஈழ ஆதரவாளர்கள் மேல் ஜெ. அரசு எகிறி அடிக்க, வைகோ கொந்தளித்தது... கோபக் காமெடி!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 31, 2013 6:25 pm

ஹன்சிகாவுக்காக ப்ரே பண்ணுவோம்!

2013 டாப் 25 பரபரா P56d

ஒரு வெள்ளிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு டி.ஆர். வடமாலை சாத்திக்கொண்டிருந்தபோது, 'சிம்புவுக்கும் ஹன்சிகாவுக்கும் ஆக்ரி பூக்ரி...’ என அதிகாரபூர்வ அரசாணை வெளியானது. 'மேட்டர் கன்ஃபார்மா..?

டீ கேன்சல்...’ என பிஸியானார்கள் சினிமா ரிப்போர்ட்டர்கள். 'ஆமாண்ணே... ஒரு மாரியா இருக்குண்ணே’ என சிம்பு மறுபடி லெக்பீஸ் கடிக்க, சிந்திக்க ஆரம்பித்தான் தமிழன். 'எங்களுக்குள்ள லவ்தான்... ஆனா அஞ்சு வருஷம் கழிச்சுதான் மேரேஜ்...’ என ஹன்சிகா ட்வீட்ட, தீவிர சிந்தனைக்குப் போனான் தமிழன். திகீரென்று காவி, ருத்ராட்சம், தலைப்பாக்கட்டோடு சிம்பு காசிக்கு ஆன்மிக ட்ரிப் அடிக்க, 'அகம் பயம்மாஸ்மி’ என அலறினார்கள் அகோரிகள்.

அஞ்சாவது நாள் சிம்பு-ஹன்சிகா கட்டிப்பிடித்து கொஞ்சுகிற பெர்சனல் போட்டோ இணையத்தில் ரிலீஸாக, 'ப்ரே பண்ணுவோம்... எல்லா சாமியும் நல்லா இருக்க ப்ரே பண்ணுவோம்’ என எகிறியது பல்ஸ். வருஷக் கடைசியில் சிம்புவுக்கு ஜோடி நயன்தாரா என கன்ஃபார்ம் செய்தி வர, 'தூக்கந்தான் பிரச்னை டாக்டர்...’ என ஆஸ்பத்திரிகளில் கும்மியது கூட்டம்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 31, 2013 6:25 pm

லுல்லுலாயி ஷோ!

'டெசோ’தான் இந்த வருடத்தின் கைப்புள்ள காமெடி! போர் நடக்கும்போதெல்லாம் நாட் ரீச்சபிளில் இருந்தவர்கள், திடுதிப்பென 'டெசோ’ லைனில் வந்தனர். 'அய்யகோ தமிழா...’ எனக் கலைஞர் திடீரென டெசோவைத் தூசு தட்ட, தும்மியபடி பெரியப்பு வீரமணியும் வர, கலகலப்பானது அரசியல். 'ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாட்டில் பொது வேலைநிறுத்தம் செய்யவேண்டும்’ என டெசோ அமைப்பு தீர்மானம் நிறைவேற்றியது.

இதையடுத்து, 'எல்லாரும் வள்ளுவர் கோட்டத்துக்கு வந்திருங்க... முற்றுகைப் போராட்டம்...’ என ஜாலியானார் ஸ்டாலின். 'டெசோ’ அறிவித்த பொது வேலை நிறுத்தம் பிசுபிசுத்தது. ''டெசோவா... ஏர்டெல்ல புது பிளான் பேரா..?'' என தமிழன் கேட்க, தி.மு.க-காரர்கள் கூட்டம் கூட்டமாக கல்யாண மண்டபங்களில் கூடிக் கும்மியடித்தார்கள். மாணவர் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. வெளியேறியது... ச்சும்மா லுல்லுலாயி!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 31, 2013 6:26 pm

கொம்பன் இறங்கிட்டான்!

2013 டாப் 25 பரபரா P56e

'நூறாவதுநாள்’ திகில் படத்தைவிட, திகிலைக் கிளப்பியது ராஜகுமாரன் நடத்திய 'திருமதி தமிழின்’ 100-வது நாள் விழா. மன்சூர்அலிகான், ரித்தீஷ், பவர் ஸ்டார் வரிசையில் 'இந்த வருஷக் கோட்டா நாந்தேன்’ என்று பப்பரக்கா பவுடர் அடித்துவந்தார் ராஜகுமாரன். 'திருமதி தமிழ்’ படத்துக்காக ராஜகுமாரனும் தேவயானியும் கொடுத்த ரொமான்டிக் விளம்பரங்கள் சட்டம்-ஒழுங்கை முற்றிலுமாக நாசமாக்கின. ரத்த வெறி அடங்காத ராஜகுமாரன், கௌபாய் தொப்பி, கோட்டிங் பவுடர், லிப்ஸ்டிக் என எலெக்ட்ரிக் ஷாக் கொடுத்தார். ஐஸ் கட்டியில் படுக்கவைத்து, லத்தி சொருகும் வைபவத்துக்குச் சற்றும் குறையாத சித்ரவதையாக அமைந்தது அன்னாரின் அலப்பறைகள்.

'திருமதி தமிழ்’ படம் பார்க்கப்போனவர்கள், 'கொம்பன் எறங்கிட்டான்... கொம்பன் எறங்கிட்டான்’ எனத் தெறித்து ஓடிவந்தார்கள். ரிசல்ட் கேட்டு 'சாவட்டும்... ஜனங்க சாவட்டும்...’ எனக் கொக்கரித்தன ராஜகுமாரனின் நாஜிப் படைகள். 'யாராச்சும் பட்டம் தாங்களேன்’ என கேட்டுப்பார்த்தவர், கடுப்பாகி அவருக்கு அவரே 'சோலார் ஸ்டார்’ பட்டம் கொடுத்துக்கொண்டார். 'பவர் போனாலும் சோலார் இருக்கும்ல’ என்ற இவரது கமென்ட்டுக்கு புழலில் இருந்த பவருக்கே புரையேறியது. 'தேவயானியை வைத்து இயக்க இருக்கும் அடுத்த படம்... 'உலக நாயகி’ என்று இவர் அறிவிக்க, வீடு வீடாக வசூலித்து வெள்ளை வேன் வைக்க ரெடியாகிறது தமிழகம்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 31, 2013 6:27 pm

தீவிரவாதி மேட்டரு... ஃபீல் ஆயிட்டாப்ல!
2013 டாப் 25 பரபரா P56f

இது பப்ளிக்குட்டி காமெடி! தொடர்ந்து இந்துத்துவ அமைப்பின் தலைவர்கள் கொலைகளுக்கு தீவிரவாதிகள்தான் காரணம் என்று காவிக் கட்சிக்காரர்கள் எகிற, அந்த கேப்பில் விளம்பரக் கெடா வெட்டினார்கள் சில அல்லுசில்லுகள். கன்னியாகுமரியில் அனுமன்சேனாவைச் சேர்ந்த ஒருவரை யாரோ கடத்திவிட்டார்கள் என்று பரபரப்பு கிளம்ப, கடைசியில் அவரே டெம்போ புக் பண்ணி கடத்தல் நாடகம் ஆடியது அவுட்டானது. கோவையில் ராமநாதன் என்கிற பா.ஜ.க-காரர் தன் வீட்டுக்குத் தானே பெட்ரோல் குண்டு வீசிவிட்டு, 'தீவிரவாதி மேட்டரு... ஃபீல் ஆயிட்டாப்ல... குண்டு வீசிட்டாப்ல’ என்று புகார் சொல்ல, 'அந்தத் தீவிரவாதியே நீங்கதான் சார்’ என்று கண்டுபிடித்து ராட்டி தட்டியது போலீஸ். திண்டுக்கல் பி.ஜே.பி-காரர் பிரவீண்குமாரும் சொந்த செலவில், தன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிக் கைதாக, 'அத்வானிகூட மதுரைக்கு வரும்போது அவரே பைப் வெடிகுண்டு பார்சல் வாங்கி வந்திருப்பாரோ?’ என பலரும் சந்தேகிக்கத் தொடங்கினார்கள். ஜாமீனில் வந்த கோவை ராமநாதனை பா.ஜ.க-வைச் சேர்ந்த விஜயகுமாரும் ரமேஷ§ம், 'கட்சிப் பேரைக் காலி பண்ணிட்டியேடா’ என்று கத்தியில் பின்னடிக்க, இப்போது மூவரும் ஜெயிலில் பாத்ரூம் போகிறார்கள். 'அட நான்சென்ஸ்களா...’ என டென்ஷன் பண்ணியது இந்த டெரர் காமெடி!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 31, 2013 6:28 pm

டைம் டூ ஹைட்!

2013 டாப் 25 பரபரா P56i


கமலுக்கு 'விஸ்வரூபம்’ என்றால் விஜய்க்கு 'தலைவா’! 'டைம் டூ லீட்’ என கேப்ஷன் போட்டு போஸ்டருக்குக் கஞ்சி காய்ச்சியபோதே, ஆரம்பித்தது பஞ்சாயத்து. 'தம்பி... நீதான் அடுத்த சி.எம். ராம்ராஜ்ல பத்து வெள்ளை வேட்டி-சட்டை சொல்லியாச்சு. எல்லாம் சுத்தபத்தமாத்தான இருக்கு..?’ என சாலிகிராமம் வீட்டில் எஸ்.ஏ.சி. சலம்பியதை உளவுத்துறை குறிப்பெடுத்து, வருங்கால பிரதமருக்கு அனுப்ப, 'ஆல்ட்... டெலிட்... கன்ட்ரோல்... ஓவர்...’ என வைப்ரேஷனிலேயே இருந்தன வயர்லெஸ்கள். தியேட்டர்காரர்கள் கேட்டை மூடினார்கள். படம் ரிலீஸ் ஆகவே இல்லை. திருட்டு டி.வி.டி-கள் ரவுண்டு கட்டின. 'உண்ணாவிரதம் இருப்போம் தலைவா...’ என ரசிகர்கள் ஊறுகாய் பாக்கெட் கடித்தனர். 'ரைட்டு... வெஜ் தனி... நான்வெஜ் தனி...’ எனப் படக்குழு மனு போட, அதில் பஜ்ஜி மடித்தார் கமிஷனர்.

கொடநாட்டில் இருந்த ஜெயலலிதாவைச் சந்திக்க விஜய்யும் எஸ்.ஏ.சி-யும் போனார்கள். 'உள்ளே விடலையாம்...’ என ஸ்கூப்புகள் வர, அமைதி காத்தது விஜய் தரப்பு. ஒருவழியாக கேப்ஷனைக் காவு கொடுத்து 'தலைவா’ வெளிவரும்போது, தமிழ்நாட்டில் பாதிப் பேர் டி.வி.டி. பார்த்திருந்தார்கள். இடையில் 'புரட்சித்தலைவி ஆட்சி... பொற்கால ஆட்சி’ என்று விஜய் கைகட்டிப் பேட்டி தந்தது... துன்பியல் நகைச்சுவை!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 31, 2013 6:29 pm

அப்போ கம்பி... இப்போ எம்.பி.!

2013 டாப் 25 பரபரா P56g


'போன வருஷம் கம்பி... இந்த வருஷம் எம்.பி.’ என எகிறிய கனிமொழியின் ராஜ்ய சபாக் கூத்துகள், அலேக் அரசியல் காமெடி. திஹாரில் இருந்து திரும்பிய கனிமொழி, 'கொசு கடித்தது... வாழ்க்கை புரிந்தது...’ என உணர்ச்சிப் பேட்டிகளில் பிஸியானார். 'கனியை எம்.பி. ஆக்குங்க...’ என ராஜாத்தியம்மாள் 'அன்பாக’ எடுத்துச் சொல்ல, கியர் தட்டிக் கிளம்பினார் கருணாநிதி. ஐந்து ராஜ்ய சபா சீட்களில் அ.தி.மு.க-வே லம்படிக்க, விஜயகாந்தை வளைக்க கலைஞர் மேப் போட, 'அக்காங்.... நாங்களும் குதிப்போம்ல...’ என கேப்டனும் வேட்பாளரை நிறுத்தினார்.

'மாணவர் போராட்டத்தால் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகிவிட்டது’ என்ற கலைஞர், 'கனிமொழிக்கோசரம் காங்கிரஸ் ஆதரவு கொடுத்தா... ஓகே...’ எனப் பொறி போட்டார். காங்கிரஸும் ஆதரவு அல்வா நீட்ட, 'தப்பாச்சே...’ என மண்டை காய்ந்தான் தமிழன். தே.மு.தி.க-வின் அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் 7 பேரும், 'நெல்லுச்சோறு... கூதலுக்குக் கம்பளி’ என அ.தி.மு.க. பக்கம் கிளம்பிப் போக, அந்த கேப்பில் கனிமொழி எம்.பி. ஆக, கேம் ஓவர்!

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக