புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
  தோனியின் மனோபாவமும் இந்தியக் கிரிக்கெட் அணியும் ! Poll_c10  தோனியின் மனோபாவமும் இந்தியக் கிரிக்கெட் அணியும் ! Poll_m10  தோனியின் மனோபாவமும் இந்தியக் கிரிக்கெட் அணியும் ! Poll_c10 
79 Posts - 45%
ayyasamy ram
  தோனியின் மனோபாவமும் இந்தியக் கிரிக்கெட் அணியும் ! Poll_c10  தோனியின் மனோபாவமும் இந்தியக் கிரிக்கெட் அணியும் ! Poll_m10  தோனியின் மனோபாவமும் இந்தியக் கிரிக்கெட் அணியும் ! Poll_c10 
55 Posts - 32%
i6appar
  தோனியின் மனோபாவமும் இந்தியக் கிரிக்கெட் அணியும் ! Poll_c10  தோனியின் மனோபாவமும் இந்தியக் கிரிக்கெட் அணியும் ! Poll_m10  தோனியின் மனோபாவமும் இந்தியக் கிரிக்கெட் அணியும் ! Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
  தோனியின் மனோபாவமும் இந்தியக் கிரிக்கெட் அணியும் ! Poll_c10  தோனியின் மனோபாவமும் இந்தியக் கிரிக்கெட் அணியும் ! Poll_m10  தோனியின் மனோபாவமும் இந்தியக் கிரிக்கெட் அணியும் ! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
  தோனியின் மனோபாவமும் இந்தியக் கிரிக்கெட் அணியும் ! Poll_c10  தோனியின் மனோபாவமும் இந்தியக் கிரிக்கெட் அணியும் ! Poll_m10  தோனியின் மனோபாவமும் இந்தியக் கிரிக்கெட் அணியும் ! Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
  தோனியின் மனோபாவமும் இந்தியக் கிரிக்கெட் அணியும் ! Poll_c10  தோனியின் மனோபாவமும் இந்தியக் கிரிக்கெட் அணியும் ! Poll_m10  தோனியின் மனோபாவமும் இந்தியக் கிரிக்கெட் அணியும் ! Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
  தோனியின் மனோபாவமும் இந்தியக் கிரிக்கெட் அணியும் ! Poll_c10  தோனியின் மனோபாவமும் இந்தியக் கிரிக்கெட் அணியும் ! Poll_m10  தோனியின் மனோபாவமும் இந்தியக் கிரிக்கெட் அணியும் ! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
  தோனியின் மனோபாவமும் இந்தியக் கிரிக்கெட் அணியும் ! Poll_c10  தோனியின் மனோபாவமும் இந்தியக் கிரிக்கெட் அணியும் ! Poll_m10  தோனியின் மனோபாவமும் இந்தியக் கிரிக்கெட் அணியும் ! Poll_c10 
3 Posts - 2%
prajai
  தோனியின் மனோபாவமும் இந்தியக் கிரிக்கெட் அணியும் ! Poll_c10  தோனியின் மனோபாவமும் இந்தியக் கிரிக்கெட் அணியும் ! Poll_m10  தோனியின் மனோபாவமும் இந்தியக் கிரிக்கெட் அணியும் ! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
  தோனியின் மனோபாவமும் இந்தியக் கிரிக்கெட் அணியும் ! Poll_c10  தோனியின் மனோபாவமும் இந்தியக் கிரிக்கெட் அணியும் ! Poll_m10  தோனியின் மனோபாவமும் இந்தியக் கிரிக்கெட் அணியும் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோனியின் மனோபாவமும் இந்தியக் கிரிக்கெட் அணியும் !

seltoday
seltoday
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013
http://jselvaraj.blogspot.in/

Postseltoday Thu Feb 20, 2014 9:52 am

இந்திய கிரிக்கெட் வரலாறு இரண்டு இடங்களில் தோனியின் பெயரை அழுத்தமாக பதிவு செய்யும் . ஒன்று , அனைத்து சர்வதேச கோப்பைகளையும் வென்ற இந்தியாவின் சிறந்த அணித்தலைவர் .இரண்டு ,தனி ஒரு நாட்டுக்கு எதிரான வெளிநாட்டுப் பயணங்களில் மோசமான தோல்விகளை அதிகளவு சந்தித்த இந்தியாவின் அணித்தலைவர் . இந்திய கிரிக்கெட் அணி , 1970 களில் கத்துக்குட்டி அணியாக சர்வதேச போட்டிகளில் விளையாடி மோசமான தோல்விகளை சந்தித்த போது அப்போது யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை . வளரும் அணி தொடர்ந்து தோற்பதை ஏற்றுக் கொள்ள முடிகிறது . அந்த அணி வெற்றி பெற முயற்சிப்பதே சாதனையாக பார்க்கப் படுகிறது . ஒரு நாள் போட்டியில் சாம்பியன் , டெஸ்ட் மற்றும் 20-20 போட்டிகளில் உலகத் தரவரிசையில் இரண்டாம் இடம் பெற்றுள்ள ஒரு அணி தொடர்ந்து மோசமாக தோற்பது தான் இந்திய ரசிகர்களால் மட்டுமல்ல உலக கிரிக்கெட் ரசிகர்களாலும் ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது.

கிரிக்கெட் என்பது குழு விளையாட்டு என்றாலும் வெற்றி, தோல்வி இரண்டுக்கும் அணித்தலைவரே பொறுப்பேற்கிறார் . வெற்றிகளை குவித்த போது தோனியைத் தலையில் வைத்து கொண்டாடினோம் .தற்போது அதே தோனி தொடர் தோல்விகளை சந்திக்கும் போது நமது உதடுகள் அவரை ஏசுகின்றன . இந்த நிலை விரைவில் மாறி இந்திய அணி வெற்றிகளைக் குவிக்கும் போது நாம் மீண்டும் தோனியைப் புகழ ஆரம்பித்து விடுவோம் . முன்பு இங்கிலாந்திலும் ,ஆஸ்திரேலியாவிலும் அடைந்த மோசமான தோல்விகளுக்கு ( இரண்டு நாடுகளிலும் நான்கு டெஸ்டிலும் தோல்வி ) நன்றாக செயல்படாத வீரர்களை பழைய சாதனைகளுக்காக தொடர்ந்து தேர்ந்தெடுத்த தேர்வுக்குழுவினர் தான் காரணம் . அடுத்ததாக நடந்த சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பைக்கு முற்றிலும் புதிய அணியை ( IPL போட்டிகளில் சிறப்பாக விளையாடியவர்கள் ) தேர்வு குழு தேர்ந்தெடுத்தது. அதன் விளைவாக சாம்பியன்ஸ் கோப்பையை அசத்தலாக வென்றது . நான் இதுவரை பார்த்த கிரிக்கெட் தொடர்களில் ,ஒரு தொடர் முழுவதும் இந்தியா சிறப்பாக பந்துவீசியது கடந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் மட்டுமே .20 ஓவராக குறைக்கப்பட்ட இறுதிப் போட்டியில் ( இலக்கு 126 )கூட பந்துவீச்சால் தான் இந்தியா வென்றது . அதன் பிறகு இந்தியாவில் நடந்த போட்டிகளில் ஆஸ்திரேலியாவை நான்கு டெஸ்ட்களிலும் தோற்கடித்தது . பிறகு நடந்த 7 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலும் ஆஸ்திரேலியாவை வென்றது . சச்சினுக்காக தென்னாப்பிரிக்கத் தொடரைச் சிதைத்து மேற்கு இந்தியத் தீவுகள் உடனான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர் திடீரென்று உருவாக்கப்பட்டது . அதிலும் இந்தியா வென்றது . போதிய பயிற்சியும் , அனுபவமும் இல்லாததால் தென்னாப்பிரிக்கத் தொடரில் மோசமான தோல்விகளை இந்தியா சந்தித்தது .

நியுசிலாந்தில் இவ்வளவு மோசமான தோல்விகள் எதிர்பார்க்காதது தான் . தோல்விகளுக்கு 11 பேர் கொண்ட அணித்தேர்வும் ,தோனியின் தற்காப்பு மனோபாவமும் ஒரு காரணம் . 5 ஒரு நாள் போட்டிகள் 2 டெஸ்ட் அனைத்திலும் டாஸ் வென்றாலும் ஒரு போட்டியைத் தவிர மற்ற அனைத்திலும் முதலில் பந்துவீச்சையே தேர்வு செய்தார் . இந்த அணுகுமுறை வெற்றி தராதபோதும் மீண்டும் மீண்டும் பந்துவீச்சையே ஏன் தேர்வு செய்தார் என்று தெரியவில்லை? தோனிக்கு ,மட்டையாளர்கள் ,பந்துவீச்சாளர்கள் யார் மீது நம்பிக்கை இல்லை அல்லது யாரை அதிகம் நம்புகிறார் குழப்பமாக இருக்கிறது .திறமை இருந்தாலும் புதிய வீரர்களைக் களமிறக்குவதில் தோனி மிகவும் அதிகப்படியான தயக்கம் காட்டுகிறார் . கடந்த IPL தொடரிலும் இதையே செய்தார் . பத்ரிநாத் சிறப்பாக விளையாடாத போதும் இறுதிப் போட்டி வரை தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தார் . பாப் டு பிளிசிஸ் ,பாபா அபராஜித் போன்ற வீரர்களுக்கு ஒரு வாய்ப்பு கூட கொடுக்கவில்லை . இந்த ஆண்டும் இந்த இரண்டு வீரர்களையும் சென்னை வாங்கியுள்ளது . முதலில் சென்னை அணி இந்த IPL ல் பங்கேற்பதே கேள்விக்குறி தான். கோடிகளிலே புரண்டாலும் சூது கவ்வத்தான் செய்கிறது .இது சூதின் குணமா அல்லது மனிதனின் பேராசையா !அதிகாரத்திற்கும் நீதிக்கும் இடையேயான போட்டியில் எது வெல்லும் என்று தெரியவில்லை . ராஜஸ்தான் அணியின் அணுகுமுறை தான் கோடிகள் புரண்டாலும் IPL போட்டிகளை அர்த்தப்படுத்துகிறது . ரஹானே ,ஸ்டுவர்ட் பின்னி , சஞ்சு சாம்சன் ,தாம்பே என்று வயது வித்தியாசம் பார்க்காமல் திறமைக்கு மதிப்புக் கொடுக்கிறது . ரகானே ,ஸ்டுவர்ட் பின்னி இந்திய அணியில் இடம்பெற்று விட்டனர் . விரைவில் சஞ்சு சாம்சனும் இடம் பெறுவார் .

பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்துவதிலும் தோனியின் அணுகுமுறை பெரும்பாலும் வெற்றி தருவதில்லை . கடந்த இரண்டு ,மூன்று தொடர்களிலும் இந்தியப் பந்துவீச்சு எதிரணிக்கு ஏந்தவித நெருக்கடியையும் தரவில்லை . அனுபவமின்மை ஒரு காரணமாக இருந்தாலும் தோனியின் அணுகுமுறையும் ஒரு காரணம் . சுழற்பந்து எடுபடும் மைதானங்களிலும் வேகப்பந்து வீச்சிற்கே முன்னுரிமை கொடுக்கிறார் .பகுதிநேரப் பந்துவீச்சாளர்களைப் பெரும் தயக்கத்துடன் தான் பந்து வீச அழைக்கிறார். அவர்கள் சிறப்பாகவே பந்து வீசினாலும் முழுமையாக பயன்படுத்துவதில்லை.கள வியூகம் அமைப்பதிலும் தோனி பின்தங்கியே உள்ளார். இவ்வளவிற்கு பிறகும் இந்தியா பெற்ற வெற்றிகளுக்கு தோனி, வீரர்களிடம் வைத்திருக்கும் அதிகப்படியான நம்பிக்கை தான் காரணம் . இதற்கு முந்தைய அணித்தலைவர்கள் தோனி அளவிற்கு வீரர்களை நம்பியதில்லை . தோனியின் இந்த நம்பிக்கை தான், அவருக்கு இவ்வளவு வெற்றிகளையும் , பேரையும் ,புகழையும் பெற்றுத்தந்துள்ளது .t20 இறுதிப்போட்டியில் கடைசி ஓவரை வேறு அணித்தலைவராக இருந்த்திருந்தால் ஜோகிந்தர் சர்மாவை கண்டிப்பாக பந்துவீச அழைத்திருக்க மாட்டார் . ஆனால் ,தோனியின் நம்பிக்கை வென்றது .
தோனிக்கு பெரிய வெற்றிகளைப் பெற்றுத்தந்த இந்த அதிகப்படியான நம்பிக்கை தான் தற்போது தோல்விகளையும் பெற்றுத்தருகிறது. குறைவான திறமை உள்ளவர்களிடமிருந்தும் அதிகப்படியான திறமையை எதிர்பார்த்து ஏமாந்து போகிறார்.

அணித்தேர்வு :

கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவிலிருந்து 15 பேரைத் தேர்வு செய்வது மிகவும் சவாலானது. தேர்வுக்குழு இந்தப்பணியைத் திறம்படவே செய்கிறது . உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடுபவர்கள் தேசிய அணியில் இடம்பெறுகின்றனர். முன்பை விட தற்போது அணித்தேர்வில் வெளிப்படைத்தன்மை தெரிகிறது.

11 பேர் தேர்வு :

களமிறங்கும் 11பேரைத் தேர்ந்தெடுப்பதில் கடந்த இரண்டு , மூன்று தொடர்களாக தோனி சொதப்பி வருகிறார்.சரியான 11 பேரை தேர்வு செய்து விட்டாலே அணித்தலைவரின் பாதிப்பணி முடிந்துவிடும். வெற்றி பெற்றாலோ, தோல்வி அடைந்தாலோ முதலில் தீர்மானித்த அணி தான் தொடர் முழுவதும் விளையாடுகிறது. நியுசிலாந்து தொடர் ஆரம்பிக்கும் போதே தோனி சொல்கிறார் " பரிசோதனை முயற்சிகளில் இறங்க மாட்டோம் " .சரி, அப்படி பரிசோதனை முயற்சி எதுவும் செய்யாததால் நியுசிலாந்து தொடரில் இந்தியா பெற்றது என்ன ? தோல்விகள் மட்டும் தான் . அதே வேளையில் நியுசிலாந்து அணி தொடர் முழுவதும் பரிசோதனை முயற்சிகளில் இறங்கியது . ஒவ்வொரு போட்டிக்கும் அணி வீரர்களை தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருந்தது . இந்தியா ஒரு போதும் இவ்வாறு செயல்படாது . குறைபாடுகள் அதிகம் இருந்தாலும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் அந்த அணியை மாற்றவே மாட்டார்கள் . 50 ஓவர்கள் விளையாடும் போட்டியில் கூட ஜடேஜாவுடன் சேர்த்து 5 பந்து வீச்சாளர்கள் இடம்பெறுகிறார்கள் . 200 முதல் 300 ஓவர்கள் பந்துவீச வேண்டிய டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவுடன் சேர்த்து 4 பந்து வீச்சாளர்கள் மட்டுமே ஆடும் அணியில் இடம்பெறுகிறார்கள் . டெஸ்ட் அணிக்கு முற்றிலும் பொருந்தாத வீரராக ஜடேஜா இருந்தும் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது .டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அஸ்வினுக்கு இரண்டு டெஸ்ட்களிலும் வாய்ப்பளிக்கவில்லை .ஜடேஜாவை விட அஸ்வின் சிறந்த ஆல்ரவுண்டர் . அமித் மிஸ்ரா தொடர்ந்து இரண்டு தொடர்களாக புறக்கணிக்கப்பட்டுள்ளார் . ஈஸ்வர் பாண்டேவுக்கு வாய்ப்பளிக்கவில்லை .பேருக்கு ஒரு போட்டியில் மட்டும் ஸ்டுவர்ட் பின்னிக்கு வாய்ப்பு . அடுத்து ஆசியக் கண்டத்தில் நடைபெறும் போட்டிகளில் என்ன செய்யப் போகிறார்களோ .

பந்துவீச்சு :

இந்தியக் கிரிக்கெட் அணியா ! வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டது ; பந்து வீச்சு சுமார் தான் , எப்பவாவது சிறப்பாக பந்து வீசுவார்கள் .இந்தக் கதையைத் தான் நாம் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்த ஆரம்பித்த காலத்தில் இருந்துu சொல்கிறார்கள் . மற்ற நாடுகளில் சிறந்த பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள் . உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர் யாரும் தற்போது இந்திய அணியில் இல்லை .முன்பாவது இந்தியச் சுழற்பந்து வீச்சாளர்களுக்கென்று ஒரு தனித்துவம் இருந்தது . மற்ற அனைத்து அணிகளும் இந்தியச் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள அஞ்சும் . தற்போது அந்த நிலையும் இல்லை . அனைத்து அணிகளும் மிக எளிதாக இந்தியச் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்கின்றன . இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு விக்கட் வீழ்த்தும் தகுதியுள்ள பவுன்சர் பந்துகளை வீசத் தெரிவதே இல்லை . பேருக்கு பவுன்சர் போடுகிறோம் என்று வீசுகிறார்கள், அது 6 ஆகவோ 4 ஆகவோ மாறிவிடுகிறது . இந்தியப் பந்துவீச்சில் நிலைப்புத்தன்மை என்பதே எப்போதும் இல்லை .எப்ப நன்றாக பந்து வீசுவார்கள் ,எப்ப மோசமாக பந்து வீசுவார்கள் என்று அவர்களுக்கே தெரியாது . இப்போது இந்தியக் கிரிக்கெட் அணியின் இடத்தைத் தக்கவைக்க தரமான பந்து வீச்சாளர்களைக் கண்டடைவது அவசியம் .

மட்டைவீச்சு :

இந்திய அணியின் மட்டைவீச்சு எப்போதும் கொஞ்சம் அதிகமான திறனுடன் தான் இருக்கிறது. அந்த திறனை முழுதாக பயன்படுத்த தவறிவிடுகிறார்கள் .பொதுவாகவே இந்திய வீரர்களிடம் மனோபலம் சற்று குறைவாகவே உள்ளது. கடினமான போட்டியில் ஒரு அளவிற்கு மேல் வெற்றி பெற போராடுவதே இல்லை. மட்டைவீச்சாளர்கள் போராட்ட குணத்துடன் செயல்பட்டால் இன்னும் அதிகமான போட்டிகளில் வெற்றி பெறலாம்.

களவியூகம் :

இந்திய அணி களவியூகம் அமைப்பதில் அனைத்துவிதமான போட்டிகளிலும் அழகாக சொதப்புகிறது. பார்மில் இல்லாத வீரர்கள் கூட இந்தியாவிற்கு எதிராக அட்டகாசமாக ஆடுகிறார்கள் . பந்துவீச்சாளர்கள் சிறப்பாகவே பந்து வீசினாலும் பார்ட்னர்சிப்பை பிரிக்கும் வகையில் கள வியூகம் அமைக்கப்படுவதில்லை. எதிரணி வீரர்கள் அடித்து ஆடாவிட்டாலும் களத்தடுப்பாளர்களை எல்லைக்கோட்டிலேயே நிறுத்துகிறார், தோனி. மோசமான கள வியூகத்தால் இந்திய அணிக்கு எதிராக விளையாடும் அணிகள் ஒரு நாள் போட்டிகளில் எளிதாக 300 ரன்களுக்கு மேல் எடுத்துவிடுகிறார்கள். சமீபத்திய தோல்விகளுக்கு மோசமான கள வியூகமும் ஒரு காரணம். தோனி இதைப்புரிந்து கொள்ள வேண்டும் .

தோனி , வெளிநாடுகளில் தனியொரு நாட்டிற்கு எதிரான தொடர்களில் பெரிய தோல்விகளைச் சந்தித்தாலும் ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகள் பங்கு பெறும் கிரிக்கெட் தொடர்களில் பெரிய வெற்றிகளைப் பெற்று இருக்கிறார். அடுத்த தொடர்களில் என்ன நடக்குமோ தெரியவில்லை . பலவீனங்கள் இருந்தாலும் இந்தியா தரவரிசையில் தொடர்ந்து நல்ல நிலையிலேயே இருக்கிறது. இதைத் தக்கவைக்குமா என்பதுதான் தெரியவில்லை.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Feb 20, 2014 11:35 am

இந்த கிரிக்கெட்ட பார்க்குறத விட்டுட்டா, இத்தன டென்சன் நமக்கு வராதுல்ல?..

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Feb 20, 2014 1:16 pm

ஜெயித்தால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதும் தோற்றால் தெருவில் வீசுவதும் தான் நம் கொள்கையாச்சே

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Feb 20, 2014 1:55 pm

M.M.SENTHIL wrote:இந்த கிரிக்கெட்ட பார்க்குறத விட்டுட்டா, இத்தன டென்சன் நமக்கு வராதுல்ல?..
கிரிகெட் பாக்குறது கொறஞ்சதுனாலத்தானே 20-20 சீயர்ஸ் கேள்ஸ்ன்னு புதுசு புதுசா கண்டுபுடிச்சாங்க

ஈகரை தமிழ் களஞ்சியம்   தோனியின் மனோபாவமும் இந்தியக் கிரிக்கெட் அணியும் ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Feb 20, 2014 10:48 pm

ராஜா wrote:ஜெயித்தால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதும் தோற்றால் தெருவில் வீசுவதும் தான் நம் கொள்கையாச்சே

சாதரணமாக எடுக்க தெரியாதவர்களின் வெளிப்பாடு தான் இது

  தோனியின் மனோபாவமும் இந்தியக் கிரிக்கெட் அணியும் ! M  தோனியின் மனோபாவமும் இந்தியக் கிரிக்கெட் அணியும் ! U  தோனியின் மனோபாவமும் இந்தியக் கிரிக்கெட் அணியும் ! T  தோனியின் மனோபாவமும் இந்தியக் கிரிக்கெட் அணியும் ! H  தோனியின் மனோபாவமும் இந்தியக் கிரிக்கெட் அணியும் ! U  தோனியின் மனோபாவமும் இந்தியக் கிரிக்கெட் அணியும் ! M  தோனியின் மனோபாவமும் இந்தியக் கிரிக்கெட் அணியும் ! O  தோனியின் மனோபாவமும் இந்தியக் கிரிக்கெட் அணியும் ! H  தோனியின் மனோபாவமும் இந்தியக் கிரிக்கெட் அணியும் ! A  தோனியின் மனோபாவமும் இந்தியக் கிரிக்கெட் அணியும் ! M  தோனியின் மனோபாவமும் இந்தியக் கிரிக்கெட் அணியும் ! E  தோனியின் மனோபாவமும் இந்தியக் கிரிக்கெட் அணியும் ! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
srisivaerd
srisivaerd
பண்பாளர்

பதிவுகள் : 186
இணைந்தது : 08/03/2010
http://blogspot.srisivakumar.com/

Postsrisivaerd Thu Apr 23, 2015 1:04 pm

தோனியின் செயல்பாடு மற்றும் அணுகுமுறை எப்போதும் சிறப்பாகவே உள்ளது.  தனி வீரராக கீபிங் மட்டைவீச்சு ஆகியவற்றின் மூலம் புரிந்து கொள்ளலாம். முக்கிய போட்டிகளில் அவரது மட்டைவீச்சு அணுகுமுறை சிறப்பாகவே உள்ளதாக நான் நினைக்கிறன்.  உலக கோப்பை இறுதி போட்டியில் அவரது மட்டை வீச்சை உதரணமாக சொல்லலாம்.

மனிதன் தனது மனநிலைகளை மாற்றிக் கொள்வதன் மூலமாகத் தனது
வாழ்க்கையை மாற்றிக் கொள்ளலாம் என்பதே எனது தலைமுறையின் மிகப்பெரிய கண்டுபிடிப்பாகும்.
- ஜேம்ஸ் வில்லியம்ஸன் (மனநல நிபுணர்) ஹார்வார்டு பல்கலைகழகம்
நட்புடன்
ஸ்ரீ சிவக்குமார்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக