புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதாயத்துக்காக ஆதார்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Oct 11, 2013 9:14 am

நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க மறுத்து அவசரச் சட்டத்தில் அவமானப்பட்டது போதாதென்று, இப்போது ஆதார் அட்டை விவாகரத்திலும் நீதிமன்றத்துக்கு எதிராகவே செயல்படுகிறது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு.

அனைவரும் ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும் என்று பொதுமக்களைக் கட்டாயப்படுத்தக்கூடாது என்று நீதிமன்றம் தீர்ப்பு கூறும் அதே நாளில், ஆதார் ஆணையத்துக்கு சட்டபூர்வ அந்தஸ்து அளிப்பதெனவும், இதற்கான மசோதாவை குளிர்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றுவது என்றும் மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. ஆதார் ஆணையத்துக்கு சட்டபூர்வமான அதிகாரம் அளிப்பதன் மூலம், அரசு மானியம், அரசு சலுகைகள் எதுவும் ஆதார் அட்டை இல்லாமல் சாத்தியமில்லை என்பதை அரசு உறுதிப்படுத்துகிறது.

வேடிக்கை என்னவென்றால், ஆதார் அட்டைத் திட்டத்திற்கு நாடாளுமன்ற ஒப்புதல் கிடையாது. 2010-இல் நாடாளுமன்ற நிலைக்குழுவால் நிராகரிக்கப்பட்ட திட்டம் இது.

தற்போது அரசு ஓய்வூதியம் பெறுவோரும் பி.எப். ஓய்வூதியம் பெறுவோரும் தங்கள் வங்கிக் கணக்கின் மூலம்தான் பணம் பெற்று வருகின்றனர். இதில் எந்தவிதமான நடைமுறைச் சிக்கலும் இல்லை. வருமான வரித் துறையிடம் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்து, பிடித்தம் செய்த வரியைத் திரும்பக் கோருபவர்களுக்கு, அவர்களுக்கான தொகை, வங்கி மூலமாக நேரடியாகச் செலுத்தப்படும் நடைமுறை தொடங்கியாகிவிட்டது. நிலைமை இதுவாக இருக்க, மானியம், சமூக நலப் பயன்கள் பெற அனைவருக்கும் ஆதார் அட்டையை இந்திய அரசு ஏன் வலியுறுத்த வேண்டும்?

எல்லாத் தொகையையும் நேரடியாக தாங்கள் கொடுப்பதாக மக்களை உணர வைப்பதற்கு காங்கிரஸ் செய்யும் முயற்சிதான் இது. வெள்ளச் சேதம், வறட்சி என்கிற பெயர்களில் அரசுப் பணத்தை நிவாரணமாக வழங்கி வாக்குகளைப் பெறும் உத்தி போன்றதுதான் இதுவும்.

அடுத்த மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்குள், குறைந்தபட்சம் சமையல் எரிவாயு உருளை நுகர்வோர் அனைவருக்கும் மானியத்தை ரொக்கப் பணமாக அவர்களது வங்கிக் கணக்குகளில் கொடுத்துவிட வேண்டும் என்ற உந்துதலும், எப்படியும் அதை ஒரு சாதனையாகப் பட்டியலிட வேண்டும் என்ற எண்ணமும்தான் ஆதார் விவகாரத்தில் இத்தனை அவசரம் காட்டுவதற்கு காரணமாக இருக்க முடியும். இதுதான் அரசின் நோக்கம் என்றால், தற்போது சமையல் எரிவாயு உருளை இணைப்பு பெற்றிருக்கும் நபர்களுக்கு, அந்தந்த சமையல் முகவர்கள் மூலமாகவே அடையாள அட்டை படம் எடுத்து அந்த மானியத்தை வழங்கி விடலாமே, ஆதார் அட்டை எதற்கு?

சென்ற ஆண்டு இறுதி வரை தமிழ்நாட்டில் ஆதார் புகைப்படம் எடுத்தவர்கள் எண்ணிக்கை 66.8 லட்சம் பேர் மட்டுமே. இவர்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை கிடைத்துவிடவில்லை. இந்நிலையில், ஆதார் அட்டை கட்டாயம் என்று சொல்வதன் மூலம் தேவையற்ற மனக்கலக்கத்தை மக்களிடம் ஏற்படுத்துவதைத் தவிர வேறு எந்தப் பயனும் அரசுக்குக் கிடைக்கப் போவதில்லை.

கைரேகை, கருவிழி அடையாளங்களை உள்ளடக்கிய தேசிய அளவிலான அடையாள அட்டை (பயோ மெட்ரிக் அட்டை) அனைவருக்கும் வழங்கப்படுவதில், இன்னும் சில பிரச்னைகளும் உள்ளன. அனைத்து குடிமக்களைப் பற்றிய எல்லா விவரங்களையும் அரசு சேகரித்து வைத்துக் கொள்வது என்பது, குடிமக்களைக் கண்காணிக்க அரசால் பயன்படுத்தப்பட மாட்டாது என்பது என்ன நிச்சயம்? குடிமகனின் தனிமனித சுதந்திரத்தை அது பறிப்பதாக ஆகாதா? அதில் என்ன தவறு என்று கேட்கும் நடுத்தரவர்க்க, பட்டணத்து, படித்த வர்க்கத்தினர், அவர்கள் கண்காணிக்கப்படும் நிலைமை வரும்போதுதான் அதன் கடுமையை உணர்வார்கள். நாம் கண்காணிக்கப்படுகிறோம் என்கிற உணர்வுடன் உலவும்போதுதான் அதன் தாக்கம் புரியும்.

அதுமட்டுமல்ல, இந்தியாவில் ஊடுருவி இருக்கும் லட்சக்கணக்கான (கோடிக்கணக்கான?) பாகிஸ்தான், வங்கதேச குடிமக்கள், ஆதார் அட்டையைப் பெற்று, குடியுரிமை பெற இது வழிவகுக்கப் போகிறது. தேசியப் பாதுகாப்புக்கு "ஆதார்' அட்டை உதவும் என்பதைவிட இதுவே ஆபத்தாக முடியும் வாய்ப்புதான் அதிகமாகவே இருக்கிறது.

எல்லா குடிமக்களுக்கும் அடையாள அட்டை என்பது கேட்பதற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கும். அதிலும் குறிப்பாக, தனியார் நிறுவனங்களின் மூலம் இந்த அட்டைகள் வழங்கப்படும்போது, தனிமனிதர்களின் அத்தனை விவரங்களும் அந்தத் தனியார் நிறுவனத்திடமும் இருக்கும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

ஆதார் அட்டை கட்டாயம் என்பது முட்டாள்தனம். ஆதார் அட்டை என்பதும், நேரடி மானியப் பட்டுவாடா என்பதும் அரசியல்தானே தவிர ஆக்கபூர்வ நடவடிக்கை அல்ல! - தினமணி தலையங்கம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 11, 2013 9:18 am

அரசியல்ல இதெல்லாம் சகஜமாப்பா..!
-
வெறென்ன சொல்றது...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 11, 2013 11:43 am


ஆதார் அட்டை எதற்கு?

ஆமா எதுக்கு?




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Oct 11, 2013 11:51 am

ஆதார் அட்டை இல்லை அவர்களின் ஆதாய அட்டைன்னு சொல்லுங்க




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக