புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 I_vote_lcapயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 I_voting_barயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 I_vote_rcap 
157 Posts - 79%
heezulia
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 I_vote_lcapயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 I_voting_barயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 I_vote_lcapயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 I_voting_barயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 I_vote_lcapயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 I_voting_barயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 I_vote_lcapயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 I_voting_barயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 I_vote_lcapயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 I_voting_barயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 I_vote_lcapயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 I_voting_barயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 I_vote_lcapயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 I_voting_barயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
prajai
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 I_vote_lcapயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 I_voting_barயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 I_vote_lcapயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 I_voting_barயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 I_vote_rcap 
322 Posts - 78%
heezulia
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 I_vote_lcapயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 I_voting_barயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 I_vote_lcapயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 I_voting_barயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 I_vote_rcap 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 I_vote_lcapயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 I_voting_barயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 I_vote_lcapயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 I_voting_barயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 I_vote_lcapயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 I_voting_barயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 I_vote_rcap 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 I_vote_lcapயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 I_voting_barயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

Barushree
யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 I_vote_lcapயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 I_voting_barயார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் இவர்? - ஸ்டாலின் !

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 28, 2013 8:17 pm

First topic message reminder :

யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 F4ZWrFDyTYO0zRpOvjco+E_1382591501

அரண்மனை வாயிலில் ஒரு சிப்பாய் நின்று கொண்டு இருந்தான். அவன் நல்ல உயரமாக இருந்தான். கரடித் தோலால் செய்யப்பட்ட உடுப்பு அணிந்திருந்தான். தலையில் உயரமான கம்பளிக் குல்லாய் தரித்திருந்தான். கையிலே நீண்ட துப்பாக்கி வைத்திருந்தான். அவன் ஆடாமல் அசையாமல் விறைப்பாக நிற்பதைப் பார்த்தால், "இது ஒரு சிலையாக இருக்குமோ!' என்ற சந்தேகம் கூடத் தோன்றும்.

அப்போது ஒரு சிறு பெண் அங்கே வந்தாள். அவள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் அரண்மனைக்குள்ளே வருவதைக் கண்டதும், அந்தச் சிப்பாய், கையில் இருந்த துப்பாக்கியைக் கீழே தாழ்த்தி மரியாதை செய்தான். அவள் உள்ளே சென்றதும் துப்பாக்கியை மேலே நிமிர்த்திப் பிடித்தான். அவளுக்கு இது வேடிக்கையாக இருந்தது.

சிறிது நேரம் சென்றது. திரும்பவும் அந்தச் சிறுமி வெளியே வந்தாள். அவள் வரும் போது சிப்பாய் முன் போலவே, மரியாதை செலுத்தினான். திரும்பவும் அவள் உள்ளே சென்றாள். அப்போது அவன் மரியாதை செலுத்தினான். திரும்பத் திரும்ப அவள் உள்ளே போவதும், வெளியே வருவதுமாக இருந்தாள். சிப்பாயும் தன் கடமையைச் சளைக்காமல் செய்தான்.
கடைசியாக அவளுக்கே சிரிப்பு வந்து விட்டது. அந்தச் சிப்பாயைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே, ""அடடே, நான் வைத்திருக்கிறேனே... சாவி கொடுத்தால் வேடிக்கை செய்யும் பொம்மை, அதைப் போலல்லவா இதுவும் செய்கிறது!'' என்று வியப்போடு கூறினாள்.

இதைக் கேட்டதும், அந்தச் சிப்பாய்க்குச் சிரிக்க வேண்டும் போலிருந்தது. ஆனாலும், வாய்க்குள்ளேயே சிரித்துக் கொண்டான்.
அந்தப் பெண்ணின் பதினோராவது வயதில் தான் அவளுடைய அப்பாவுக்கு முடி சூட்டு விழா நடந்தது. உலகத்தின் பல பாகங்களிலிருந்தும் அவருக்குப் பரிசுகள் வந்து குவிந்து கொண்டிருந்தன. அப்போது அந்தப் பெண்ணும் தன் கையால் அப்பாவுக்கு ஒரு பரிசளிக்க வேண்டுமென்று நினைத்தாள். உடனே கடை வீதிக்குச் சென்றாள். மிகவும் விலையுயர்ந்த மிகவும் அபூர்வமான ஒரு சாமானை வாங்கி வந்தாள் என்றுதானே நினைக்கிறீர்கள்? இல்லை; ஓரணா விலையில் ஒரு நோட்டுப் புத்தகத்தை வாங்கி வந்தாள். அதில் முடி சூட்டு விழாவைப் பற்றித் தனக்குத் தெரிந்ததை அழகாக எழுதினாள். மங்கலான சிவப்பு ரிப்பனால் அந்த நோட்டுப் புத்தகத்தில் உள்ள தாள்களைச் சேர்த்துக் கட்டினாள். அதன்மேலே, "அப்பாவின் முடிசூட்டு விழா ஞாபகார்த்தமாக நான் அளித்தது; நானே தயாரித்தது' என்று எழுதிக் கொடுத்தாள்.

அவளுடைய பதினோராவது வயதில் அவளுடைய அப்பாவுக்கு முடிசூட்டுவிழா நடந்தது. ஆனால், அவளுடைய இருபத் தேழாவது வயதில், அவளுக்கே முடிசூட்டு விழா நடக்கும் என்பது அப்போது அவளுக்குத் தெரிந்திருக்குமா? நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டாள்.இவள்தான் இருபத்தேழாவது வயதில் முடிசூட்டிய இங்கிலாந்து அரசி இரண்டாவது எலிசபெத் ராணி.

nandri - siruvarmalar

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84837
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 22, 2013 12:25 pm

சீனா வின் புகழ்பெற்ற அரசியல் தலைவராக விளங்கிய
மாசேதுங், தான் இழந்த செல்வாக்கை திரும்பப் பெறவே
1962ம் ஆண்டில் இந்தியாவுடன் போர் தொடுத்தார் என்று
சீன போர் வல்லு நரான வாங் ஜிசி கூறி யுள்ளார்.
-
அப்போது சீனா கைப்பற்றிய இந்திய பகுதியை இன்னும்
மீட்டுக்கொண்டேயிருக்கிறோம்...!!!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 25, 2013 8:52 pm

ayyasamy ram wrote:சீனா வின் புகழ்பெற்ற அரசியல் தலைவராக விளங்கிய
மாசேதுங், தான் இழந்த செல்வாக்கை திரும்பப் பெறவே
1962ம் ஆண்டில் இந்தியாவுடன் போர் தொடுத்தார் என்று
சீன போர் வல்லு நரான வாங் ஜிசி கூறி யுள்ளார்.
-
அப்போது சீனா கைப்பற்றிய இந்திய பகுதியை இன்னும்
மீட்டுக்கொண்டேயிருக்கிறோம்...!!!
விவரத்துக்கு நன்றி ராம் புன்னகை அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 25, 2013 8:53 pm

யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 OtcW4KdTaCATlrmGyail+E_1385034069

அது ஓர் ராணுவப் பள்ளிக்கூடம். அந்தப் பள்ளிக் கூடத்தில் பல மாணவர்கள் பயிற்சி பெற்று வந்தனர். பயிற்சி பெறும் நேரம் தவிர மற்ற நேரங்களில் ஓடி ஆடி விளையாட வேண்டுமென்பது அவர்களது ஆசை. ஆனால், பள்ளிக்கூடத்தைச் சுற்றி எங்கு பார்த்தாலும் ஒரே பனியாயிருக்கும். பாறை பாறையாய்ப் பனிக் கட்டிகள் உறைந்திருக்கும். ஆகையால், அவர்கள் விளையாட முடியவில்லையே... என்று ஏங்குவர்.

அவர்களது ஏக்கத்தை அறிந்தான் புதிதாக அங்கு வந்து சேர்ந்த ஒரு மாணவன். உடனே, "இதற்கு என்ன செய்யலாம்?' என்று யோசித்தான். சிறிது நேர யோசனைக்குப் பின், ஒரு முடிவுக்கு வந்தான். அந்த முடிவுப்படி மற்ற மாணவர்களை அழைத்துக்கொண்டு பனிப்பாறைகள் நிறைந்திருக்கும் ஓர் இடத்திற்குச் சென்றான். அவர்களுடன் சேர்ந்து பனிக்கட்டிகளால் அங்கேயே ஓர் அரண் ஏற்படுத்தினான். பிறகு என்ன செய்தான் தெரியுமா?

நண்பர்களில் பாதிப்பேரை அரணுக்கு அந்தப் பக்கத்திலும், பாதிப்பேரை இந்தப் பக்கத்திலும் நிற்க வைத்தான். பிறகு, இந்தப் பக்கத்தில் நிற்போரைப் பார்த்து, ""தோழர்களே, நீங்கள்தான் எதிரிகள் என்று நினைத்துக் கொள்ளுங்கள். இப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும், தெரியுமா? இந்த அரணைத் தாக்க வேண்டும்,'' என்றான்.

அதே சமயம், அந்தப் பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து, ""நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? எதிரிகள் அரணைத் தாக்காதபடி தடுத்துக் காக்க வேண்டும். அது மட்டுமல்ல... அவர்களைப் புறமுதுகு காட்டி ஓடும்படி செய்யவும் வேண்டும். சரிதானா... ம் நடக்கட்டும் யுத்தம்!'' என்று முழங்கினான்.அவ்வளவுதான், இரு சாராரும் யுத்தத்தில் இறங்கி விட்டனர். வெகு மும்முரமாக யுத்தம் நடந்தது.

அந்தப் போலி யுத்தத்தைப் பார்க்க சுற்றுப் புறத்திலுள்ள மக்களெல்லாம் வந்து கூடி விட்டனர். அவர்கள், யுத்தம் செய்யும் முறையைத் திறமையாகக் கற்றுக் கொடுத்த அந்த மாணவனைப் பாராட்டினர்."இவன் இவ்வளவு சிறியவனாக இருக்கிறான்! இந்த வயதிலேயே போர் நடத்தும் முறையை மிகவும் நன்றாகத் தெரிந்து கொண்டிருக்கிறானே!' என்று கூறி வியந்தனர்.

அதே மாணவன் ஒரு காலத்தில் மிகமிகப் பெரிய வீரனாக விளங்குவான் என்றோ, ஐரோப்பாக் கண்டத்தை ஆட்டி வைப்பான் என்றோ, அப்போது யாரும் நினைத்திருக்கவில்லை. உருவத்தில் குள்ளமான அந்த நபரை உங்களால் யூகிக்க முடிகிறதா?

விடை: அந்த வீரர், மாவீரன் நெப்போலியன். அவர் பெயரை கேட்டாலே பெரிய அரசர்கள் கூட நடுங்குவர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Nov 25, 2013 10:27 pm

நெப்போலியன் - வீரத்தின் மறு பெயர். தகவல் அருமை.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 29, 2013 8:47 pm

யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 FJqsw3AQ6ywBk4Zo9W2w+E_1385639515(1)

பள்ளியில் பரீட்சை நடந்து கொண்டிருந்தது. கேள்வித்தாளில் மொத்தம் எட்டுக் கேள்விகள் இருந்தன. அவற்றில் நான்கு கேள்விகளுக்கு மட்டுமே விடை எழுதினால் போதும் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டிருந்தது. ஆனாலும், அந்த எட்டுக் கேள்விகளுமே கடினமான கேள்விகள். அதனால் கேள்வித்தாளைப் பார்த்ததும் அங்கிருந்த மாணவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவர்கள் எதிர்பார்த்த கேள்விகளில் ஒன்று கூட வரவில்லை. கேள்வித்தாளைப் பார்த்துப் பார்த்து அவர்கள் திகைத்துக் கொண்டிருந்தனர்.

அவர்களில் மிகவும் கெட்டிக்கார மாணவன் ஒருவன் இருந்தான். அவனும் கேள்வித்தாளைப் பார்த்து விழித்துக் கொண்டு தான் இருந்தான்.கேள்விகள் இவ்வளவு கடினமாக இருக்கின்றனவே! எப்படிப் பதில் எழுதுவது? என்று எண்ணி அவன் விழிக்கவில்லை; இந்த எட்டுக் கேள்விகளில் நான்கு கேள்விகளுக்கு மட்டும்தானே விடை கேட்டிருக்கிறார்கள்? எந்த நான்கிற்கு விடை எழுதுவது?' என்று தெரியாமல்தான் அவன் விழித்தான்.

சிறிதுநேரம் இப்படி யோசனை செய்தான். கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தான். விறுவிறு என்று விடை எழுத ஆரம்பித்தான். அந்த எட்டுக் கேள்விகளுக்குமே விடை எழுதிவிட்டான். விடைகளின் அடியிலே ஒரு குறிப்பையும் எழுதி வைத்தான்.
""ஐயா, பரீட்சை அதிகாரி அவர்களே, எட்டுக் கேள்விகளுக்குமே விடை எழுதி விட்டேன். ஏதேனும் நான்கு விடைகளுக்கு, மார்க் போட்டால் போதும்!'' என்று எழுதியிருந்தான்.

பரீட்சை அதிகாரி அவனது விடைகளைப் படித்துப் பார்த்தார், குறிப்பையும் படித்துப் பார்த்தார். அவருக்கு ஒரே திகைப்பாக இருந்தது.
எந்த நான்கு விடைகளுக்கு மார்க் போடுவது? என்றே அவருக்கு புரியவில்லை! ஏன் தெரியுமா? அவன் எழுதியிருந்த எட்டு விடைகளுமே மணி மணியாக இருந்தன!

இவ்வளவு தூரம் கெட்டிக்காரனாக இருந்த அந்த மாணவன் பெரியவனானதும், ஒரு வக்கீலாக விளங்கினான். மாதம் ரூபாய் நாலாயிரம், ஐயாயிரம் சம்பாதித்தான். ஆனாலும், வருமானத்தைப் பெரிதாகக் கருதவில்லை. வக்கீல் தொழிலை உதறித் தள்ளி விட்டு, தேச விடுதலைக்காகப் பாடுபட்டான். காந்திஜியின் முக்கிய சீடனாக விளங்கினான். நம் பாரத நாட்டின் முதல் ஜனாதிபதியாகவும் விளங்கினான். அவர் யார் என்று இப்பவாவது கண்டுபிடிச்சிட்டீங்களா?

விடை: பாபு ராஜேந்திர பிரசாத்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 29, 2013 8:47 pm

M.M.SENTHIL wrote:நெப்போலியன் - வீரத்தின் மறு பெயர்.  தகவல் அருமை.

நன்றி செந்தில் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 09, 2013 6:43 pm

யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 Zt2vdQZQKGlo5WwQcWOz+E_1386227689

அண்ணன் சொந்தமாக ஒரு பத்திரிகை நடத்தி வந்தார். சொந்தமாக ஓர் அச்சகமும் வைத்திருந்தார். அங்கேதான் அவருடைய சொந்தத் தம்பியும் வேலை பார்த்து வந்தான். எழுத்துக் கோப்பது, அச்சடிப்பது, பத்திரிகையை வீட்டுக்கு வீடு கொண்டுபோய்ப் போடுவது, இப்படிப்பட்ட வேலைகளை எல்லாம் அந்தத் தம்பி செய்து வந்தான்.

அவனுக்கு நிறையப் படிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. நிறையப் படித்துத் தானும் ஓர் எழுத்தாளனாக வேண்டும் என்ற ஆசை தோன்றியது. மனதில் தோன்றியதை எல்லாம் எழுதினான். எழுதியதையெல்லாம் பத்திரிகைகளில் வெளியிட விரும்பினான். அண்ணனிடம் கட்டுரைகளைக் கொடுத்தால் அவர் வெளியிடுவாரா? என்று யோசித்தான். கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தான்.
ஒருநாள் இரவு, தான் எழுதிய ஒரு கட்டுரையை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டுப் புறப்பட்டான். நேராக அச்சகத்தை அடைந்தான். தெருப்பக்கமாக இருந்த ஜன்னல் வழியாக ஆசிரியரின் அறைக்குள் கட்டுரை யைப் போட்டுவிட்டு வீடு திரும்பினான். இதை அப்போது எவருமே பார்க்கவில்லை.

மறுநாள் காலையில் ஆசிரியரான அண்ணன், அறைக்குள் நுழைந் தார். கீழே ஒரு காகிதக் கற்றை கிடப்பதைக் கண்டார். உடனே குனிந்து அதை எடுத்தார்; படித்துப் பார்த்தார். கட்டுரை மிகவும் நன்றாக இருந்தது. எழுதியவர் யார் என்று பார்த்தார். பெயரைக் காணோம்! திரும்பித் திரும்பிப் பார்த்தார். பயனில்லை. <உடனே, அந்த கட்டுரையைத் தம்முடைய நண்பர்களிடம் காட்டினார். எல்லாரும் அதை மிக மிகப் பாராட்டினர். பத்திரிகைகளில் உடனே வெளியிட வேண்டும் என்றும் சொன்னார்கள். அவர்கள் சொன்னபடியே அண்ணன் செய்தார்.

தம்பி இப்படியே பல கட்டுரையை எழுதி எவருக்கும் தெரியாமல் அறைக்குள் போட்டு வைத்தான். எல்லாமே அச்சில் வந்தன. ஆனாலும், எழுதியவர் யார் என்று மட்டும் அவர்களுக்குத் தெரியவில்லை.
"புகழை, விரும்பாத ஓர் அறிஞர்தான் இப்படிச் செய்து வருகிறார்!' என்று நினைத்தார்.
ஆனால், எவ்வளவு நாட்களுக்கு தான் இது ரகசியமாகவே இருக்க முடியும்? ஒருநாள் அம்பலமாகி விட்டது. உண்மை தெரிந்ததும், எல்லாரும், தம்பியைப் பாராட்டினர். அதே தம்பி பிற்காலத்தில் ஒரு சிறந்த பத்திரிகை ஆசிரியராக விளங்கினார்.

அரசியல், கலை, விஞ்ஞானம், வேதாந்தம், பொருளாதாரம் முதலிய எல்லாவற்றிலும் அவன் நிபுணனாக விளங்கினான்.

அவர் யார் என்று உங்களுக்கு தெரிகிறதா?

விடை: அந்த தம்பி தான் இவர் பெஞ்சமின் பிராங்களின். அவர் கண்டுபிடித்த "இடிதாங்கி'யால் தான் இன்று பெரிய பெரிய கட்டடங்களெல்லாம் இடியினால் சேதமாகாமல் நிமிர்ந்து நிற்கின்றன.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
KINGUMAR
KINGUMAR
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 27/09/2013

PostKINGUMAR Mon Dec 09, 2013 8:03 pm

யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 3838410834 யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 103459460 யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 103459460 யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 103459460 தொடருங்கள் .....

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 20, 2013 10:06 pm

KINGUMAR wrote:யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 3838410834 யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 103459460 யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 103459460 யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 103459460 தொடருங்கள் .....

நன்றி உமர் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 20, 2013 10:07 pm

யார் இவர்? - ஸ்டாலின் ! - Page 3 NTwfZHcBRRaaL4vQvvbD+E_1387452959

ஒரு பணக்காரருக்கு சில பெண் குழந்தைகள் இருந்தனர். அந்தக் குழந்தைகளை அவர் வெளியில் அனுப்பவே மாட்டார். வீட்டுக்குள்ளேயே அடைத்து வைப்பார். ஆண் குழந்தைகளுடன் அவர்கள் பேசக் கூடாது; சேர்ந்து விளையாடக் கூடாது என்பது அவரது கண்டிப்பான உத்தரவு!

அந்தப் பணக்காரர் வீட்டுக்கு எதிரில் சமீபத்தில் ஒரு வீடு குடியேறியது. அந்த வீட்டில் ஒரு சில பையன்கள் இருந்தனர். அதில் ஒரு பையனுக்கு அந்தப் பணக்காரருடைய போக்குபிடிக்கவில்லை. ஒருநாள் அந்தப் பணக்காரரிடத்திலே இதைக் கூறி விட்டான். உடனே அவருக்குக் கோபம் வந்து விட்டது.""நான் அப்படித்தான் செய்வேன். எங்கே எந்த பயலாவது என் பெண்கள் இருக்கும் இடத்திற்குப் போய் விடட்டும், பார்க்கலாம்,'' என்று வீராப்பாகப் பேசினார்.

""ப்பூ, என்ன பிரமாதம்! நானே போய்க் காட்டுகிறேன்,'' என்று சிரித்துக் கொண்டே சொன்னான் அந்தப் பையன். அவன் ஏதோ விளையாட்டாகச் சொல்கிறான் என்றே பணக்காரர் நினைத்தார். ஆனால், அவன் அதை காரியத்திலே காட்டிவிட்டான்.
ஒருநாள் மாலை நேரம், அந்தப் பையன் ஒரு சிறுமியைப் போல் அழகாக வேஷம் போட்டுக் கொண்டான். வேஷம் அவனுக்கு மிக மிகப் பொருத்தமாக இருந்தது. யாராலும் அவனை அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. அந்த வேஷத்துடன் அவன் பணக்காரர் வீட்டுக்கு போனான். பணக்காரரின் முன்னே போய் நின்றான்.

""ஐயா, நான் பக்கத்து ஊர்க்காரி. இந்த ஊர்ச் சந்தைக்கு வந்தேன். என் கூட வந்தவர்கள், என்னைத் தனியாக விட்டு விட்டுப் போய்விட்டனர். இருட்டிப் போனதால் ஊருக்குப் போக பயமாயிருக்கிறது. இன்றிரவு மட்டும் இங்கே தங்குவதற்கு இடம் கொடுப்பீர்களா?'' என்று தயவாய்க் கேட்டான்.பணக்காரரின் மனம் உடனே இளகிவிட்டது.""சரி, வா!'' என்று பெண் வேஷத்திலிருந்த அந்தப் பையனை அந்தப்புரத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்த அவருடைய பெண் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

பணக்காரருடைய பெண்களும் அவனை ஒரு பெண் என்றே நம்பி விட்டனர். அவனிடம் அன்பாகப் பேசினர். தின்பதற்கு பலகாரங்கள் கொடுத்தனர். அவனுடன் சேர்ந்து விளையாடினர். மூன்று மணி நேரம் இப்படி ஓடி விட்டது.

அப்போது,""தம்பி! தம்பி!'' என்ற குரல் தெருவிலிருந்து வந்தது. அந்தக் குரலைக் கேட்டதும், பெண் வேஷத்திலிருந்த அந்தப் பையன், ""அண்ணா, இதோ வந்துவிட்டேன்!'' என்று கூறிக்கொண்டே எழுந்தான். தன்னைத் தேடிக்கொண்டு வந்த அண்ணன் வாசலில் நிற்பதைக் கண்டான். உடனே வாசலை நோக்கி ஓடினான். அப்போதுதான் எல்லாருக்கும் உண்மை தெரிந்தது. அவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். அன்றுமுதல், அந்தப் பணக்காரர் பெண்களை வீட்டுக்குள் அடைத்து வைப்பதே இல்லை.

அன்று மாறுவேஷம் போட்டு பணக்காரரின் மனதை மாற்றிய அந்தப் பையனின் பெயர் "கதாதரன்.' இவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா?

விடை: பணக்காரரின் மனதை மாற்றியது இவர்தான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்!

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக