புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹையான் புயல் கோர தாண்டவம் - Page 4 Poll_c10ஹையான் புயல் கோர தாண்டவம் - Page 4 Poll_m10ஹையான் புயல் கோர தாண்டவம் - Page 4 Poll_c10 
25 Posts - 40%
heezulia
ஹையான் புயல் கோர தாண்டவம் - Page 4 Poll_c10ஹையான் புயல் கோர தாண்டவம் - Page 4 Poll_m10ஹையான் புயல் கோர தாண்டவம் - Page 4 Poll_c10 
17 Posts - 27%
mohamed nizamudeen
ஹையான் புயல் கோர தாண்டவம் - Page 4 Poll_c10ஹையான் புயல் கோர தாண்டவம் - Page 4 Poll_m10ஹையான் புயல் கோர தாண்டவம் - Page 4 Poll_c10 
6 Posts - 10%
T.N.Balasubramanian
ஹையான் புயல் கோர தாண்டவம் - Page 4 Poll_c10ஹையான் புயல் கோர தாண்டவம் - Page 4 Poll_m10ஹையான் புயல் கோர தாண்டவம் - Page 4 Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
ஹையான் புயல் கோர தாண்டவம் - Page 4 Poll_c10ஹையான் புயல் கோர தாண்டவம் - Page 4 Poll_m10ஹையான் புயல் கோர தாண்டவம் - Page 4 Poll_c10 
4 Posts - 6%
Raji@123
ஹையான் புயல் கோர தாண்டவம் - Page 4 Poll_c10ஹையான் புயல் கோர தாண்டவம் - Page 4 Poll_m10ஹையான் புயல் கோர தாண்டவம் - Page 4 Poll_c10 
2 Posts - 3%
M. Priya
ஹையான் புயல் கோர தாண்டவம் - Page 4 Poll_c10ஹையான் புயல் கோர தாண்டவம் - Page 4 Poll_m10ஹையான் புயல் கோர தாண்டவம் - Page 4 Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
ஹையான் புயல் கோர தாண்டவம் - Page 4 Poll_c10ஹையான் புயல் கோர தாண்டவம் - Page 4 Poll_m10ஹையான் புயல் கோர தாண்டவம் - Page 4 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஹையான் புயல் கோர தாண்டவம் - Page 4 Poll_c10ஹையான் புயல் கோர தாண்டவம் - Page 4 Poll_m10ஹையான் புயல் கோர தாண்டவம் - Page 4 Poll_c10 
1 Post - 2%
Barushree
ஹையான் புயல் கோர தாண்டவம் - Page 4 Poll_c10ஹையான் புயல் கோர தாண்டவம் - Page 4 Poll_m10ஹையான் புயல் கோர தாண்டவம் - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஹையான் புயல் கோர தாண்டவம் - Page 4 Poll_c10ஹையான் புயல் கோர தாண்டவம் - Page 4 Poll_m10ஹையான் புயல் கோர தாண்டவம் - Page 4 Poll_c10 
153 Posts - 41%
ayyasamy ram
ஹையான் புயல் கோர தாண்டவம் - Page 4 Poll_c10ஹையான் புயல் கோர தாண்டவம் - Page 4 Poll_m10ஹையான் புயல் கோர தாண்டவம் - Page 4 Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
ஹையான் புயல் கோர தாண்டவம் - Page 4 Poll_c10ஹையான் புயல் கோர தாண்டவம் - Page 4 Poll_m10ஹையான் புயல் கோர தாண்டவம் - Page 4 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஹையான் புயல் கோர தாண்டவம் - Page 4 Poll_c10ஹையான் புயல் கோர தாண்டவம் - Page 4 Poll_m10ஹையான் புயல் கோர தாண்டவம் - Page 4 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
ஹையான் புயல் கோர தாண்டவம் - Page 4 Poll_c10ஹையான் புயல் கோர தாண்டவம் - Page 4 Poll_m10ஹையான் புயல் கோர தாண்டவம் - Page 4 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஹையான் புயல் கோர தாண்டவம் - Page 4 Poll_c10ஹையான் புயல் கோர தாண்டவம் - Page 4 Poll_m10ஹையான் புயல் கோர தாண்டவம் - Page 4 Poll_c10 
7 Posts - 2%
prajai
ஹையான் புயல் கோர தாண்டவம் - Page 4 Poll_c10ஹையான் புயல் கோர தாண்டவம் - Page 4 Poll_m10ஹையான் புயல் கோர தாண்டவம் - Page 4 Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
ஹையான் புயல் கோர தாண்டவம் - Page 4 Poll_c10ஹையான் புயல் கோர தாண்டவம் - Page 4 Poll_m10ஹையான் புயல் கோர தாண்டவம் - Page 4 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஹையான் புயல் கோர தாண்டவம் - Page 4 Poll_c10ஹையான் புயல் கோர தாண்டவம் - Page 4 Poll_m10ஹையான் புயல் கோர தாண்டவம் - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஹையான் புயல் கோர தாண்டவம் - Page 4 Poll_c10ஹையான் புயல் கோர தாண்டவம் - Page 4 Poll_m10ஹையான் புயல் கோர தாண்டவம் - Page 4 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹையான் புயல் கோர தாண்டவம்

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 12:08 pm

First topic message reminder :

பிலிப்பைன்சில் வரலாறு காணாத புயல்; ஹையான் புயலில் 10,000 பேர் சாவு
ஹையான் புயல் கோர தாண்டவம் - Page 4 UtaN4Oc0TbaOo2xULdqm+img1131110009_1_1 
பிலிப்பைன்சில் வரலாறு காணாத வகையில் ஹையான் புயல் கோர தாண்டவம் ஆடியதில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காணவில்லை. மேலும் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. சாலைகளில் ஆங்காங்கே சடலங்கள் கிடப்பதால் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் சோகம் ஏற்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று முன்தினம் 30 ஆண்டுகளாக இல்லாத வகையில் மணிக்கு 275 கி.மீ வேகத்தில் ஹையான் சூறாவளி புயல் தாக்கியது. மத்திய பிலிப்பைன்ஸ் பகுதியில் உள்ள லெதே மாகாணத்தை புயல் தாக்கியது. இதில் மாகாணத்தின் 80 சதவீதம் சேதமடைந்துள்ளது. ஹையான் புயல் காரணமாக கடல் அலைகள் 6 மீட்டர் உயரத்துக்கு சீறி பாய்ந்தன. மழை மற்றும் வெள்ளம் காரணமாக லெதே மாகாணம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடற்கரையில் இருந்து 1 கிமீ தொலைவில் உள்ள அனைத்து ஊர்களும் முற்றிலுமாக கடலால் அரித்து செல்லப்பட்டு விட்டது. சாலைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுவிட்டன. மரங்கள், மர வீடுகள் வேரோடு சாய்ந்தன. லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். தொலை தொடர்பு கட்டமைப்புகள் பலத்த சேதம் அடைந்தன.

இந்த புயலில் ஆரம்பத்தில் 100 பேர் பலியானதாக நேற்று தகவல் வெளியானது. ஆனால், மாலைக்குள் 1200 பேர் இறந்ததாக தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் லெதே மாகாணத்தில் மட்டும் 10 ஆயிரம் பேர் வரை பலியானதாக அரசு அதிகாரப்பூர்வமாக இன்று தெரிவித்துள்ளது. பலர் காணாமல் போயுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு அதிகாரிகளுடன் மாகாண கவர்னர் அவசர ஆலோசனை நடத்தி, மீட்பு பணிகளை முடுக்கி விட உத்தரவிட்டார். இதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் உணவு பொட்டலங்கள் வீச ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதி முழுவதும் முற்றிலுமாக முடங்கியுள்ளது. முகாம்களில் சுமார் 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் வரை தஞ்சம் அடைந்துள்ளனர்.

பிலிப்பைன்சை தாக்கியது புயல்களில் 5வது பிரிவை சேர்ந்த கொடூர சூறாவளி என அமெரிக்க நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மணிலாவில் இருந்து சுமார் 580 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த பகுதியை ஹெலிகாப்டரில் இருந்து பார்க்கும் போது சுனாமி தாக்கி முற்றிலுமாக அழிந்துள்ளதை போன்று உள்ளது. சாலைகளில் ஆங்காங்கே சடலங்கள் சிதறி கிடக்கின்றன. இடிபாடுகளில் சிக்கி பலர் இறந்துள்ளனர். இதனால் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தாக்லோபான் நகர நிர்வாகி டெக்சான் ஜான் கூறுகையில், தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாகவும், வெள்ளம் சூழ்ந்திருப்பதாலும் மீட்பு பணிகளை செய்ய இயலாத நிலை காணப்படுகிறது. வீடுகளிலும், தெருக்களிலும் குவியல் குவியலாக மனிதர்கள் இறந்து கிடக்கும் கோர காட்சி நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. உடல்களை மீட்கும் பணி விரைவு படுத்தப்பட்டுள்ளது என்றார்.

உலக உணவு திட்ட அதிகாரி கூறுகையில், ஐ.நா உதவியுடன் 40 டன் உணவு பொருட்கள் மற்றும் 1 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அவசர கால தொலைபேசிகளை நிறுவவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். பிலிப்பைன்சை தாக்கியுள்ள ஹையான் புயலால் ஏற்பட்டுள்ள சேதம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 12:26 pm

ayyasamy ram wrote:இந்த புயலில் காணாமல் போனவர்களை
தேட கூகுள் உதவுகிறது...
-
லிங்க்
-
http://google.org/personfinder/2013-yolanda/query?role=seek
ஹையான் புயல் கோர தாண்டவம் - Page 4 3838410834

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 12:49 pm

புயலுக்கு ஏன் பிலிப்பைன்ஸ் 'பிடிக்கிறது'?

உலகின் நான்காவது மிகப்பெரிய சூறாவளியாகக் கருதப்படுகிறது 'ஹையான்' புயல்.

அமெரிக்காவின் தேசிய சமுத்திர மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பு, புயலை மூன்று வகைகளாகப் பிரிக்கிறது. ஆங்கிலத்தில் 'ஹரிகேன்' என்று சொல்லப்படுகிற புயல் அட்லாண்டிக் மற்றும் வடகிழக்கு பசிபிக் பகுதியிலிருந்தும், 'சைக்கோலன்' எனும் புயல் தென் பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியிலிருந்தும், 'டைஃபூன்' எனும் புயல் வடமேற்கு பசிபிக் பகுதியிலிருந்தும் மையல் கொள்கின்றன. வெள்ளியன்று பிலிப்பைன்ஸ் நாட்டைத் தாக்கியது 'டைஃபூன்' வகையைச் சார்ந்த 'ஹையான்' புயல்தான்.

அமெரிக்காவின் 'டைஃபூன் எச்சரிக்கை இணைவு மையம்' வரையறுத்துள்ள படி, புவிப்பரப்பில் ஒரு விநாடிக்கு 60 மைல் வேகம் கொண்டு சுமார் ஒரு நிமிடம் வரை நீடித்திருக்கும் புயல் வகைகளை 'சூப்பர் டைஃபூன்' என்று அழைக்கிறார்கள்.

வெப்ப மண்டலப் புயலான ஹையான், இதுவரை இல்லாத அளவுக்கு நிலச்சரிவுகளையும் ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸில் இதற்கு முன்பு 1964-ல் 'சாலி' எனும் 'சூப்பர் டைஃபூன்' புயலும், 2011ல் 'வஷி', 2012ல் 'போஃபா' எனும் 'டைஃபூன்' புயல் வகைகளும் சூறையாடி இருக்கின்றன.

பிலிப்பைன்ஸில் மட்டும் அதிக அளவு இத்தகைய புயல் தாக்குவதற்குக் காரணம் அந்தப் பகுதி பசிபிக் பெருங்கடலை ஒட்டியுள்ளது. அவ்வப்போது இத்தகைய புயல் எழும்புவதற்கும், புயலின் வேகம் கூடுவதற்கும் பருவ நிலை மாற்றம்தான் முக்கியக் காரணம் என்று பிலிப்பைன்ஸ் அரசு தெரிவித்திருக்கிறது.

புயல் உருவாவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு பசிபிக் பெருங்கடலின் வெப்பம் எந்த அளவு இருந்தது என்று ஆராய வேண்டும்.

மேற்கு பசிபிக் பகுதியில் கடந்த சில வாரங்களாகவே மேற்பரப்பு நீர் மற்றும் ஆழத்தில் உள்ள நீர் இரண்டிலும் வெப்பம் அதிகமாகவே இருந்துள்ளது. இதனால் கடலில் அதிகளவு வெப்ப‌ ஆற்றல் சேமிக்கப்பட்டது. அந்த சேமிப்பின் எல்லை கை மீறிய போது, காற்று அதை உள்வாங்கிக் கொண்டது. இதுவே ஹையான் புயல் உருவானதற்கும் தீவிரமடைந்ததற்கும் காரணம் என்கிறார்கள் புவியியலாளர்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 12:50 pm

சீனாவை தாக்கியது ஹையான் புயல். புயல் மழைக்கு இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 5:00 pm

சீனாவிலும் ஹையான் புயல் தாக்குதல்: 8 பேர் பலி-பள்ளியில் வெள்ளம் புகுந்ததால் 1000 மாணவர்கள் தவிப்பு

பிலிப்பைன்ஸ் நாட்டில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை பலி வாங்கியதுடன், கடும் பொருட்சேதங்களை ஏற்படுத்திய ஹையான் புயல், சீனாவை நோக்கி நகர்ந்து பல்வேறு பகுதிகளைத் தாக்கியது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.

இன்று காலை மத்திய சீனாவின் ஹூனான் மாகாணத்தில் உள்ள சான்லிசி நீர்த்தேக்கத்தில் சென்ற படகு புயலில் சிக்கி கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த 10 பேரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். அவர்களில் 2 பேர் இறந்தனர்.  அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 4 பேரை மீட்புக் குழுவினர் காப்பாற்றினர். மீதமுள்ள 4 பேரைக் காணவில்லை.

தெற்கு சீனாவில் உள்ள குவாங்சி சுவாங் தன்னாட்சி பிராந்தியத்தில் நேற்று மாலை கனமழை பெய்து கொண்டிருந்தபோது, சைக்கிள் ரிக்சா ஒன்று ஆற்றுக்குள் விழுந்தது. அதில் பயணம் செய்த 6 பேரில் 4 பேரைக் காணவில்லை. அவர்களைத் தேடும் பணி நடக்கிறது. 2 பேர் நீந்தி கரையேறினர்.

சான்லி டவுன்ஷிப்பில் உள்ள நடுநிலைப்பள்ளிக்குள் வெள்ளம் புகுந்தது. 1.5 மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் தேங்கியதால் அங்குள்ள 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள், அந்த கட்டிடத்தின் இரண்டாவது மாடிக்கு அனுப்பப்பட்டனர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. ஹையான் புயல் தாக்குதலுக்கு இதுவரை 8 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக