புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... Poll_c10தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... Poll_m10தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... Poll_c10 
93 Posts - 43%
ayyasamy ram
தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... Poll_c10தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... Poll_m10தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... Poll_c10 
77 Posts - 36%
i6appar
தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... Poll_c10தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... Poll_m10தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... Poll_c10தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... Poll_m10தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... Poll_c10தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... Poll_m10தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... Poll_c10தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... Poll_m10தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... Poll_c10தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... Poll_m10தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... Poll_c10 
4 Posts - 2%
Guna.D
தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... Poll_c10தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... Poll_m10தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... Poll_c10தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... Poll_m10தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... Poll_c10 
2 Posts - 1%
prajai
தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... Poll_c10தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... Poll_m10தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்...

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Fri Oct 30, 2009 8:28 pm

தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... Sad ங்களது தோற்றப் பொலிவால் எதிர்மறை எண்ணங்கள் மனதில் எழுந்தால் அதை எதிர்கொண்டு ஜெயிப்பது எப்படி?

ஒவ்வொருவரும் சொல், எண்ணம், செயல்பாடு ஆகியவற்றை தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள பழகும்போதுதான் ஆரோக்கியமான வாழ்வை மேற்கொள்வது சாத்தியம். உடல் தோற்றத்தின் அடிப்படையில் நீங்கள் உங்களைப் பற்றி கொண்டுள்ள எதிர்மறை எண்ணங்களுக்கு அடிமையாக வேண்டிய கட்டாயம் கிடையாது. முயற்சி மேற்கொண்டு புதிய திறன்களை வளர்த்துக் கொண்டு உங்களைப் பற்றி ஆக்கப்பூர்வமாக சிந்திக்க பழகலாம்.

அப்படி இல்லாமல் உங்களைப் பற்றி ஒரு வித வெறுப்புடன் மனதில் உங்கள் தோற்றத்தை காணும்போது, நீங்கள் விரக்தி அடைந்த அனுபவம், வெகுவாக பயந்த சூழ்நிலைகள் ஆகியவையே உங்கள் மனக் கண்ணில் தோன்றி எதிர்மறையான உணர்ச்சிகளை ஏற்படுத்தும்.

உயர்வாக எண்ணுங்கள்

நீங்களாக உங்கள் மனதிற்குள் கூறிக் கொள்ளும் வார்த்தைகள் எத்தகைய தன்மையானதோ, அதற்கேற்ப தாக்கம் மனதில் ஏற்படும். 'நான் அழகாக இல்லை', 'அசிங்கமான தோற்றம்', 'பருத்த உடம்பு' என்று கூறும்போது மனதில் ஒருவித சங்கடம் ஏற் படுகின்றது.

அதே சமயம் 'அமைதி', 'நம்பிக்கை', 'மன நிறைவு' என்று கூறும்போது ஒருவித சாந்தமான உணர்வு மனதில் தோன்றுகிறது. அதனால்தான் தியானத்திற்கு பயன்படுத்துபவை வெறும் சொற்கள் அல்ல, மந்திரங்கள் என்று கூறப்படுகின்றது. உடம்பும், மனதும் இறுக்கமில்லாமல் செயல்பட்டால்தான் சிந்தனையும், செயலும் இசைவுடன் ஒன்றுபடும்.

பக்குவப்படுத்தும் பயிற்சிகள்

எனவே எதிர்மறை எண்ணங்களை விட்டுவிட்டு மனதில் ஆக்கப்பூர்வமான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதற்காக மனதை ஒருமுகப்படுத்தும் யோகா, தியானம் போன்ற பயிற்சிகளிலும், விளையாட்டுகள், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து மனதை இறுக்கத்தில் இருந்து சமநிலைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நாளும் காலையிலும், மாலையிலும் நேரம் ஒதுக்கி மனதையும், உடலின் அனைத்துப் பகுதிகளையும் தளர்த்தி பழகினால் உடம்பை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு மனதை ஒருமுகப் படுத்த முடியும். இவ்வாறு ஒரு வாரம், பத்து நாட்கள் என்று பயிற்சி மேற்கொண்டால் உடம்பும், மனமும் கட்டுப்பாட்டிற்குள் செயல்படத் தொடங்கும்.

மேலும் தோற்றத்தை முழுமையாகக் காட்டும் கண்ணாடி முன்பு நின்று கொண்டு உடம்பு முழுவதையும் காண்பது என்பது எதிர்மறை எண்ணம் உடையவர் களுக்கு மிகுந்த மன வருத்தத்தை அளிக்கலாம். இருந்தபோதிலும் விரும்பும் உடல் பாகங்களை மனதில் கொண்டு வந்து படிப்படியாக எதிர்மறையான எண்ணங்களின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபடுவதற்கு பயிற்சி பெறலாம்.

எண்ணங்கள் ஏற்படுத்தும் மாற்றம்

நீங்கள் உங்கள் மனதிற்குள் சொல்லிக் கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதற்கு ஒரு உதாரணத்தைக் காண்போம். உருவத்தில் ஒரே தோற்றம் உடைய இருவர் தங்களைப் பற்றி கூறிக் கொள்ளும்போது ஒருவர் தன்னை மிகவும் அசிங்கமாக இருப்பதாக கூறிக் கொண்டார். மேலும் அவர் பருமனாக இருப்பதாகவும், எப்படித்தான் எடையை குறைக்க போகிறேனோ தெரியவில்லை என்று சலிப்புடனும் தன்னையே நொந்து கொண்டார்.

அவருடன் பிறந்த மற்றொருவர் தன்னைப் பற்றி ஆக்கப்பூர்வமாக கருதுகின்றார். இன்று மிகவும் அன்புடன் நடந்து கொள்வதாகவும், தன்னுடைய ஊதா நிற கண்களுக்கு பொருத்தமாக உடை அமைந்துள்ளதாகவும் கூறுகின்றார். விரைவில் எடையை குறைக்கும் முயற்சியில் வெற்றி பெறுவேன் என்றும் தனக்குத் தானே கூறிக் கொள்கின்றார். இருவரும் இரட்டை குழந்தைகளாகவும், உருவத்தில் ஒரே தோற்றத்துடன் இருந்தாலும், மனதில் எடுத்துக் கொள்வது அவர் களின் அனுபவத்தின் அடிப்படையில் அமைகின்றது.

தவறாக கணித்தால்...?

உங்களைப் பற்றி உண்மையாக, சரியாக கணிக்கும் திறனை உங்களின் தன்மதிப்பு என்று கூறலாம். ஆனால் சாதாரணமாக உளவியல் ரீதியாக தன்னைப் பற்றிய கணிப்பு இரண்டு விதங்களில் தவறாகப் போய்விட வாய்ப்புகள் அதிகம். ஒன்று உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்வது. உங்களைப் பற்றி சரியாக கணித்தால் உங்களால் யதார்த்தத்தை எதிர்கொள்ள முடியாது என்று கருதும்போது நீங்கள் விரும்புவதே உண்மை என்று கருதி உங்களை ஏமாற்றிக் கொள்வது.

இரண்டாவது வகை உங்களைப் பற்றி நீங்கள் கொண்டுள்ள கருத்து எப்போதுமே சரிதான் என்று நினைக்கும் நிலைப்பாடே ஆகும். அதாவது உங்களைப் பற்றி எதிர்மறையான கருத்துக்களை கொண்டிருந்தாலும் மாற்றிக் கொள்ள முயற்சிக்காமல் அதையே உண்மை என நம்புவது. இத்தகைய இருவகையான நிலைப்பாடுகளும் சரியானவை இல்லை. மேலும் இவை உங்களைப் பற்றி சரியான மதிப்பீடு செய்யவிடாமல் உங்களது ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தடைக் கற்களாகவும் அமைந்து விடுகின்றன.

செயல்தான் பேசும். வெறும் தோற்றம் கிடையாது. நட்புணர்வு, அறிவுக்கூர்மை, உண்மையாக நடந்து கொள்ளுதல், நகைச்சுவை உணர்வு, சமூக பிரக்ஞை போன்றவற்றுக்குத்தான் பெரும்பாலும் முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. வெறும் தோற்றத்திற்குக் கிடையாது.

ஒருவரைப் பார்த்தவுடன் அவரைப்பற்றி தோற்றத்தின் அடிப்படையில் ஏற்படும் அபிப்ராயம் அப்படியே நிலைப்பதில்லை. பழகும்போது ஏற்படும் அபிப்ராயமே நிலையானது. முதலில் பார்த்தவுடன் அழகாக தோன்றுவது என்பது உண்மையா என்று பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும் என்கின்றார் ஜார்ஜ் பெர்னாட்ஷா.

வரலாற்றைக் காணும்போது ஆபிரகாம்லிங்கன், வின்ஸ்டன் சர்ச்சில், மிகேல் கோர்ப சேவ், ஹென்றி கிசிங்கர், மகாத்மாகாந்தி அடிகள், லால்பகதூர் சாஸ்திரி ஆகியோரது ஆளுமைத் திறன்களும், தனிமனித பண்புகளுமே அவர்களை உயர்த்தி உள்ளதைக் காணமுடியும். கோல்டா?மேயர், எலினார் ரூஸ்வெல்ட், மார்க்கரெட் தாட்சர், அன்னை தெரசா போன்றவர்கள் எந்தவித அழகிப் போட்டிகளிலும் கலந்து கொண்டு புகழ் பெற்றவர்கள் கிடையாது. பண்பால் உயர்ந்தவர்கள்.

குறையை சாதகமாக்குங்கள்

அலைஸ்வாக்கர் என்பவர் 'பர்ப்பிள் கலர்' (கருஞ் சிவப்பு நிறம்) என்ற புத்தகத்தை எழுதி புலிட்சர் பரிசு பெற்றவர் ஆவார். அவர் எங்கு சென்றாலும் அவரது ரசிகர்கள் அவரை சூழ்ந்துகொள்ளும் அளவிற்கு புகழ் பெற்றவரானார். ஆனால் அவர் ஜார்ஜியாவில் இளம் வயதில் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. எட்டு வயதில் அவரது சகோதரர் அவரது கண்ணில் துப்பாக்கியால் சுட்டதால் ரவை குண்டு தாக்கி வலது கண்பார்வையை இழக்க நேர்ந்தது. சாதாரணமாக இத்தகைய துன்பத்தை எதிர்கொள்வது கடினமான ஒன்றாகும்.

தனக்கேற்பட்ட பார்வை இழப்பையே தனக்கு கிடைத்த பரிசாக கருதத் தொடங்கினார். நன்றாகத் தெரியும் கண்ணை வைத்து அவருக்கு முன்னால் தோன்றும் காட்சிகளை பார்க்க முடியும் என்றும், பார்வையற்ற கண்ணால் கண்ணுக்குப் புலப்படாதவற்றை அகக் கண்ணால் பார்க்க முடியும் என்றும் கூறுவார். இது அவர் மேல் கொண்டுள்ள நம்பிக்கையை காட்டுகின்றது. மனதை கட்டுப்படுத்தத் தெரியாமல் இருப்பதே பெரும்பாலானவர்களின் துயரத்திற்கு காரணம் என்கிறார் அவர்.

மனோபாவத்தில் மாற்றம் ஏற்படும்போது அவரவர் மனதில் ஆக்கப்பூர்வமான எண்ணங்கள் தோன்ற துவங்கும். அப்போது பலர் எதில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று உணரத் தொடங்குவார்கள். வேலை, உறவுகள், தீய பழக்கங்களில் இருந்து வெளிவருவது போன்றவற்றில் மாற்றத்தை உண்டாக்க தயாராகிவிடுவார்கள்.

அப்போது அவர்கள் எடுக்கும் யதார்த்தமான முடிவு மற்றும் செயல்பாடுகள் அவர்களை சரியான பாதையில் பயணம் செய்ய உதவும். சில நேரங்களில் அத்தகைய முயற்சி மேற்கொள்ளும்போது பொறுமை இழந்துவிட நேரிடும். இதுவும் ஏற்புடைய உணர்வு வெளிப்பாடே. இருப்பதை ஏற்றுக் கொள்வது ஒரு வகை வளர்ச்சியே. அதே சமயம் இருப்பதில் மாற்றத்தைக் கொண்டு வருவதன் மூலம் ஆக்கப்பூர்வமான, பயன்பாடு சார்ந்த வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்று நம்பினால் அவரவர்களே சுயபரிசோதனை செய்து தங்களிடம் உள்ள மனக்குறையை களைந்து வெற்றிப் பாதையில் நடைபயில முயற்சி மேற்கொள்ள முடியும்.

விபத்துகள், தோல்விகள், இடர்பாடுகள் போன்றவைதான் பலரை வீறுகொண்டு எழச் செய்திருக்கின்றன. மனோபாவத்தில் உரியமாற்றம் இருந்தால் அனைவரின் வாழ்க்கையும் வளமானதாகவே அமையும். நிகழ்காலத்தை கையில் எடுத்துக் கொள்ளுங்கள். புதியதோர் உலகத்தை உருவாக்குங்கள். உங்களுக்குள் தோன்றும் அல்லது சுமத்தப்படும் எதிர்மறை எண்ணங்களை வேரோடு களையுங்கள். வசந்த காலம் என்பது அனைவருக்கும் சாத்தியமே.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Oct 30, 2009 8:32 pm

ஒருவரைப்பார்த்தவுடன்அவரைப்பற்றிதோற்றத்தின்அடிப்படையில்ஏற்படும் அபிப்ராயம்அப்படியேநிலைப்பதில்லை. பழகும்போதுஏற்படும்அபிப்ராயமே நிலையானது. முதலில்பார்த்தவுடன்அழகாகதோன்றுவதுஎன்பதுஉண்மையா என்றுபொறுத்திருந்துபார்த்தால்தான்தெரியும்என்கின்றார்ஜார்ஜ்பெர்னாட்ஷா.

தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... 677196 தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... 677196 தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... 677196

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 30, 2009 8:38 pm

மிக மிக அருமையான தகவல் யாழவன்..நன்றிகள் பல..

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Fri Oct 30, 2009 8:39 pm

ரூபன் wrote:ஒருவரைப்பார்த்தவுடன்அவரைப்பற்றிதோற்றத்தின்அடிப்படையில்ஏற்படும் அபிப்ராயம்அப்படியேநிலைப்பதில்லை. பழகும்போதுஏற்படும்அபிப்ராயமே நிலையானது. முதலில்பார்த்தவுடன்அழகாகதோன்றுவதுஎன்பதுஉண்மையா என்றுபொறுத்திருந்துபார்த்தால்தான்தெரியும்என்கின்றார்ஜார்ஜ்பெர்னாட்ஷா.

தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... 677196 தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... 677196 தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... 677196
தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... 678642 தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... 678642 தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... 678642 தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... 678642

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Fri Oct 30, 2009 8:39 pm

மீனு wrote:மிக மிக அருமையான தகவல் யாழவன்..நன்றிகள் பல..
தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... 678642 தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... 678642 தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... 678642 தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... 678642 தாழ்வு மனப்பான்மையை ஒழிப்போம்... 678642

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக