புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

விழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்)


   
   

Page 1 of 2 1, 2  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Nov 16, 2013 3:33 pm

என்னுடையது என்று நினைத்துத்தான்
இதுவரையில் வளர்த்து வந்தேன்.
ஆனால்
முதல்முறை உன்னைப் பார்த்ததுமே
பழக்கப்பட்டவர் பின்னால் ஓடும் நாய்க்குட்டி மாதிரி
உன் பின்னால் ஓடுகிறதே
இந்த மனசு.
*********************************
சற்றுமுன் நீ நடந்துபோன
தடயம் எதுவுமின்றி
அமைதியாய்க் கிடக்கிறது வீதி.

எனினும்
அதிகவேக ரயிலொன்று
கடந்துபோன தண்டவாளம் போல
இன்னும் அதிர்கிறது
என் இதயம்.
*********************************
சூரியன் வந்த பிறகுதான்
நீ வருகிறாய் என்றாலும்
நீ வரும்போதுதான்
விழிக்கிறது இந்த வீதி.

*********************************
இந்த மலையைக் குடைந்து
ரயில்பாதை அமைத்தவனுக்காவது தெரியுமா
உன் கல்மனசுக்குள்
நுழைவது எப்படி என்பது.

*********************************
என்னை நல்லவன் என்று
நினைத்துக் கொண்டிருந்தேன்.
அந்த நினைப்பில்
மண் அள்ளிப் போட்டுவிடும் போலிருக்கிறது
உன் மீதான காதல்.
உன் வீட்டுமுன் காய்ந்து கொண்டிருக்கும்
உனது ஆடையைத் திருடி வரச்சொல்லி
நச்சரிக்கிறதே மனசு.

*********************************
எனது அறையின் தினசரி காலண்டர்கூட
கேலி பேசுகிறது என்னை.
முதல் நாள் உன்னைப் பார்த்திருந்தால்
அந்தத் தேதியை மிகமெதுவாகக் கிழிக்கிறேனாம்.
பார்க்கவில்லையெனில்
பிய்த்துக் கசக்கி எறிகிறேனாம்.

*********************************
உன்னைக் கேலி பேசுபவனையெல்லாம்
முறைத்துப் பார்க்கிறாய்
உன்னை நேசிக்கிற என்னை மட்டும்
சாதாரணமாகக்கூட பார்க்க மறுக்கிறாயே.

*********************************
எப்போதும்
சுரிதாரிலேயே பார்த்த உன்னை
முதல்முறை சேலையில் பார்த்தபோது
. . .
அய்யோ அந்த சேலை
உன்னைக் கட்டிக்கொண்டிருக்கிறதே.

*********************************
உனது
சுரிதாரின் துப்பட்டாவும்
சேலையின் மாராப்பும்
விலகும் போதெல்லாம்
சரிசெய்து விடுகிற
வேலைக்காரனாய் என்னை சேர்த்துக்கொள்ளேன்.
நீயோ
சூரிய வெளிச்சம் முகத்தில் படாமலிருக்க
புத்தகத்தால் உன் முகத்தை
மறைத்துக் கொள்கிறாய்.
சூரியனோ
உன்னைப் பார்க்க முடியாத கோபத்தில்
எல்லோரையும் சுட்டெரித்துக்கொண்டிருக்கிறது.

*********************************
பயணம் முடிந்ததும்
நீ வீசிவிட்டுப்போன பயணச்சீட்டு
வீதியில் கிடந்து புலம்பிக் கொண்டிருந்தது
பயணம் முடிந்துவிட்டதை நினைத்து.

*********************************
எல்லா பெண்களும்
உதட்டை அழகாய்க் காட்டுவதற்காக
லிப்ஸ்டிக் பூசிக்கொள்கிறார்கள்.
நீ மட்டும்தான்
உதட்டின் அழகை மறைத்துக்கொள்வதற்காக
லிப்ஸ்டிக் பூசிக்கொள்கிறாய்.

*********************************
துடிப்பதைவிட
உன்னை நினைப்பதற்கே
நேரம் சரியாக இருக்கிறது
என் இதயத்திற்கு

*********************************
புவியின் ஈர்ப்பு விசையில்
எப்போதாவது தவறி விழுந்திருக்கிறேன்.
உனது விழியின் ஈர்ப்பு விசையில்
எப்போதும் தவறாமல் விழுந்துகொண்டிருக்கிறேன்.

*********************************
முதல் முறை
உனது வீட்டிற்கு வந்தபோது
நான் பார்த்து ஆச்சர்யப்பட்டது
உனது அரையிலிருக்கும்
ஆளுயரக் கண்ணாடியைத்தான்
“ஏன்?”
இத்தனை நாட்களாய்
உன் அழகையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தும்
விரிசல் எதுவும் விழாமல்
அப்படியே இருக்கிறதே!

*********************************
உன்னை ஏன்
இப்படிக் காதலித்துக் தொலைக்கிறேன்
அடிக்கிற அம்மாவின்
கால்களையே கட்டிக்கொண்டு
அழுகிற குழந்தை மாதிரி

**********************************
எனது இரண்டு தோள்களுக்கும் இடையே
பெரும் சண்டை நடக்கிறது உன்னால்
“என்னாலா . . . என்ன சண்டை?”
எனது எந்தத் தோளில்
நீ முதலில் சாய்வாய்
என்கிற பந்தயச் சண்டை

*********************************
தொலைபேசியில் எல்லாம்
நீ எனக்கு முத்தம் தராதே
அது உன் முத்தத்தை எடுத்துக் கொண்டு
வெறும் சத்தத்தை மட்டுமே
எனக்குத் தருகிறது.

*********************************
சிறுமியைப்போல்
கடல் அலையில் கால் நனைத்து
விளையாடிக்கொண்டிருந்தாய்
கடலோ
கொந்தளித்துக்கொண்டிருந்தது.

*********************************
ஏற்கனவே பூத்த பூதான்
எனினும்
நீ சூடும்போது
மறுபடியும் பூக்கிறதே!

*********************************
கும்பலில் எல்லாம்
நீ போகாதே . . .
யார் யாரோ மிதிக்கிறார்கள்
உன் நிழலை.

*********************************
நான்
கிள்ளிய இடத்தில்
ரத்தம் கட்டிவிட்டது
என்று புலம்புகிறாயே . . .
முட்டாள் . . . நன்றாகப் பார்
கட்டியிருப்பது
ரத்தமா
காதலா என்று




விழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Mவிழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Aவிழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Dவிழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Hவிழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) U



விழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Nov 16, 2013 3:35 pm

குளித்துவிட்டு வந்த நீ
அறையில் என்னைப் பார்த்ததும்
“நான் ஆடை மாற்ற வேண்டும்.
ஹாலுக்குப் போ” என்றாய்
நான் எழுந்து நடக்கையில் . . .
“போன்னு சொன்னா போயிடறதா” என்று முனகினாய்
அட நீயும் காதலிக்கக் கற்றுக் கொண்டாயே!

*********************************
உனது ஆடையையும்
எனது ஆடையையும்
அருகருகே காயவைத்திருக்கிறாயே
இரண்டும்
காய்வதை விட்டுவிட்டு
விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்

*********************************
எல்லா கவிதைகளுமே
உன்னைப் பற்றியவைதாம் எனினும்
ஒரு கவிதைகூட
உன்னை மாதிரி இல்லையே
*******************************
தபூ சங்கர்




விழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Mவிழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Aவிழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Dவிழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Hவிழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) U



விழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) 0bd6
Cry with someone. its more than crying alone..................!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Nov 16, 2013 3:39 pm

எல்லா கவிதைகளுமே
உன்னைப் பற்றியவைதாம் எனினும்
ஒரு கவிதைகூட
உன்னை மாதிரி இல்லையே

தபூ சங்கரின் முத்திரை இதுதான்.

அற்புதமான காதல் கவிகளுக்கு சொந்தக்காரர். காதல் பிறந்திருக்கிறது இனிப்பு எடுத்துக்கொள்ளுங்கள் என்ற பதிவில்தான் தான் காதலித்தது உண்மை என்று சொன்னவர்.

M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Nov 16, 2013 3:47 pm

M.M.SENTHIL wrote:
எல்லா கவிதைகளுமே
உன்னைப் பற்றியவைதாம் எனினும்
ஒரு கவிதைகூட
உன்னை மாதிரி இல்லையே

தபூ சங்கரின் முத்திரை இதுதான்.

அற்புதமான காதல் கவிகளுக்கு சொந்தக்காரர். காதல் பிறந்திருக்கிறது இனிப்பு எடுத்துக்கொள்ளுங்கள் என்ற பதிவில்தான் தான் காதலித்தது உண்மை என்று சொன்னவர்.
உண்மை உண்மை ......

ஆனால் அது puppy love



விழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Mவிழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Aவிழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Dவிழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Hவிழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) U



விழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) 0bd6
Cry with someone. its more than crying alone..................!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Nov 16, 2013 3:49 pm

உண்மை உண்மை ......

ஆனால் அது puppy love


அதுவே அவரை இந்த அளவிற்கு கவிதை எழுத துண்டியதே அதற்கு ஒரு சலாம் போடுவோம்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Nov 16, 2013 3:52 pm

காதலுக்கும்
தெரிவதில்லை
காதலிப்பவர்களுக்கும்
தெரிவதில்லை
காதல் கொடூரமான
சொர்க்கம் என்று....!



விழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Mவிழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Aவிழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Dவிழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Hவிழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) U



விழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) 0bd6
Cry with someone. its more than crying alone..................!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Nov 16, 2013 3:55 pm

மதுமிதா wrote:காதலுக்கும்
தெரிவதில்லை
காதலிப்பவர்களுக்கும்
தெரிவதில்லை
காதல் கொடூரமான
சொர்க்கம் என்று....!

காதல் என்பது
கத்தி முனை பயணம்
கரணம் தப்பினால் மரணம்




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Nov 16, 2013 3:57 pm

M.M.SENTHIL wrote:
மதுமிதா wrote:காதலுக்கும்
தெரிவதில்லை
காதலிப்பவர்களுக்கும்
தெரிவதில்லை
காதல் கொடூரமான
சொர்க்கம் என்று....!

காதல் என்பது
கத்தி முனை பயணம்
கரணம் தப்பினால் மரணம்
வேறெந்த இன்பத்தை
விடவும்
இன்பமானது.....
காதல் துன்பம்...



விழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Mவிழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Aவிழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Dவிழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) Hவிழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) U



விழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்) 0bd6
Cry with someone. its more than crying alone..................!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Nov 16, 2013 3:59 pm

வேறெந்த இன்பத்தை
விடவும்
இன்பமானது.....
காதல் துன்பம்...

கண்களை மூடிக்கொண்டு
கண்ணின் மேல் மழைத்துளியை
வாங்குவது போலத்தான் காதலும்
வலிக்கும் - பின் இனிக்கும் !!



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sat Nov 16, 2013 4:30 pm

இன்னும் ஒன்று தெரியுமா ?
அவரின் காதலை அனுபவிக்கத் தெரியாத அந்தப் பெண்
நிச்சயமாக துர்பாக்கியசாலி ...!
இதனை முன்பொருமுறை சொல்லியிருக்கிறேன்.



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக