புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 Poll_c10'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 Poll_m10'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 Poll_c10 
96 Posts - 49%
heezulia
'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 Poll_c10'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 Poll_m10'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 Poll_c10'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 Poll_m10'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 Poll_c10'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 Poll_m10'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 Poll_c10'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 Poll_m10'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 Poll_c10 
7 Posts - 4%
prajai
'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 Poll_c10'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 Poll_m10'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 Poll_c10'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 Poll_m10'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 Poll_c10'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 Poll_m10'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 Poll_c10'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 Poll_m10'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
cordiac
'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 Poll_c10'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 Poll_m10'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 Poll_c10'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 Poll_m10'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 Poll_c10 
223 Posts - 52%
heezulia
'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 Poll_c10'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 Poll_m10'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 Poll_c10'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 Poll_m10'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 Poll_c10'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 Poll_m10'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 Poll_c10'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 Poll_m10'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 Poll_c10 
16 Posts - 4%
prajai
'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 Poll_c10'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 Poll_m10'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Barushree
'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 Poll_c10'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 Poll_m10'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 Poll_c10'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 Poll_m10'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 Poll_c10'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 Poll_m10'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 Poll_c10'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 Poll_m10'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')


   
   

Page 2 of 2 Previous  1, 2

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Wed Dec 04, 2013 11:36 am

First topic message reminder :

'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')

தொடர்-5

திரும்பிப் பார்

நடிகர் திலகத்தின் 5 ஆவது அற்புதப் படைப்பு.

'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 2009031350291601

வெளியான நாள் - 10.07.1953

தயாரிப்பு - மாடர்ன் தியேட்டர்ஸ்

கதை வசனம் - மு.கருணாநிதி

சென்னையில் வெளியான திரையரங்குகள் - பாரகன், பிரபாத், சரஸ்வதி, நூர்ஜஹான்

இசை - 'இசைமேதை' ஜி.ராமநாதன்

படத்தொகுப்பு - எல்.பாலு

ஒளிப்பதிவு - W.R.சுப்பாராவ்

இயக்கம் - டி.ஆர். சுந்தரம்

நடிக நடிகையர்:

நடிகர் திலகம், பி.வி.நரசிம்ம பாரதி, பண்டரிபாய், கிரிஜா, கிருஷ்ணகுமாரி, டி.எஸ்.துரைராஜ், ஏ.கருணாநிதி, டி.பி.முத்துலட்சுமி மற்றும் பலர்


கதை:

பெற்றோரை இழந்து தன் தம்பி பரந்தாமனுடன் கோவையில் தனியே வாழ்ந்து வருகிறாள் நல்மனம் கொண்ட பூமாலை. தம்பி பரந்தாமனோ பரம அயோக்கியன். கபடதாரி, வேஷதாரி, காமுகன், நயவஞ்சகன் போன்ற பல பட்டங்களுக்கு முதல் சொந்தக்காரன். பெண்களிடம் காதல் போதையூட்டும் களிப்பான கனிமொழி வார்த்தைகளை தேன் குழைத்து பேசி, வாளிப்பான அவர்கள் அழகை சூறையாடி விட்டு அவர்கள் வாழ்வை நாசம் செய்து சுகம் காணுவதில் கை தேர்ந்த சூத்ரதாரி. தம்பியைத் திருத்த பல வழிகளில் முயன்று முடியாமல் முழிக்கிறாள் பூமாலை.

கோவை சிவசக்தி மில் தொழிலார்களின் மேஸ்திரி புண்ணிய கோடியின் மகன் பாண்டியன் ஒரு எழுத்தாளன். நல்லவன். அவன் எழுதும் கதைகளைத் திருடி அவற்றை  தான் எழுதுவதாக தன் பெயரை அச்சிட்டு ஊரை ஏமாற்றுகிறான் பரந்தாமன். அவனுக்கு உடந்தை கருடா பதிப்பகத்தின் உரிமையாளன் கருடன். அவனும் ஒரு எத்தன். பணப் பித்தன். இந்த ஏமாற்று அக்கிரமத்தைத் தட்டிக் கேட்கும் பாண்டியனுக்கும், பரந்தாமனுக்கும் அடிக்கடி தகராறு எற்பட்டு இருவரும் பகையாளியாகிறார்கள்.

பாண்டியனின் எழுத்தை தன் எழுத்தாக கருதி தெரியாமல் ஏமாளியாக நம்பும் பாமா என்ற இளம் பெண்ணை தன் காதல் வலைக்குள் சிக்க வைக்கிறான் பரந்தாமன். அந்தப் பேதையும் இவனுடைய காதல் ரசம் சொட்டும் பேச்சுகளுக்கு மயங்கி அடிமையாகிறாள்.

பூமாலைக்கு குமுதா என்றொரு சொந்தம். பரந்தாமனுக்கு முறைப்பெண். குமுதாவை தன் தம்பி பரந்தாமனுக்கு மணமுடித்து வைக்க எண்ணியிருக்கிறாள் பூமாலை. ஆனால் பரந்தாமன் பாமாவைக் காதலிப்பதை அறிந்து பாமாவை அவனுக்கு மணமுடித்து வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறாள் பூமாலை. திருமணத்தன்று பாமாவைக் கல்யாணம் செய்து கொள்ளாமல் அவளை வெறும் மணக் கோலத்திலேயே விட்டுவிட்டு  தாலி கட்டாமல் யாருக்கும் தெரியாமல் வெளியே கம்பி நீட்டி விடுகிறான் கயவன் பரந்தாமன். தன் கல்யாணம் நின்று போனதை எண்ணிக் கண்ணீரும் கம்பலையுமாய் நிற்கிறாள் பாமா.

சில நாட்கள் சென்று வீட்டிற்கு திரும்பி வரும் தம்பி பரந்தாமனை பாமாவை ஏமாற்றி ஓடிய குற்றத்திற்காக அக்காள் பூமாலை கடுமையாக கடிந்து கொள்ள, திருமணத்திற்கு முன் பாமா நடத்தை கெட்டவள் என்று தனக்குத் தெரிந்தததால் கல்யாணம் பிடிக்காமல் ஓடி விட்டதாக வாய் கூசாமல் பொய் கூறி பாமாவின் மீது பழி சுமத்தி அக்காள் வாயை அடைத்து விடுகிறான் அந்த பசப்பு வார்த்தை பரந்தாமன் எனும் கபட நரி. என்றாலும் பூமாலை அதை நம்ப மறுக்கிறாள். தம்பியை எவ்வழியிலும் திருத்த இயலவில்லையே எனக் கவலை கொள்கிறாள்.

பாண்டியனின் தந்தை அவனுக்கு திருமணம் செய்ய பாமாவைப் பெண் பார்த்து முடிக்கிறார். இதைக் கேள்விப்பட்ட பரந்தாமன் தன் விரோதியான பாண்டியனின் வாழ்வை சீர்குலைக்க முடிவு செய்கிறான். அவன் கல்யாணத்தை நாசமாக்கவும் சதி செய்கிறான்.

அதனால் பாண்டியனுக்கு நிச்சயத்திருக்கும் பாமாவின் வீட்டிற்கு திரும்ப வந்து தன் சதித் திட்டங்களை நிறைவற்றத் தொடங்குகிறான் பரந்தாமன். திருமணத்தன்று  தாலி கட்டாமல் ஓடிப் போன பரந்தாமன் தன் மேல் கோபமுற்றிருக்கும் பாமாவை பல கட்டுக் கதைகள் கூறி அவளை சமாதானப் படுத்தி, மறுபடியும் அவளுக்குக் காதல் போதையூட்டி, அவளை  வீட்டை விட்டே தன்னுடன் ஓடி வந்து விடும் படியும் தூண்டுகிறான். இதனால் பாண்டியனின் வாழ்வு நாசமாகும் அல்லவா! அவன் எண்ணியபடியே எல்லாம் நடக்கிறது. அந்த அப்பாவி பாமாவும் இவன் பேச்சை நம்பி அவனுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறாள். மணமகள் பாமா ஓடிப் போன நிலையில் திருமணம் தடைப் பட்டு பாண்டியன் பேரதிர்ச்சிக்கு உள்ளாகிறான். அன்று பரந்தாமன் பாமாவை திருமணத்தன்று தவிக்க விட்டு ஓடிப் போனான். இன்று பாமாவோ பாண்டியனைத் தவிக்க விட்டு விட்டு பரந்தாமனுடன் ஓடிவிட்டாள். இரண்டு குற்றங்களுக்கும் மூல காரணம் பகல் வேஷக்காரன் பரந்தாமனே!

பாமாவை சென்னைக்கு அழைத்து செல்லும் பரந்தாமன் அவளுடன்  சில நாட்கள் உல்லாசமாய் இருந்து விட்டு அவளை தன்னந்தனியே தவிக்க விட்டு விட்டு ஊருக்கு ஓடி வந்து விடுகிறான். தான் மீண்டும் பரந்தாமனால் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று தெரிந்த பாமா கடற்கரையில் மூர்ச்சையாகிறாள். வாழ வேறு வழி தெரியாமல் வேசியாகிறாள். தன் வாழ்வை சூறையாடிய பரந்தாமனை பழி வாங்க சமயம் பார்த்திருக்கிறாள்.

தன் திருமணம் தடை பட்டதை எண்ணி வருந்தும் பாண்டியனை தற்செயலாக ரயிலில் சந்திக்கிறாள் பூமாலை. அவன் நிலைமை அறிந்து அவனை சென்னையில் உள்ள குமுதா வீட்டில் வைத்து ஆதரிக்கிறாள் அவள். பாண்டியன் மேல் ஒருதலைக் காதலும் கொள்கிறாள். ஆனால் குமுதாவும் பாண்டியனைக் காதலிக்கிறாள். பாண்டியனும் அவளை விரும்புகிறான்.

ஊர் திரும்பிய பரந்தாமன் அங்குள்ள சிவசக்தி மில் தொழிலாளிகளின் நியாயமான போராட்டங்களை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறான். 'பாட்டாளியின் குரல்' என்ற ஒரு புத்தகத்தை தொழிலாளர்களுக்காக குரல் கொடுப்பது போல் எழுதி அவர்களின் நம்பிக்கையை நயவஞ்சகமாகப் பெறுகிறான். தொழிலாளர்களின் தலைவனாகவும் ஆகி விடுகிறான்.வேலை நிறுத்தத்தையும் அறிவிக்கிறான். மேஸ்திரியும், தொழிலாளர்களும் அவனை மலை போல் நம்பி ஏமாறுகின்றனர்.

இது சம்பந்தமாக பேச அழைக்கும் மில் முதலாளியிடம் தொழிலார்களை விலை பேசி பெரும் பணத்தையும் அவரிடமிருந்து லஞ்சமாகப் பெற்றுக் கொண்டு தொழிலார்களை ஏமாற்றுகிறான் பரந்தாமன். அது தெரியாத தொழிலார்கள் இன்னும் அவன் மாய்மாலப் பேச்சை நம்பி அவன் சொன்னபடி திரும்ப வேலைக்கு செல்கிறார்கள்.

குமுதா பாண்டியன் இவர்களுடன் சென்னையிலிருந்து கோவை திரும்புகிறாள் பூமாலை. பாண்டியன் அங்கிருப்பது கண்டு ஆத்திரமுற்று அவனை அடித்து விடுகிறான் பரந்தாமன். இதனால் மனம் நொந்து தன் தந்தையிடமே சென்று விடுகிறான் பாண்டியன்.  
இதனால் வேதனையடையும் குமுதா பூமாலையிடம் தான் பாண்டியனைக் காதலிப்பதை சொல்ல அதிர்ச்சியடையும் பூமாலை தன் ஒருதலைக் காதலை மனதுக்குள்ளேயே பூட்டி அழுகிறாள். பாண்டியனை குமுதாவிற்கு திருமணம் செய்து தருவதாக உறுதி கூறுகிறாள்.

பாண்டியனின் தந்தை மேஸ்திரி ஒரு ஊமைப் பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார் தன் மகனின் எதிர்ப்பை மீறி. . பாண்டியன் இது பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறுகிறான். திரும்பவும் அவனைச் சந்தித்து தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று  பாண்டியனுக்கும், குமுதாவிற்கும் திருமணம் செய்து வைக்கிறாள் பூமாலை தன் காதல் தோல்வியுற்ற நிலையில்.

தான் இல்லாத நேரத்தில் சொன்னபடி குமுதாவை தனக்கு திருமணம் செய்து  வைக்காமல் பாண்டியனுக்குத்  திருமணம் செய்து வைத்த விட்டதாக அக்காளின் மேல் பாய்கிறான் பரந்தாமன்.

'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 Thirumbi+paar

பரந்தாமனின் தொழிலாளர் நயவஞ்சகத்தை எண்ணிக் கொதிப்படையும் பாண்டியன் தொழிலார்களிடம் பேசி பாண்டியனின் அக்கிரமங்களைப் பற்றி அவர்களுக்குப் புரிய வைக்கிறான். தவிர தொழிலாளர்களின் தலைவனாகவும் ஆகிறான்.தொழிலாளர்களுக்காக முதலாளியிடம் பரிந்து பேசுகிறான். முதலாளி தரும் கையூட்டையும்  தூக்கி தூர எறிகிறான் அந்த நல்லவன். முதலாளியின் மகள் டாக்டர் உஷாவும் தொழிலாளர்களுக்காகப் பரிந்து பேசுகிறாள்.

மேஸ்திரி புண்ணியகோடி இரண்டாவது திருமணம் செய்து கொண்ட அந்த ஊமைப் பெண்ணையும் கூட சூறையாடத் துடிக்கிறான் பரந்தாமன். மேஸ்திரி புண்ணியகோடி பரந்தாமனின் உண்மையான சொருபத்தை அறிந்து கொள்கிறான்.

உஷாவைத் தனக்குத் திருமணம் செய்து தரும்படி முதலாளியிடம் நிர்ப்பந்திக்கிறான் பரந்தாமன். ஆனால் முதலாளி அதற்கு மறுத்து விடுகிறார்.

குமுதாவை தன்னிடமிருந்து பிரித்து திருமணம் செய்து கொண்டது, தொழிலாளிகளிடம் தன் துரோக செயல்களை எடுத்துரைத்து தன் முகமூடியைக் கிழித்தது என்று பாண்டியன் மேல் கடும் கோபம் கொள்ளும் பரந்தாமன் பாண்டியனைக் கொலை செய்ய முயற்சிக்கிறான். இதை அறிந்த குமுதா பரந்தாமன் மேல் கடும் கோபம் கொள்கிறாள். இனியும் இருந்தால் தன் கணவனைக் கொன்று விடுவான் பரந்தாமன் என்று பயந்து கண்ணீர் வடிக்கிறாள். இதனால் பூமாலை அவர்கள் இருவரையும் திரும்ப சென்னைக்கே அனுப்பி விடுகிறாள்.

'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 Hqdefault

சென்னையில் தங்கியிருக்கும் பாண்டியனை சாமர்த்தியமாக ஒரு திருட்டுக் குற்றம் சுமத்தி ஜெயிலுக்கு அனுப்பி விடுகிறான் பரந்தாமன். கர்ப்பவதியான குமுதா ஆதரவற்று நிற்கிறாள். ஒரு ஆஸ்பத்திரி வாட்ச்மேன் அவளை ஆதரித்து தன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்.

வேலை நிறுத்தத்திற்காக தொழிலாளர்களைத் தூண்டி விட்டதற்காக போலீஸ் பரந்தாமனைத் தேட, பரந்தாமன் மாறு வேடத்தில் தப்பி சென்னை செல்கிறான். அங்கு எதிர்பாராவிதமாக வேசியாக பாமாவை சந்திக்கும் பரந்தாமன் அவளிடமிருந்தும் தப்பி விடுகிறான். போலீசிலும் சிக்கி கோர்ட்டாரிடம் தன் சாமர்த்திய வாதத் திறமையினால் முதல் மன்னிப்புப் பெற்று வெளியே வந்து விடுகிறான். ஆனால் தொழிலாளிகள் பாண்டியனின் கயமைத்தனத்தைப் புரிந்து கொள்கிறார்கள்.

ஜெயில் வாழ்க்கையில் வாடும் பாண்டியனும் சுதந்திரதின நாளன்று கருணை விடுதலை செய்யப்பட்டு பல கஷ்டங்களுக்கிடையே கைக்குழந்தையுடன் கஷ்டப்படும் தன் மனைவி குமுதாவைத் தேடிக் கண்டு பிடித்து அவளுடன் சேர்கிறான். மில் முதலாளி வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களை வேலையை விட்டே  நீக்கி விட, மேஸ்திரி புண்ணியகோடியும்,இதர தொழிலார்களும் பிச்சைக்காரர்களாய் சென்னை வந்து சேர, அவர்களை காணும் பாண்டியன் தன் தந்தையும், மற்றவர்களும் வேலை இழந்து தவிப்பதை அறிந்து அவர்கள் மீண்டும் வேலை பெற வேண்டி முதலாளியைச் சந்திக்க அனைவருடனும் கோவை செல்கிறான்

பரந்தாமனின் பேச்சை நம்பி வேலை பறி போன தொழிலாளர்களுக்காக வேலைக் கேட்க முதலாளியைச் சந்திக்க செல்லும் பூமாலையின் வேண்டுகோளை நிராகரிக்கிறார் முதலாளி. அங்கு மயக்கமாகும் பூமாலையை முதலாளி மகள் டாக்டர் உஷா முதல் உதவி செய்து பூமாலையின் வீட்டிற்குக் கொண்டு சென்று உடன் இருந்து   கவனிக்கிறாள். உஷாவின் மேல் ஒரு கண்ணாயிருக்கும் பரந்தாமன் அங்கே இரவில் உறங்கிக் கொண்டிருப்பது தன் அக்காள் பூமாலை என்பது தெரியாமல் அவளை உஷா என்று நினைத்து காம வெறியில் நெருங்கித் தொட, திடுக்கிட்டு எழுந்திருக்கும் பூமாலை தன் தம்பியின் கெட்ட எண்ணத்தைப் தெரிந்து கொண்டு கோபத்தின் உச்சத்தில் பொங்கி விடுகிறாள். "உனக்கு பெண் சுகம் தானே வேண்டும். இதோ உன் அக்காள் நான் இருக்கிறேன். என்னிடமே அதைப் பெற்றுக் கொள்' என்று அவனை வார்த்தை அம்புகளால் தைக்கிறாள். நீ ஏமாற்றிய பெண்களின் வாழ்க்கையைத் 'திரும்பிப் பார்'... நீ செய்த கொடுமைகளைத் திரும்பிப் பார்... நீ நடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்' என்று கர்ஜிக்கிறாள். சற்றும் இதனை எதிர்பாராத பரந்தாமன் அக்காளின் கடும் கோபச் சொல்லையும், அக்காவே தன் காம வெறியைத் தீர்க்க அவளையே தனக்கு அர்ப்பணிக்கத் தயாரான நிலையையும், தன்னைத் திருத்த அவள் மேற்கொண்ட அந்த கொடுஞ் செயலையும் கண்டு துடித்துத் துவள்கிறான். கதறுகிறான். கண்ணீர் வடிக்கிறான். மனம் திருந்துகிறான். ஆனால் அக்காள் நம்ப மறுக்கிறாள்.

தன் முறைப் பெண் கோமதி வாழ்வு தன்னால் தானே கேட்டது என்று எண்ணி அவளிடம் மன்னிப்பு கேட்க கோமதியின் விலாசம் தேடி அவள் வீட்டிற்கு செல்கிறான்  பரந்தாமன்.ஆனால் அங்கு தன்னால் பாதிக்கப்பட்டு வேசியான பாமா துப்பாக்கியுடன் தன்னை சுட வந்தததை அவன் எதிர்பார்க்க வில்லை. தான் திருந்திவிட்டதைக் கூறும் பரந்தாமன் தன்னை சுடாமல் இருக்கும்படி பாமாவிடம் வேண்ட, வழக்கம் போல பரந்தாமன் நாடகமாடுகிறான் என்று பாமா மறுக்க, இருவரும் துப்பாக்கியுடன் போராடும் போது துப்பாக்கி வெடித்து பாமா கொலையுண்டு விழ, அங்கே தம்பி பரந்தாமனைத் தேடி வரும் பூமாலை பரந்தாமன் கோமதியைத்தான் பழி உணர்ச்சியின் காரணமாக சுட்டு விட்டான் என்ற தவறுதலான கோபத்தில் தம்பியையே தான் கொண்டு வந்த துப்பாக்கியால் சுட்டு விடுகிறாள். திருந்திய தம்பியாக பரந்தாமன் தான் இப்போது நல்லவன் என்று அக்காளிடம்கூறி உயிரை விடுகிறான். தன் தம்பியைத் தன் கையால் சுட நேர்ந்த துரதிருஷ்டத்தை எண்ணி கலங்குகிறாள் பூமாலை. இறந்தது கோமதி அல்ல...பாமா என்றும் கண்டு கொள்கிறாள்.

ஊர் திரும்பி முதலாளியைச் சந்திக்கும் பாண்டியன் வேலை இழந்த அனைவருக்கும் வேலையைத் திருப்பித் தருமாறு அவரிடம் வேண்டுகிறான். மில் முதலாளி தன் மகள் உஷாவால் மனம் திருந்தி பாண்டியனிடம் மில் நிர்வாகத்தை ஒப்படைகிறார். தொழிலாளர் மனம் மகிழ்கின்றனர். அனால் செய்தித்தாளில் பூமாலை தன் தம்பி பரந்தாமனைக் கொலை செய்ததாக வந்த செய்தியைப் படித்து அதிர்ச்சியாகும் பாண்டியனைப் போலீஸ் கைது செய்கிறது. போலீஸ் பாண்டியனுக்கும் பரந்தாமனுக்கும் இருந்த முன் விரோதத்தின் காரணமாகவே பாண்டியன் பரந்தாமனைக் கொலை செய்தான் என்று பாண்டியனைக் கைது செய்கிறது

கோர்ட்டில் விசாரணை நடக்கிறது. 'பூமாலை பரந்தாமனை சுட்டிருக்க முடியாது....முன் விரோதம் காரணமாக பாண்டியன்தான் பரந்தாமனை சுட்டு விட்டான். பாண்டியன் மேல் உள்ள அன்பினால் கொலைப் பழியை பூமாலை ஏற்றுக் கொண்டாள்' என்று அரசு தரப்பு வக்கீல் வாதாடுகிறார். ஆனால் பூமாலை 'தன் தம்பியைக் சுட்டுக் கொன்றது நானே! பாண்டியன் அல்ல... அவன் நிரபராதி' என்று நீதிபதி முன் வாக்குமூலம் கொடுத்து, நடந்த கதைகள் அத்தனையையும் விளக்க, உண்மைகள் அனைவருக்கும் புரிகிறது. நீதிபதி பூமாலைக்கு மரண தண்டனை விதிக்கிறார். பாண்டியன் நிரபராதி என விடுவிக்கப் படுகிறான்.

பரந்தாமனாக நடிகர் திலகம்

'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 393733_134366080002496_1126851230_n

பரந்தாமன் என்னும் அனைவரையும் மிரள வைக்கும் வில்லன் பாத்திரத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். ஆண்டி-ஹீரோ. ஹீரோவும் அவரே. (நரசிம்மபாரதி ஒப்புக்கு சப்பாணி நாயகர்) கதாநாயகர்கள் எவருமே செய்யத் துணியாத பாத்திரம். அதுவும் முதல் படத்தில் முழு ஹீரோவாக நடித்து விட்டு ஐந்தாவது படத்தில் கொடிய வில்லன் என்ற பாத்திரத்தை ஏற்று நடிக்க நடிகர் திலகத்திற்கு மட்டுமே துணிச்சல் வரும். அந்த அளவிற்கு தன் திறமை மேல் அவருக்கு அவ்வளவு நம்பிக்கை.

பல பெண்களை ஏமாற்றும் காமுகன் வேடம். அக்கா குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் போது குழந்தைகள் போடும் சப்தம் பிடிக்காமல் அக்காவிடம் சலித்துக் கொள்வது, சோம்பேறித்தனத்தின் உச்சியில் போட்டிருக்கும் நைட் கவுனுடனே ஷவர் பாத் எடுப்பது, கருடன் பதிப்பகம் நடத்தும் டி.எஸ். துரைராஜுடன் சேர்ந்து எழுத்தாளன் பாண்டியன் எழுத்துக்களைத் திருடுவது, பாண்டியனின் எழுத்தை தன் எழுத்து என்று நம்பி ஏமாறும் கிருஷ்ணகுமாரியிடம் காதல் மொழி வசனங்கள் பேசி ஏமாற்றுவது, கள்ளச் சிரிப்பு, பேச்சிலே நயம் காட்டி பசப்பு வார்த்தைகளால் பாவையரை மயக்குவது, பாண்டியன் தனக்குப் போட்டியாக தொழிளார்களுக்கு தலைவன் ஆகி விட்டானே என்ற பொறாமையில் வெந்து தணிவது, அக்கா தன்னைக்  கண்டிக்கும் போதெல்லாம் ஏதாவது சமாதானம் சொல்லி அவள் வாயை அடைப்பது, தன் செயலுக்கு நியாயம் கற்பிப்பது, புத்திசாலித்தனமாக பேசி பிரச்னைகளிடமிருந்து தப்பிக்கும் சாமார்த்தியம், கிருஷ்ணகுமாரியை மீண்டும் மயக்கும் பேச்சுக்களால் மதி மயங்கச் செய்து சென்னை அழைத்துச் சென்று அவளை பரிதவிக்க விட்டு விட்டு ஓடி வந்து விடும் துரோகம், தொழிலாளர்களின் அவல நிலையை தனக்கு சாதகமாக்கி அவர்களை வேலை நிறுத்தத்திற்கு தூண்டும் மேடைப் பேச்சு சாமர்த்தியம், முதலாளியிடம் தொழிலாளர்களை அடகு வைத்து விட்டு லஞ்சம் வாங்கும் கோரம், பாண்டியனை கொலை செய்யவே போகும் அளவிற்கு கண்மண் தெரியாத ஆத்திரம்,  கோர்ட்டில் எசகுபிசகாக மாட்டிக் கொண்டவுடன் 'இது என்னுடைய முதற்குற்றம்...  அதற்காகவே நான் மன்னிக்கப் படலாம்' என்று சாதுர்யமாக வாதிட்டு தண்டனையில் இருந்து தப்பிக்கும் விவேகம், மேஸ்திரி தங்கவேலுவின் ஊமை மனைவியியைக் கூட விட்டு வைக்காத காமுக குணம், முதலாளி மகள் டாக்டர் உஷா மீதும் கண், பாண்டியனின் மீது சாமர்த்தியமாக சுமத்தும் நகை திருட்டு குற்றம்  என்று அத்தனை கெட்ட குணங்களையும் கொண்ட ஒரு வஞ்சக நரி கதாபாத்திரத்தை அற்புதமாகச் செய்ய நடிகர் திலகத்தை விட்டால் செய்ய ஆளேது?

மனிதர் கண்களாலேயே அசத்துகிறார். கண்களில் தெரியும் கள்ளத்தனம், ஓரப்பார்வையில் தெரியும் வஞ்சகக் குணம், சிரிப்பில் காட்டும் குரூரம் என்று அச்சு அசலாக ஒரு பெண்பித்தனையையும்,பஞ்சமாப் பாதகம் செய்யும் ஒரு கொடூரனையும் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்திவிடுகிறார் நடிகர் திலகம்.

கிளைமாக்ஸ் காட்சிகளில் நடிப்பின் பல பரிமாணங்களைத் தொடுகிறார் அந்த இளம் வயதிலேயே. டாக்டார் உஷா என்று நினைத்து படுக்கையில் படுத்திருக்கும் தன் அக்காளைத் தெரியாமல் தொட்டு விட , அக்கா பண்டரிபாய் எழுந்து இவருடைய அக்கிரமக் குணங்களை வசைபாடி 'என்னை எடுத்துக் கொள்' என்று அதிர்ச்சி தரும்போது மனம் திருந்தும் நடிகர் திலகத்தின் நடிப்பு நம்மை சிலிர்க்க வைக்கிறது. இறுதியில் நல்லவனாகத் திருந்தியும் தன் உடன் பிறந்த அக்காவினால் விவரம் அறியாமல் சுடப்பட்டு சாவின் வாசலைத் தொடும் போது 'நான் குற்றமற்றவன் அக்கா' என்று தன்னை நிரூபித்து கண் மூடும் போது எல்லோரையும் கலங்கடித்து விடுவார்.

இந்தப்படத்தில் நடிகர் திலகம் வில்லனாக நடித்திருந்தாலும் முதன் முதலாக வில்லன் நடிப்பையும் ரசிக்க வைத்த பெருமைக்கு உரியவராகிறார். அதே போல நடிகர் திலகம் இப்படத்தில் வித விதமாக அணிந்து வரும் உடை அலங்காரங்கள் மிக பிரசித்தி பெற்றவை இன்றளவும் கூட.

பரந்தாமனாக நடிகர் திலகம், பாண்டியனாக நரசிம்ம பாரதி, அக்கா பூமாலையாக  பண்டரிபாய், கோமதியாக கிரிஜா, பாமாவாக கிருஷ்ணகுமாரி, கருடனாக டி.எஸ்.துரைராஜ், மேஸ்திரி புண்ணிய கோடியாக தங்கவேலு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.

"திரும்பிப் பார்"  

திரும்பிப் பார்க்க வைக்கும் சில விசேஷ தகவல்கள்.

1. நடிகர் திலகத்தின் ஐந்தாவது படம் இது.

2. நடிகர் திலகமும், கலைஞரும் இணைந்த மூன்றாவது படம் இது.

3. மாடர்ன் தியேட்டர்ஸ் சிவாஜி அவர்களை வைத்து தயாரித்த முதல் படம்.

4. இயக்குனர் டி.ஆர். சுந்தரம் அவர்களின் சிவாஜிக்கான முதல் இயக்கம்.

5. முதன் முதலாக கிருஷ்ண குமாரி (நடிகை சௌகார் ஜானகியின் தங்கை), கிரிஜா, தனலக்ஷ்மி ஆகியோர் நடிகர் திலகத்துடன் இணைந்து நடித்தனர்.

6. நடிகர் திலகமும், நரசிம்ம பாரதியும் நடித்த முதல் படம் இது.

7. பராசக்திக்குப் பிறகு நிறைய புரட்சிக் கருத்துக்களும், புதுமையான வசனங்களும் நிறைந்த படம்.

8. 'கலப்படம் கலப்படம் எங்கும் எதிலும் கலப்படம்" என்ற பாடல் அப்போது ரொம்பவும் பிரபலம். அரிசியில் கால், நெய்யில் டால்டா, காபித் தூளில் புளியங்கொட்டைத் தூள் என்ற கலப்பட சந்தையின் தகிடு தத்தங்கள் இப்பாடலில் அப்பட்டமாக எதிரொலிக்கும். காணொளி வடிவில் காணுங்கள்.



9. திராவிட முன்னேற்றக் கழகம் திரைப்படங்களை சாதகமாக்கி வளர்ந்து வந்த வேளையில் ஆளும் காங்கிரஸ் கட்சியை பல்வேறு விமர்சனங்கள் செய்தது. இதனால் கோபமுற்ற நேரு திராவிட முன்னேற்றத் தலைவர்களை நான்சென்ஸ் என்று திட்டி விட்டார். இந்த சம்பவத்தை திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் இப்படத்தின் வசனங்கள் மூலம் அருமையாகப் பயன்படுத்திக் கொண்டார். சிவாஜி அவர்கள் கூலிங் கிளாஸ் அணிந்து அடிக்கடி 'நான்சென்ஸ்' என்று பலரை அடிக்கடி கடிந்து கொண்டே இருப்பார்.  நேருவை நக்கல் செய்வதற்காகவே இப்படிப்பட்ட காட்சிகள் உருவாக்கப் பட்டனவாம்.

10. இப்படத்தில் சிவாஜி அவர்கள் அணிந்திருந்த பல நவீன புதுவிதமான உடையலங்காரகளைக் கண்டு அனைவரும் அப்போது மிகவும் அதிசயப்பட்டனராம் . குறிப்பாக பத்திரிகைகள் சிவாஜி அவர்களின் உடை தேர்வினை பாராட்டி மகிழ்ந்தனவாம்.

11. சேலம் ஓரியண்டல் திரையரங்கில் இப்படம் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது.

12. ஜி.ராமநாதன் அவர்கள் இசையமைத்த முதல் நடிகர் திலகத்தின் படம் இது.

13. குறிப்பாக நடிகர் திலகத்தின் வில்லன் நடிப்பு அப்போது மிக மிகப் பேசப்பட்டது. 'திரும்பிப் பார்' படத்தின் புரட்சிமிகு வசங்கள் மிக பிரபல்யமாயின.

14. 'கருடன் பதிப்பகம்' என்ற வாசகம் உள்ள பலகையில்  'க' என்ற எழுத்தை 'தி' என்று மாற்றி எழுதி 'திருடன் பதிப்பகம்' என்று மாற்றி வைத்து விட்டு செல்லுவார் அங்கு வேலை செய்யும் ஊழியர். இந்தக் காட்சியும் அப்போது மிகவும் பேசப்பட்ட ஒன்று.

15. படத்தில் வரும் பரந்தாமன் (சிவாஜி ) எழுதும் 'பாட்டாளியின் குரல்' என்ற புத்தகத்தின் பெயரும் அப்போது ரொம்ப பிரபலமடைந்த ஒரு பெயராம்.

16. அப்போது தெலுங்கில் புகழ் பெற்றுக் கொண்டிருந்த நாயகி கிருஷ்ணகுமாரி சிவாஜி அவர்களுடன் நடித்த ஒரே படம் இது.

'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 Hqdefault

17. 'பராசக்தி' அளவிற்கு இந்தப் படம் பிரம்மாணடமான வெற்றியடைய முடியாவிட்டாலும் 100 நாட்களைக் கண்ட படம் இது. சிவாஜி அவர்களின் மறக்கவொண்ணா சிறந்த படங்களின்  பட்டியலில் 'திரும்பிப்பாரு'ம் நிச்சயம் இடம் பெறும்.

இக்கட்டுரைத்தொடர் முழுதும் என் சொந்தப் படைப்பே!

வழக்கம் போல தங்கள் அனைவரது கருத்துக்களையும் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

நன்றி!

வாசுதேவன்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


kcshekar
kcshekar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 07/12/2013

Postkcshekar Sat Dec 07, 2013 2:44 pm

திரும்பிப்பார் - நடிகர்திலகத்தை திரும்பிப் பார்க்கவைத்த ஒரு சிறப்பான ஒரு திரைப்படம். அதனை அழகாக, கோர்வையாக, முழுநீளத் திரைப்படத்தைப் பார்த்த திருப்தியை உண்டாக்கியிருக்கிறது திரு.வாசுதேவன் அவர்களின் பதிவு.

நன்றி.

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Sat Dec 07, 2013 9:20 pm

வாருங்கள் சந்திரசேகர்,
தங்கள் வரவின் மூலம் நடிகர் திலகத்தின் புகழ் பரப்ப தாங்கள் ஆற்றும் பணிகளைப் பற்றி இங்கு எல்லோரும் அறிய ஓர் நல்வாய்ப்பாக அமையும்.
அன்புடன்

avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Sun Dec 08, 2013 6:52 am

அருமையான பதிவு. தொடரட்டும் தங்கள் பணி.

:உத்தமபுத்திரன்' என்ற படத்தில் இடம் பெற்ற யாரடி நீ மோகினி என்ற பாட்டில் அவரது அங்க அசைவுகள் இன்றைய ரஜனியை நினைவுபடுத்துகிறது.

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Sun Dec 08, 2013 2:44 pm

மரியாதைக்குரிய மருத்துவர் சௌந்தர பாண்டியன் அய்யா அவர்களுக்கு என் மனம் நிறை நன்றி! நடிகர் திலகத்தின் மீது ஒரு பொது மனிதராக தாங்கள் வைத்திருக்கும் அன்பு மிக்க போற்றத்தக்கது. தங்களைப் போன்ற லட்சக்கணக்கான இதயங்களில் வாழும் அந்த நடிக மேதையின் புகழை ஈகரை வாயிலாகவும் பரப்ப வேண்டும் என்பதே என் அவா. தங்கள் விமர்சனத்திற்கு நன்றி!

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Sun Dec 08, 2013 2:50 pm

என் இனிய நண்பர் சிவாஜி சமூக நலப் பேரவை தலைவர் திரு. சந்திரசேகரன் அவர்களே வருக! வருக! தங்களை ஈகரை அன்பர்கள் அனைவரது சார்பாகவும் மனதார வரவேற்கிறேன். தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி! ஈகரை உறுப்பினர் அறிமுகம் பகுதியில் தங்களைப் பற்றி அறிமுகப் படுத்திக் கொள்ளுங்கள். ஏன் சொல்கிறேன் என்றால் உங்களுடைய அறிமுகம் இங்கு மிகவும் முக்கியம். சிவாஜி சமூக நலப் பேரவை வாயிலாக நீங்கள் செய்து வரும் பல்வேறு சமூகத் தொண்டுகள் குடத்தினுள் இட்ட விளக்காக இல்லாமல் குன்றின் மேல் இட்ட விளக்காக ஒளி வீச வேண்டும். நன்றி!

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Sun Dec 08, 2013 2:57 pm

mmani15646 wrote:அருமையான பதிவு. தொடரட்டும் தங்கள் பணி.

:உத்தமபுத்திரன்' என்ற படத்தில் இடம் பெற்ற யாரடி நீ மோகினி என்ற பாட்டில் அவரது அங்க அசைவுகள் இன்றைய ரஜனியை நினைவுபடுத்துகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1036832

தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி மணி அவர்களே! சரி! உங்களை எவ்வாறு அழைப்பது?

jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Sun Dec 08, 2013 5:20 pm

dear vasu sir , The word " Excellent" has become vacant now in Harvard Dictionary - now they say if you want to retrieve the word , go and read Mr.Vasu's articles in EEgarai. They are very sad that this word for the first time is hijacked by an Indian that too an ardent fan of NT and they are struggling to find an alternative word to be added in their dictionary . What an amazing write up !! I don't track my counts of looking back of your articles - so passionate , spell bound .  May god bless you to write more and more such articles about NT

அன்புடன் ரவி சியர்ஸ் 'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')  - Page 2 103459460 

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Mon Dec 09, 2013 3:04 pm

தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி ரவி சார். தங்கள் கை வண்ணத்தில் மிளிரும் நடிகர் திலகத்தைப் பற்றிய பதிவுகளை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Dec 09, 2013 6:46 pm

எனது சிரு வயதில் இப்படத்தின் திரைக்கதையை 78 RPM இசைத்தட்டு வழியாக கேட்டு இன்புற்றிருக்கிறேன். மீண்டும் நினைவூட்டியமைக்கு மிக்க நன்றி ஐயா.


avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Mon Dec 09, 2013 9:39 pm

என் வயது 67. தாத்தா/ அண்ணன்/ நண்பன் -- எப்படி வேண்டுமென்றாலும்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக