புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
30 வகை டயட் சமையல் - Page 2 Poll_c1030 வகை டயட் சமையல் - Page 2 Poll_m1030 வகை டயட் சமையல் - Page 2 Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
30 வகை டயட் சமையல் - Page 2 Poll_c1030 வகை டயட் சமையல் - Page 2 Poll_m1030 வகை டயட் சமையல் - Page 2 Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
30 வகை டயட் சமையல் - Page 2 Poll_c1030 வகை டயட் சமையல் - Page 2 Poll_m1030 வகை டயட் சமையல் - Page 2 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
30 வகை டயட் சமையல் - Page 2 Poll_c1030 வகை டயட் சமையல் - Page 2 Poll_m1030 வகை டயட் சமையல் - Page 2 Poll_c10 
1 Post - 2%
Balaurushya
30 வகை டயட் சமையல் - Page 2 Poll_c1030 வகை டயட் சமையல் - Page 2 Poll_m1030 வகை டயட் சமையல் - Page 2 Poll_c10 
1 Post - 2%
prajai
30 வகை டயட் சமையல் - Page 2 Poll_c1030 வகை டயட் சமையல் - Page 2 Poll_m1030 வகை டயட் சமையல் - Page 2 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
30 வகை டயட் சமையல் - Page 2 Poll_c1030 வகை டயட் சமையல் - Page 2 Poll_m1030 வகை டயட் சமையல் - Page 2 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
30 வகை டயட் சமையல் - Page 2 Poll_c1030 வகை டயட் சமையல் - Page 2 Poll_m1030 வகை டயட் சமையல் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
30 வகை டயட் சமையல் - Page 2 Poll_c1030 வகை டயட் சமையல் - Page 2 Poll_m1030 வகை டயட் சமையல் - Page 2 Poll_c10 
383 Posts - 49%
heezulia
30 வகை டயட் சமையல் - Page 2 Poll_c1030 வகை டயட் சமையல் - Page 2 Poll_m1030 வகை டயட் சமையல் - Page 2 Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
30 வகை டயட் சமையல் - Page 2 Poll_c1030 வகை டயட் சமையல் - Page 2 Poll_m1030 வகை டயட் சமையல் - Page 2 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
30 வகை டயட் சமையல் - Page 2 Poll_c1030 வகை டயட் சமையல் - Page 2 Poll_m1030 வகை டயட் சமையல் - Page 2 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
30 வகை டயட் சமையல் - Page 2 Poll_c1030 வகை டயட் சமையல் - Page 2 Poll_m1030 வகை டயட் சமையல் - Page 2 Poll_c10 
26 Posts - 3%
prajai
30 வகை டயட் சமையல் - Page 2 Poll_c1030 வகை டயட் சமையல் - Page 2 Poll_m1030 வகை டயட் சமையல் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
sugumaran
30 வகை டயட் சமையல் - Page 2 Poll_c1030 வகை டயட் சமையல் - Page 2 Poll_m1030 வகை டயட் சமையல் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
30 வகை டயட் சமையல் - Page 2 Poll_c1030 வகை டயட் சமையல் - Page 2 Poll_m1030 வகை டயட் சமையல் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
30 வகை டயட் சமையல் - Page 2 Poll_c1030 வகை டயட் சமையல் - Page 2 Poll_m1030 வகை டயட் சமையல் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
30 வகை டயட் சமையல் - Page 2 Poll_c1030 வகை டயட் சமையல் - Page 2 Poll_m1030 வகை டயட் சமையல் - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

30 வகை டயட் சமையல்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 26, 2013 11:07 pm

First topic message reminder :

முட்டைகோஸ் சூப்

தேவையானவை முட்டைகோஸ் - கால் கிலோ, மிளகு, சீரகம், இஞ்சி-பூண்டு விழுது - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை கடாயில் எண்ணெய் விட்டு, மிளகு, சீரகம், இஞ்சி-பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பச்சை வாசனை போனதும், நறுக்கிய முட்டைகோஸ் சேர்த்து வதக்கவும். பிறகு, தண்ணீர் விட்டு அடுப்பை 'சிம்’மில் வைத்து, கால் மணிநேரம் கொதிக்க விடவும். வாசம் வந்ததும், இறக்கி வடிகட்டி, மிதமான சூட்டில் பரிமாறவும்.

குறிப்பு காலையில் தினமும் வெறும் வயிற்றில் பருகி வர, உடல் கொழுப்பு கரையும்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 26, 2013 11:21 pm

கொண்டைக்கடலை மசாலா

தேவையானவை கொண்டைக்கடலை - 200 கிராம், நறுக்கிய வெங்காயம், தக்காளி - தலா 2, சாட் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, தேங்காய்ப் பால் - முக்கால் கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை கொண்டைக்கடலையை ஊற வைத்துக் கழுவி, வேக வைத்து தனியே எடுத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெங்காயம் தாளித்து, தக்காளி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். பச்சை வாசனை போனதும், சாட் மசாலாத்தூளை சேர்த்து நன்கு கலந்து, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். ஒரு கொதி வந்ததும் தேங்காய்ப் பால் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, கொதிக்க விடவும். நல்ல வாசனை வந்ததும், வேக வைத்த கொண்டைக்கடலையைச் சேர்த்து, லேசாகக் கொதிக்க வைத்து இறக்கவும்.

குறிப்பு சப்பாத்தி, பூரிக்குத் தொட்டுக்கொள்ள நல்ல சைட் டிஷ். இதை, காலை நேரத்தில் சாப்பிடுவது உடல் வலுப்பெற உதவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 26, 2013 11:22 pm

புளிப்பு இனிப்பு காளான்

தேவையானவை காளான் - அரை கப், நன்கு கழுவி நறுக்கிய கேரட், குடமிளகாய், பீன்ஸ், காலிஃப்ளவர், உரித்த பட்டாணி கலவை - அரை கப், வெங்காயம் - 1, தக்காளி சாஸ், சர்க்கரை - தேவையான அளவு, கரம் மசாலா - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை சுடுநீரில் காளானைக் கழுவி, தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். நறுக்கிய காய்கறி மற்றும் பட்டாணிக் கலவையை வேக வைத்து, ஆற வைத்து, மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இதனுடன் கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். காளான் தண்டை நீக்கிவிட்டு, அரைத்த விழுதை அந்த இடத்தில் வைத்து ஸ்டஃப் செய்யவும். தக்காளி சாஸ§டன் சர்க்கரையைக் கலந்து கொள்ளவும். ஸ்டஃப் செய்த காளன் மேல் தக்காளி சாஸைத் தடவவும். கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம் போட்டு சிவக்க வறுத்து, சாஸ் தடவிய காளனையும் போட்டு மென்மையாக வதக்கிப் பரிமாறவும்.

குறிப்பு காய்கறிகள் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள், அனைத்து விட்டமின்களும், தாது சத்துக்களும் நிறைந்த இதனை விரும்பிச் சாப்பிடுவார்கள். இதைக் கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு நிரம்பிய உணர்வு வரும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 26, 2013 11:22 pm

முளைகட்டிய தானிய சப்பாத்தி

தேவையானவை பாசிப்பருப்பு, கம்பு, ராகி, கொண்டைக்கடலை - தலா ஒரு கப், மைதா - கால் கிலோ, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை தானியங்கள் அனைத்தையும் முதல் நாள் இரவே தனித்தனியாக ஊற வைத்துக் கழுவி, தனித்தனியாக ஒரு துணியில் கட்டி வைக்கவும். மறுநாள் காலையில், அவை நன்றாக முளை விட்டிருக்கும். முளைகட்டிய தானியங்களை ஒன்றாகக் கலந்து அரைத்து, உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். மைதா மாவில் உப்பு, தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊற விடவும். மாவை சிறு கிண்ணம் போல் உருட்டி அதில் அரைத்த தானியக் கலவையை கொஞ்சமாக உள்ளே வைத்து, சப்பாத்திக் கல்லில் மெதுவாக உருட்டவும். தேய்த்த பரோட்டாக்களை தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் கொஞ்சமாக எண்ணெய் விட்டு, வேக வைத்து சுட்டெடுக்கவும்.

குறிப்பு முளைகட்டிய தானியங்களில் அனைத்துச் சத்துக்களும் ஒருங்கே கிடைக்கும். இதனை காலை, இரவு நேர டிபனாக அடிக்கடி சாப்பிட்டு வர... சத்துக் குறைபாடுகள் நீங்கி, உற்சாகமாக இருக்க வைக்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 26, 2013 11:23 pm

வாழைப்பூ அடை

தேவையானவை ஆய்ந்து நறுக்கிய வாழைப்பூ - ஒரு கப், அரிசி - ஒரு கப், உளுந்து - கால் கப், கடலைப்பருப்பு - கால் கப் வெங்காயம் - 3, கடுகு - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, பச்சை மிளகாய் - 3, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை அரிசி, உளுந்து, கடலைப்பருப்பைத் தனியாக ஊற வைத்துக் கழுவி, அரைத்து ஒன்றாகக் கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளித்து, அரைத்த மாவில் கொட்டவும். நறுக்கிய வாழைப்பூ, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து அடை மாவு பத்தத்தில் கலந்து கொள்ளவும். தோசைக்கல்லில் அடைகளாக வார்த்து இருபுறமும் லேசாக எண்ணெய் விட்டு, வேக வைத்து சுட்டு எடுக்கவும்.

குறிப்பு வாழைப்பூ வடை, அதிக எண்ணெய் இழுக்கும். ஆனால், குறைவான எண்ணெயைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த அடை, ஆரோக்கியமான உணவாகும். அதிக நேரம் பசி தாங்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 26, 2013 11:23 pm

பார்லி மசாலா சாதம்

தேவையானவை பார்லி, பீன்ஸ் - தலா 100 கிராம், வெங்காயம், தக்காளி - தலா 2, பட்டை, கிராம்பு - தலா 1, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை பார்லி, பீன்ஸை நன்கு ஊற வைத்து, வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, இஞ்சி- பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம், தாளித்துக் கொள்ளவும். நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கியதும், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து, எல்லாம் ஒன்றாகக் கலந்து வரும் வரை வதக்கவும். வேக வைத்த பார்லி, பீன்ஸை சேர்த்து நன்றாகக் கலந்து சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு பார்லியில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது; உடல் பருமனை குறைக்கும். பார்லியை வெறுமனே சாப்பிடப் பிடிக்காதவர்கள் இவ்வாறு செய்து சாப்பிட... சுவையாக இருக்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 26, 2013 11:24 pm

சௌசௌதர்பூசணி தோல் துவையல்

தேவையானவை சௌசௌ தோல், தர்பூசணி தோல் கலவை - ஒரு கப், சின்ன வெங்காயம் - 10, கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை சௌசௌ, தர்பூசணி தோலை நன்கு கழுவிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் இரண்டையும் வறுக்கவும். கழுவிய காய்கறித் தோல், உரித்த சின்ன வெங்காயம் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். ஆற வைத்து உப்பு சேர்த்து அரைக்கவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டி, கலந்து பரிமாறவும்.

குறிப்பு காய்கறிகளின் தோலின் அடிப்புறத்தில்தான் அதிகமான விட்டமின்களும், தாது உப்புக்களும் நிறைந்து இருக்கின்றன. அவற்றை நாம் சீவி, எறிந்து விடுவதால், முழுமையான சத்துக்கள் கிடைப்பதில்லை. இவ்வாறு துவையல் செய்து சாப்பிடுவதால் அந்தச் சத்துக்கள் கிடைக்கும். தோல் துவையலின் சுவையும் வித்தியாசமாக இருக்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 26, 2013 11:25 pm

உருளைக்கிழங்கு பருப்புக் கூட்டு

தேவையானவை உருளைக்கிழங்கு - கால் கிலோ, கடலைப்பருப்பு 2 டேபிள்ஸ்பூன், தக்காளி - 2, வெங்காயம் - 2, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 2, மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை உருளைக்கிழங்கை மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கிக் கழுவிக் கொள்ளவும். கடலைப்பருப்பைக் கழுவி, இரண்டையும் ஒன்றாக சேர்த்து வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளிக்கவும். பிறகு, கிள்ளிய காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி, நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும். நறுக்கிய தக்காளி சேர்த்து, அது நன்கு கரையும் வரை வதக்கவும். மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். கிரேவி பதம் வந்ததும், வேக வைத்தவற்றைச் சேர்த்துக் கலந்து மிதமான தீயில் வைத்து, 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்.

குறிப்பு சாதம், சப்பாத்தி, பூரிக்குத் தொட்டுக் கொள்ளலாம். காலை, மதிய நேரங்களில் இதைச் சாப்பிடுவதே உகந்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 26, 2013 11:25 pm

மக்காச்சோள ரொட்டி

தேவையானவை சோள மாவு - ஒரு கப் (பெரிய மளிகைக் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் காதிகிராஃப்ட் கடைகளில் கிடைக்கும்), மைதா மாவு - கால் கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை சோள மாவு, மைதா மாவை ஒன்றாகக் கலக்கவும். உப்பு, தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். அதிக நேரம் ஊற வைக்கத் தேவையில்லை. பிசைந்த மாவிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திக் கல்லில் போட்டு ரொட்டிகளாகத் தேய்த்துக் கொள்ளவும். சூடான தோசைக் கல்லில் போட்டு, இருபுறமும் கொஞ்சமாக எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

குறிப்பு மக்காச்சோளத்தின் பயன்பாடு குறைந்து வருகிறது. ஆனால், உடல் எடை குறைப்புக்கு இது அதிகம் உதவும் என்பதால்தான், கார்ன்ஃப்ளேக்ஸ்கள் அதிகம் விற்கப்படுகின்றன. இப்படி ரொட்டி செய்து சாப்பிடும்போது மக்காச்சோளத்தின் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 26, 2013 11:26 pm

வீட் எனர்ஷி டிரிங்க்

தேவையானவை கோதுமை, பாசிப்பருப்பு - தலா 100 கிராம், சின்ன வெங்காயம் - 5, இஞ்சி - சிறு துண்டு, பூண்டு - 3 பல், கொத்தமல்லி - சிறிதளவு, மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு.

செய்முறை கோதுமை, பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். அதனைக் கழுவி, உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்து, 3 விசில் வந்ததும் இறக்கவும். ஆவி போனதும் குக்கர் மூடியைத் திறந்து, வெந்த கோதுமை-பாசிப்பருப்பை வெளியே எடுக்கவும். இதை ஆற வைத்து, இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். வடிகட்டி, மிளகுத்தூள், நறுக்கிய கொத்தமல்லி சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

குறிப்பு கோதுமையை வழக்கமான முறையில் இல்லாமல் இப்படி வித்தியாசமாக செய்து சாப்பிடும்போது, அதிலுள்ள முழுச் சத்தும் கிடைக்கிறது. மற்ற பானங்களைவிட, இது அதிக நேரம் பசி தாங்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 26, 2013 11:27 pm

துவரம்பருப்பு சூப்

தேவையானவை துவரம்பருப்பு - 100 கிராம், இஞ்சி, பூண்டு - தலா 5 கிராம், உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு, கொத்துமல்லி - சிறிதளவு, வெங்காயம் - 1.

செய்முறை துவரம்பருப்பைக் கழுவி நன்றாக வேகவிடவும். வெந்ததும், வடிகட்டவும். வடிகட்டிய நீரில் அரைத்த இஞ்சி-பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து மிதமான தீயில் ஒருமுறை கொதிக்க விடவும். அடுப்பிலிருந்து இறக்கியதும் பரிமாறுவதற்கு முன் மிளகுத்தூள், நறுக்கிய கொத்தமல்லி தூவிக் கலந்து பரிமாறும்.

குறிப்பு பசியைத் தூண்டும் தன்மையுள்ள, புரோட்டீன் சத்து நிறைந்த சூப் இது. உடல் எடை குறைப்பு முயற்சியில் உள்ளவர்கள், வாரத்தில் இரண்டு நாட்கள் இதனைச் சாப்பிடலாம்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக