புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Poll_c10'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Poll_m10'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Poll_c10 
100 Posts - 48%
heezulia
'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Poll_c10'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Poll_m10'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Poll_c10'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Poll_m10'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Poll_c10'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Poll_m10'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Poll_c10'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Poll_m10'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Poll_c10 
7 Posts - 3%
prajai
'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Poll_c10'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Poll_m10'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Poll_c10 
3 Posts - 1%
Barushree
'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Poll_c10'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Poll_m10'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Poll_c10'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Poll_m10'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Poll_c10'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Poll_m10'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Poll_c10'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Poll_m10'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Poll_c10'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Poll_m10'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Poll_c10 
227 Posts - 51%
heezulia
'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Poll_c10'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Poll_m10'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Poll_c10'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Poll_m10'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Poll_c10'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Poll_m10'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Poll_c10'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Poll_m10'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Poll_c10 
18 Posts - 4%
prajai
'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Poll_c10'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Poll_m10'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Poll_c10'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Poll_m10'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Poll_c10'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Poll_m10'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Poll_c10 
2 Posts - 0%
Barushree
'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Poll_c10'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Poll_m10'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Poll_c10'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Poll_m10'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2)


   
   

Page 1 of 2 1, 2  Next

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Mon Nov 18, 2013 10:42 am

'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2)

தொடர்-2

'பணம்

'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Panam1

'வெளி வந்த நாள்: 27.12.1952

மூலக்கதை: என்.வி.பாபு

திரைக்கதை, வசனம்: கலைஞர் மு.கருணாநிதி

இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடல்கள்: கண்ணதாசன், பாரதிதாசன்.

ஒளிப்பதிவு: மோஹன்ராவ்

தயாரிப்பு: மதராஸ் பிக்சர்ஸ்

இயக்கம்: என்.எஸ். கிருஷ்ணன்

நடிக, நடிகையர் : நடிகர் திலகம், என்.எஸ். கிருஷ்ணன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், வி.கே.ராமசாமி, தங்கவேலு, பி.ஆர்.பந்துலு, பத்மினி, டி.ஏ.மதுரம் மற்றும் பலர்.


கதை:

ஆடியபாத முதலியார் (தங்கவேலு) ஒரு பணத்தாசை பிடித்த பேய். தன் மகன் உமாபதிக்கு (சிவாஜி கணேசன்) பக்கத்து ஊர் கந்தசாமி (பி.ஆர்.பந்துலு) வைத்தியரின் மகள் ஜீவாவை (பத்மினி) திருமணம் செய்து வைக்கிறார். சீர்செனத்தி தான் எதிர்பாரத்தபடி இல்லையென்று ஜீவாவை பிறந்த வீட்டிற்கே துரத்தியும் விடுகிறார். ஜீவாவை தன்னிடமிருந்து தந்தை பிரித்து விட்டதால் ஜீவா இல்லாமல் வாடுகிறான் உமாபதி.

இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் (டி.கே.ராமச்சந்திரன்) ஜீவா வாழாவெட்டியாய் இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு அவளுக்குப் பலவகையிலும் தொல்லை கொடுக்கிறான். ஆடியபாத முதலியார் தன் மகன் உமாபதிக்கு ஜமீன்தார் சாம்பசிவம் மகள் கோமதியை (வி.சுசீலா) இரண்டாவது திருமணம் செய்து வைக்க முயலுகிறார். இதற்கு தரகர் குருநாதம் பிள்ளை (வி.கே.ராமசாமி) உடந்தையாய் இருக்கிறார். ஆனால் கோமதியோ சுந்தரம் (எஸ்.எஸ்.ராஜேந்திரன்) என்ற இளைஞனைக் காதலிக்கிறாள். ஜமீன்தாரோ இந்தக் காதலுக்கு உடன்படாமல் ஆடியபாதம் மகன் உமாபதிக்கே கோமதியை நிச்சயமும் செய்து விடுகிறார்.

இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி உமாபதி, கோமதி திருமணப் பத்திரிக்கையை ஜீவாவின் அப்பா கந்தசாமிக்கு அனுப்பி வைக்கிறான்.

தன் மருமகன் இன்னொரு கல்யாணம் செய்து கொள்ளப் போகிறானே என்று பதறி தன் மகள் ஜீவாவுடன் புறப்பட்டு கல்யாணத்தை தடுத்து நிறுத்த வருகிறார் கந்தசாமி. இதை எதிர்பார்த்த ஈஸ்வரன் தரகர் குருநாதம் பிள்ளையைத் துணைக்கு வைத்துக் கொண்டு தந்திரமாக ஜீவாவைக் கடத்தி, அவளிடமிருந்து அவள் தந்தையைப் பிரித்து, ஒரு மலை பங்களாவில் சிறை வைக்கிறான். அவளை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பல தொல்லைகள் கொடுக்கிறான்.

அதற்குள் கோமதிக்கும், உமாபதிக்கும் அவரவர்களின் தகப்பனார்கள் சொல்லை மீற இயலாத சூழ்நிலையில் கல்யாணம் வேறு நடந்து விடுகிறது. முதலிரவில் கோமதி உமாபதியிடம் இந்தக் கல்யாணத்தில் தனக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லையென்றும்,தான் சுந்தரம் என்ற வாலிபனைக் காதலித்ததையும், தன் தந்தை தனக்கு கட்டாயக் கல்யாணம் செய்து வைத்து விட்டார் என்றும் கூறி அழுகிறாள். இதைக் கேட்டு மனம் உடைந்து போன உமாபதி தனது இரண்டாவது கல்யாணமும் பொய்த்து விட்டதே என்று எண்ணி மனம் உடைந்து வீட்டை விட்டே வெளியேறி விடுகிறான். தற்கொலை முயற்சியும் செய்கிறான்.ஆனால் கோமதியின் காதலன் சுந்தரம் உமாபதியைக் காப்பாற்றி விடுகிறான். ஆனால் கோமதியின் காதலன் சுந்தரம்தான் தன்னைக் காப்பாற்றினான் என்று உமாபதிக்குத் தெரியாது.

உமாபதி தன் தவறை எண்ணி திரும்ப முதல் மனைவி ஜீவாவைத் தேடி அவள் வீட்டிற்கு செல்கிறான்.

மலைப்பங்களாவில் அடைத்து வைக்கப் பட்டிருக்கும் தன் மகள் ஜீவாவைப் பற்றி ஏதும் அறியா நிலையில் துன்புறும் கந்தசாமியைத் தனியே அழைத்து வந்து அவளை தனக்குத் திருமணம் செய்து தருமாறு வற்புறுத்துகிறான் இரக்கமில்லாத இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன். கந்தசாமி அதற்கு மறுக்கவே அவரை சுட்டுக் கொள்கிறான் ஈஸ்வரன்.

ஈஸ்வரனோடு வரும் கான்ஸ்டபிள் ஆளவந்தார் ('கொட்டாபுளி' ஜெயராமன்) ஒரு காமெரா பைத்தியம் .ஈஸ்வரன் கந்தசாமியைக் கொலை செய்வதை தன்னுடைய காமெராவினால் தற்செயலாக எதிர்பாராத விதமாக போட்டோ எடுத்து விடுகிறான். துப்பாக்கி சத்தத்தில் பயந்து போய் காமெராவை அங்கேயே போட்டு விட்டு ஓடி விடுகிறான்.

ஜீவாவை தேடி வரும் உமாபதி அந்த வழியாகப் போகும் போது வழியில் தன் மாமா கந்தசாமி பிணமாகக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறான். அப்போது அங்கு வரும் சுந்தரம் உமாபதிதான் கந்தசாமியைக் கொன்று இருக்க வேண்டும் என்று முடிவு செய்து உமாபதியை விவரமறியாமல் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரனிடமே ஒப்படைத்து விடுகிறான். விசாரணை நடைபெறுகிறது

உமாபதியைத் தேடி வரும் அவன் வீட்டு வேலையாட்கள் (என்.எஸ். கிருஷ்ணன்) அங்கே கிடக்கும் காமெராவை எடுத்துக் கொண்டு போய் பிலிமை எடுத்து டெவெலப் செய்து பார்க்கிறார்கள். அதில் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் கந்தசாமியைக் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தது பதிவாகி இருக்கிறது. அதை எடுத்துக் கொண்டு வேலையாட்கள் கோர்ட்டுக்கு ஓடி உமாபதி கொலை செய்யவில்லை என்று அந்த ஆதாரத்தைக் காண்பிக்க, உமாபதி குற்றவாளி அல்ல என்று கோர்ட் அவனை விடுதலை செய்கிறது.

இதற்கிடையில் தன் தவறை உணர்ந்த ஈஸ்வரன் கோர்ட்டிலிருந்து தப்பித்து மலைபங்களாவுக்குச் சென்று ஜீவாவிடம் மன்னிப்புக் கேட்டு அங்கேயே துப்பாக்கியால் தன்னைச் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளுகிறான். இவ்வளவு பிரச்னைகளுக்கு தன் பணத்தாசைதான் காரணம் என்று ஆடியபாத முதலியார் திருந்துகிறார். ஜீவா உமாபதி ஜோடியும், கோமதி சுந்தரம் ஜோடியும் மறுபடியும் கூடி மகிழ்ச்சியோடு வாழத் துவங்குகிறார்கள்.

சுபம்.

பணம்' படத்தில் நடிகர் திலகம்

'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Vlcsnap2011110509h57m00

நடிகர் திலகம் மற்றும் இதர கலைஞர்கள்

நடிகர் திலகத்தின் இரண்டாவது படம். முதல் படம் போல அவ்வளவு ஸ்கோப் இல்லையென்றாலும் நடிப்பில் குறையில்லை. மனைவி ஜீவாவின் மேல் காதல், அன்பு கொள்ளும் போது இளமை ரசம் சொட்டுகிறது. தந்தையின் பேராசை குணத்தை அவ்வப்போது தட்டிக் கேட்கும் போது உள்ளுக்குள் இருக்கும் சிங்கம் எட்டிப் பார்க்கிறது. தந்தையா அல்லது தாரமா என்று அடிக்கடி குழம்பித் தவிக்கும் போது பரிதாப ஓட்டுக்களை அள்ளுவார். தந்தை தங்கவேலுவிடம் இறுதியில் பணம் என்ற பேயைப் பற்றி கொடுக்கும் விரிவுரை சீற்றம். தன் மனைவிக்கு நாம் தெரியாமல் துரோகம் இழைத்து விட்டோமோ என்று தனிமையில் துன்பப்படும் போது பண்பட்ட நடிப்பு.

பத்மினிக்கு வரதட்சணைக் கொடுமையால் சித்ரவதை அனுபவிக்கும் பாத்திரம். அழுது வடிய நிறைய சான்ஸ். இன்ஸ்பெக்டர் டி.கே.ராமச்சந்திரன் காம வெறியில் தன்னை நெருங்கும் போதெல்லாம் அங்கமெல்லாம் பதற நடிப்பது அருமை. அப்பாவின் பேச்சை தலையாட்டி பொம்மை போல கேட்டு தன் வாழ்வை வீணடித்த கையாலாகாத தன் கணவனின் குணத்தை இறுதியில் சாடுவது அருமை.

பணத்தாசை பிடித்த ஆடியபாதம் ரோலை தங்கவேலு அப்படியே நம் கண் முன்னே பிரதிபலித்து பார்ப்போர் வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டிக் கொள்கிறார். (சின்ன வயசில் வயதான பாத்திரம்). இன்ஸ்பெக்டராக வரும் ராமச்சந்திரனும் வில்லன் வேலையை கன கச்சிதமாக செய்கிறார். அவர் கண்களாலேயே தான்னுடைய காம வெறியை உணர்த்தி பத்மினியை நெருங்கும் போதெலாம் பத்மினிக்கு மட்டுமல்ல...நமக்கும் 'திக் திக்' என்று இருக்கிறது.

மற்றும் வி.கே.ராமசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், கொட்டாப்புளி ஜெயராமன், பி.ஆர்.பந்துலு, வி.சுசீலா ஆகியோரும் சிறப்பாக தத்தம் பங்கைத் தந்திருக்கிறார்கள்.

என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் நகைச்சுவைக் காட்சிகளை செவ்வனே செய்து கலகலப்பூட்டுகிறார்கள். என்.எஸ்.கிருஷ்ணன் பாடும் "எங்கே தேடுவேன்...பணத்தை எங்கே தேடுவேன்" ஜனரஞ்சகப் பாடல் படு பிரசித்தம். அருமையான எந்நாளுக்கும் பொருந்தக் கூடிய கருத்துக்கள் நிறைந்த ஒரு பாடல்.

குடும்பப் பெண்களின் கடமைகள் என்ன என்பதை 'குடும்பத்தின் விளக்கு' பாடல் அருமையாக விளக்குகிறது. (இப்போதைய இளம் பெண்கள் இப்பாடலின் கருத்துக்களின்படி அவர்களை நடக்கச் சொன்னால் நம்மை அடிக்க வருவார்கள்)

பராசக்திக்குப் பிறகு கருணாநிதி சிவாஜி கூட்டணி இதிலும் தொடர்ந்தது. வசனங்கள் மிகக் கூர்மை. ஆனால் பராசக்தி பட்டை கிளப்பியதில் பாதி அளவு கூட இல்லை என்பதும் உண்மை. கதை அப்படி.

என்.எஸ்.கிருஷ்ணனும், கவிஞர் கண்ணதாசனின் அண்ணன் திரு ஏ.எல்.சீனிவாசனும் சேர்ந்து தயாரித்த படம் இது. என்.எஸ்.கிருஷ்ணனே இப்படத்தை இயக்கியும் இருந்தார். அப்போதே சமூகத்தில் நிலவிய வரதட்சணைக் கொடுமைகளையும், பெண்களுக்கு இழைக்கப் படும் அநீதிகளையும் தோலுரித்துக் காட்டியிருந்தார் அவர். இந்தப் படமும் ஓரளவிற்கு நன்றாகவே ஓடியது. அதே போல திருமணம் செய்து கொண்டாலும் தன் காதலனோடுதான் சேருவேன் உன்னுடன் இணைய மாட்டேன் என்று சொல்லும் புரட்சிப் பெண்ணாக கோமதி பாத்திரத்தை வடிவமைத்து இருந்தார் கிருஷ்ணன்.

எம்.எஸ். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்த முதல் படம் இது என்பார்கள். அதில் ஒரு சிறு சர்ச்சை உண்டு. எம்ஜியார் அவர்கள் நடித்த ஜெனோவா படம்தான் விஸ்வநாதன் அவர்கள் இசையமைத்த முதல் படம் என்பாரும் உண்டு.

'பராசக்தி' புரட்சிக் கருத்துக்களில் கொடி நாட்டிய படம். ஆனால் 'பணம்' சீர்திருத்தக் கருத்துக்களோடு சீர்வரிசைக் கொடுமைகளை சாடுகிறது.

சிறப்பு தகவல்கள்.

1. சிவாஜி பத்மினி இணைந்த முதல் படம் இது.

2. சிவாஜி, என்.எஸ்.கிருஷ்ணன் இணைந்த முதல் படம் இது.

3. கலைஞர் கருணாநிதி சிவாஜிக்கு வசனம் எழுதிய இரண்டாவது படம்.

4. எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் இசை அமைத்த முதல் படம்.

5. சிவாஜியை வைத்து என்.எஸ். கிருஷ்ணன் இயக்கிய ஒரே படம்.

6. என்.எஸ். கிருஷ்ணன் திராவிட முன்னேற்றக் கழக புகழைப் பரப்பும் வகையில் 'தினா முனா கனா' என்ற பாடலைப் பாட, அதற்கு அப்போதைய சென்சார் போர்டு தடை விதிக்க, அதை மிக சாமர்த்தியமாக 'திருக்குறள் முன்னணி கழகம்' என மாற்றி விட்டார்கள். (என்ன ஒரு சாமர்த்தியம்)

சரி! நம் கதாநாயகன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இப்படத்தைப் பற்றி என்ன சொல்கிறார்?

'பணம்' எனக்கு நிறைய பணம் கொடுத்தது.

தினத்தந்தி' நாளிதழில் 'பணம்' பற்றி வந்த கட்டுரையை சேமித்து வைத்திருந்தேன். அதை இப்போது உங்கள் எல்லோருக்கும் பார்வையாகத் தருகிறேன்.

'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) 3-17
'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) 2-23

ஈகரையில் 'பராசக்தி'யை ஆராதித்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றி!நன்றி!

வழக்கம் போல தங்கள் அனைவரது கருத்துக்களையும் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

நன்றி!

இந்தக் கட்டுரைத் தொடர் முழுதும் என் சொந்தப் படைப்பே.

('சிவாஜி என்ற மாநடிகர்' தொடருவார்.).


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 18, 2013 11:56 am

'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) 103459460 

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 18, 2013 1:53 pm

அனைவருமே நடிப்பில் சிவாஜிதான்...(அவ்வப்போது
வெளிப்படுத்தும் நடிப்பில்)
-
சூடறியாமல் ஆஃப்பாயிலை வாயில் போட்டு
கண்கலங்கி சிரித்த நண்பனிடம் சிவாஜியைக்
கண்டேன்...!

-

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Mon Nov 18, 2013 2:02 pm

உண்மை அய்யாசாமி அய்யா! சிவாஜி தூணிலும் இருப்பார். துரும்பிலும் இருப்பார். உங்கள் பதிவை ரசித்து படித்து சிரித்து சுவைத்தேன்.

தமிழ்செல்விஞானப்பிரகசம்
தமிழ்செல்விஞானப்பிரகசம்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 29/07/2013

Postதமிழ்செல்விஞானப்பிரகசம் Mon Nov 18, 2013 2:55 pm

இத் தொடரை சுவைபட கொடுக்க தாங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எனது பாராட்டுகள்.

சொல்லுக சொல்லைப் பிறிதோர்ச்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை யறிந்து.
இல.தமிழ்ச்செல்விஞானப்பிரகாசம் ஈரோடு.
http://www.rgp.myehome.in/

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 18, 2013 8:04 pm

அருமையான திரி புன்னகை தொடருங்கள் !

ஒரு சின்ன சஜிஷன் ஐயா, நீங்கள் ஒரே திரியாக போட்டால் நல்லா இருக்கும் என்று நினைக்கிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Mon Nov 18, 2013 8:06 pm

'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) 3838410834

கிருஷ்ணம்மா சொல்வதும் சரி தான்  

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Mon Nov 18, 2013 10:43 pm

வாசு சார்
பணம் திரைப்படத்தின் ஆய்வும் தகவல்களும் மிகவும் சுவையாகத் தரப் பட்டுள்ளன. தங்கள் எழுத்து வன்மை சிறந்து விளங்குகிறது. பாராட்டுக்கள்.

முறைப்படி விஸ்வநாதன்-ராம மூர்த்தி இருவரும் இணைந்து இசையமைத்த முதல் திரைப்படம் பணம் தான். ஜெனோவா திரைப்படத்தில் சில பாடல்களும் சில காட்சிகளுக்குப் பின்னணி இசையும் மட்டுமே விஸ்வநாதன் அமைத்திருந்தார் என கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் டைட்டில் கார்டில் இசை விஸ்வநாதன்-ராம மூர்த்தி என்று வந்த முதல் படம் பணம் தான்.

27.12.1952 அன்று தமிழகமெங்கும் வெளியானாலும் சென்னை நகரில் 01.01.1953 அன்று தான் வெளியானது.

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Mon Nov 18, 2013 10:44 pm

நண்பர்களே,
வாசு சார் நடிகர் திலகத்தின் அத்தனை படங்களையும் அலச உத்தேசித்துள்ளதாக அறிகிறேன். ஒவ்வொரு படமும் தனித்தனியாக இங்கிருந்தால் அதனைப் பின்னாளில் தேடாமல் சுலபமாக அறிந்து படிக்க உதவும். இது என்னுடைய தனிப்பட்ட கருத்தாகும்.
மிக்க நன்றி

jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Thu Nov 28, 2013 7:34 pm

செய்நன்றி என்பது என்னவென்று NT இடம் தான் கற்று கொள்ள வேண்டும் - அப்படிப்பட்ட மாமனிதரை இந்த தமிழகம் மறந்து விட்டதே - நடிப்பை தவிர இவர் என்ன செய்துவிட்டார் என்று ஒருவர் இங்கே கேள்வி எழுப்புகிறார் . நீங்கள் அவருக்கும் தக்க பதிலை தருவீர்கள் என நம்புகிறேன்

'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) 1571444738 
Ravi

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக