புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காலக் கணிதத்தின் சூத்திரம்!  Poll_c10காலக் கணிதத்தின் சூத்திரம்!  Poll_m10காலக் கணிதத்தின் சூத்திரம்!  Poll_c10 
21 Posts - 45%
ayyasamy ram
காலக் கணிதத்தின் சூத்திரம்!  Poll_c10காலக் கணிதத்தின் சூத்திரம்!  Poll_m10காலக் கணிதத்தின் சூத்திரம்!  Poll_c10 
19 Posts - 40%
Dr.S.Soundarapandian
காலக் கணிதத்தின் சூத்திரம்!  Poll_c10காலக் கணிதத்தின் சூத்திரம்!  Poll_m10காலக் கணிதத்தின் சூத்திரம்!  Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
காலக் கணிதத்தின் சூத்திரம்!  Poll_c10காலக் கணிதத்தின் சூத்திரம்!  Poll_m10காலக் கணிதத்தின் சூத்திரம்!  Poll_c10 
1 Post - 2%
Balaurushya
காலக் கணிதத்தின் சூத்திரம்!  Poll_c10காலக் கணிதத்தின் சூத்திரம்!  Poll_m10காலக் கணிதத்தின் சூத்திரம்!  Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
காலக் கணிதத்தின் சூத்திரம்!  Poll_c10காலக் கணிதத்தின் சூத்திரம்!  Poll_m10காலக் கணிதத்தின் சூத்திரம்!  Poll_c10 
1 Post - 2%
prajai
காலக் கணிதத்தின் சூத்திரம்!  Poll_c10காலக் கணிதத்தின் சூத்திரம்!  Poll_m10காலக் கணிதத்தின் சூத்திரம்!  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
காலக் கணிதத்தின் சூத்திரம்!  Poll_c10காலக் கணிதத்தின் சூத்திரம்!  Poll_m10காலக் கணிதத்தின் சூத்திரம்!  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலக் கணிதத்தின் சூத்திரம்!  Poll_c10காலக் கணிதத்தின் சூத்திரம்!  Poll_m10காலக் கணிதத்தின் சூத்திரம்!  Poll_c10 
383 Posts - 49%
heezulia
காலக் கணிதத்தின் சூத்திரம்!  Poll_c10காலக் கணிதத்தின் சூத்திரம்!  Poll_m10காலக் கணிதத்தின் சூத்திரம்!  Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
காலக் கணிதத்தின் சூத்திரம்!  Poll_c10காலக் கணிதத்தின் சூத்திரம்!  Poll_m10காலக் கணிதத்தின் சூத்திரம்!  Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
காலக் கணிதத்தின் சூத்திரம்!  Poll_c10காலக் கணிதத்தின் சூத்திரம்!  Poll_m10காலக் கணிதத்தின் சூத்திரம்!  Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
காலக் கணிதத்தின் சூத்திரம்!  Poll_c10காலக் கணிதத்தின் சூத்திரம்!  Poll_m10காலக் கணிதத்தின் சூத்திரம்!  Poll_c10 
26 Posts - 3%
prajai
காலக் கணிதத்தின் சூத்திரம்!  Poll_c10காலக் கணிதத்தின் சூத்திரம்!  Poll_m10காலக் கணிதத்தின் சூத்திரம்!  Poll_c10 
7 Posts - 1%
sugumaran
காலக் கணிதத்தின் சூத்திரம்!  Poll_c10காலக் கணிதத்தின் சூத்திரம்!  Poll_m10காலக் கணிதத்தின் சூத்திரம்!  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
காலக் கணிதத்தின் சூத்திரம்!  Poll_c10காலக் கணிதத்தின் சூத்திரம்!  Poll_m10காலக் கணிதத்தின் சூத்திரம்!  Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
காலக் கணிதத்தின் சூத்திரம்!  Poll_c10காலக் கணிதத்தின் சூத்திரம்!  Poll_m10காலக் கணிதத்தின் சூத்திரம்!  Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
காலக் கணிதத்தின் சூத்திரம்!  Poll_c10காலக் கணிதத்தின் சூத்திரம்!  Poll_m10காலக் கணிதத்தின் சூத்திரம்!  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலக் கணிதத்தின் சூத்திரம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 06, 2013 5:46 pm

லக்னத்தில் இருந்து 7-ஆம் வீடு பெண் ஜாதகத்தில் கணவனையும், ஆண் ஜாதகத்தில் மனைவியையும் வரையறுக்கும். லக்னத்தில் இருந்து நேர் கோடு 7-ல் முற்றுப்பெறும். 7-ல் இருந்து நேர் கோடு லக்னத்தில் முற்றுப் பெறும். 2 முதல் 6 வரை ஒரு பகுதியும், 8 முதல் 12 வரை மறுபகுதியுமாக 7-ஆம் வீட்டோடும், லக்னத்தோடும் இணைந்திருக்கும். இரு பகுதிகள் இணைந்து முழுமை பெறுகிறது.

ஆண்-பெண் இருவரும் தம்பதியின் இரு பகுதிகள். அதன் இணைப்பு முழுமை பெறும். புலப்படாதது புலப் படுவது என்று இரண்டு பகுதிகளை ஜோதிடம் குறிப்பிடும் (த்ருச்யார்த்தம், அத்ருச்யார்த்தம்). 2-ஆம் வீட்டின் செழிப்பை 11-ஆம் வீடு சொல்லும். 11-ஆம் வீடு லாப ஸ்தானம். லாபத்தின் அளவு வரவை 2-ஆம் வீடு வரையறுக்கும். அதுபோல், 3-க்கு எட்டும், 4-க்கு பத்தும், 5-க்கு ஒன்பதும், 6-க்கு பன்னிரண்டும் பலனின் அளவை அதாவது செழிப்பை வெளியிடும். விதையில் ஒளிந்திருக்கும் செழிப்பை பயிரின் வளர்ச்சியில் தெரிந்துகொள்வோம். சட்டியில் இருந்தால் அகப்பையில் தென்படும். 2 செல்வத்தை அளிப்பதாக அமைந்தால், 11 லாபத்தை அளிக்கும். இரு பகுதிகளும் இணைந்து அவர்களது அனுபவத்தை வெளியிடும். தாம்பத்தியத்தின் முழு மகிழ்ச்சியில், இந்த இரு பகுதி வீடுகளின் செழிப்புக்கும் பங்குண்டு.

அ) கணவன் - மனைவி உண்டா, தங்குமா, சந்தோஷம் அளிப்பார் களா, சங்கடத்தை அளிப்பார்களா என்பதை நிர்ணயிக்க, 7-ஐ கவனிக்க வேண்டும்.

ஆ) ஆண் - பெண் ஜாதகங்களில் லக்னாதிபதியும் 7-ஆம் பாவதிபதி யும் சேர்ந்திருந்தாலோ, ஒன்றுக்கொன்று பார்வையுடன் இருந்தாலோ, கேந்திர சம்பந்தம், திரிகோண சம்பந்தம் இருந்தாலோ... கணவன் அல்லது மனைவி பாக்கியம் உண்டு என்று எண்ணலாம். ராசியில் அல்லது அம்சகத்தில் இருக்க வேண்டும்.

காலக் கணிதத்தின் சூத்திரம்!  P72

இ) லக்னாதிபதியும்  7-க்கு உடையவனும் 6, 8-ஆகவோ... 3, 11- ஆகவோ... 2, 12-ஆகவோ அமைந்தால், இணைப்பில் இடையூறு இருப்பதை உணர்த்தும்.

ஈ) 7-க்கு உடையவன் ஏழில் இருந்தாலோ, பார்த்தாலோ, பலம்பெற்று இருந்தாலோ, தட்ப கிரகம் இருந்தாலோ- பார்த்தாலோ கணவனும் மனைவியும் உண்டு என்பதை உறுதி செய்யும்.

நெருடல் இல்லாமல் தாம்பத்தியத்தைச் சுவைப்பார்களா என்பதை உறுதி செய்ய, சில நடைமுறைகளை அறிமுகம் செய்தது ஜோதிடம்.

அ) 7-ல் வெப்பக் கிரகம் (அசுப கிரகம்) இருப்பது அல்லது பார்ப்பது.

ஆ) பலம் குன்றிய ஒரு கிரகம் 7-ல் இருப்பது.

இ) 6-லும் 8-லும் வெப்பக் கிரகம் இருந்து, 7-ஆம் வீட்டை கிடுக்கிப்பிடி போல் இருந்து வெப்பப் பரவலை அதிகமாக்குவது.

ஈ) 5-க்கு உடையவன் 7-ல் இருப்பது,

உ) 8-க்கு உடையவன் 7-ல் இருப்பது.

ஊ) குளிகன் இருக்கும் ராசிக்கு உடையவன் 7-ல் இருப்பது.

எ) கடக லக்னமாக இருந்து 7-ல் மகரத்தில் குரு நீசம் பெற்று இருப்பது.

ஏ) ரிஷப லக்னமாக இருந்து 7-ல் விருச்சிகத்தில் சுக்கிரன் இருப்பது.

ஐ) தட்பக் கிரகமான சுக்கிரனுக்கு வெப்பக் கிரகச் சேர்க்கை 7-ல் இருப்பது... இப்படி, ஏதாவது ஒன்று புருஷ ஜாதகத்தில் 7-ல் அமைந்திருந்தால், விருப்பமான மனைவி இல்லாமல் போகலாம் என்கிறது ஜோதிடம்.

அதேநேரம், தட்பக் கிரகத்தின் சேர்க்கை, பார்வை 7-ல் இருப்பது நல்ல மனைவியை இணைத்துவிடும். (பாப: பாபேஷிகோவா யதி பலரஹித...). வெப்பக் கிரகத்தின் தாக்கம் பல வழிகளில் 7-ஐ தாக்கும் தறுவாயில், தட்ப கிரகத்தின் இணைப்பு, பார்வையானது தகுதி மாற்றத்தை ஏற்படுத்தி, விரும்பிய பலனை சுவைக்கவைக்கிறது. ஏழில் இருக்கும் வெப்பக் கிரகம் லக்னத்தைப் பார்ப்பதால், தனக்கு (ஜாதகனுக்கு) மனைவியை அடையும் குறையை சுட்டிக்காட்டுகிறது. வெப்பக் கிரகம் 7-ஐ பார்ப்பதால், மனைவியின் குறையைச் சுட்டிக்காட்டுகிறது. பலம் குன்றிய கிரகம் 7-ல் இருப்பது, மனைவியின் தகுதியிழப்பைச் சுட்டிக்காட்டும். இரு பக்கமும் வெப்பக் கிரகம் இருந்து 7-ஐ தாக்குவதால்... வாய்ப்பு இருந்தும் அனுபவத்துக்கு வராமல் தடுத்துவிடும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 06, 2013 5:47 pm

5-க்கு உடைய புத்திரஸ்தான அதிபன் 7-ல் இருந்தால், மனைவி இருக்க வேண்டிய இடத்தில் புத்திரன் தோன்றி, மனை வியாக ஏற்கும் தகுதி இழந்துவிடுகிறது (படம்: 1).

குளிகன் இருக்கும் ராசிக்கு உடையவன், குளிகனின் இயல்பை பெற்றிருப்பான். அந்த இயல்பு மனைவியின் தரத்தை மாற்றி இன்னலுக்கு இடமளிக்கும்.

நீசனான குரு பலம் இழந்திருப்பான். கடக லக்னத்துக்கு 9-க்கு (மீனம்) உடையவன் அவன். மகரத்தில் நீசனானதால் பாக்கியம் அதாவது அதிர்ஷ்டம் இல்லாமல் போய்விட்டது (படம்:2).அவன் 7-ல் இருப்பதால், மனைவி தாம்பத்தியத்தைச் சுவைக்கும் தகுதியை இழப்பாள். அத்துடன் கடக லக்னத்துக்கு 6-க்கு (தனுசு) உடையவனாக இருப்பதால், தொடர்ந்து இடையூறுகளையும் தோற்றுவிப்பான்.

விருச்சிகத்தில் இருக்கும் சுக்கிரன் ரிஷப லக்னத்துக்கு 7-ல் இருப்பது மற்றும் 6-க்கு உடையவனாக இருப்பதால் தாம்பத்திய சுவையை எட்டவிடாமல் செய்வான். 8-க்கு உடையவன் ஏழில் இருந்தால் 7-ன் தரத்தை அழிப்பான். அதாவது தாம்பத்தியம் இருந்தும் அதன் பெருமையை உணர முடியாமல் செய்வான். 6, 8, 12-க்கு உடையவர்கள் எங்கு இருந்தாலும், அவர்கள்

இருக்கும் இடத்தின் தகுதியை இழக்கவைப்பார்கள் என்கிறது ஜோதிடம். அத்துடன், மற்ற வீட்டுக்கு உடையவர்கள் 6, 8, 12-ல் வந்து விட்டால், அவர்கள் தங்கள் தகுதியை இழப்பார்கள் என்றும் எச்சரிக்கும் (படம்: 3). அலசி ஆராய்ந்தால் அமுதத்தை எட்டலாம்.

விபரீத விளைவோடு வெப்பக் கிரகம் இருப்பது துயரத்தைச் சுட்டிக்காட்டும். அதை தட்பக் கிரகம் பார்த்தாலோ இணைத்தாலோ விபரீத பலன் இழக்கப்படும். அத்துடன், நல்ல பலனைத் தோற்றுவிக்கும். வெப்ப - தட்பங்களின் இணைப்பு பரிணாமத்துக்குக் காரணமாகும். பலம் பொருந்திய தட்பம், வெப்பத்தின் இயல்பை அறவே மாற்றிவிடும். கொதிக்கும் தண்ணீரில் குளிர்ந்த ஜலம் இணையும்போது, பல விதமான மாறுதலை உணர்கிறோம். குளிக்கும் அளவுக்கு வெப்பம் குறைந்துவிடும். வெப்பத்தால் ஏற்படும் மாற்றத்தை குளிர் தடுத்துவிடும். கொதிக்கும் உலையில் குளிர் ஜலம் சேரும்போது, கொதிப்பு அடங்கிவிடும். சமுதாயத்துடன் இணைந்த மனம் பல மாறுதலுக்கு இலக்காகும். மனத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் வாசனை, பலபேருடன் சந்திப்பில் ஏற்பட்ட அனுபவம், வாசனையோடு இணைந்திருக்கும் தாழ்வு மனப்பான்மை, அளவு கடந்த ஆசை, இனம் தெரியாத பயம், பாதுகாப்பின்மை ஆகியவை இருக்க இடம் உண்டு.

காலக் கணிதத்தின் சூத்திரம்!  P72d

வெப்பக் கிரகம் - தட்பக் கிரகம் ஆகியவற்றின் தாக்கத்தில் வெளிப்பட்ட கர்மவினையின் வாசனை, பலனை இறுதி செய்யும். வெப்பதட்பங்களின் விகிதாசாரக் கலவை, சிந்தனை மாற்றத்துக்குக் காரணமாகி பலனை எட்டிவிடும். அந்தச் சிந்தனை மாற்றத்தை வரையறுப்பது வெட்பதட்பங்கள். அதாவது நவக்கிரகங்கள். அவை, விண்வெளியில் குடிகொண்டிருப்பதாக எண்ண வேண்டாம். வெப்பதட்ப வடிவில் சுற்றுச் சூழலிலும் பரவி நிரவியிருக்கும். காலத்துடன் இணைந்திருக்கும். காலம் நம்மோடு இணைந்திருக்கும்.

இருட்டறையில் ஒளிந்திருக்கும் பொருளில் கூட வெப்பத்தின் தாக்கம் மாறுதலை உண்டு பண்ணும். வெப்பம் மேலோங்கியிருக்கும் வேளையில், திடீர் மழையின் சேர்க்கையானது சூழலை மட்டும் மாற்றாது; சிந்தனையையும் மாற்றும். வெப்பதட்பங்களின் தரத்தை ஆராய வேண்டும். வெந்நீரில் குளிர் ஜலம் கலந்தால் சூடு தணியும். ஆனால், வெப்பத்தின் தாக்கம் தட்பத்தையும் அடக்கிவிடுவது உண்டு. கொதிக்கும் தண்ணீர் உடம்பில் பட்டால், உடல் வெந்து போகும். ஆக, இணைப்பில் இரண்டில் ஒன்று வென்றுவிடும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 06, 2013 5:48 pm

7-ல் இருக்கும் அசுபக் கிரகம் வலுப்பெற்று இருக்கிறதா அல்லது பார்க்கும் தட்பக் கிரகம் (சுபக் கிரகம்) வலுப்பெற்றுள்ளதா என்று ஆராயும் திறன் ஜோதிடனுக்கு இருக்க வேண்டும். அந்த இரண்டின் தராதரத்தை ஒட்டி சிந்தனை மாற்றம் ஏற்பட்டு, பலனில் மாறுதலை எட்டவைக்கும்.

கணினி, ஜோதிடத் தகவல்களை திரட்டித் தரும். ஆனால், ஜோதிடரின் அலசி ஆராயும் திறமையில் பலன் வெளிவர வேண்டும். சுக்கிரன் அசுர குரு. வியாழன் தேவ குரு; இருவரும் பகை. இப்படியான புராணத் தகவலை வைத்துக்கொண்டு அனாயாசமாக பலன் சொல்வது தவறு. பகை ஒன்றே அத்தனை கோட்பாடுகளையும் தாண்டி பலனளிக்கும் என்ற எண்ணம் ஜோதிடத்தின் போதிய அறிவின்மையை வெளியிடும்.

7-ல் ஒரு வெப்பக்கிரகம் இருக்கிறது. லக்னத்தில் வெப்பக் கிரகம் ஒன்று, தட்பக் கிரகம் ஒன்று என இரண்டும் சேர்ந்திருக்கிறது. 7-ல் இருக்கும் வெப்பக் கிரகத்தை ஒரு வெப்பமும் தட்பமும் சேர்ந்து பார்க்கிறது. இந்த இடத்தில் இறுதி முடிவெடுக்கும் வழியை ஜோதிடம் பரிந்துரைக்கும்.

7-ல் அசுபக் கிரகம் இருப்பதால், முதலில் சுபக் கிரகப் பார்வை நிகழ வேண்டும். அதன் பிறகு, அசுபக் கிரகத்தின் பார்வை பட வேண்டும் என்று சொல்லும். சூரியன் இருப்பதால் அது மைனஸ் (-) என்று வைத்துக்கொள்வோம். அதன் எதிரிடை ( ப்ளஸ்) முதலில் பார்க்கத் துணிந்துவிடும். அதன் பிறகு, 7-ல் 'ப்ளஸ்’ ஆக மாறுவதால், மைனஸான சனியின் பார்வை விழும். 7-ல் சுபனா, அசுபனா என்று தெரிந்தவுடன்... அசுபன் எனில் முதலில் சுப பார்வை விழ வேண்டும். அதன் பிறகு அசுப பார்வை விழ வேண்டும் என்ற நியதியை ஜோதிடம் வலியுறுத்தும். 7-ல் இருப்பவன் சுபன் ஆனால், முதலில் அசுபப் பார்வை விழ வேண்டும். பின்னர் சுப பார்வை விழ வேண்டும் என்ற வரையறையை ஏற்கச் சொல்லும் ஜோதிடம்.

மாறாக... முதலில் சூரியனை சனி பார்க்கிறான். பிறகு, குரு - சுப பார்வையில் இரண்டு பாபங்களும் விலகிவிட்டது என்ற கோணலான சிந்தனைக்கு இங்கு இடம் இல்லை. சூரியனை குரு பார்ப்பதால், சூரியனால் ஏற்படும் விபரீதத்தை அழிப்பான். பிற்பாடு சனி பார்ப்பதால், குருவின் நன்மையை அழித்து சூரியனின் பாபச் செயலை நிலைநாட்டுவான் என்று விளக்கமளிக்கும் ஜோதிடம். சனி தனது பங்காக எதையும் சேர்க்கமாட்டான். குருவின் பார்வையில் ஏற்பட்ட நன்மையை விலக்குவதுடன், அவனது செயல்பாடு முடிந்துவிடும். சுபப் பார்வை அசுபனின் இயல்பை மாற்றுகிறது. அதன் பிறகு அசுபனின் பார்வை சுபத்தை அகற்றி, அசுபனின் இயல்பைத் தக்கவைக்கிறது என்று பொருள்.

அஸ்ட்ரானமி (கால கணனம்) என்பது... ஐந்து சிந்தாந்த நூல்களை ஆதாரமாக வைத்து நடைமுறைப்படுத்துவது சிறப்பு (பஞ்ச ஸித்தாந்த கோவிதபுன்னகை. பஞ்சாங்கத்தை நம்பி ஜாதகம் கணிப்பது நம்பிக்கைக்கு உகந்ததல்ல. ஜோதிடன் கலி தின எண்ணிக்கையை வைத்து தானாகவே கணிக்க வேண்டும். பாஸ்கரர், ஆர்யபட்டர் போன்றவர்களது வழியைப் பின்பற்றி, தானே கணிக்க வேண்டும்.

காலக் கணிதத்தின் சூத்திரம்!  P72e

அதை ஒதுக்கி வாக்கியம் சிறந்தது, 'த்ருக்’ சிறந்தது என்று பாமரத்தனமாகச் செயல் படுவது தவறு. பொறுப்பில்லாத சுதந்திரம் ஜோதிடத்துக்குப் பொருந்தாது. பொறுப்பை உணர வேண்டும்.

அதன் கோட்பாட்டுக்கு இணைந்து செயல் படுவதைவிடுத்து, சுதந்திரமாகச் செயல்படக் கூடாது. புது விஞ்ஞானத்தால் பழைய சித்தாந்தத்தை மாற்றியமைக்க முற்படக் கூடாது. தெரிந்துகொண்டு செயல்பட்டால் போதுமானது. ஆராய்ச்சியை ஏற்று தன்னை உயர்த்திக் கொள்ளுவது வீண்.

விகடன்!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக