புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊசி முனையில்... போதை ருசி Poll_c10ஊசி முனையில்... போதை ருசி Poll_m10ஊசி முனையில்... போதை ருசி Poll_c10 
25 Posts - 41%
heezulia
ஊசி முனையில்... போதை ருசி Poll_c10ஊசி முனையில்... போதை ருசி Poll_m10ஊசி முனையில்... போதை ருசி Poll_c10 
16 Posts - 26%
mohamed nizamudeen
ஊசி முனையில்... போதை ருசி Poll_c10ஊசி முனையில்... போதை ருசி Poll_m10ஊசி முனையில்... போதை ருசி Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
ஊசி முனையில்... போதை ருசி Poll_c10ஊசி முனையில்... போதை ருசி Poll_m10ஊசி முனையில்... போதை ருசி Poll_c10 
4 Posts - 7%
T.N.Balasubramanian
ஊசி முனையில்... போதை ருசி Poll_c10ஊசி முனையில்... போதை ருசி Poll_m10ஊசி முனையில்... போதை ருசி Poll_c10 
4 Posts - 7%
Raji@123
ஊசி முனையில்... போதை ருசி Poll_c10ஊசி முனையில்... போதை ருசி Poll_m10ஊசி முனையில்... போதை ருசி Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
ஊசி முனையில்... போதை ருசி Poll_c10ஊசி முனையில்... போதை ருசி Poll_m10ஊசி முனையில்... போதை ருசி Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஊசி முனையில்... போதை ருசி Poll_c10ஊசி முனையில்... போதை ருசி Poll_m10ஊசி முனையில்... போதை ருசி Poll_c10 
1 Post - 2%
Barushree
ஊசி முனையில்... போதை ருசி Poll_c10ஊசி முனையில்... போதை ருசி Poll_m10ஊசி முனையில்... போதை ருசி Poll_c10 
1 Post - 2%
M. Priya
ஊசி முனையில்... போதை ருசி Poll_c10ஊசி முனையில்... போதை ருசி Poll_m10ஊசி முனையில்... போதை ருசி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஊசி முனையில்... போதை ருசி Poll_c10ஊசி முனையில்... போதை ருசி Poll_m10ஊசி முனையில்... போதை ருசி Poll_c10 
152 Posts - 41%
ayyasamy ram
ஊசி முனையில்... போதை ருசி Poll_c10ஊசி முனையில்... போதை ருசி Poll_m10ஊசி முனையில்... போதை ருசி Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
ஊசி முனையில்... போதை ருசி Poll_c10ஊசி முனையில்... போதை ருசி Poll_m10ஊசி முனையில்... போதை ருசி Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஊசி முனையில்... போதை ருசி Poll_c10ஊசி முனையில்... போதை ருசி Poll_m10ஊசி முனையில்... போதை ருசி Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
ஊசி முனையில்... போதை ருசி Poll_c10ஊசி முனையில்... போதை ருசி Poll_m10ஊசி முனையில்... போதை ருசி Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஊசி முனையில்... போதை ருசி Poll_c10ஊசி முனையில்... போதை ருசி Poll_m10ஊசி முனையில்... போதை ருசி Poll_c10 
7 Posts - 2%
prajai
ஊசி முனையில்... போதை ருசி Poll_c10ஊசி முனையில்... போதை ருசி Poll_m10ஊசி முனையில்... போதை ருசி Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
ஊசி முனையில்... போதை ருசி Poll_c10ஊசி முனையில்... போதை ருசி Poll_m10ஊசி முனையில்... போதை ருசி Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஊசி முனையில்... போதை ருசி Poll_c10ஊசி முனையில்... போதை ருசி Poll_m10ஊசி முனையில்... போதை ருசி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஊசி முனையில்... போதை ருசி Poll_c10ஊசி முனையில்... போதை ருசி Poll_m10ஊசி முனையில்... போதை ருசி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊசி முனையில்... போதை ருசி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 09, 2013 4:04 am

மக்கள் ஆரோக்கியமாக வாழத்தேவையான, வசதிகளையும், வாய்ப்புகளையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது, அரசாங்கத்தின் பணி. ஆனால், நமது துரதிருஷ்டம், அரசாங்கமே "டாஸ்மாக்' மதுக்கடைகளை தெருவுக்குத்தெரு திறந்து, கலர் சாராயம் விற்கிறது. ஆண், பெண் வித்தியாசமின்றி காலை முதல் இரவு வரை குடித்தே சாகின்றனர்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் பணிக்குச் செல்லும் இளைஞர்கள் மட்டுமின்றி, இக்கூட்டத்துடன் பெண்களும் சேர்ந்துவிட்டது, அவலத்தின் உச்சகட்டம். மது பழக்கத்தால் குடும்ப உறவுகள் சீர்கெட்டு, அமைதி இழப்புக்குள்ளாகி தற்கொலைகளும், கொலைகளும் நிகழ்கின்றன. எண்ணற்ற குடும்பங்களில், குழந்தைகள் எதிர்காலமிழந்து, நிர்க்கதியாகி, தெருவுக்கு தள்ளப்படுகின்றனர். இக்கொடிய பழக்கத்திலிருந்து மக்களை விடுவிக்க வழியே இல்லையா, என, பலரும் அங்கலாய்த்துக்கொண்டிருக்க, அடுத்ததாக ஒரு அபாயகரமான பழக்கம், நம் இளைஞர்களிடையே தலைதூக்க துவங்கியுள்ளது. டில்லி, மும்பை, பெங்களூரு போன்ற வளர்ந்த நகரங்களில் மட்டுமே தென்படும் போதை மருந்து கலாசாரம், தற்போது, நம்மூரு கிராமங்கள் வரையும் வந்துவிட்டது.

போதை ஊசி, போதை மருந்து, போதை வஸ்து பழக்கங்கள், இரண்டாம் கட்ட நகர இளைஞர்களையும் சீரழித்து வருகின்றன. சமீபத்தில், கோவை மாவட்டம், பொள்ளாச்சியில், போலீசார் நடத்திய ரெய்டில், இது அம்பலமானது. கல்லூரி மாணவர்களுக்கு போதை மருந்து, ஊசிகளை சப்ளை செய்த கும்பலை பிடித்த போலீசார், பெட்டி, பெட்டியாக மருந்துகளையும் பறிமுதல் செய்தனர். மருத்துவர்களின் சிபாரிசு மருந்துச் சீட்டு இல்லாமல், போதைத்திறன் மிக்க மருந்துகளை விற்கக்கூடாது என்பது விதி. ஆனால், பணம் சம்பாதிக்கும் வெறியில் போதை மருந்து சப்ளை ஏஜன்ட்கள், துணிந்து சட்டவிரோத காரியங்களில் இறங்குகின்றனர். டாக்டர்களின் பெயரில் போலி மருந்துச் சீட்டுகளை தயாரித்து, கடைகளில் போதை மருந்துகளை வாங்கி, அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் பார்க்கின்றனர். பொள்ளாச்சியில், போதை மருந்து ஏஜன்ட்களின் நடமாட்டம் அதிகமாகி விட்டது.அறுவைச் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மயக்க ஊசி மருந்துகளையும், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தூங்க பயன்படுத்தும் மாத்திரைகளையும், போதை கும்பல் கடத்தி விற்கிறது. இதை கண்காணிக்க வேண்டிய மருந்து ஆய்வாளர்கள், மவுனம் சாதித்து வருகின்றனர். போதை மருந்து, ஊசி, மாத்திரை போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தாலும், கடத்தலின் ஆணி வேரை கண்டறிந்து, மூளையாக செயல்பட்டவனை பிடித்து சிறையில் அடைப்பதில்லை. முதலில், சிக்கும் நபரை கைது செய்து, கணக்கை முடித்துக்கொள்கின்றனர். பொள்ளாச்சி மட்டுமின்றி, கோவை மாநகரில் கல்லூரிகள் அதிகமுள்ள பகுதிகளிலும் போதை ஊசி புழக்கம் அதிகமுள்ளது.



ஊசி முனையில்... போதை ருசி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 09, 2013 4:04 am

"விளைவுகள் மோசமாகும்':

இந்திய மருத்துவ சங்க, பொள்ளாச்சி கிளை செயலாளரும், மயக்கவியல் நிபுணருமான திருமூர்த்தி கூறியதாவது: அறுவை சிகிச்சையின் போது, நோயாளிக்கு மயக்கம் ஏற்படுத்த, மயக்க ஊசி போடும் போது அவர்களின் ரத்த அழுத்தம், எச்.பி., போன்றவற்றை பார்த்து, அதற்கேற்ப "டோஸ்' கொடுக்கிறோம். ஆபரேஷன் தியேட்டரில் மட்டும் பயன்படுத்தும் மயக்க ஊசி மருந்து, "செட்யூல் டிரக்' என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இளைஞர்கள் போதைக்காக மயக்க மருந்து ஊசி போட்டுக்கொள்வது ஆபத்தானது.

இப்பழக்கத்திற்கு உள்ளானவர்களால் தினமும் ஊசி போட்டுக்கொள்ளாமல் இருக்க முடியாது. அவர்களின் நடவடிக்கையில் மாற்றம் இருக்கும். இயல்பாக பேசமாட்டார்கள், உளறுவார்கள். தன்னிலை மறந்து, இலக்கின்றி சுற்றிக்கொண்டே இருப்பார்கள். ஊசி போட்டுக்கொண்டதும் மூளை சுறுசுறுப்பு தன்மை இழக்கும். மூளை செல்கள் செயல்படும் தன்மையை இழந்து விடும். தொடர்ந்து உபயோகிப்போருக்கு, ஊசி குத்தும் ரத்த குழாய்களில் பாக்டீரியா தாக்கி, செப்டிக் ஆகி, வீக்கம் இருக்கும். வாகனம் ஓட்டும் திறன் இருக்காது. கண் பார்வை மங்கி விடும்.

சரியாக சிறுநீர், மலம் கழிக்க முடியாது.சிந்திக்கும் திறன் இழந்து, எப்போதும் படபடப்புடன் இருப்பார்கள். ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை குறைந்து விடும். மூச்சு விடும் தன்மை பாதிக்கும், சிறுநீரகம் செயலிழக்கும், வலிப்பு ஏற்படும். ஒட்டுமொத்த "மெமரி லாஸ்' (நினைவாற்றல் இழப்பு) ஏற்பட்டு, இறுதியில் உயிரிழப்பு ஏற்படும். தங்களை சுற்றிலும் என்ன நடக்கிறது என்பது தெரியாமல், சுகமான போதையில் (உறக்கத்தில்) மிதக்க, அறுவை சிகிச்சையின் போது கையாளும் ஊசி மருந்துகளை கையாளுகின்றனர்.

டாக்டர் பரிந்துரையின்றி இவ்வகை ஊசி மருந்து, மாத்திரைகளை விற்க கூடாது. மருத்துவமனையிலுள்ள மருந்துக்கடையில் தனியாருக்கு இந்த ஊசி மருந்து விற்பதில்லை.இவ்வாறு டாக்டர் திருமூர்த்தி தெரிவித்தார்.



ஊசி முனையில்... போதை ருசி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 09, 2013 4:05 am

போலி கையெழுத்து...:

மருந்துகளை, கடத்தல் கும்பல் எப்படி கடைகளில் வாங்கி வருகின்றன என விசாரித்தபோது, அதிர்ச்சி தகவல்கள் அம்பலமாகின. பொள்ளாச்சியிலுள்ள பிரபல இருதய நிபுணர் ஒருவர், தன்னுடைய "மருந்துச் சீட்டு' புத்தகத்தை (பிரிஸ்கிரிப்ஷன் பேட்) காணவில்லை என, கிழக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அந்த "பேடில்' மயக்க மருத்துகளின் பெயர்களை எழுதி, டாக்டர் கையெழுத்தை போலியாக போட்டு, கடைகளில் கொடுத்து, மருந்து வாங்கிய ஆட்டோ டிரைவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். வெளியூர் மருத்துவர்களின் பெயர்களிலான "பேடு'களையும் கலர் ஜெராக்ஸ் எடுத்து, மருந்து பெயரை எழுதி, கடைகளில் வாங்கியுள்ளது கண்டறியப்பட்டது.

போதை மருந்து குறித்த வழக்குகள், பொள்ளாச்சியில் அதிகளவில் பதிவாகியுள்ளது. போதை ஊசி மருந்து விற்ற பாஸ்கரன் என்பவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். டாக்டரின் பரிந்துரையின்றி, போதை ஏற்படுத்தும் ஊசி மருந்து, மாத்திரைகளை விற்கக்கூடாது என, கடைகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். போதை மருந்து குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கல்லூரி நிர்வாகங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம்.''
சுதாகர் கோவை ரூரல் எஸ்.பி.,



ஊசி முனையில்... போதை ருசி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 09, 2013 4:06 am


கும்பல் மீது 19 வழக்கு:


பொள்ளாச்சி கிழக்கு போலீசார், கடந்த 2010ல், போதை மருந்து சப்ளை செய்த பாஸ்கரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். மேல்முறையீடு செய்து, குண்டர் தடுப்பு காவலில் இருந்து பாஸ்கரன் விடுதலையானார். பாஸ்கரன், குரு, எட்டான், சுரேஷ், செல்வம், செந்தில்குமார் ஆகியோர் மீது பொள்ளாச்சி கிழக்கு, மேற்கு, மகாலிங்கபுரம் போலீஸ் ஸ்டேஷன்களில், "போதை மருந்து' தொடர்பாக, 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.


எச்சரிக்கையா இருங்க...!

மனநல நிபுணர் டாக்டர் மோனி கூறியதாவது: இளைஞர்களிடம் போதை கலாசாரம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம், மனத் தூண்டுதல். மயக்க மருந்து, ஊசி போன்றவற்றை பயன்படுத்தினால், எப்படி இருக்கும் என்ற உந்துதல், அவர்களை அடிமையாக்குகிறது. ஊசி, மருந்து போன்றவை எளிதாக, குறைந்த விலையில் கிடைக்கிறது. இதனால், 15 வயதுக்கு மேற்பட்ட 22 வயதுக்கு உட்பட்ட வளர் இளம் பருவத்திலுள்ள நகர்ப்புற மாணவர்கள், வேலையற்ற இளைஞர்கள் போதை பழக்கத்துக்கு உள்ளாகின்றனர்.

இந்தியாவில் 20 லட்சம் இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். அதில், சென்னையில் மட்டும் ஒரு லட்சம் இளைஞர்கள் உள்ளனர். அவர்களில் 10 முதல் 15 சதவீதம் பேர் போதை ஊசி பழக்கத்தில் உள்ளனர். அதில், ஒரு சதவீதம் பேர் தினமும் போதை ஊசி பயன்படுத்துகின்றனர் என்பது புள்ளி விபரம் மூலம் தெரியவருகிறது.மனநல மையத்திற்கு, போதை பழக்கத்தில் சிக்கிய, நிறைய இளைஞர்கள் வருகின்றனர். வலி நிவாரணியாக மருந்து உட்கொண்டவர்கள், ஆழ்ந்த உறக்கம், மன அமைதிக்காக மாத்திரை, மயக்க ஊசியை தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். சிலர், சந்தோஷ நிலையை அடையவும், இன்ப கிளர்ச்சி அடையவும் போதை ஊசி போடத்துவங்கியுள்ளனர். தினமும் பயன்படுத்தும் போது, படிக்கும் திறன், உழைக்கும் திறன், சிந்திக்கும் திறன் இழந்து விடுகின்றனர். மனத்தளர்ச்சி, மனச்சிதைவு, செக்ஸ் பிரச்னைகள் ஏற்படும்.இவற்றின் பாதிப்பு ஒரு அளவுகோலுக்கு மேல் செல்லும் போது, கற்பழிப்பு சம்பவங்கள், சமூக குற்றங்கள், சட்ட விரோத செயல்களில் அவர்கள் ஈடுபடுகின்றனர்.

போதை ஊசி பழக்கத்துக்கு உள்ளானவர்கள் வீட்டில் தனித்து இருப்பார்கள், வீட்டில் இருக்கும் பணத்தை களவாடுவார்கள், சாதாரணமாக இருக்கும் போது கைகள் நடுங்கும், வார்த்தைகள் தடுமாறும். குழந்தைகளை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். கை, கால்களில் தழும்பு, ஊசி போட்ட காயம் இருந்தால் விசாரிக்க வேண்டும். குழந்தைகளின் நடவடிக்கையையும், அவர்களின் நண்பர்களையும் பெற்றோர் அறிந்து கொள்ள வேண்டும்.குழந்தைகள் மீது கவனம் செலுத்தினால் தவறு நடக்கும் போதே கண்டுபிடித்து விடலாம். இது ஒரு நோய் என்பதை புரிந்து கொண்டு, மனநல மருத்துவரை அணுக வேண்டும். பாதிப்புக்குள்ளாகி வருவோருக்கு முதலில் கவுன்சிலிங் கொடுக்கிறோம்.

அவற்றால் ஏற்படும் பாதிப்பு குறித்து விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி, மாற்று மருந்து கொடுத்து குணப்படுத்துகிறோம். அரசும், தன்னார்வ அமைப்புகளும், கிராமங்களில் போதை பழக்கம், அதனால் ஏற்படும் பாதிப்பு, விளைவுகள் குறித்து பெற்றோர், இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சமூக சுகாதார விழிப்புணர்வு மூலமே இளைய சமுதாயத்தை போதையின் பாதையில் இருந்து மீட்க முடியும்.

*அறுவைச் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மயக்க ஊசி மருந்துகளையும், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தூங்க பயன்படுத்தும் மாத்திரைகளையும், போதை கும்பல் கடத்தி விற்கிறது

*போதை பழக்கத்திற்கு உள்ளானவர்களால் தினமும் ஊசிபோட்டுக் கொள்ளாமல் இருக்க முடியாது. சிந்திக்கும் திறன் இழந்து, எப்போதும்படபடப்புடன் இருப்பார்கள்.சரியாக சிறுநீர், மலம் கழிக்க முடியாது.

*போதையின் பாதிப்பு ஒரு அளவுகோலுக்கு மேல் செல்லும் போது, கற்பழிப்பு சம்பவங்கள், சமூக குற்றங்கள், சட்ட விரோத செயல்களில் அவர்கள் ஈடுபடுகின்றனர்.

தினமலர்



ஊசி முனையில்... போதை ருசி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 09, 2013 7:43 am

நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில்
போதை ஊசி பழக்கம் இளம்பெண்களிடையே அ
திகரித்து வருகிறது.
இதனால் அவர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகும்
நிலை ஏற்பட்டுள்ளது...
-
ஊசி முனையில்... போதை ருசி S5KcgasxQqeyYwtf7lg0+aaaa

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Wed Oct 09, 2013 7:55 am

ayyasamy ram wrote:நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில்
போதை ஊசி பழக்கம் இளம்பெண்களிடையே அ
திகரித்து வருகிறது.
இதனால் அவர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகும்
நிலை ஏற்பட்டுள்ளது...
-
ஊசி முனையில்... போதை ருசி S5KcgasxQqeyYwtf7lg0+aaaa
அதற்கான செய்திதுளியை வெளியிடுங்கள்.இவ்வாறு பொதுவாக கருத்து வெளியிடுவது தவறான முன்னுதாரணமாகிவிடும்.



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக