புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 17 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 17 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 17 Poll_c10 
75 Posts - 56%
heezulia

41 Posts - 31%
mohamed nizamudeen

5 Posts - 4%
dhilipdsp

4 Posts - 3%
வேல்முருகன் காசி

3 Posts - 2%
T.N.Balasubramanian
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 17 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 17 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 17 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

Abiraj_26

kavithasankar

Sathiyarajan

இந்த மாத அதிக பதிவர்கள்

70 Posts - 56%

39 Posts - 31%

2 Posts - 2%

Guna.D

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Page 17 of 28 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 22 ... 28  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Nov 28, 2013 8:01 pm

First topic message reminder :

M.M.S.ன் கதை

இது என் கதை

கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!

எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?

எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !

இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!

எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!

எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !

மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Feb 04, 2014 10:08 pm

பவானியில்
பவிஷ் பார்க்கில்,
ஊரே வியக்கும் வண்ணம்
பயங்கரமாய் இருந்தது
வரவேற்பும் விருந்தும்!!
செந்திலா நீ?
இப்பத்தாண்டா பாக்க
நீ பையன் மாதிரி இருக்க,
முறுக்கி விட்ட மீசையும்
தெனாவட்டு பார்வையும்
இப்ப எங்க தம்பி போச்சு,
ஒழுங்கா பொழச்சுக்கோடா
இனியாவது திருந்தி
நல்ல பையனா
குடும்பத்த கொண்டா!!
சொந்தங்களும்
பந்தங்களும்
மாறி, மாறி அறிவுரை சொன்னார்கள்!!
அறிவுரை – இது மட்டும்தான்
ஒவ்வொரு மனிதனையும்
அறிவாளியாய் காட்டுகிறது!!
ஆம், தவறு செய்தவனிடத்தில்
நம்மவர்கள் செய்யும் அறிவுரை
நானெல்லாம்? அப்பவே அப்புடி
என்கிற ரீதியில் இருக்கும்!!
யார் பேச்சையும் நான்
பொருட்படுத்தவில்லை,
பின்னே?
போட்டோவுக்கு போஸ்
கொடுக்க வேணாமா?
நம்ம மூஞ்செல்லாம்
எதோ போட்டோக்காரன்
கொஞ்சம் கிராபிக்ஸ்
பண்ணாத்தான் உண்டு!!
கல்யாணமும் முடிந்தது
வரவேற்பும் முடிந்தது,
சொந்தங்கள் புறப்பட்டன
அவரவர் வீட்டிற்கு!!
ஆனால் என் தங்கை
என்னிடம் சொல்லாமலே
கிளம்பியிருந்தால்!!
அவள் இன்றுவரை
புரியாத புதிராகவே
இருக்கிறாள்!!
தேவையில்லாத இடத்தில்
தேவையில்லாமல் பேசுவது,
எதற்கெடுத்தாலும்
முகத்தை உம்மென்று வைப்பது
இப்படி இன்னும் நிறைய!!
அவள் போகட்டும்
இப்போ நம்ம கதைக்கு
வருவோம்!!

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 06, 2014 3:47 pm

ம்ம்ம் கதைக்கு வாங்க......

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Feb 07, 2014 1:35 pm

மணம் முடிந்து
இருபது நாட்கள்
நான் குடிகாரன்
என்ற அடையாளமே
இல்லாமல் இருந்தேன்,
அப்படியே இருந்திருக்கலாம்!!
விதி விட்டால்தானே
வந்தான் ஒரு நண்பன்
கொஞ்சம் தானே,
கொஞ்சம் தானே
என்று என் எல்லையை
அதிகம் மீறி விட்டேன்,
இரவு வீட்டுக்கு
வரும்போது – என்
மனைவி பார்த்த பார்வை,
நீயும் இப்படித்தானா?
என்பது போல் இருந்தது!
அதன்பின் இதுவே
வாடிக்கை ஆனது,
என் மனைவி அழாத
நாள் மிகவும் குறைவே!
நன்றாக குடித்தவிட்டு
சோறே இல்லாமல் கிடப்பேன்!!
தவறென்று தெரிந்தும்
மாற்றிக்கொள்ள மனமில்லை!!
அடிமை நான் மதுவுக்கு!!
அவள் கர்ப்பம் தரித்த பின்
மருத்துவமனை போவேன்
செக்கப் பண்ண – அப்போது
மட்டுமே நான் நல்லவன்,
மற்றபடி???
இப்படியே போனது
ஏழு மாதங்கள்,
எட்டாம் மாத ஆரம்பம்
தலை தீபாவளி
முடிந்த பின்
மனைவிக்கு பிரஷர்
அதிகமானது!
நான்கு நாட்கள்
மருத்துவமனையில்
சேர்த்திருந்தேன் – அப்போது
துணைக்கு வந்தனர்
சில சொந்தங்கள்,
மருத்துவமனையில்
தங்கி அவளை பார்த்தனர்!!
டாக்டர் சொல்லிவிட்டார்
விரைவில் ஆபரேஷன்
செய்தாக வேண்டுமென்று,
கேரளா கிளம்பினேன்
என் மனைவியை
அழைத்துக் கொண்டு!!
அப்போது தான் சிந்திதேன்
நாம்தான் காரணமோ
அவளின் இரத்தம்
கொதித்ததற்கு!!
ச்சே.. நாமெல்லாம்
மனிதனே கிடையாது,
நம்மை நம்பி வந்தவளை
கொஞ்சம் சிரமப் படுத்தி விட்டோமா??

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Feb 07, 2014 1:45 pm

தமிழ்நாட்டில் உண்டு
மருத்துவமனை நிறைய,
ஆனாலும் ஏன்
கேரளா போனேன்??
என் மனைவிக்கு
துணையாய் வந்த
சொந்தங்கள்
அவன் எப்படியோ போகட்டும்
நாம் கூட இருக்கவில்லை எனில்
என்ன சொல்லுவார்கள்
மற்ற சொந்தங்கள்
என்று பேசியதை கேட்டேன்,
மற்றவர்கள் சொல்லுக்கு அஞ்சி
என் மனைவிக்கு பாதுகாப்பு,
அது கடமைக்கு என்று
தெரிந்த பின் – எப்படி
மனம் ஒப்பும்!!
கீதாவின் பெற்றோரை
அண்ணன், தம்பியை
அவள் பார்க்கும்போது
கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகலாம்
என்று நான் நினைத்தே அங்கு போனேன்!!
ஆனாலும் இறைவன்
எனக்கு அங்கே
மாபெரும் அதிர்ச்சியை வைத்தான்!!
ஆம்,
உன் மனைவி இப்போது
சிக்கலான நிலையில் உள்ளாள்,
வேகமாக செல்லுங்கள்
பிறிதொரு மருத்துவமனைக்கு
என்று அந்த டாக்டர்
சொன்னபோது – மனதில்
குற்ற உணர்வு மேலோங்கியது!!
மலப்புரத்தில் உள்ள
ஒரு மருத்துவமனை அது
வேக, வேகமாய் சென்றோம்,
ஓடும் காரின் வேகத்தைவிட
என் மனம் வேகமாய் ஓடியது!!
இதோ,
அட்மிட் பண்ணியாச்சு,
எப்போ வேண்டுமானாலும்
வலிப்பு வரலாம்
என்ற நிலை!
உனக்கு என்னம்மா பிரச்சினை
மருத்துவர் கேட்கிறார்,
என் மனைவி சொல்கிறாள்
எனக்கு ஒரு பிரசினையும்
இல்லை,
பிறகேன் பிரஷர்
இத்தனை எறிக்கெடக்கு
சொல்லு உனக்கும்
உன் கணவனுக்கும் ஏதாவது???
அப்படி ஒன்றும் இல்லை என்றால்!!
என்னால் அங்கே நிற்கவே
முடியவில்லை – என் மனைவி
இன்று வரை நான் குடித்ததை
அவள் வீட்டில் யாரிடமும்
சொல்லியது இல்லை,
பெண் பார்க்க சென்றபோது
இருந்த மரியாதை
இன்றுவரை கொஞ்சமும் குறையாமல்!!

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Feb 07, 2014 1:59 pm

மருத்துவமனையில்
இரண்டு நாட்கள்
நல்ல கவனிப்பு,
பிரஷர் குறைந்தது!
நான் துணிகளை
எடுத்து வர என் மாமியார்
வீட்டுக்கு வந்தேன்
என் மனைவியின் அக்கா பையனுடன்!!
குளித்து, துணிமாற்றி
கிளம்ப தயாரானேன்
மைத்துனன் அழைத்தான்
அலைபேசியில்,
சீக்கிரம் வாங்க
ஆபரேஷன் பண்ணனுமாம்
நிறைய கையெழுத்து போடணும்!!
இதயம் ஒரு நிமிடம் நின்று
மீண்டும் துடித்ததை
நான் நன்றாக உணர்ந்தேன்!!
பைக்கில் வேகமாய் போனோம்
கையெழுத்து வாங்கினார்கள்
பத்து நிமிடம் அந்த இடம்
மிகுந்த பரபரப்பு,
சிறிது நேரத்தில்
கையில் வெள்ளை துணி சுற்றி
மருத்துவ பெண்மணி
வேகமாக ஓடினாள்,
அவள் பின் வந்த பெண்மணி
பெண் குட்டி பிறந்திருக்கு
என்று சொல்லி வேகமாய்
அவளை பின் தொடர்ந்தாள்!!
இறைவா, என்ன கொடுமை இது
என் குழந்தையை கண்ணில் கூட
காட்ட வில்லையே!!
எங்கு கொண்டு போகிறார்கள்
எதற்கு கொண்டு போகிறார்கள்
ஒன்றும் புரியாமல்
விக்கித்து நின்றேன்!!

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Feb 07, 2014 2:16 pm

எந்த கோவிலுக்கு போனாலும்
எனக்கு முதல் குழந்தை
பெண்ணாக இருக்கட்டும்
என்பதுதான் என் முதல்
வேண்டுதல் – இப்போது
அந்த பெண் குழந்தையை
கண்ணில் கூட காட்டவில்லை,
இங்குபேட்டரில்
வைத்துவிட்டார்கள்,
ஆம்.,
எட்டாம் மாதத்தில் பிறந்தாள்
எடையும் ஒன்னே கால் கிலோ!!
மனைவிக்கும் மயக்கம் தெளியல
மகளையும் கண்ணில் காட்டல
என்னடா இறைவா சோதனை இது!!
நான்கு மணி நேரம் கழித்து
மனைவி என்னை
அழைப்பதாய் சொன்னார்கள்,
உள்ளே போனேன் – ஒரு
குற்றவாளி போல,
மாமா, என்ன குழந்தை
நமக்கு என்றால்
பெண் குழந்தை என்றேன்
எங்கே காணல என்றாள்,
எனக்கு பதில் சொல்ல
வாய் வரும் முன் – என்
கண்ணில் இருந்து கண்ணீர் வந்தது!!
மாமா பாப்பா எங்கே
என்ன ஆனது – பதறினாள்,
ஒரு தாய்மைக்கே
உண்டான வலி அது,
என்ன ஆயிற்றோ, ஏது ஆயிற்றோ
என்ற பதட்டம் அவளுக்குள்!!
ஒன்னுமில்லடா பாப்பா
கொஞ்சம் வெயிட் கம்மி
அதனால இங்கு பேட்டர்ல
வச்சிருக்காங்க என்றேன்!!
நான் பாக்கணும் என்றாள்,
இப்போது முடியாது
குழந்தை பாலுக்கு
அழும்போது காணலாம் என்றனர்!!
நம் குழந்தை எப்போ அழும்
என்று எதிர்பார்த்திருந்தோம்,
என் மகள் கொஞ்சம்
கல் நெஞ்சக்காரி போல
இரவு பதினோரு மணிக்கு மேல்
முதன் முதலாய் அழுதாள்!!
இரண்டு பணிப்பெண்கள்
கைகளில் ஏந்தி
கொண்டு வந்தனர்,
ஆவலுடன் முகம் காண சென்றேன்,
கடவுளே........
உனக்கு ஈவு இரக்கமே இல்லையா
நீ வெறும் கல்லுதானா??
என்றெல்லாம் கதறினேன்
ஆம்...
என் அன்பு மகளின்
இரண்டு கைகளிலும்
ஊசியை குத்தி இருந்தனர்,
மருந்து உட்செலுத்த!!
நீங்கெல்லாம் உங்க
மொத குழந்தய
முதன் முதலா பாத்தா
என்ன செய்விங்க,
அள்ளி அணைத்து
கொஞ்சி குழாவி
முத்தம் கொடுப்பீங்க!!
நான்
அங்கிருந்த குளியறையில்
என் வாழ்வில் அப்படி
அழுததே இல்லை என்றபடி
அழுது கொண்டிருந்தேன்!!

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Feb 07, 2014 2:37 pm

என் பாட்டியே
எனக்கு மகளாய்
பிறந்திட வேண்டும் – என
ஆசை வாழ்வை வாழ்ந்தேன்,
இறைவன் கொஞ்சம்
என்னை சோதித்து விட்டான்!!
இருபத்து மூன்று நாட்கள்
என் குழந்தை கொஞ்சம்
உடல்நிலை தேறி வர!
செலவோ ஐந்து லகரத்திற்கு
மேலே ஆனது!!
பணம் போனால் போகட்டும்
என் மகளும், மனைவியும்
இதோ என் முன்னே நலமாய்,
இது போதும் இறைவா!!
இந்த இறைவன்
சில நேரம் கல்லாகிறான்
சில நேரம் கை தொழ வைக்கிறான்,
விந்தையே, அவன் செயல்!!
நான் கேரளா போன சூழல்
என் அப்பனுக்கும், தங்கைக்கும்
நன்றாகவே அறிந்திருந்தும்
ஒரு போன் கூட செய்யவில்லை,
பாவம் – அவர்களிடத்தில்
ஒரு ரூபாய் கூட இல்லை போலும்!!
பாப்பா பிறந்த அன்று
நண்பர்கள் இருவருக்கும்,
எனக்கு மணவாழ்வு அமைத்த
என் பெரியம்மாவுக்கும்
அலைபேசியில் அழைத்து
சேதி சொன்னேன்!!
இந்த இருபத்து மூன்று
நாளில் நான்கைந்து முறை
தமிழ்நாடு வந்தேன்,
பணம் கொண்டு போக,
வரும்போதெல்லாம்
நண்பர்களுக்கு பார்ட்டி,
நானும் நல்லா குடித்தேன்!!
ஒருநாள்,
வட்டமலை முருகன் கோவில்
போய்விட்டு வரலாம் என
அங்கு சென்று வீடு திரும்பினேன்,
வழியில்
ஒரு ஆக்சிடெண்ட்!!
வயதான ஒருவர்
நல்ல போதையில்
ஆட்டோவில் இடித்து
கீழே விழுந்தார்,
அவரை தூக்கி எடுத்த
ஒரு நண்பர் – தமிழில்
உள்ள அனைத்து
கெட்ட வார்த்தைகளையும்
சொல்லி திட்டினார்,
நான் கோபமானேன்
அவரிடம் சென்று
நீயும் ஒரு மனிதனா?
அடிபட்ட ஆளை
இப்படி பேசுகிறாயே
என்று சட்டையை பிடித்தேன்,
என் கையை தட்டிவிட்டு
அவன் சொன்ன வார்த்தை
இனிமேல் நாம்
குடிக்க கூடாது
என்ற எண்ணம் வர காரணமானது!!
அப்படி என்ன சொன்னான் அவன்??

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 07, 2014 2:46 pm

பொண்டாட்டி பிள்ளை நினைப்பிருந்தா இவன் குடிப்பானா? இவன் செத்து தொலைஞ்ச்சா இவன் குடும்பத்தை யார் கவனிப்பா என்று திட்டி இருப்பான்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Feb 07, 2014 2:47 pm

ஜாஹீதாபானு wrote:பொண்டாட்டி பிள்ளை நினைப்பிருந்தா இவன் குடிப்பானா? இவன் செத்து தொலைஞ்ச்சா இவன் குடும்பத்தை யார் கவனிப்பா என்று திட்டி இருப்பான்

இந்த யூகம், என்னை திட்டுவது போலவே இருக்கிறது.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 07, 2014 2:52 pm

M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:பொண்டாட்டி பிள்ளை நினைப்பிருந்தா இவன் குடிப்பானா? இவன் செத்து தொலைஞ்ச்சா இவன் குடும்பத்தை யார் கவனிப்பா என்று திட்டி இருப்பான்

இந்த யூகம், என்னை திட்டுவது போலவே இருக்கிறது.

உங்களுக்கு மட்டுமல்ல இது எல்லா குடிமகனுக்கும் பொருந்தும்புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 17 of 28 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 22 ... 28  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக