புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 78 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 78 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 78 Poll_c10 
32 Posts - 42%
heezulia
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 78 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 78 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 78 Poll_c10 
32 Posts - 42%
prajai
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 78 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 78 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 78 Poll_c10 
2 Posts - 3%
Manimegala
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 78 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 78 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 78 Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 78 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 78 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 78 Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 78 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 78 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 78 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 78 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 78 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 78 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 78 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 78 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 78 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 78 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 78 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 78 Poll_c10 
1 Post - 1%
jothi64
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 78 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 78 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 78 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 78 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 78 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 78 Poll_c10 
398 Posts - 49%
heezulia
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 78 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 78 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 78 Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 78 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 78 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 78 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 78 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 78 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 78 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 78 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 78 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 78 Poll_c10 
26 Posts - 3%
prajai
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 78 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 78 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 78 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 78 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 78 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 78 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 78 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 78 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 78 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 78 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 78 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 78 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 78 Poll_c10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 78 Poll_m10பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 78 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!


   
   

Page 78 of 81 Previous  1 ... 40 ... 77, 78, 79, 80, 81  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 78 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 21, 2023 9:11 pm

‘போரைத் தொடங்கியது அவர்கள்தான்’: புதின் உரை



பாகிஸ்தான் - உலகச் செய்திகள்!  - Page 78 Fpe8ktiXoAAwe6Y

நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஷிய நாடாளுமன்றத்தில் அந்நாட்டு அதிபர் விளாதிமீா் புதின் இன்று உரையாற்றினார்.

கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரலில் கடைசியாக ரஷிய நாடாளுமன்றத்தில் புதின் உரையாற்றிய நிலையில், சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று உரையாற்றினார்.

ரஷிய அதிபர் புதின் பேசியதாவது, “நான் மீண்டும் சொல்ல விரும்புகிறேன், போரைத் தொடங்கியது அவர்கள்தான். போரை நிறுத்துவதற்காகவே நாங்கள் பலத்தை பயன்படுத்துகிறோம். அமைதியான முறையில் தீர்வு காண எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால், எங்கள் முதுகுக்கு பின்னால் வேறு விதமான சதித்திட்டம் தீட்டப்படுகிறது.

ரஷியாவுக்கு எதிராக உக்ரைனை பகடைக்காயாக மேற்கத்திய நாடுகள் பயன்படுத்துகிறார்கள். உக்ரைன் போருக்கு மேற்கத்திய நாடுகள்தான் முழுப் பொறுப்பாகும்.

உள்ளூர் மோதலை உலகளவில் வளர்க்க மேற்கத்திய நாடுகள் விரும்புகிறார்கள். அதற்கேற்ப நாங்கள் சரியான முறையில் பதிலளிப்போம்” எனத் தெரிவித்தார்.

உக்ரைன் நாட்டின் மீது ரஷிய ராணுவம் போர் தொடுத்து வருகின்ற வெள்ளிக்கிழமையுடன் ஓராண்டு நிறைவு பெறுகின்றது.

முன்னதாக, உக்ரைன் நாட்டிற்கு நேற்று எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன், 500 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்குவதாக அறிவித்தார்.

ரஷியா - உக்ரைன் போர்


ரஷியாவுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில், தங்களின் நெருங்கிய அண்டை நாடான உக்ரைன் இணைவது தங்களது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா எதிர்ப்பு தெரிவித்தது.

எனினும், நேட்டோவில் இணைவதற்கு வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தலைமையிலான தற்போதைய உக்ரைன் அரசு விருப்பம் தெரிவித்தது.

அதையடுத்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்து, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கொ்சான், ஸபோரிஷியா ஆகிய பிரதேசங்களைக் கைப்பற்றியது.

மேலும், அந்தப் பிரதேசங்களின் கணிசமான பகுதிகள் இன்னும் உக்ரைன் படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையிலேயே, அவற்றை தங்களுடன் இணைத்துக் கொள்வதாக ரஷியா அறிவித்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 21, 2023 9:31 pm

வடகொரியா நாடு அடுத்தடுத்து இரண்டு ஏவுகணைகளை 48 மணி நேரத்தில் ஏவி உள்ள நிலையில் சர்வதேச நாடுகள் கடும் அச்சத்தில் உள்ளன.



கடந்த இரண்டு நாட்களுக்கு முன்ம் வடகொரியா ஏவுகணை ஏவிய நிலையில் அது ஜப்பான் பகுதியில் விழுந்து பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது
கடந்த 48 மணி நேரத்தில் இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டு இருப்பதாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளதால் வடகொரியாவின் இந்த செயல் குறித்து உலக நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன.

இது குறித்து தென்கொரியா ராணுவ படை தளபதி கூறிய போது கடற்கரையின் கிழக்கு பகுதியை நோக்கி வடகொரியா அடையாளம் தெரியாத ஏவுகணையை ஏறி உள்ளது என்று தெரிவித்துள்ளார். இதனை ஜப்பான் பிரதமர் அலுவலகமும் உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 24, 2023 7:45 pm

இந்தோனேஷியாவிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்



கடந்த சில நாட்களாக பல நாடுகளில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது இந்தோனேஷியாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

பூமியில் உள்ள அனைத்து நாடுகளும் பல கண்ட திட்டுகள் மீது அமைந்துள்ளன. இந்த கண்டத்திட்டுகள் (புவி தகடுகள்) மெல்ல நகர்ந்து கொண்டே இருக்கின்றன. இரு கண்ட திட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளும்போது நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்கள் உருவாகின்றது. சமீபமாக துருக்கி, சிரியா பகுதியில் இவ்வாறாக கண்டத்திட்டுகள் நகர்ந்ததால் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலர் உயிரிழந்தனர். நேற்று ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான் பகுதியில் தொடர்ந்து 5 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. அதை தொடர்ந்து தற்போது இந்தோனேஷியாவிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்தோனேஷியாவின் வடக்கிழக்கில் அதிகாலை 05.02 மணியளவில் பதிவான இந்த நிலநடுக்கம் 6.3 ரிக்டராக பதிவாகியுள்ளது. இந்தோனேஷியாவின் டோபேலா நகரத்திற்கு வடக்கே 177 கி.மீ தூரத்தில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம் சுமார் 97 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. எனினும் நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Feb 25, 2023 11:54 am

சோகம் சோகம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 26, 2023 5:30 pm

புா்கினா ஃபாசோ பயங்கரவாதத் தாக்குதலில் 70 வீரா்கள் பலி



மேற்கு ஆப்பிரிக்க நாடான புா்கினா ஃபாசோவில் இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70-க்கு மேற்பட்ட ராணுவத்தினா் உயிரிழந்தனா்.

நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள டியோ என்னுமிடத்தில் ராணுவ வாகன அணிவகுப்பின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினா். இதில் 70-க்கு மேற்பட்ட வீரா்கள் உயிரிழந்தனா்; ஏராளமானவா்கள் காயமடைந்தனா்; 5 போ் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டனா்.

கடந்த வாரம் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு சனிக்கிழமை பொறுப்பேற்றது.

இது தொடா்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள படங்களில், ராணுவச் சீருடையுடன ரத்தவெள்ளத்தில் 54 வீரா்கள் இறந்து கிடக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. அத்துடன், ராணுவத்தினரிடமிருந்து பறிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட இயந்திரத் துப்பாக்கிகள், பிணைக் கைதிகளாகப் பிடித்துவைக்கப்பட்ட 5 ராணுவ வீரா்களின் படங்களையும் பயங்கரவாதிகள் வெளியிட்டனா்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 28, 2023 9:51 pm

அமெரிக்காவை அடுத்து கனடாவிலும் டிக்டாக் செயலிக்கு தடை..!


அமெரிக்காவில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான செல்போன்களில் டிக்டாக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது என்பது தெரிந்ததே. ஆனால் அதே நேரத்தில் பொதுமக்கள் டிக் டாக் செயலியை பயன்படுத்த எந்த தடையும் கிடையாது. இந்த நிலையில் அமெரிக்காவை அடுத்து கனடாவில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான செல்போன் உள்ளிட்ட சாதனங்களில் டிக் டாக் செயலியை பயன்படுத்த தடை என நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோஅதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக அரசு மற்றும் அரசுக்கு சொந்தமான செல்போன் உள்ளிட்ட சாதனங்களில் டிக் டாக் செயல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கனடா அரசு விளக்கம் அளித்துள்ளது.

ஏற்கனவே அமெரிக்க அரசு அலுவலங்களில் இந்த டிக் டாக் செயலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கனடாவிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமின்றி இந்தியா உள்பட ஒருசில நாடுகளில் முழுமையாக டிக்டாக் செயலிக்கு தடை போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் டிக் டாக் செயலிகு பெரும் வருவாய் குறைவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 28, 2023 9:51 pm

மீண்டும் உலகின் நெம்பர் 1 பணக்காரராக முன்னேறிய எலான் மஸ்க்


உலகின் டாப் பணக்கார்களில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார் டெஸ்லா மற்றும் டுவிட்டர் நிறுவன அதிபர் எலான் மஸ்க்.

அமெரிக்காவில் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டுவிட்டர் மற்றும் டெஸ்லா ஆகிய நிறுவனங்களின் தலைவராக எலான் மஸ்க் இருக்கிறார்.

உலகின் நம்பர் பணக்காரராக இருந்த எலான் மஸ்க், கடந்தாண்டு, டுவிட்டர் நிறுவனத்தை பல ஆயிரம் கோடிகள் கொடுத்து வாங்கியதை அடுத்து, உலகின் பலரது கவனத்தைப் பெற்றார்.

ஏற்கனவே, அறிவியல், பேட்டரி கார்கள், விண்வெளி ஆகிய துறைகளில் கவனம் செலுத்திய எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியது பரவலாகப் பேசப்பட்ட நிலையில், ஊழியர்களை பணி நீக்கம் செய்தார்.

இதையடுத்து,கடந்த டிசம்பரில், டெஸ்லா நிறுவன பங்குகள் சரிந்தது.

முதலிடத்தை இழந்த அவர், தற்போது, பங்குகளின் உயர்வு காரணமாக 187 பில்லியன் டாலர்களிடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இப்பட்டியலில், 185 பில்லியன் டாலர்களுடன் பிரான்ஸ் நாட்டு தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட் இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 28, 2023 9:59 pm

வடகொரியாவில் கடும் உணவு பற்றாக்குறை: அதிபர் கிம் ஜாங் ஆலோசனை


உணவு பற்றாக்குறையை போக்க அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் ஆளும் தொழிலாளர் கட்சியின் உயர்மட்ட குழுவை கூட்டினார்.

வடகொரிய நாட்டில் கடும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக அந்நாட்டு மக்கள் மிகவும் பாதிக்

சீனாவில் கொரோனா தொற்று காரணமாக அங்கிருந்து வடகொரியாவுக்கு அரிசி உள்ளிட்ட உணவு தானியங்கள் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உணவு உற்பத்தி 20 சதவீதம் குறைந்துள்ளதாகவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

வடகொரியா அணு ஆயுதத்திற்கு அதிகம் செலவிட்டு வருவதாவும் பாலிஸ்டிக் உள்ளிட்ட ஏவுகணை சோதனைகளால் சர்வதேச அளவில் பொருளாதார தடை விதிக்கப்பட்டு உள்ளதால் இந்த நிலை ஏற்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து உணவு பற்றாக்குறையை போக்க அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் ஆளும் தொழிலாளர் கட்சியின் உயர்மட்ட குழுவை கூட்டினார். இதில் உணவு உற்பத்தியை அதிகரிப்பது குறித்தும், விவசாய முன்னேற்றம் குறித்தும் விரிவாக ஆலோசிக்கபட்டது.

விவசாயம் குறித்து விவாதிக்க மட்டுமே கட்சியின் கூட்டம் கூட்டப்பட்டது இதுவே முதல் முறையாகும். இதில் பேசிய அதிபர் கிம் ஜாங் நாட்டில் உணவு உற்பத்தி இலக்கை அடைவதே முதன்மையானது என்றும் மார்க்கெட்டில் உணவு பொருட்கள் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் கூறினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 04, 2023 12:31 pm

இந்தோனேசியா: எரிபொருள் கிடங்கில் பயங்கர தீ விபத்து - 16 பேர் பலி; 50-க்கும் மேற்பட்டோர் காயம்

இந்தோனேசியா எரிபொருள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தோனேசியாவின் வடக்கு ஜகார்த்தாவில் பெர்டமினா என்ற எரிசக்தி சேமிப்பு கிடங்கு, மாநில எரிசக்தி நிறுவனத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இதில் நேற்று உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த கிடங்கு இருக்கும் பகுதிக்கு அருகில் குடியிருப்பு பகுதி இருக்கிறது. அதனால் தீ குடியிருப்பு பகுதிக்கும் பரவியிருக்கிறது. சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள், அந்தப் பகுதியில் வசித்த மக்களை பாதுகாப்பாக வெறியேற்றியும், தீயை அணைக்கும் பணியையும் மேற்கொண்டு வந்தனர்.

ஆனாலும், இந்த தீ விபத்தில் 16 பேர் வரை உயிரிழந்திருப்பதாகவும், 50-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக தீயணைப்பு வீரர் ஒருவர், ``உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்குப் பிறகு தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அதக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை தீ பரவ தொடங்கியது முதல் மக்களுடன் சேர்ந்து தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனர்" எனத் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்தின் தலைமை நிர்வாகி நிக்கி வித்யாவதி, "இதுபோன்ற நிகழ்வு மீண்டும் நிகழாமல் தடுக்க முழு பாதுகாப்பை மேற்கொள்ளும். நாட்டின் எரிபொருள் விநியோககத்தை இந்த விபத்து சீர்குலைக்கவில்லை. காயமடைந்தவர்களின் சிகிச்சைக்கு இந்தோனேசிய அரசு பங்களிக்கும்" எனத் தெரிவித்திருக்கிறார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 04, 2023 10:46 pm

உக்ரைன் நாட்டின் பக்முத் நகரை முற்றுகையிட்ட ரஷிய ராணுவம்


உக்ரைன் நாட்டின் பக்முத் நகரை ரஷியா ராணுவம் முற்றுகையிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

கடந்தாண்டு பிப்ரவரி மாதம், உக்ரைன் நாட்டின் மீது புதின் உத்தரவுப்படி ரஷிய ராணுவம் போரிட்டது.

இதற்கு ஆரம்பத்தில் உக்ரைன் நாடு அச்சமடைந்தாலும், அமெரிக்கா உள்ளிட்ட மேற்பத்திய நாடுகள் ரஷியாவை கண்டித்ததுடன் உக்ரைனுக்கு ஆயுதம் மற்றும் நிதியுதவி அளிக்க முன்வந்தன.

எனவே, ஓராண்டைக் கடந்துள்ள போதிலும் இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை

இதுவரை இரு நாட்டு தரப்பிலும், பல ஆயிரக்கணக்கான வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இரு நாடுகள் மீண்டும் சமாதானம் பேச முன்வரவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில், தினமும் நடந்து வரும் சண்டைகளால், அங்குள்ள அப்பாவி மக்களும், மாணவர்களும், குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், உக்ரைன் நாட்டின் முழுப்பகுதிகளையும் ஆக்ரமிக்க ரஷியா முயற்சித்துள்ளது.

ஏற்கனவே உக்ரைன் மீது தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தவும் புதின் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், இன்று டொனெட்ஸ்க் பிராந்தியத்திற்குட்பட்ட பக்முத் நகரை ரஷியா படைகள் கைப்பற்றித் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில், அந்த நகரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

டொனெட்ஸ்க் நகரம் நல்ல தொழில்வளமிக்க நகரமாகும். இப்பகுதியைக் கைப்பற்றியது ரஷியாவின் முக்கிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

Sponsored content

PostSponsored content



Page 78 of 81 Previous  1 ... 40 ... 77, 78, 79, 80, 81  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக