புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு நெல் மணி.... Poll_c10ஒரு நெல் மணி.... Poll_m10ஒரு நெல் மணி.... Poll_c10 
90 Posts - 78%
heezulia
ஒரு நெல் மணி.... Poll_c10ஒரு நெல் மணி.... Poll_m10ஒரு நெல் மணி.... Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
ஒரு நெல் மணி.... Poll_c10ஒரு நெல் மணி.... Poll_m10ஒரு நெல் மணி.... Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
ஒரு நெல் மணி.... Poll_c10ஒரு நெல் மணி.... Poll_m10ஒரு நெல் மணி.... Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
ஒரு நெல் மணி.... Poll_c10ஒரு நெல் மணி.... Poll_m10ஒரு நெல் மணி.... Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஒரு நெல் மணி.... Poll_c10ஒரு நெல் மணி.... Poll_m10ஒரு நெல் மணி.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு நெல் மணி.... Poll_c10ஒரு நெல் மணி.... Poll_m10ஒரு நெல் மணி.... Poll_c10 
255 Posts - 77%
heezulia
ஒரு நெல் மணி.... Poll_c10ஒரு நெல் மணி.... Poll_m10ஒரு நெல் மணி.... Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
ஒரு நெல் மணி.... Poll_c10ஒரு நெல் மணி.... Poll_m10ஒரு நெல் மணி.... Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஒரு நெல் மணி.... Poll_c10ஒரு நெல் மணி.... Poll_m10ஒரு நெல் மணி.... Poll_c10 
8 Posts - 2%
prajai
ஒரு நெல் மணி.... Poll_c10ஒரு நெல் மணி.... Poll_m10ஒரு நெல் மணி.... Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
ஒரு நெல் மணி.... Poll_c10ஒரு நெல் மணி.... Poll_m10ஒரு நெல் மணி.... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒரு நெல் மணி.... Poll_c10ஒரு நெல் மணி.... Poll_m10ஒரு நெல் மணி.... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஒரு நெல் மணி.... Poll_c10ஒரு நெல் மணி.... Poll_m10ஒரு நெல் மணி.... Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஒரு நெல் மணி.... Poll_c10ஒரு நெல் மணி.... Poll_m10ஒரு நெல் மணி.... Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரு நெல் மணி.... Poll_c10ஒரு நெல் மணி.... Poll_m10ஒரு நெல் மணி.... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு நெல் மணி....


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 30, 2013 8:11 pm

அரபுநாட்டு அரசன் சித்ராங்கதனுக்குக் கதை கேட்பதில், மிகுந்த விருப்பம் இருந்தது. அதனால் தினமும், சில அறிஞர்களை வரவழைத்து, கதைகளைக் கேட்டு வந்தான். சில அறிஞர்கள் கூறிய கதைகள் ஒரு நாளிலேயே முடிந்து விட்டன. சில அறிஞர்கள் கூறிய கதைகள், இரண்டு மூன்று நாட்கள் நீடித்தன. அரசனும் அக்கதைகளைக் கேட்டு, கதை சொன்னவர்களுக்குப் பரிசுகள் வழங்கி அனுப்பி வந்தான்.

திடீரென்று, அந்த அரசனின் மனதில் விபரீத ஆசை ஒன்று முளைத்தது. அதாவது, ""பலரும் வந்து கதை சொல்லிப்போகின்றனர். இருப்பினும், அக்கதைகள் ஒன்றிரண்டு நாட்களில், முடிந்து விடுகின்றனவே! தன் வாழ்நாள் முழுவதும் முடியாத கதையை யாராவது தனக்குச் சொன்னால் தன், வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக கதையைக் கேட்டுக்கொண்டு இருக்கலாமே!'' என்று நினைத்தான் அரசன்.

எனவே, அரசன் தனது அமைச்சரிடம், ""அமைச்சரே! முடியாத கதையொன்றைக் கேட்க, எனக்கு ஆசையாக உள்ளது. எனவே, யாரேனும் அரசவைக்கு வந்து, முடியாத கதையை எனக்குச் சொல்ல வேண்டும் என்றும், அவ்வாறு கதை சொல்பவர்களுக்கு மிகச்சிறந்த பரிசுகள் வழங்கப்படும் என்றும் அறிவிப்பு செய்யுங்கள்!'' என்று உத்தரவிட்டான்.
அமைச்சரும், அரசனின் உத்தரவை நாட்டு மக்களிடம் அறிவித்தார்.

அறிவிப்பைக் கேட்ட அறிஞர் ஒருவர் முதலில் அரசவைக்கு வந்தார். அவர், முடியாத கதையொன்றை அரசனிடம் தான் சொல்லப் போவதாகக் கூறினார். அரசனும் மனம் மகிழ்ந்தான். அவ்வறிஞரை, அரண்மனையில் தங்கும்படி செய்து, அவரை சிறந்த முறையில் உபசரித்தான். தினமும் காலையில் அரசவைக்கு வந்த அவ்வறிஞர், அரசனுக்கு ராமாயணக் காப்பியத்தைக் கூறத் தொடங்கினார். அரசனும் மிக்க மகிழ்ச்சியோடு கதை கேட்கலானான். ஆறு மாதங்கள் சென்றன. ராமாயணக் கதை முடிவுக்கு வந்தது.
கதை முடிந்துவிட்டதை அறிந்த அரசனுக்குக் கோபம் வந்தது. அவன் அவ்வறிஞரிடம், ""முடியாத கதையொன்றைச் சொல்லப் போவதாகக் கூறினீர்கள். ஆனால், கதை முடிந்து விட்டதே!'' என்று சொல்லி, அவ்வறிஞரைச் சிறையில் அடைத்தான்.

சில நாட்களில் வேறொரு அறிஞர் அரசவைக்கு வந்தார். அவர் அரசனிடம், ""நான் உங்களுக்கு முடியாத கதையைச் சொல்கிறேன்!'' என்று கூறினார். அரசனின் மனம் மிகுந்த மகிழ்ச்சி கொண்டது. மறுநாள் முதல் அவ்வறிஞரும் அரண்மனையிலேயே தங்கி, அரசனிடம் மகாபாரதக் காப்பியத்தை கூறத் தொடங்கினார். மன்னனும் மிகுந்த ஆர்வத்தோடும், மகிழ்ச்சியோடும் கதை கேட்கலானான். ஒரு ஆண்டு கடந்தது. மகாபாரதக் காப்பியமும் முடிவுக்கு வந்தது. கதை முடிந்ததும், மன்னனுக்குக் கோபம் வந்தது. அவன் அவ்வறிஞரையும் சிறையில் அடைத்தான்.

அரசனின் செய்கைகள் அமைச்சருக்கு, வருத்தத்தை அளித்தது. ஆனால், அவரால் எதுவும் செய்ய இயலவில்லை. அமைச்ச ருக்கு, பதினைந்து வயதே நிரம்பிய சத்திய சீலன் என்ற மகன் ஒருவன் இருந்தான். அவன் தனது தந்தையின் வருத்தத்தை அறிந்தான்.
அவன் தன் தந்தையிடம், ""தந்தையே! முடியாத கதையை அரசனுக்கு நான் போய் சொல்லலாமா?'' என்று கேட்டான்.
மகனின் பேச்சு அமைச்சருக்கு வியப்பை அளித்தது.

"சத்தியசீலா! மிகப்பெரிய அறிஞர்களே அரசனுக்குக் கதை சொல்லப்போய், இன்று சிறையில் துன்புறுகின்றனர். சின்னஞ்சிறு பாலகனான நீ எப்படி அரசனிடம் முடியாத கதையைச் சொல்வாய்? இந்த விபரீத சோதனை எல்லாம் வேண்டாம். நீ சிறையில் துன்புறுவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது,'' என்று கூறினார்.
ஆனால், சத்தியசீலனோ, ""தந்தையே! அதைப்பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். என்னை நம்புங்கள். அரசனிடம் அழைத்துச் செல்லுங்கள்!'' என்று கூறினான்.

மகனின் பிடிவாதத்தைக் கண்ட அமைச்சர், அரசனிடம் அழைத்துச் செல்ல ஒப்புக் கொண்டார்.
அரசவைக்கு வந்த சத்தியசீலன் அரசன் சித்ராங்கதனிடம், ""அரசே! இன்று முதல் நான் தங்களுக்கு முடியாத கதையொன்றைச் சொல்லப் போகிறேன்!'' என்று பணிவோடு கூறினான்.
பாலகனான சத்தியசீலனைக் கண்ட அரசனுக்கு வியப்பாக இருந்தது.

""சத்தியசீலா! நீ சிறுபிள்ளை! நீ எனக்குக் கதை சொல்லப் போகிறாயா? ஒருவேளை நீ சொல்லப்போகும் கதை முடிந்துவிட்டால், அமைச்சரின் பிள்ளை என்றும் நான் தயங்க மாட்டேன். உன்னை சிறையில் அடைப்பேன். சம்மதமா?'' என்று கேட்டான்.
""அரசே! நான் சொல்லப்போகும் கதை நிச்சயம் முடியாது! எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது!'' என்று உறுதியாகச் சொன்னான் சத்தியசீலன். இறுதியாக, சத்தியசீலனின் கதையைக் கேட்க அரசனும் சம்மதித்தான். அன்றைய தினமே, சத்தியசீலனும் கதையைச் சொல்லத் தொடங்கினான்.

""அரசே! ஒரு தோட்டத்திலுள்ள உயர்ந்த மரத்தில் குருவி ஒன்று கூடுகட்டி வசித்து வந்தது. அது தினமும் காலையில் ஒரு வீட்டிலிருந்த நெற்களஞ்சியத்திலிருந்து ஒரு நெல்மணியைக் கொத்தி எடுத்த பின், தன் கூட்டிற்குப் பறந்து போனது. அந்த நெல் மணியை அங்கு வைத்துவிட்டு, பின் திரும்பி அந்த வீட்டிற்குப் பறந்து வந்தது. மீண்டும் நெற்களஞ்சியத்திலிருந்து ஒரு நெல் மணியைக் கொத்தி எடுத்து தன் கூட்டிற்குப் பறந்து போயிற்று,'' என்று மீண்டும் மீண்டும் சொன்னதையே, சொல்லிக் கொண்டிருந்தான் சத்தியசீலன்.

""சரி, அடுத்து என்ன நடந்தது?'' என்று ஆர்வத்தோடு கேட்டான் அரசன்.
""குருவி நெல்மணிகளை எடுத்துவந்து வைத்துக் கொண்டிருக்க, இரவுப் பொழுது வந்துவிட்டது. இனி என்ன நடந்தது என்பதை நாளை கூறுகிறேன்,'' என்று சொல்ல, அரசனும் எழுந்து சென்று விட்டான்.

மறுநாள் கதைகேட்கும் ஆவலில் அரசன் அமர்ந்தான். சத்தியசீலனும் கதையைச் சொல்லத் தொடங்கினான்.
""அரசே! மறுநாள் பொழுது புலர்ந்தது. குருவி மீண்டும் அந்த வீட்டிற்குப் பறந்து வந்தது...'' என்று கதையை ஆரம்பித்தான்.
மன்னனுக்கோ சலிப்பு தோன்ற ஆரம்பித்தது. அவன் சத்தியசீலனிடம், ""சரி! முந்தைய தினம் குருவி கூட்டில் கொண்டு போய் வைத்த நெல்மணிகள் என்ன ஆயிற்று?'' என்று கேட்டான்.

""அரசே! அந்த நெல்மணிகளைத்தான் அன்றைய இரவுக்குள் குருவி தின்று விட்டிருக்குமே! மறுநாளுக்கான நெல் மணியைக் அந்தக் குருவி கொண்டுவர வேண்டாமா?'' என்றான் சத்தியசீலன்.
""சரி! அந்த வீட்டின் நெற்களஞ்சியத்தி லுள்ள நெல்மணிகள் எல்லாம் தீர்ந்து விட்டால், குருவி என்ன செய்யும்?'' என்று கேட்டான் அரசன்.

""அரசே! நெற்களஞ்சியத்தில் நிறைந்திருக்கும் நெல்மணிகளை குருவி தின்று தீர்த்துவிட முடியுமா? ஒருவேளை ஒரு சில மாதங்களில் நெல்மணிகள் குறைந்து விட்டாலும், அதற்குள் அடுத்த அறுவடை நடந்துவிடுமல்லவா? மீண்டும் நெற்களஞ்சி யத்தில் நெல் வந்துவிடுமல்லவா?'' என்றான் சத்தியசீலன்.

உடனே மன்னன், ""சரி! ஒருவேளை அந்தக் குருவி முதுமையடைந்து இறந்து விட்டால், என்ன ஆகும்?'' என்று கேட்டான்.
""அதற்குள் அந்தக்குருவி முட்டையிட்டு, குஞ்சு பொரிந்து வேறு குருவி வந்துவிடும் அல்லவா?'' என்று பதிலளித்தான் சத்திய சீலன்.
"மன்னனுக்கு சத்தியசீலனின் நோக்கம் புரிந்தது. சத்தியசீலன் சொல்லிக் கொண்டிருக்கும் கதை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் முடியப் போவதில்லை. முடியாத கதை கேட்க வேண்டும் என்ற தனது விபரீத எண்ணத்தை முறியடிக்கும் திட்டத்தோடுதான் சத்தியசீலன் வந்திருக்கிறான் என்பதை' அரசன் அறிந்து கொண்டான். அரசன் சத்தியசீலனிடம் தனது தோல்வியை ஒப்புக் கொண்டான். மேலும், தனது பிடிவாத குணத்தை உணர்த்திய சத்தியசீலனிடம், ""சத்தியசீலா! சிறுவயதிலேயே நீ மிகுந்த அறிவும் புத்திசாதுர்யமும் பெற்றிருக்கிறாய். உன்னைப் பாராட்டுகிறேன். உனக்கு என்ன பரிசு வேண்டுமோ கேள்!'' என்று சொன்னான் மன்னன்.

""மன்னா! நான் எந்தப் பரிசும் கேட்கப் போவதில்லை. ராமாயணம், மகாபாரதம் போன்ற மாபெரும் காப்பியங்களைச் சொன்ன அறிஞர்களை நீங்கள் சிறையிலிருந்து விடுவித்தால், போதும்! அதற்காகவே, நான் இங்கு வந்தேன்,'' என்று பணிவோடு கூறினான்.
சத்தியசீலனின் அறிவாற்றலையும், நற்குணத்தையும் பாராட்டிய அரசன் சித்ராங்கதன், தான் சிறையிலடைத்த அறிஞர்களை விடுதலை செய்தான். சத்தியசீலனையும் அந்நாட்டு அமைச்சர்களில் ஒருவராகப் பணியமர்த்தினான்.


நன்றி : வாரமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 30, 2013 8:14 pm

எங்க ஆத்துல நாங்க குழந்தைகளுக்கு சொல்லும் கதை இது புன்னகை ரொம்ப படுத்தும் குழந்தைகளுக்கு இப்படி சொல்லி சமாளிப்போம் புன்னகை " ஒரு குருவி வந்துதாம் ஒரு நெல்ல கொண்டு போச்சாம்...." என்று சொல்ல ஆரம்பித்தாலே பசங்க கதையே வேண்டாம்போறும் என்று ஓடிடுவா புன்னகை ஜாலி ஜாலி ஜாலி 
என் லிருந்து ....கிருஷ்ணா வரை இதே கதைதான் ரொம்ப படுத்தினா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Sep 30, 2013 8:32 pm

நல்ல கதை.... குழந்தைகளுக்கு இரவில் சொல்லும் கதை.... புன்னகை

ஒரு ரயில்... நிலையத்தில் இருந்தது புகையை குபு..குபு...குபு..குபு...குபு..குபு...குபு..குபு...குபு..குபு...குபு..குபு...குபு..குபு...குபு..குபு... வென புகையை கக்கி கொண்டு திருச்சியில் இருந்தது சென்னை போனதாம் ....

பிறகு.....

அதே ரயில் மீண்டும்  புகையை குபு..குபு...குபு..குபு...குபு..குபு...குபு..குபு...குபு..குபு...குபு..குபு...குபு..குபு...குபு..குபு... வென புகையை கக்கி கொண்டு திருச்சியில் இருந்தது சென்னை போனதாம் ....

பிறகு......

ஐயோ கல்லு வருது நான் ஓடுறேன்.....அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

(எல்லாம் சரி அம்மா அது என்ன அரபு மன்னன்...நெல்மணிகள்....அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை )

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 01, 2013 1:54 pm

ராஜு சரவணன் wrote:நல்ல கதை.... குழந்தைகளுக்கு இரவில் சொல்லும் கதை.... புன்னகை

ஒரு ரயில்... நிலையத்தில் இருந்தது புகையை குபு..குபு...குபு..குபு...குபு..குபு...குபு..குபு...குபு..குபு...குபு..குபு...குபு..குபு...குபு..குபு... வென புகையை கக்கி கொண்டு திருச்சியில் இருந்தது சென்னை போனதாம் ....

பிறகு.....

அதே ரயில் மீண்டும்  புகையை குபு..குபு...குபு..குபு...குபு..குபு...குபு..குபு...குபு..குபு...குபு..குபு...குபு..குபு...குபு..குபு... வென புகையை கக்கி கொண்டு திருச்சியில் இருந்தது சென்னை போனதாம் ....

பிறகு......

ஐயோ கல்லு வருது நான் ஓடுறேன்.....அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

(எல்லாம் சரி அம்மா அது என்ன அரபு மன்னன்...நெல்மணிகள்....அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை )
நன்றி ராஜு புன்னகை உங்க கதையும் நல்லா இருக்கு ராஜு புன்னகை அந்த அரபு ராஜாவா? அது naan போடலை ..நான் ஜஸ்ட் 'copy பேஸ்ட் ' தான் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
imz
imz
பண்பாளர்

பதிவுகள் : 92
இணைந்தது : 12/01/2013

Postimz Tue Oct 01, 2013 2:42 pm

கதன்னா இது கத.........ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி 
imz
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் imz

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 01, 2013 3:02 pm

அருமையான கதைமா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக