புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜாஜி என்ற ராஜரிஷி Poll_c10ராஜாஜி என்ற ராஜரிஷி Poll_m10ராஜாஜி என்ற ராஜரிஷி Poll_c10 
60 Posts - 48%
heezulia
ராஜாஜி என்ற ராஜரிஷி Poll_c10ராஜாஜி என்ற ராஜரிஷி Poll_m10ராஜாஜி என்ற ராஜரிஷி Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
ராஜாஜி என்ற ராஜரிஷி Poll_c10ராஜாஜி என்ற ராஜரிஷி Poll_m10ராஜாஜி என்ற ராஜரிஷி Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ராஜாஜி என்ற ராஜரிஷி Poll_c10ராஜாஜி என்ற ராஜரிஷி Poll_m10ராஜாஜி என்ற ராஜரிஷி Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
ராஜாஜி என்ற ராஜரிஷி Poll_c10ராஜாஜி என்ற ராஜரிஷி Poll_m10ராஜாஜி என்ற ராஜரிஷி Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ராஜாஜி என்ற ராஜரிஷி Poll_c10ராஜாஜி என்ற ராஜரிஷி Poll_m10ராஜாஜி என்ற ராஜரிஷி Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ராஜாஜி என்ற ராஜரிஷி Poll_c10ராஜாஜி என்ற ராஜரிஷி Poll_m10ராஜாஜி என்ற ராஜரிஷி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜாஜி என்ற ராஜரிஷி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 25, 2013 10:52 pm

ராஜாஜி என்ற ராஜரிஷி KA6vsMtQRKi5tWBCdBdg+rajaji_archive_1697773h

பழைய சேலம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த ஓசூருக்கு அருகில் உள்ள தொரப்பள்ளி கிராமத்தில் ஐந்து ரூபாய் மாத ஊதியத்தில் குடும்பம் நடத்திய சக்கரவர்த்தி ஐயங்காருக்கு மகனாகப் பிறந்த ராஜாஜி, சுதந்திர இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக உயர்ந்தார். சேலத்தில் ஒரு வழக்குக்கு 1,000 ரூபாய் ஊதியம் பெறும் புகழ்பெற்ற வழக்கறிஞராக வலம்வந்த ராஜாஜி, காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு வழக்கறிஞர் தொழிலிலிருந்து விடுபட்டார்: “ஒரு விலைமாது தன் உடலைப் பணத்துக்கு விற்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அதை என்னால் மன்னிக்கவும் முடியும். ஆனால், தன் அறிவை விலைபேசும் ஒரு வழக்கறிஞரை என்னால் மன்னிக்க முடியாது. இத்தொழிலை விட்டு விலகும் நாளை நான் ஆவலுடன் எதிர்பார்த்தேன்” என்றார்.

தொண்டூழியம்

சின்னஞ்சிறு வயதிலேயே ஐந்து குழந்தைகளுக்குத் தாயான அலர்மேலு மங்கம்மாள் ராஜாஜியின் மடியில் மரணித்த போது, ராஜாஜிக்கு 37 வயது. மனைவியிடம் அளவற்ற அன்பைப் பொழிந்தவர் மறுமணம் செய்துகொள்ளாமல் தேசத்தொண்டில் முற்றாக மூழ்கினார். சேலம் நகரசபைத் தலைவராக 1917-ல் பொறுப்பேற்ற ராஜாஜி, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஊழியரை அக்கிரகாரக் குழாய்களைக் கையாளும் பணியில் அமர்த்திச் சனாதனிகளின் எதிர்ப்பைப் பெற்றார். சகஜானந்தா என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த துறவிக்கு அளிக்கப்பட்ட விருந்தில் பங்கேற்றதால், அவரது குடும்பம் ‘சாதி பிரஷ்டம்’ செய்யப்பட்டது.

நகரசபைத் தலைவராக இருந்த ராஜாஜி, ஊதியம் பெறாமல் ஒவ்வொரு நாளும் ஆறு மணி நேரம் நகரசபை அலுவலகத்தில் சமூகக் கடனாற்றினார். சென்னை மாகாணத்தின் பிரதமராக 1937-ல் பொறுப்பேற்றபோது அரசு நிர்ணயித்த ஆண்டு ஊதியம் 56 ஆயிரம் ரூபாயை ஏற்க மறுத்து… வீட்டு வாடகை, போக்குவரத்துச் செலவு உட்பட ஒன்பதாயிரம் ரூபாயை மட்டுமே பெறுவதற்கு இசைந்த பெருமகன் ராஜாஜி.

சுதந்திர இந்தியாவில் தமிழகத்தின் முதல்வராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் விடுதலை வேள்வியில் ஈடுபட்ட தியாகிகளுக்கு அரசு நிலத்தை இலவசமாக வழங்கியபோது, அதைக் கடுமையாக எதிர்த்த ராஜாஜி தனக்கு இலவச நிலம் வழங்கப்படலாகாது என்று மறுதலித்தார்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 25, 2013 10:53 pm


முன்னோடி ஆசிரமம்

சென்னைக்கு ‘இந்து’ கஸ்தூரிரங்க ஐயங்காரின் அழைப்பை ஏற்று வந்த காந்தி, ராஜாஜி வீட்டில் தங்கியிருந்தபோதுதான் ‘ரௌலட்’ சட்டத்தை எதிர்த்து ‘ஹர்த்தால்’ நடத்த வேண்டும் என்ற எண்ணம் கண்ணயர்ந்த நிலையில் ஒரு கனவுபோல் உதித்தது. காந்தியின் ‘மனச்சான்றுக் காவலர்’ ராஜாஜி, காந்தியத்தைத் தமிழ் மண்ணில் வளர்த்தெடுக்க சேலத்துக்கு அருகில் புதுப்பாளையம் என்ற எந்த வசதியுமற்ற கிராமத்தில் ஆசிரமம் அமைத்து, ஓலைக்கூரை வேய்ந்த குடிசையில் வாழ்ந்தபடி அரும்பணி ஆற்றினார். பல்வேறு சாதிகளைச் சேர்ந்த 17 பேர் கொண்ட அந்த ஆசிரமம் தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு, கதர் உற்பத்தி ஆகியவற்றில் ஈடுபட்டது.

மதுவிலக்கே உயிர்க் கொள்கை

மதுவிலக்கு ஒன்றுதான் மூதறிஞர் ராஜாஜியின் உயிர்க் கொள்கையாக விளங்கியது. வெள்ளையர் ஆட்சியில் சென்னை மாகாணப் பிரதமராகப் பொறுப்பேற்று மூன்று மாதங்கள் முடிவதற்கு முன்பே, தன்னுடைய சொந்த மாவட்டமான சேலத்தில் மதுவிலக்கை நாட்டிலேயே முதன்முறையாக ராஜாஜி நடைமுறைப்படுத்தினார். நிலவரியும் கள்ளுக்கடை ஏலமும்தான் அன்று அரசின் முக்கிய வருவாய். மதுவிலக்கினால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட, ஆசியாவிலேயே முதன்முதலாக 1939-ல் ராஜாஜி விற்பனை வரியை அறிமுகப்படுத்தினார். இன்று எல்லா மாநில அரசுகளுக்கும் கொழுத்த வருவாயை அவர் கண்டெடுத்த விற்பனை வரியே அள்ளிக் குவிக்கிறது. அதே நேரத்தில், மதுவின் விற்பனையும் கொடிகட்டிப் பறப்பதுதான் கொடுமையிலும் கொடுமை.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 25, 2013 10:53 pm


சூதாடிகளா நாடாளுநர்கள்?

அண்ணாவின் தி.மு.க. 1967-ல் ஆட்சி பீடத்தில் அமர்வதற்கு ராஜாஜியின் பங்களிப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அவரது கடுமையான காங்கிரஸ் எதிர்ப்பை அண்ணா அரசியல் சாதுரியத்துடன் பயன்படுத்திக்கொண்டார். 1967-ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் எட்டு மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியதும் தன்னுடைய சுதந்திரா கட்சி ஒடிசாவில் அதிகாரத்தைக் கைப்பற்றியதும் தந்த மகிழ்ச்சியைவிட, தமிழகத்தில் காங்கிரஸ் மண்ணைக் கவ்விய காட்சியே ராஜாஜிக்கு அளவற்ற மகிழ்ச்சியைத் தந்தது. ஆனால், அண்ணாவின் அரசு லாட்டரி விற்பனையில் ஈடுபட்டபோது அவருடைய இதயம் வலித்தது.

“அரசு லாட்டரி விற்பனையை நடத்துவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது. இது ஏழை மக்களிடமிருந்து பணத்தைத் திருடுவதற்கு ஒப்பானது. ஒரு மாநில அரசு வருவாயைக் கருதி லாட்டரியை நடத்துமானால், சூதாட்ட நிலையங்களை நடத்துவோரைத் தண்டிக்கும் தார்மீக உரிமை அதற்கு எப்படி இருக்க முடியும்?” என்று வேதனையை வெளிப்படுத்தினார் ராஜாஜி. கலைஞர் கருணாநிதி 1972-ல் மதுக்கடைகளைத் திறந்தபோது, சொல்லில் அடங்காத சோகத்தில் ஆழ்ந்தார் அந்த மூதறிஞர்.

ஆந்திரமும் தமிழகமும் ஒன்றுபட்டிருந்த சென்னை மாகாணத்தின் பிரதமர், வங்கத்தின் ஆளுநர், இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல், மத்திய அரசின் உள்துறை அமைச்சர், மீண்டும் தமிழக முதல்வர், காந்தி-நேரு-படேல்-ஆசாத்-ராஜேந்திர பிரசாத் ஆகியோருக்கு இணையாக நாட்டு மக்களால் போற்றப்பட்டவர். 93 வயதான முதுபெரும் கிழவர் ராஜாஜி, கொட்டும் மழையில் தன் பெருமை பாராது கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக் கதவைத் தட்டினார். அவருடைய கரங்களைப் பற்றியபடி “தமிழகத்தில் மதுவிலக்கு தொடர வேண்டும்” என்று கெஞ்சினார். “நம்பிக்கையுடன் அல்ல, மனசஞ்சலத்துடன் வீடு திரும்பினேன்” என்று மொழிந்த ராஜாஜி, அன்றுபோல் என்றும் தன் வாழ்வில் வருத்தமுற்று வேதனைப்பட்டதில்லை என்றார், அவருக்கு இறுதிவரை தொண்டூழியம் செய்த ‘கல்கி’ சதாசிவம்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 25, 2013 10:54 pm


நினைத்ததைச் சொன்னவர்

“என் வாழ்க்கை சுத்தமானது. வாழ்நாள் முழுவதும் உண்மையாக நடந்துகொண்டி ருக்கிறேன். எனக்கு எது சத்தியம், நியாயம் என்று தோன்றியதோ, அதை மட்டுமே பேசியிருக்கிறேன்” என்று வாக்குமூலம் வழங்கிய ராஜாஜி, தான் நெஞ்சில் வைத்துப் போற்றிய மகாத்மா காந்தியிடம் மனம் வேறுபட்டபோது, எந்தத் தயக்கமுமின்றி அவரை எதிர்த்தார். காந்தியின் கண் முன்னரே காங்கிரஸிலிருந்து விலகினார். தன்னை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக்க முயன்றவர், கவர்னர் ஜெனரலாகப் பதவியேற்க வற்புறுத்தியவர், உள்துறை அமைச்சராக்கி மகிழ்ந்தவர், பதவி விலக விரும்பியபோதெல்லாம் ஏற்க மறுத்தவர் நேரு என்பதை நெஞ்சில் நிறுத்தி, நன்றி செலுத்திய ராஜாஜி, நேருவின் நிர்வாகத் தவறுகளை விமர்சிக்காமல் விட்டுவிடவில்லை.

ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டம், தாழ்த்தப் பட்டோர் ஆலயப் பிரவேசச் சட்டம், ஊழலற்ற தூய்மையான நிர்வாகம், ஆட்சிக்கும் கட்சிக்கும் இடையில் கட்டிக் காத்த ‘இலக்குவன் கோடு’ போன்றவை ராஜாஜிக்குப் பெருமை சேர்ப்பவை. மேலவை உறுப்பினராகி முதல்வரானது, பெரும்பான்மை இல்லாத காங்கிரஸ் 1952-ல் தமிழகத்தில் ஆட்சியமைக்க மாணிக்க வேலருக்கு மந்திரி பதவியளித்து ஆறு எம்.எல்.ஏ-க்கள் கொண்ட அவரது ‘காமன்வீல்’ கட்சியை காங்கிரஸில் இணைத்தது, குலக் கல்வியை அறிமுகப்படுத்த முயன்றது இன்றளவும் விமர்சனத்துக்கு உரியவை.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 25, 2013 10:54 pm


அன்புக்குரிய எதிரிகள்

இன்றைய அரசியல் தலைவர்கள் ராஜாஜியிடம் கற்க வேண்டிய மிக முக்கியமான பண்பு நலன் ஒன்று உண்டு. ஒருவருடைய செயல்முறைகளை மிகக் கடுமையாக விமர்சித்தபோதும், அவரிடம் பகைமை பாராட்டும் தவறான போக்கு ராஜாஜியிடம் இறுதிவரை இருந்ததில்லை. தன்னை எல்லை மீறி விமர்சனம் செய்த பெரியாரை அவர் எப்போதும் ‘அன்பார்ந்த எதிரி’ யாகவே பாவித்தார்.

‘பர்மிட்-லைசென்ஸ்-கோட்டா ஆட்சி’யின் மூலம் காங்கிரஸ் ஊழலை வளர்த்ததை மிகத் தெளிவாக வெளிப்படுத்திய ராஜாஜி, இந்திரா காந்தியின் யதேச்சதிகாரப் போக்கை விமர்சித்தபோது, “இந்திரா சில மாயத் தோற்றங்களால் ஈர்க்கப்படுகிறார். அவற்றிலிருந்து அவர் தம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களைவிடத் தாம்தான் சாமர்த்தியசாலி என்று எண்ணு கிறார். தன்னம்பிக்கையை நான் தவறென்று சொல்லவில்லை. ஆனால், அடக்கம் என்ற உன்னதமான குணத்தைப் பெற்றிருப்பதே நல்லது.

தாம் ஒருத்தி மட்டுமே நவீன சிந்தனை உடையவள் என்று அவர் எண்ணக் கூடாது. இந்தியாவில் உள்ள ஏழைகளைத் தாம் நேசிப்பதாக இந்திரா அடிக்கடி கூறுகிறார். ஏதோ நாம் ஒருவர்தாம் இத்தகைய உணர்வுகளைக் கொண்டிருப்பது போலவும் வேறு யாருக்குமே ஏழைகளிடம் அக்கறை இல்லை என்பது போன்றும் அவர் பேசுவது ஒருவகை அகம்பாவமே” (‘சுயராஜ்யா’ 18.10.1969) என்று குறிப்பிட்டார். இன்றும் இந்த வாசகங்கள் யாருக்கோ பொருந்துவதுபோன்று தோன்றவில்லையா? அறிந்தவர் அறிவாராக!

தமிழருவி மணியன்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 25, 2013 10:55 pm

முதல்வர்களின் முதல்வர்

ஜனவரி 15-ம் தேதி ஸி.ஆர். முடிவெடுத்தார். “ஸி. ராஜகோபாலாச்சாரி தேர்தலில் போட்டியிடுவார் என அறிகிறோம்” என்று மறுநாள் ‘ஹிந்து’ பத்திரிகை கூறியது. “இந்த ராஜதானியிலும் சரி, அதற்கு வெளியேயும் சரி காங்கிரஸ் தலைவர்கள் அவர் ஓய்விலிருந்து திரும்பிவர வேண்டும் என்று நீண்ட காலமாக வற்புறுத்தி வந்திருக்கிறார்கள்.”

“சர்வகலாசாலைத் தொகுதியில் ஸி. ஆர். நிற்க வேண்டும் என்று சத்தியமூர்த்தி வற்புறுத்தி வெற்றி கண்டிருக்கிறார்; அந்த ஸ்தானத்தை ஸி. ஆருக்குத் தாமே விட்டுக் கொடுத்துமிருக்கிறார்” என்று பம்பாயிலிருந்து பட்டேல் அறிவித்தார். தம் நிகரற்ற தலைவர் வழிகாட்ட, காங்கிரஸ் சக்திகள் அனைத்தும் ஒன்று கூடும் என்று தாம் நம்புவதாகவும் பட்டேல் சேர்த்துக்கொண்டார்.

*******

சென்னையில் மட்டுமன்றி காங்கிரஸ், இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வென்றிருந்தது. ஆனால் அது புதிய அரசியல் சட்டம் நிர்ணயித்த வரையறை களுக்கு உட்பட்டு பதவி ஏற்குமா? “ஏற்கவும் செய்யலாம்; ஏற்காமலும் இருக்கலாம்” என்று ஸி.ஆர். சட்டசபையாளருக்குச் சொன்னார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தீர்மானத்துக்கு – அது என்னவாக இருந்தாலும் – அவர்கள் கீழ்ப்படிய வேண்டும் என்று சேர்த்துக்கொண்டார்.

*******

இரண்டு நாட்கள் கழித்து, அதுவரை ஐந்து முறை அரசினால் சிறைப்படுத்தப்பட்டிருந்த ஸி. ஆரை எர்ஸ்கைன் அழைத்தார். ராஜதானியின் பிரதம மந்திரியாக இருக்குமாறு கோரினார்;- அன்று அப்பதவிக்கு அதுதான் பெயர் – மந்திரிசபை அமைக்குமாறு வேண்டினார். ஸி. ஆர். ஒப்புக்கொண்டார். அவர் வாழ்க்கையில் அரசுப் பொறுப்பு என்னும் ஒரு புதிய சகாப்தம் ஆரம்பமாகி இருந்தது.

*******


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 25, 2013 10:55 pm


பதவியின் பெருமை ஸி. ஆரைச் சூழ்ந்துகொண்டிருந்தாலும் அவரும் அவர் சகாக்களும் ஆங்கில ஆட்சி நிர்ணயித்த சம்பளத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். வருடத்திற்கு ரூ.56,000 என்று முதல்வருக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை, வீட்டு வாடகை, போக்குவரத்துச் செலவு உள்பட ரூ.9,000 மட்டுமே என்று மாற்றி அமைக்கப்பட்டது. அரசு, மந்திரிகளுக்கு வீடு அளிக்கவில்லை. ஆனால் ரூ.3000-க்கு வாங்கப்பட்ட காரை உபயோகத்துக்கு அளித்தது. ஸி.ஆரும் அவர் சகாக்களும் பதவியேற்ற முதல் மாதத்தில் பழைய (அதிகப்படி) சம்பளம் மாற்றப்படவில்லை. ஸி.ஆர். ஒவ்வொரு மந்திரியிடமும் அதிகப்படி பணத்தைத் திருப்பித் தந்துவிடுவதாக வாக்குமூலம் பெற்றுவிட உத்தரவு பிறப்பித்தார். மந்திரிகளோ, அவர்களின் சந்ததிகளோ இப்பணத்தைப் பிற்காலத்தில் கேட்கக் கூடாது என்பதற்கே இந்த முன்னேற்பாடு!

*******

ஸி. ஆர். தம் முதல் ஆணையாக சிறைக் கைதிகளுக்கு மோர் வழங்க வேண்டும் என்று அறிவித்த போது, ஆயிரக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்கள் தாங்கள் சிறையில் பெற்ற அரைகுறை உணவை நினைவில் கொண்டு இந்த உத்தரவை வரவேற்றனர். என்றாலும் ஆங்கிலேயே ஆட்சியாளர்கள் இதை ஒரு பெரிய விஷயமாகவே எண்ணவில்லை. ஆனால் அடுத்தாற்போல் வன்முறையில் ஈடுபட்டதற்காக சிறையிடப்பட்டு இப்போது வன்முறையைத் துறப்பதாக உறுதி அளித்த பல விடுதலைப் போராட்டக் கைதிகளை ஸி. ஆர். விடுதலை செய்தபோது ஆங்கிலேயே அதிகார வர்க்கம் நிமிர்ந்து உட்கார்ந்தது. அதைத் தடுக்கவும் முயன்றது. வைஸ்ராய், கவர்னரிடம் தம் விருப்பமின்மையைத் தெரிவித்தார். ஆனால் ஸி. ஆர். விட்டுக்கொடுத்துப் பணியவில்லை. உறுதியாயிருந்து தம் முயற்சியில் வெற்றி கண்டார். 38 அரசியல் கைதிகள் விடுதலை பெற்றனர்.

*******


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 25, 2013 10:56 pm


ஸி. ஆர். பதவி ஏற்று மூன்று மாதங்களுக்குள், 1937 அக்டோபர் 1 முதல் அவரது சொந்த ஜில்லாவான சேலத்தில் மதுவிலக்கு அமலுக்கு வந்தது. படிப்படியாக பிற ஜில்லாக்களுக்கும் விரிவுபடுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதனால் அரசின் வருவாயில் கணிசமான தொகை குறைந்துபோயிற்று. நிலவரியும் கள்ளுக்கடை ஏலமுந்தாம் அரசின் வருமானத்தின் பெரும் பகுதி. இருப்பினும் ஸி. ஆர். 1937-இல் ஓர் உபரி பட்ஜெட்டையே வழங்கினார். அடுத்த இரண்டு வருடங்களிலும் அவ்வாறே வழங்க இருந்தார். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.யான அப்பாதுரைப்பிள்ளை ‘விவரங்களைப் புரிந்துகொள்ளும் ஸி.ஆரின் திறனையும், பொருளாதார நுணுக்கங்களனைத்தையும் அறிந்திருந்த நேர்த்தியையும்’ வியந்து போற்றினார்.

*******

எர்ஸ்கைன், வைஸ்ராய்க்கு எழுதிய கடிதத்தில் உத்தேசிக்கப் பட்டிருந்த இந்தச் சட்டத்தை ‘அனாவசியமான கஞ்சத்தனம்’ என்றே குறிப்பிட்டிருந்தார். ‘அரசுச் செலவினங்களைப் பொறுத்த வரையில் பிரதம மந்திரி சுத்த கருமியே’ என்றும் எழுதினார். ஆட்சியின் முதல் எட்டு மாதங்களில் தமது சுற்றுப் பயணங்களுக்காக ஸி. ஆர். செலவிட்ட தொகை, அவர் பொதுப்பணத்தை எவ்வளவு ஜாக்கிரதையாகக் கையாண்டார் என்பதை உணர்த்தும். அத்தொகை: ரூ. 400. இரண்டாவது பட்ஜெட்டுக்கு ஸி. ஆர். மத்திய சர்க்காரிடமிருந்து மாகாணத்தின் வரிப் பங்காக ரூ.21 லட்சம் பெற்றார். இவ்வாறு மாகாணங்களுக்கு வருமான வரியில் பங்கு அளிக்கப்பட்டது அதுவே முதல் முறை. எதிர்க்கட்சியினர் இத் தொகை கிடைத்ததை “பெரிய எதிர்பாராத அதிர்ஷ்டம்” என்றனர். “இதென்ன பெரிய விஷயம்? நம்மிடம் திருடியதைத் திருப்பித் தருகிறார்கள். அவ்வளவுதானே!” என்றார் ஸி. ஆர்.

*******

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 26, 2013 3:16 pm

ஓர் அலசல் --அறிய அரிய பல விஷயங்கள் .
ராஜாஜி -மூதறிஞர் -மிகவும் போற்றப்பட்ட அறிஞர் --பல வித சர்ச்சைகளுக்கு ஆளானவர் .
கொள்கையில் விடாப்பிடியாய் இருந்தவர்.
மாறுபட்ட கருத்துகள் பெரியார் -ராஜாஜி இடையே இருந்தாலும் ,இருவரும் நெருங்கிய நண்பர்கள் .ராஜாஜி மரணத்தின் போது ,தகன இடம் வரை ,தள்ளாத வயதிலும் ,தள்ளு வண்டியில் சென்று நட்பின் ஆழத்தை வெளிபடுத்தியவர்.
ரமணியன்

T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக