புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்! Poll_c10ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்! Poll_m10ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்! Poll_c10 
87 Posts - 65%
heezulia
ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்! Poll_c10ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்! Poll_m10ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்! Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்! Poll_c10ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்! Poll_m10ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்! Poll_c10ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்! Poll_m10ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்! Poll_c10ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்! Poll_m10ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்! Poll_c10 
3 Posts - 2%
sram_1977
ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்! Poll_c10ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்! Poll_m10ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்! Poll_c10ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்! Poll_m10ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்! Poll_c10ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்! Poll_m10ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்! Poll_c10ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்! Poll_m10ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்! Poll_c10 
423 Posts - 76%
heezulia
ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்! Poll_c10ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்! Poll_m10ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்! Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்! Poll_c10ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்! Poll_m10ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்! Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்! Poll_c10ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்! Poll_m10ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்! Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்! Poll_c10ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்! Poll_m10ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்! Poll_c10 
8 Posts - 1%
ஜாஹீதாபானு
ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்! Poll_c10ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்! Poll_m10ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்! Poll_c10 
6 Posts - 1%
prajai
ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்! Poll_c10ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்! Poll_m10ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்! Poll_c10ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்! Poll_m10ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்! Poll_c10 
3 Posts - 1%
sram_1977
ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்! Poll_c10ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்! Poll_m10ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்! Poll_c10ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்! Poll_m10ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்!

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Nov 01, 2009 5:58 pm

http://www.nilacharal.com/ocms/log/11020905.asp

ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்!
-
ச.நாகராஜன்

ஓ என்ற வார்த்தை உச்சரித்தவுடன் ஒரு முழு வட்டம் தோன்றியது. ம் என்று முடிக்கும் போது சிக்கலான ஸ்ரீ யந்திரம் உருவானது
சென்ற இதழில் க்ளாட்னி ஆராய்ந்து வியந்த ஒலி மகத்துவத்தைப் பார்த்தோம். அவர் வழியில் வந்த ஹான்ஸ் ஜென்னி ஆராய்ந்து கண்ட மந்திரங்களின் மகத்துவத்தை இனி படிக்கலாம்..

ஹான்ஸ் ஜென்னியின் ஆராய்ச்சி

ஸ்விட்சர்லாந்து தேசத்தைச் சேர்ந்தவர் டாக்டர் ஹான்ஸ் ஜென்னி (1904-1972). இவர் ஒரு சிறந்த ஆராய்ச்சியாளர். ஒலி அலை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு 1967ம் ஆண்டு Cymatics: The Study of Wave Phenomena என்ற புத்தகத்தை இவர் வெளியிட்டார்.

பத்தாண்டு காலம் க்ளிசெரின், பாதரஸம், ஜெல், பவுடர், இரும்பு போன்ற ஊடகங்களில் ஒலி அலைகள் என்ன விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதை முறையாக ஆராய்ந்து அவற்றைக் குறிப்பெடுத்தார்.

குறைவான அதிர்வுள்ள ஒலி அலைகள் ஜியாமெட்ரி வரைபடங்களை உருவாக்குவதைக் கண்டு இவர் அதிசயித்தார். ஒலி அதிர்வு அதிகமாக்கப்பட்ட போது சிக்கலான படங்கள் உருவாக ஆரம்பித்தன. இதைத் தொடர்ந்து ஹிந்து மதம் சித்தரிக்கும் வெவ்வேறு மண்டலங்களை அதாவது யந்திரங்கள் மேல் இவர் கவனம் திரும்பியது.

மந்திரங்களும் யந்திரங்களும்

வேதங்கள் கூறும் மந்திரங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு சக்தி உண்டு. இதே போல ஒவ்வொரு யந்திரமும் ஒரு வித ஜியாமெட்ரி உருவமாக அமைக்கப்படுவதோடு குறிப்பிட்ட யந்திரத்தை பிரதிஷ்டை செய்ய குறிப்பிட்ட மந்திரம் உச்சரிக்கப்பட்டு சக்தி ஊட்டப்படுகிறது.ஹான்ஸ் ஜென்னி குறிப்பிட்ட மந்திரம் ஒன்றை உச்சரிக்கச் செய்த போது குறிப்பிட்ட யந்திரத்தின் உருவம் வந்ததைப் பார்த்து பிரமித்துப் போனார்.

ஓம் எனும் மந்திரமும் ஸ்ரீ யந்திர அமைப்பும்

தலையாய மந்திரமான ஓம் என்பதை உச்சரிக்கச் செய்தார். ஓ என்ற வார்த்தை உச்சரித்தவுடன் ஒரு முழு வட்டம் தோன்றியது. ம் என்று முடிக்கும் போது சிக்கலான ஸ்ரீ யந்திரம் உருவானது

நவீன உடலியல் இரசாயன வல்லுநர்கள், வானியல்-இயற்பியல் விஞ்ஞானிகள் மற்றும் ஹிந்து யோகிகள் நம்முடைய உடல்கள் அணுத்துகள் அதிர்வுகளின் அமைப்புகளே (system of vibrations) என்று ஒரு மனதாக ஒப்புக்கொண்டுள்ளனர். நம்முடைய உடலின் ஒவ்வொரு அங்கமும், ஒவ்வொரு திசுவும், உறுப்பும் வெவ்வேறு அதிர்வெண்களுக்குத் தக்கபடி இயங்குகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஸ்வரத்தைக் கொண்டுள்ளது. இதை சுருக்கமாக சொல்லப் போனால் நம்முடைய உடலே உண்மையில் ஒலி அலைகளால் உருவாக்கப்பட்டுள்ளது என்று ஆகிறது.

எல்லாம் அதிர்வு மயம்

உடலே அதிர்வுகளின் கூட்டு என்னும் போது நம்மைச் சுற்றி உள்ள ஒலிகள் நம்மைப் பாதிக்காமல் இருக்குமா?. ஆனால் எப்படி என்ற கேள்வி எழுகிறது. எதிரொலி கொள்கையின் அடிப்படையில் இரண்டு ஒத்த அதிர்வுகளைக் கொண்டுள்ளவை ஒன்றுக்கொன்று ஆதரவாக இயங்கும் என்பதை அனைவரும் அறிவர். நம்முடைய உடல் இயல்பாக அதிக ஓய்வுடன் இருக்கும் நிலையில் வினாடிக்கு 7.8 முதல் 8 சைக்கிள் (cycle) வரை அதிர்வுகளைக் கொண்டுள்ளது.

ஆல்பா மூளை அலைகளும் ஓய்வான நிலையில் வினாடிக்கு 8 சைக்கிள் அதிர்வுகளையே கொண்டுள்ளன.பூமி கூட வினாடிக்கு 8 சைக்கிள் என்ற அளவிலேயே அதிர்கிறது. உலகில் உயிர் வாழும் ஒவ்வொரு உயிரின் நரம்பு மண்டலமும் இந்த திர்வெண்ணுக்கு இயைபுடையதாகவே உள்ளது.

இதையெல்லாம் ஏராளமான பரிசோதனைகள் மூலம் ஆராய்ந்த டாக்டர் ஹான்ஸ் ஜென்னி அதிர்வெண்ணின் ஸ்தாயி அல்லது சுருதி மிகவும் அதிக அளவில் இருந்தால் ஜியாமட்ரி வடிவங்கள் சிக்கலானதாக உள்ளன என்று கண்டறிந்தார்.

ரகசிய சாஸ்திரங்கள்

இந்த அடிப்படையில் ஒவ்வொரு யந்திரத்திற்கும் ஒரு வடிவ ஆற்றல் அல்லது உருவ ஆற்றல் உள்ளது என்று ஆகிறது. அதாவது ஒவ்வொரு வடிவமும் ஒரு சக்தியை உமிழ்கிறது. இதன் அடிப்படையிலேயே தேவைக்குத் தக்கபடி யந்திரங்களை ஒலியின் அடிப்படையில் நமது பண்டைய ரிஷிகள் அமைத்தனர்.

யாக சாலை குண்டங்களும் குறிப்பிட்ட அளவில் குறிப்பிட்ட வடிவில் குறிப்பிட்ட திசையில் அமைக்கப்படுவது மரபு. டேவிட்டின் நட்சத்திரம், பிரமிட், ஸ்ரீ சக்கரம் போன்ற ரகசிய சாஸ்திர அமைப்புகள் எல்லா நாகரிகங்களிலும் இருந்து வருவது ஆச்சரியப்படும் விஷயம் அல்லவா?

புதிய ஒலி இயல்

ஹான்ஸ் ஜென்னி தனது இயலை cymatics என்று குறிப்பிட்டார் இந்தச் சொல் கிரேக்க வார்த்தையான kyma (அலை என்று பொருள்படும்) என்பதிலிருந்து உருவானது. ஆகவே, cymatics என்ற சொல் எப்படி ஒலி அதிர்வுகள் பல்வேறு வடிவங்களை உருவாக்குகின்றன, அவை எப்படிப்பட்ட செல்வாக்கை இதர அமைப்புகளின் மீது ஏற்படுத்துகின்றன என்ற பொருளை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்று கூறலாம். தான் உருவாக்கிய கருவிக்கு அவர் டோனோஸ்கோப் (tonoscope) என்று பெயரிட்டார்.

சமஸ்கிருத மொழியின் ஆற்றல்

தனது சோதனைகளில் சம்ஸ்கிருத மற்றும் ஹிப்ரூ உயிர் எழுத்துக்களை உச்சரித்தபோது (தகட்டின் மீதுள்ள) மணல் அந்த எழுத்து வடிவை அடைந்ததைக் கண்டு அதிசயித்தார்! ஆனால் பின்னாளில் தோன்றிய மொழிகளில் இந்தச் சிறப்பை அவர் காணவில்லை. இது எப்படி சாத்தியம்?. இந்த மொழிகள் தெய்வீக மொழிகளா? அவைகளின் ஒலிச் சேர்க்கைகள், ஒலிகள் அவை கூறும் பொருளை உருவாக்க வல்லவையா? பௌதிக உலகில் தனது செல்வாக்கை இந்த மொழிகளின் ஒலி
அலைகள் ஏற்படுத்துகின்றனவா? இவை கூறும் ஸ்தோத்திரங்கள் அதில் சொல்லி இருப்பது போல மனித நோய்களைக் குணப்படுத்துமா? இப்படிப்பட்ட ஏராளமான கேள்விகள் அவருக்கு எழுந்தன!

திரவம் பூசப்பட்ட ஒரு தகடை அதிர்வுக்குள்ளாக்கி அவர் சாய்த்தார். புவி ஈர்ப்பு விசை கொள்கையின் படி அந்தத் திரவம் தகடிலிருந்து கீழே வடிந்து விழவில்லை. மாறாக வெவ்வேறு வடிவங்களைக் காண்பிக்க ஆரம்பித்தது. அதிர்வது நிறுத்தப்பட்டவுடன் திரவம் கீழே வடிய ஆரம்பித்தது! மீண்டும் தகடை அதிர்வுக்குள்ளாக்கினால் திரவம் வடிவது
நின்றது. இந்தச் சோதனையின் மூலம் அதிர்வுகள் புவி ஈர்ப்பு விசையைத் தடுக்கும் வல்லமை கொண்டவை என்பதை அவர் உணர்ந்து அறிவித்தார்.

1972 -அவர் இறந்த வருடம் அவரது நூலின் இரண்டாம் பாகம் வெளி வந்தது.

ஹான்ஸ் ஜென்னியின் புகைப்படங்கள்

அவரது சோதனையின் போது எடுக்கப்பட்ட ஏராளமான புகைப்படங்கள் வெளி வரவே உலகமே பரபரப்புக்குள்ளானது. மனித உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஒரு அதிர்வு உண்டு என்றும் மனிதனின் பரிணாமமே இந்த அதிர்வின் அடிப்படையில் எழுந்ததுதான் என்றும் அவர் தன் முடிவைத் தெரிவித்தார். ஓம் என்ற மந்திரத்தின் உயர்ந்த தன்மையை அவர் விளக்கி
உலகை வியப்பில் ஆழ்த்தினார். மனித காதுகளை இன்னும் தீவிரமாக ஆராய்ந்தால் ஒலி அதிர்வுகளின் நுட்பங்களையும் ரகசியங்களையும் அறிய முடியும் என்று அவர் அறிவித்தார்!

டாக்டர் பீட்டரின் ஒலி சிகிச்சை

பிரிட்டிஷ் மருத்துவரான டாக்டர் பீட்டர் கை மானர்ஸ் ஆங்கில மருத்துவ முறைக்கு நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் இல்லாததைக் கண்டு மனம் வெதும்பி மாற்று மருத்துவ முறைகள் உண்டா என்று நாடு நாடாக அலைந்து திரிந்து தேடலானார். அவர் ஹான்ஸ் ஜென்னியைச் சந்திக்க நேர்ந்தது. ஒலி சிகிச்சை முறை அவரைக் கவர்ந்தது. அதில் தன் ஆராய்ச்சி
மனதைச் செலுத்தினார். தனது சைமாடிக் அப்ளிகேடர் (cymatic applicator) மூலமாக உலகெங்கும் ஒலியால் இப்போது சிகிச்சை செய்து வருகிறார். ஏராளமான புத்தகங்களையும் எழுதி உள்ளார்.

ஆக, க்ளாட்னியின் ஆராய்ச்சி ஹான்ஸ் ஜென்னியைக் கவர்ந்து ஒரு புதிய ஒலி இயலையே உருவாக்க, இன்றைய நவீன விஞ்ஞானிகள் அதை ஆராய்ந்து வருகின்றனர்.

வேத மந்திரங்களின் ஒலி ரகசியத்தை ஆராயப் புகுந்துள்ள விஞ்ஞானிகள் இன்னும் எத்தனை பௌதிக ரகசியங்களைக் கண்டுபிடிக்கப் போகிறார்களோ?!

காலம்தான் பதில் சொல்லும்!

(நன்றி : ஞான ஆலயம்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக