புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
30 வகை ஸ்வீட் - காரம் - Page 2 Poll_c1030 வகை ஸ்வீட் - காரம் - Page 2 Poll_m1030 வகை ஸ்வீட் - காரம் - Page 2 Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
30 வகை ஸ்வீட் - காரம் - Page 2 Poll_c1030 வகை ஸ்வீட் - காரம் - Page 2 Poll_m1030 வகை ஸ்வீட் - காரம் - Page 2 Poll_c10 
339 Posts - 79%
heezulia
30 வகை ஸ்வீட் - காரம் - Page 2 Poll_c1030 வகை ஸ்வீட் - காரம் - Page 2 Poll_m1030 வகை ஸ்வீட் - காரம் - Page 2 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
30 வகை ஸ்வீட் - காரம் - Page 2 Poll_c1030 வகை ஸ்வீட் - காரம் - Page 2 Poll_m1030 வகை ஸ்வீட் - காரம் - Page 2 Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
30 வகை ஸ்வீட் - காரம் - Page 2 Poll_c1030 வகை ஸ்வீட் - காரம் - Page 2 Poll_m1030 வகை ஸ்வீட் - காரம் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
30 வகை ஸ்வீட் - காரம் - Page 2 Poll_c1030 வகை ஸ்வீட் - காரம் - Page 2 Poll_m1030 வகை ஸ்வீட் - காரம் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
30 வகை ஸ்வீட் - காரம் - Page 2 Poll_c1030 வகை ஸ்வீட் - காரம் - Page 2 Poll_m1030 வகை ஸ்வீட் - காரம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
30 வகை ஸ்வீட் - காரம் - Page 2 Poll_c1030 வகை ஸ்வீட் - காரம் - Page 2 Poll_m1030 வகை ஸ்வீட் - காரம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
30 வகை ஸ்வீட் - காரம் - Page 2 Poll_c1030 வகை ஸ்வீட் - காரம் - Page 2 Poll_m1030 வகை ஸ்வீட் - காரம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
30 வகை ஸ்வீட் - காரம் - Page 2 Poll_c1030 வகை ஸ்வீட் - காரம் - Page 2 Poll_m1030 வகை ஸ்வீட் - காரம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
30 வகை ஸ்வீட் - காரம் - Page 2 Poll_c1030 வகை ஸ்வீட் - காரம் - Page 2 Poll_m1030 வகை ஸ்வீட் - காரம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

30 வகை ஸ்வீட் - காரம்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 01, 2013 12:08 am

First topic message reminder :

சாக்லேட் பாதுஷா


தேவையானவை: மைதா மாவு - 150 கிராம், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, உப்பு - அரை சிட்டிகை, சர்க்கரை - 250 கிராம், பால் - ஒரு டீஸ்பூன், சாக்லேட் துருவல் (கடைகளில் விற்கும் காபி சாக்லேட் போதுமானது) - 3 டீஸ்பூன், எண்ணெய் - கால் கிலோ, நெய் - 2 டீஸ்பூன், கலர் கொப்பரைத் துருவல் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - 2 டீஸ்பூன், தயிர் - ஒரு டீஸ்பூன்.
30 வகை ஸ்வீட் - காரம் - Page 2 1
செய்முறை: சர்க்கரையில் ஒரு கரண்டி தண்ணீர் சேர்த்து, கொதிக்கவிட்டு ஒரு டீஸ்பூன் பால்விட்டு, மேலே படியும் அழுக்கை நீக்கவும். நன்கு கொதிக்கும்போது துருவிய சாக்லேட் சேர்த்து கரையவிட்டு இறக்கவும் (பிசுக்கு பதம் வரவேண்டும்). சமையல் சோடா, உப்பு, 2 டீஸ்பூன் நெய் சேர்த்து நன்கு நுரைக்க கையால் தேய்த்து... மைதா, தயிர், சிறிதளவு நீர் சேர்த்து பூரி மாவு போல் பிசையவும். மாவை பெரிய எலுமிச்சை சைஸ் உருண்டைகளாக உருட்டி தட்டி, எண்ணெயில் பொரிக்கவும். பொரித்தவற்றை சாக்லேட் - சர்க்கரைப் பாகில் போட்டு எடுத்து, தாம்பளத்தில் வைத்து, மேலே கலர் கொப்பரை துருவல்  தூவி பரிமாறவும்.


குறிப்பு: பொரித்த பாதுஷாவை சூடான சர்க்கரைப் பாகில் போட்டால் விரைவில் கெட்டுவிடும். பாகு சற்றே ஆறியபின் பாதுஷாவை சர்க்கரைப் பாகில் போட்டு எடுக்கவும்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 01, 2013 12:19 am

தேங்காய் ஏலக்காய் முறுக்கு



தேவையானவை:

பச்சரிசி - 150 கிராம்,
பாசிப்பருப்பு - 35 கிராம்,
கடலைப்பருப்பு - 25 கிராம்,
தேங்காய்ப் பால் - அரை கப்,
ஏலக்காய்த்தூள், உப்பு - சிறிதளவு, 
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

30 வகை ஸ்வீட் - காரம் - Page 2 11

செய்முறை:

பாசிப்பருப்பு, கடலைப்பருப்பை சிவக்க வறுத்து பச்சரிசியுடன் சேர்த்து மாவாக்கவும். இதனுடன் உப்பு, ஏலக்காய்த்தூள், தேங்காய்ப் பால் சேர்த்து (தேவையெனில் சிறிது நீரும் சேர்த்து) பிசையவும். மாவை சூடான எண்ணெயில் முள்ளு முறுக்காக பிழியவும்.

குறிப்பு: 

தேங்காய்ப் பால் சேர்ப்பதால் முறுக்கு சிவப்பாக வரும். ஆனால், இதை ருசியில் மிஞ்ச முடியாது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 01, 2013 12:20 am

மசாலா ஓமப்பொடி



தேவையானவை:

கடலை மாவு - 200 கிராம்,
அரிசி மாவு - 2 டீஸ்பூன்,
பட்டை, லவங்கம், சோம்பு பொடி (சேர்த்து) - ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு,
ஓம வாட்டர் - 2 டீஸ்பூன்,
நெய் - ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள், உப்பு - சிறிதளவு.

30 வகை ஸ்வீட் - காரம் - Page 2 12

செய்முறை:

கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மஞ்சள்தூள், பட்டை - லவங்கம் - சோம்பு பொடி, நெய்... இவற்றோடு ஓம வாட்டர் சேர்த்து, மேலும் சிறிதளவு நீர் சேர்த்துப் பிசையவும். மாவை முறுக்குக் குழாயில் ஓமப் பொடி அச்சில் போட்டு சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 01, 2013 12:20 am

ஆலு அல்வா



தேவையானவை:

வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - 200 கிராம்,
மில்க்மெய்ட் - 2 டீஸ்பூன்,
பால்கோவா - 50 கிராம்,
சர்க்கரை - 100 கிராம்,
வறுத்த முந்திரி, உலர் திராட்சை - சிறிதளவு,
நெய் - 100 கிராம்,
பச்சைக் கற்பூரம் (பொடித்தது) - துளி அளவு.

30 வகை ஸ்வீட் - காரம் - Page 2 13

செய்முறை:


சர்க்கரையில் சிறிது நீர்விட்டு காய்ச்சி... இளகி முத்து கொதி வருகையில் (பாகு கொதிக்கும்போது முத்து முத்தாக நுரைத்து வரும்), மசித்த உருளைக்கிழங்கு, பால் கோவா உதிர்த்து சேர்த்துக் கிளறவும். அவ்வப்போது நெய் சேர்த்துக்கொண்டே கிளறவும். அல்வா பதம் வரும்போது மில்க்மெய்ட் சேர்த்து நன்கு கிளறி இறக்கி, மீண்டும் கிளறி... வறுத்த முந்திரி, உலர் திராட்சை, பச்சைக் கற்பூரம் சேர்த்தால்...  சப்புக் கொட்ட வைக்கும் சுவையில் ஆலு அல்வா தயார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 01, 2013 12:21 am

கார்ன்ஃப்ளார் அல்வா



தேவையானவை:

கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - 100 கிராம்,
சர்க்கரை - 150 கிராம்,
நெய் - 100 கிராம்,
கேசரி பவுடர் - சிறிதளவு,
வறுத்த முந்திரி, உலர் திராட்சை, வெள்ளரி விதை - சிறிதளவு,
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.
30 வகை ஸ்வீட் - காரம் - Page 2 14

செய்முறை:


சோள மாவில் கேசரி பவுடர் கலந்து, சிறிதளவு நீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும். சர்க்கரையில் ஒரு கரண்டி நீர் விட்டு முத்து பாகு வருகையில் (பாகு கொதிக்கும்போது முத்து முத்தாக நுரைத்து வரும்) கரைத்த சோள மாவு, நெய் சேர்த்து கைவிடாமல் கிளறவும். கலவை வெந்து 'பள பள’வென கிளாஸ் போல் வரும்போது ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, உலர் திராட்சை, வெள்ளரி விதை சேர்த்து, நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறிய பின் வில்லைகள் போடவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 01, 2013 12:22 am

மைதா வெனிலா கேக்



தேவையானவை:

மைதா - 150 கிராம்,
சர்க்கரை - 200 கிராம்,
நெய் - 100 கிராம்,
வெனிலா எசன்ஸ் - 2 சொட்டு (அதிகம் விட்டால் கசப்பாகிவிடும்).
30 வகை ஸ்வீட் - காரம் - Page 2 15

செய்முறை:

வாணலியில் நெய்யை சூடாக்கி, மைதா சேர்த்து பச்சை வாசனை போக வறுத்து இறக்கவும். சர்க்கரையில் சிறிதளவு நீர் சேர்த்து முத்து கொதி வரவிடவும் (பாகு கொதிக்கும்போது முத்து முத்தாக நுரைத்து வரும்). பின்னர் அடுப்பை அணைத்து, மைதா மாவு கலவையை சர்க்கரைப் பாகில் சேர்த்து நன்கு வேகமாக கிளறவும். இறுகும் சமயம் வெனிலா எசன்ஸ் சேர்த்து, நெய் தடவிய தட்டுக்கு மாற்றி, வில்லைகள் போடவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 01, 2013 12:23 am

ரோஸ் ஜிலேபி



தேவையானவை:


மைதா மாவு - 100 கிராம்,
சோள மாவு - 25 கிராம்,
கடலை மாவு - ஒரு டீஸ்பூன்,
கடைந்த தயிர் - 50 கிராம்,
சர்க்கரை - ஒரு கப்,
ரோஸ் எசன்ஸ் - சில துளிகள்,
ஆரஞ்சு அல்லது மஞ்சள் ஃபுட் கலர் - தேவையான அளவு,
சோடா உப்பு - ஒரு சிட்டிகை,
எண்ணெய் - 250 கிராம்.
30 வகை ஸ்வீட் - காரம் - Page 2 16

செய்முறை:

சர்க்கரையில் அரை கப் நீர் சேர்த்து, சிறிதளவு ஃபுட் கலர் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு, கம்பிப் பதம் வந்தபின் இறக்கி, ரோஸ் எசன்ஸ் சேர்க்கவும். மைதா மாவு, சோள மாவு, கடலை மாவு தயிர், சோடா உப்பு, சிறிதளவு ஃபுட் கலர் ஆகியவற்றை சிறிதளவு நீர் சேர்த்து இட்லி மாவு போல் கரைக்கவும். பால் கவரில் மாவை நிரப்பி, ஒரு மூலையில் சிறிய துளையிட்டு, சூடான எண்ணெயில் சிறிய வட்டமாக 3 அல்லது 4 முறை சுற்றி பிழிந்துவிட்டு பொரித்தெடுக்கவும். இதை சர்க்கரை பாகில் முக்கி எடுத்து, ஒன்றின் மீது ஒன்று படாதவாறு தட்டில் வைக்கவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 01, 2013 12:24 am

ஓமவல்லி துளசி லேகியம்



தேவையானவை:

ஓமவல்லி இலை - 10,
துளசி இலைகள், - 10,
இஞ்சி - ஓர் அங்குல நீள துண்டு (சுத்தம் செய்து, தோல் நீக்கவும்),
லவங்கம் - 3,
நெய் - 2 டீஸ்பூன்,
மிளகு - 10,
தேன் - 4 டீஸ்பூன்.
30 வகை ஸ்வீட் - காரம் - Page 2 17

செய்முறை:

மிளகு, லவங்கத்தை வறுத்துப் பொடிக்கவும். ஓமவல்லி, துளசி, இஞ்சியை விழுதாக்கவும். அடுப்பில் கடாயை வைத்து, நெய்யை விட்டு சூடாக்கி... அரைத்த விழுது, பொடித்த பொடி சேர்த்து நன்கு வதக்கவும். லேகியம் போல் ஆனதும் இறக்கி ஆற வைத்து, தேன் சேர்க்கவும். இந்த லேகியம் ஜீரணத்துக்கு உதவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 01, 2013 12:25 am

சுருள் போளி



தேவையானவை: 

மைதா - ஒரு கப், 
கடலை மாவு - ஒரு கப்,
சர்க்கரை (பொடித்தது) - முக்கால் கப்,
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு,
பொடியாக நறுக்கிய டிரைஃப்ரூட்ஸ் - கால் கப்,
துருவிய கலர் கொப்பரை - 2 டீஸ்பூன்,
நெய் - 3 டீஸ்பூன்,
எண்ணெய் - கால் கிலோ,
உப்பு - ஒரு சிட்டிகை.
30 வகை ஸ்வீட் - காரம் - Page 2 18

செய்முறை:

கடலை மாவை நெய்யில் சிவக்க வறுத்து... பொடித்த சர்க்கரை, ஏலக்காய்த்தூள், பொடியாக நறுக்கிய டிரைஃப்ரூட்ஸ் சேர்த்து பூரணம் தயாரிக்கவும். மைதாவை உப்பு, தேவையான நீர் சேர்த்து, கெட்டியாகப் பிசைந்து மெல்லிய, சற்றே பெரிய பூரி போல் இடவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, அடுப்பை சிறுதீயில் வைத்து, பூரிபோல் இட்டு வைத்ததை போட்டு பாதி வேகவிட்டு (மொறுமொறு என்று ஆகிவிடாமல்) எடுத்து, சூட்டோடு இருக்கும்போதே அதில் பூரணம் தூவி, உடனே பாய் போல் சுருட்டி, மேலே கலர் கொப்பரை தூவவும்.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 01, 2013 12:25 am

பனீர் ஜாங்கிரி



தேவையானவை:

முழு உளுத்தம்பருப்பு - 200 கிராம்,
சர்க்கரை - 200 கிராம்,
துருவிய பனீர் - 100 கிராம்,
பச்சரிசி - ஒரு டீஸ்பூன்,
ஏலக்காய் எசன்ஸ் - 2 சொட்டு,
ஃபுட் கலர் (கேசரி (அ) மஞ்சள்) - தேவையான அளவு,
நெய் - 100 கிராம்,
எண்ணெய் - 200 கிராம்.
30 வகை ஸ்வீட் - காரம் - Page 2 19

செய்முறை:

சர்க்கரையுடன்  ஃபுட் கலர், சிறிதளவு நீர் சேர்த்து, ஒற்றை கம்பி பதத்தில் பாகு காய்ச்சி, ஏலக்காய் எசன்ஸ் சேர்த்து வைக்கவும். உளுத்தம்பருப்பு, அரிசியை சேர்த்து, அரை மணி நேரம் ஊற வைத்து... நன்கு கெட்டியாக, மையாக அரைத்து  சிறிதளவு கலர் சேர்க்கவும். நெய் - எண்ணெயை கடாயில் சேர்த்து சூடாக்கவும். பால் கவரில் மாவை நிரப்பி, ஒரு மூலையில் சிறிய ஓட்டை போட்டு, கொதிக்கும் நெய் - எண்ணெயில் ஜாங்கிரிகளாக பிழிந்து, பொரித்தெடுக்கவும். அதை சர்க்கரை பாகில் போட்டு எடுத்து, பாகு உலரும் முன் துருவிய பனீர் சேர்க்கவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 01, 2013 12:26 am

கிரவுண்ட்நட் கிரிஸ்பீஸ்



தேவையானவை:



முழு வேர்க்கடலை (வறுத்தது) - 200 கிராம்,
கடலை மாவு - 50 கிராம்,
சோள மாவு - 2 டீஸ்பூன்,
சிவப்பு மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன்,
உப்பு, பெருங்காயத்தூள் - சிறிதளவு,
 எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.
30 வகை ஸ்வீட் - காரம் - Page 2 20

செய்முறை:

அனைத்து பொருட்களையும் சிறிதளவு நீர் விட்டு பிசிறி, சூடான எண்ணெயில் உதிர்த்தாற்போல் போட்டு எடுக்கவும்.

குறிப்பு:

கடலை மாவுக்குப் பதிலாக பொட்டுக்கடலை மாவும் சேர்க்கலாம்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக