புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாருக்கு மனநோய்? Poll_c10யாருக்கு மனநோய்? Poll_m10யாருக்கு மனநோய்? Poll_c10 
73 Posts - 77%
heezulia
யாருக்கு மனநோய்? Poll_c10யாருக்கு மனநோய்? Poll_m10யாருக்கு மனநோய்? Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
யாருக்கு மனநோய்? Poll_c10யாருக்கு மனநோய்? Poll_m10யாருக்கு மனநோய்? Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
யாருக்கு மனநோய்? Poll_c10யாருக்கு மனநோய்? Poll_m10யாருக்கு மனநோய்? Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாருக்கு மனநோய்? Poll_c10யாருக்கு மனநோய்? Poll_m10யாருக்கு மனநோய்? Poll_c10 
238 Posts - 76%
heezulia
யாருக்கு மனநோய்? Poll_c10யாருக்கு மனநோய்? Poll_m10யாருக்கு மனநோய்? Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
யாருக்கு மனநோய்? Poll_c10யாருக்கு மனநோய்? Poll_m10யாருக்கு மனநோய்? Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
யாருக்கு மனநோய்? Poll_c10யாருக்கு மனநோய்? Poll_m10யாருக்கு மனநோய்? Poll_c10 
8 Posts - 3%
prajai
யாருக்கு மனநோய்? Poll_c10யாருக்கு மனநோய்? Poll_m10யாருக்கு மனநோய்? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
யாருக்கு மனநோய்? Poll_c10யாருக்கு மனநோய்? Poll_m10யாருக்கு மனநோய்? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
யாருக்கு மனநோய்? Poll_c10யாருக்கு மனநோய்? Poll_m10யாருக்கு மனநோய்? Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
யாருக்கு மனநோய்? Poll_c10யாருக்கு மனநோய்? Poll_m10யாருக்கு மனநோய்? Poll_c10 
2 Posts - 1%
Barushree
யாருக்கு மனநோய்? Poll_c10யாருக்கு மனநோய்? Poll_m10யாருக்கு மனநோய்? Poll_c10 
2 Posts - 1%
sram_1977
யாருக்கு மனநோய்? Poll_c10யாருக்கு மனநோய்? Poll_m10யாருக்கு மனநோய்? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாருக்கு மனநோய்?

imz
imz
பண்பாளர்

பதிவுகள் : 92
இணைந்தது : 12/01/2013

Postimz Tue Oct 01, 2013 2:30 pm

யாருக்கு மனநோய்? GDSriLanka03210

அன்று சனிக்கிழமை, சூரியன் உச்சியை எட்டிவிட்டிருந்த நேரம். ஊருக்குச் செல்வதற்காக பஸ் வண்டிக்காக  காத்துக் கொண்டிருந்தேன்.
திடீரென ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்ற குரல்கேட்டு பின்னால் திரும்பினேன்.
நீண்ட தாடியோடு தொப்பியும் அணிந்திருந்த ஓர் 70 வயது மதிக்கத் தக்க வயோதிபர் அவர். பதில் கூறி விட்டு பஸ் வரும் வழியை பார்த்துக் கொண்டிருந்த என்னை சற்று அதட்டிய தொனியில் எங்கே போகிறீர்கள்-? எந்த ஊர்? போன்ற பல கேள்விகளை தமிழிலும் சிங்களத்திலும் மாறி மாறிக் கேட்டுக் கொண்டேயிருந்தார். அப்போதுதான் அவரை சரியாக உற்று நோக்கினேன்.

அவர் மிக அலங்கோலமாக ஆடை அணிந்திருந்தார். ஒரு கையில் நீண்ட குடைக் கம்பியும் மறுகையிலே சிறிய கத்தியொன்றும் இருந்தன. வெவ்வேறு விதமான பாதணிகளை அணிந்திருந்தார். அவரது முழுத் தோற்றமும் அவர் ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதை மிகத் தெளிவாகவே எடுத்துக் காட்டியது. அவரது கேள்விகளுக்கு அமைதியாக பதிலளித்தவாறு நான் நின்று கொண்டிருந்தவேளை 4 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமியோடு  வந்த இளம் பெண் அந்த வயோதிபரைப் பார்த்து மிக ஏளனமாகச் சிரித்தாள். அழுது கொண்டிருந்த குழந்தையை அவ்வயோதிபரைக் காட்டி பயமூட்டி அழுகையை நிறுத்தச் செய்தாள்.

வீதியால் சென்று கொண்டிருந்த இன்னும் சிலரும் அவ்வயோதிபரை மிகவும் கேவலமாகவே நோக்கினர். அவரது வயதிற்குரிய எந்த மரியாதையும் இல்லாமல் அவரை திட்டிக் கொண்டே சென்றனர். அவ்யோதிபர் வீதியின் குறுக்கே நடக்க ஆரம்பித்தபோது அவ்வழியால் வாகனங்களில் பயணித்தவர்களும் ”பைத்தியக்காரா””கிழவா”என்றெல்லாம் அவரை திட்டித் தீர்த்தார்கள்.

அப்போது அவ்வீதியால் ஒரு முச்சக்கர வண்டி வேகமாக வந்து கொண்டிருந்தது. 20 வயது மதிக்கத்தக்க 4 இளைஞர்கள் அதில் பயணித்துக் கொண்டிருந்தார்கள். வயோதிபர் வீதியின் நடுவே நின்றிருந்தும் வேகத்தை குறைக்காமல் வந்து கொண்டிருந்த முச்சக்கர வண்டியிலிருந்த ஓர் இளைஞன் வெளியே தொங்கிக் கொண்டு வயோதிபரருகே ‘‘கூ கூ’’எனக் கத்திக் கொண்டு தனது கையால் அவரது முதுகில் அடித்தான் பின்னர் எல்லோரும் ஹா… ஹா……என சிரித்துக் கொண்டே சென்றார்கள்.

வயோதிபர் தட்டுத் தடுமாறியவராக மெது மெதுவாக நகர்ந்து சென்றார். இந்த நிகழ்வுகள் எனக்குள் மிகவும் கவலையைத் தோற்றுவித்தன. உண்மையிலயே யாருக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது என என்னை சிந்திக்கத் தூண்டியது. இது ஒரு சம்பவம் மட்டுமே. இது போன்ற பல சம்பவங்கள் தினந்தோறும்  இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

சேர்ட் அணியாத மூளை வளர்ச்சி குன்றிய (Down Syndrome) ஒரு சிறுவன் அடித்து விரட்டப்பட்டமை, திருமண வீட்டில் தனது வயிற்றுப் பசியை தீர்த்துக்கொள்ள வந்த ஓர் ஏழைச் சிறுவன் வெறும் வயிற்றோடு திருப்பியனுப்பப்பட்டமை, வாய் பேசாத ஒரு சகோதரன் வீதியால் சென்று கொண்டிருந்தபோது சிறுவர்கள் சைகைப் பாசையால் அவனைக் கேலி செய்தமை போன்றவை மிக அண் மைக் காலத்தில் நான் கண்ட சில சம்ப வங்களாகும்.
ஏன் சமூகம் இப்படி இருக்கிறது? நோயாளி ஒருவரை அல்லது மன நிலை பாதிக்கப்பட்ட ஒருவரை அல்லது அங்கக் குறைபாடு உடையவர்களையோ கேவலமாகப் பார்க்கும் கீழ்த்தரமான பண்பு ஏன் இன்னும் நம்மோடு ஒட்டிக் கொண்டிருக்கின்றது?

மனநோய்களிலேயே Mood disorders, behavioural disorders, Personality disorders என பல வகையுண்டு. இந்நோய்கள் உள்ள அனைவரையும் பைத்தியம் என நாம் முத்திரை குத்திவிட முடியாது. Schizophrenia (ஸ்கிட்ஸோபிரீனியா) எனும் மிக அரிதான நோய் மட்டுமே (குணப்படுத்துவதற்கு மிகவும் கடினமானது) பைத்தியம் (Madness) என வரையறுக்கப்படுகின்றது. ஏனையவை மருத்துவத்தால் (படைத்தவனின்  உதவியோடு) குணப்படுத்தக் கூடியவையாகும். Depression (டிப்ரஸ்ஸன்) எனப்படும் மன அழுத்தம் உலகில் 12.5% வீதமானோரில் (எட்டில் ஒரு பங்கினர்) காணப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதுவும் மன நோய்தான். ஆனால் இவர்களை நாம் பைத்தியம் என்று கூறி விட முடியாது.

உண்மையில் என்னைப் பொறுத்தவரையில்  சமூகத்தில் காணப்படும் சிறிய இலகுவில் குணப்படுத்திவிடக் கூடிய மன நோய் உள்ளவர்களையும், அங்க குறைபாடு உடையவர்களையும் எமது சமூகம்தான் முழுமையான பைத்தியமாக மாற்றி விடுகின்றது. மிகவும் கரிசனையோடு உள ஆறுதல் அளிக்கப்பட வேண்டியவர்கள் எமது சமூகத்தில் உள்ளவர்களாலேயே மிக மோசமான மன அழுத்தங்களுக்குள்ளாக்கப்படுவதனால் தான் அவர்கள் நிரந்தர மனநோயாளிகளாக பைத்தியங்களாக மாறி விடுகின்றனர். மிகச் சாதாரண அங்கக் குறைபாடுடையவர்களைக் கூட எம்மவர்கள் மிக மோசமான மன அழுத்தங்களுக்குள்ளாக்கியதனால் அவர்கள் பைத்தியமாக மாறிவிட்ட கசப்பான உண்மைகள் எமது சமூகத்தில் மலிந்து கிடக்கின்றன.

இவை குறித்து நாம் அனைவரும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மிகப் பெரும் அரசியல் தலைவர்களோடு நபி (ஸல்) அவர்கள் கலந்துரையாடிக் கொண்டிருந்தபோது பார்வையற்ற உம்மி மக்தூம் (ரழி) அவர்கள் அங்கே வந்தவேளை நபியவர்கள் முகத்தை திருப்பியதைக் கண்டித்து இறை வசனம் அருளப்பட்டதை நாம் மறந்துவிட முடியாது. எனவே இச் சமூக நோயை வேரோடழிப்பதற்கு நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டும்.

வீட்டில் பெண்கள் குழந்தைகளை சமாளிப்பதற்கோ அல்லது சோறூட்டுவதற்கோ
முடவன் வருகி றான்,
ஊமையன் வருகிறான்,
ஒற்றைக் கண்ணனிடம் பிடித்துக் கொடுப்பேன் என்று கூறும் அங்கக் குறைபாடுடையவர்களை அவமதிக்கும் ஈனச்செயலை கண்டிப்பாக நிறுத்த வேண்டும். மாறாக அங்கக் குறைபாடு டையவர்களையும், நோயாளிகள், வயோதிபர்களை போன்று அன்போடு நோக்க வேண்டும் என்பதை பெற்றோர் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். பாடசாலைகளிலும்  இவ்விடயங்கள் பாடத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டு பிள்ளைகளை விழிப்புணர்வூட்ட வேண்டும்.மேடைகளிலும் பிரசாரங்களிலும்  பண்பாடு கற்றுத் தரப்படல் வேண்டும். இது விடயத்தில் ஆசிரியர்கள், கூடுதல் கவனம் எடுக்க வேண்டும்.

பொது இடங்களில் அங்கக் குறைபாடுடையவர்களுக்கும் நோயாளிகள், மனநோயாளிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும். அத்தோடு விசேட தேவையுடையோருக்கான பராமரிப்பு நிலையங்கள், விசேட வசதிகளுள்ள கல்விக் கூடங்கள் என்பன அமைக்கப்பட்டு அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது எம் ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும்.

இவற்றை புறக்கணித்துவிட்டு இச்சமூக நோய் எம்மை விட்டு நீங்குவதற்கு நாம் முயற்சிக்கவில்லையாயின், நாம் அனைவரும் இறைவனின் தண்டனை யிலிருந்து தப்பமாட்டோம் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.
~~~~~~~~
நன்றி : Dr.M.S.M.Nusair

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 01, 2013 2:47 pm

சிறப்பான பகிர்வு நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
imz
imz
பண்பாளர்

பதிவுகள் : 92
இணைந்தது : 12/01/2013

Postimz Tue Oct 01, 2013 2:50 pm

ஜாஹீதாபானு wrote:சிறப்பான பகிர்வு நன்றி
நன்றி

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Tue Oct 01, 2013 3:13 pm

இது போன்ற பதிவுகள் இன்றைய சமுதாயத்திற்க்குச் சாட்டையடி பகிர்வுக்கு நன்றி

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
imz
imz
பண்பாளர்

பதிவுகள் : 92
இணைந்தது : 12/01/2013

Postimz Tue Oct 01, 2013 3:26 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:இது போன்ற பதிவுகள் இன்றைய சமுதாயத்திற்க்குச் சாட்டையடி பகிர்வுக்கு நன்றி
நன்றி .

கு.கோகிலா
கு.கோகிலா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 46
இணைந்தது : 20/07/2013

Postகு.கோகிலா Tue Oct 01, 2013 3:31 pm

imz wrote:யாருக்கு மனநோய்? GDSriLanka03210

உண்மையில் என்னைப் பொறுத்தவரையில்  சமூகத்தில் காணப்படும் சிறிய இலகுவில் குணப்படுத்திவிடக் கூடிய மன நோய் உள்ளவர்களையும், அங்க குறைபாடு உடையவர்களையும் எமது சமூகம்தான் முழுமையான பைத்தியமாக மாற்றி விடுகின்றது. மிகவும் கரிசனையோடு உள ஆறுதல் அளிக்கப்பட வேண்டியவர்கள் எமது சமூகத்தில் உள்ளவர்களாலேயே மிக மோசமான மன அழுத்தங்களுக்குள்ளாக்கப்படுவதனால் தான் அவர்கள் நிரந்தர மனநோயாளிகளாக பைத்தியங்களாக மாறி விடுகின்றனர். மிகச் சாதாரண அங்கக் குறைபாடுடையவர்களைக் கூட எம்மவர்கள் மிக மோசமான மன அழுத்தங்களுக்குள்ளாக்கியதனால் அவர்கள் பைத்தியமாக மாறிவிட்ட கசப்பான உண்மைகள் எமது சமூகத்தில் மலிந்து கிடக்கின்றன.

வீட்டில் பெண்கள் குழந்தைகளை சமாளிப்பதற்கோ அல்லது சோறூட்டுவதற்கோ
முடவன் வருகி றான்,
ஊமையன் வருகிறான்,
ஒற்றைக் கண்ணனிடம் பிடித்துக் கொடுப்பேன் என்று கூறும் அங்கக் குறைபாடுடையவர்களை அவமதிக்கும் ஈனச்செயலை கண்டிப்பாக நிறுத்த வேண்டும். மாறாக அங்கக் குறைபாடு டையவர்களையும், நோயாளிகள், வயோதிபர்களை போன்று அன்போடு நோக்க வேண்டும் என்பதை பெற்றோர் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். பாடசாலைகளிலும்  இவ்விடயங்கள் பாடத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டு பிள்ளைகளை விழிப்புணர்வூட்ட வேண்டும்.மேடைகளிலும் பிரசாரங்களிலும்  பண்பாடு கற்றுத் தரப்படல் வேண்டும். இது விடயத்தில் ஆசிரியர்கள், கூடுதல் கவனம் எடுக்க வேண்டும்.

பொது இடங்களில் அங்கக் குறைபாடுடையவர்களுக்கும் நோயாளிகள், மனநோயாளிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும். அத்தோடு விசேட தேவையுடையோருக்கான பராமரிப்பு நிலையங்கள், விசேட வசதிகளுள்ள கல்விக் கூடங்கள் என்பன அமைக்கப்பட்டு அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது எம் ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும்.

இவற்றை புறக்கணித்துவிட்டு இச்சமூக நோய் எம்மை விட்டு நீங்குவதற்கு நாம் முயற்சிக்கவில்லையாயின், நாம் அனைவரும் இறைவனின் தண்டனை யிலிருந்து தப்பமாட்டோம் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.
~~~~~~~~
நன்றி : Dr.M.S.M.Nusair
மிகவும் உண்மை
கு.கோகிலா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கு.கோகிலா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக