புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாங்க அழுக்கு மூட்டைன்னா நல்ல மூட்டை எது? - பொதுக்கூட்டங்களில் தி.மு.க. புள்ளிகள் Poll_c10நாங்க அழுக்கு மூட்டைன்னா நல்ல மூட்டை எது? - பொதுக்கூட்டங்களில் தி.மு.க. புள்ளிகள் Poll_m10நாங்க அழுக்கு மூட்டைன்னா நல்ல மூட்டை எது? - பொதுக்கூட்டங்களில் தி.மு.க. புள்ளிகள் Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி

1 Post - 25%
ayyasamy ram

இந்த மாத அதிக பதிவர்கள்

285 Posts - 45%

238 Posts - 37%
mohamed nizamudeen
நாங்க அழுக்கு மூட்டைன்னா நல்ல மூட்டை எது? - பொதுக்கூட்டங்களில் தி.மு.க. புள்ளிகள் Poll_c10நாங்க அழுக்கு மூட்டைன்னா நல்ல மூட்டை எது? - பொதுக்கூட்டங்களில் தி.மு.க. புள்ளிகள் Poll_m10நாங்க அழுக்கு மூட்டைன்னா நல்ல மூட்டை எது? - பொதுக்கூட்டங்களில் தி.மு.க. புள்ளிகள் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாங்க அழுக்கு மூட்டைன்னா நல்ல மூட்டை எது? - பொதுக்கூட்டங்களில் தி.மு.க. புள்ளிகள் Poll_c10நாங்க அழுக்கு மூட்டைன்னா நல்ல மூட்டை எது? - பொதுக்கூட்டங்களில் தி.மு.க. புள்ளிகள் Poll_m10நாங்க அழுக்கு மூட்டைன்னா நல்ல மூட்டை எது? - பொதுக்கூட்டங்களில் தி.மு.க. புள்ளிகள் Poll_c10 
21 Posts - 3%

20 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாங்க அழுக்கு மூட்டைன்னா நல்ல மூட்டை எது? - பொதுக்கூட்டங்களில் தி.மு.க. புள்ளிகள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 26, 2013 5:10 pm

எல்லா கட்சிகளையும் திட்டித் தீர்த்த தி.மு.க. பொதுக்குழு, தமிழக அரசியல் களத்தை ஏகத்துக்கும் சூடாக்கிவிட்டது. 'காங்கிரஸும் வேண்டாம்; பி.ஜே.பி-யும் வேண்டாம்’ என்று பொதுக்குழுவில் தேசிய கட்சிகளை தி.மு.க. கழற்றிவிட்டதோடு, காங்கிரஸையும் ஏகத்துக்கும் காய்ச்சி எடுத்தனர். அதனையடுத்து, காங்கிரஸ் பிரமுகர்களும் தி.மு.க. மீது பாய்ச்சலைக் காட்டினார்கள்.

இந்த நிலையில் 21-ம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. அனைத்து இடங்களிலும் சொல்லிவைத்ததுபோல் காங்கிரஸ் மீது காட்டமான விமர்சனம்.

சாம்பிளுக்கு சிலருடைய பேச்சுக்கள் இதோ...

''ஒன்பது மாதங்களுக்கு முன்பே...''

நாங்க அழுக்கு மூட்டைன்னா நல்ல மூட்டை எது? - பொதுக்கூட்டங்களில் தி.மு.க. புள்ளிகள் P12

செங்கல்பட்டில் நடந்த பொதுக்குழு தீர்மான விளக்கக் கூட்டத்தில் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். நாடாளுமன்றத்தைப் போன்ற மேடை. அதில் எம்.பி-க்கள் அமர்வது போன்ற இருக்கைகள். 'பணி செய்வோம்... பகை முடிப்போம்’ என மேடைக்குப் பக்கத்திலேயே டிஜிட்டல் பேனர்.

ஸ்டாலின் பேசும்போது, ''பொதுவாக பொதுக்குழுவில் யாரோடு கூட்டணி என்றுதான் முடிவெடுப்பார்கள். ஆனால், நம்முடைய பொதுக்குழுவில் யாரோடும் கூட்டணி இல்லை என்று முடிவெடுத்திருப்பதால், கட்சியினரிடையே புதிய உத்வேகம் வந்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று சொன்னால், இது திடீரென்று எடுத்த முடிவா? எத்தனையோ முறை நாம் காங்கிரஸோடு கூட்டணி வைத்திருக்கிறோம். எத்தனையோ முறை நாம் அந்தக் கட்சியில் இருந்து விலகி வெளியே வந்திருக்கிறோம். தேர்தல் வருகிற நேரத்தில், நம்முடைய கொள்கைகளைப் பொறுத்து, லட்சியத்தைப் பொறுத்து, அன்றைய தட்பவெட்ப சூழ்நிலையைப் பொறுத்து கூட்டணி வைப்போம்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து, இப்போது விலகிவிட்டோம் என்று சொல்கிறார்கள். ஒன்பது மாதங்களுக்கு முன்பு அமைச்சரவையில் இருந்து விலகியபோதே, கூட்டணியில் இருந்தும் வெளியே வந்தாகிவிட்டது. அது ஏன் அவர்களுக்குப் புரியவில்லை. 'இலங்கையில் இருக்கக் கூடிய தமிழர்களைக் காப்பாற்ற, ஐ.நா. மன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்ற இந்தியா முன்வர வேண்டும். இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றக் கூடாது’ என தமிழகத்தில் ஆட்சியில் இருந்தபோதும், மத்தியில் அமைச்சரவையில் இருந்தபோதும் பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து வைத்திருக்கிறோம். இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்காக தி.மு.க. குரல் கொடுக்கும்போது அவர்கள் செவிசாய்க்கவில்லை. இனி, அவர்களுடன் உறவு வைத்துக்கொள்வதில் நியாயம் இல்லை என பலமுறை எச்சரித்து எச்சரித்து ஒன்பது மாதங்களுக்கு முன்பு விடுதலை பெற்றோம்.''

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 26, 2013 5:11 pm

''மோடி தகுதியானவர் இல்லை!''

நாங்க அழுக்கு மூட்டைன்னா நல்ல மூட்டை எது? - பொதுக்கூட்டங்களில் தி.மு.க. புள்ளிகள் P12a

மதுரை ஆரப்பாளைத்தில் நடந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் சிறப்புரை ஆற்றினார். ''காங்கிரஸ், பி.ஜே.பி. என இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆண்டார்கள். ஆனால், நாட்டு மக்களுக்கு எதுவும் நடக்கவில்லை. எங்கு பார்த்தாலும் மோடி அலை இருப்பதாக சொல்லப்படுகிறது. மோடி மீது பல்வேறு கலவர சம்பவங்களில் தொடர்பு இருக்கிறது. பிரதமர் வேட்பாளருக்கு மோடி தகுதியானவர் இல்லை. மோடி ஆட்சிக்கு வந்தால், சிறுபான்மையினருக்கு இந்த நாட்டில் பாதுகாப்பு இருக்காது. தலைவர் கலைஞர் யாரை கை நீட்டுகிறாரோ, அவர்தான் பிரதமர்'' என்றவர், ஏனோ காங்கிரஸைப் பற்றி விமர்சனம் செய்யவில்லை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 26, 2013 5:12 pm

பிரதமருக்கும் நிதி அமைச்சருக்கும் சவால்!

நாங்க அழுக்கு மூட்டைன்னா நல்ல மூட்டை எது? - பொதுக்கூட்டங்களில் தி.மு.க. புள்ளிகள் P12b

கடலூர் கூட்டத்தில் தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா கலந்துகொண்டார். சாதாரண தெருமுனைக் கூட்டம் என்றாலே ஃப்ளெக்ஸ் பேனர், தோரணங்களால் அசத்தும் தி.மு.க-வினர், இந்தப் பொதுக்கூட்டத்துக்கு ஏனோ அதைப்பற்றி கண்டுகொள்ளவே இல்லை. பொதுகூட்ட மேடைக்குப் பக்கத்தில் மட்டும் சில ஃப்ளெக்ஸ் பேனர்கள் கடமைக்குக் கட்டப்பட்டிருந்தது.

மைக் பிடித்த ராசா, ''பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் சவால் விடுகிறேன். நான் பதவி ஏற்றபோது என்னுடைய சொத்துக்கள் எவ்வளவு, கைதானபோது என்னுடைய சொத்துக்கள் எவ்வளவு என்று வித்தியாசத்தைப் பாருங்கள். சொத்துக்கள் அதிகரித்திருந்தால், நான் வழக்கை நிறுத்திவிட்டு பத்தாண்டுகள் சிறைக்குச் செல்ல தயாராக இருக்கிறேன்'' என்றதும் கூட்டத்தின் கரவொலி அடங்க வெகுநேரம் ஆனது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 26, 2013 5:13 pm

''காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்யத் தயாரா?'' புதுக்கோட்டையில் டி.ஆர்.பாலு!

நாங்க அழுக்கு மூட்டைன்னா நல்ல மூட்டை எது? - பொதுக்கூட்டங்களில் தி.மு.க. புள்ளிகள் P12c

''இப்போது எங்கு பார்த்தாலும் மோடி அலை வீசுகிறது. அதற்குக் காரணம் கோடிக்கணக்கில் பணம் வைத்துக்கொண்டு காத்திருக்கும் பல நிறுவனங்கள்தான். தங்களுடைய பிசினஸுக்காக பல கிளைகளைத் திறந்துவைத்துக்கொண்டு, ஃபேஸ்புக் மற்றும் இன்டர்நெட் மூலம் மோடிக்கு ஆதரவாக பிரசாரத்தைத் தொடங்கியுள்ளனர். இங்கிருக்கும் இளைஞர்கள் அதைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். எதிர்ப்பே இல்லாமல் ஆடிக்கொண்டிருக்கிறார் மோடி.

இங்கிருக்கும் மீனவர்களை அடித்துத் துன்புறுத்தும் இலங்கை ராணுவத்துக்குப் பயிற்சி அளிக்கக் கூடாது என்று சொன்னோம். அதை கேட்கவில்லை. தலித் என்ற ஒரே காரணத்துக்காக ஆ.ராசாவை கைது செய்தார்கள். 'கனிமொழிக்கு ஆதரவு கேட்கும்போது காங்கிரஸின் துரோகம் தெரியவில்லையா?’ என ஞானதேசிகன் கேட்கிறார். 'கனிமொழி எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்’ என்கிறார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். ராஜ்யசபா தேர்தலின்போது நான் சோனியாவிடமே பேசினேன். அவர் சில மினிஸ்டர்களை பார்க்கச் சொன்னார். அவர்களிடம், 'எங்கள் கட்சியை விட்டுவிட்டு நடிகர் கட்சிக்கு எப்படி ஆதரவு தரலாம்’ என்றேன். அவர்களும் ஒப்புக்கொண்டார்கள். இப்படி இருக்கும்போது எம்.பி. பதவியை ராஜினாமா செய்யச் சொல்வதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? சரி, நாங்க ராஜினாமா செய்றோம்னே... வெச்சிக்கங்க. எங்களால ஜெயிச்ச காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்யத் தயாரா?'' என சவால்விட்டார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 26, 2013 5:13 pm

''நாங்க உடைச்சா பொன் குடம்.. நீங்க உடைச்சா மண் குடமா?''

நாங்க அழுக்கு மூட்டைன்னா நல்ல மூட்டை எது? - பொதுக்கூட்டங்களில் தி.மு.க. புள்ளிகள் P12d

திருச்சி கூட்டத்தில் கே.என்.நேரு காங்கிரஸை வறுத்து எடுத்தார். 'நன்றி மறந்தவர் கலைஞர்தான்’ என்று ஜூ.வி-யில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சீறியதற்கு கடுமையாக பதிலடி கொடுத்தார்.

''எம்.ஜி.ஆர், சம்பத், எஸ்.எஸ்.ராஜேந்திரனை எல்லாம் தலைவர் ஏமாற்றிவிட்டதாக இளங்கோவன் புகார் வாசிக்கிறார். நாங்க என்ன சங்கர மடமா நடத்துகிறோம்? ஒரு கட்சின்னா அதுல இருக்குற தலைவர்கள் தங்களோட பதவியைக் காப்பாத்திக்க சிலபல வேலைகளைச் செய்ய வேண்டியது இருக்கும். அது சிலரை ஏற்றிவிடலாம். சிலரை இறக்கிவிடலாம். இது சகஜம்தான்.

தி.மு.க. உதவியோடுதான் காங்கிரஸால் 10 வருடங்கள் மத்தியில் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. முதலில் 1975-ல் காங்கிரஸ்தான் தி.மு.க. கூட்டணியை நாடியது. பின்னர் அதுவே 1976-ல் மிசா சட்டம் மூலம் தி.மு.க. ஆட்சியை டிஸ்மிஸ் செய்தது. மீண்டும் 1980-ல் இந்திரா காந்தி ஆதரவு கேட்டார். சோனியாவுக்கு காங்கிரஸிலேயே மதிப்பு இல்லாமல் இருந்தது. தி.மு.க-வுடன் கூட்டணி வைத்த பிறகுதான் அவர்களால் ஆட்சியையே பிடிக்க முடிந்தது. மைனாரிட்டி காங்கிரஸுக்கு அன்று கை கொடுத்தது கலைஞர்தான். தி.மு.க. என்றுமே காங்கிரஸை நாடியது இல்லை. அவர்கள்தான் கூட்டணி வேண்டும் என்று வந்தார்கள். ஒவ்வொரு முறை தி.மு.க-வைப் பயன்படுத்திவிட்டு கழுத்தறுப்பதும் காங்கிரஸ்தான்.

இன்னிக்கு கனிமொழி எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய சொல்றவங்க அன்னிக்கே தே.மு.தி.க-வுக்கு ஆதரவு கொடுத்திருக்க வேண்டியதுதானே? ஏன் கொடுக்கல? தி.மு.க. கூட சேர்ந்தா நாடாளுமன்றத் தேர்தல்ல பயன் கிடைக்கும்னுதானே! கலைஞரை ஆட்சியில், கூட்டணியில் இருக்கும்போதே விமர்சித்த இளங்கோவன், இன்னிக்கு முதல்வரா இருப்பவரை விமர்சிக்க முடியுதா? ஒரு வழக்குக்கே பயந்து ஒடுங்கிட்டார்.

அமலாக்கத் துறையில் ராசா மேல் தவறு இல்லைன்னு சொல்லிடாங்க. வருமான வரித் துறையும் சொல்லிருச்சு. ஒதுக்கீடு செய்ததில்தான் முறைகேடு. அது பிரதமர், நிதியமைச்சர் முன்னிலையில்தான் செய்யப்பட்டிருக்குது. அப்போ குற்றவாளி யாருன்னு உங்களுக்கே தெரியும். 2ஜி வழக்கை நைஸாக எங்கள் மேல் தள்ளிவிட்டு, நாங்கள் ஏதோ பெரிய ஊழல் செய்ததுபோல பிம்பம் உருவாக்கி, மக்களைக் குழப்பி ஆட்சியை இழக்கவைத்தது காங்கிரஸ்தான். இன்னிக்கு ராசாவைப் பார்த்து காங்கிரஸ் பயப்படுது. 1.76 லட்சம் கோடி ஊழல்னு பொய் குற்றச்சாட்டு சொன்னீங்களே... நிலக்கரி ஏல விவகாரத்தில் 2.20 லட்சம் கோடி ஊழலுக்குப் பதில் என்ன? நாங்க உடைச்சா பொன் குடம். நீங்க உடைச்சா மண் குடமா?

காங்கிரஸ்காரர்களே... 'நாங்க அழுக்கு மூட்டையை இறக்கி வெச்சுட்டோம்’னு சொல்றீங்களே. சரி, இனிமே நீங்க நல்ல மூட்டையை தூக்கிட்டு பார்லிமென்ட் போக வேண்டியதுதானே? நாங்க உங்களை வேணாம்னு சொன்னதுக்கு எதுக்கு கரிச்சு கொட்டுறீங்க? நாங்க ஒண்ணும் இன்னிக்கு வெளியில வரல. உள்ளாட்சித் தேர்தல்லேயே வெளியில வந்துட்டோம். அப்பவே தனிச்சு விடப்பட்டுட்டீங்க. அந்தத் தேர்தல்ல உங்களால ஜெயிக்க முடியலையே!'' என்று முடித்தபோது அடைமழை பெய்து ஓய்ந்ததுபோல இருந்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 26, 2013 5:15 pm

''முதுகில் குத்திய காங்கிரஸ்!''

நாங்க அழுக்கு மூட்டைன்னா நல்ல மூட்டை எது? - பொதுக்கூட்டங்களில் தி.மு.க. புள்ளிகள் P13

சேலம் கூட்டத்தில் நடிகை குஷ்புவின் பேச்சைக் கேட்க கட்சித் தொண்டர்கள் பலரும் ஆர்வத்துடன் வந்திருந்தனர். ''இந்திய அரசியல் வரலாற்றில் கோபாலபுரம் கதவைத் தட்டித்தான் வி.பி.சிங், ஐ.கே.குஜரால், வாஜ்பாய், தேவகவுடா, சோனியா ஆட்சி அமைத்திருக்கிறார்கள். கலைஞர் யாரை கையை காட்டுகிறாரோ அவர்தான் அடுத்த பிரதமர் ஆக முடியும்.

இன்று தமிழ்நாட்டுல ஒரு காமெடி நடக்கிறது. ஜெயலலிதா பிரதமர் ஆகி இந்தியாவைக் காப்பாற்ற போறாங்களாம். முதல்ல தமிழ்நாட்டை காப்பாற்றுங்க மேடம். அ.தி.மு.க-வில் சுயமரியாதையே இல்லை. அந்த அம்மா நிற்கும்போது ஒரு மினிஸ்டர் படுத்து கும்பிடுகிறார். அடுத்தவர் முக்கால்வாசி குனிந்து கும்பிடுகிறார். அதற்கடுத்தவர் அரைவாசி குனிந்து கும்பிடுகிறார். இப்படி வரிசையாக குனிந்து இருக்கிறார்கள். இதை பார்க்கும்போது பாட புத்தகத்தில் குரங்கில் இருந்து மனிதன் தோன்றிய படம்போல இருக்கிறது. இது கேவலமான செயல்'' என்று அ.தி.மு.க-வை போட்டுத் தாக்கியவர்,

''காங்கிரஸ் நம்மை ஏமாற்றி நம் முதுகிலேயே சவாரி செய்து நம்மையே முதுகில் குத்தி இருக்கிறது. அவங்​களுக்குத் தேவைப்படும்போது நம்மை பயன்​படுத்திட்டாங்க. தேவைப்படாதபோது தூக்கி எறிந்திருக்கிறார்கள்'' என்று காங்கிரஸை விமர்சித்து முடித்தார்.

விகடன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக