புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது Poll_c10நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது Poll_m10நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது Poll_c10 
83 Posts - 55%
heezulia
நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது Poll_c10நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது Poll_m10நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு
நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது Poll_c10நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது Poll_m10நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது Poll_c10நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது Poll_m10நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது Poll_c10நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது Poll_m10நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது Poll_c10 
23 Posts - 88%

2 Posts - 8%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Sep 22, 2011 8:11 pm

மூதுரையை தொடர்ந்து நல்வழியை ஈகரை உறவுகளுக்கு அளிக்கும் முயற்சியை தொடர்ந்துள்ளேன்....

நல்வழி என்பது நல்லவர்கள் சொல்லும் வழி, நல்ல கதிக்கு செல்லும் வழி என்ற பொருள்படும். மூதுரையை போல், மக்கள் வாழ அறிவுரையை கூறும் பாடல்களை உடையது நல்வழி, ஒரு சில பாடல்கள் நாம் பள்ளியில் படித்து இருந்தாலும், நூலில் உள்ள அனைத்து பாடல்களையை படிக்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிட்டியதில்லை. இப்படி நாம் படித்து ரசித்த பாடல்களையும், பார்க்காமல் விட்ட பாடல்களையும் இத்திரியில் பொருளுடன் பதிக்கிறேன், உங்கள் ஆதரவுடன் .........

தவறு நேர்ந்தால் சுட்டி காட்டவும்........

கடவுள் வாழ்த்து

பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலுங் கலந்துனக்கு நான்தருவேன்-கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றுந் தா.

1. நன்மையே செய்க

புண்ணியம்ஆம் பாவம்போம் போனநாட் செய்தஅவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள்-எண்ணுஙகால்
ஈதொழிய வேறில்லை எச்சமயத் தோர்சொல்லுந்
தீதொழிய நன்மை செயல்.

2. ஈயாமையின் இழிவு

சாதி யிரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின்-மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி.

3. இடும்பைக்கு இடும்பை இயலுடம்பி தன்றே

இடும்பொய்யை மெய்யென் றிராதே-இடுங்கடுக
உண்டாயி னுண்டாகும் ஊழிற் பெருவலிநோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு.
காலம் நோக்கிச் செய்க

4. காலம் நோக்கிச் செய்க

எண்ணி ஒருகருமம் யார்க்குஞ்செய் யொண்ணாது
புண்ணியம் வந்தெய்து போதல்லாற்-கண்ணில்லான்
மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோ லொக்குமே
ஆங்கால மாகு மவர்க்கு.

5. கவலையுறுதல் கூடாது

வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமினென்றாற் போகா-இருந்தேங்கி
நெஞ்சம்புண் ணாக நெடுந்தூரந் தாம்நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்.

6. பேராசை கூடாது

உள்ள தொழிய ஒருவர்க் கொருவர்சுகங்
கொள்ளக் கிடையா குவலயத்தில்-வெள்ளக்
கடலோடி மீண்டு கரையேறி னாலென்
உடலோடு வாழும் உயிர்க்கு

7. ஞானிகள் பற்றற்றிருப்பர்

எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலிநோய்ப் புன்குரம்பை-நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆங்கமல நீர்போற்
பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு

8. மரியாதையே தேடத்தக்கது

ஈட்டும் பொருண்முயற்சி எண்ணிறந்த வாயினும் ஊழ்
கூட்டும் படியன்றிக் கூடாவாம்-தேட்டம்
மரியாதை காணு மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணுந் தனம்

9. குடிப்பிறந்தார் இல்லை எனமாட்டார்

ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வாறு
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும்-ஏற்றவர்க்கு
நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லையென மாட்டார் இசைந்து

10. இட்டு உண்டு இரும்

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர்-வேண்டா
நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும்
எமக்கென்னென் றிட்டுண் டிரும்.

11.பசி கொடியது

ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய்-ஒருநாளும்
என்னோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது.

12. உழவின் உயர்வு

ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே-ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு

13. விலக்க இயலாதன

ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச்
சாவாரை யாரே தவிர்ப்பவர்-ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்
மெய்யம் புவியதன் மேல்.

14. மானமே உயிரினும் சிறந்தது

பிச்சைக்கு மூத்த குடி வாழ்க்கை பேசுங்கால்
இச்சைபல சொல்லி இடித்துண்கை-சிச்சீ
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர்விடுகை சால உறும்

15. திருவைந்தெழுந்தின் சிறப்பு

சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம்
இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம்
விதியே மதியாய் விடும்

16. வியத்தகு விழுப்பொருள்

தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணங்கொடையால்
கண்ணீர்மை மாறாக் கருணையால்-பெண்ணீர்மை
கற்பழியா ஆற்றால் கடல்சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம் என்றே அறி

17. தீவினையே வறுமைக்கு வித்து

செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இருநிதியம்-வையத்து
அறும்பாவம் என்னவறிந்து அன்றிடார்க் கின்று
வெறும்பானை பொங்குமோ மேல்

18. இடிப்பார்க்கு ஈவர்

பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் எனவேண்டார்-மற்றோர்
இரணங் கொடுத்தால் இடுவர் இடாரே
சரணங் கொடுத்தாலுந் தாம்.

19. பேரின்பம் நாடாப் பேதமை

சேவித்துஞ் சென்றிரந்துந் தெண்ணீர்க் கடல்கடந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும்-போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி அரிசிக்கே நாம்

20. பரத்தையரால் செல்வம் பாழாம்

அம்மி துணையாக ஆறிழிந்த ஆறொக்குங்
கொம்மை முலைபகர்வார்க் கொண்டாட்டம்-இம்மை
மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி
வெறுமைக்கு வித்தாய் விடும்.

21.வஞ்சனையில்லார்க்கு வாய்க்கும் நலன்

நீரு நிழலு நிலம்பொதியும் நெற்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும்-ஊரும்
வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க்கு என்றுந்
தருஞ்சிவந்த தாமரையாள் தான.

22.பாவிகளின் பணம்

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்-கூடுவிட்டிங்
காவிதான் போயினபின்பு யாரே யநுபவிப்பார்
பாவிகள் அந்தப் பணம்.

23. வழக்கோரஞ் சொன்னவர் மனை பாழ்

வேதாளஞ் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே-மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரஞ் சொன்னார் மனை.

24. வாழ்க்கை மாண்பு ஐந்து

நீறில்லா நெற்றிபாழ் நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக் கழகுபாழ்-மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ் பாழே
மடக்கொடி யில்லா மனை.

25. வரவறிந்து செலவிட வேண்டும்

ஆன முதலில் அதிகஞ் செலவானான்
மானம் அழிந்து மதிகெட்டுப்-போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்புத் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு

26. பசி வந்திடப் பத்தும் பறக்கும்

மானங் குலங்கல்வி வண்மை அறிவுடைமை
தானந் தவம்உயர்ச்சி தாளாண்மை-தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந் திடப்பறந்து போம்.

27. எல்லாம் இறை செயல்

ஒன்றை நினைக்கின் அதுவொழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும்-ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல்.

28. மனவமைதி வேண்டும்

உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
எண்பது கோடிநினைந்து எண்ணுவன-கண்புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையுஞ் சஞ்சலமே தான்.

29. கொடையாளருக்கு எல்லாரும் உறவினர்

மரம்பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி
இரந்தழைப்பார் யாவருமங் கில்லை-சுரந்தமுதம்
கற்றா தரல்போற் கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத் தவர்.

30. விதியின் தன்மை

தாந்தாமுன் செய்தவினை தாமே யநுபவிப்பார்
பூந்தா மரையோன் பொறிவழியே-வேந்தே
ஒறுத்தாரை யென்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா
வெறுத்தாலும் போமோ விதி.

31. நல்லன நான்கு

இழுக்குடைய பாட்டிற்கு இசைநன்று சாதலும்
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று-வழுக்குடைய
வீரத்தின் நன்று விடாநோய் பழிக்கஞ்சாத்
தாரத்தின் நன்று தனி.

32. செல்வநிலையாமையறிந்து உதவுக

ஆறிடும் மேடும் மடுவும்போல் ஆஞ்செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர்-சோறிடுந்
தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக
உண்ணீர்மை வீறும் உயர்ந்து.

33. வன்சொல்லும் இன்சொல்லும்

வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம் வேழத்தில்
பட்டுருவுங் கோல்பஞ்சில் பாயாது-நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்.

34. பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை

கல்லானே யானாலுங் கைப்பொருளொன் றுண்டாயின்
எல்லாருஞ் சென்றங்கு எதிர்கொள்வர்-இல்லானை
இல்லாளும் வேண்டாள்மற்று ஈன்றெடுத்த தாய்வேணடாள்
செல்லாது அவன்வாயிற் சொல்.

35. உரைப்பினும் பேதை உணரான்

பூவாதே காய்க்கும் மரமுமுள மக்களுளும்
ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே-தூவா
விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு
உரைத்தாலுந் தோன்றா துணர்வு.

36. பிறர்மனை விரும்பாமை

நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங் காலத்தில்
கொண்ட கருவளிக்குங் கொள்கைபோல்-ஒண்டொடீ
போதந் தனங்கல்வி பொன்றவருங் காலம்அயல்
மாதர்மேல் வைப்பார் மனம்.

37. வீடடைவார்க்கு விதியில்லை

வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய நூலகத்தும் இல்லை-நினைப்பதெனக்
கண்ணுறுவது அல்லால் கவலைப்படேல் நெஞ்சேமெய்
விண்ணுறுவார்க் கில்லை விதி.

38. இறைவனுடன் இரண்டற்று நில்

நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே-நின்றநிலை
தானதாந் தத்துவமாஞ் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள்.

39. முப்பது ஆண்டிற்குள் முதல்வனை யறி

முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத்
தப்பாமல் தன்னுள் பெறானாயின்-செப்புங்
கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்
முலையளவே ஆகுமாம் மூப்பு.

40. ஒத்த கருத்தமை ஒண்தமிழ் நூல்கள்

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும்-கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர்.

பொருளுரை தொடரும் ............

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Sep 22, 2011 8:54 pm

அருமையான பதிவு ஐயா..........

நல்வழி நாற்பது....நாற்பது பாடல்களையும் வருடத்திருக்கு பத்து என நான்கு வருடங்கள் பள்ளிகளில் படிக்க வேண்டிய ஒன்றை....ஒரே இடத்தில் தந்து அரைமணி நேரத்தில் படிக்க வைத்து விட்டீர்கள்.....நன்கு பொருளினை மதியில் ஏற்ற சிறிது காலம் எடுக்கும்....ஆக அவ்வப்போது வந்து ஏற்றிக்கொண்டு செல்கிறேன் இனி......

இது போன்ற பதிவுகளே ஈகரையின் வெற்றி என்பதில் எந்தோவொரு ஐயமும் எனக்கில்லை....ஈகரை மாபெரும் தமிழ்க் களஞ்சியம் என்பதற்கு இது போன்ற பதிவுகளே சான்றுகள்....

நன்றிகள் ஐயா...... [You must be registered and logged in to see this image.]

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Sep 22, 2011 9:04 pm

பிஜிராமன் wrote:அருமையான பதிவு ஐயா..........

நல்வழி நாற்பது....நாற்பது பாடல்களையும் வருடத்திருக்கு பத்து என நான்கு வருடங்கள் பள்ளிகளில் படிக்க வேண்டிய ஒன்றை....ஒரே இடத்தில் தந்து அரைமணி நேரத்தில் படிக்க வைத்து விட்டீர்கள்.....நன்கு பொருளினை மதியில் ஏற்ற சிறிது காலம் எடுக்கும்....ஆக அவ்வப்போது வந்து ஏற்றிக்கொண்டு செல்கிறேன் இனி......

இது போன்ற பதிவுகளே ஈகரையின் வெற்றி என்பதில் எந்தோவொரு ஐயமும் எனக்கில்லை....ஈகரை மாபெரும் தமிழ்க் களஞ்சியம் என்பதற்கு இது போன்ற பதிவுகளே சான்றுகள்....

நன்றிகள் ஐயா...... [You must be registered and logged in to see this image.]

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Sep 23, 2011 9:54 am

kitcha wrote:

நன்றி பிஜி ராமன்
நன்றி கிச்சா
நன்றி

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Sep 23, 2011 11:01 am

மிக மிக நன்றி :வணக்கம்:

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
[You must be registered and logged in to see this image.]
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Sep 24, 2011 10:45 am

கடவுள் வாழ்த்து

பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலுங் கலந்துனக்கு நான்தருவேன்-கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றுந் தா.

பொருள் விளக்கம்

பாலையும், தெளிந்த தேனையும், வெல்லப் பாகுவையும், பருப்பையும் கலந்து நான் உனக்கு தருவேன், ஆண் யானை உருவம் உடைய உயிர்களுக்கு நல்லது செய்யும், மாசில்லாத விநாயகப் பெருமானே நீ எனக்கு இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், என்ற சங்கத் தமிழ் மூன்றும் தா .....

1. நன்மையே செய்க

புண்ணியம்ஆம் பாவம்போம் போனநாட் செய்தஅவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள்-எண்ணுஙகால்
ஈதொழிய வேறில்லை எச்சமயத் தோர்சொல்லுந்
தீதொழிய நன்மை செயல்.

பொருள் விளக்கம்

மனிதன் பிறக்கும் போதும், இறக்கும் போதும் அவன் கூட வருவது அவன் செய்த புண்ணியம் பாவம் என்று கூறும் இரண்டு மட்டுமே, இதைத் தவிர வேறு எதுவும் கூட வாராது, அனைத்து சமயமும் கூறுவது தீமையை செய்யாதே உன்னால் முடிந்த நன்மையை செய் என்பது தான்...

2. ஈயாமையின் இழிவு

சாதி யிரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின்-மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி.

பொருள் விளக்கம்

உண்மை நெறிப்படி கூறுவதாயின், உலகத்தில் பிறந்த மனிதர்களில் இரண்டு வகை ஜாதியினர் தான் உள்ளனர். ஒருவர் அடுத்தவருக்கு கொடுத்து உதவும் நல்ல குணம் படைத்த மேலோர், மற்றொருவர் தன்னிடம் உள்ளவற்றை அடுத்தவருக்கு கொடுத்து உதவாத கீழோர் ....மேலோர் கண்ட நீதி நெறி நூலில் சொல்லப்பட்ட விஷயம் இது தான், இதை நன்றாக உணர்ந்து கொள்.

3. இடும்பைக்கு இடும்பை இயலுடம்பி தன்றே

இடும்பொய்யை மெய்யென் றிராதே-இடுங்கடுக
உண்டாயி னுண்டாகும் ஊழிற் பெருவலிநோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு.
காலம் நோக்கிச் செய்க

பொருள் விளக்கம்

நிலையில்லாத இந்த உடம்பை, மெய் என்று கருதி அதற்கு அனைத்தும் செய்கிறாயே, மெய் என்று கூறும் உடல் பொய் என்பதை உணர்ந்து, வறியவருக்கு விரைந்து காலம் தாழ்த்தாமல் ஈகை செய்க, மக்கள் ஊழின் வினைப்படி நல்ல காரியம் செய்து செல்ல வேண்டும் என்று நினைக்கும் சொர்க்கம் உங்களுக்கு வாசல் கதவை திறக்கும் ....

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Sep 26, 2011 10:13 am

4. காலம் நோக்கிச் செய்க

எண்ணி ஒருகருமம் யார்க்குஞ்செய் யொண்ணாது
புண்ணியம் வந்தெய்து போதல்லாற்-கண்ணில்லான்
மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோ லொக்குமே
ஆங்கால மாகு மவர்க்கு.

பொருள் விளக்கம்

கண் தெரியாத குருடன் , மாங்காய் அடிக்க முயற்சி செய்து அவன் கையில் வைத்திருந்த கோலை இழப்பதை போல், ஒருவன் காலம் அறியாமல் ஒரு செயலைச் செய்தால் அவனிடன் உள்ளதையும் இழக்க நேரிடும். நாம் செய்த புண்ணியத்தின் பலனாக, ஒரு காரியம் கைகூடும் வேலை வரும் வரை நாம் செய்யும் எந்த முயற்சியும் பலன் தராது, அதனால் காலம் கருதி ஒரு செயலை தொடங்க வேண்டும்.

5. கவலையுறுதல் கூடாது

வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமினென்றாற் போகா-இருந்தேங்கி
நெஞ்சம்புண் ணாக நெடுந்தூரந் தாம்நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்.

பொருள் விளக்கம்

நாம் மனம் வருந்தி அழைத்தாலும், நமக்கு என்று இல்லாத பொருள் நமக்கு கிடைக்காது, அது போல் ஒன்றை வேண்டாம் என்று சொன்னாலும் அது நம்மை விட்டு போகாது, அனைத்து காரியங்களும், உறவுகளும் நாம் செய்த பாவம், புண்ணியம் என்ற இரண்டு விசயங்களின் மூலமே அமைகிறது, இதை உணராமல் தினம் தினம் புலம்பி, நெஞ்சம் வருந்துவது மனிதர்களின் இயல்பு.

தொடரும் ...

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 26, 2011 10:39 am

நல்வழி மூலம் நல்ல திரி துவங்கியுள்ளீர்கள் சதா! அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும். பாராட்டுக்கள்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Sep 26, 2011 3:11 pm

சிவா wrote:நல்வழி மூலம் நல்ல திரி துவங்கியுள்ளீர்கள் சதா! அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும். பாராட்டுக்கள்.

சிவா அண்ணாவுக்கு நன்றி
நன்றி

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Sep 26, 2011 4:32 pm

பாடல்களின் பொருள் விளக்கத்துடன் பதிவு செய்யும் இந்த கட்டுரை முயற்சிக்கு என்னுடைய பாராட்டுகள்,வாழ்த்துகள் [You must be registered and logged in to see this image.]

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக