புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என் பெயர் அன்னபூரணி by க்ருஷ்ணாம்மா :)  Poll_c10என் பெயர் அன்னபூரணி by க்ருஷ்ணாம்மா :)  Poll_m10என் பெயர் அன்னபூரணி by க்ருஷ்ணாம்மா :)  Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
என் பெயர் அன்னபூரணி by க்ருஷ்ணாம்மா :)  Poll_c10என் பெயர் அன்னபூரணி by க்ருஷ்ணாம்மா :)  Poll_m10என் பெயர் அன்னபூரணி by க்ருஷ்ணாம்மா :)  Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
என் பெயர் அன்னபூரணி by க்ருஷ்ணாம்மா :)  Poll_c10என் பெயர் அன்னபூரணி by க்ருஷ்ணாம்மா :)  Poll_m10என் பெயர் அன்னபூரணி by க்ருஷ்ணாம்மா :)  Poll_c10 
3 Posts - 4%
Baarushree
என் பெயர் அன்னபூரணி by க்ருஷ்ணாம்மா :)  Poll_c10என் பெயர் அன்னபூரணி by க்ருஷ்ணாம்மா :)  Poll_m10என் பெயர் அன்னபூரணி by க்ருஷ்ணாம்மா :)  Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
என் பெயர் அன்னபூரணி by க்ருஷ்ணாம்மா :)  Poll_c10என் பெயர் அன்னபூரணி by க்ருஷ்ணாம்மா :)  Poll_m10என் பெயர் அன்னபூரணி by க்ருஷ்ணாம்மா :)  Poll_c10 
2 Posts - 3%
viyasan
என் பெயர் அன்னபூரணி by க்ருஷ்ணாம்மா :)  Poll_c10என் பெயர் அன்னபூரணி by க்ருஷ்ணாம்மா :)  Poll_m10என் பெயர் அன்னபூரணி by க்ருஷ்ணாம்மா :)  Poll_c10 
2 Posts - 3%
prajai
என் பெயர் அன்னபூரணி by க்ருஷ்ணாம்மா :)  Poll_c10என் பெயர் அன்னபூரணி by க்ருஷ்ணாம்மா :)  Poll_m10என் பெயர் அன்னபூரணி by க்ருஷ்ணாம்மா :)  Poll_c10 
2 Posts - 3%
Rutu
என் பெயர் அன்னபூரணி by க்ருஷ்ணாம்மா :)  Poll_c10என் பெயர் அன்னபூரணி by க்ருஷ்ணாம்மா :)  Poll_m10என் பெயர் அன்னபூரணி by க்ருஷ்ணாம்மா :)  Poll_c10 
1 Post - 1%
சிவா
என் பெயர் அன்னபூரணி by க்ருஷ்ணாம்மா :)  Poll_c10என் பெயர் அன்னபூரணி by க்ருஷ்ணாம்மா :)  Poll_m10என் பெயர் அன்னபூரணி by க்ருஷ்ணாம்மா :)  Poll_c10 
1 Post - 1%
manikavi
என் பெயர் அன்னபூரணி by க்ருஷ்ணாம்மா :)  Poll_c10என் பெயர் அன்னபூரணி by க்ருஷ்ணாம்மா :)  Poll_m10என் பெயர் அன்னபூரணி by க்ருஷ்ணாம்மா :)  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் பெயர் அன்னபூரணி by க்ருஷ்ணாம்மா :)  Poll_c10என் பெயர் அன்னபூரணி by க்ருஷ்ணாம்மா :)  Poll_m10என் பெயர் அன்னபூரணி by க்ருஷ்ணாம்மா :)  Poll_c10 
24 Posts - 77%
ரா.ரமேஷ்குமார்
என் பெயர் அன்னபூரணி by க்ருஷ்ணாம்மா :)  Poll_c10என் பெயர் அன்னபூரணி by க்ருஷ்ணாம்மா :)  Poll_m10என் பெயர் அன்னபூரணி by க்ருஷ்ணாம்மா :)  Poll_c10 
2 Posts - 6%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் பெயர் அன்னபூரணி by க்ருஷ்ணாம்மா :)

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 18, 2013 8:51 pm

என் பெயர் அன்னபூரணி by க்ருஷ்ணாம்மா :)  PhA0LLW4QjuGb05ep1PG+E_1380798782

வாயிலில் ஏதோ அரவம் கேட்டது. நான் இலேசாய்த் தலையை மட்டும் நீட்டி வெளியே பார்க்க, மாமியார் லக்ஷ்மி ஒரு பெரிய பையுடன் உள்ளே வந்து கொண்டிருப்பது தெரிந்தது. பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை நிகழும் நிகழ்ச்சி இது. கணவன்சந்திரசேகரின் குரல் பின்னாலிருந்து காட்டமாய் ஒலித்தது.
""அம்மா வர்ராங்க பாரு அமுதா. ஓடிப்போய் பையை வாங்கி வை''.

""என் பெயர் அமுதா இல்லை; அன்னபூரணி.. என்று உரத்துச்சொல்லி என்னை நிரூபிக்க வேண்டும்போல் இருந்தது. ஆனால் இந்த இருபதுக்கும் மேற்பட்ட வருடங்களில் என் சொற்கள் நெஞ்சுக் குழிக்குள்ளேயே சிக்கிக் கொண்டு, நான் ஊமையாகவே போய்விட்ட அவலம் எனக்கு மட்டுமே தெரிந்த உண்மை.இந்த வீட்டின் சமையலறைச் சுவர்கள் என் மௌன விசும்பல்களையும் கண்ணீர்ப் புலம்பல்களையும் கேட்டுக் கேட்டுக் கறை படிந்து போய்விட்டன.சந்திரசேகர் வருடத்திற்கொருமுறை தவறாமல் வெள்ளையடித்து வீட்டைப் புதுப்பித்து விடுவான்.""என்ன டிபன் செஞ்சுருக்கே?''""இட்லி சட்னி.''

""உனக்குத்தான் தெரியுமே அம்மாவுக்கு இட்லி பிடிக்காதுன்னு... அரிசி உப்புமாவும் கொத்ஸும் செஞ்சுடு''. ஹோட்டலில் ஆர்டர் கொடுப்பது போல சொல்லிவிட்டு என் புருஷன் பின்புறமாய் நகர்ந்து போனான்.
கொல்லைப்புற மாமரத்து நிழலில் அம்மாவும் பிள்ளையும் உட்கார்ந்திருக்கிறார்கள்.
திருச்சியின் ஸ்ரீரங்கத்துக் கதைகளையும் அக்கம் பக்க வம்புகளையும் அ"மமா ராகம் போட்டுப்பாட, பிள்ளை "உம்' கொட்டியபடி கேட்டுக் கொண்டிருக்கிறது.

திருமணம் முடிந்த கையோடு நாங்கள் இவரின் வேலை காரணமாக தஞ்சாவூருக்குக் குடிவந்தபொழுது மாமியார் திருச்சியில் தன் சொந்த வீட்டிலேயேதான் தங்க முடிவு செய்திருப்பதாகவும் எங்களுக்குத் தொந்தரவாக இருக்க தனக்கு விருப்பமில்லை என்றும் சொன்னபொழுது அந்தப் பெருந்தன்மையை நினைத்து நான் வியந்துதான் போனேன்.ஆனால் சரியாக பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை இங்கு வந்து திரி பற்றவைத்து கொளுத்திப் போட்டுவிட்டுப் போய்விடுவாள். அனலும் தணலுமாய் இங்கு வெடித்து, ஓய்ந்து முடிந்து சப்தங்கள் குறைந்து சமாதானம் ஆரம்பமாகும் சமயம், மறுபடியும் இவளது வருகை நெருப்புக் கங்காய் வந்துவிழும்.

சந்திரசேகர், அம்மா ஊருக்குப் போனபின்னர் அந்தத் தாக்குதலினால் அடுத்த ஒரு வாரம் முகம் சிடுசிடுத்தபடி இருப்பான்.
""ம்... அ"மமா ரொம்ப குறைப்பட்டுக்கறாங்க. நீ அம்மாகிட்டே பொறுமையா உட்கார்ந்து கலகலன்னு பேசறதே இல்லையாம். அதுவே உங்க அம்மாகிட்ட மணிக்கணக்கிலே ஃபோன்ல பேசிக்கிட்டிருக்கியாம். எனக்கு இங்கு வர்றதுக்கே யோசனையா இருக்குடா''ன்னு சொல்லிட்டுப் போறாங்க. நீ ஏன் இப்படி இருக்கே?''

இவன் அம்மாவின் தேள் கொட்டும் பேச்சுக்களைக் கேட்டுக்கொண்டே நான் இப்பொழுதெல்லாம் பேசுவதையே குறைத்துக் கொண்டுவிட்டேன் என்பது தெரிந்தும்" இப்படிக் கேட்பவனிடம் நான் என்ன பதிலைச் சொல்ல முடியும்?
ஆனாலும் சமாதானமாகப் பேசத் தொடங்குவேன்.

""எத்தனைதான் செஞ்சாலும் ஏதாவது குற்றம் கண்டுபிடிச்சுக்கிட்டே இருக்கறவங்களை என்ன செய்ய முடியும்?''
இப்படித் தொடங்கும் பேச்சு முடிவில்லாமல் போய்க் கொண்டேயிருக்கும். கடைசியில் என்னைப் பற்றிய அவதூறான பேச்சுகளுடன் எல்லாம் முடிந்துபோகும்.

அம்மா ஊருக்குச் சென்றபின்னர் கொஞ்சம் கொஞ்சமாய் அவன் முகமும் மனமும் மாறி சுயபுத்தியுடன் நடந்துகொள்ள ஆரம்பிப்பான்.செல்லம், செல்லம் என்று அவன் பின்னால் வந்து கொஞ்சுகையில் திராவகம் கொட்டப்படாமலே உடம்பு பற்றிக்கொண்டாற்போல் எரியும்.

இது என்ன இரட்டை வேடம்? முழுக்க முழுக்க கயவன்களையும் கோபக்காரன்களையும் கூடப் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் "அம்மாவுக்கு முன்னால்', "அம்மாவுக்குப் பின்னால்' என்று முகமூடி போட்டுக்கொண்டு திரிகிறவன்களை எல்லாம் கட்டி வைத்து உதைக்கலாம் போல் இருக்கிறது.கொல்லைப் புறமிருந்து சப்தம் கேட்கிறது.

""உப்புமா ஆயிடுச்சுன்னா தட்டு போட்டுடு. அம்மாவுக்கு ஷûகர் இருக்கு. தலைசுற்றல் வந்துடும்''.
அவசரமாக தட்டையும், தண்ணீரையும் எடுத்து வைக்கிறேன்.
ஒரு காலத்தில் இவனை எனக்கென்று தக்க வைத்துக்கொள்ள எத்தனையோ போராடியிருக்கிறேன்.
அரிசிமாவுக் கோலத்தைப் போட்டவுடன் சுற்றி வந்து மொய்க்கும் பிள்ளையார் எறும்புகளைப் போல இவன் அலுவலகத்திலிருந்து வந்தவுடன் சுற்றிச்சுற்றி வந்திருக்கிறேன்.

மனம் முழுவதும் பிரியமும், உருகுதலுமாக இவனுக்காகக் காத்திருக்கிறேன். ஆனால் இவனது நிலையில்லாத குணம் ஒரு நிலைக்கு என்னைத் தள்ளிக்கொண்டு வந்து கல்லாய் நிற்க வைத்துவிட்டது.

"இஷ்டமிருந்தா இங்கே இரு. இல்லாட்டி வெளியே போயிடு'. என் வழி நெடுகிலும் அவ்வப்பொழுதுவீசப்படும் இந்த வார்த்தைகள் சிலீரென்று ஒரு பயத்தை அடிவயிற்றில் உருவகிக்க பதில் பேசாமல் நகர்ந்து விடுவேன். எந்தகையாலாகத்தனம் என்னை இப்படி பிசின் போட்ட மாதிரி ஒட்ட வைத்திருக்கிறது? திருமணமான புதிதில் அவனது இந்தப் பேச்சுக்கள் என்னை நிரம்பவும் யோசிக்க வைத்திருக்கின்றன. ஆனால் வீட்டுக்குப் போய் சும்மா உட்கார்ந்து தங்கைகளின் வாழ்க்கையைக் கேள்விக் குறியாக்க என்னால் முடியாது. ஒரு பெண்ணைக் கரையேற்றிவிட்ட திருப்தியில் இருக்கும் மிடில் கிளாஸ் தந்தையினால் தன் மகளின் எந்தப் புகுந்த வீட்டுப் புகார்களையும் ஏற்றுக் கொள்ள முடியாதுதான்.

"அன்னபூரணி' என்கிற பெயர் இனிமேல்வேண்டாம்... என் தூரத்து உறவுலே ஒருத்தி பேரு அன்னபூரணி. அவளுக்கும் எனக்கும் ஆகவே ஆகாது. அமுதான்னு உன் பெயரை மாத்தியாச்சு. ""மாமியார் இப்படிச் சொல்ல திருமணமான இருபத்திநான்கு மணி நேரத்தில் என் அடையாளமான "அன்னபூரணி' அழிக்கப்பட்டு நான் அமுதாவாக்கப்பட்டேன்.
""அமுதா'ங்கற நேரும் நல்லாத்தானே இருக்கு?''

அப்பா அசட்டுச் சிரிப்புடன் சொல்ல, அம்மாவும் ஆமோதித்தாள்.மிடில் கிளாஸ் தந்தைகள் இந்த அசட்டுச் சிரிப்பை ஒரு கவசம் மாதிரி உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள்.கொல்லைப்புற மரத்திலிருந்து ஒரு குயில் கிழக்கு நோக்கிப் பறக்கிறது.""அமுதா' ஒரு ஜக் காஃபி போட்டு எடுத்துட்டு வா''.மாமியார் வந்திருப்பதைப் பார்த்து இந்தத் தெருவில் வசிக்கும் அவர் வயதையொத்த பெண்கள் ஐந்தாறுபேர் வந்து வாயில் நடைகளிலும்", தாழ்வாரத்திலும் உட்கார்ந்திருக்கிறார்கள்.

வம்புப் பேச்சுக்களுக்கு தாளம் போட, இங்கும் ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது.
""என் பையனை நான் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு படிக்க வச்சேன் தெரியுமா?'' என்று ராகம் போட்டு ஆரம்பிப்பாள்.
வந்திருக்கும் வெட்டிக் கும்பலிடம் இவள் ஏதேதோ புதிது புதிதாகக் கதைசொல்வாள்.

""ஏழை வீட்டிலிருந்து வந்தது இது. இப்ப மினுக்கிக்கிட்டுத் திரியுது'' என்பாள். என் பெரியம்மா பெண் என்றோ வீட்டை விட்டு ஓடிப்போய் பதிவுத் திருமணம் செய்து கொண்டதைப் பற்றி பத்தி பத்தியாகப் பேசுவாள்.
காஃபி போட்டுக் கொடுத்துவிட்டு உள்ளே செல்கையில் தொலைபேசி ஒலித்தது. என் ஒரே மகள் ஸ்ரீமதி கோயம்புத்தூரில் இருந்து பேசினாள்."எப்படிம்மா இருக்கே?'"ம்... எல்லாரும் ஃபைன்மா! அம்மா, ஒரு சந்தோஷமான செய்தி. அடுத்த வாரம் நான் நம்ம வீட்டுக்கு வந்து உன்னோட ஒரு வாரம் தங்கப் போறேன்.'

அவளது சந்தோஷம் என்னையும் தொற்றிக் கொள்ளவே அடுத்த அரைமணி நேரம் எதையெதையோ பற்றி பேசிவிட்டு தொலைபேசியை வைக்கிறேன.ஸ்ரீமதியைக் கட்டிக் கொடுத்து ஆறு மாதம்தான் ஆகிறது. மாப்பிள்ளை சுரேஷ் ஸ்ரீமதியைப் பூப்போல் பார்த்துக் கொள்கிறார். அது ஒன்றுதான் மனதுக்கு நிறைவாக இருக்கிறது.

இந்த ஸ்ரீமதி தளிர்நடை பயில்கையில், அடுத்து பள்ளிக்குச் செல்லும் கால கட்டங்களில், என்று ஒவ்வொரு முறையும் தாள முடியாமல் இவனைப் பிரிவது பற்றி நிறைய யோசித்திருக்கிறேன். ஆனால் "அப்பா எங்கே?' என்று கேட்கும் குழந்தைக்கு அப்பாவைக் காட்ட வேண்டிய கடமை எனக்கு இருக்கிறதே! என் அப்பா, அம்மாவை நினைத்து என்ன சொல்வார்களோ என்று பயந்திருக்கிறேன். இந்த சமூகத்தை நினைத்தும் நடுங்கியபடியே தாள முடியாத உத்வேகத்துடன் என் நினைப்புகளை அப்படியே அள்ளி குப்பைக் கூடையில் போட்டிருக்கிறேன்.அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய சந்திரசேகரிடம் ஸ்ரீமதி வரப்போவது பற்றி சொல்ல, எப்போதும் போல் இயந்திரமாய் தலையை ஆட்டுகிறான்.

இரவு முழுவதும் உறக்கம் வரவில்லை. அம்மாவும், பிள்ளையுமாய் கொட, கொடவென்று ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். "குக்கூ... குக்கூ...' என்று நீளமாய் குரல் எழுப்பும் குயில்களின் ஒலி கேட்டு அதிகாலையில் எழுந்க்ஷது கொண்டேன். அந்த இரவு வேளையில் அழகான முடிவு எடுத்ததற்காக எனக்கு நானே நன்றி சொல்லிக் கொண்டேன். இந்தத் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையை விட்டுப் பிரிவதற்கு இனி எனக்கு எந்தத் தடையும் இருக்கப் போவதில்லை. ஒரே மகள் ஸ்ரீமதிக்கு நல்லபடியாக திருமணம் நடந்து முடிந்துவிட்டது.

எதையெதையோ வாழ்க்கையில் விட்டு விட்ட நான் வீணை வாசிப்பதை மட்டும் நிறுத்தி விடவில்லை. ஒரு பத்துக் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து அதில் வரும் பணத்தில், ஒரு சின்ன ஃபோர்ஷனில் ரசம் சாதம் சாப்பிட்டு நிம்மதியாகக் காலத்தைக் கழிக்க முடியாதா என்ன?

"இனி எனக்காக நான் வாழ வேண்டும். வாழப் போகிறேன்.. எனக்காக... எனக்காக மட்டுமே...'
இந்த விடியற்காலை எனக்கு அற்புதமாக இருந்தது. ரசனையுடன் காஃபியைக் குடிக்க ஆரம்பித்தேன்.
அடுத்து வந்த ஒரு வாரத்தில் என் முடிவை மேலும் மேலும் நான் உறுதிப்படுத்திக் கொண்டேன்.
ஸ்ரீமதி வந்துவிட்டாள். அவளோடு பெரிய கோயிலுக்குப் போனேன். சுற்றுப்புறமிபருந்த பிராகாரத்தில் அவளை உட்கார வைத்து சுற்றி வளைக்காமல் நேரிடையாக நான் எடுத்திருக்கும் முடிவை சொன்னேன்.

"ஸ்ரீமதி! எப்படியெப்படியோ வாழ்ந்துவிட்டேன். இனி எனக்காக... சுதந்திரமாக... நிஜமா வாழணும்னு ஆசை வந்துடுச்சு. நீ என்னை நன்றாக புரிஞ்சுக் கிட்டவ. மறுப்பு சொல்ல மாட்டேன்னு நம்பறேன்.'ஸ்ரீமதி அதிர்ந்து போனவளாய் என்னையே பார்த்தாள்.சிறிது நேரம் எதுவும் பேசாமல் இருந்தாள். அந்த அமைதி எனக்கு அச்சத்தைக் கொடுப்பதாகவே இருந்தது. பின்னர் எங்கோ பார்த்தபடி பேசத் தொடங்கினாள்.

"அம்மா! இப்ப புகுந்த வீட்டிலே எனக்குன்னு ஒரு செல்வாக்கு இருக்கு. நம்ம குடும்பத்து மேலே அவங்க எல்லாருமே ரொம்ப மரியாதை வச்சிருக்காங்க. இத்தனை வயசுக்கு மேலே நீ அப்பாவைப் பிரிஞ்சு... நினைக்கவே ஒரு மாதிரி இருக்கு. எல்லோரும் எப்படியெப்படியோ பேசுவாங்க. அதையெல்லாம் எதிர்கொள்கிற சக்தி நிச்சயமா எனக்கில்லை.
ப்ளீஸ்மா... எந்தத் தப்பான முடிவும் எடுத்திடாதே. நீ இங்கேயே இருக்கறதுதான் எல்லோருக்கும் நல்லது. நாங்களும் வந்து போய்க்கிட்டிருக்க முடியும்.'

என் பெண்ணாகப்பட்டவள் என் கண்களைப் பார்க்கும் தைரியம் இல்லாமல் நீளமாய் மழை மாதிரி பேசிவிட்டு "ரொம்ப களைப்பா இருக்குமா... வா, வீட்டுக்கு போலாம்' என்றபடி எழுந்து கொண்டாள்.
ஆர்வத்துடன் ஆர்ப்பரித்து எழுந்த மனஅலை அப்படியே அடங்கி அழுகை பொங்கியது.
எத்தனையோ செய்தாகிவிட்டது. இப்பொழுது என் பெண்ணுக்காக இதையும் செய்து விட்டால் போகிறது.
விடிகின்றது.

ஒரு கருங் குயில் கீச்சிட்டவாறே பறக்கின்றது. வாயிலில் ஏதோ அரவம் கேட்டது. மாமியார் லட்சுமி ஒரு பெரிய பையுடன் உள்ளே நுழைகிறார்.என் புருஷனாகப்பட்டவன் "அமுதா! அம்மா வர்றாங்க பாரு. ஓடிப் போய் பையை வாங்கிவை' என்று உரத்த குரலில் சொல்கிறான்."என் பெயர் அமுதா இல்லை. அன்னபூரணி' என்று உரத்துச் சொல்லி என்னை நிரூபிக்க வேண்டும் போல் இருந்தது.

நன்றி - மங்கையர் மலர் - உமா ஜானகிராமன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Oct 19, 2013 1:16 pm

கதை ரொம்ப அருமை...

பிரியனும்னு இப்போ எடுத்த முடிவை விட அப்போதே வேறு ஏதேனும் செய்து மாமியாரையும் கணவரின் கொட்டத்தையும் அடக்கி இருக்கலாமே?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 19, 2013 1:47 pm

விட்டில் பூச்சிக்கு ஒரு நாள் வாழ்வு சிறகோடு போச்சு
வீட்டுப் பூச்சிக்கு ஒரு ஜென்மமே வாழாமலே போச்சு

நாம் நாட்டில் விட்டில் பூச்சிகளை விட வீட்டுப் பூச்சிகள் தான் அதிகம்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Oct 19, 2013 2:02 pm

முதலில் நான் உறுப்பினர் அறிமுகம் என்று நினைத்தேன்

நல்ல கதை.. பகிர்வுக்கு நன்றி என் பெயர் அன்னபூரணி by க்ருஷ்ணாம்மா :)  1571444738 

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 19, 2013 3:08 pm

ஜாஹீதாபானு wrote:கதை ரொம்ப அருமை...

பிரியனும்னு இப்போ எடுத்த முடிவை விட அப்போதே வேறு ஏதேனும் செய்து மாமியாரையும் கணவரின் கொட்டத்தையும் அடக்கி இருக்கலாமே?
ம்...........ரொம்ப சரி , எதனால் செய்யவில்லை என்று தெரியலையே பானு சோகம்எதானாலும் வாய்விட்டு பேசிடனும், இப்படி வாழ்க்கை முழுவதும் வீணாக்கக் கூடாது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 19, 2013 3:09 pm

பாலாஜி wrote:முதலில் நான் உறுப்பினர் அறிமுகம் என்று நினைத்தேன்

நல்ல கதை.. பகிர்வுக்கு நன்றி என் பெயர் அன்னபூரணி by க்ருஷ்ணாம்மா :)  1571444738 
சும்மா நான் வேண்டும் என்றேதான் அப்படிப்போட்டேன் பாலாஜி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Oct 19, 2013 3:12 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:கதை ரொம்ப அருமை...

பிரியனும்னு இப்போ எடுத்த முடிவை விட அப்போதே வேறு ஏதேனும் செய்து மாமியாரையும் கணவரின் கொட்டத்தையும் அடக்கி இருக்கலாமே?
ம்...........ரொம்ப சரி , எதனால் செய்யவில்லை என்று தெரியலையே பானு சோகம்எதானாலும் வாய்விட்டு பேசிடனும், இப்படி வாழ்க்கை முழுவதும் வீணாக்கக் கூடாது புன்னகை
ஆமாம்மா...தும்பை விட்டு வாலைப் பிடிக்கிற கதை...பொண்ணு சொன்னது சரியான பதில் தான்...
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 19, 2013 3:19 pm

யினியவன் wrote:விட்டில் பூச்சிக்கு ஒரு நாள் வாழ்வு சிறகோடு போச்சு
வீட்டுப் பூச்சிக்கு ஒரு ஜென்மமே வாழாமலே போச்சு

நம் நாட்டில் விட்டில் பூச்சிகளை விட வீட்டுப் பூச்சிகள் தான் அதிகம்.
ஆமாம் இனியவன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 19, 2013 3:22 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:கதை ரொம்ப அருமை...

பிரியனும்னு இப்போ எடுத்த முடிவை விட அப்போதே வேறு ஏதேனும் செய்து மாமியாரையும் கணவரின் கொட்டத்தையும் அடக்கி இருக்கலாமே?
ம்...........ரொம்ப சரி , எதனால் செய்யவில்லை என்று தெரியலையே பானு சோகம்எதானாலும் வாய்விட்டு பேசிடனும், இப்படி வாழ்க்கை முழுவதும் வீணாக்கக் கூடாது புன்னகை
ஆமாம்மா...தும்பை விட்டு வாலைப் பிடிக்கிற கதை...பொண்ணு சொன்னது சரியான பதில் தான்...
அலை ஓய்ந்து சமுத்திர ஸ்நானம் செய்ய முடியாதே பானு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 26, 2013 9:41 pm

என் பெயர் அன்னபூரணி by க்ருஷ்ணாம்மா :)  3838410834 

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக