புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபாகரனை ஒழிக்குமாறு உத்தரவிட்டது இந்தியாவா? Poll_c10பிரபாகரனை ஒழிக்குமாறு உத்தரவிட்டது இந்தியாவா? Poll_m10பிரபாகரனை ஒழிக்குமாறு உத்தரவிட்டது இந்தியாவா? Poll_c10 
25 Posts - 50%
heezulia
பிரபாகரனை ஒழிக்குமாறு உத்தரவிட்டது இந்தியாவா? Poll_c10பிரபாகரனை ஒழிக்குமாறு உத்தரவிட்டது இந்தியாவா? Poll_m10பிரபாகரனை ஒழிக்குமாறு உத்தரவிட்டது இந்தியாவா? Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
பிரபாகரனை ஒழிக்குமாறு உத்தரவிட்டது இந்தியாவா? Poll_c10பிரபாகரனை ஒழிக்குமாறு உத்தரவிட்டது இந்தியாவா? Poll_m10பிரபாகரனை ஒழிக்குமாறு உத்தரவிட்டது இந்தியாவா? Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
பிரபாகரனை ஒழிக்குமாறு உத்தரவிட்டது இந்தியாவா? Poll_c10பிரபாகரனை ஒழிக்குமாறு உத்தரவிட்டது இந்தியாவா? Poll_m10பிரபாகரனை ஒழிக்குமாறு உத்தரவிட்டது இந்தியாவா? Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
பிரபாகரனை ஒழிக்குமாறு உத்தரவிட்டது இந்தியாவா? Poll_c10பிரபாகரனை ஒழிக்குமாறு உத்தரவிட்டது இந்தியாவா? Poll_m10பிரபாகரனை ஒழிக்குமாறு உத்தரவிட்டது இந்தியாவா? Poll_c10 
3 Posts - 6%
Raji@123
பிரபாகரனை ஒழிக்குமாறு உத்தரவிட்டது இந்தியாவா? Poll_c10பிரபாகரனை ஒழிக்குமாறு உத்தரவிட்டது இந்தியாவா? Poll_m10பிரபாகரனை ஒழிக்குமாறு உத்தரவிட்டது இந்தியாவா? Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
பிரபாகரனை ஒழிக்குமாறு உத்தரவிட்டது இந்தியாவா? Poll_c10பிரபாகரனை ஒழிக்குமாறு உத்தரவிட்டது இந்தியாவா? Poll_m10பிரபாகரனை ஒழிக்குமாறு உத்தரவிட்டது இந்தியாவா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரபாகரனை ஒழிக்குமாறு உத்தரவிட்டது இந்தியாவா? Poll_c10பிரபாகரனை ஒழிக்குமாறு உத்தரவிட்டது இந்தியாவா? Poll_m10பிரபாகரனை ஒழிக்குமாறு உத்தரவிட்டது இந்தியாவா? Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
பிரபாகரனை ஒழிக்குமாறு உத்தரவிட்டது இந்தியாவா? Poll_c10பிரபாகரனை ஒழிக்குமாறு உத்தரவிட்டது இந்தியாவா? Poll_m10பிரபாகரனை ஒழிக்குமாறு உத்தரவிட்டது இந்தியாவா? Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
பிரபாகரனை ஒழிக்குமாறு உத்தரவிட்டது இந்தியாவா? Poll_c10பிரபாகரனை ஒழிக்குமாறு உத்தரவிட்டது இந்தியாவா? Poll_m10பிரபாகரனை ஒழிக்குமாறு உத்தரவிட்டது இந்தியாவா? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பிரபாகரனை ஒழிக்குமாறு உத்தரவிட்டது இந்தியாவா? Poll_c10பிரபாகரனை ஒழிக்குமாறு உத்தரவிட்டது இந்தியாவா? Poll_m10பிரபாகரனை ஒழிக்குமாறு உத்தரவிட்டது இந்தியாவா? Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
பிரபாகரனை ஒழிக்குமாறு உத்தரவிட்டது இந்தியாவா? Poll_c10பிரபாகரனை ஒழிக்குமாறு உத்தரவிட்டது இந்தியாவா? Poll_m10பிரபாகரனை ஒழிக்குமாறு உத்தரவிட்டது இந்தியாவா? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பிரபாகரனை ஒழிக்குமாறு உத்தரவிட்டது இந்தியாவா? Poll_c10பிரபாகரனை ஒழிக்குமாறு உத்தரவிட்டது இந்தியாவா? Poll_m10பிரபாகரனை ஒழிக்குமாறு உத்தரவிட்டது இந்தியாவா? Poll_c10 
7 Posts - 2%
prajai
பிரபாகரனை ஒழிக்குமாறு உத்தரவிட்டது இந்தியாவா? Poll_c10பிரபாகரனை ஒழிக்குமாறு உத்தரவிட்டது இந்தியாவா? Poll_m10பிரபாகரனை ஒழிக்குமாறு உத்தரவிட்டது இந்தியாவா? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பிரபாகரனை ஒழிக்குமாறு உத்தரவிட்டது இந்தியாவா? Poll_c10பிரபாகரனை ஒழிக்குமாறு உத்தரவிட்டது இந்தியாவா? Poll_m10பிரபாகரனை ஒழிக்குமாறு உத்தரவிட்டது இந்தியாவா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபாகரனை ஒழிக்குமாறு உத்தரவிட்டது இந்தியாவா?

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Dec 18, 2013 1:38 pm

கடந்த வாரம் அமைச்சர் பஸில் ராஜபக்­வும், இந்திய நிதியமைச்சர் சிதம்பரமும், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் குறித்த புதுமையான இருவேறு கதைகளை வெளியிட்டிருந்தனர்.
""தமது தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காக, இலங்கை அரசு ஊடாக பிரபாகரனை அழித்தொழித்து விட சில வெளிநாடுகள் விரும்பின.
ஆனால் அத்தகைய தரப்புக்கள்தான் தற்போது விடுதலைப்புலிகள் அழித் தொழிக்கப்பட்டமை குறித்து முதலைக்கண்ணீர் வடிக்கின்றன'' என்று அமைச்சர் பஸில் ராஜபக்­ தெரிவித்திருந்தார். அதேவேளை இந்திய நிதி அமைச்சர் சிதம்பரமோ,""இந்திய அரசு கூறியதை இலங்கை அரசு செவிமடுத்திருந்திருக்குமேயானால் பிரபாகரனின் உயிரிழப்பைத் தவிர்த்திருக்க முடியும்'' எனத் தெரிவித்திருந்தார்.

சில வெளிநாடுகள் என்ற தமது கருத்து மூலம் பஸில் மறைமுகமாகக் குறிப் பிட்டிருப்பது இந்தியாவையே. அதே சமயம் இந்தியா பிரபாகரனைக் காப்பாற்ற முயற்சித்தபோதிலும், இலங்கை அரசு அதற்கு இடமளிக்கவில்லை என்பதே இந்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் கருத்து வெளிப்பாடாகும்.

புலிகளை அழிப்பதில் காங்கிரஸ் அரசு காட்டிய அக்கறை
உண்மையில் பஸில் ராஜபக்­ தெரிவித்த கருத்தே சரியானது. பிரபாகரனை ஒழித்துக்கட்டுவதில் இலங்கை அரசைவிட இந்திய அரசே தீவிரம் காட்டியது. அதிலும் இந்திய அரசைவிட சோனியா காந்திக்கே பிரபாகரனை ஒழித்துக்கட்டும் தேவை இருந் தது. தமது கணவரின் படுகொலைக்குக் காரணமான பிரபாகரன் இலங்கையின் வட பகுதியில் சுதந்திரமாக உலவுவதைக் காண சோனியா காந்தியின் மனதில் கண்களில் முட்களால் குத்துவதைப் போன்ற உணர்வு நிலவியது. சோனியாவைவிட ராஜீவ் காந்தியின் மகளான பிரியங்காவால் அதனைப் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை.

அந்த அளவுக்கு பிரியங்கா தனது தந்தை மீது அளவற்ற பாசம் கொண்டிருந்தார். தந்தையின் இழப்பை பிரியங்காவால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.ராஜீவ் காந்தி 1991 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டார். 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டுவரை இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான அரசே பதவியில் இருந்தது.

1994 ஆம் ஆண்டில் இலங்கையில் சந்திரிகாவின் தலைமையிலான அரசு பதவியேற்றதும் விடுதலைப்புலிகள் அமைப்புடன் சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிக்க அது தயாரான போது அவ்வேளை இந்தியாவில் பதவியிலிருந்த காங்கிரஸ் அரசு குழப்பமடைந்தது.

இலங்கை-இந்திய ஒப்பந்தம் உருவாகக் காரணகர்த்தாவாக இருந்தவரும், ராஜீவ்காந்தியுடன் நெருக்கமான நட்பைப்பேணி வந்தவருமான ஐ.தே.கட்சிப் பிரமுகர் காமினி திஸநாயகா அந்த வேளையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி சந்திரிகாவுக்கு எச்சரிக்கையயான்றை விடுத்திருந்தார்.

ராஜீவ் காந்தியின் படுகொலைக்குக் காரணகர்த்தாவாக இருந்த பிரபாகரனுடன் அவதானத்துடன் தொடர்பு பேணுமாறே அந்த வேளையில் சந்திரிகாவுக்கு காமினி திஸநாயகா ஆலோசனை தெரிவித்திருந்தார். அந்த வேளையில் இந்தியாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசை வழிநடத்திய நேரு பரம்பரையினரின் நிலைப்பாட்டுக்கு காமினி திஸநாயகா ஆதரவு தெரிவித்து வந்தார். 1994 ஆம் ஆண்டின் இலங்கை ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் கூட காமினி திஸநாயகா இந்தியாவுக்குச் சென்று திரும்பியிருந்தார்.

அதன் பின்னரே காமினி திஸநாயகா படுகொலையுண்டார். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டி ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் சந்திரிகா கூட இந்தியாவுக்கு சென்று அவ்வேளைய பிரதமர் நரசிம்மராவைச் சந்தித்து நாடு திரும்பிய பின்னரே விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்குத் தயாரானார். அந்தப் போரின்போது கூட இந்திய அரசு-இலங்கை அரசுக்குப் பல விதங்களில் உதவியளித்தது.

ஆனால் 1996 ஆம் ஆண்டில் இந்தியாவில் காங்கிரஸ் அரசு வீழ்ச்சியுற்று பாரதிய ஜனதாக்கட்சி என்ற பி.ஜே.பி. ஆட்சியைக் கைப்பற்றியதன் பின்னர் பிரபாகரனுக்கு எதிராக இந்தியா தீவிரமாகச் செயற்படவில்லை. மாறாக சமாதான வழியில் பிரபாகரனுடன் பேச்சுவார்த்தை மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுமாறே சந்திரிகா வுக்கு பி.ஜே.பி. அரசு ஆலோசனை வழங்கியது.

ஆனால் பி.ஜே.பி. அரசின் ஆலோசனையைப் புறக்கணித்து விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்த சந்திரிகாவால் விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் அடக்கி ஒடுக்க இயலாது போயிற்று. பின்னர் பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற அதிகாரத்தைப் பெற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான ஐ.தே.க. அரசு மேற்கொண்ட போர் நிறுத்த உடன்பாடு மற்றும் நோர்வேயின் மத்தியஸ்தத்து டனான பேச்சுவார்த்தை என்பவற்றுக்கு பி.ஜே.பி. அரசு ஆதரவு வழங்கியது.

2004 ஆம் ஆண்டில் மீண்டும் இந்தியாவில் சோனியா காந்தியின் தலைமையில் காங்கிரஸ் கட்சி பெரும் பான்மைப் பலத்துடன் ஆட்சி அமைத்தது. அந்த வேளையில் தமது கணவர் ராஜீவ் காந்தியின் படுகொலைக்குக் காரணமான பிரபாகரனைப் பழிவாங் கத்தக்க பலமுள்ள அரசொன்றை இலங்கையில் பதவியில் அமர்த்துவதற்கான தேவை சோனியா காந்திக்கு ஏற்பட்டது.

ராஜீவ் காந்தி படுகொலைச் சம்பவத்தில் சந்தேக நபராக சிறையில் வைக்கப்பட்ட நளினியை, பிரியங்கா சிறையில் வைத்துச் சந்தித்ததன் பின்னர் சோனியா காந்தியின் அந்த நோக்கம் தீவிரம் கண்டது. சிறையில் நளினியைத் தனிப்படச் சந்தித்த பிரியங்கா மணிக்கணக்காக நீண்டநேரம் நளினியுடன் பேசியிருந்தார்.

கர்ப்பிணிப் பெண்ணான நளினி சிறையில் இருக்க நேர்ந்ததால் நளினியைச் சந்தித்து அனுதாபம் தெரிவிப்பதன் மூலம் அரசியல் பிரபல்யம் தேடிக்கொள்ள பிரியங்கா முயல்வதாக அவ்வேளையில் விமர்சனங்கள் வெளிவந்த போதிலும், உண்மையில் தமது தந்தையைப் படுகொலை செய்ய உத்தரவிட்டது பிரபாகரன் தானா? அல்லது அது பலம் வாய்ந்த வெளிநாடொன்றினால் தீட்டப்பட்ட சதியா என்பது குறித்து தெளிவாகத் தெரிந்து உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்குடனான சந்திப்பே அது எனப் பின்னர் பேசப்பட்டது.

நளினியுடனான அந்தச் சந்திப்பின் மூலம் ராஜீவ் காந்தியின் படுகொலையின் சூத்திர தாரி பிரபாகரன் தான் என்பதை பிரியங்கா சந்தேகமின்றி உறுதிப்படுத்திக் கொண்ட தாகவும் கூறப்பட்டது. அதன் பின்னரே எந்த விலை செலுத்தியாவது பிரபாகரனை அழித்தொழித்து போரை முடிவுக்குக் கொண்டு வருமாறு இந்தியா இலங்கை அரசுக்கு ஆலோசனை வழங்கியது.

விடுதலைப்புலிகளுடனான போருக்கு காங்கிரஸ் அரசின் ஆசீர்வாதம்
இந்தியாவின் அந்தச் செய்தியை இரகசியமாக மஹிந்தவின் காதுகளில் போட்டவர், இந்திய-இலங்கை அரசுகளிடையே ராஜதந்திரத் தொடர்பாளராக அவ்வேளையில் செயற்பட்ட பஸில் ராஜபக்­வே. இந்தியா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி சர்வதேச சமூகத்தின் அந்த வற்புறுத்தலை ராஜதந்திர ரீதியில் செயலிழக்க வைத்தது. பிரபாகரன் போரில் கொல்லப்பட்ட செய்தியை மஹிந்த தெரிந்து கொண்ட பின்னர், அது குறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவலை உத்தியோகபூர்வமாக மஹிந்தவிடம் இருந்து பெற்ற முதலாவது வெளிநாட்டு அரசியல் தலைவர் சோனியா காந்தியே.

இதனாலேயே இலங்கையைப் பயன்படுத்தி பிரபாகரனை அழித்தொழிக்கும் தேவை சில வெளிநாடுகளுக்கு இருந்ததாக பஸில் கூறியதை உண்மைதானெனக் கூற வேண்டியுள்ளது. எது எவ்வாறான போதிலும் பிரபாகரனின் கொலையை முன்னிலைப்படுத்தி சிங்கள மக்களின் ஆதரவைக் கட்டிக் காத்து ராஜபக்­ குடும்பத்தவர்கள் ஆட்சி அதிகாரத்தை நிலை நிறுத்தி வருகின்றனர்.

ஆயினும் அதனால் இந்திய காங்கிரஸ் அரசும் நேரு குடும்பத்தவரும் பின்னடைவையே சந்திக்க நேர்ந்துள்ளது. பிரபாகரனை அழித்தொழித்ததன் மூலம் ராஜபக்­ தரப்பினர் தேர்தல்களில் வெற்றிவாகை சூடிவரும் அதேவேளை, நேரு குடும்பத்தின் மீதான மதிப்பும் ,காங்கிரஸ் கட்சி மீதான மரியாதையும் தமிழ் நாட்டில் வெகுவேகமாக நலிவுற்று வருகின்றது.

பிரபாகரனை எவ்விதத்திலாவது ஒழித்துக்கட்ட நேரு குடும்பத்தவர்கள் ராஜபக்­மாருக்கு "லைசென்ஸ்' வழங்கியதன் காரணமாக, தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சியின் தூண் எனக் கருதப்படும் நிதி அமைச்சர் சிதம்பரம் கூட எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு வாக்காளர்களால் நிராகரிக்கப்படும் நிலை உருவாகி வருகிறது.

அவர் எதிர்வரும் தேர்தலில் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவே பிரதமர் மன்மோகன் சிங்கை பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ள கொழும்புக்குச் செல்வதினின்றும் தடுத்து நிறுத்துவதில் தீவிரம் காட்டிச் செயற்பட்டார்.

பஸில் ராஜபக்­ தெரிவித்த கருத்து உண்மையே ஆன போதிலும் மரத்தால் வீழ்ந்தவனை மாடு முட்டிக் காயப்படுத்தியமை போன்று தமிழ் நாட்டில் மதிப்பிழந்து போன காங்கிரஸ் அரசுக்கு அது பலத்ததொரு அடியே. ஆசிய நாடுகளின் மூத்த அண்ணனாகத் தன்னை நிறைநிறுத்தியுள்ள இந்தியா குறித்து குத்தல் கருத்து வெளியிடும் போது வார்த்தையை அவதானத்துடன் வெளியிடத் தவறினால் நன்றாக வாங்கிக் கட்ட வேண்டியிருக்கும் என்பதை இலங்கை அரசும் கவனத்தில் இருத்த வேண்டியது அவசியமே.

இவ்வாரம் இந்தியாவில் இடம்பெற்ற மாநிலத் தேர்தல்களில் பி.ஜே.பி. பெற்ற அபார வெற்றியை நோக்கும்போது, எப்படியும் இந்தியாவிடம் இலங்கை அரசு வாங்கிக் கட்டிக் கொள்ள அதிக காலம் எடுக்கப் போவதில்லை என்பது தெளிவாகிறது.

அது மட்டுமன்றி பிரபாகரனை ஒழித்துக்கட்ட ராஜபக்­மாரைப் பயன்படுத்திக் கொண்ட நேரு குடும்பத்தவர் களின் காங்கிரஸ் கட்சி அடுத்த ஆண்டில் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியைச் சந்திக்க நேரும் என்பதற்கான அறிகுறி கடந்த வார மாநிலத் தேர்தல்களின் முடிவுகள் மூலம் தெட்டத் தெளிவாகப் புலப்படுகிறது.

பிரபாகரன் மீதும் விடுதலைப் புலிகள் மீதும் வைராக்கியம் பாராட்டிய நேரு குடும்பத்தாருக்குப் பதிலாக விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு மேற்கொண்ட போரின்போது இலங்கை அரசின் போர் நடவடிக்கைகளை விமர்சித்து வந்த வந்த பி.ஜே.பி. அடுத்த ஆண்டில் ஆட்சி அதிகாரத்தைக்கைப்பற்றுமானால், எந்தெந்த வகையில் இந்தியாவினால் இலங்கை நலிவுபடுத்தப்பட நேரும் என்பது குறித்து இப்போதே ஆரூடம் கூற எவராலும் இயலாது.

நன்றி: onlineuthayan.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக