புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆஸ்துமா Poll_c10ஆஸ்துமா Poll_m10ஆஸ்துமா Poll_c10 
21 Posts - 66%
heezulia
ஆஸ்துமா Poll_c10ஆஸ்துமா Poll_m10ஆஸ்துமா Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆஸ்துமா Poll_c10ஆஸ்துமா Poll_m10ஆஸ்துமா Poll_c10 
63 Posts - 64%
heezulia
ஆஸ்துமா Poll_c10ஆஸ்துமா Poll_m10ஆஸ்துமா Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
ஆஸ்துமா Poll_c10ஆஸ்துமா Poll_m10ஆஸ்துமா Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஆஸ்துமா Poll_c10ஆஸ்துமா Poll_m10ஆஸ்துமா Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஸ்துமா


   
   

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Oct 31, 2009 12:47 pm

அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்!
அல்லல் படும் ஆன்மாவும்



மனித உறுப்பில் முக்கியமான ஒன்று நுரையீரல். நமது சுவாசமண்டலம் மூக்கில் ஆரம்பித்து அவை மூக்கு, மூச்சுக்குழல், சுவாசப்பைச் சிறு குழாய், சுவாசப்பைச் சிற்றறை போன்ற பகுதிகளைக் கொண்டுள்ளது. இதில் சுவாசப்பைச் சிறுகுழாய் பாதிக்கப்படும் போதுதான் ஆஸ்துமா ஏற்படுகின்றது.
ஆஸ்துமாவில் மூன்று வகை உண்டு.


1. புரொங்கையில் ஆஸ்துமா (Bronchial Asthma)
இதுதான் மூச்சுக்குழல் பாதிக்கும் போது ஏற்படுவதாகும். மூச்சுக்கிளைக் குழல்கள் சுருங்கிவிடும் போது நுரையீலுக்குச் செல்லும் ஒட்சிசனின் அளவில் குறைவு ஏற்படுகிறது. இதனால் மூச்சிரைப்பு ஏற்படுகிறது. ஆஸ்துமா நோயானது பெரும்பாலும் ஒவ்வாமையால் (Allergy) வருகிறது. சீதோஷண நிலை மாற்றம், குளிர்ந்த காற்று, தூசிகள், வாகனங்களின் புகை, சிகரெட் புகை, சாம்பிராணி, ஊதுவத்தி போன்றன, பூக்களின் மகரந்தம், இரசாயன மாத்திரைகள், இராசயனப் பொருட்கள் கலந்த உணவுகள், நீண்ட நாள் மலச்சிக்கல், நோய் எதிர்ப்பு சக்தியின்மை, உடலுழைப்பின்மை, மனக்கவலை போன்ற காரணங்களினால் ஆஸ்துமா உண்டாகின்றது.


2. கார்டியாக் ஆஸ்துமா (Cardiac Asthma)
இது இதய நோயால் ஏற்படுவதாகும்.இதில் மூச்சுத் திணறல், வேகமான, அதிகமான நாடித்துடிப்பு, நெஞ்சுவலி, படபடப்பு போன்றவை ஏற்படுகின்றன. இவர்களுக்கு பகலை விட இரவில்தான் மூச்சுத் திணறல் அதிகமாக ஏற்படுகின்றது.


3. ரீனல் ஆஸ்துமா (Renal Asthma)
இது சிறுநீரகக் கோளாறுகளால் ஏற்படுவதாகும். சிறுநீரகங்கள் பழுதடையும் போது இரத்தத்திலுள்ள யூரியா கிரியேட்டனின், பொட்டாசியம், சோடியம், குளோரைட்டு போன்ற கழிவுப் பொருட்களும் உற்பத்தியாகும். சிறுநீரும் போதுமான அளவு வெளியேற்றப்பட முடியாததால் உடலில் நுரையீரல் முதல் பல உறுப்புகளில் நீர் தேக்கம் ஏற்பட்டு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.


ஆஸ்துமா நோய்க்கான அறிகுறிகள்:
உடம்பிற்கு ஒவ்வாத புகைகளோ, தூசிகளோ, மகரந்தமணிகளோ மூச்சுக்கிளைக் குழலை அடையும் போது தும்மல், இருமலோடு கூடிய மூச்சிரைப்பு எற்படுகிறது. குளிர்ந்த காற்றை சுவாசிக்கும் போது மூச்சுக்கிளைக் குழல்கள் சுருங்கி தேவையான ஒட்சிசன் கிடைக்காத போது சளியோடு கூடிய மூச்சிரைப்பு ஏற்படுகிறது. இதில் உள்ளிழுக்கும் காற்று, வெளிவிடும் காற்றைவிட வேகம் அதிகமாகவும், வேகமாகவும் மூச்சுத் திணறல் ஏற்படும். மூச்சுவிடும் போது விசில் சத்தம் போன்ற ஒரு இரைச்சலோடு மூச்சுவிடுவார்கள்.


சளி, இருமல், தும்மல், மூக்கில் நீர் வடிதல் போன்றன இரத்தத்தில் ஈஸ்னோபில் அதிகமாகும் போது அறிகுறிகளாகத் தோன்றும். நமது இரத்தத்தில் வெள்ளை அணுக்கள், சிவப்பணுக்கள் இருப்பது போல ஈஸ்னோபில்கள் என்ற அணுக்களுமுண்டு. இவை நம் உடலில் நோயை உருவாக்கும் நுண்கிருமிகள் உட்செல்லும் போது அவற்றுடன் போராடுகின்றன. அவ்வாறு போராடும் போது நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது நோய்க்கிருமிகள் வெற்றி பெற்று விடுகின்றன. அந்த நிலையில்தான் நோயின் அறிகுறிகள் நமக்குத் தெரிய ஆரம்பிக்கின்றன. எனவே நோய்க்கிருமிகள் உள்ளே நுழைந்து நோயை ஏற்படுத்தியவுடன் அதை நமக்கு உணர்த்துவதற்கான ஈஸ்னோபில்ஸ் என்ற அணுக்கள் தன் எண்ணிக்கையில் இருந்து அதிகமாகி விடுகிறது. இதைத்தான் நாம் ஈஸ்னோபீலியா என்று கூறுகிறோம். எனவே ஈஸ்னோபீலியா என்பது ஒரு நோய்க்கான அறிகுறியே அன்றி அது ஒரு நோய்க்கான காரணம் அல்ல.


ஈஸ்னோபில்ஸின் அளவு மற்ற நோய்களைவிட ஆஸ்துமா நோயில் சற்று அதிகமான எண்ணிக்கையில் உயர்ந்து விடுகிறது. இந்த ஈஸ்னோபில்ஸின் அளவை நாம் இரத்த பரிசோதனை மூலம் அறிந்து கொள்ளலாம். சாதாரணமாக 3லிருந்து 7 வீதம் என்ற அளவு இருக்க வேண்டும். இந்த அளவிற்கு மேலே இருப்பின் உடலில் தொற்று நோய்க் கிருமிகள் சென்றுள்ளன என்பதை அறிந்து கொள்ளலாம்.


ஆஸ்துமா நோயின் இறுதிக் கட்டத்தை (Chronico Obstructive Pulmonary Disorders) குரோனிகோ ஒப்ஸ்ரக்டிவ் பல்மனொரி டிஸ்ஓடர்ஸ் என்று கூறுவார்கள். ஆஸ்துமா நோயை ஆரம்பத்திலேயே அறிந்து அதற்காக சிகிச்சை பெறாவிடில் நுரையீரலின் மூச்சுக்கிளை குழல்கள் மேலும் மேலும் சுருங்கி காற்று செல்லும் பாதையே 90 சதவீதத்திற்கு மேலாக அடைபட்டு விடும். இதனால் அவர்களுக்கு தேவையான ஒட்சிசன் கிடைக்காததால் மூச்சுத்திணறல் மிக அதிகமாக ஏற்பட்டு விடுகிறது. இது ஆபத்தான ஒன்று, குரொனிகோ ஒப்ஸ்ரக்டிவ் பல்மனொரி டிஸ்ஓடர்ஸினால் பாதிக்கப்பட்டவர்கள் இரத்தத்தில் ஒட்சிசனின் அளவு 100 சதவீதம் இருப்பதற்கு பதிலாக 40 சதவீதம் குறைவாகவே காணப்படும். காபனீரொட்டை அளவுதான் அதிகமாக காணப்படும். எனவே தான் அவர்கள் மூச்சு விட மிக மிக சிரமப்படுகிறார்கள். முடிவில் அவர்கள் ஓட்சிசனுக்காக ஏங்கும் நிலை ஏற்படுகிறது. எனவே ஆஸ்துமா நோயாளிகள் ஒவ்வாமை தம்மைத் தாக்காதவாறும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கக்கூடிய மூலிகைகள், உணவுகள், எளிய உடற்பயிற்சிகள் போன்றன பின்பற்றினால் ஆஸ்துமா நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Oct 31, 2009 12:53 pm

ஆஸ்துமா Asthma


உணவு முறைகள்
சாதாரணமாக எளிதில் ஜீரணமாகும் சைவ உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஒவ்வொரு வேளையும் முக்கால் வயிறு ஆகாரமே உட்கொள்ள வேண்டும். மேலும் இரவு உணவை 7 மணிக்குள் முடித்தல் வேண்டும். உணவில் அதிகளவு தானியங்களை அடிக்கடி சேர்க்க வேண்டும். ஒரு நாளின் மொத்த உணவில் நாலில் ஒரு பங்கு காய்கள், பழங்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும். இந்நோயாளிகள் பப்பாளி, பேரீச்சை, மா, மாதுளை, கேரட், வெண்டை, கரும்புச்சாறு, இளநீர், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை போன்றவற்றில் இருந்து ஏதேனும் இரண்டு வகை உணவில் அதிகளவு சேர்த்து உண்பது நன்மை பயக்கும்.

கொத்தமல்லியிலை, புதினா, தூதுவளை, துளசி போன்றவற்றில் இருந்து சாறு எடுத்து 50 மில்லி லிட்டர் காலை அல்லது மாலை வேளைகளில் வாரம் இரண்டு முறை பாவித்து வரப் பயன் கிடைக்கும்.


தினமும் காலை மாலை எளிய உடற்பயிற்சிகள் கண்டிப்பாகச் செய்தல் வேண்டும். தவிர காலை, மதியம், மாலை மூன்று வேளை உணவு அருந்தும் முன்பாக மூச்சுப்பயிற்சி செய்தல் அவசியம்.


அவசர சிகிச்சை
நெஞ்சு சளி கரையவும், வெளியேறவும் இரண்டு மேசைக்கரண்டி தேங்காயெண்ணெய், சிறிது கற்பூரம் எடுத்து ஒரு கரண்டியில் போட்டு அடுப்பில் காட்டி சூடாக்கிய பின்னர் கை பொறுக்கும் சூட்டில் நெஞ்சுப்பகுதி, மூக்கின் மேற்பகுதி, நெற்றி, கை, கால், கழுத்து பகுதிகளில் அவ்வப்போது தடவிக் கொள்ளலாம். இதனால் நல்ல பலன் தெரியும். அடிக்கடி வரும் மூச்சுத் திணறலுக்கு கற்பூரம், ஓமம் எடுத்து தூள் செய்து சம அளவில் ஒன்றாகக் கலந்து வெள்ளைத் துணியில் வைத்து முகர்ந்தால் உடனே மூச்சுத் திணறல் குறையும். இது மூலிகை மருத்துவத்தில் சிறந்த இன்ஹேலர் ஆகும்.


ஆஸ்துமா நோயின் காரணமாக மூச்சிழுப்பும், இரைப்பும் அதிகமாக இருக்கும் போது கஸ்தூரி மஞ்சளை தீயில் சுட்டு புகையை மூக்கின் வழியாக உள்ளிழுத்தால் உடனே இரைப்பு நிற்கும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் பிறகு அந்தப் பொல்லாத மூச்சுத் திணறல் வரவே வராது. இதுமட்டுமின்றி இப்புகை காச நோய்க்கு எதிர்ப்புத் தெரிவித்து அதன் கடுமையைத் தடுக்கிறது. இதே மஞ்சள் புகையை நாசியின் வழியாக உள்ளிழுத்தால் தலைவலி, ஜலதோஷம் என்பன சரியாகும்.



நோயாளிகள் தவிர்க்க வேண்டியவை
புகைத்தல், மதுவகைகள், பால், பால் கலந்த பொருட்கள், சர்க்கரை கலந்த இனிப்புப் பொருட்கள், மாமிச உணவுகள், மலச்சிக்கல், போதைப் பொருட்கள், இரசாயனம் கலந்த உணவுப் பொருட்கள், காற்றோட்டமில்லாத இடங்களில் இருத்தல் என்பனவற்றைத் தவிர்த்தல் வேண்டும். மனதைப் பாதிக்கும் சம்பவங்களான மனக்கவலை, பயம், மனவுளைச்சல், பரபரப்பு, அடிக்கடி உணர்ச்சிவசப்படுதல் போன்றவற்றாலும் ஆஸ்துமா அதிகரிப்பதால் அவற்றையும் தவிர்த்தல் நன்று.
கனடியப் பிரதமர் ஸ்ரீபன் காப்பர் உட்பட 2.5 மில்லியன்
கனடியர்கள் ஆஸ்த்மா நோயால் அவதி!


கனடாவின் புதிய பிரதமர் காப்பர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

புதன்கிழமை மாலை சுவாசிப்பதற்குக் கஷ்டப்பட்ட பிரதமர் உடனடியாக ஒட்டாவா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு உடனடிச் சிகிச்சை முடிந்து அவர் வீடு திரும்பினார். ஒரு மணிநேர சிகிச்சையின் பின்னர் வைத்தியசாலையிலிருந்து அவர் நடந்தே வெளியில் வந்தார்.

அவர் தேகாரோக்கியமாக இருப்பதாக அவரின் பேச்சாளர் பின்னர் தெரிவித்தார். சிறுவயதிலிருந்தே காப்பர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.


குளிர்காலத் தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர் பல தடவை குளிரால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற்றுவந்திருந்தார். சூழல் மாசு தொடர்பில் ஒரு தடவை என்.டி.பி.கட்சி உறுப்பினர்கள் - கன்சவேற்றிக் கட்சி உறுப்பினர்கள் மீது குற்றம் சாட்டிய போது காப்பர் தனது நோய் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். என்.டி.பி கட்சியினர் மட்டுமின்றி மற்றவர்களும் சூழல் மாசு குறித்து கவலைகொண்டுள்ளனர் என்று காப்பர் தெரிவித்தார். ‘விசேடமாக நான் சிறுவயது முதலே ஆஸ்துமா நோயால் அவதிப்படுகிறேன். இதனால் எனக்கும் சூழல் மாசு தொடர்பில் அக்கறையுள்ளது’ என்றும் அவர் பாராளுமன்றத்தில் ஒரு தடவை குறிப்பிட்டிருந்தார்.


கனடா உட்பட வட அமெரிக்காவில் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்படுபவர்களின் தொகை கடந்த இருபது வருடங்களில் நான்கு மடங்காகியுள்ளது. இதற்கு காரணம் சூழல் மாசு மற்றும் அசுத்தமான காற்று என்று ஆய்வுகள் கூறுகின்றன. பிள்ளைகள் சுவாசிக்கும் காற்றானது அவர்களுக்குப் பிடிக்கும் பல நோய்களுக்கு முக்கிய காரணமாக விளங்குகின்றது என்று சூழல் கூட்டுறவு கமிசன் தெரிவித்துள்ளது. சிறுவயதில் சுவாசம் சம்பந்தமான உடல் உறுப்புகள் நன்கு விருத்தியடையாதலால் வயதான காலத்தில் பலவிதமான நோய்களுக்கு ஆளாக வேண்டியுள்ளது.


கனடாவின் புதிய பிரதமர் காப்பர் உட்பட 2.5 மில்லியன் கனடியர்கள் இந்த ஆஸ்துமா நோயால் அவதிப்படுகின்றனர்.

விசேடமாக கனடாவில் 8 வயதுக்கும் 11 வயதுக்கும் இடைப்பட்ட பையன்களில் 20 வீதமானவர்களும், சிறுமிகளில் 15 வீதமானவர்களும் ஆஸ்த்மா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருமல், மூச்சிழுப்பு, மார்பு நோய், சுவாசிப்பதில் கஷ்டம் என்பன இந்த நோயின் அறிகுறிகளாக இருக்கும். பாடசாலைகள் மற்றும் வேலைத்தளங்களில் உள்ள தூசு மற்றும் எரிபொருள், போன்ற ஒவ்வாமைப் பொருட்களும் இதற்கொரு காரணம் என்று சொல்லப்பட்டாலும் புகைத்தலும் இரண்டாம் நிலைப் புகைத்தலும் ஒரு காரணம் என்றும் சொல்லப்படுகின்றது.
கனடாவின் வீடுகளில் உள்ள புகைப்பவர்கள் காரணமாக இரண்டாம் நிலைப் புகையை - 15 முதல் 19 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் 26 வீதமானவர்களும், ஐந்து வயதுக்கு உட்பட்ட 16 வீதக் குழந்தைகளும் கனடிய வீடுகளில் புகையைப் பெற்றுக் கொள்கின்றனர் என்று ஆய்வு கூறுகின்றது.


அதிகம் சூழல் மாசு காரணமாக - ஒன்ராரியோவின் தென்பகுதி மற்றும் கிராமப் பகுதி சிறார்கள் ஆஸ்த்மா மற்றும் சுவாசம் சம்பந்தமான நோய்களால் அவதிப்படுகின்றனர். வறுமையான பகுதிகளில் சூழல் மாசைக் கட்டுப்படுத்தும் தன்மைகள் குறைவு என்பதால் - நிலமட்டத்துடன் உள்ள கார்பன் மோனெக்சைட், நைற்றைஜென் டைஒக்சைட், சில்வர் டைஒக்சைட், ஈயம் என்பனவற்றால் இந்தத் தாக்கம் ஏற்படுகின்றது.


ஆஸ்த்மா நோய் காரணமாக மெக்சிக்கோ, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் பெரும் சுகாதாரச் செலவுகள் ஏற்படுகின்றன. கனடாவை விட மெக்சிக்கோ, அமெரிக்கா போன்ற நாடுகளிலேயே அதிகமானவர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பெருமளவு சிறார்களும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.


பாடசாலைகள், வேலைத்தளங்கள், அலுவலகங்கள், வீடுகள் என்பனவற்றில் உள்ள பொறுப்பு வாய்ந்தவர்கள் சூழல் மாசு மற்றும் அசுத்தக் காற்று என்பனவற்றில் கவனமாக இருந்து பிள்ளைகளை இந்த நோயிலிருந்து காக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.


நன்றி திரு .டாக்டர் றொசாரியோ ஜோர்ஜ், Ph.D.,

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Oct 31, 2009 4:57 pm

"அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்!
அல்லல் படும் ஆன்மாவும்"
இது ஓர் அருமையான தலைப்பு தாமு, அஸ்மாவின் போது அவர்கள் படும் அவஸ்த்தையை, நம்மால் பார்க்கவே முடியாது அவ்வளவு வேதனையாக இருக்கும்,

அஸ்மா பற்றிய சிறந்ததோர் மருத்துவக்குறிப்பு, மிகவும் பிரயோசனமான தகவல்கள், பதிவிற்கு நன்றி தாமு!



ஆஸ்துமா Skirupairajahblackjh18
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Oct 31, 2009 4:58 pm

ஆஸ்துமா 678642

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 31, 2009 4:59 pm

சும்மா உள்ளவனுக்கெல்லாம் டாக்டர் பட்டம் கொடுக்கையில் எங்கள் தாமுவுக்கு கொடுத்தால் என்ன ஆஸ்துமா 733974

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Oct 31, 2009 5:02 pm

ஆஸ்துமா 230655 ஆஸ்துமா 230655 ஆஸ்துமா 230655

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Oct 31, 2009 5:03 pm

உங்களுக்கு கிடைத்திருக்கிறதா ரூபன்? எப்ப ரூபன் நீங்க Doctorate பண்ணினீங்க



ஆஸ்துமா Skirupairajahblackjh18
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Sat Oct 31, 2009 5:07 pm

by ரூபன் Today at 2:29 pm

சும்மா உள்ளவனுக்கெல்லாம் டாக்டர் பட்டம் கொடுக்கையில் எங்கள் தாமுவுக்கு கொடுத்தால் என்ன

ஆஸ்துமா 359383 கண்டிப்பா கொடுக்கலாம்

ஏன்னா தாமு இது போல நிறைய குறிப்புகளை நமக்காக வழங்கியிருக்கிறார் ஆஸ்துமா 942

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 31, 2009 5:10 pm

kirupairajah wrote:உங்களுக்கு கிடைத்திருக்கிறதா ரூபன்? எப்ப ரூபன் நீங்க Doctorate பண்ணினீங்க

அதுக்கெல்லாம் மூளை வேணும் கிருபை அதுதான் என்கிட்ட இல்லையே ஆஸ்துமா 838572

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Oct 31, 2009 5:11 pm

ஆஸ்துமா 838572

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக