by ayyasamy ram Today at 7:07
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 6:56
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 6:54
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 2:07
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 0:56
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:42
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:14
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 22:45
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 22:29
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:30
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 21:24
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 21:21
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 21:20
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 21:19
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 21:19
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 21:18
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 21:18
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 21:16
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:09
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:54
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 18:31
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:08
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 16:23
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 13:02
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:57
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 11:16
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 11:16
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 11:15
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 11:14
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon 4 Nov 2024 - 17:51
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 13:37
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:31
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:25
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:23
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:21
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
உலகச் செய்திகள்!
Page 79 of 81 • 1 ... 41 ... 78, 79, 80, 81
தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி
ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
நைஜீரியாவில் கச்சா எண்ணெய் குழாயில் பயங்கர தீ விபத்து: 12 பேர் பலி
அபுசா: நைஜீரியாவில் கச்சா எண்ணெய் குழாயிலிருந்து, கச்சா எண்ணெய் திருட முயன்ற போது பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியாவில் கச்சா எண்ணெய் திருட்டு சம்பவம் தொடர்ச்சியாக நடந்து வந்ததாக தெரிகிறது. அதேபோல் கச்சா எண்ணெய் குழாயில் இருந்து மர்மநபர்கள் சட்டவிரோதமாக திருடி வெளி சந்தையில் விற்பனை செய்து வந்தனர்.
இந்நிலையில், நைஜர் டெல்டா மகாணம் மைஹா நகர் வழியாக செல்லும் கச்சா எண்ணெய் குழாயில் மர்மநபர்கள் சட்ட விரோதமாக கச்சா எண்ணெய் திருட முயற்சித்தனர். இதில் எதிர்பாராதவிதமாக கச்சா எண்ணெய் குழாயில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதில் 12 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
சோமாலியா: பாதுகாப்புப் படை-ஆயுதக் குழு மோதலில் 145 போ் பலி
சோமாலியாவில் தனி நாடாக செயல்பட்டு வரும் சோமாலிலாண்ட் பகுதியில் அரசுக்கு எதிரான அமைப்புக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வரும் மோதலில் 145 போ் உயிரிழந்ததாக அந்தப் பகுதி பொது மருத்துவமனை அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
‘ஆப்பிரிக்காவின் கொம்பு’ என்றழைக்கப்படும் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சோமாலிலாண்ட் பகுதி பிரிட்டன் ஆதிக்கத்தின் கீழும், அதன் தெற்கே அமைந்துள்ள எஞ்சிய சோமாலிய பகுதி இத்தாலி காலனி ஆதிக்கத்திலும் இருந்து வந்தது.
பின்னா் 1960-ஆம் ஆண்டில் பிரிட்டீஷ் சோமாலிலாண்டுக்கு விடுதலை அளிக்கப்பட்டது. அப்போது அந்த நாட்டை உலக நாடுகள் அங்கீகரித்தன. 4 நாள்கள் கழித்து இத்தாலிய சோமாலிய பகுதியும் சுதந்திரம் பெற்றது. பின்னா் நடைபெற்ற பொதுவாக்கெடுப்பின் கீழ், இரு பகுதிகளும் இணைக்கப்பட்டு 1961-இல் சோமாலியா உருவாக்கப்பட்டது. அப்போது அந்தப் பிராந்தியத்தில் சோமாலிய தேசியவாத அலை வீசியதாகக் கூறப்படுகிறது.
எனினும், நாளடைவில் பெரும்பான்மை தென் நாட்டவா்கள் வடக்குப் பகுதி சோமாலிலாண்டில் தங்கள் ஆதிக்கத்தை விரிவுபடுத்தினா். அதனைத் தொடா்ந்து, அங்கு உள்நாட்டுப் போா் மூண்டது.
இதில், வடக்கு சோமாலியாவின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றிய கிளா்ச்சியாளா்கள், அந்தப் பகுதியை சோமாலிலாண்ட் என்ற தனி நாடாக அறிவித்தனா். எனினும், அந்தப் பகுதியை தனி நாடாக சா்வதேச நாடுகள் இதுவரை அங்கீகரிக்கவில்லை.
இந்தச் சூழலில், சோமாலிலாண்டை சோமாலியாவுடன் இணைக்க வேண்டும் என்று ஒரு தரப்பினா் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அந்தக் குழுவினருக்கும், சோமாலிலாண்ட் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் கடந்த 2 மாதங்களாக தீவிரமாகியுள்ளது.
இதில் சுமாா் 145 போ் பலியானதாக சோமாலிலாண்ட் பகுதியைச் சோ்ந்த லாஸ் ஆனாட் நகர பொது மருத்துவமனை அதிகாரிகள் தற்போது தெரிவித்துள்ளனா்.
இந்த மோதலில் இதுவரை 1,080 போ் காயமடைந்துள்ளதாகவும், ஒரு லட்சத்துக்கு மேற்பட்டவா்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி தவித்து வருவதாகவும் அவா்கள் கூறினா்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
வங்கதேசத்தில் ரோஹிங்கியா அகதிகள் முகாமில் பெரும் தீ: 12 ஆயிரம் பேர் வீடின்றி தவிப்பு
டாக்கா: வங்கதேசத்தில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து 2 ஆயிரம் வீடுகள் எரிந்து நாசமாயின. 12 ஆயிரம் பேர் வீடுகளின்றி தவித்து வருகின்றனர்.
வங்கதேசத்தில் மியான்மரில் இருந்து வெளியேறிய லட்சக்கணக்கான #ரோஹிங்கியா அகதிகள், வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் நகரில் உள்ள மிகப்பெரிய முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாமில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அச்சமடைந்த அங்குள்ள மக்கள், வீடுகளை விட்டு வெளியேறினர்.
தீ மளமளவென முகாம் முழுவதும் பரவியது. இதில் 3 ஆயிரம் வீடுகளும், ஒரு ஆரம்ப சுகாதார நிலையமும் தீக்கிரையாகின. கரும்புகை மூட்டம் சூழ்ந்திருக்க, அங்கிருந்து வெளியேறிய மக்கள் சுமார் 12 ஆயிரம் பேர் வீடுகளின்றி வெளியிடத்தில் தங்கியுள்ளனர்.
இந்த தீ விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
இந்தோனேஷியாவில் தொடர்மழை 11 பேர் பலி...50 பேரைக் காணவில்லை
துருக்கி, சிரியாவை அடுத்து, இந்தோனேஷியாவில் சமீபத்தில் நிலநடுக்கம் வந்து மக்களை அச்சுறுத்திய நிலையில், சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால், வெளிப்புறத் தீவுகளிலும் கடுமையான நிலச்சரிவுகள் ஏற்பட்டு, அங்குள்ள மக்கள் வசிக்கும் வீடுகளும் தரைமட்டமாகியுள்ளன.
நிலச்சரிவில், அடித்துச் செல்லப்பட சேறுகளினால் பல வீடுகள் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
ரியாவு தீவில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சிக்கி சுமார் 11 பேர் பலியானதாகவும், இதுவரை 50 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீட்புப் பணிகள் நடந்து வந்தாலும், அங்கு வானிலை சீராக இல்லாததாலும் இதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், பணியை விரைவுபடுத்தி, மக்களை மீட்பதற்காக தேசிய பேரிடர் பாதுகாப்பு அமைப்பு நாளை ஹெலிகாப்டரை அனுப்பவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதேபோல், மலேசியாவிலும் தொடர் மழையால், சுமார் 41 ஆயிரம் பேர் ஆபத்தான இடங்களைவிட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்கு ஏற்பட்ட வெள்ளத்தில் 4 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
விவாகரத்தை தடை செய்த தாலிபான்!
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி நடந்து வரும் நிலையில் பெண்கள் இதுவரை மேற்கொண்ட விவாகரத்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானில் தாலிபான் அமைப்பின் ஆட்சி நடந்து வரும் நிலையில் பெண்களுக்கு எதிரான கடுமையான சட்டங்கள் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகின்றன. பெண்கள் ஹிஜாப் அணியாமல் வெளியே செல்லக்கூடாது, தங்கள் குடும்பத்தை சேர்ந்த ஆண்களின் துணை இல்லாமல் விமான நிலையம், திரையரங்கு, பூங்கா உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்லக்கூடாது, கார் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டக் கூடாது உள்ளிட்ட பல சட்டங்களை பெண்களுக்கு எதிராக தாலிபான் அமைப்பு விதித்துள்ளது.
இந்நிலையில் தற்போது கடந்த ஆட்சியில் பெண்களுக்கு வழங்கப்பட்ட விவாகரத்துகளை ரத்து செய்து அறிவித்துள்ளது தாலிபான். எனவே கணவனிடம் விவாகரத்து பெற்ற பெண்கள் தற்போது மீண்டும் அந்த கணவனோடே சேர்ந்து வாழ வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் இனி பெண்கள் விவாகரத்து செய்ய அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கணவர் மதுவுக்கு அடிமையாகி இருந்தாலோ, வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றிருந்தாலோ மட்டுமே விவாகரத்து செல்லுபடியாகும் என கூறப்பட்டுள்ளது ஆப்கன் பெண்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஈரானில் 5 ஆயிரம் மாணவிகளுக்கு விஷம்; பெற்றோருக்கும் தொடர்பு
ஈரானில் 5 ஆயிரம் பள்ளி மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் இரக்கமின்றி விசாரணை நடத்துங்கள் என அந்நாட்டு தலைவர் காமினேனி உத்தரவிட்டு உள்ளார். |
ஈரான் நாட்டில் கடந்த ஆண்டு ஹிஜாப் விவகாரத்தில் போலீஸ் காவலில் மாஷா அமினி என்ற இளம்பெண் உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வன்முறையாக பரவியது.
இந்நிலையில், அதற்கு அடுத்த ஒரு மாதத்தில் கடந்த நவம்பரில் பள்ளிக்கு சென்ற மாணவ மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம் பரவலாக நடந்த அதிர்ச்சி தகவல் வெளிவந்து உள்ளது.
ஷியா பிரிவு முஸ்லிம்களின் நகரான குவாம் நகரில் நவம்பரில் தொடங்கிய இந்த நிகழ்வு ஈரானில் உள்ள 31 மாகாணங்களில் 25 மாகாணங்கள் வரை பரவியுள்ளது.
இதுபற்றி அந்நாட்டு விசாரணை அமைப்புகள் நேற்று வெளியிட்ட செய்தியில், 5 ஆயிரம் மாணவ மாணவிகளுக்கு மர்ம முறையில் விஷம் கொடுக்கப்பட்டு பாதிப்பு ஏற்படுத்திய சம்பவத்தில் முதன்முறையாக கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன என தெரிவித்தது.
ஈரானின் தலைவர் அயோத்துல்லா அலி காமினேனி, சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்ததுடன், மன்னிக்க முடியாத குற்றம் என்றும் இரக்கமின்றி விசாரணை நடத்துங்கள் என்றும் உத்தரவிட்ட நிலையில், கைது நடவடிக்கை தொடர்ந்து உள்ளது.
இதனால், குஜிஸ்தான், மேற்கு அஜர்பைஜான், பார்ஸ், கெர்மான்ஷா, கோரசன் மற்றும் அல்போர்ஜ் என 6 மாகாணங்களில் சந்தேகத்திற்குரிய பல நபர்கள் பிடிபட்டு உள்ளனர். அவர்கள் தீங்கு ஏற்படுத்தும் பொருட்களின் உற்பத்தியில் ஈடுபட்டு உள்ளனர் என கூறப்படுகிறது. அவர்களில் ஒருவர் மாணவியின் பெற்றோர் என உள்துறை அமைச்சகம் அதிர்ச்சி தெரிவிக்கின்றது.
இந்த மாணவிகள் வயிற்றுவலி, தலைவலி, வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம் போன்வற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பள்ளி வளாகங்களில் விரும்பத்தகாத மணம் வீசியுள்ளது. அதன் பின்னரே இதுபோன்ற பாதிப்பு அவர்களுக்கு ஏற்பட்டு உள்ளது.
நாடாளுமன்ற உண்மை கண்டறியும் குழு உறுப்பினரான முகமது ஹாசன் அசாபாரி கூறும்போது, 230 பள்ளிகளை சேர்ந்த 5 ஆயிரம் மாணவ மாணவிகளுக்கு விஷம் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது என செய்தி நிறுவனத்திடம் தெரிவித்து உள்ளார்.
இதில் அதிர்ச்சி அளிக்கும் வகையில், சர்ச்சைக்குரிய பொருளை பெற்றோர், தங்களது குழந்தைக்கு கொடுத்து பள்ளிக்கு அனுப்பி வைத்து, அதனால் பாதிக்கப்படும் பிற மாணவிகளை வீடியோ எடுத்து தங்களுக்கு அனுப்பும்படி செய்து உள்ளனர்.
இதனால், அச்சுறுத்தலை ஏற்படுத்தி பள்ளிகளை மூட திட்டமிட்டு உள்ளனர் என உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 3 பேருக்கு எதிராக, சமீபத்திய அமினி விவகாரத்தில் ஏற்பட்ட கலகம் உள்பட பல்வேறு குற்ற பதிவுகள் உள்ளன என்றும் தெரிவித்து உள்ளது.
இந்த விஷ பொருள் வாயுவாக இருக்க வேண்டிய அவசியமில்லை. பொடி அல்லது பசை வடிவில் அல்லது திரவ பொருளாக இருக்க கூடும். அவை ஹீட்டரில் ஊற்றி வெப்பப்படுத்தும்போது, சிக்கல்களை ஏற்படுத்தி இருக்க கூடும் என கூறப்படுகிறது. மருத்துவ பரிசோதனையில் மாணவிகளின் உடலில் விஷம் பரவி இருந்தது தெரிந்தது. தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெண் கல்விக்கு எதிரான திட்டமிட்ட சதி முயற்சியாக இருக்க கூடும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
பள்ளி மாணவிகள் ஹிஜாப் அணிவது கட்டாயம் என பாகிஸ்தான் அரசு உத்தரவு
ஆப்கானிஸ்தானில் #ஹிஜாப் அணிவதற்கு எதிராக பெண்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் பாகிஸ்தானிலும் பள்ளி மாணவிகள் கண்டிப்பாக ஹிஜாப் அணிய வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டு உள்ளது.
#பாகிஸ்தான் ஆப்கிரமிப்பு காஷ்மீரில் பள்ளி மாணவிகள் ஹிஜாப் அணிய வேண்டும் என்றும் ஹிஜாப் அணியாத மாணவிகள் மீது கல்வி நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அரசின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது
கடுமையான நிதி நெருக்கடி, மருந்து பற்றாக்குறை, உணவு பற்றாக்குறை ஆகிய அடிப்படை தேவைகளுக்கு போராடும் சூழ்நிலையில் இப்படி ஒரு சட்டம் தேவையா என அந்நாட்டின் பெண்கள் அமைப்பு கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. |
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சியாளர்களை பாகிஸ்தான் அரசும் பின்பற்றுகிறதா என்றும் மகளிர் அமைப்புகள் கேள்வி எழுப்பி உள்ளனர். இருப்பினும் பாகிஸ்தான் அரசு ஹிஜாப் அணிவதை கட்டாயம் ஆக்குவதில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.
ஆப்கன் மாகாண ஆளுநர் சுட்டுக் கொலை!
ஆப்கானிஸ்தானின் வடக்கு பால்க் மாகாணத்தின் ஆளுநர் ஹஜ்ஜி முல்லா முகமது தாவூர் மஸாமில் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மாசர்-இ-ஷெரிப் நகரில் உள்ள அவரது அலுவலகத்தைக் குறிவைத்து வியாழக்கிழமை நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டதாக காபூலில் உள்ள தலிபான்களால் நடத்தப்படும் அரசு செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.
அவர் மேலும் கூறுகையில்,
இஸ்லாத்தின் எதிரிகளால் திட்டமிடப்பட்டிருந்த குண்டுவெடிப்பில் ஆப்கன் மாகாண ஆளுநர் ஹஜ்ஜி முல்லா கொல்லப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று சுட்டுரை பதிவில் தெரிவித்தார்.
இன்று காலை 9.27 மணியளவில் மசாமிலின் அலுவலகத்தின் இரண்டாவது தளத்தில் தற்கொலைபடையினர் ஒருவர் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தியுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் பொதுமக்கள் உள்பட இரண்டு பேர் காயமடைந்தனர்.
2021ல் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை ஏற்றுக்கொண்ட பிறகு, முதல்முறையாக உயரதிகாரி ஒருவர் குறிவைத்துத் தாக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு குழுவோ அல்லது தனிநபரோ பொறுப்பேற்கவில்லை என்று அவர் கூறினார்.
இந்தோனேசியாவில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு!
இந்தோனேசியாவின் ரியாவ் தீவுகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 33 பேர் மாயமாகியுள்ளனர்.
இதுகுறித்து பேரிடர் முகமை அதிகாரி கூறுகையில்,
மார்ச் 6-ம் தேதி இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இயற்கைப் பேரிடரில் சிக்கியவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகின்றது. சம்பவ இடத்தில் மீட்புக் குழுவினர் கனரக வாகனங்கள் உதவியோடு தேடி வருகின்றனர்.
மொத்தம் இதுவரை 25 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. அவர்களில் 21 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தேடுதல் பணி நடைபெற்று வருவதையடுத்து, பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
கடந்த திங்களன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 1300 பேர் தங்கள் வீடுகளை இழந்து வெளியேறியுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது என்று அவர் கூறினார்.
- Sponsored content
Page 79 of 81 • 1 ... 41 ... 78, 79, 80, 81
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்