புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 31 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 31 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 31 Poll_c10 
44 Posts - 41%
heezulia
உலகச் செய்திகள்!  - Page 31 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 31 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 31 Poll_c10 
34 Posts - 32%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 31 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 31 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 31 Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
உலகச் செய்திகள்!  - Page 31 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 31 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 31 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
உலகச் செய்திகள்!  - Page 31 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 31 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 31 Poll_c10 
5 Posts - 5%
prajai
உலகச் செய்திகள்!  - Page 31 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 31 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 31 Poll_c10 
3 Posts - 3%
Raji@123
உலகச் செய்திகள்!  - Page 31 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 31 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 31 Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
உலகச் செய்திகள்!  - Page 31 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 31 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 31 Poll_c10 
2 Posts - 2%
Barushree
உலகச் செய்திகள்!  - Page 31 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 31 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 31 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
உலகச் செய்திகள்!  - Page 31 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 31 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 31 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகச் செய்திகள்!  - Page 31 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 31 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 31 Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 31 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 31 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 31 Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 31 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 31 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 31 Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
உலகச் செய்திகள்!  - Page 31 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 31 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 31 Poll_c10 
21 Posts - 5%
prajai
உலகச் செய்திகள்!  - Page 31 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 31 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 31 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
உலகச் செய்திகள்!  - Page 31 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 31 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 31 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
உலகச் செய்திகள்!  - Page 31 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 31 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 31 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
உலகச் செய்திகள்!  - Page 31 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 31 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 31 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உலகச் செய்திகள்!  - Page 31 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 31 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 31 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உலகச் செய்திகள்!  - Page 31 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 31 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 31 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!


   
   

Page 31 of 81 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 56 ... 81  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 31 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 16, 2014 4:39 am


* உக்ரைன் எல்லையை நோக்கி ரஷிய ராணுவ வாகனங்கள் டஜன்கணக்கில் அணி வகுத்து சென்றன. அங்கு, கிளர்ச்சி நடந்துவருகிற கிழக்கு உக்ரைன் மக்களுக்காக உணவுப்பொருட்கள், குழந்தை உணவுகள், தண்ணீர் எடுத்துச்சென்ற வாகனங்கள் ஏற்கனவே நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. எல்லை தாண்டி அவற்றை எடுத்துச் சென்று வினியோகிப்பதில் ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே உடன்பாடு ஏற்படாமல் இழுபறி நீடிக்கிறது.

* போப் ஆண்டவர் பிரான்சிஸ், தென்கொரியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் படகு விபத்தில் உயிரிழந்த 300–க்கும் மேற்பட்ட குழந்தைகளின் நினைவாக டாஜியான் என்ற இடத்தில் அவர் சிறப்பு பிரார்த்தனை செய்தார். பலியான குழந்தைகளின் குடும்பத்தினரை அவர் சந்தித்து பேசினார். 50 ஆயிரம் பேர் பங்கேற்ற பிரார்த்தனை கூட்டத்தில் அவர் மக்களுக்கு செய்தியும் வழங்கினார்.

* ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்நாட்டு போரில் சிக்கி தவிக்கிற அப்பாவி மக்களுக்கு நிவாரணப் பொருட்களை சுமந்து கொண்டு, ஜெர்மனியின் முதல் விமானம் நேற்று புறப்பட்டு சென்றது.

* ஈராக்கில் சன்னி முஸ்லிம் பிரிவு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை எதிர்த்து போரிடுவதற்கு குர்திஷ் அரசு ஆயுதங்கள் கேட்டால், சாதகமாக பரிசீலிப்போம் என இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனின் செய்தி தொடர்பாளர் லண்டனில் அறிவித்தார். குர்திஷ் அரசுக்கு ஆயுதங்கள் வழங்குமாறு ஐரோப்பிய நாடுகளை அமெரிக்கா ஏற்கனவே கேட்டுக்கொண்டுள்ளது.



உலகச் செய்திகள்!  - Page 31 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 16, 2014 4:40 am

கன்னித்தன்மை உள்ளவருக்கே வேலை

இளம்பெண்கள் தங்கள் கல்வி சான்றிதழ்களுடன், கன்னித்தன்மை சான்றிதழும் கொடுத்தால்தான் வேலை வழங்கப்படும் என பிரேசில் மாநில அரசு ஒன்று அறிவித்திருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

பிரேசிலின் சா போலோ மாநில அரசுதான் இத்தகைய அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி கல்வித்துறையில் வேலை தேடும் இளம்பெண்கள், தாங்கள் கன்னித்தன்மை உடையவர்கள் என்பதை நிரூபிப்பதற்காக டாக்டரை அணுகி பரிசோதனை செய்து சான்றிதழ் பெற்று வழங்க வேண்டும்.

இது குறித்து மாநில கல்வித்துறை கூறுகையில், ‘புதிதாக வேலையில் சேரும் இளம்பெண்கள், தங்களுக்கு புற்றுநோய் இல்லை என்பதை நிரூபிக்கவும், பாலியல் விவகாரங்களில் ஈடுபடவில்லை என்பதை நிரூபிக்கவும் மருத்துவரிடம் இருந்து சான்றிதழ் பெற்றுத்தர வேண்டும்’ என்று கூறியிருந்தது.

மாநில அரசின் இத்தகையை அறிவிப்பை, இளம்பெண்கள் மட்டுமின்றி மனித உரிமை ஆர்வலர்களும் கடுமையாக எதிர்த்தனர். இது தொடர்பாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றதை தொடர்ந்து, இந்த அறிவிப்பு திரும்ப பெறப்பட்டது.



உலகச் செய்திகள்!  - Page 31 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 16, 2014 4:40 am


தலையில் குத்திய கத்தியுடன் வலம் வந்தவர்

‘தலைவலியும், காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்’ என்று ஒரு பழமொழி உண்டு. அந்த அளவுக்கு தலையில் ஒரு வலி ஏற்பட்டால் யாராலும் தாங்க முடியாது. ஆனால் சீனர் ஒருவர், தனது தலையில் கத்தி குத்திய பிறகும் அதை பார்க்காமல், சாதாரணமாக வலம் வந்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

அங்குள்ள சிச்சுவான் மாகாணத்தை சேர்ந்த சியாவோ உன்சி என்ற 57 வயது மனிதர், குவாங்குயான் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து விழுந்த கத்தி ஒன்று செங்குத்தாக அவரது தலையில் பாய்ந்தது.

இதில் கத்தியின் 5 அங்குல நீள பகுதி, உன்சியின் தலைக்குள் சென்றதுடன், கத்தியின் பிடி மட்டும் வெளியே தெரிந்தது. இதனால் உன்சிக்கு பயங்கர தலைவலி ஏற்பட்டது. எனினும் தனது தலையில் கத்தி இருப்பதை கவனிக்காமலும், தலைவலியை பொருட்படுத்தாமலும் அவர் தனது வழக்கமான பணிகளை மேற்கொண்டார்.

ஆனால் உன்சியின் தலையில் கத்தி இருப்பதை பார்த்த ஒருவர், உன்சியிடம் கூறினார். அதன்பிறகு தான், தனது தலைவலிக்கு என்ன காரணம்? என்பதை உன்சி புரிந்து கொண்டார். பின்னர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆபரேஷன் மூலம் கத்தி அகற்றப்பட்டது.




உலகச் செய்திகள்!  - Page 31 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 18, 2014 4:34 pm

கருப்பின வாலிபர் படுகொலை: போராட்டகாரர்கள் மீது கண்ணீர் புகைகுண்டு வீச்சு

செயிண்ட் லூயிஸ் புறநகர் பகுதியில் கடந்த 9-ந்தேதி வெள்ளைக்கார போலீஸ் அதிகாரி டேரன் வில்சன் என்பவரால் மைக்கேல் பிரவுன் (வயது 18) என்ற கருப்பின வாலிபர் சுட்டு கொல்லப்பட்டார்.இதனை தொடர்ந்து அந்த பகுதியில் கடந்த சில நாட்களாக பதட்டம் நிலவி வருகிறது.இந்த கொடூர கொலையை கண்டித்து கருப்பினமக்கள் அந்த பகுதியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதை தொடர்ந்து 2-வது இரவாக அங்கு ஊரடங்கு உத்தரவை கவர்னர் ஜே. நிக்சன் பிறப்பித்து உள்ளார். கருப்பின வாலிபர் துப்பாக்கி சுட்டில் பலியானது குறித்து அமெரிக்க நீதித்துறை மற்றும் எப்பிஐ விசாரணை நடத்தி வருகிறது.

நேற்று இரவு மிசவுரி பர்குசன் பகுதியில் 5 ஆயிரம் போராட்டக்காரர்கள் ஊர்வலமாக செல்ல முயன்றனர் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர் ஆனால் போராட்ட காரர்கள் கட்டுப்பட வில்லை இதை தொடர்ந்து போலீசார் 75 ரவுண்ட் கண்ணீர் புகை ,குண்டுகளால் சுட்டனர்.

தற்போது கருப்பர் இன வாலிபரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை விவரம் தெரிய வந்துள்ளது. அந்த வாலிபரை போலீஸ் அதிகாரி 6 முறை சுட்டுத் தள்ளியுள்ளார். நெற்றியில் இரண்டு குண்டுகளும், தோளில் 4 குண்டுகளும் பாய்ந்துள்ளன. முன்னாள் இருந்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார் போலீஸ் அதிகாரி. துப்பாக்கிச் சூட்டின்போது சம்பந்தப்பட்ட கருப்பர் இன வாலிபரான மைக்கேல் பிரவுன் நிராயுதபாணியாக இருந்துள்ளார். அவர் எதிர்ப்பும் காட்டவில்லை என்றும் அதில் கூறபட்டு உள்ளது.



உலகச் செய்திகள்!  - Page 31 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 18, 2014 4:45 pm

ஈகுவடார் தூதரகத்தை விட்டு விரைவில் வெளியேறபோவதாக அசாஞ்சே பேட்டி

ஈகுவடார் தூதரகத்தை விட்டு விரைவில் வெளியேறவுள்ளதாக ஜூலியன் அசாஞ்சே தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜூலியன் அசாஞ்சே, "விக்கிலீக்ஸ்' என்ற இணையதளத்தை உருவாக்கி, அதில் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ராணுவம் உள்ளிட்ட அரசு ரகசியங்களைப் பகிரங்கமாக வெளியிட்டார். இதனால் அந்த நாடுகளின் கோபத்துக்கு அவர் ஆளானார். இதனிடையே, அவர் மீது சுவீடனில் பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்குகளுக்காக அசாஞ்சேவை கைது செய்து சுவீடனிடம் ஒப்படைக்க லண்டன் போலீசார் திட்டமிட்டனர். இதையடுத்து தனக்கு புகலிடம் அளிக்குமாறு ஈகுவடார் தூதரத்தை அசாஞ்சே கேட்டுகொண்டார். அவரது கோரிக்கையை ஏற்கப்பட்டதையடுத்து ஈகுவடார் தூதரகத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டில் தஞ்சம் அடைந்தார்.

இந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர். விரைவில் ஈகுவடார் தூதரகத்தை விட்டு வெளியேறவுள்ளேதாகவும், இதயம் நுரையீரல் பாதிப்புக்கு சிகிச்சை பெற வெளியேற முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ஐரோப்பிய நாடுகளில் அடிப்படை உரிமைகள் நீண்ட காலம் பாதுக்கப்படுவதில்லை. என் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. நான்கு வருடங்களுக்கு மேலாக எனக்கு எதிராக விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் என் மீது எந்த குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை என்றார்.

தூதரகத்தை விட்டு வெளியே வந்தால் அசாஞ்சே கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து லண்டனில் உள்ள ஈகுவடார் தூதரகத்திற்கு வெளியே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.



உலகச் செய்திகள்!  - Page 31 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 18, 2014 4:51 pm

இந்தியாவுக்கு வரவிருந்த நைஜீரியா பெண் பலி: எபோலா நோய் அறிகுறி இருந்ததாக தகவல்

புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக நைஜீரியாவில் இருந்து இந்தியா வரவிருவந்த 35 வயதான பெண்மணி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மரணம் அடைந்தார். அவருக்கு எபோலா நோய் பாதிப்புக்கான அறிகுறி இருந்ததாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

35 வயதான நைஜீரிய பெண் புற்று நோய் சிகிச்சைக்காக இந்தியா வர திட்ட மிட்டுள்ளார். இந்த நிலையில், இந்தியாவுக்கு வரும் வழியில் அபுதாபி விமான நிலையத்தில் அவரது உடல் நிலை மிகவும் மோசமாகியுள்ளது. இதைதொடர்ந்து அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டது இருப்பினும் அது பலனளிக்காமல் உயரிழந்துள்ளார். எபோலா வைரஸ் தாக்கியதற்கான அறிகுறி அவருக்கு இருந்துள்ளது என்று சுகாதரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதைதொடர்ந்து நைஜீரிய பெண்ணுடன் விமானத்தில் அருகில் இருந்து வந்த அவரது கணவர் மற்றும் ஐந்து மருத்துவர்கள் என அனைவரும் தனி இடத்தில் வைக்கப்பட்டனர். அவர்களுக்கு எலோபா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தற்போது வரை நன்றாக உள்ளதாகவும் எபோலா நோய் தாக்கியதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



உலகச் செய்திகள்!  - Page 31 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 19, 2014 9:41 pm


போர்க்குற்றம் குறித்து விசாரிக்க ஐ.நா. விசாரணை குழுவை அனுமதிக்க மாட்டோம் - ராஜபக்சே

இலங்கையில் விடுதலை புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடத்த இறுதி கட்ட போரில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக குற்றம்சாற்றப்பட்டது. இதுகுறித்து ஐ.நா. சபையில் அமெரிக்கா கண்டன தீர்மானங்கள் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது.

இந்நிலையில் இலங்கையில் நடந்த போர்க்குற்றம் குறித்து விசாரிக்க குழுவை ஐ.நா. நியமித்தது. அக்குழு விரைவில் இலங்கை சென்று விசாரணை நடத்த உள்ளது.

இந்த நிலையில், ‘ஐ.நா. விசாரணை குழுவை இலங்கைக்குள் நுழைய அனுமதிக்க முடியாது என அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார். மேலும், அக்குழுவினர் இலங்கைக்கு வர விசா வழங்க மாட்டோம் என்றும் கூறியுள்ளார்.

ஆனால், ஐ.நா. குழு விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கும்படி இலங்கையை சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.



உலகச் செய்திகள்!  - Page 31 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 19, 2014 9:51 pm

எபோலா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 1,200 ஐ தாண்டியது - உலக சுகாதார நிறுவனம்

எபோலா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 1,200 ஐ தாண்டிவிட்டது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

எய்ட்ஸ் நோயைவிட மோசமான எபோலா வைரஸ் நோயால் மேற்கு ஆப்பிரிக்க நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 90 சதவீதம் உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லாத கொடிய நோயாக உள்ளது. இந்த நோயின் தாக்கம் இந்தியாவிலும், உலக நாடுகளிலும் எதிரொலித்து வருகிறது. இந்த நோய் நம் நாட்டில் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரப்படுகிறது. மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் பரவிவரும் எபோலா வைரஸ் தாக்குதலால் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1,229 ஆக உயர்ந்துள்ளது. என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 14, 16 ஆகிய தேதிகளில் 84 பேர் பலியாகியுள்ளனர். 113 பேருக்கு புதிதாக இந்த நோய் அறிகுறிகள் தென்பட்டுள்ளது. கினியா, லைபீரியா, நைஜீரியா, சியேரா லியோன் ஆகிய நாடுகளில் எபோலாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,240 ஆக உள்ளது. பலியானோர் எண்ணிக்கை 1,229 ஆக உள்ளது. என்று உலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களுக்கு பயணத்தை தவிர்க்குமாறு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.




உலகச் செய்திகள்!  - Page 31 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 19, 2014 9:52 pm

பூமியை மிகத்துல்லியமாக படம் பிடிக்கும் அதி நவீன சாட்டிலைட்; சீனா வெற்றிகரமாக ஏவியது

பூமியை மிகத்துல்லியமாக கலர் மற்றும் கிளாரிட்டியுடன் படம் பிடிக்கும் அதி நவீன ஹை-டெபனீஷன் செயற்கைக்கோளை சீனா இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

காவோபெஃன்-2 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள் வடக்கு சீனாவின் ஷான்ஷி மாகாணத்தில் உள்ள தையூன்
செயற்கைகோள் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. பூமியில் உள்ள சிறிய பாகத்தை கூட மிகத் தெளிவாக துல்லியமான

வண்ணத்துடன் படம் பிடித்து அனுப்பும் திறன் வாய்ந்தது இந்த செயற்கைகோள். இதற்காகவே தனியாக லாங் மார்ச்-4பி என்ற ராக்கெட் கேரியரும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது பூமியில் இருந்து மிக அருகில் அதாவது வெறும் 1 மீட்டர் தொலைவிலுள்ள பொருட்களையும் கூட அதே வண்ணத்துடன் வி்ண்ணில் இருந்தே படம் பிடிக்கும்.

புதிதாக விண்ணில் ஏவப்பட்டுள்ள இந்த செயற்கைகோளை புவியியல் ஆராய்ச்சி, சுற்றுச்சூழல் மற்றும் வானிலை மாற்றம், விவசாய கணிப்புகள், பேரழிவு மேலாண்மை திட்டங்களுக்காக உபயோகப்படுத்த உள்ளதாக அந்நாட்டு அறிவியல் மற்றும் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது ஏவப்பட்டுள்ள இந்த செயற்கைகோள்தான் சீனாவிலேயே மிகவும் அதி நவீன ஹை-டெபனீஷன் எர்த் அப்சர்வேஷன் சாட்டிலைட் என்பது குறிப்பிடத்தக்கது.



உலகச் செய்திகள்!  - Page 31 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 19, 2014 9:52 pm

2 ஆண்டுகளில் 1 லட்சம் யானைகள் கொன்று குவிப்பு - ஆப்பிரிக்காவில் அட்டூழியம்

ஆப்பிரிக்காவில் தந்தத்திற்காக யானைகள் வேட்டையாடப்படுவது உச்சத்தை தொட்டுவி்ட்டது. முன் எப்போதும் இல்லாத வகையில் அங்கு யானைகளின் எண்ணிக்கை கடுமையாக குறைந்துவிட்டது.

இதுகுறித்து உடனடியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வின் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில் கடந்த 2010 மற்றும் 2012 ஆண்டுகளுக்கு இடையில் மட்டும் 1 லட்சம் யானைகள் தந்தத்திற்காக வேட்டையாடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிய நாடுகள் மற்றும் சீனாவில் ஆப்பிரிக்க யானை தந்தங்களுக்கு தேவை அதிகரித்துள்ளதே இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது. யானைகளின் இறப்பில் 25 சதவீதம் சட்டத்திற்கு புறம்பாக வேட்டையாடப்பட்டு கொல்லப்படுகிறது. இப்படியே சென்றால் வெகு விரைவில் யானைகள் இனமே ஆப்பிரிக்காவில் அழிந்து விடும் நிலை உள்ளதாக இந்த ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதை நிரூபிக்கும் வகையில், டான்சானியாவில் கடந்த 3 ஆண்டுகளில் யானைகளின் எண்ணிக்கை 40 ஆயிரத்திலிருந்து 13 ஆயிரமாக குறைந்துள்ளது.



உலகச் செய்திகள்!  - Page 31 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 31 of 81 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 56 ... 81  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக