புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நைல் Poll_c10நைல் Poll_m10நைல் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
நைல் Poll_c10நைல் Poll_m10நைல் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
நைல் Poll_c10நைல் Poll_m10நைல் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
நைல் Poll_c10நைல் Poll_m10நைல் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
நைல் Poll_c10நைல் Poll_m10நைல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நைல் Poll_c10நைல் Poll_m10நைல் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
நைல் Poll_c10நைல் Poll_m10நைல் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
நைல் Poll_c10நைல் Poll_m10நைல் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
நைல் Poll_c10நைல் Poll_m10நைல் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
நைல் Poll_c10நைல் Poll_m10நைல் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நைல்


   
   
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Tue Nov 19, 2013 5:42 pm

நைல் (அரபி: النيل, அன் நைல்; பண்டைய எகிப்தியம்: இட்டேரு யிஃபி; கோதிக் எகிப்தியம்: P(h)iaro; அம்காரியம்: ዓባይ?, ʿAbbai) வடகிழக்கு ஆப்பிரிக்கக் கண்டத்தில் பாயும் மிக முக்கியமான ஆறாகும். இது உலகின் மிக நீளமான ஆறு எனவும் கூறப்படுவதுண்டு[3]. 6650 கி.மீ நீளம் கொண்ட இது, தான்சானியா, உகாண்டா, ருவாண்டா, புருண்டி, காங்கோ, கென்யா, எத்தியோப்பியா, எரித்திரியா, தெற்கு சூடான், சூடான், மற்றும் எகிப்து ஆகிய பதினோரு நாடுகளின் வழியாக பாய்ந்து நடுநிலக் கடலில் கலக்கின்றது[4]. இவற்றில் எகிப்து மற்றும் சூடான் ஆகியவை நைல் ஆற்றால் அதிகம் பயனடையும் நாடுகள் ஆகும்[5].
நைல் ஆறு, வெள்ளை நைல் மற்றும் நீல நைல் என்ற இருபெரும் கிளைகளைக் கொண்டது. இவற்றில் வெள்ளை நைல் அதிக நீளம் கொண்டது. இது மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள பெரிய ஏரி பகுதிகளில் இருந்து உற்பத்தியாகின்றது. அங்கிருந்து ருவாண்டா, புருண்டி, தான்சானியா, விக்டோரியா ஏரி, உகாண்டா வழியாக தெற்கு சூடானை வந்தடைகின்றது. நீல நைலானது, எத்தியோப்பியாவில் உள்ள தனா ஏரியில் உற்பத்தியாகி சூடானின் தென்கிழக்குப் பகுதி வழியாகப் பாய்ந்து, அதன் தலைநகரான கர்த்தூம் அருகே வெள்ளை நைலுடன் இணைகின்றது.
சூடான் முதல் எகிப்து வரையிலான இவ்வாற்றின் வடபகுதி, பெரும்பாலும் சகாரா பாலைவனத்தின் வழியாகவே பாய்கின்றது. இந்த பகுதி தொன்மையான எகிப்திய கலாச்சாரத்திற்கும், நைல் ஆற்று நாகரீகத்துக்கும் பெயர் பெற்றது. பண்டைய எகிப்தின் பல குடியேற்றங்கள் இந்த பகுதியிலேயே அமைந்திருந்தன.
நைல் Q4XOQpQJT6idFtJ1R9kK+285px-Nile_watershed_topo
வரலாறு
நைல் ஆறு, பண்டைய எகிப்திய நாகரீகத்தின் முக்கிய காரணி ஆகும். அன்றைய காலத்தின் பல முக்கிய நகரங்கள் நைல் பள்ளத்தாக்கு மற்றும் அதன் கழிமுகப் பகுதியிலேயே இருந்தன. கற்காலத்தின் தொடக்கத்தில் இருந்தே இது, எகிப்திய கலாச்சாரத்தில் முக்கிய இடத்தை பிடித்திருந்தது. கி.மு 3400 வாக்கில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தை தொடந்து, வட ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் வறட்சி ஏற்பட்டு சகாரா பாலைவனம் உருவாகத் தொடங்கியது. அந்த காலக் கட்டத்தில், அங்கிருந்த பல பழங்குடியினர் நைல் பள்ளத்தாக்கு பகுதிக்கு குடியேறத் தொடங்கினர். இந்த காலக்கட்டத்திலேயே உலகின் முதல் கிராமம் மற்றும் விவசாயம் செய்யத் தொடங்கிய சமூகம் ஆகியவை உருவாகின.

யோநைல்
நைல் ஆறு, எத்தியோப்பிய உயர் பகுதிகளில் இருந்து உருவாகி வடக்கு நோக்கி பயனித்த ஆறுகளில் ஐந்தாவதாக உருவான ஆறாக இருக்கக்கூடும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ஆதி நைல், யோநைல் என அழைக்கப்படுகின்றது. இதன் தடையங்கள் இன்றைய நைலின் மேற்கில் உள்ள பாலைவனப்பகுதிகளில் கிடைக்கின்றன. யோநைல், 23 - 5.3 மில்லியன் வருடங்கள் பழமையானது. இது அதிக அளவிலான பழம்பாறை படிவுகளை மத்தியதரைக் கடலில் கொண்டு சேர்த்தது. இந்த படிவுப் பகுதியில் பல இயற்கை எரிவாயுக் கிணறுகள் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை நைல்
வெள்ளை நைல், நைல் ஆற்றின் மிகப் பெரிய துணையாறு ஆகும். இதன் ஊற்றாக விக்டோரியா ஏரி சொல்லப்படுவதுண்டு. ஆனால் அந்த ஏரியிலும் சில ஆறுகள் வந்து கலக்கின்றன. எனவே இதை ஏற்பதற்கில்லை. விக்டோரியா ஏரியில் இருந்து, இரைபான் அருவி மூலமாக வெளியேறும் வெள்ளை நைல் 500 கி.மீ தூரம் பயனம் செய்து யோகா ஏரி வழியாக ஆல்பர்ட் ஏரியை வந்தடைகிண்றது. இதற்கு இடைப்பட்ட பரப்பில் இருக்கும் ஆறானது, விக்டோரியா நைல் என அழைக்கப்படுகின்றது. ஆல்பர்ட் ஏரியில் இருந்து வெளியேரும் ஆறானது, ஆல்பர்ட் நைல் என அழைக்கப்படுகின்றது.

நீல நைல்
நீல நைலின் பிறப்பிடம் எத்தியோப்பிய பீட பூமி பகுதியில் இருக்கும் தனா ஏரி ஆகும். இதன் மொத்த நீளம் 1400 கி.மீ. இது எத்தியோப்பியாவின் மிக முக்கியமான ஆறு ஆகும். எத்தியோப்பிய குடிநீர் தேவையில் 90 சதவிகிதத்தை இந்த ஆறு பூர்த்தி செய்கின்றது. மேலும், எத்தியோப்பிய நீர்வழிப் போக்குவரத்திலும் 96 சதவிகிதம் இவ்வாற்றின் வழியாகவே நடக்கின்றது[8].
இருப்பினும் எத்தியோப்பிய பீட பூமிப் பகுதி அதிகம் மழை பெறும் காலங்களிலேயே இந்த ஆறு குறிப்பிடத்தகுந்த நீரோட்டத்தக் கொண்டுள்ளது. பிற காலங்களின் இதன் நீரோட்டம் மிகவும் குறைவே. குறிப்பாக ஆகத்து மாதத்தின் இறுதியில், நொடிக்கு 5663 மீ3 நீர் வரத்தைக் கொண்டுள்ள இந்த ஆறு, ஏப்ரல் மாததின் இறுதியில் வெறும் 133 மீ3 மட்டுமே நீர் வரத்தைக் கொண்டுள்ளது.
இதன் பிறகு தெற்கு சூடானில் நுழையும் ஆல்பர்ட் நைல் அங்கு பகர் அல் யபல் என அழைக்கப்படுகின்றது. இது நோ ஏரியில் வைத்து பகர் அல் கசல் எனப்படும் மற்றொரு துணையாற்றுடன் இணைகின்றது. பகர் அல் கசல், சத் சதுப்பு நிலப் பகுதில் உற்பத்தியாகும் ஒரு ஆறாகும். இதன் மொத்த நீளம் 716 கி.மீ. இவ்விறு ஆறுகள் இணைந்து, நோ ஏரியில் இருந்து வெளிப்படும் நீரானதே, பகர் அல் அபயாத் அல்லது வெள்ளை நைல் என அழைக்கப்படுகின்றது. வெள்ளை நிற களிமன் துகள்கள் இவ்வாற்றில் மிதப்பதாலேயே, இதற்கு இப்பெயர் ஏற்பட்டது

நீரோட்டம்
அகன்ற நைல் ஆற்றின் தோராய தொடக்கமான ஆல்பர்ட் நைலின் நீரோட்டம், வினாடிக்கு 1048 மீ3 ஆகும். இது ஆண்டு முழுவதுமான சீரான நீரோட்டத்தைக் கொண்டுள்ளது. இதன் பிறகான பகர் அல் யபல் ஆறு, தனது நீரின் பெரும்பகுதியை, சத் சதுப்பு நிலப் பகுதியில் இழக்கின்றது. ஏறேக்குறைய இதன் நீரோட்டத்தின் சரிபாதி இங்கு ஆவியாதல் மூலம் விரையமாவதால் இந்த ஆற்றின் முடிவில் இதன் நீரோட்டம் வினாடிக்கு 1048 மீ3ல் இருந்து 510 மீ3 ஆக குறைகின்றது.
வெள்ளை நைலின் நீரோட்டம் சராசரியாக வினாடிக்கு 924 மீ3 ஆகும். மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் இது, அதிகபட்சமாக வினாடிக்கு 1218 மீ3 வரை செல்கின்றது. குறைந்தபட்சமாக ஆகத்தில், வினாடிக்கு 609 மீ3 ஆக இருக்கின்றது. சோபாத் எனப்படும் துணையாறின் வெள்ளப் பெருக்கே, வெள்ளை நைலின் இந்த நீரோட்ட மாறுபாட்டிற்கான காரனம்.
நைல் ஆற்றின் மொத்த நீரோட்டத்தில், வெள்ளை நைலின் பங்கு சராசரியாக 30% ஆகும். ஆனால் சனவரி முதல் சூன் வரையிலான கோடைகாலத்தில் இது 70% முதல் 90% வரை அதிகரிக்கும். இந்த குறிப்பிட மாதங்களின் நீல நைலின் நீரோட்டம் வினாடிக்கு 113 மீ3க்கும் குறைவாகவே இருப்பதாலும், அத்பரா ஆறு ஏறக்குறைய வறண்டு விடுவதாலும் இந்த விகிதாச்சார ஏற்றம் நிகழ்கின்றது.
நீல நைலின் பங்கு, மொத்த நைல் நீரோட்டத்தில் சராசரியாக 70% ஆகும். ஆகத்து மாத மழைக் காலங்களில் இந்த ஆற்றில் ஏற்படும் கடும் வெள்ளப்பெருக்கே, இந்த நீரோட்ட வேறுபாட்டிற்கு காரனம். இந்த நேரங்களில் நீல நைலின் நீரோட்டம் வினாடிக்கு 5663 மீ3 ஆக இருக்கும். இது வழக்கமான நீரோட்டத்துடன் ஒப்பிடும்போது, 50% அதிகம் ஆகும். இந்த ஆற்றின் மீது அணைகள் கட்டுவதற்கு முன்பு, இதன் நீரோட்டம் இன்னும் 15% அதிகம் இருந்தது. அந்த காலங்களின் நீல நைல் அதிகபட்சமாக வினாடிக்கு 8212 மீ3 நீரோட்டத்தைக் கொண்டிருந்தது. குறைந்தபட்ச அளவு 552 மீ3.
நைல் LLjCH2EMTOylQcXuc7Xy+nile-river
நீர் பங்கீட்டு சிக்கல்
நைல் ஆற்றின் நீர் பங்கீடு, கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க கொம்பு நாடுகளின் முக்கிய அரசியல் மற்றும் கலாச்சார சிக்கல் ஆகும். உகாண்டா, சூடான், எத்தியோப்பியா, கென்யா ஆகிய நாடுகள் நைல் நீர்வளத்தை பங்கிட்டுக்கொள்வதில் உள்ள எகிப்தின் மேலாதிக்கதை எதிர்த்தவன்னம் உள்ளன. 1929ல் ஐரோப்பிய காலனியாதிக்க ஆட்சியின் கீழ் ஏற்பட்ட இங்கிலாந்து – எகிப்து உடன்படிக்கையின் படி, நைல் ஆற்றின் வடிநிலப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பிற நாடுகளின் நீர்பாசன திட்டங்களுக்கு, எகிப்து அரசின் ஒப்புதல் அவசியமாகின்றது. இது இன்றைய பிரச்சனைகளின் முக்கிய காரனி ஆகும். “நைல் ஆற்றுவடிநில முனைப்பு அமைப்பு” இந்த சிக்கலை தீர்க்க முனைந்து வருகின்றது[9].
பெப்ரவரி 1999ல் இந்த அமைப்பு எகிப்து, சூடான், எத்தியோப்பியா, உகாண்டா, கென்யா, தான்சானியா, புருண்டி, ருவாண்டா, காங்கோ ஆகிய ஒன்பது நாடுகளின் நீர்வளத்துறை அமைச்சர்களைக் கொண்டு அமைக்கப்பட்டது. எரித்திரியா இந்த அமைப்பில் வெரும் பார்வையாளராக மட்டும் உள்ளது. உலக வங்கி மற்றும் சில தன்னார்வ நிருவனங்கள் இந்த அமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றின[10].
மே 2010ல், இந்த அமைப்பில் உள்ள எத்தியோப்பியா, கென்யா, உகாண்டா, ருவாண்டா மற்றும் தான்சானியா ஆகிய ஐந்து நாடுகள் தமக்குள் இனைந்து ஒரு தீர்மானத்துக்கு வந்தன. தற்போது உள்ள நீர் பங்கீட்டு முறை சீரமைக்கப்பட வேண்டும் எனவும், 1929ல் ஏற்பட்ட இங்கிலாந்து – எகிப்து உடன்படிக்கை ரத்து செய்யப்பட வேண்டும் என்வும் இந்த தீர்மானம் வழியுறுத்துகின்றது[11]. இந்த தீர்மானத்திற்கு எகிப்து மற்றும் சூடான் ஆகிய நாடுகள் தங்களிம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன[12]. எனினும், புருண்டி இந்த தீர்மானத்தை ஆதரித்து பெப்ரவரி 2011ல் கையெழுத்திட்டுள்ளது
wikipedia

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 29, 2013 8:01 am

நைல் 103459460 
-

பார்த்தால் பரவசமூட்டும்
நைல் நதியே..
உன் அழகில்
நான் மூழ்கிப்போனேன்..

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக