புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 3 Poll_c10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 3 Poll_m10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 3 Poll_c10 
80 Posts - 78%
heezulia
கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 3 Poll_c10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 3 Poll_m10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 3 Poll_c10 
10 Posts - 10%
Dr.S.Soundarapandian
கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 3 Poll_c10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 3 Poll_m10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 3 Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 3 Poll_c10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 3 Poll_m10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 3 Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 3 Poll_c10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 3 Poll_m10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 3 Poll_c10 
245 Posts - 77%
heezulia
கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 3 Poll_c10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 3 Poll_m10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 3 Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 3 Poll_c10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 3 Poll_m10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 3 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 3 Poll_c10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 3 Poll_m10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 3 Poll_c10 
8 Posts - 3%
prajai
கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 3 Poll_c10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 3 Poll_m10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 3 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 3 Poll_c10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 3 Poll_m10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 3 Poll_c10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 3 Poll_m10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 3 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 3 Poll_c10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 3 Poll_m10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree
கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 3 Poll_c10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 3 Poll_m10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 3 Poll_c10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 3 Poll_m10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு


   
   

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 24, 2013 3:49 am

First topic message reminder :


70 இடங்களைக் கொண்ட டெல்லி மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பா.ஜ.க. 32, ஆம் ஆத்மி 28, காங்கிரஸ் 8, சுயேட்சைகள் 2 இடங்களில் வெற்றி பெற்றனர். ஆட்சி அமைக்க தேவையான 36 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்காததால் அங்கு ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டது. அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்ற அடிப்படையில் பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க டெல்லி துணைநிலை கவர்னர் நஜீப்சிங் அழைத்தார். ஆனால் ஆட்சி அமைக்க பா.ஜ.க. மறுத்து விட்டது.

இதையடுத்து 2–வது அதிக இடங்களை பிடித்த கட்சியான ஆம்ஆத்மி கட்சிக்கு கவர்னர் நஜீப்சிங் அழைப்பு விடுத்தார். அதை ஏற்று கவர்னரை சந்தித்த ஆம்ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் 23–ந் தேதி வரை அவகாசம் கேட்டார். கடந்த 6 நாட்களாக அவர் டெல்லியில் 280 கூட்டங்களை நடத்தி ஆட்சி அமைப்பது குறித்து மக்களிடம் கருத்து கேட்டார். அவர்கள் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தனர்.

பேஸ்புக், டுவிட்டர், எஸ்.எம்.எஸ். மூலமாகவும் ஆம்ஆத்மி கட்சி கருத்து கேட்டது. சுமார் 6½ லட்சம் பேர் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். அதில் பெரும்பாலானவர்கள் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்றனர். இதை ஏற்று ஆம்ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சி அமைக்க முடிவு செய்தது. இன்று பகல் 11 மணியளவில் டெல்லி காசியாபாத்தில் மக்கள் முன்னிலையில் நடந்த ஆம்ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக்குழு கூட்டம் நடந்தது. அதில் ஆட்சி அமைக்கலாம் என்று அதிகாரப்பூர்வமாக முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான மணீஷ் சிசோடியா கூறுகையில், ‘‘280 மக்கள் சபை கூட்டங்களை நாங்கள் நடத்தினோம். அதில் 257 கூட்டங்களில் ஆம்ஆத்மி ஆட்சி அமைக்க மக்கள் சம்மதித்துள்ளனர்’’ என்றார்.

அவரைத் தொடர்ந்து 11.20 மணிக்கு பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ‘‘டெல்லியில் ஆம்ஆத்மி ஆட்சி அமைக்கிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதை கேட்டதும் திரண்டிருந்த ஆம்ஆத்மி கட்சித் தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பிறகு ஆம்ஆத்மி கட்சி மூத்த தலைவர்களுடன் கெஜ்ரிவால் கவர்னர் மாளிகைக்கு புறப்பட்டு சென்றார். மதியம் 12.30 மணியளவில் அவர் கவர்னர் நஜீப்சிங்கை சந்தித்து பேசினார். அப்போது கெஜ்ரிவால் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதோடு ஆம்ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் தன்னை சட்டசபை கட்சித் தலைவராக தேர்வு செய்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கொடுத்தார்.

கெஜ்ரிவாலின் கடிதத்தை கவர்னர் நஜீப்சிங் ஏற்றுக் கொண்டார். ஆம்ஆத்மி ஆட்சி அமைக்க அவர் சம்மதம் தெரிவித்தார். அப்போது கெஜ்ரிவால், பதவி ஏற்பு விழாவை ‘‘ஜந்தர் மந்திர்’’ பகுதியில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

ஊழலுக்கு எதிராக ஜந்தர் மந்திர் பகுதியில் நடந்த போராட்டங்கள் தான் கெஜ்ரிவாலை நாடெங்கும் பிரபலப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. எனவேதான் பதவி ஏற்பு விழாவை ஜந்தர்மந்திரில் நடத்த கெஜ்ரிவால் விரும்புகிறார். அரவிந்த் கெஜ்ரிவால் 26–ந்தேதி (வியாழக்கிழமை) பதவி ஏற்பார் என்று தெரிய வந்துள்ளது. அவர் பதவி ஏற்றதும் சட்டசபை கூட்டப்படும். எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பார்கள். அந்த கூட்டத்திலேயே சில அறிவிப்புகளை நிறைவேற்ற கெஜ்ரிவால் திட்ட மிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக லோக்பால் மசோதாவை அவர் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கெஜ்ரிவால் ஆட்சியில் நீடிக்க காங்கிரஸ் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதாக வாக்குறுதி அளித்திருப்பதாக கூறப்படுகிறது. சட்டசபையில் கெஜ்ரிவால் பெரும்பான்மை பலத்தை நிரூபித்து காட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அப்போது காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுக்கும். மற்றபடி காங்கிரசிடம் இருந்து ஆம்ஆத்மி நேரடி ஆதரவை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 26, 2013 5:42 pm


நேர்மை அதிகாரிகளுக்கு கெஜ்ரிவால் அழைப்பு; ஆம் ஆத்மியின் அசத்தல் ஆரம்பம்

காஸியாபாத்: வருகிற சனிக்கிழமையன்று டெல்லி முதலமைச்சராக பதவியேற்க உள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், இன்று தமது வீட்டிற்கு வெளியே மக்கள் குறைகேட்பு ( ஜனதா தர்பார்) நிகழ்ச்சியை நடத்தினார்.

தங்களது குறைகளை தெரிவிப்பதற்காக தனது வீட்டின் முன்னர் திரண்டிருந்த மக்களிடையே பேசிய கெஜ்ரிவால், "உங்களில் பெரும்பாலானோர் எனக்கு வாழ்த்து தெரிவிக்கத்தான் வந்துள்ளீர்கள் என எனக்கு தெரியும். இந்த வெற்றி என்னுடையதல்ல; உங்களுடைய வெற்றி" என்றார்.

தொடர்ந்து அங்கு வந்த மக்களில் பெரும்பாலானோர் குடிநீர் மற்றும் மின்சாரம் தொடர்பான குறைகளையும், புகார்களையுமே தெரிவித்தனர். அவற்றை கேட்ட கெஜ்ரிவால்," உங்களது குறைகள் மற்றும் புகார்களை கேட்டேன். அதன் மீது நிச்சயம் நான் நடவடிக்கை எடுப்பேன்" என்று உறுதி அளித்தார்.

பதவி ஏற்பு விழாவுக்கு விஐபி என பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் அழைப்பு

இதனிடையே, பதவி ஏற்பு விழாவிற்கு விஐபி பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் அழைப்பு விடுத்து உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,"எங்களது அரசு நேர்மையான மக்களை தேடுவதே அனைத்து நேர்மையான மக்களுக்கும் தகுந்த பொறுப்பு வழங்கப்படும்.ராம் லீலா மைதானத்தில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்" என அழைப்பு விடுத்தார்.

நேர்மையான அதிகாரிகளுக்கு அழைப்பு


இதனிடையே ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையாக அனைத்து நேர்மையான அதிகாரிகளும் தம்மை இமெயில், எஸ்.எம். எஸ் மற்றும் கடிதம் மூலம் தொடர்புகொள்ளலாம் என அழைப்பு விடுத்துள்ளார் கெஜ்ரிவால்.

ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை

முன்னதாக தமது கட்சி ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறபோதிலும், முந்தைய காங்கிரஸ் ஆட்சி மீதான ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 26, 2013 5:46 pm


போலீஸ் பாதுகாப்பை நிராகரித்த கெஜ்ரிவால், அரசு பங்களாவை ஏற்கவும் மறுப்பு!

புதுடெல்லி: டெல்லி முதல்வராக பதவியேற்க உள்ள ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், காவல்துறை பாதுகாப்பை நிராகரித்துள்ளார்.

டெல்லியில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கிறது. முதல்வராக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை மறுதினம் பதவி ஏற்றுக்கொள்கிறார்.

ராம் லீலா மைதானத்தில் மக்கள் முன்னிலையில், முதல்வராக கெஜ்ரிவால் பதவியேற்றுக் கொள்வதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், புதிய முதல்வராக பதவியேற்க உள்ள கெஜ்ரிவால், காவல்துறை பாதுகாப்பை நிராகரித்துள்ளார்.

இது தொடர்பாக காவல்துறை தலைவருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தனக்கு எந்தவித பாதுகாப்பும் வேண்டாம் என்றும், கடவுள்தான் தமக்கு மிகப்பெரிய பாதுகாப்பு என்றும் கூறியுள்ளார்.

அரசு பங்களாவை ஏற்கவும் மறுப்பு

இதனிடையே முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அரசு பங்களா ஒதுக்குவதாக டெல்லி தலைமைச் செயலர் டி.எம். சபோலியா ஒதுக்க முன்வந்த நிலையில், அதனையும் ஏற்க கெஜ்ரிவால் மறுத்துள்ளார்.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Dec 26, 2013 9:49 pm

மிக அதிக நாட்கள் முதல்வராக இவர் நீடிப்பார் என்று எனக்கு தோன்றவில்லை




கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 3 Mகெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 3 Uகெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 3 Tகெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 3 Hகெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 3 Uகெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 3 Mகெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 3 Oகெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 3 Hகெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 3 Aகெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 3 Mகெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 3 Eகெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 3 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 26, 2013 10:57 pm

கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 3 Ghaziabad26122013
டெல்லி முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ள அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி அருகே காசியாபாத்தில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் ’மக்கள் சந்திப்பு’ நிகழ்ச்சி நடத்தினார். அதில், அவர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 27, 2013 3:51 am

மீண்டும் குரு அன்னா ஹசாரேவை அழைப்பேன் - கெஜ்ரிவால்

டெல்லி முதலமைச்சராக வரும் 28 ஆம் தேதி சனிக்கிழமை பதவியேற்கும் ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழாவிற்கு அனைத்து பொதுமக்களையும் அழைத்துள்ளார். அவர் அன்னா ஹசாரேவிற்கும் தனிப்பட்ட முறையில் மீண்டும் அழைப்பு விடுக்கபோவதாக தெரிவித்துள்ளார்.

டெல்லி முதல்வராக பதவி ஏற்கும் விழாவிற்கு வருகை தருமாறு அன்னாஹசாரேவிற்கு அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் அழைப்பு விடுக்கபோவதாக தெரிவித்துள்ளார்.

கெஜ்ரிவால் தலைமையிலான அரசின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அன்னா ஹசாரே மறுத்துள்ளார். தமக்கு அழைப்பிதழ் ஏதும் வரவில்லை என்றும், மேலும் உடல் நலமும் சரியில்லாததால், பதவியேற்பு விழாவில் பங்கேற்க தம்மால் இயலாது என்றும், அதே சமயம் கெஜ்ரிவாலுக்கு தமது வாழ்த்தை தெரிவித்துக்கொள்வதாகவும் ஹசாரே செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

இதனிடையே இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ஹசாரே தமது குருநாதர் என்றும், பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு தாம் தொலைபேசி மூலம் ஹசாரேவிடம் பேச உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் ஹசாரே, கிரண் பேடி, நீதிபதி சந்தோஷ் ஹெக்டே ஆகிய 'டீம் அன்னா' குழுவினருக்கு அரசு தரப்பிலிருந்து அழைப்பிதழ் அனுப்பப்படும் என்றும், கெஜ்ரிவால் கூறினார்.

பதவி ஏற்று 24 மணி நேரத்திற்குள் 700லிட்டர் தண்ணீரை இலவசமாக வழங்கும் திட்டத்தை நடைமுறைபடுத்த இருப்பதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 27, 2013 3:53 am


டெல்லியின் இளம்வயது அமைச்சர் ராக்கி பிர்லா

கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 3 XX0zC0YRB2yr3mJPveJ4+img1131226048_1_1

டெல்லியில் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் பதவியேற்கும் கட்சி பிரமுகர்களில் வெறும் 26 வயது ராக்கி பிர்லா என்ற பெண் பதவியேற்கிறார். இதன்மூலம் இவர் டெல்லியின் இளம் அமைச்சர் என்ற பெருமையை அடைகிறார்.

டெல்லி முதலமைச்சராக ‘ஆம் ஆத்மி’ கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை மறுநாள் பதவி ஏற்க உள்ளார். அவருடன் மணிஷ் சிசோடியா, சோம்நாத் பாரதி, ராக்கி பிர்லா, சவுரவ் பரத்வாஜ், சத்யேந்திர ஜெயின், கிரிஷ் சோனி ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர். இதற்காக ராம்லீலா மைதானத்தில் விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

பதவி ஏற்பு விழாவில் டெல்லி மட்டுமல்லாது ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து தொண்டர்களும், ரஷியாவில் இருந்து பிரதிநிதிகளும் கலந்து கொள்கிறார்கள். டெல்லி மாநில வரலாற்றில் மிக இளம் வயதில் அமைச்சராக பொறுப்பேற்கவிருக்கும் ராக்கி பிர்லா (வயது 26) முன்னாள் தொலைக்காட்சி நிருபராவார்.

டெல்லியின் இளம் வயது அமைச்சராவது குறித்து ராக்கி கூறுகையில், “நான் அரசியலுக்கு வரவேண்டும் என நினைத்ததில்லை. இது ஒரு அரசியல் கட்சி அல்ல. இது ஒரு புரட்சி. ஊழலை வேரறுக்க நாம் அரசிலமைப்பில் சேர வேண்டும் என்பதை நான் உணர்ந்துள்ளேன். எனவே நான் அதில் இணைந்துள்ளேன். எனது பெற்றோர் என்னை ஊக்குவித்ததே என்னுடைய இந்த முயற்சிக்கு காரணம்” என்றார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 27, 2013 3:54 am


பொதுமக்கள் அனைவரும் வருக - அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு

டெல்லி முதலமைச்சராக வரும் 28 ஆம் தேதி சனிக்கிழமை பதவியேற்கும் ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், பதவி ஏற்பு விழாவிற்கு அனைத்து பொதுமக்களையும் அழைத்துள்ளார் மேலும் பதவி ஏற்று 24 மணி நேரத்திற்குள் 700லிட்டர் தண்ணீரை இலவசமாக வழங்கும் திட்டத்தை நடைமுறைபடுத்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வரும் சனிக்கிழமை 28 ஆம் தேதி டெல்லியில் முதலமைச்சராக பதவியேற்கிறார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நண்பகல் 12 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

ஆட்சியமைப்பது பற்றிய துணைநிலை ஆளுநரின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். டெல்லி தலைமை செயலாளர் கெஜ்ரிவாலை சந்தித்து ஒப்புதல் பற்றி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்தே பதவியேற்பு குறித்து முடிவாகி உள்ளது.

இதனிடையே காங்கிரஸ் உடன் கூட்டணியோ, உடன்பாடோ இல்லை என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. மக்களுக்கு அளித்த 18 வாக்குறுதிகளை சட்டசபையில் நிறைவேற்ற ஆதரவு கிடைக்கும் என அக்கட்சி நிர்வாகி யோகேந்திர யாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆதரவு கிடைக்கவில்லை என்றால் வெளிறே தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக காங்கிரஸ் ஆதரவுடன் டெல்லியில் ஆட்சி அமைக்க முன்வந்துள்ள ஆம் ஆத்மி கட்சி அரசு 26 ஆம் தேதி பதவியேற்கும என அறிவித்திருந்தது.

இதனையடுத்து அமைச்சர்களும் அறிவிக்கப்பட்டனர். காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரிக்கப்படும் என கெஜ்ரிவால் கட்சி அறிவித்ததை அடுத்து டெல்லி அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.

இந்நிலையில், எப்போதும் நடப்பது போல முதலமைச்சராக பதவியேற்கும் விழாவில் வெறும் அரசியல் பிரமுகர்கள் மட்டும் இல்லாமல் அனைத்து பொது மக்களுக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், பதவி ஏற்று 24 மணி நேரத்திற்குள் 700லிட்டர் தண்ணீரை இலவசமாக வழங்கும் திட்டத்தை நடைமுறைபடுத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 28, 2013 2:48 pm

பதவியேற்க 'மெட்ரோ' ரயிலில் பயணம்: கெஜ்ரிவால் அதிரடி

காஜியாபாத் : டில்லி முதல்வராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்பதற்காக, அரவிந்த் கெஜ்ரிவால், இன்று, மெட்ரோ ரயிலில் செல்கிறார். அவர் கட்சியை சேர்ந்த, எம்.எல்.ஏ.,க்களும், உடன் செல்கின்றனர்.

6 - அமைச்சர்கள்:


டில்லி மாநிலத்தில், காங்., ஆதரவுடன், 'ஆம் ஆத்மி' கட்சி, புதிய அரசு அமைக்கவுள்ளது. முதல்வராக, அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர், அரவிந்த் கெஜ்ரிவால், ராம்லீலா மைதானத்தில், இன்று நடக்கும் விழாவில் பதவியேற்கிறார்.அவர் கட்சியை சேர்ந்த, ஆறு எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவால், வழக்கமாக, மாநில முதல்வர்கள் பின்பற்றும், பாரம்பரிய மரபுகளை தகர்த்து வருகிறார்.'பாதுகாப்பு, அரசு பங்களா உள்ளிட்ட வசதிகள் வேண்டாம்' என, ஏற்கனவே, அவர் தெரிவித்துள்ளார். சாலையில், வாகனத்தில் செல்லும்போது, தனக்காக போக்குவரத்தை நிறுத்தக் கூடாது என்றும், அவர், டில்லி போலீஸ் அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், காஜியாபாத்தில் உள்ள, அவரின் வீட்டில், நேற்று செய்தியாளர்களிடம், அவர் கூறியதாவது:பதவியேற்பு விழாவுக்கு, நானும், என் கட்சியினரும், மெட்ரோ ரயிலில் பயணிக்க வுள்ளோம். எங்களுக்காக, ஆடம்பர வசதிகள், பாதுகாப்பு வசதிகள் தேவையில்லை என, ஏற்கனவே தெரிவித்து விட்டோம்.

எதிர்பார்ப்பு:

எங்கள் கட்சி சார்பில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,க்களும், மெட்ரோ ரயிலில் தான், பதவியேற்பு விழாவுக்கு செல்வர். டில்லியில் மேல் மட்டத்திலிருந்து, கீழ் மட்டம் வரை, நிர்வாகம் சீர்குலைந்துள்ளது. இதை மாற்ற வேண்டும்.இதனால் தான், ஒவ்வொரு பிரச்னைக்கும், மக்கள், முதல்வரை தேடி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. டில்லி மக்களின் எதிர்பார்ப்பு, மிகவும் அதிகமாக உள்ளது. எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டுமானால், நாங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

விசாரணை:

எங்கள் கட்சிக்கு, வெளிநாட்டிலிருந்து நிதி வந்தது தொடர்பாக, விசாரணைக்கு உத்தரவிடப் போவதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது. விசாரணை நடத்த வேண்டும் என்ற ஆர்வம், மத்திய அரசுக்கு இருந்தால், உடனடியாக அதைச் செய்யலாம். அதை விடுத்து, அறிவிப்புகளையும், அறிக்கைகளையும் வெளியிடுவது, வேடிக்கையாக உள்ளது.ஆம் ஆத்மி கட்சி அரசு அமையும் நேரத்தில், டில்லியில், வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும், 'காஸ்' விலை உயர்த்தப்பட்டுள்ளது, அதிர்ச்சி அளிக்கிறது. இதற்கு, இப்போது என்ன அவசரம் வந்தது என, தெரியவில்லை. முதல்வராக பதவியேற்றதும், இதுகுறித்து ஆய்வு செய்வேன். இதேபோல், ஆட்டோ ரிக் ஷா கட்டணங்களும் மாற்றி அமைக்கப்படும்.டில்லி தலைமைச் செயலகத்தில், சில முக்கியமான கோப்புகள் அழிக்கப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம், பல துறைகளில் ஊழல் நடந்துள்ளது, வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுகுறித்து, விசாரணை நடத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 28, 2013 2:51 pm

கெஜ்ரிவாலுக்கு ஹசாரே வாழ்த்து

புதுடில்லி : டில்லியின் புதிய முதல்வராக இன்று பதவியேற்க உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சமூக ஆர்வலரும், அவரது குருவுமான அன்னா ஹசாரே வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கெஜ்ரிவாலுக்கு, ஹசாரே கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் தான் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள முடியாதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 28, 2013 2:51 pm

கெஜ்ரிவால் பிரதமராகவும் வருவார்: மக்கள்

புதுடில்லி : டில்லியின் புதிய முதல்வராக இன்று பதவியேற்க உள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரியானா மாநிலம் பிவானி கிராமத்தில் இருந்து வரும் 4வது முதல்வராவார். கெஜ்ரிவால் இன்று டில்லி முதல்வராக பதவியேற்க உள்ளதை பிவானி கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர். மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வரும் கிராம மக்கள், கெஜ்ரிவால் டில்லியின் முதல்வராக மட்டுமல்ல, நாட்டின் பிரதமராகவும் வருவார் என தெரிவித்துள்ளனர்.

Sponsored content

PostSponsored content



Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக