புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Today at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Today at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Today at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:43 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜென் கதைகள் Poll_c10ஜென் கதைகள் Poll_m10ஜென் கதைகள் Poll_c10 
72 Posts - 43%
ayyasamy ram
ஜென் கதைகள் Poll_c10ஜென் கதைகள் Poll_m10ஜென் கதைகள் Poll_c10 
69 Posts - 41%
T.N.Balasubramanian
ஜென் கதைகள் Poll_c10ஜென் கதைகள் Poll_m10ஜென் கதைகள் Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஜென் கதைகள் Poll_c10ஜென் கதைகள் Poll_m10ஜென் கதைகள் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஜென் கதைகள் Poll_c10ஜென் கதைகள் Poll_m10ஜென் கதைகள் Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
ஜென் கதைகள் Poll_c10ஜென் கதைகள் Poll_m10ஜென் கதைகள் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஜென் கதைகள் Poll_c10ஜென் கதைகள் Poll_m10ஜென் கதைகள் Poll_c10 
2 Posts - 1%
prajai
ஜென் கதைகள் Poll_c10ஜென் கதைகள் Poll_m10ஜென் கதைகள் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
ஜென் கதைகள் Poll_c10ஜென் கதைகள் Poll_m10ஜென் கதைகள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஜென் கதைகள் Poll_c10ஜென் கதைகள் Poll_m10ஜென் கதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜென் கதைகள் Poll_c10ஜென் கதைகள் Poll_m10ஜென் கதைகள் Poll_c10 
435 Posts - 48%
heezulia
ஜென் கதைகள் Poll_c10ஜென் கதைகள் Poll_m10ஜென் கதைகள் Poll_c10 
308 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஜென் கதைகள் Poll_c10ஜென் கதைகள் Poll_m10ஜென் கதைகள் Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
ஜென் கதைகள் Poll_c10ஜென் கதைகள் Poll_m10ஜென் கதைகள் Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
ஜென் கதைகள் Poll_c10ஜென் கதைகள் Poll_m10ஜென் கதைகள் Poll_c10 
29 Posts - 3%
prajai
ஜென் கதைகள் Poll_c10ஜென் கதைகள் Poll_m10ஜென் கதைகள் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஜென் கதைகள் Poll_c10ஜென் கதைகள் Poll_m10ஜென் கதைகள் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஜென் கதைகள் Poll_c10ஜென் கதைகள் Poll_m10ஜென் கதைகள் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஜென் கதைகள் Poll_c10ஜென் கதைகள் Poll_m10ஜென் கதைகள் Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
ஜென் கதைகள் Poll_c10ஜென் கதைகள் Poll_m10ஜென் கதைகள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜென் கதைகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 27, 2013 4:12 am

ஷிசிரி கோஜுன் என்ற ஜென் துறவி. அவருடைய ஆசிரமத்துக்குள் ஒரு திருடன் புகுந்துவிட்டான்.

திருடனைப் பார்த்த துறவி பயப்படவில்லை. பதறவில்லை. ‘உனக்கு என்ன வேணுமோ, எடுத்துக்கோப்பா!’ என்று சொல்லிவிட்டார்.

இதைப் பார்த்த திருடனுக்கு ஆச்சர்யம். ஆனால் அதற்காக வலியக் கிடைப்பதை விடமுடியுமா? கண்ணில் பட்ட பொருள்களையெல்லாம் சுருட்டிக்கொண்டு கிளம்பினான்.

அவன் புறப்படும் நேரம், ஷிசிரி கோஜுன் அவனை அழைத்தார். ‘கொஞ்சம் பொறுப்பா!’

‘என்ன சாமி? போலிஸைக் கூப்பிடப்போறீங்களா?’

‘அதெல்லாம் இல்லை. என்கிட்டேயிருந்து இத்தனை பொருள் எடுத்துகிட்டுப் போறியே, எனக்கு நன்றி சொல்லமாட்டியா?’

‘சொல்லிட்டாப் போச்சு. ரொம்ப நன்றி!’ என்றான் திருடன். ஓடி மறைந்துவிட்டான்.

சில நாள்கள் கழித்து, போலிஸ் அந்தத் திருடனைப் பிடித்துவிட்டது. அவன்மீது வழக்குத் தொடுத்தார்கள். சாட்சி சொல்ல ஷிசிரி கோஜுனை அழைத்தார்கள். அவரும் வந்தார். நீதிபதிமுன் நின்றார். ‘ஐயா, இந்த இளைஞனை எனக்குத் தெரியும். ஆனால் இவன் திருடன் இல்லை!’ என்றார்.

‘என்னங்க சொல்றீங்க? எல்லாரும் இவனைத் திருடன்னுதானே சொல்றாங்க?’

‘இருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை நான் இவனுக்குச் சில பொருள்களைக் கொடுத்தேன். அவன் அதற்கு நன்றி சொல்லிவிட்டுச் சென்றான். கணக்கு சரியாகிவிட்டது!’

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 27, 2013 4:13 am

ஒரு சிஷ்யன் தியானத்தில் அமர்ந்திருந்தான். அப்போது அவனுடைய குருநாதர் அந்த வழியாக வந்தார்.

‘குருவே, ஒரு விஷயம்’ என்றான் சிஷ்யன்.

‘என்ன?’

‘நீங்கள் சொன்ன ஜென் அம்சங்களை நான் முழுவதுமாகப் புரிந்துகொண்டுவிட்டேன் என்று உணர்கிறேன்’ என்றான் அவன்.

‘எப்படிச் சொல்கிறாய்?’

‘இதோ, என்னைப் பாருங்கள், தியானத்தில் உட்கார்கிறபோது ‘நான்’ என்கிற அந்த உணர்வு கரைந்து இல்லாமல் போய்விடுகிறது. எனக்குள் முழு வெறுமைதான் நிரம்பியிருக்கிறது!’

அவன் பேசிக்கொண்டே போக, குருநாதர் பக்கத்தில் இருந்த ஒரு குச்சியை எடுத்தார். அவன் முதுகில் ஓங்கி அடித்தார்.

‘ஆ!’ என்று அலறியபடி எழுந்தான் அவன். ‘ஏன் என்னை அடித்தீர்கள்?’ என்று கோபப்பட்டான்.

‘நான் முழுவதும் வெறுமையால் நிரம்பிவிட்டேன் என்றாயே’ என்று புன்னகை செய்தார் குருநாதர். ‘அப்படியானால் இப்போது இந்தக் கோபம் எங்கிருந்து வந்தது? அந்த வெறுமையிலிருந்தா?’

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 27, 2013 4:13 am

ஒரு ஜென் மாஸ்டர். அவரைச் சந்திக்க இளைஞன் ஒருவன் வந்தான். வணக்கம் சொன்னான். ‘ஐயா, எனக்கு ஒரு சந்தேகம்’ என்றான்.

‘என்ன சந்தேகம்?’

‘எனக்குப் பெரிய வாள் வீரனாகவேண்டும் என்று ஆசை’ என்றான் அந்த இளைஞன். ‘அரசரின் கையால் பரிசும் பாராட்டும் வாங்கவேண்டும், அப்புறம் நான் அவருடைய படையில் சேரவேண்டும், பல போர்களில் ஜெயித்துச் சரித்திரத்தில் இடம் பிடிக்கவேண்டும் என்றெல்லாம் கனவு காண்கிறேன். தப்பா?’

‘தப்பில்லை’ என்றார் ஜென் மாஸ்டர். ‘ஆனால், உனக்கு வாள்வீச்சு எந்த அளவு தெரியும்?’

‘இப்போதுதான் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறேன்!’

‘ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் தங்களுடைய இலக்கைக் கற்பனை செய்து சந்தோஷப்படுவது இயல்புதான்’ என்றார் அந்த ஜென் குரு. ‘ஆனால் ஒரு விஷயம் புரிந்துகொள், உனக்கு உள்ளது இரண்டே கண்கள், அதில் ஒன்றை இலக்கின்மீது வைத்துவிட்டால், பாதையில் கவனம் பாதியாகிவிடும். அதற்குப் பதில் இரண்டு கண்களையும் இங்கே திருப்பினால், நீ விரும்பும் இலக்கைச் சீக்கிரம் சென்று அடையலாம், புரிகிறதா?’

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 27, 2013 4:14 am

சியோனொ என்ற பெண் துறவி. புக்கொ என்ற ஜென் மாஸ்டரிடம் கல்வி கற்றுவந்தார்.

ஏனோ, பல வருடங்களாகப் படித்தும், பயிற்சி எடுத்தும்கூட சியோனொவுக்கு ஞானம் கிடைக்கவில்லை. இதில் அவருக்கு மிகவும் வருத்தம்.

ஒரு பௌர்ணமி ராத்திரி. சியோனொ ஆற்றில் தண்ணீர் பிடித்துக்கொண்டு ஆசிரமத்தை நோக்கி நடந்தார்.
சியோனொ தூக்கி வந்த குடம் மிகப் பழையது. பாதி வழியில் அது கீழே விழுந்து உடைந்துவிட்டது. தண்ணீர் தரையெங்கும் சிந்தி வீணாவதைப் பார்த்த சியோனொவுக்கு, ஞானம் பிறந்தது. ஒரு கவிதை எழுதினார்:

‘நான் என்னால் முடிந்தவரை இந்தக் குடத்தைக் காப்பாற்றப் பார்த்தேன்,
முடியவில்லை, உடைந்துவிட்டது,
இப்போது இந்தக் குடத்தில் துளி தண்ணீரும் மிச்சமில்லை,
இப்போது இந்தத் தண்ணீரில் துளி நிலாவும் மிச்சமில்லை!’


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 27, 2013 4:15 am

ஒரு ஜென் ஆசிரமம். பல மாணவர்கள் அங்கே தங்கிப் பயின்றுவந்தார்கள்.

தினமும் காலை 11 மணிக்குத் தியான வகுப்பு. சுமார் ஐம்பது மாணவர்கள் ஒரு பெரிய மண்டபத்தில் அமர்ந்து கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் தியானம் செய்வார்கள்.

இந்த வகுப்பின்போது சில மாணவர்கள் தூங்கிவிடுவது உண்டு. எப்போதாவது குறட்டைச் சத்தம்கூடக் கேட்கும்.

இதனால் எரிச்சலடைந்த குருநாதர், தன்னுடைய தோட்டக்காரனை அழைத்தார். அவன் கையில் ஒரு சின்னக் குச்சியைக் கொடுத்தார். ‘தம்பி, உன்னுடைய வேலை, இந்த மாணவர்களைக் கவனிப்பது. யாராவது தூங்கி வழிவதுபோல் தெரிந்தால், அவர்களுடைய முதுகில் இந்தக் குச்சியால் ஒருமுறை தட்டு. விழித்துக்கொள்வார்கள், தியானத்தைத் தொடர்வார்கள். புரிந்ததா?’

’புரிஞ்சதுங்கய்யா!’ என்றான் அந்தத் தோட்டக்காரன். அதன்படி தினந்தோறும் மாணவர்களைக் கூர்ந்து கவனித்து, தூங்குபவர்களை உடனுக்குடன் எழுப்பிவிட்டுக்கொண்டிருந்தான் அவன்.

வருடக்கடைசியில், அந்த ஐம்பது மாணவர்களின் படிப்பு முடிவடைந்தது. எல்லோரையும் வழியனுப்பும் நேரம்.

அப்போது ஒரு மாணவன் கேட்டான். ‘குருவே, எங்கள் வகுப்பில் தியானத்தில் அதிகக் கவனமும் தேர்ச்சியும் பெற்றது யார்?’

குருநாதர் அரை விநாடியும் யோசிக்காமல் பதில் சொன்னார். ‘சந்தேகமென்ன? அந்தத் தோட்டக்காரன்தான்!’

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 27, 2013 4:15 am

காலை ஏழு மணி. கலாதரன் செய்தித்தாளும் கையுமாக சோஃபாவில் உட்கார்ந்தான். சமையலறையிலிருந்து எட்டிப்பார்த்த அவன் மனைவி கல்பனா தீவிரமாக முறைத்தாள். ‘நேத்து நைட் சொன்னது மறந்துபோச்சா?’

‘என்ன?’

‘தொப்பை ரொம்ப அதிகமாயிடுச்சு, இனிமே டெய்லி காலையில 30 நிமிஷம் வாக்கிங் போறேன்னு சொன்னீங்களே!’

‘ஷ்யூர்’ என்றான் கலாதரன். ‘இன்னிக்குக் கொஞ்சம் வேலை ஜாஸ்தி இருக்கு. ஆஃபீஸுக்குச் சீக்கிரம் போகணும், நாளைலேர்ந்து ஆரம்பிச்சுடறேன்.’

‘யாருக்குதான் வேலை ஜாஸ்தி இல்லை?’ என்றாள் கல்பனா. ‘நான் காலையில நாலு மணிக்கு எழுந்து வீட்டு வேலையெல்லாம் செய்யலியா? இத்தனைக்கும் நடுவுல ஏரோபிக்ஸ் க்ளாஸுக்காக 1 ஹவர் ஒதுக்கமுடியுதே, நீங்க கொஞ்சம் சீக்கிரம் எழுந்து வாக்கிங் போய்ட்டு வந்தா என்னவாம்?’

’செய்யறேன்ப்பா… சும்மா கத்தாதே’ சங்கடமாகச் செய்தித்தாளைப் புரட்டினான் கலாதரன். ‘இதெல்லாம் ஒரு பழக்கமா வரணும், உங்களால எப்படிதான் முடியுதோ தெரியலை, எனக்கு நினைச்சாலே மலைப்பா இருக்கு.’

‘ஷுக்யோ!’ என்று சிரித்தாள் கல்பனா.

‘அப்டீன்னா?’

‘நேத்துதான் ஒரு ஜென் புத்தகத்துல படிச்சேன், ஷுக்யோன்னா, ஒரு செயல்ல மாஸ்டராகறது. அது ஓவர்நைட்ல நடக்கற விஷயம் இல்லை, பல நாள், பல வாரம், பல மாசம், பல வருஷம், வாழ்நாள்முழுக்க ஒழுக்கமாத் தொடர்ந்து பயிற்சி எடுக்கறதால வர்றது.’

‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?’

’எப்படிதான் தினமும் ஓடப்போறேனோ-ன்னு நினைச்சுப் பிரமிச்சுப்போய் உட்கார்ந்துட்டா, நீங்க என்னிக்கும் ஓடமாட்டீங்க, பாக்கி நாளைப் பத்திக் கவலைப்படாம இன்னிக்கு ஓட்டத்தைமட்டும் கவனிங்க, அப்புறம் நாளைக்கு ஓட்டம், அப்புறம் நாளன்னிக்கு, ஷுக்யோ தானா நடக்கும்.’

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 27, 2013 4:15 am

‘எதையும் கேள்வி கேட்கணும்!’ என்றார் குருநாதர். ‘அடுத்தவங்க சொல்றாங்க-ங்கறதுக்காகமட்டும் ஒரு விஷயத்தை நம்பிடக்கூடாது. நாமே பார்த்துப் புரிஞ்சுக்கறதுமட்டும்தான் உண்மை. ஆனா அதுவும் அப்போதைக்குமட்டும்தான் உண்மை. கொஞ்ச நேரம் கழிச்சு, அது பொய்யாகிடலாம், அதையும் நாம பார்த்துப் புரிஞ்சுக்கணும், நம்மோட நம்பிக்கைகள் ஒவ்வொண்ணையும் தொடர்ந்து கேள்விக்கு உட்படுத்திகிட்டே இருக்கணும்.’

மாணவர்களுக்குக் குழப்பம். ‘அப்படீன்னா, எல்லாத்தையும் சந்தேகக் கண்ணோட பார்க்கறதுதான் ஜென்னா?’ என்றார்கள்.

‘ம்ஹூம், இல்லை. எல்லாத்தையும் சட்டுன்னு நம்பிடாம, உன்னோட கண்ணால பார்த்து உணர்றதுதான் ஜென்!’

‘புரியலை குருவே. இப்போ, நான் உங்கமேல ரொம்ப மரியாதை வெச்சிருக்கேன். நீங்க அதை நம்பமாட்டீங்களா?’

‘ம்ஹூம். நம்பமாட்டேன்!’ என்றார் குருநாதர். கேள்வி கேட்ட சீடனின் முகம் வாடிப்போனது.

குருநாதர் அவன் முதுகில் தட்டிக்கொடுத்தார். ‘நீயும் அதேமாதிரிதான் இருக்கணும், நான் பெரிய ஜென் குரு, மகான்னு எல்லாரும் சொல்றாங்கன்னா, அதை உடனே நம்பிடக்கூடாது, என்னைப் பரிசோதிச்சு உண்மையை நீயே பார்த்துத் தெரிஞ்சுக்கணும், அதுவும் ஒருவாட்டி, ரெண்டுவாட்டி இல்லை, தொடர்ந்து, வாழ்நாள்முழுக்க!’

‘இவ்வளவு ஏன்? புத்தரே ’என் போதனைகளை யாரும் கண்மூடித்தனமா நம்பவேணாம், ஒவ்வொரு வார்த்தையையும் கடுமையாச் சோதனை செஞ்சு உறுதிப்படுத்திக்கோங்க’ன்னுதான் சொல்றார்! ஒரு விஷயத்தை நாம நம்பறோம்ங்கறதாலயோ, விரும்பறோம்ங்கறதாலயோ, அப்படி நடக்கணும்ன்னு எதிர்பார்க்கறோம்ங்கறதாலயோமட்டும் அது உண்மையாகிடாது, எதையும் கேள்வி கேட்கிற, பரிசோதிச்சுத் தெரிஞ்சுக்கற குணம் நமக்கு வேணும். அந்த அடிப்படையில சொல்லணும்ன்னா, ஜென் என்பது நம்பிக்கை அல்ல, பின்பற்றுதல் அல்ல, கீழ்ப்படிதல் அல்ல, ஊகித்தல் அல்ல, வாதம் செய்தல் அல்ல, வெறுமனே பார்த்தல், உணர்தல்! அவ்ளோதான்!’

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 27, 2013 4:16 am

‘புத்தருக்குக் கராத்தே தெரியுமா?’ குறும்புக்காரச் சீடன் ஒருவன் கேட்டான்.

ஜென் குரு சட்டென்று பதில் சொன்னார். ‘தெரியுமே! அவர் பெரிய கராத்தே நிபுணராக இருந்திருக்கவேண்டும் என்பது என் ஊகம்.’

கேட்டவன் முகம் சட்டென்று சுருங்கியது. ‘என்ன குருவே இப்படிச் சொல்லிவிட்டீர்கள்? புத்தர் அமைதியைப் போதித்தவர், அடிதடியை அல்ல, அவருக்கு எதற்குக் கராத்தே?’

குருநாதர் மர்மமாகச் சிரித்தார். ‘புத்தர் கராத்தே, குங்ஃபூ, டேக்வாண்டோவெல்லாம் பழகினாரா என்கிற வம்பு நமக்கு வேண்டாம். ஆனால் இதுபற்றி ஒரு சுவாரஸ்யமான பழங்கதை இருக்கிறது. கேளுங்கள்!’

‘போதிதர்மர் முதன்முறையாக சீனாவுக்குச் சென்றபோது, அங்கே இருந்த துறவிகளைப் பார்த்து அதிர்ந்துபோனார். அவர்கள் மத்தியில் யாருக்கும் தங்களுடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்கிற அக்கறையே இல்லை.’

‘ஆகவே, போதிதர்மர் அவர்களுக்குச் சில எளிய உடற்பயிற்சிகளை, இன்னும் சரியாகச் சொல்வதென்றால் அசைவுகளைச் சொல்லிக்கொடுத்தார். இவற்றைத் தொடர்ந்து செய்வதன்மூலம் துறவிகள் தங்களது உடல்நலத்தைப் பராமரித்துக்கொள்ளமுடிந்தது!’

‘இந்த அசைவுகள்தான், பின்னர் பல மாற்றங்களுடன் சீனத் தற்காப்புக் கலைகளாக வடிவெடுத்ததாகச் சொல்கிறார்கள்’ என்று முடித்தார் குருநாதர். ‘ஒருவிதத்தில், நம்முடைய உடல் ஆரோக்கியத்தை உறுதிசெய்துகொள்வதும் தற்காப்புக் கலைதானே?’

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 27, 2013 4:16 am

டேஷு என்கிற ஜென் மாஸ்டர், நல்ல ஓவியர், பிரமாதமான வாள்வீச்சு நிபுணர்.

அவர் வாழ்ந்த அதே ஊரில் இன்னொரு வாள்வீச்சு வீரனும் இருந்தான். அவனை இதுவரை யாரும் ஜெயித்தது கிடையாது.

இதைப் பற்றிக் கேள்விப்பட்ட டேஷு அந்த வீரனை நேரில் சந்திக்க விரும்பினார். அவனும் வந்தான்.

டேஷு அவனிடம் கேட்டார், ‘நண்பா, நீ இதுவரை கத்திச்சண்டையில் எவரிடமும் தோற்றது கிடையாதாமே, உண்மையா?’

‘நிஜம்தான்!’ பணிவோடு சொன்னான் அவன்.

‘அது எப்படி சாத்தியம்?’ என்றார் டேஷு. ‘உன்னுடைய ரகசியத்தை எனக்குச் சொல்வாயா?’

‘நான் ஒருவரிடம் சண்டை போட ஒப்புக்கொள்வதற்குமுன்னால், அவர் கத்தியை எப்படிப் பிடிக்கிறார் என்பதைக் கூர்ந்து கவனிப்பேன்’ என்றான் அந்த வீரன். ’அதை வைத்துதான் அவரோடு சண்டை போடலாமா, வேண்டாமா என்று தீர்மானிப்பேன்!’

’எப்படி?’

‘ஒருவேளை அவர் கத்தியை இறுகப் பிடித்துக்கொண்டு விறைப்பாக நின்றால், சண்டைக்கு ஒப்புக்கொள்வேன், அவரை ஒரே வீச்சில் என்னால் வீழ்த்திவிடமுடியும்!’ என்றான் அந்த வீரன். ‘அப்படியில்லாமல், அவர் கத்தியின் பிடியை லேசாகப் பற்றியபடி எந்தவிதத்திலும் சுழற்றுவதற்குத் தயாராக இருந்தால், அவரோடு மோதமாட்டேன். சண்டை வேண்டாம் என்று சொல்லி விலகிவிடுவேன்!’

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 27, 2013 4:16 am

அந்தக் கால ஜப்பானில் ஒரு துறவி. அவர் எங்கே சென்றாலும் கையில் ஒரு சிறு கண்ணாடியை எடுத்துப்போவார்.

இதைப் பார்த்த அவரது சிஷ்யர்கள் தங்களுக்குள் பேசிச் சிரித்துக்கொண்டார்கள். ‘நம்ம குருநாதருக்குத் தான் பெரிய அழகன்னு நெனப்புடா. எப்பப்பார் கண்ணாடியில தன் மூஞ்சைத் தானே பார்த்து ரசிச்சுகிட்டு இருக்கார்!’

சிஷ்யர்கள் இப்படிப் பேசுவது குருநாதருக்கும் தெரியும். ஆனால் அவர் தன் பழக்கத்தை மாற்றிக்கொள்ளவில்லை.

ஒருநாள், அந்த ஜென் துறவியைப் பார்க்க ஓர் அரசன் வந்திருந்தான். அவன் ஆசிரமத்தினுள் நுழைந்தபோது, துறவி வழக்கம்போல் தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக்கொண்டிருந்தார்.

இதைக் கவனித்த அரசனுக்கு ஆச்சர்யம். ‘ஐயா, நீங்கள் எல்லாவற்றையும் துறந்த முனிவர். ஆனால் இப்படி அடிக்கடி கண்ணாடியில் முகம் பார்க்கும் ஆசையை மட்டும் தவிர்க்கமுடியவில்லையா?’ என்று நேரடியாகவே கேட்டுவிட்டான்.

துறவி சிரித்தார். ‘அரசனே, எனக்கு ஏதாவது பிரச்னை வந்தால், அந்தப் பிரச்னைக்கு யார் காரணம் என்று தெரிந்துகொள்ள இந்தக் கண்ணாடியைப் பார்ப்பேன். அங்கே தோன்றும் உருவம்தான் என்னுடைய தலைவலிக்கு முழுமுதல் காரணம் என்று புரிந்துகொள்வேன்!’

‘அப்புறம், அந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணவேண்டாமா? அதைச் செய்வதற்குப் பொருத்தமான நபர் யார் என்று தேடுவேன், மறுபடியும் கண்ணாடியைப் பார்ப்பேன். அங்கே தோன்றும் உருவம்தான் இந்தத் தலைவலியைத் தீர்க்கக்கூடிய மருந்து என்று புரிந்துகொள்வேன்.’

‘எப்போதும் இந்தக் கண்ணாடி என்னிடம் இருப்பதால், என்னுடைய நல்லது, கெட்டதுகளுக்கு யார் காரணம் என்கிற உணர்வை நான் மறப்பதில்லை. நீ எப்படி?’

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக